விலைமாது

நானும் பெண்தான்
ஆனால்
எனக்கு உலகம் அளித்த பெயர் விலைமாது...

அரைசாண் வயிற்றுக்காக எனது உடலைத்தான் விற்கிறேன் எனது உணர்வுகளை அல்ல....

அதைப் புரியாமல் பல மிருகங்கள் என்னை காட்சிப் பொருளாக்கும் பொழுது எனக்கும் வலிக்கிறது....

யாரைச் சொல்வது எனது தலைவிதியயா
அல்லது ஏழை குடும்பத்தில் தாய் தந்தையை இழந்து குடும்பத்தை சுமக்கும் மூத்த பெண்ணாக என்னை படைத்த அந்த கடவுளையா...

யாரையும் சொல்ல முடியாது
என் விதியால் ஒவ்வொரு இரவும் எனக்கு மரணம் தான் என்றால் நான் இப்படியே இருந்து, இறக்கிறேன்.
ஆனால்,
நான் சந்தோஷமாக உள்ளேன். ஏனென்றால் என்னையே நம்பியுள்ள எனது தங்கையும் தம்பியும் நல்ல உணவு உண்பார்கள் என்ற நிம்மதியில்....

விலைமாது என்று ஏளனம் செய்யும் ஊரிலே நான் நிமிர்வுடன் சொல்வேன்... நான் ஒரு சமூககாவளாளி என்று...
எப்படி என்றால்
நான் இப்படி இருப்பதால் தான் சிலரது உணர்ச்சிகள் கொட்டப்படுகிறது....
பல குழந்தைகள் பத்திரமாக இருக்கின்றார்கள்...
என் தம்பி தங்கையின் நிம்மதியை விட பல குழந்தைகள் நிம்மதியாக இருப்பது முக்கியம் அல்லவா....
இனியாவது எங்களையும் மனிதியாக நினையுங்கள்.....
அருமையான வேறு கோணத்தில் பார்வை super dear
 

Advertisements

Latest updates

Top