• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வாழ வைக்கும் காதலுக்கு ஜே !

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
அனாமிகா 13 ஜி! முதல் சில வரிகள் படித்ததும், நீங்கள் இன்னும் ஆன்ட்டி ஹீரோ Modeல் இருந்து வெளிவரவில்லை என்று நினைத்தேன். இவர்கள் சண்டையைப் பார்த்து, நிதின் மாதிரி நானும் ஏமார்ந்துவிட்டேன் என்று புரிந்தது.:ROFLMAO::ROFLMAO:

அழகான கதை; எதார்த்தமான கதை :love::love:
 




VIDYA.V

அமைச்சர்
Author
Joined
Jun 24, 2021
Messages
1,154
Reaction score
2,355
Location
USA
பொருத்தமில்லை என்று கட்டங்கள் கூற,
பொன்மகள் அவள் தான் தாரம் என்று -எதையும்
பொருட்படுத்தாமல் மணந்தான் நேற்று - அவளின்
பொய்கோபங்களும், பொடிவைத்தப் பேசும் குறும்புகளும்,
பொறுத்துக் கொள்ளாமல் தான் போவானோ இவன் இன்று!!!
 




Nanthalala

அமைச்சர்
SM Exclusive
Joined
Jul 1, 2019
Messages
3,124
Reaction score
4,621
Location
Coimbatore
பொருத்தமில்லை என்று கட்டங்கள் கூற,
பொன்மகள் அவள் தான் தாரம் என்று -எதையும்
பொருட்படுத்தாமல் மணந்தான் நேற்று - அவளின்
பொய்கோபங்களும், பொடிவைத்தப் பேசும் குறும்புகளும்,
பொறுத்துக் கொள்ளாமல் தான் போவானோ இவன் இன்று!!!
கவிதை மிகவும் அருமை மா❤❤❤
Thank you so much dear 💕💕💞💞💕
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,546
Reaction score
6,766
Location
Salem
“உனக்கும் எனக்கும் ஒத்து வராது நாம டைவேர்ஸ் வாங்கிடலாம் “

கோபமாக சொன்னான் பிரபு.

“ மொதல்ல அதை செய்யுங்க “ அதை விட கோபமாக கத்தி விட்டு போன மனைவியை ‘ பே ‘ எனப் பார்த்தவன் கையைப் பிடித்து இழுத்தான் அவர்களின் மூன்று வயது மகன் நிதின் பிரபு.

“ என்னடா” சலிப்பாக கேட்டான் தந்தை.

“ இந்த ஜட்டியை போட்டு விடுப்பா “

“ ஏன்? இதெல்லாம் அந்த மகாராணி செய்ய மாட்டாளாமா?” உள் நோக்கி எட்டி கத்தியபடி மகனுக்கு கவனமாக உடை அணிவித்து விட்டான் பிரபு.

கையில் சாப்பாட்டு தட்டுடன் வந்த இவன் மனைவி பானு

“ ஏன்? உங்க பையனுக்கு நீங்க செய்றதுல என்ன தப்பு? இது கூட செய்ய முடியாதா? “

இவனை திட்டியபடி இவன் முன் இருந்த டீ பாயில் சாப்பாடு தட்டை வைத்தாள்.

“ யாருக்கு வைக்கிற?”

“ ம்ம்? எதிர் வீட்டு காரனுக்கு!”

இவர்கள் வீட்டுக்கு எதிர் வீடு சமீபத்தில் தான் காலியாகி இருந்தது. அதற்கு முன்னும் அங்கே ஒரு பாட்டி தான் இருந்து இருந்தார். இப்போது மகனுடன் சென்று விட்டார்.

“ நீ யாருக்கோ வச்சு தொலை. டிவேர்ஸ் வாங்கப் போற உன் கையால இனி பச்சை தண்ணி குடிக்க மாட்டேன் “ சூளுரைத்தான் பிரபு. ஒரு கணம் அமைதியானாள் பானு.

பின்பு “ குடிக்காட்டி போங்க “ என்றாள் அலட்சியமாக.

அவனுக்கு கோபம் தலை விரித்து ஆடியது.

“ இனிமே உன் கையால சாப்பிட்டா என்னை என்னனு கேளு! “

“வேற வேலை இல்ல பாருங்க எனக்கு?“ அலட்டிக் கொள்ளாமல் கொண்டு வந்த சாப்பாடு தட்டை சமையல் அறைக்கு திருப்பி எடுத்து செல்லத் தொடங்கினாள் பானு.

'மூசு மூசு ' என மூச்சு விட்டவன் அப்படியே கிளம்பினான்.

“ நித்தி குட்டி. அப்பாவுக்கு லஞ்ச் வைக்க சொல்லு அம்மாவ “ மனைவிக்கு கேட்கும்படி உரத்து சொல்ல விபரம் புரியாத குட்டி பையன் அதை அன்னையிடம் போய் திருப்பி சொன்னான்.

“ அதான் என் கையால சாப்பிட மாட்டேன்னு சொன்னார்ல உங்க அப்பா?”

“ உன் கையால நீ வைக்க வேண்டாம். கரண்டி வச்சு வை “ பிரபு அங்கே கடித்து துப்பினான்.

மெல்ல வந்த சிரிப்பை அடக்கி கொண்டு கணவனுக்கு சாப்பாடு கட்டி கொடுத்தாள் பானு.

காலையில் சத்து மாவு கஞ்சி அவனுக்கு கொடுத்து இருந்தாள்.
பதினோரு மணிக்கு டீ பிரேக்கில் வேறு நாலு உளுந்த வடைகளை மொக்குவான்.

'போதும்! ஒரு நாள் கம்மியா சாப்பிட்டா தொந்தி ஒன்னும் கரைஞ்சிடாது ' மனதுக்குள் சிலுப்பிக் கொண்டாள் அவன் மனையாள்.

“ அப்பா போய்ட்டு வர்றேன். பை தங்கம். “

கிளம்பி விட்டான்.

பானு யோசனையாக அமர்ந்தாள்.

பெற்றோர் பார்த்து வைத்த திருமணம். ஆனால் ஜாதகம் பொருந்தவில்லை என இவளை அவன் பெற்றோர் நிராகரிக்க ‘அவளைத்தான் கட்டுவேன் ‘ என ஒற்றை காலில் நின்று இவளைத் திருமணம் செய்து இருந்தான்.

'ஜாதகம் பொருந்தலை. என்ன நடக்குமோ? 'என அனைவரும் நகத்தைக் கடித்துக் கொண்டு பார்க்கும்படி தான் இவர்கள் குடும்பம் நடத்தும் லட்சணமும் இருந்தது.

ஆரம்பத்தில் குஜாலாக இருந்தாலும் போகப் போக கடித்துக் குதறி வைப்பதில் ஒருவரை ஒருவர் மிஞ்சினர்.

“ சொல்லிட்டே இருக்கிங்க. எப்போ டைவர்ஸ் வாங்குவீங்க ?”

இவள் சிந்தனையைக் கலைத்தான் இவர்களின் தவப் புதல்வன்.

“ ஏண்டா?” காலைக் கட்டிய மகனைத் தூக்கி இடுப்பில் வைத்து கொஞ்சினாள் பானு. தங்கள் இருவரின் ஜாடையையும் தத்து எடுத்து இருந்த மகனை ஆசையாக முத்தமிட்டாள்.

“ டைவர்ஸ் நான் சாப்புனும் “ வாயில் விரல் வைத்து ஜொள் ஒழுக்கினான் குட்டி பயல்.

பின்பு தன்னை அணைத்துக் கொண்டு 'கல கல' எனச் சிரித்த தாயுடன் சேர்ந்து சிரித்தான் அவன்.

அலுவலகம் வந்தும் ஆற்றாமை தீரவில்லை பிரபுவுக்கு.


போன வாரம் தான் சண்டை போட்டு டைவெர்ஸ் செய்வதாக சொல்லி ஒருவழியாக சமாதானம் ஆகி இருந்தான்.

போன வாரம் சண்டையை நினைத்துப் பார்த்தான்.

இவன் வாட்ச் வைத்ததை மறந்து விட்டு இவளிடம் தேடித் தரக் கேட்டதற்கு சண்டையை ஆரம்பித்து இருந்தாள்.

கடைசியில்

“ இப்படிப்பட்ட பொறுப்பில்லாதவனைக் கட்டிட்டு முட்டிக்கிறதை விட அத்து விட்டுட்டு இருக்கலாம் “ என வாயை விட்டாள்.

“ நீ என்னடி அத்து விடறது. நான் உனக்கு டைவெர்ஸ் தாரேன் “

வெடுக்கென திரும்பிய நிதின் இவர்களை ஆர்வமாகப் பார்த்ததை கவனித்தவர்கள் ' அவனுக்கு இதுலாம் புரியாது ' என விழிகளால் தங்களுக்குள் சமாதானம் பேசிக் கொண்டே சண்டையைத் தொடர்ந்தனர்.


“ துப்பிருந்தா நீங்க எனக்கு டைவர்ஸ் குடுங்க. “ சவால் விட்டாள் பானு.

“ துப்புலாம் இருக்கு. ஆனா உன்னை மாதிரி நான் வெட்டியா இல்லை. அதனால் நீயே டைவர்ஸ் பேப்பர் அனுப்பு. நான் கையெழுத்து போடுறேன் “

“ ஓ! துரை பெரிய கலெக்டர்! இவருக்கு வேலை இருக்காம். நான் வெட்டியா இருக்கேனாம் ! நானும் வேலைக்கு போய் கிட்டுதானே இருந்தேன்?தம்பி பிறந்ததும் அவனை பார்த்துக்க லீவ் போட்டா நீங்க உங்க சௌகரித்துக்கு என்னை அப்படியே உட்கார வச்சிட்டிங்க.

எல்லாம் என் தப்பு. தம்பியை அத்தைகிட்ட விட்டுட்டு வேலைக்கு போய் இருக்கணும். என் புத்தியை செருப்பால அடிக்கணும்.”

பானு தன் மனக்குறையை சொல்லி விட்டாள்.

அதில் அவனுக்கும் சங்கடம்தான். எத்தனையோ செலவுகளை குறைத்து ஓவர் டைம் செய்துதான் சமாளிக்கிறான். இதை எல்லாம் அவளிடம் சொல்லி இருக்கவில்லை. ஆனால் அவளுக்கே தெரியும் என்பது அவன் ஊகம்.


நிதின் கொஞ்சம் வளர்ந்த பிறகு பள்ளியில் சேர்த்த பின்பு மீண்டும் வேலைக்கு போவேன் என்று சொல்லி இருந்தாள். அதுவரை தன் மனைவி மகனுடன் இருக்க வேண்டும் என்று தான் இவனது ஆசை.

மகன் தன் இளமை பருவத்தில் தாயன்பை இழந்து விடக் கூடாது என ரொம்பவே மெனக்கெட்டு கொண்டு இருக்கிறான்.

பல்சர் வாங்க வேண்டும் என்பது அவன் கனவு. அதை மறந்து விட்டான். தனக்கு என வாங்கும் உடைகளின் தரத்தை குறைத்துக் கொண்டான். வாட்ச் பொலிவிழந்து விட்டது. வேறு வாங்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறான். ஷூ நைந்து விட்டது. மலிவு விலையில் ஷூ தேடிக் கொண்டு இருக்கிறான். அப்படி கிடைத்தாலும் குடும்ப செலவு ஏதோ ஒன்று நினைவு வர புதியது வாங்காமல் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறான். இன்னும் எத்தனையோ அவன் குடும்பம் குடும்பம் என்று தன் தேவைகளை குறைத்துக் கொண்டுதான் இருக்கிறான்.

பானுவும் அப்படித்தான். அவள் புதிய சேலைகள் எடுத்து மூன்று வருடங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்து அவனுக்கு பெயர் வைக்கும் போது ஒரு புடவை அவள் வீட்டில் எடுத்துக் கொடுத்தார்கள். அவ்வளவுதான். அப்புறம் பண்டிகைக்கு எடுப்பதோடு சரி. அவள் பெற்றோர் வேறு மாவட்டத்தில் இருப்பதால் அடிக்கடி போய் வர முடிவதில்லை இவளுக்கு. அதில் வேறு ஆற்றாமை உண்டு அவளுக்கு. பானுவின் வீட்டிலும் அடுத்தடுத்து தங்கைகள் திருமணம் அதன் பின்னான சடங்குகள் என்று கொஞ்சம் இழுபறியாத்தான் இருந்தது.

என்றைக்குமே தனக்காக கேட்டது கிடைக்காவிட்டால் பானு வருந்தியதே இல்லை. ‘ அடுத்த தடவை பார்த்துக்கலாம். வர்ற மாசம் வாங்கிக்கலாம் ‘ என இவனுக்கு தான் ஆறுதல் சொல்வாள்.

இவன் வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் அம்மாவை விட்டு வர முடியாது என்பதை இவர்கள் திருமணத்திற்கு முன்பே சொல்லி விட்டான். பிரபுவின் அப்பா அவன் சின்ன வயதிலேயே இறந்து விட்டார்.

நிதின் பிறந்த போது தன் அப்பாவே மீண்டும் பிறந்ததாக நினைத்துக் கொண்டாடியது கண்ணில் மின்னியது அவனுக்கு.

அந்த பொக்கிஷத்தை அவனுக்கு பெற்றுக் கொடுத்த மனைவியை இப்போது காதலாகப் பார்த்தான்.

பானு இன்னும் பொரிந்து கொண்டு இருந்தாள்.

“மொதல்ல நீங்க டைவர்ஸ் குடுங்க. “

அவள் சொன்னதில் மற்ற எதையும் மதிக்காமல்

“ நீ வெட்டியா இல்லாம வெட்டிகிட்டா இருக்க ?” என்று சீண்டினான்.

“ ஆமா! வெட்டிகிட்டு தான் இருக்கேன். காலையில பால் பாக்கெட் வெட்றேன். அடுத்து எல்லா மளிகை ஜாமான் பாக்கெட்டும் வெட்டுறேன். காய்கறி வெட்டுறேன்.. “ மூச்சு வாங்கியது அவன் மனைவிக்கு.

அதில் அவன் பார்வையும் பேச்சும் மாறியது.

“ அப்புறம் நல்லா சாப்பாட்டை வெட்டுற “ லேசாக சிரித்துக் கொண்டே சொன்னான்.

“ அடுத்து உங்களை வெட்டுறேன் “

“ வித் பிளஷர் “

சண்டை முடிந்தது.

ஆனால் இன்று அளவு மீறி திட்டி விட்டான். நிஜமாகவே டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி விடுவாளா? அதையும் பார்த்துடலாம் ‘ சரிந்த மனதை சமாதானப் படுத்திக் கொண்டான்.

இவன் அலுவலகம் வந்துவிட்டால் வேலையில் நேரம் காலம் பார்க்க மாட்டான். அதனால் மாலை ஆறு மணிக்கு ஃபோன் செய்து 'இன்னும் கிளம்பலியா ? ‘ என்று படுத்தி எடுப்பாள்.
இன்றைக்கு ஃபோன் செய்வாளா ?
வழக்கத்துக்கு மாறாக இன்று நேரத்தை நெட்டித் தள்ளிவிட்டு ஆறு மணிக்கு காத்திருந்தான்.

“ வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும் “


ஃபோன் குரல் கொடுத்தது.

டக்கென்று போனை அட்டென்ட் செய்தான்.

அவன் அம்மா பேசினார். ஏதோ கோவிலுக்கு போகிறாராம்.

“ சரிம்மா “ போனை வைத்து விட்டான்.

பானு எப்போது ஃபோன் பண்ணுவாள்?

மீண்டும்செல்பேசி இசைத்தது.


“ வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும் “

இந்த முறை டிஸ்ப்ளே முதலில் பார்த்தான். பானுதான்!

“ ஹலோ “ என்றான் கெத்தாக. உள்ளுக்குள் பயமும் சந்தோசமும் மாறி மாறி உருண்டு விளையாடின.

இவன் குரலை அவதானித்தவள் அவனை அறிந்து கொண்டாள்.

தானும் கோவில் செல்லப் போவதாக கூற இருந்ததை மறந்து விட்டாள்.

“ கிளம்பிட்டிங்களா ?” என்றாள்.
“ கிளம்பிட்டேன் “ என்றபடி தயாராக வைத்து இருந்த தன் பேக்கை எடுத்து முதுகில் மாட்டினான் அவள் கணவன்.

டைவெர்ஸ் மிட்டாய் கிடைக்கவே போவதில்லை என்பதை அறியாமல் வீட்டில் தாயுடன் தன் தந்தைக்காக காத்து இருந்தான் நிதின் பிரபு.
Nirmala vandhachu 😍😍😍
Sema story pa daily nadakkum fight ithu peran petthi vandhalum divorce panna ready taan ana antha mittai avanghalukkm illainnu nenaikkum pothu 🤣🤣🤣
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top