வாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Administrator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,700
Reaction score
964
Points
113
1619065695721.png

நாம் வசிக்கும் வீடு சொந்தமானதாகவோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் வாஸ்து சரியில்லாத வீட்டில் வாஸ்து தோஷத்தை நீக்க மயில் இறகை பயன்படுத்தலாம்.

நாம் வாழும் வீடு நம் சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கலாம். ஆனால் அனைத்து வீடும் வாஸ்து விதிப் படி கட்டியிருப்பார்கள் என சொல்ல முடியாது. அதோடு தற்போது இருக்கும் இடப்பற்றாக்குறையால் வாஸ்து பார்த்து கட்டுவதில் சிக்கல் எழுகின்றது.


அப்படி வாஸ்து இல்லாமல் கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதால் பல குடும்பங்களில் பிரச்னைகள் இருந்து வருவது வழக்கம். அப்படிப்பட்ட வாஸ்து தோஷ பிரச்னைகளை மயில் இறகு பயன்படுத்தி எப்படி நீக்குவது என்பது குறித்து பார்ப்போம்.

மயில் கடவுள் முருகனின் வாகனம். கந்த சஷ்டியைப் பாடினால் நம் துன்பங்கள் பறந்தோடுவது போல, வீட்டில் மயில் இறகு வைத்திருந்தால் பலவேறு , தோஷங்கள் நீங்கி, நன்மைகள் ஏற்படும்.

மயில் இறகுகள் வாஸ்து தோஷத்தையும் போக்க வல்லது என்பது உங்களுக்கு தெரியுமா?


சனி தோஷம் நீங்க:

வீட்டில் மூன்று மயில் இறக்கைகளை ஒன்று சேர்த்து ஒரு கருப்பு நிற கயிற்றினால் கட்டி, அதன்மீது நீரில் பாக்கை போட்டு, சிறிது நேரம் ஊற வைத்த பின்னர், அதை மயில் இறகு மீது தெளித்தவாறு, “ஓம் சனீஸ்வராய நமஹா” என தினமும் 21 முறை உச்சரிப்பதால், சனி தோஷம் நீங்கும்.


வாஸ்து தோஷம் நீங்க :

வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக எட்டு மயில் இறகுகளை ஒன்றாக சேர்த்து, அதை ஒரு வெள்ளை நிற கயிறை கட்டி, பூஜை அறையில் வைத்து, ‘ஓம் சோமாய நமஹா’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

செல்வம் அதிகரிக்க:

நாம் வீட்டில் பணம் மற்றும் நகைகள் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைப்பதன் மூலம் அலமாரியில் செல்வ வளம் அதிகரிப்பதோடு, செல்வம் நிலைக்கவும் செய்யும்.

எதிர்மறை சக்திகள் அகல:


மயில் இறகை வீட்டின் முன் வைப்பதன் மூலம் எதிர் மறை சக்திகள் வீட்டில் நுழைவதையும், வருவதையும் தடுக்கும். அதனால் எதிர் மறை சக்திகளால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்

ஒருவர் தனது அலுவலத்தில் தான் அமரும் இடத்தில் மயில் இறகு வைப்பதால் அந்த இடம் அழகாக தோன்றுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.


திருமணமான தம்பதியர்கள் அவர்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைப்பதன் மூலம் தம்பதியினருக்குள் பிரச்னைகள் நீங்கி, இருவருக்குள் அன்னியோன்யமும், ஊடலும் அதிகரிக்கும்.
 
Advertisements

Latest Episodes

Advertisements