• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வார்த்தை வரம் டீஸர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vaishu Ayyam

நாட்டாமை
Joined
Nov 6, 2019
Messages
34
Reaction score
56
Age
37
Location
Chennai
காவல் துறையில் உள்ள கடமை தவறாத நேர்மையான பல அதிகாரிகளை பற்றி அவ்வப்போது படித்து, அதில் இன்ஸ்பிரேஷன் ஏற்பட்டு அதனால் பிறந்த கதை தான் "உன் வார்த்தை ஓர் வரம்" தனது கடமையை நிறைவேற்ற மக்களை காக்க தன் சொந்த வாழ்க்கையில் பல சந்தோஷங்களை விட்டுக் கொடுக்கும் நேர்மையான காவல் துறை அதிகாரிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்!!

வார்த்தை வரம் டீசர்

டேய் சாரு, ப்ளீஸ் டா! அப்பா கூட நீயும் ஜாகிங்க்கு கம்பெனி குடுறா!" என்று கேட்டவரிடம்

"ஏன்ப்பா விஜி தான் உங்க கூட கம்பெனிக்கு வர்றானே?" என்று கேட்டவளிடம்

"ம்ஹூம்! இந்த ஊமை சாமியார் என் கூட வர்றதுக்கும், வராம இருக்கிறதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஏன்டா நம்ம வீட்ல இவன் மட்டும் இப்படி இருக்கான்? போலீஸ் னா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆ இருப்பாங்க தான், ஆனா இவரு எப்படி க்ரிமினல்ஸ் கூட இண்டராக்ட் பண்ணி அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க வைப்பாரு? அதுக்கு வாயை திறந்து ஏதாவது பேசணுமே?" என்றார் தமிழ்வாணன் ஆச்சரியமாக.

"நம்ம விஜி எல்லா விஷயத்தையும் ஆக்ஷன்ல காட்டுற ஆளுப்பா. பேச தேவையே இல்லாத இடத்தில் எதுக்கு பேசிட்டு? இல்ல விஜி!" என்று தன் சகோதரனுக்காக பேசினாள் சாருலதா.

ஷூவைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மட்டும் ஒட்டிக் கொண்டு இருந்தது.

ஆறடி உயரம், கட்டுக்கோப்பான உடல்வாகு, துளைக்கும் லேசர் போல் கூர்மையான விழிகள், அடர்ந்த சிகை, மாநிறம் என்று ஒரு ஹாண்ட்சம் மேன் என்று அனைவரும் சொல்லும் அனைத்து லட்சணங்களும் கொண்ட திருவாளர் விஜய் பிரபு அவர்கள் ஒரு காவல் துறை உதவி ஆணையாளர். சிறு வயது முதல் தான் காவல் துறையில் தான் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் முயன்று ஐ.பி.எஸ் ஆக உருவெடுத்தவர். சென்னை மாநகராட்சியில் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு உத்தமமான காவல் அதிகாரி. அவனை பார்த்து வீட்டினர் கவலை கொள்வது ஒரே ஒரு விஷயத்திற்காக தான். மிகவும் தேவைப்பட்டால் எண்ணி இரண்டு வார்த்தைகளை வாயில் இருந்து உதிர்ப்பான். பெரும்பாலும் ஒரு கண்ணசைவு, தலையாட்டல், புன்னகை இவை மட்டும் தான் வீட்டில் கூட அவன் பேசும் மொழிகள். சிறு வயதில் இருந்தே மிகவும் அமைதியான சுபாவம், இப்போது செய்து வரும் உத்யோகத்தின் காரணமாக அமைதி ஒரு விதமான அழுத்தமாகி போனது.

வீட்டில் தான் இப்படி என்றால், ட்யூட்டியிலும் அதே அழுத்தம் தான்! கட்டளைகள் கூட ஒன்றிரண்டு வார்த்தைகளில் வந்து விழும். இப்படியாக நம் கதையின் நாயகன் தன் ஐம்புலன்களில் ஒரு புலனை மிகவும் குறைவான அளவில் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தான், கூடிய விரைவில் தன் மௌன விரதத்திற்கு ஒரு பெண்ணால் இடையூறு ஏற்படப் போகிறது என்பதை அறியாமல்.
 




Attachments

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu
?உங்கள் ஹீரோவின் மௌனமே அவ்ளோளோளோளோ அழகு. ..
கதையை வாசிக்கும் ஆவலோடு நான். ..ede16f4982d6a58eeb6c0c4b64534f11.jpg
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top