• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வார்த்தை வரம் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vaishu Ayyam

நாட்டாமை
Joined
Nov 6, 2019
Messages
34
Reaction score
56
Age
37
Location
Chennai
அழகிய வைகறை பொழுதில் அலைபேசியில், "ஸ்ரீ ராம ராம ராமேதி!" என்ற ஸ்லோகம் சிணுங்கியது. கண்களை மூடியபடியே சைட் டேபிளில் துழாவி அலைபேசியில் அலாரத்தை நிறுத்தினாள் சாருலதா.

"இன்னிக்கு நாள் எல்லாருக்கும் மகிழ்ச்சி தர்ற நாளா அமையட்டும். எல்லாருக்கும் அவங்க வேலைகள் அனைத்தும் தடை இல்லாமல் நல்ல படியா நடக்கட்டும்!" என்ற வேண்டுதலை மனதிற்குள் நினைத்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

சிறிது நேரத்தில் தன் காலை வேலைகளை முடித்து விட்டு பால்கனியில் வந்து அமர்ந்து கொண்டாள். பறவைகளின் கீச்சுக் குரலை ரசித்த படி பொழுது புலர்கிற வேலையில் வானத்தை ரசித்து கொண்டு அமர்வது சாருவிற்கு வழக்கமான ஒன்று. சில நேரங்களில் கவிதை தோன்றும். இல்லையென்றால் பூபாள ராகத்தில் ஏதாவது பாடலை முணுமுணுக்க தோன்றும். அதுவும் இல்லையென்றால் ஏதாவது ஆக்கப்பூர்வமான சிந்தனை மனதிற்குள் ஓடிக் கொண்டு இருக்கும்.

என்ன தான் இரவு உறக்கத்தில் தடை நேர்ந்தாலும் அதிகாலை கண்விழிப்பு சாருவிற்கு இன்றியமையாத ஒரு உற்சாக பானம் போன்றது.

ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியும் சாருவிற்கு அந்த காலை நேரத்தில் அன்றைய பாடத் திட்டங்களின் நோட்ஸை இலகுவாக, மாணவர்களுக்கு புரியும் வகையில் தயார் செய்து வைத்துக் கொள்வது மிகவும் பிடித்தமான விஷயம். புதிய விதமான கோணங்களில் தன்னுடைய சிலபஸை அணுகுவதும் கூடத் தான்!

மாணவர்களின் அறிவுப் பசிக்கு தீனி போடும் வல்லமை படைத்தவள் வெறும் பாடப் புத்தகங்களை மட்டும் புரட்டிக் கொண்டு இருப்பதில் எப்போதும் உடன்பட்டதில்லை. சற்று விசாலமான பார்வையுடன் விரும்பி சந்தேகம் கேட்கும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் அவள் முதலில் பாடங்களை ஒரு மாணவியின் பார்வையுடன் தான் பார்ப்பாள்.

சாருலதா தமிழ்வாணன், செண்பகவள்ளி தம்பதியரின் மூத்த மகள். இயற்பியல் துறையில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு பெண், தனக்கு 26 வயது ஆகி விட்டாலும் இது வரை திருமணம் என்ற ஒரு விஷயத்தை பற்றிய யோசனை கூட இல்லாமல் கல்லூரி, சில பொது நலத் தொண்டுகள், சமூக வளர்ச்சிக்கு உதவும் தன்னால் ஆன சிறிய முயற்சிகள், தன் சிறிய குடும்பம், தன் ரசனைகள் என்று இதுவரை தன் தந்தை, தம்பியை தவிர எந்த ஆண்மகனுக்கும் தன் வாழ்வில் இடம் இல்லை என்று கூறி கொண்டு இருந்தாள்.

சுமார் 7 மணியளவில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள். "குட் மார்னிங் அம்மா, எனக்கு காஃபி தர்றிங்களா?" என்று தன் அன்னையை பின்னிருந்து அணைத்தவாறு நின்று கொண்டு இருந்தாள்.

"சாரு, என்னடா டெய்லி 9 மணிக்கு புறப்படுறதுக்கு 7 மணிக்கே ரெடி ஆகிடுற! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே?" என்று கேட்ட தாயிடம்

"சின்ன வயசில நீங்க கத்துக் குடுத்தது தானேம்மா? சீக்கிரம் எழுந்துக்கலைன்னா அன்னிக்கு நாளே ப்ரெஷ்ஷா இல்லம்மா, அப்பாவும், விஜியும் ஜாகிங் போய்ட்டாங்களாம்மா? எப்படி தான் டெய்லி 3,4 கிலோ மீட்டர் ஜாக் பண்றாங்களோ? எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு!" என்றாள் தன் அன்னையிடம்.

"விஜய் போற போக்குல உங்க அப்பாவையும் கூட்டிட்டு போயிடுறான். இல்லைன்னா அவர் அதை செய்யவும் மாட்டார். பிள்ளைக்கு பயந்து ஒழுங்கா ஓடிட்டு இருக்கார்!" என்றார் செண்பகவள்ளி புன்னகையுடன்.

தமிழ்வாணன் தன் மகனுடன் அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்து கொண்டு இருந்தார்.

"ஹாய் அப்பா, விஜி குட்மார்னிங், இப்போ தான் உங்கள காணும்னு அம்மா கிட்ட கேட்டுட்டு இருக்கேன், அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க!" என்றவளிடம் தமிழ்வாணன்

"டேய் சாரு, ப்ளீஸ் டா! அப்பா கூட நீயும் ஜாகிங்க்கு கம்பெனி குடுறா!" என்று கேட்டவரிடம்

"ஏன்ப்பா விஜி தான் உங்க கூட கம்பெனிக்கு வர்றானே?" என்று கேட்டவளிடம்

"ம்ஹூம்! இந்த ஊமை சாமியார் என் கூட வர்றதுக்கும், வராம இருக்கிறதுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஏன்டா நம்ம வீட்ல இவன் மட்டும் இப்படி இருக்கான்? போலீஸ் னா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆ இருப்பாங்க தான், ஆனா இவரு எப்படி க்ரிமினல்ஸ் கூட இண்டராக்ட் பண்ணி அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க வைப்பாரு? அதுக்கு வாயை திறந்து ஏதாவது பேசணுமே?" என்றார் தமிழ்வாணன் ஆச்சரியமாக.

"நம்ம விஜி எல்லா விஷயத்தையும் ஆக்ஷன்ல காட்டுற ஆளுப்பா. பேச தேவையே இல்லாத இடத்தில் எதுக்கு பேசிட்டு? இல்ல விஜி!" என்று தன் சகோதரனுக்காக பேசினாள் சாருலதா.

ஷூவைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மட்டும் ஒட்டிக் கொண்டு இருந்தது.

ஆறடி உயரம், கட்டுக்கோப்பான உடல்வாகு, துளைக்கும் லேசர் போல் கூர்மையான விழிகள், அடர்ந்த சிகை, மாநிறம் என்று ஒரு ஹாண்ட்சம் மேன் என்று அனைவரும் சொல்லும் அனைத்து லட்சணங்களும் கொண்ட திருவாளர் விஜய் பிரபு அவர்கள் ஒரு காவல் துறை உதவி ஆணையாளர். சிறு வயது முதல் தான் காவல் துறையில் தான் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் முயன்று ஐ.பி.எஸ் ஆக உருவெடுத்தவர். சென்னை மாநகராட்சியில் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு உத்தமமான காவல் அதிகாரி. அவனை பார்த்து வீட்டினர் கவலை கொள்வது ஒரே ஒரு விஷயத்திற்காக தான். மிகவும் தேவைப்பட்டால் எண்ணி இரண்டு வார்த்தைகளை வாயில் இருந்து உதிர்ப்பான். பெரும்பாலும் ஒரு கண்ணசைவு, தலையாட்டல், புன்னகை இவை மட்டும் தான் வீட்டில் கூட அவன் பேசும் மொழிகள். சிறு வயதில் இருந்தே மிகவும் அமைதியான சுபாவம், இப்போது செய்து வரும் உத்யோகத்தின் காரணமாக அமைதி ஒரு விதமான அழுத்தமாகி போனது.

வீட்டில் தான் இப்படி என்றால், ட்யூட்டியிலும் அதே அழுத்தம் தான்! கட்டளைகள் கூட ஒன்றிரண்டு வார்த்தைகளில் வந்து விழும். இப்படியாக நம் கதையின் நாயகன் தன் ஐம்புலன்களில் ஒரு புலனை மிகவும் குறைவான அளவில் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்தான், கூடிய விரைவில் தன் மௌன விரதத்திற்கு ஒரு பெண்ணால் இடையூறு ஏற்படப் போகிறது என்பதை அறியாமல்.

செண்பகவள்ளி டிபனை தயாரித்து, தன் கணவருக்கும், மகளுக்கும் மதிய உணவும் தயார் செய்து அனைவரும் டைனிங் டேபிளில் அமரும் முன் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்து நிமிர்ந்தார்.

தமிழ்வாணன் டூவீலரின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தனது சம்பாத்தியத்தில் பிள்ளைகளுக்கு கல்வி, திருமணத்திற்கு தேவையான அளவு பணம், சொந்த வீடு, சிறிய கார் என்று அனைத்தையும் சேர்த்து விட்டாலும், வேலையின் மீதுள்ள பிடித்தம் காரணமாக இன்னும் மீதமுள்ள இரண்டு ஆண்டுகள் பணியை சிறப்பாக முடிக்க வேண்டும் என்று உழைத்து வருகிறார்.

அனைவரும் காலை உணவிற்கு ஒன்று கூடியதும் தமிழ்வாணன், "சாருவுக்கு ஒரு வரன் வந்திருக்கு. இதுக்கு மேலயும் நோ சொல்ல மாட்டான்னு நினைக்குறேன்!" என்றார் தன் மகள் எதிர்மறை பதிலை தந்து விடக்கூடாது என்ற பயத்தை மனதிற்குள் வைத்தபடி!

சாரு எரிச்சலுடன், "அப்பா, ப்ளீஸ்! என்னை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்குறீங்க? யாரோ சம்பந்தமே இல்லாத ஒருத்தரை எப்படிப்பா கல்யாணம் பண்ணிக்கிறது? எனக்கு இந்த கமிட்மெண்ட் செட் ஆகும்னு தோணலைப்பா!" என்று சொல்லிக்கொண்டு இருந்தவளை அடக்கினார் செண்பகவள்ளி.

"அப்பா சொல்றதை கேக்குற அளவுக்கு கூட உனக்கு பொறுமை இல்லையா சாரு? நாங்க உங்க ரெண்டு பேருக்கும் சுதந்திரம் கொடுத்து தான் வளர்த்திருக்கோம். உங்களோட கருத்துக்களை நீங்க தாராளமா சொல்லலாம். ஆனா என்ன, ஏது ன்னு ஒண்ணுமே கேக்காமல் கல்யாணம் பிடிக்கலை ன்னு திரும்ப திரும்ப சொல்லாதடா. உனக்குன்னு ஒரு குடும்ப வாழ்க்கை அமையணும். எங்க ஆசையும், கடமையும் கூட அது தான்!" என்றார் செண்பகவள்ளி.

விஜயும் தன் அக்காவின் கரங்களை பிடித்து கொண்டு அவளுக்கு தைரியமூட்டினான்.

"நம்ம பாட்டி வீட்டுக்கு எதிர் வீட்டில் சூர்ய நாராயணன் அங்கிள் இருந்தாங்கல்ல? அவரை ரீசண்டா ஒரு பார்ட்டியில் பார்த்தேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அவரோட பையனும் கிட்ட தட்ட நம்ம சாரு மாதிரியே தான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லாம நாளை கடத்திட்டு இருக்காராம். அங்கிள் உன்னை அவர் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைப்போமா ன்னு என் கிட்ட ஒப்பீனியன் கேட்டார். நான் அவர் பையன் கிட்டயும் பேசினேன் சாரு. நல்லா ஃபிரெண்ட்லியா பேசினாரு; நம்ம கிட்ட நல்லா பழகினவங்க தான்! பையன் பேரு இளங்கோ. ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ரன் பண்ணிட்டு இருக்கார். வர்ற புதன்கிழமை ஏதாவது மால் இல்லைன்னா வேற ஏதாவது ப்ளேஸ் ல மீட் பண்ணி பேசிப் பாரு. உனக்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாம்!" என்று ஒரு கவரை அவளிடம் கொடுத்து "மாப்பிள்ளை போட்டோவும், அவர் மொபைல் நம்பரும் இருக்கு. பேசிட்டு உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னீன்னா எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

"விஜய் நீயும் ஒரு தடவை மாப்பிள்ளை போட்டோவை பார்த்துட்டு உன் முடிவை சொல்லு! புதன்கிழமை ஈவ்னிங் நீ தான் அக்கா கூட போகணும். பெர்மிஷன் சொல்லிடு!" என்றார். அவன் சம்மதாக தலையாட்டினான்.

தன் தந்தை கிளம்பவும் தன் கையில் இருந்த கவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவளிடம், சென்று அவள் முகத்திற்கு எதிராக சொடுக்கு போட்டான் சிறு சிரிப்புடன்.

"இந்தா விஜய், நீ பாரு! உனக்கு ஓகேன்னா சொல்லு! அப்பா, அம்மாவை இதுக்கு மேல கஷ்டப்படுத்த மாட்டேன். நான் கல்யாணம் செஞ்சுக்கறேன்!" என்றாள் சாருலதா.

அவள் தோள்களை பற்றி ஆறுதல் அளிக்கும் வகையில் அழுத்தம் கொடுத்து விட்டு, அவள் கையில் இருந்த கவரைப் பிரித்து மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் விஜய் பிரபு.
 




Attachments

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Best Wishes :)
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,012
Location
Tamil Nadu
?????????????????????சூப்பர்மா. ..
அடுத்த பதிவுக்காக ஆவல். .b5b131ea405775e3c08e9aff5675429c.jpg
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top