விஜயலக்ஷ்மி ஜெகன் அவர்களின் "பழகி பார்க்கலாம் -my view

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் நட்பூஸ்

இன்று ஒரே மூச்சில் நான் படித்து முடித்தது விஜயலக்ஷ்மி ஜெகன் அவர்களின் "பழகி பார்க்கலாம் "கதை தான் .

தலைப்பிலேயே ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டார்.எடுத்த கதை முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவு flow கொடுத்து இருக்கார் .

வயதிற்கு வராத பிள்ளைகளின் கையில் பணம் இருக்கிறதே என்று ஹை பவர் மோட்டார் பைக் வாங்கி கொடுத்து அவர்கள் உயிர் மட்டும் போவது இல்லாமல் மற்றவர்களின் உயிருக்கும் எமனாய் மாறும் பெற்றவர்களுக்கான சவுக்கடி இந்த கதை .

கண்டிக்க வேண்டிய வயதில் கண் மூடி இருக்கும் பெற்றோர்கள் இது ஒரு வாழ்வியல் பாடம் என்று கூட சொல்லலாம் .ஆயிரம் சொத்து ,சுகம் இருந்தாலும் குடும்பம் சிதைந்து விட்டால் மீள்வதற்கு பெரும் விலை கொடுக்க வேண்டி வரும் என்று சொன்ன விதம் அருமை .

பணத்திற்கு பணியாது ,அண்ணன் மரணத்திற்கு நியாயம் வேண்டி போராடி சுடர் அழகாய் நிர்மிவுடன் சுடர்விடுகிறாள் என்றால் மிகையல்ல .

ஆரம்பமே மனதிற்கு பாரம் ஏறிவிட்டது .ஏற்றுக்கொள்ளவே முடியாத மரணம் .அதை வைத்து சங்கிலி தொடர் போல் நடக்கும் நிகழ்வுகள் .marvellous .நடுவே காதல் ஒருபுறம் ,குடும்பம் ஒரு புறம் என்று சிக்கி ,திக்கி தவிக்கும் ஹீரோ ரெண்டு பேர் .இவர்களின் காதல் நிறை வேறுமா என்று டென்ஷன் வந்து விட்டது .

ஒவ்வொரு கேரக்டர்ருக்கும் அனைத்து பக்கங்களையும் காட்டிய விதம் அருமை.வாழ்வின் ரியாலிட்டி புரிந்த தங்கை .பெற்றோருக்கு மகனாய் மாறும் கடைசி தங்கை .அவளை "பழகி பார்க்கலாம் "என்று நெருங்கும் மூன்றாவது ஹீரோ என்று ஒரு விருந்து படைக்க பட்டு இருக்கிறது என்றால் மிகையல்ல .

விஜயலக்ஷ்மி ஜெகன் அவர்கள் மேலும் மேலும் இது போன்ற தரமான கதைகளை கொடுக்க வேண்டுகிறேன் .வாழ்த்துக்கள் தோழி .உங்கள் திறமைக்கு சலூட் .வாழ்த்துக்கள்
 

Advertisements

Top