• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விசாரணை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
ஸ்டோன் கோல்டு செல்வா கண் விழித்த பொழுது, அவன் தலை இன்னும் கிர்ர்ர் என சுத்தியது. கடைசியாக அந்த காபி சாப்பில் இருந்து வரும் வழியில் அந்த போலீஸ் அதிகாரி இவன் புற மண்டையில் ஓங்கி அடித்தது தான் நினைவிருந்தது. இப்போது சுத்தி பார்த்தால் எல்லாம் மாறி போயிருந்தது , ஏதோ வீட்டில் இருப்பதை உணர்ந்தான்.. அந்த மோப்பம் பிடித்த போலீஸ் நின்று கொண்டிருந்தான், அவன் அருகில் நிழல்கள் ரவி போல ஒருவன் அவன் தோற்றமும் உருவமும் இவனும் போலீஸ் ஆக தான் இருக்க வேண்டுமென உணர்த்தியது. பக்கத்தில் சொட்டை தலையுடன் நெற்றியில் சந்தனமுமாக ஒரு சாமி போலீஸ். இவரகள் பின்னணியில் சில அப்ரசண்டி போலீசுகள் , அனைவரின் கண்களும் இவனையே கண்கொத்தி பாம்பாக பார்த்த வண்ணம் இருந்தன. பக்கத்தில் சிறிய முனகல் குரல் கேட்க திரும்பி பார்த்தான் அங்கே ஜட்டியுடன் ஒரு உருவம். அதன் முகம் இவனுக்கு ரொம்ப பரீட்சயமானது தான். சற்று நெருங்கி அந்த முகத்தை பார்த்தவன், முகம் தெளிந்தான், " அண்ணே நீ எப்புடினே இங்க.."

மித்ரனின் நண்பன் பயந்தவாறே தான் பேசினான், " நான் வந்து ரெண்டு நாள் ஆச்சு , உன் அண்ணன் கூட சேர்ந்த பாவம். என் நிலமைய பாத்தியா.." தன உடலின் கோரைகளை காட்டினான்.

" அன்னைக்கு பாத்த மாதிரி அப்பிடியே இருக்கியே.. பாடிய நல்லா மெயிண்டயின் பன்னிருக்க போல.. " அசட்டு தனமாய் சிரித்தான் செல்வா.

மித்ரனின் நண்பன் கோபத்தில் முறைக்க," என்னனே அப்டி பாக்குற.. எவ்ளோ நாள் ஆச்சு உனைய பாத்து.. வீட்ல அக்காலாம் நல்லா இருக்காங்களா..? "

இதை கண்டு பொறுமையிழந்த நாராயணன்,

" என்ன கல்யாண வீடுக்காடா வந்துருகிங்க.. நலம் விசாரிசிட்டிருகீங்க.."

அப்போது தான் கடத்தப்பட்டது நினைவு வர, முகத்தை கொஞ்சம் சீரியசாக மாற்றினான் செல்வா.

" எதுக்கு சார் என்ன கூட்டிட்டு வந்துருக்கீங்க, இன்ஸ்பெக்டர் பையன ஏமாத்தி பத்து ரூபா வாங்குனேன் .. உண்மை தான், அதுக்காக இப்படியா..? " அலுத்துக் கொண்டான்.

" என்னடா உளருத.. அதெல்லாம் நாங்க கேக்க வரல.. நீ மித்திரன் தம்பி தானே.. மித்திரன் பணத்த எங்க வச்சிருக்கான்.. உண்மையா சொல்லிடு மரியாதையா.. " தன்னால் முடிந்த வரை விறைப்பாக பேசினான் நாராயணன், ஆனால் செல்வா அஞ்சுவதாக இல்லை.

" என்ன சார்.. இத எங்க அண்ணன்டையே கேக்க வேண்டி தானே.. " குத்தவைத்து உக்காந்தவாறே சொன்னான்.

" அவன் தான் நெஞ்சுல குண்டு வாங்கி போய் செர்ந்துடானே "

இதை கேட்டதும் செல்வா கண்கள் சினத்தில் பொங்கி சிவந்தன.. நரம்புகள் புடைக்க, அவன் உள்ளே நிகழ்ந்த பூகம்பத்தின் விளைவாய் அவன் கன்னங்கள் ஆடின, அல்லது இவன் ஆட்டினான்.

" யாரு சார் என் அண்ணன் கொன்னது...?,, அவன ஆள மட்டும் காட்டுங்க... அப்டி அவன் குடல உருவி மாலையா போடறேன் சார்.. சொல்லுங்க.." பரபரத்தான்.

" இதோ இவரு தான் சுட்டாரு " ஜெர்ரியை கை காட்டினான் நாராயணன்.

ஜெர்ரியை பார்த்ததும் பொங்கி வந்த கோவமெல்லாம் தீபாவளி சூத்தை பட்டாசாக புஷ்ஷ்ஷ் விட,

" ஓ சாரா ..! அவரு பண்ண சரியா தான் இருக்கும்.. நான் அங்கேயே உக்காந்துக்றேன்" என சொல்லியவனை பொறி கலங்குமாறு பளாரென ஒரு அரை விட்டான் ஜெர்ரி.

சுத்திகொண்டு கீழே விழுந்தவன்.. "சார்.., இன்னொரு தடவ அடிச்சா..." என இழுத்தவன் ,

" என்னடா செய்வ" என ஜெர்ரி மிரட்ட, " நான் செத்துருவேன் சார். நான் ஆர்ட்டு பெசன்ட் சார்.. " என்றான் தன் கைகளால் அடுத்த அடியிலிருந்து தன் முகத்தை மறைத்தவாறு.

" என்னது.." ஜெர்ரியின் குரல் அதிரிச்சி முலாம் பூசியிருந்தது.

" ஆமா சார், எனக்கு சின்ன வயசுலேயே ஆர்ட்டு ப்ராப்ளம்.. எனக்கு ஆபரேஷன் பண்ணி ஆர்ட்டுல பேஸ்புக்க மாடிருகாங்க சார்" என்றான் பரிதாபமாக..


"பேஸ்புக்கா..? "அதிர்ந்தான் ரவி.


" ஆமா சார், காருக்கு ஸ்டெப்னி மாதிரி ஆர்ட்டுக்கு வைப்பாங்கலே.."

"அது பேஸ்மேக்கர்.. நாயே.. "

" ஆங்.... அந்த பேச்குக்கர் தான் சார்.. கருமம் வாயிலேயே நுழைய மாட்டுது, எப்டி தான் நெஞ்சுக்குள்ள நுலஞ்சுதா.." சொல்லிவிட்டு சிரித்தான் பைத்தியம் போல..

"ஆமா சார் இவன் ஆபரேஷன்க்கு தான் முதல் தடவியா , மித்ரன் திருடுனான்." மித்ரன் நண்பன் செல்வா சொன்னதை வழிமொழிந்தான்.

ஜெர்ரி ஏமாற்றத்தில் தலையை அசைத்தவனாய் நாராயணனை பார்க்க சொல்லிவிட்டு அங்கிருந்து நகன்றான் வலியில் தன் தலையை பிடித்தவாறே,

நாராயணன் தனக்கு விசாரிக்க கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்தவனாய், மனதுக்குள் மனப்பாடம் செய்த பஞ்சு தயலாகை எல்லாம் ரீவைண்ட் செய்து விட்டு செல்வா அருகில் வர, அதற்க்கு வேலை வைக்காமல் தானே பேசினான் செல்வா,

"நானே எல்லாத்தையும் சொல்லிட்றேன் சார், அடிச்சுராதிங்க.. போன வாரம் என் அண்ணன் என்ட்ட ஒரு நாயை கொடுத்து இத பத்திரமா பாத்துக்கோ.. எங்கயும் விட்டுராத.. நான் வந்து கேட்டா மட்டும் கொடுனு சொன்னான், நானும் அத பத்திரமா தான் பாத்தேன், திடீர்னு சனியன் நேத்து எங்கேயோ அத்துக்கிட்டு ஓடிருச்சு.. அத தேடி அலையுறப்போ தான், அந்த பொம்பளைங்க என்ன புடிச்சிடாங்க.. அவ்ளோ தான் சார் எனக்கு தெரியும் " என முடித்தான்.

"அவ்ளோ தானா .. நீ வேற ஏதும் கேக்கலையா உன் அண்ணன்ட்ட.."

"கேட்டேன் சார்.."

"அபுடியா.. குட் பாய்.. என்ன கேட்ட.."

"குவாட்டர் கேட்டேன் சார்.. வாங்கி கொடுத்தான்" பல்லை காட்டினான் செல்வா.

எரிச்சலில் அவனை அடிக்க கை ஓங்கியவன், மித்திரன் நண்பன் எதோ சொல்ல முயல அவன் பக்கம் திரும்பினான்.

"சார் அவன் சொல்றது உண்மைன்னு தான் சார் நினைக்குறேன்.. மித்திரன் கூட என்ட்ட கடைசியா பேசுறப்போ, ஒரு முக்கியமான விஷயம் நேருல பேசணும்னு சொன்னான், நான் போன்லயே சொல்லுனு சொன்னேன், அதுக்கு அவன் முடியாது, ரொம்ப முக்கியம் நம்மள காப்பாத்த போற விசயம்னு சொன்னான், அவன நேர்ல பாக்ரதுக்குள்ள நீங்க தூக்கிட்டு வந்துடீங்க. ஆனா இந்த நாய் மேட்டர்லாம் எனக்கு தெரியாது.." என்றான்.

"இதை ஏன்டா இவ்ளோ நாள் சொல்லல.." அதட்டினான் ரவி.

"இல்ல சார், நீங்க யூஸ் புல்லா சொல்லு இல்லேனா கொன்னுருவேனு சொன்னிங்க.. பயத்துல விட்டுட்டேன்."

,இதை பாட்டி கதை போல கேட்டுகொண்டிருந்தான் செல்வா. " என்னன்னே இதுகுள்ளாமா பயபடுவ.. " என சிரிக்க , அதனை கண்டு நாராயணன் மீண்டும் சினம் பொங்க அவனை அடிக்க முனைந்தான், பயத்தில் ஆமை போல தன் தலையை உடலுடன் ஒட்டிக் கையால் மூடிக் கொண்டான் செல்வா,

அவன் நடவடிக்கை பார்த்து சினம் சிரிப்பாக மாற , "உனக்குலாம் எவன்டா ஸ்டோன்கோல்டுன்னு பேர் வச்சது.." என்றான் நாராயணன்.

"சின்ன வயசுல எனக்கு கிட்னில ஸ்டோன் வந்துச்சு சார். அதான் அப்புடி வச்சுடாங்க.." மீண்டும் இளித்தான், இம்முறை சிறிது கூச்சத்துடன்.

இதை கேட்டு அறை முழுதும் சிரிக்க, ஜெர்ரி மட்டும் மித்ரன் நண்பன் சொன்ன வார்த்தைகளை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருந்தான்.

"இப்போ என்ன சார் பண்றது.." ஜெர்ரியை கேட்டான் நாராயணன், பதிலோ ரவியிடமிருந்து வந்தது..

" என்னத்த பண்றது.. இந்த தெரு நாய கூட்டிட்டு போய் அந்த சொறி நாய தேட வேண்டியது தான்." ரவி கவலை கலந்த புன்னகையுடன் முடித்தான்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஜாலன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜாலன் டியர்
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமையான பதிவு அண்ணா..so the answer is Tomy....but how....
எப்படி எல்லாம் கேள்வி கேட்டு பதிலாக கதையை கேட்குதுங்க இந்தக் குட்டிப் பொண்ணுங்க எல்லாம்.
 




Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
எப்படி எல்லாம் கேள்வி கேட்டு பதிலாக கதையை கேட்குதுங்க இந்தக் குட்டிப் பொண்ணுங்க எல்லாம்.
Haha
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top