Reviews விடியாத இரவுகள் அழகாய் விடிந்தது

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#1
மொத்தக் கதையும் மஹி என்கிற ஒற்றைப் பெண்ணைச் சுற்றியே நடக்கிறது. மஹியே இந்தக் கதையின் உயிரோட்டம். பெற்றவர்களுக்காக விருப்பமில்லாத பொழுதும் திருமணம் செய்து கொள்கிறாள். சரி திருமண வாழ்வாவது நன்றாக அமைந்ததா என்றால் தன்னைப் போலவே தங்களுடைய திருமண வாழ்க்கையையும் புரியாத புதிராகவே மாற்றிவிடும் அற்புதக் கணவன் அமரை வைத்துக் கொண்டு அது அவ்வளவு எளிதான காரியமா என்ன?

உங்கள் திருந்தாத மகனைத் திருத்துவதற்காகத்தான் நான் பிறப்பெடுத்தேனா என்று மாமியாரிடம் சீறும் காட்சிகளில் நம்மை சபாஷ் போட வைக்கும் ஆசிரியர், கணவரைத் தேடிக் கொண்டு பாருக்குச் செல்லும் போது நம்மை நெகிழவும் வைக்கிறார்.

கணவனையே தன்னுடைய முதல் குழந்தையாகக் கருதி அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடையப் பழைய நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து, தீய பழக்க வழக்கங்களிலிருந்தும் விலக்கிக் கவுன்சிலிங்கும் அழைத்துச் சென்று அமரை ஒரு முழு மனிதனாக மாற்றியும் விடுகிறாள் மஹி.

இறுதியில் ஒரு மனைவியின் ஏக்கத்தோடு எந்தப் படத்தை்க் கண்ணைக் கட்டிக் கொண்டுதான் வரைந்தாய் என்று கேட்கும் இடம் அழகு. அதை விட அழகு அதற்கு அமர் தரும் செயல்முறை விளக்கம். மேலும் பல வெற்றிக் கதைகள் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள் யுவகார்த்திகா.
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#4
விடியா இரவும் உன் விமர்சனத்தால் விடிந்ததோ!
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#9

srinavee

Author
Author
SM Exclusive Author
#10
unga review படிச்சா இன்னொரு தடவையும் படிக்க தோணுது...நீங்க சொல்றது கரெக்ட்... மகி.. மகி.. மகி தான்.. இந்த story fulla... Hatsoff @Yuvakarthika
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top