• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விலை ராணி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
52. சந்திரன் ஒரு திருடன்

விலைராணி ஓடி மறைந்துவிட்ட செடிகளின் கூட்டத்தருகே சென்று ஒரு செடியின் கிளையை விலக்கி உள்ளே நோக்கிய வீரகுப்தன் பார்வையில் எழுந்த எழில் மோகினியின் இணையிலா உருவம் எப்பேர்ப்பட்ட கவியின் வர்ணனைக்கும் அப்பாற்பட்டதாயிருந்ததால், இருந்த இடத்திலிருந்தே விகார முக வாலிபன் பெருமூச்செறிந்தான்.
ஒரே வினாடி பிற்பகுதி முழுவதும் தெரிந்த அவள் மோகன உருவத்தின் வளைவுகள் அவள் தலை துவட்டி குழலைச் சுற்றிப் பிழிந்து உதறி விட்டதும், நீளமான அவள் குழல் அவன் கண்களுக்கு திரையிட்டுவிட்டதால், திடீரெனத் தோன்றி மறைந்துவிட்ட மின்னலைக் கண்டவன் நிலையிலிருந்தான் வீரகுப்தன். கண்ணை மூடிச் சிறிது திறந்தான். அதற்குள் அவள் தலைக்குழலை எடுத்து முன்னுக்கு விட்டதால் மீண்டும் புலனான முதுகுப்புறத்தை அவள் வளைந்து துவட்டலானாள். அவன் எண்ணங்களும் வளைந்து வளைந்து அவள் பின்புற எழிலைப் பருகலாயின.
பழுத்த யானைத் தந்தத்தின் வெண்மையையும் மஞ்சள் நிறத்தையும் கலந்து பெற்றிருந்த அவள் லாவண்ய உடல்மீது ஆகாயத்திலிருந்த திருட்டுச் சந்திரன் செடிகளின் கிளைகளின் இடுக்குகளின் வழியாகத் தனது கிரணங்களை வீசி, அவள் உடல்மீது வட்ட வட்டமாக வெள்ளி நாணயங்களை இழைத்திருந்ததால், உலோகச் சிற்பமாக விளங்கினாள் விலைராணி.
அந்த நிலையில் அவள் உடலை வளைத்து வளைத்து துவட்டியதால், அந்த நாணயங்கள் மறைந்தும் இடம் மாறியும் காணப்பட்டதன் விளைவாக, வெள்ளிப் பணங்களை வாரியிறைக்கும் தனலக்ஷ்மிபோல் அவள் விளங்கினாள் சில விநாடிகள். நேரான முதுகுப்புறம் சாட்டை போல் இறங்கி இடையருகே அதிகமாகச் சிறுத்துவிட்டதாலும், அந்தச் சிற்றிடையில் வெள்ளி நாணயங்கள் மிகக் குறைவாயிருந்ததாலும், இடைக்குக் கீழே அளவோடு எழுந்த பருவத்திட்டுகளில் அவற்றின் பரிமாணத்தால் நாணயங்கள் அதிகமாகயிருந்ததாலும் மேலும் கீழுமுள்ள பணக்காரர்களுக்கு இடையே அகப்பட்டுக்கொண்ட ஏழைபோல் அவள் சிற்றிடை காட்சியளித்தது.
இத்தனைக்கும் அந்த இடையின் துவளலிலும் அசைவிலுமே மேலும் கீழுமுள்ள பெரிய பரிமாணங்கள் அசைந்ததால், ஏழையின் உழைப்பின்றி இயங்க முடியாத தனிகர்களை இடையின் நிலை நினைவூட்டியது.
இப்படி வட்ட வட்டமாக விழுந்த நிலவு நாணயச் சிறப்பால், அவள் உடல் காட்டிய விந்தையால், நிலைகுலைந்து நின்ற வீரகுப்தன் அவள் சரேலென்று திரும்பி உடலின் முற்பகுதியைத் துடைக்க முயன்றதும் மூச்சை இழுத்துப் பிடித்தக்கொண்டான். ஆனால் விலைராணி உதறிக் கையில் பிடித்திருந்த துண்டத்தால் உடலைப் போர்த்திவிட்டதாலும், போர்த்தியபடியே பூவுடலைத் துவட்ட முற்பட்டதாலும் ஏமாற்றமடைந்த அந்தக் காமுகன், தான் இருப்பதை ராணி எப்படியோ உணர்ந்திருக்கிறாளென்பதைப் புரிந்து கொண்டான்.
ஆனால் அவள் எச்சரிக்கையும், ஏமாற்று வித்தையும் அதிகப் பலனைத் தரவில்லையென்பதையும் உணர்ந்து கொண்டான். சுந்தர முகம் துடைத்து அங்கிருந்தே அவள் தொங்கவிட்ட ஆடைத்திரை அவள் தொடையுடன் நின்று விட்டதாலும், மேலே நின்ற இடங்களில் துவட்டு சீலை மார்பின் இரட்டை அழகின் மேடுகளில் தவழ்ந்து வந்ததாலும், அவள் உடலழகின் பகுதிகள் தெரிந்தும் தெரியாமலுமிருந்த காரணத்தினாலேயே அவனை உன்மத்தம் கொள்ளச் செய்தன.
புலனான அவள் அழகிடங்கள் அவன் புலன்களை ஈர்த்தன. புலனாகாத இடங்கள் ஊகத்துக்கு இடங்கொடுத்தன. இந்த மாதிரி நிலைகளில் மனிதன் அறிவு மிக வேகமாக இயங்குவதால் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவனுக்கு இன்ப இம்சையை அதிகமாகக் கொடுக்கின்றன.
ராணியை அந்த சமயத்தில் செடிகளின் கூட்டத்துக்கு அப்புறம் நின்று பார்த்த வீரகுப்தன் நிலையே அப்படியென்றால், விண்ணிலிருந்து பார்க்க முயன்ற வெண்மதியின் நிலை எப்படி இருக்க வேண்டும். குரு பத்தினியான தாரையையே நிர்வாணமாகப் பார்த்த காரணத்தினாலோ என்னவோ அவனுக்கு நிர்வாண அசை அதிகமானதால், அவன் தனது கிரணங்களினால் அவள் மோகன உருவத்தை ஊடுருவச் செய்ததன் விளைவாக, உடலுக்கு ராணி இட்டிருந்த திரை சற்று அதிகமாகப் பளபளத்தது.
எடுத்து முடிந்த தலைமயிரை இன்னொரு முறை நன்றாக உதறி விட்டுக்கொண்டாள் அந்த மோகினி. கழுத்தில் அவள் துவட்டு சீலையை இழுத்து முகவாய்க் கட்டையில் அழுத்தி முகத்தை மேற்புறம் நோக்கியபோது அவள் முகத்தின்மீது இலைகளைப் பிளந்துகொண்டு நேராக இறங்கிய இரு கூர் கிரணங்கள் அவள் நெற்றியையும், புஷ்டியான கன்னங்களையும் தழுவியதால் அவள் மஞ்சள் நிறம் சுத்த வெண்மைக்கு இடங்கொடுக்கவே, அந்த மோகினியை சந்திரன் முத்தமிடுவதாக வீரகுப்தன் எண்ணினான். அவள் தலை மயிரை சீராக முடியிட்டிருந்துங்கூட அவற்றில் சில பிரிந்து பட்டையாக அவள் உருண்ட தோள்களில் பதிந்ததால் அந்த இடங்களை சிற்பி சரியாகச் செதுக்காததுபோல் தெரிந்தாலும், செதுக்காததும் ஒரு அழகாகவே இருந்தது அவள் உடலின் தோரணைக்கு.
பிறகு அவள் முகவாய்க்கட்டைக்கும் மார்பின் உச்சிக்கும் இடையே கவ்வியிருந்த சேலையைக் கொண்டு திரையிட்ட நிலையிலேயே உடலைத் துடைத்தாள். அடுத்து மார்பைத் துடைத்து இடையில் சேலையைச் சுற்றிக் கொண்டதால் திடீரெனப் புறப்பட்ட இரு மார்பகங்கள் மீதும் இரு கிரணங்கள் விழுந்தாலும் அவற்றின் அழகை வெண்மதி உயர்த்த முடியாததால் இமயமலைச் சிகரங்களிரண்டின் மீது தவழ்ந்து அவற்றை மறைக்க முயலும் பனித்திரை போல் விளங்கினான்.
ஆனால் தனக்கும் அந்த அழகு மேடுகளுக்கு அழகு செய்ய முடியும் என்று காட்ட முற்பட்டு, துவட்டப்பட்ட பின்பும் தங்கிவிட்ட சில நீர்த்திவலைகளை முத்துக்களாக்கினான். அப்படிப் பளிச்சிட்ட அந்த முத்துக்களும் விம்மி நின்ற மார்பும் வீரகுப்தன் மனத்தை உலுக்கியிருக்க வேண்டுமென்றாலும், அவற்றை அவன் கண்கள் கவனிக்கவில்லை. அகப்படாத புதையலைத் தேடும் கருவியைப் போல சீலை மறைத்த இடையின் கீழ்ப் பகுதியிலும் அழகுத் தொடைகளின் மேல் பகுதியிலுமே அவை நிலைத்தன.
இடைக்குக் கீழே இறங்கிய வயிற்றில் பதிந்து திண்மையான தொடைகளையும் துவட்டு சீலை வளைத்தாலும், இடையே உட்புறம் சென்றுவிட்ட காரணத்தால், அந்த சேலை மறைக்க முயன்ற லாவண்யத்தைப் பற்றிய ஊகத்தால் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பால் சிறிது உடல் நடுங்கினான் வீரகுப்தன்.
அண்களின் திருட்டுத்தனத்தை எந்தப் பெண்ணும் உணரவும் ஊகிக்கவும் முடியுமாதலால், வீரகுப்தன் கண்டிப்பாய் எங்கோ மறைந்து தன்னை, தன் நிலையைப் பார்க்கிறானென்பதைப் புரிந்தகொண்டதால் லேசாகப் புன்முறுவல் செய்தாள் விலைராணி. அவன் கழுகுக் கண்கள் தனது பருவ உடலை அலசியிருக்குமென்பதில் அவளுக்குச் சந்தேகமில்லையென்றாலும், முதலில் முதுகுக்குக் குழல் திரையிட்டும், பிறகு முன்னழகுகளுக்கு துவட்டுச் சீலையால் திரையிட்டும், தான் அவனை ஏமாற்றிவிட்டதை நினைத்ததால் அவள் புன்சிரிப்பில் சிறிது கள்ளத்தனமும் கலந்து அவள் முகத்தை மனோகரமாக அடித்தது.
அவள் புருவங்கள் ஏதோ கேள்வி கேட்பனபோல் ஒரு முறை வளைந்து நிமிர்ந்ததாலும் கண்களும் கொடிக் கூட்டத்தின் வெளிப்புறத்தை நோக்கியதாலும் பறந்த காமன் கணைகள் வெளியே கொடியை அடியோடு விலக்கிக்கொண்டு அவள் தனிமையை உடைத்துவிட அவன் எண்ணிய தருணத்தில் நிகழ்ந்த இன்னொரு விந்தை அவனைப் பழைய இடத்திலேயே நிற்கவைத்து விட்டது.
இடையில் கட்டிய சீலையைத் திடீரென அவள் நீக்கினாள். சட்டென்று மீண்டும் ஒரு முழம் விட்டுக் கட்டினாள். சரேலென்று தோன்றிக் கருமையான மேகத்திடையே பாய்ந்து மறைந்துவிட்ட மின்னலைப் போல் அவள் பூவுடல் போர்த்திவிடப்பட்டதால் அவள் பழைய விலைராணியானாள். இத்தனைக்கும் துவட்டுச் சீலை போதாததால் ஆங்காங்கு சிறிதளவே உடலை மறைத்தாலும், மறைய வேண்டிய இடங்கள் மறைந்துவிட்டதால் வீரகுப்தன் மெள்ளத் திரும்பினான் அவள் கண்களில் படாதிருக்க. அந்தச் சமயத்தில் அவள் குரல் ஒலித்தது, “வரலாம்.” என்று.
திரும்பியவன் திடீரென நின்றான்.
“எங்கிருக்கிறாய் ராணி?” என்று ஏதுமறியாதது போல் வினவினான்.
அந்தத் திருட்டுத்தனத்தில் அவள் ஏமாறவில்லை.
“நீங்கள் பார்த்த இடத்தில்தான்.” என்று குரல் கொடுத்தாள் ராணி.
ஏற்கனவே விகாரமாயிருந்த வீரகுப்தன் முகம் வெட்கத்தால் அதிக விகாரமாயிற்று. அந்த விகாரத்துடன் உள்ளே நுழைந்த வீரகுப்தன் விலைராணியின் கண்களுக்கு விகாரமாயில்லை. அவன் உள்ளே வந்ததும் லேசாக அவள் நகைத்தாள். அவன் நுழைந்த சமயத்தில் அவன் பக்கத்துச் கொடியிலிருந்த ஒரு மலர்க்கொத்தைக் கொய்ய முயன்றாள். வீரகுப்தன் அதைக் கொய்தான். அவள் அழகிய தோளைப் பிடித்துத் திருப்பி அவள் குழலில் மலர்க்கொத்தைச் சொருகினான். அவள் பின்னால் அவன்மீது சாய்ந்தாள். அந்தச் சமயத்தில் அடித்த சிறு காற்று மேலிருந்த கிளைகளை விலக்கியதால் சந்திரன் தெரிந்தான். வீரகுப்தனும் விண்ணை நோக்கினான்.
“சந்திரன் ஒரு திருடன்.” என்று சொன்னான், விலைராணிமீது தனது கைகளைத் தவழவிட்ட வண்ணம்.
“உங்களைப் போல.” என்ற ராணி மதுரமாக நகைத்தாள்.
வீரகுப்தன் பேசவில்லை, இதழ்கள் எங்கோ புதைந்தது கிடந்த காரணத்தால்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
53. உணர்ச்சிகள் உந்தினால்...

சந்திரனோடு தன்னையும் ஒரு திருடனாக்கிய விலைராணியின் சுந்தர உடல் தன்மீது சாய்ந்ததும், அவள் மதுரமாக நகைத்ததும், வீரகுப்தன் உணர்ச்சிகளைத் தாண்டவே அவன் அவற்றின் வேகத்துக்கு அடிமையானான்.
அவள் தோள்களிரண்டையும் தனது முரட்டுக் கைகளால் அழுத்திப் பிடித்துத் தன்மீது சாய்த்து அவள் வழவழத்த கழுத்தில் தனது முரட்டு இதழ்களைப் பொருத்தினான். பிறகு தோள்களைப் பிடித்த கைகளால் இடையை இறுக்கி அவள் புவுடலைப் பின்னுக்கு இழுத்து, தன் உடலுடன் நன்றாக இணைத்துக் கொண்டான்...
அந்த ஆண்மகன் காட்டிய வேகத்தால் விலைராணியின் உணர்ச்சிகளும் கொந்தளித்து அவளை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தன. பின்னால் வீரகுப்தன் முரட்டு உடல் தன் உடலுடன் உராய்ந்ததன் விளைவாக படாத இடங்களில் பட்ட அவனது வலிமையும் அழுத்தமும் அவளைத் திக்குமுக்காடச் செய்தன. அவனது முரட்டு அணைப்பிலிருந்து அவள் விடுபட முயன்றது பயனளிக்கவில்லை.
விலைராணியின் முதுகுப்புறத்தைத் தன் உடலுடன் இணைத்து இழைத்தும் கொண்ட அந்த வெறியன், அவள் தலையில் தான் சொருகிய கொன்றை மலரை முகர்ந்து அதன் சுகந்தத்தைப் பலமாக இழுத்தான். ஆனால் அதன் சுகந்தத்தைவிட அவள் அழகு மேனியின் சுகந்தம் அதிகமாயிருந்ததால், அவள் தோளில் மட்டும் ஏறிய சேலை முதுகை மறைக்க முடியாத இடங்களில் தனது உதடுகளைத் திரும்பத் திரும்பப் புதைத்தான். பிறகு இடையை விட்டுக் கைகளை மேலுக்கு. உயர்த்தினான்.
இன்ப வேதனை தாங்காததால், “உம்!” என்ற எச்சரிக்கை ஒலியைக் கிளப்பினாள் விலைராணி.
“என்ன ராணி?” அந்த முரடன் குரல் அவள் காதுக்கருகில் மெல்ல ஒலித்தது.
“என் உடல்...” முணுமுணுத்தாள் ராணி.
அதற்கென்ன?” அவனும் ரகசியமாகக் கேட்டான்.
“வலிக்கிறது...”
“எங்கே? இங்கேயா?”
“சே! சும்மா இருங்கள்...”
“சும்மா இருக்கவா இங்கு வந்தோம்?”
“உங்களுக்கு அயோக்கியத்தனம் அதிகமாகிவிட்டது...”
“மனைவியை அணைப்பது அயோக்கியத்தனமா?”
“முறை... இடம்...” என்று அவள் முணுமுணுத்தாளானாலும் லேசாகத் திரும்ப முற்பட்டாள்.
வீரகுப்தன் அவளுக்கு உதவி செய்து தனது கைகளாலேயே அவள் உடலைத் தன்னை நோக்கித் திருப்பினான், கைகளை அவளைச் சுற்றி ஓடவிட்டான். கைகளால் சற்று எட்டப் பிடித்து அவள் அழகிய உடலை நோக்கினான்.
“ராணி, நீ எத்தனை அழகு!” என்று பிரமிப்புடன் பேசினான்.
“அவ்வளவு அழகா?” என்று அவள் கேட்டாள், சுந்தர இதழ்களில் புன்முறுவலைப் படரவிட்டாள்.
“ஆம். இணையிலா அழகு. ஆபத்தான அழகு! என்றான் வீரகுப்தன் அவள் அழகிடங்களில் கண்களை ஒட்டி.
“ஆபத்தான அழகா! அது என்ன எனக்குப் புரியவில்லையே என்ற அவள் தனது இடையை அவனிடம் கொண்டு போனாள்.
உன்மத்தம் கொண்டான் அந்த மகாவீரன்.
“ராணி அதோ உன் கண்கள்! இஷ்டப்பட்டால் அமுதம் சிந்தும், இல்லையேல் விஷத்தைச் சிந்தும். அதோ உன் மார்புகள். ஏன் அப்படி முறைக்கின்றன? அதோ மார்பிலிருந்து இறங்கி வயிற்றுக்குக் கீழே மறையும் சீலை. அது அடக்கியுள்ள இடங்களில் எத்தனை மர்மமோ அபாயமோ? எதுவாயிருந்தாலும் மனிதனை உலுக்கிவிடும் ராணி.” என்று விடுவிடுவென்று பேசிக் கொண்டு போன வீரகுப்தன் அவளை எட்டிப் பிடித்திருந்த கைகளை அகற்றி அவளுக்கு விடுதலை அளித்தான்.
“ராணி! மாளிகைக்கு ஓடிவிடு. இன்னும் சிறிது நேரம் நீ இங்கிருந்தால் என்ன நடக்குமோ தெரியாது.” என்று வேகத்துடன் பேசினான்.
“என்ன நடக்கும்?” என்று கேட்டுக்கொண்டே விலைராணி அவனை நெருங்கி அவன் கைகளுக்குள் நுழைந்தாள். கைகள் மீண்டும் எழுந்து அவளைச் சிறைப் படுத்திக் கொண்டன.
“ராணி! ராணி! வேண்டாம்.” என்று மன்றாடினான் வீரகுப்தன்.
“நான் வேண்டாமா?” அவனைச் சீண்டினாள் ராணி.
“வேண்டும் வேண்டும். இருந்தாலும் கடமையிருக்கிறது.” என்று மன்றாடிய வண்ணம் அவளைத் தனது கைகளால் சுற்றினான், இழுத்தான், வேகமாக அணைத்தான்.
அவன் தோளின்மீது அவள் தலை சாய்த்தாள். அவன் காதுக்கருகில் உதடுகளைக் கொண்டு போய், “எந்தக் கடமையைச் சொல்கிறாய் என் ராஜா?” என்று கேட்டாள்.
பேச்சு ஏகவசனத்தில் திரும்பியதும் வீரகுப்தன் நிலைகுலைந்தான்.
“அடி கள்ளி! அரசியல் கடமையைச் சொன்னேன்.” என்று குளறினான்.
“மனைவியிடம் கடமை ஏதுமில்லையா ராஜா?” என்று அவள் குழைந்தாள். தனது இரு பற்களால் அவனது காதின் நுனியை லேசாகப் பற்றினாள்.
அதற்குப் பின் வீரகுப்தன் சுயநிலை இழந்தான். ஆட்டுக்குட்டியைத் தூக்குவதுபோல அவளைத் தனது திடமான கைகளில் தூக்கிக்கொண்டான். அந்த நிலையில் அவள் தனது கன்னத்தை கரடி போலிருந்த அவன் மார்பு மீது சாய்த்துக்கொண்டாள். அவள் மார்பிலொன்று அவன் மார்பின் ஒரு பகுதியில் அழுந்தி இழைந்தது.
அவள் பின்னழகின் எழுச்சியொன்று அவன் வயிற்றில் இழைந்தது. இவை அனைத்தும் அவன் உடலில் உணர்ச்சித் தீயை மூட்டிவிடவே மிருகம் போல் ஒருமுறை பெரிதாக, “௨ம்...” கொட்டினான் வீரகுப்தன். பிறகு அவளைக் கைகளில் தாங்கிய வண்ணம் அந்த இடத்தைவிட்டு நடக்கத் தொடங்கினான்.
“சற்று நில்லுங்கள்.” என்ற ராணியின் சொல் அவனை நிற்க வைத்தது.
“ஏன் நிற்க வேண்டும்?” என்று வினவினான் வீரகுப்தன். அவன் குரலில் கோபமும் வெறியும் இருந்தன.
“எங்கே போகிறீர்கள்?” என்று அவள் மீண்டும் வினவினாள். அவள் குரலில் அச்சம் சிறிது தெரிந்தது.
“எதற்கு அஞ்சுகிறாய்?” என்று வீரகுப்தன் வினவி, கையில் கிடந்த உடலில் தனது முரட்டு உதடுகளை ஒரு முறை அழுத்தி எடுத்தான்.
“நியாஸாவின் நிலை.” என்று எதையோ சொல்ல முயன்றாள்.
“அதைப்பற்றி நினைக்க இப்பொழுது அவகாசமில்லை.” என்ற வீரகுப்தன் அவளைக் கைகளில் தாங்கிய வண்ணம் அந்த மலர்ச்செடிக் கூட்டத்தில் ஒரு மூலையிலிருந்த ஒரு பளிங்கு மேடையை நோக்கிச் சென்றான்.
அவன் எண்ணம் அவளுக்கு நன்றாகத் தெரிந்ததால், “வேண்டாம்.” என்ற மெதுவாக எச்சரித்தாள்.
“எது வேண்டாம்?” என்று அவன் முரட்டுத்தனமாகக் கேட்டான்.
“நீங்கள் நினைப்பது...” என்றாள் ராணி.
“என்னை எதுவும் கட்டுப்படுத்த முடியாது...”
“முடியும்...”
“எது?”
“உங்கள் சபதம்...”
“அதை மறந்துவிட்டேன்...”
“என் சபதமும் இருக்கிறது...”
“அதையும் மறந்துவிடு. போர் முடியும்வரை காத்திருக்க வேண்டுமென்று குருநாதர் சொன்னது அர்த்தமில்லாதது...”
“இருப்பினும் சபதம் செய்திருக்கிறோம்...”
“அதை இன்று உடைக்கிறேன்...”
இப்படிக் கூறிய வீரகுப்தன் அந்தப் பளிங்கு மேடையில் அவளைக் கிடத்தினான், அவள் மீது குனியவும் செய்தான்.
“வேண்டாம். இப்பொழுது நீங்கள் பேராபத்திலிருக்கிறீர்கள்.” என்று எச்சரித்தாள் விலைராணி.
“எந்த ஆபத்தும் என்னை எதுவும் செய்ய முடியாது.” என்று கூறிக்கொண்டே அவள்மீது சாய முயன்ற அவன் திடீரென்று அவள்மீது விழுந்து புரண்டான். அவளையும் மேடையிலிருந்து இழுத்துக்கொண்டு தரையில் விழுந்தான். விமுமுன்பு அவன் தலைக்கு மேல் குறுவாளொன்று பறந்து சென்றது.
“ஆ!” என்று வேதனையுடன் அலறினான் வீரகுப்தன். செடிக்கூட்டத்துக்கு வெளியே பலர் நடமாடும் ஒலி கேட்டது. அவர்களில் இருவர் பளிங்கு மேடையை நாடி ஓடி வந்தார்கள்.
“குறுவாளின் ரத்தக்கறையை மேடையில் காணோமே.” என்றான் ஒருவன்.
“கீழேயிருக்கும். விழுந்திருப்பார்கள். குனிந்து அவர்கள் சடலங்களை வெளியே இழு.” என்றான் முதலில் பேசியவன்.
இருவரும் கிரேக்கர்கள் என்பதை அவர்கள் மொழியால் உணர்ந்த விலைராணி மெளனமாகக் கிடந்தாள். அப்பொழுது அந்த மேடைக்குக் கீழே குனிந்து வந்தவன் இருமுறை தொண்டையிலிருந்து சத்தத்தை வெளியிட்டான். பிறகு மயக்கமானான். இன்னொருவன் ஓட முயன்றான். அவன் கால்களை பலமான ஒரு உலக்கை போன்ற கால் தட்டிவிட்டதால் அவன் பூமிதேவியை நெடுஞ்சாண் கட்டையாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்தான்.
விலைராணி பளிங்கு மேடைக்கு அப்புறமிருந்து எழுந்து விட்டு ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டாள். பிறகு தரையை நோக்கி, “அவனை ஊட்டியைப் பிடித்து கொன்றுவிட்டீர்கள் போலிருக்கிறதே.” என்று வீரகுப்தனிடம் வினவினாள்.
வீரகுப்தன் அதற்குப் பதில் சொல்லவில்லை. மெள்ள எழுந்து கீழே மேடைக்கு அடியே கிடந்தவன் கால்களைப் பிடித்து வெளியே இழுத்துப் போட்டான். சற்று எட்டக் கிடந்து எழுந்திருக்காமலே படுத்துக் கிடந்தவனை நோக்கினான். பிறகு விலைராணியை நோக்கி,
“இந்த இடத்தில் தலையீடு அதிகமாயிருக்கிறது.” என்று கூறிக்கொண்டு மீண்டும் அவளைத் தனது கைகளில் தூக்கிக்கொண்டு அப்ஸரசைத் தூக்கிச் செல்லும் அரக்கனைப்போல் நடந்து, கீழே கிடந்த யவனன் முதுகின் மீது ஏறித் தாண்டி அந்த சோலைக்கு வெளிப்புறம் சென்றான். செடிகள் விலகிய, இடத்தில் அவனை வரவேற்க யூடாமஸ் காத்திருந்தான். அவனுடன் பத்து யவன வீரர்களும் ஆயுதபாணிகளாய் நின்றிருந்தார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
54. சிறைப் பறவைகள்

ஆயுதந்தாங்கிய பத்து யவன வீரர்களுடன் தன்னை வரவேற்கக் காத்திருந்த யூடாமஸைக் கண்ட வீரகுப்தன் தனது கையில் தாங்கியிருந்த விலைராணியைக் கீழே இறக்காமலேயே பயங்கரமாகப் புன்முறுவல் செய்தான்.
“இங்கு எதற்காக வந்தாய் யூடாமஸ்?” என்று வினவவும் செய்தான் அந்தப் பயங்கரப் புன்முறுவலின் ஊடே.
யூடாமஸ் வீரகுப்தனையும் நோக்கி, அவன் கைகளிலிருந்த விலைராணியையும் கவனித்தான்.
“உங்களிருவருக்கும் பாதுகாப்பு அளிக்க.” என்று பதிலும் சொன்னான். லேசாக நகைக்கவும் செய்தான்.
வீரகுப்தன் விகார முகம் சற்றே சிவந்தது சினத்தால். அந்தச் சிவப்பின் விளைவாகவும் சினத்தின் காரணமாகவும் முன்னைவிட அவன் முக விகாரம் பன்மடங்கு அதிகமாயிற்று.
“இந்த இடத்தில் யாரால் எங்களுக்கு என்ன ஆபத்து நேரிட முடியும்?” என்று வினவிய வீரகுப்தன் யூடாமஸை உற்று நோக்கினான்.
“எந்த தலைவருக்கும் ஆபத்து நேரிடுவது இயற்கை. அதுவும் ராஜ்யத்தில் பெரும் பதவி வகிப்பவர்கள் எப்பொழுதும் ஆபத்திலேயே காலங்கழிக்கிறார்கள். தவிர, நியாஸாவின் நிலையும் தற்சமயம் சரியாயில்லை.” என்று விளக்கினான் யூடாமஸ்.
“என்ன நிலை அது?” என்று வினவினான் வீரகுப்தன்.
“சில நாட்களாக சிந்து நதியின் தெற்குப் பகுதியிலிருந்து கிரேக்கார்கள் பலர் நியாஸாவுக்குள் வந்த வண்ணமிருக்கிறார்கள், அவர்கள் இங்குள்ள யவனர் ஜனத்தொகையுடன் இணைந்துவிட்டார்கள். யார் நம்மவர் யார் பிறர் என்று நிர்ணயிப்பது கஷ்டமாயிருக்கிறது.” என்று விளக்கினான் யூடாமஸ்.
“கஷ்டந்தான்...” என்று இழுத்த வீரகுப்தன், “சற்று முன்பு என்னையும் விலைராணியையும் தீர்த்துவிட இரு யவனர்கள் முயன்றார்கள்.” என்று சொன்னான்.
யூடாமஸ் தனது முகத்தில் வியப்பைக் காட்டினான்.
“சற்று முன்பா?” என்ற அவன் கேள்வியிலும் வியப்பு தெரிந்தது.
“ஆம்...” வீரகுப்தன் பதில் சர்வ சாதாரணமாயிருந்தது.
“இந்த சோலைக்குள்ளா?”
“ஆம்...”
“எனக்குத் தெரியாமல் எப்படி வந்தார்கள்?”
“அவர்களைத்தான் கேட்க வேண்டும்...”
அடுத்து யூடாமஸ் துரிதமாக நடவடிக்கைகளைத் தொடங்கினான்.
“டேய்! சோலைக்குள் சென்று அங்கு யார் இருந்தாலும் பிடித்து வாருங்கள்.” என்று பக்கத்திலிருந்த யவனர்களுக்கு உத்தரவிட்டான்.
அவர்களில் இருவர் சோலைக்குள் சென்றதும் விலைராணியைக் கையிலிருந்து கீழே இறக்கிவிட்ட வீரகுப்தன், “ராணி! நீ மாளிகைக்கு போ. நான் இந்த நாடகத்தின் முடிவைக் கவனித்துவிட்டு வருகிறேன்.” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே சோலைக்குள்ளே பெரிதாக ஒருவன் அலறும் சத்தம் கேட்டது.
அடுத்த சில விநாடிகளில் வீரகுப்தனைத் தாக்க முயன்ற இரு யவனர்களை யூடாமஸின் வீரர்கள் கால்களைப் பிடித்து சரசரவென்று இழுத்து வந்து யூடாமஸின் முன்பு கிடத்தினார்கள்.
இரு யவனர்களும் மூச்சு பேச்சில்லாமல் கிடந்ததைக் கவனித்த வீரகுப்தன், “இவர்கள் முகத்தில் சிறிது நீர் எடுத்து வந்து அடியுங்கள்.” என்று யோசனை சொன்னான்.
“பயனில்லை எசமான். இறந்து போனவர்களை தண்ணீர் அடித்து எழுப்ப முடியாது.” என்றான் அவர்களை இழுத்து வந்தவர்களில் ஒருவன்.
“இறந்துவிட்டார்களா?” என்ற வீரகுப்தன் கேள்வியில் சந்தேகத்தின் ஒலி வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.
“ஆம்.” என்றான் இழுத்து வந்த வீரரில் ஒருவன்.
“ஒருவன் கழுத்து நெறிக்கப்பட்டிருக்கிறது. மூச்சுத் திணறி இறந்திருக்கிறான்.” என்றான் இன்னொருவன்.
“மற்றவன்?” வீரகுப்தன் கேள்வி மீண்டும் எழுந்தது சந்தேகத்துடன்.
“குப்புற விழுந்தபோது நெற்றியில் அடிபட்டு இறந்திருக்கிறான். நெற்றிக்கு மேலே மண்டை பிளந்திருக்கிறது.” என்றான் ஒரு வீரன்.
“அவனைப் புரட்டுங்கள்.” என்று வீரகுப்தன் உத்தரவிட அவன் சடலத்தை ஒரு வீரன் புரட்டினான். அந்த சடலத்தின் மண்டையிலிருந்த காயத்தை வீரகுப்தன் சில விநாடிகள் கூர்ந்து நோக்கினான்.
“யூடாமஸ்! இந்தக் காயம் இயற்கையாக நேரிட்டதா?” என்று வினவினான் வீரகுப்தன்.
“வேறு எப்படி ஏற்பட முடியும்? நாம் யாரும் இவனைக் கொல்லவில்லை.” என்று யூடாமஸ் வீரகுப்தனையும் சேர்த்துக் கொண்டு பேசினான். அதற்கு மேல் தாமதிக்காமல், “நமது படைத்தலைவரைக் கொல்ல முயன்றவர்களை நானே கொன்றிருப்பேன். அவர்களே இறந்துபோனதில் நமக்கு ஒரு பணி மிச்சமாயிற்று.” என்ற யூடாமஸ் தனது வீரர்களை நோக்கி, “படைத்தலைவரையும் எசமானியையும் மாளிகையில் விட்டு வாருங்கள்.” என்று உத்தரவிட்டான்.
“யாரும் தேவையில்லை.” என்று அதட்டலாகக் கூறிய வீரகுப்தன் அந்த இடத்தை விட்டு விலைராணியுடன் மாளிகையை நோக்கி நடந்தான் தீர்க்க சிந்தனையுடன். மாளிகையை அடைந்த பின்பும் அவன் ஏதும் பேசவில்லை. புத்தாடை புனைந்த பிறகு விலைராணியை அனுப்பி கிரேக்கச் சிலையைத் தனது அறைக்கு வரவழைத்து நந்தவன விவகாரங்களைச் சொன்னான்.
கிரேக்கச் சிலை அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டாள்.
“அந்த இருவரையும் கொன்றது யூடாமஸின் வீரர்கள்தான்.” என்றும் முடிவாகச் சொன்னாள்.
“அப்படித்தானிருக்க வேண்டும். ஒருவன் ஊட்டியை நான் லேசாகத்தான் பிடித்தேன். அவன் மயக்கம் அடைந்திருக்க வேண்டுமேயொழிய மாண்டிருக்க முடியாது. இன்னொருவன் காலைத் தட்டிவிட்டேன். அவன் தரையில் குப்புற விழுந்தான். ஆனால் விழுந்த இடத்தில் கல் எதுவும் இல்லை. அவனுக்கு சாதாரண காயம் ஏற்படக்கூட வழியில்லை.” என்றான் வீரகுப்தன்.
பிறகு கிரேக்கச் சிலையையும் ராணியையும் கட்டிலில் உட்காரச் சொல்லி அவர்கள் எதிரே கைகட்டி நின்றும், அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டும் பேசலானான்,
“ஊட்டியை நான் பிடித்த இடத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது, அவனை யூடாமஸின் வீரர்கள் வெளியே இழுத்து வந்தபோது. அப்படிக் குரல்வளையைப் பிடிக்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. கொல்வதானால் சிறு காயம் கூட இல்லாமல் குரல்வளையைக் கிடுக்கிக் கொல்லலாம். ஆனால் அவன் வெளியே இழுத்து வருமுன்பு கூர்மையான குறுவாளொன்று அவன் ஊட்டியில் லேசாகப் பாய்ச்சப் பட்டிருக்கிறது. இரண்டாமவன் மண்டை பிளந்திருக்கிறது.
அவன் தலையில் உள்ளே சென்ற வீரரில் ஒருவன் குறுவாளின் பிடியால் பலமாக அடித்திருக்கிறான். இவையனைத்தும் நிதர்சனமாகத் தெரிந்தது எனக்கு. ஒரு விஷயம் எனக்குப் புரிகிறது. அந்த இரு வீரர்கள் வாயைக் கட்ட யூடாமஸின் வீரர்கள் அவ்விருவரையும் கொன்றிருக்கிறார்கள். இல்லாவிட்டால் சோலைக்குள்ளிருந்து அந்த அலறல் வர நியாயமில்லை. அது கிடக்கட்டும், என்னைக் கொல்வதானால் உடன் வந்த பத்து வீரர்களைக் கொண்டு என்னைக் கொன்றிருக்கலாமே?”
இப்படி விஷயங்களை அலசிய வீரகுப்தன் பேச்சைச் சிறிது நிறுத்தியதும் கிரேக்கச் சிலை சொன்னாள், “இத்தகைய கொலைகள் ஏற்படுவது முதல் தடவைல்ல. அதே சோலையில் இம்மாதிரி கொலை இரண்டாம் முறையாக ஏற்படுகிறது. நான் ஆடையணியச் சென்றபோதுகூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது. என்னையும் ஒரு யவனன் கொல்ல வந்தான். தூரத்தில் வரும்போதே அவன் காலில் என் குறுவாளை எறிந்தேன். அவன் விழுந்தான் கீழே. நான் ஆடை புனைந்து வெளியே வந்தேன். அன்றும் யூடாமஸ் தற்செயலாக இரு வீரர்களுடன் அங்கு தோன்றினான். ஏதோ சத்தம் கேட்டு விரைந்து வந்தகாகச் சொன்னான்.
‘சோலைக்குள்ளே நமது அரசியைத் தாக்க முயன்ற கயவனைக் கொண்டு வாருங்கள்.’ என்று உத்தரவிட்டான். அவன் வீரர்கள் சோலைக்குள் சென்று அந்த யவனனை இழுத்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்து அவனைக் கிடத்தியபோது அவன் காலில் உள்ளது போலவே மார்பிலும் காயமிருந்தது. அது புதுக்காயம் என்பது நன்றாகப் புரிந்ததால், ‘இதற்கென்ன அர்த்தம் யூடாமஸ்?’ என்று வினவினேன்.
அரசியார் அந்தரங்கத்தில் தலையிடும் எல்லோருக்கும் இந்தத் தண்டனை உண்டு. சந்திரகுப்த மகாராஜாவின் உப்பைத் தின்னும் இந்த யூடாமஸ் இந்த மாதிரி அயோக்கியர்களிடம் தயை காட்டுவதில்லை. கொடுக்க வேண்டிய தண்டனையைக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி என்னைத் தலை தாழ்த்தி வணங்கவும் செய்தான். அவன் சொன்னது அத்தனையும் பொய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் அப்பொழுது செய்யக்கூடியது எதுவுமில்லை.” என்றாள் கிரேக்கச் சிலை.
“நியாஸாவின் நீதிஸ்தலம் என்ன ஆயிற்று?” கடுமையுடன் கேட்டான் வீரகுப்தன்.
“இருக்கிறது...” கிரேக்கச் சிலை வெறுப்புடன் பதில் சொன்னாள்.
“நீதி நிர்வாகத்துக்கு அது பெயர் போனதாயிற்றே?” என்றான் வீரகுப்தன்.
“ஆம்...” கிரேக்கச் சிலை ஒப்புக்கொண்டாள்.
“அங்கு இந்த நிகழ்ச்சிகளை விசாரணைக்குக் கொண்டு வந்தால் என்ன?”
“பயனில்லை...”
“ஏன்?”
“அதற்கு யூடாமஸ்தான் இப்பொழுது தலைவன் நீதிபதிக்கு எதிராக யாரும் வழக்குத் தொடர முடியாது...”
“யூடாமஸ் நீதிபதியானால் படைத்தலைவன் யார்?”
“யூடாமஸ்தான்...”
“படைத்தலைவன் நீதிபதியாக இருக்க முடியாதென்று நியாஸாவில் சம்பிரதாயம் இருக்கிறதே...”
“இருந்தது என்று சொல்லுங்கள்.” என்ற கிரேக்கச் சிலை, “மைத்துனரே! நியாஸாவில் நாம் மூவரும் சிறைப் பறவைகள். நம்மை இஷ்டபடி ஆட்ட யூடாமஸால் முடியும். நியாஸாவின் நிலை தற்சமயம் எரிமலை. என்று வெடிக்கும், எப்படி வெடிக்கும் என்று சொல்ல முடியாது.” என்று சொன்னாள்.
அவள் சொற்களில் மேலுக்கு அமைதியிருந்தது. ஆனால் அவற்றில் அக்னித் திரவாகம் பூசப்பட்டிருந்தது. அவள் முகத்தில் திடீரென ஒரு மாற்றம் தெறிந்தது.
“இன்னும் ஒரே வாரம். யூடாமஸை ஒழித்துவிடுகிறேன்.” என்று சீறினாள் கிரேக்கச் சிலை.
ஆனால் அது நடவாத காரியம் என்பதை வீரகுப்தன் உணர்ந்திருந்தான். யூடாமஸை அழிப்பது அத்தனை சுலபமல்ல என்பது வீரகுப்தனுக்குத் தெரிந்ததால் அவன் மூளையில் வேறொரு பயங்கரத் திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.
“கவலைப்படாதே ஆண்ட்ரி! சினத்தால் இவனை அழிக்க முடியாது. சிறைப் பறவைகளும் வல்லூறுகளாக மாற முடியுமென்பதையும், யூடாமஸ் பின்னும் வலையை அவை அறுக்க முடியும் என்பதையும் காட்டுவோம். நான் சொல்லும்வரை அவனிடம் எந்தவித விரோதத்தையும் காட்ட வேண்டாம். சர்வ சகஜமாக நீங்கள் இருவரும் நடந்துகொள்ளுங்கள்...” என்றான் வீரகுப்தன் நிதானமாக.
“சிறைப் பறவைகள்! சிறைப் பறவைகள்! நல்ல பெயர்தான்.” என்று தனக்குள் முணுமுணுக்கவும் செய்தான். பிறகு லேசாக நகைத்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
55. யூடாமஸின் குழப்பம்

“சிறைப்பறவைகள்.” என்ற சொல்லை வீரகுப்தன் இருமுறை உச்சரித்து லேசாக நகைத்ததையும், அடுத்து அவன் புருவங்கள் குறுகி உள்ளே துளிர்த்த சிந்தனையை அவன் முகம் எடுத்துக் காட்டியதையும் கண்ட கிரேக்கச் சிலை, “மைத்துனரே! என்ன சிந்திக்கிறீர்?” என்று வினவினாள்.
அவள் கேள்விக்கு வீரகுப்தன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அந்த அறையில் சிந்தனையுடன் உலாவினான். பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல் சட்டென்று அறை நடுவே நின்று கிரேக்கச்சிலையை நோக்கித் திரும்பி, “ஆண்ட்ரி! நியாஸாவில் இப்பொழுது மொத்தம் எவ்வளவு கிரேக்க வீரர்கள் இருப்பார்கள்?” என்று வினவினான்.
“ஆறாயிரம் காலாட்படை, ஆயிரம் புரவிப்படை, சுமார் முந்நூறு யானைப்படை இருக்கும்.” என்றாள் கிரேக்கச் சிலை.
“அதாவது இங்கு முன்னிருந்ததைப் போல் எல்லாமே இரண்டு மடங்கு.” என்று வீரகுப்தன் சுட்டிக் காட்டினான்.
“ஆம்.” என்றாள் ஆண்ட்ரி,.
“இந்தத் தொகை உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினவினான். வீரகுப்தன.
“கிரேக்கர்கள் எல்லோருமே நமக்குத் துரோகிகளல்ல. என்னைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இந்தப் படையில் கால்வாசி நான் சொன்னபடி கேட்கும். யூடாமஸைப் போல் நானும் யவனர் வகுப்பைச் சேர்ந்தவளல்லவா?” என்று விளக்கம் சொன்னாள் கிரேக்கச் சிலை. “இந்தக் கால்வாசிப் படையில் எனது ஒற்றர்களும் இருக்கிறார்கள்.” என்றும் தெரிவித்தாள்.
அவள் விளக்கம் வீரகுப்தனுக்கு அத்தனை திருப்தியாயில்லை என்பதை அவன் முகம் காட்டியது.
“தனது ஒற்றர்களை உனது ஒற்றர்களாக நடித்து விஷயமறிந்த யூடாமஸ் ஏன் ஏற்பாடு செகய்திருக்கக்கூடாது?” என்று கேட்டான் சந்தேகத்துடன்.
“ஏற்பாடு செய்யலாம். ஆனால் என் ஒற்றர்களில் சிலருடனேயே நான் உண்மை பேசுகிறேன். அவர்கள் என்னைக் குழந்தைப் பருவத்திலிருந்து அறிந்தவர்கள். என் மீது சிறு தூசி உட்கார்ந்தாலும் பொறுக்காதவர்கள். அவர்களை யூடாமஸ் விலைக்கு வாங்க முடியாது. மற்றவர்களுடன் உண்மை விவரங்களைச் சொல்வது கிடையாது. யூடாமஸுக்கு எந்த விவரங்கள் சென்றால் நமக்கு அனுகூலமோ அவற்றை மட்டும் சொல்கிறேன்.” என்றாள் ஆண்ட்ரி
வீரகுப்தன் புரிந்துகொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். பிறகு சொன்னான், “சரி ஆண்ட்ரி! நீ போய்ப் படுத்துக்கொள். காலையில் சந்திப்போம்.” என்று.
அவள் சென்றதும் விலைராணியை நோக்கிய வீரகுப்தன், “ராணி! நீயும் உறங்கு. நான் சிறிது நேரம் வெளியே போய் வருகிறேன்.” என்று கூறிவிட்டுத் தனது குறுவாளொன்றை எடுத்து இடைக்கச்சையில் சொருகிக் கொண்டான்.
“இத்தனை நாழிகைக்கு மேல் எங்கே போகிறீர்கள்?” என்று கவலையுடன் விசாரித்தாள் விலைராணி.
“வந்து சொல்கிறேன்.” என்று கூறிவிட்டு அவள் நெற்றியில் தனது இதழ்களை லேசாகப் பொருத்தி எடுத்துவிட்டு, அறைக்கதவைத் திறந்துகொண்டு வெளியே சென்றுவிட்டான்.
வீரகுப்தன் வீரமும் எந்த நிலையையும் சமாளிக்கும் திறனும் விலைராணி உணர்ந்தே இருந்தாலும் நியாஸா இருக்கும் நிலையில் அவன் வெளியே சென்று திரும்புவது அத்தனை சுலபமல்லவென்பதை உணர்ந்திருந்ததால் சிறிது கோகப் பெருமூச்சு விட்டாள். இருப்பினும் அவனைத் தடை செய்வதும் நடவாத காரியமாகையால் சோக பிம்பமாய் கட்டிலில் சிலையென உட்கார்ந்துவிட்டாள்.
அப்பொழுது சென்ற வீரகுப்தன் விடியும் நேரத்தில் தான் வந்தான். அவன் முகத்தில் மிதமிஞ்சிய சந்துஷ்டியிருந்ததைக் கண்ட விலைராணி அவன் படுக்க தனது பக்கத்தில் சிறிது இடம் விட்டாள்.
அந்த இடத்தில் மிக சொகுசாகப் படுத்துக்கொண்ட வீரகுப்தன், “ராணி யார் வந்தாலும் என்னை எழுப்பாதே. மிகுந்த அலுப்புடன் நித்திரை செய்வதாகச் சொல்லிவிடு. நீயும் உன் தலைக்குழலையும் ஆடையையும் சிறிது கலைத்துப் படுத்துக்கொள். யார் கதவைத் தட்டினாலும் அலங்கோல நிலையிலேயே சென்று கதவைத் திற.” என்று யோசனை சொல்லிவிட்டுக் கண்களை மூடினான். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டான்.
அவன் சொற்களின் காரணம் விலைராணிக்குப் புரிந்தே இருந்ததால் அவள் வெட்க நகை கொண்டாள். அவன் சொற்படி தலைக்குழலையும், ஆடையையும் சிறிது கலைத்துக்கொண்டாள்.
“இப்பொழுது என்னைப் பார்ப்பவர்களுக்கு ஒரே ஒரு எண்ணந்தான் ஏற்படும். இல்லாத ஒரு நிலைகிட்டாத ஒரு சுகம் கிட்டியது போன்ற பிரமை, இதை சிருஷ்டிக்கிறார் என் கணவர்.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு லேசாக நகைத்தாள்.
கதவைத் தாளிட்டுவிட்டு வந்து வீரகுப்தன் பக்கத்தில் உட்கார்ந்தகொண்டு அவனை நோக்கினாள். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு திருப்தியும், அமைதியும் கலந்து நிரவிக் கிடந்தன.
“எதை இவர் சாதித்துவிட்டு வந்திருக்கிறார்?” என்று தனக்குள் வினவிக்கொண்டாள். விடை காணாததால் அவன் மார்புமீது தலையை வைத்துப் படுத்தாள். அவன் இதய ஓசை நிதானமாகவும் ஒரே சீராகவும் திடமாகவும் அவள் காதில் ஒலித்தது. அது போட்ட மென்மையான தாளத்தில் அவளும் உறங்கினாள்.
எத்தனை நேரம் அவள் அப்படி உறங்கியிருப்பாளோ தெரியாது. அறைக்கதவு ஒருமுறைக்கு இருமுறை இடிக்கப்பட்ட பிறகே அவள் விழித்துப் பார்த்தாள். பொழுது விடிந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதென்பதை அறைச்சாளரத்துக்குள் பாய்ந்த சூரிய கிரணங்கள் நிரூபித்தன.
மெள்ள எழுந்து தளர் நடை நடந்து கதவைத் திறந்தாள். கதவுக்கு அப்புறம் நின்றிருந்த ஒரு யவன வீரன் அவளை உற்றுப் பார்த்துவிட்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான்.
“அம்மணி! யூடாமஸ் வீரகுப்தனைச் சந்திக்க விரும்புகிறார். சந்தர்ப்பம் அறிந்து வரச் சொன்னார்.” என்று பார்வையை நிலத்தில் ஓட்டியபடியே பேசினான்.
“அவர் இன்னும் எழுந்திருக்கவில்லை.” என்றாள் விலைராணி யவனன் உள்ளத்தில் என்ன நிளைப்பு ஒடுகிறதென்பதை உணர்ந்ததால்.
“ஆம் ஆம்.களைப்பு அதிகமிருக்கும்.” என்றான் அந்த வீரன்.
“இரவு நீண்ட நேரம் கழித்தே உறங்கினார்.” என்றாள் ராணி.
“நியாயம், நியாயம்...” என்ற யவன வீரன், “அம்மணீ! எதற்கும் அவரை எழுப்புங்கள். யூடாமஸ் இன்னும் இரண்டு நாழிகைக்குள் மந்திராலோசனை சபையைக் கூட்டியிருக்கிறார்.” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெகு வேகமாக நடந்துவிட்டான்.
அவன் நடந்த வேகத்தைக் கண்டு புன்முறுவல் செய்த விலைராணி கட்டிலுக்கருகில் சென்று வீரகுப்தனை அசைத்து எழுப்பினாள். அவன் எழுந்திருக்காமல் திரும்பிப் படுக்க முயன்றாலும் அவள் விடவில்லை.
“யூடாமஸ் செய்தியனுப்பியிருக்கிறான் எழுந்திருங்கள்.” என்று கூறிக்கொண்டே அவனை அசக்கினாள்.
அவன் இஷ்ட விரோதமாகக் கண்களை விழித்தான். பிறகு எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தான்.
“ஏன் எழுப்புகிறாய்? இரவு முழுதும் உறக்கமில்லை எனக்கு.” என்று குற்றமும் சாட்டினான்.
“அதற்கு நான் எப்படிப் பொறுப்பாளி? சினத்துடன் கேட்டாள் விலைராணி. அவளை உற்றுநோக்கிய வீரகுப்தன் நகைத்தான்.
“வேறு யார் பொறுப்பாளி?” என்றும் கேட்டான். கலைந்திருந்த அவள் குழலை மேலும் கலைத்துவிட்டான். ஆடையையும் கலைக்க முற்பட்டான்.
“நேற்று போட்ட வேஷம் போதும். மேலும் உங்கள் கைத்திறனைக் காட்ட வேண்டாம். என்னைப் பார்த்ததும் கண்களை நிலத்தில் தாழ்த்திய யவன வீரன் திரும்ப என்னைப் பார்க்கவேயில்லை.” அவள் குரலில் வெட்கமும் இருந்தது, ஆத்திரமும் இருந்தது.
“நல்லதுதானே!” வீரகுப்தன் நகைத்தான்.
“எது நல்லது?”
“இந்தக் கோலத்தில் அவன் உன்னைப் பார்க்க மறுத்தது...”
“என்ன விளையாடுகிறீர்களா?”
“இதில் விளையாட்டுக்கு என்ன இருக்கிறது?”
“எதற்காக என்னை இப்படி அலங்கோல வேஷம் போட வைத்தீர்கள்?”
“நான் இங்கேயே இருந்தேன் என்பதை யூடாமஸ் நம்புவதற்காக...”
“அவன் எதற்காக நம்ப வேண்டும்?”
“இன்னும் சிறிது நேரத்தில் புரிந்துகொள்வாய்...” என்று கூறிய வீரகுப்தன் நீராட்ட அறையை நோக்கிச் சென்று நீராடித் திரும்பினான். ராணியையும் நீராடிப் புத்துடை புனைய உத்தரவிட்டான்.
அவள் வந்ததும் கிரேக்கச் சிலையும் நீராடிப் புத்துடை புனைந்து வந்தாள். மூவரும் ஆடை புனைந்து முடித்த சமயத்தில் யூடாமஸ் தனது அறையில் யவன வீரனை சரமாரியாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.
“உண்மையாகவா, விலைராணி அத்தனைக் கேவலமாகவா இருந்தாள்?” என்று வினவினான்.
“ஆம்.” வீரன் வெறுப்புடன் பதில் சொன்னான்.
“வீரகுப்தன்?” என்று வினவினான் யூடாமஸ்.
“கட்டிலில் படுத்து அலுத்து உறங்கிக் கொண்டிருந்தார்...”
“அலுத்து என்று உனக்கு எப்படித் தெரியும்?”
“தூரப் பார்வைக்குப் பிணம் போல் கிடந்தார்...”
யூடாமஸ் முகத்தில் குழப்பம் அதிகமாயிருந்தது.
“அப்படியானால் எனது உபதலைவனையும் மூன்று வீரர்களையும் கொன்றது யார்?” என்று மிக உஷ்ணமாக வினவினான்.
“எனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் வீரன் பணிவுடன். அந்தப் பணிவில் ஏளனமும் கலந்திருந்ததை அறிந்த யூடாமஸ், “சரி நீ போ.” என்று உத்தரவு கொடுத்தவன் எதையோ நினைத்துக்கொண்டு, “இரு இரு.” என்று போகத் துவங்கிய வீரனை நிறுத்தினான்.
யவன வீரன் திரும்பி, “என்ன சத்ராப்?” என்று வினவினான்.
“இனிமேல் என்னை சத்ராப் என்று அழைக்காதே.” என்று எச்சரித்துவிட்டு, “மந்திராலோசனை விஷயத்தைத் தெரிவித்தாயா?” என்று வினவினான்.
“ராணி அவர்களிடம் சொன்னேன்.” என்றான் வீரன்.
அத்துடன் அவனுக்குப் போக விடையளித்த யூடாமஸ் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தான்.
“எப்படியும் மந்திராலோசனையில் உண்மை தெரியும்.” என்ற தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.
மந்திராலோசனைக்கு வீரகுப்தன், ராணி, ஆண்ட்ரி மூவரையும் அழைத்தவர ஒரு வீரனை அனுப்பிய யூடாமஸ் மந்திராலோசனை அறையை நோக்கி நடந்தான். மூடப்பட்டிருந்த மந்திராலோசனை அறையைக் காவல் புரிந்த இரு வீரர்களும் யூடாமஸுக்குத் தலை தாழ்த்தி வணங்கிக் கதவுகளைத் திறந்து வழிவிட யூடாமஸ் அறைக்குள் புகுந்தான்.
புகுந்தவன் மலைத்து நின்றான். தனக்கு முன்பாகவே அங்கு வீரகுப்தன், கிரேக்கச்சிலை, ராணி மூவருடன்ட நியாஸாவின் நீதிபதியும் இரண்டு உபதளபதிகளும் அமர்ந்திருந்ததையும் கவனித்துவிட்டு, “மன்னிக்கவும். நான் வரத் தாமதமாகிவிட்டது.” என்று கூறிவிட்டு,
“தாங்கள் அதிகமாகக் களைத்துப் படுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆகையால் தங்களை அழைத்துவர இப்பொழுதுதான் ஒரு வீரனை அனுப்பினேன்.” என்றும் சொன்னான் யூடாமஸ்.
அப்பொழுது ஒரு வார்த்தையை உச்சரித்தான் வீரகுப்தன். அதைக் கேட்ட யூடாமஸ் கைகால் ஆடாமல் அசைவற்று நின்றான்.
“என்ன சொன்னீர்கள்?” என்று சிறிது அச்சத்துடன் கேட்கவும் செய்தான்.
அதே சொல்லை வீரகுப்தன் இரண்டாம் முறை திருப்பினான். யூடாமஸ் கொஞ்ச நஞ்சமிருந்த தைரியத்தையும் இழந்தான். அச்சம் அவன் முகத்தில் பரந்தது.
“என்ன உளறுகிறாய் வீரகுப்தா?” என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து சினத்துடன் உதிர்ந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
56. யவன தூதன்

“சத்ராப்.” என்ற சொல்லை மிக நிதானத்துடனும் மரியாதையுடனும் வீரகுப்தன் இருமுறை உதிரவிட்டதும் சினமும் குழப்பமும் ஒருங்கே அடைந்த யூடாமஸ், “என்ன சொன்னாய் வீரகுப்தா?” என்று சீறினானென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது.
அந்தப் பட்டம் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஸெலூகஸ் நிகேதாரிடமிருந்து வந்ததாகையால் அதை முக்கியமாக இரண்டொருவருக்கே தெரிய வைத்திருந்தான் யூடாமஸ். அதை நியாஸாவில் பரப்பக்கூடாதென திட்டமான உத்தரவும் இட்டிருந்தானாகையால் அதை எப்படி வீரகுப்தன் தெரிந்துகொண்டான் என்பது பரம விசித்திரமாயிருந்தது யூடாமஸுக்கு.
தான் பாரத நாட்டிலுள்ள கிரேக்கர்களுக்கு சத்ராப் ஆகாமலிருந்தாலும், அதையும் அடையும் எண்ணத்தை உடையவனாயிருந்த யூடாமஸ், வீரகுப்தனுக்குத் தனது நோக்கம் தெரிந்தால் அவன் அதை சந்திரகுப்தனிடம் சொல்லி விடுவானென்றும் பிறகு பாரதத்தில் தனது உயிர் அரைக்காசு பெறாதென்பதையும் உணர்ந்திருந்ததால், “வீரகுப்தா! நான் எந்த நாட்டுக்கும் சத்ரபதியல்ல. ஆகவே இந்தப் புதுப்பட்டம் எனக்குத் தேவையில்லை.” என்று சொன்னான் குழப்பம் நிறைந்த குரலில்.
வீரகுப்தன் கழுகுக் கண்கள் யூடாமஸின் கண்களைக் கொத்திவிடுவனபோல் பார்த்தன.
“யூடாமஸ்! உனக்குத் தேவையில்லாதிருக்கலாம். ஆனால் மக்களுக்கு நீ சத்ரபதியாகும் விருப்பம் இருந்தால் அதை யார் தடுக்க முடியும்?” என்று வினவினான் வீரகுப்தன்.
“மக்கள் விரும்புவதாக யார் சொன்னது?” யூடாமசின் கேள்வியில் உஷ்ணம் இருந்தது.
“யாரும் சொல்லவில்லை. நேற்று நான் இந்த நகரத்துக்குள் வரும்போதே யூடாமஸின் மாளிகை எங்கே என்று கேட்டேன். பெயரைச் சொல்லாதீர்கள். சத்ராப்பின் மாளிகை என்று சொல்லுங்கள் என்று ஒருவன் சொன்னான்.” என்று விளக்கினான் வீரகுப்தன்.
அது பச்சைப் பொய்யென்று யூடாமஸாக்குத் தெரிந்தாலும் அதைப்பற்றி அவன் எதுவும் சொல்லாமல், “சொன்னவன் நாக்கை நீங்கள் வெட்டியிருக்க வேண்டும்...” என்றான் கோபத்துடன்.
வீரகுப்தன் இதழ்களில் இளநகை விரிந்தது.
“இனிமேல் அவன் நாவைத் துண்டிக்க முடியாது.” என்றான் சொற்களில் இகழ்ச்சி துலங்க.
“ஏன்?” யூடாமஸின் முகத்தில் குழப்பத்தின் சாயை மீண்டும் விரிந்தது.
“அவனை நேற்றிரவு யாரோ கொன்றுவிட்டதாகக் கேள்வி. பிணத்தின் நாவைத் துண்டிப்பதால் என்ன பயன்?” என்று வீரகுப்தன் வினவினான்.
அவன் தன்னைப் பார்த்து நகைக்கிறானென்பதைப் புரிந்துகொண்ட யூடாமஸ், “அவன் கொல்லப்பட்டானென்று எப்படித் தெரியும் உனக்கு?” என்று விசாரித்தான்.
“இன்று காலை இந்த மாளிகை வீரர்களில் இருவர் பேசிக் கொண்டார்கள்...”
“என்னவென்று?”
“நேற்றிரவு உன் உபதலைவனையும் மூன்று வீரர்களையும் யாரோ கொன்றுவிட்டதாகவும், அவர்களை நீங்கள்தான் அழித்திருக்க வேண்டுமென்றும் பேசிக்கொண்டார்கள்.”
“அவர்களில் ஒருவன்தான் என்னை சத்ராப் என்று அழைத்திருக்க வேண்டுமென்று எப்படித் தெரியும்?”
“அது என் ஊகம்...”
யூடாமஸ் வெறுப்புடன் நோக்கினான் வீரகுப்தனை.
“ஊகம் உங்களுக்கு அதிகமாயிருக்கிறது.” என்றும் சொன்னான்.
“வீணாகப் பாராட்டுகிறாய் என்னை யூடாமஸ்! நமக்குள் பரஸ்பர புகழ்ச்சி அர்த்தமற்றது. தவிர உன்னைப் போன்ற ஒரு வீரனை நியாஸாவின் சத்ராப்பாக சந்திரகுப்தன் நியமித்ததிலும் தவறில்லை.” என்றம் கூறினான் வீரகுப்தன்.
“என்னையா! மகாராஜாவா! சத்ராப்பாக நியமித்திருக்கிறாரா?” என்று பிரமிப்புடன் கேட்டான் யூடாமஸ்.
“ஆம்.” வீரகுப்தன் பதில் திடமாயிருந்தது.
“உங்கள் தலைமையில் இங்கிருந்து கிரேக்கப் படையொன்றை அழைத்துச் சென்று பெரிய பெளரவனை மகாராஜாவுக்குத் துணையாக அழைக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.” என்ற வீரகுப்தன், “யூடாமஸ்! ஏன் நிற்கிறாய்? உட்கார்ந்துகொள். மந்திராலோசனை துவங்கட்டும்.” என்றும் கூறவே அங்கிருந்த பெரிய ஆசனத்தில் யூடாமஸ் அமர்ந்தான்.
மேற்கொண்டு தாமதிக்காமல் மந்திராலோசனையைத் துவங்கிய யூடாமஸ், “மகாராணி! விலைராணி! உப தளபதிகளே! உங்களை இன்று நான் இங்கு வரவழைத்ததற்கு முக்கியக் காரணம் இருக்கிறது...” என்று சிறிது பேச்சை நிறுத்தினான்.
அதற்கு யாரும் எந்தப் பதிலும் சொல்லாமல் போகவே யூடாமஸே தொடர்ந்து பேசினான், “இன்று நியாஸா பழைய நிலையில் இல்லை. கிரேக்கப் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து வந்த வண்ணமிருக்கிறார்கள். இந்த நியாஸா கிரேக்கர் குடியிருப்பாகையால், நான் அவர்களைத் தடை செய்யவும் முடியாது. நியாஸாவின் கிரேக்கர் தொகையில் மூன்றிலொரு பாகம் வெளிநாட்டு யவனர். அவர்களில் பலர் போர் வீரர்கள்.
ஒவ்வொருவரிடமும் யவனர்களின் அகலமான பட்டாக்கத்தி இருக்கிறது. அவர்களை இங்கு விட்டுப் போனால் நியாஸா அவர்கள் வசமாகும். வீரகுப்தர் இஷ்டப்படி அவர்களை அழைத்துச் சென்றால் படையில் பிளவு ஏற்படும். அத்தகைய ஒரு படையுடன் நாம் பெரிய பெளரவன் நாட்டுக்குச் சென்று பெரிய பெளரவன் இணங்காவிட்டால் ஏற்படும் அபாயத்தை நான் விளக்கத் தேவையில்லை.” என்று.
இதை நிதானமாகக் கேட்ட மற்றவர்களில் ஆண்ட்ரியே பதில் சொன்னாள்.
“சத்ராப்! நீங்கள் சொல்வதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் நாம் மகாராஜாவின் ஆணையை மீற முடியாது. மீறினால் அவராலும் சாணக்கியராலும் அழிக்கப்படுவோம்.” என்று சுட்டிக் காட்டினாள்.
“அவர்கள் ஆணையை நிறைவேற்ற முயன்று பெரிய பெளரவன் நாட்டுக்குச் சென்றாலும் நமக்கு அழிவுதானே?” என்று கேட்டான் யூடாமஸ்.
இங்கு இடைபுகுந்த வீரகுப்தன், “நிச்சயமாகச் சொல்ல முடியாது.” என்றான்.
“எதை நிச்சயமாகச் சொல்ல முடியாது?” என்று கேட்டான் யூடாமஸ்.
“நம்முடன் சேர பெரிய பெளரவன் மறுப்பானென்று...”
“ஏன் மறுக்கக்கூடாது?”
“பெரிய பெளரவன் நாட்டுப் பற்றுடையவன். பாரதம் விடுதலையடைந்து பெரிய வல்லரசாவதை கண்டிப்பாக விரும்புவான்...”
இதைக் கேட்ட யூடாமஸ், “வீரகுப்தா! பெரிய பெளரவன் அலெக்ஸாண்டரால் மன்னிக்கப்பட்டவன். அரசைத் திரும்பிப் பெற்றவன். அவரால் பாரதத்தின் ஸிந்து நதி தென்பகுதிக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டவன். அப்பேர்ப்பட்டவன் பாரதத்தின் முடிவை வேறொருவன் ஏற்க இடந்தர மாட்டான்...” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தான்.
இங்கு சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த வீரகுப்தன், “யூடாமஸ் சொல்வதில் பொருளிருக்கிறது.” என்றான்.
“அப்படியானால் மகாராஜா சந்திரகுப்தரின் ஆணை என்ன ஆவது?” என்று சினத்துடன் கேட்டாள் ஆண்ட்ரி.
“ஆணை நிறைவேற்றப்படும். முடிந்தால் சமாதானத்தால், முடியாவிட்டால் பலவந்தத்தால் நிறைவேற்றப்படும்.” என்று திட்டமாகச் சொன்ன வீரகுப்தனை வியப்பு ததும்பிய விழிகளால் நோக்கிய யூடாமஸ், “வீரகுப்தா! பெரிய பெளரவன் படை பலம் தெரியுமா உனக்கு?” என்று வினவினான்.
“எண்ணிக்கை அர்த்தமற்றது என்பதை அலெக்ஸாண்டர் நிரூபித்துச் சென்றதும் பெரிய பெளரவனுக்குத் தெரியும். நம்மிடம் அவன் கைவரிசையைக் காட்டினாலும் அதே கதிதான் அவனுக்கு.” என்ற வீரகுப்தன் அத்துடன் மந்திராலோசனைக்கு முடிவு கட்டி, “யூடாமஸ்! எவ்வளவு சீக்கிரம் படைகளைச் சித்தம் செய்ய முடியுமோ அத்தனை சீக்கிரம் சித்தம் செய். இன்னும் இரண்டு நாட்களில் நாமிருவரும் பெரிய பெளரவன் நாட்டுக்குப் புறப்படுகிறோம்...” என்றான்.
“இந்த நியாஸா...?” குழப்பத்துடன் வினவினான்.
“ஆண்ட்ரி நிர்வகிப்பாள். அவளுக்குத் துணையாக விலைராணியும் இருப்பாள்.” என்றான் வீரகுப்தன்.
“இருவரும் பெண்கள்.” என்று சுட்டிக் காட்டினான் யூடாமஸ்.
“ஆண்களைவிட நம்பிக்கையானவர்கள். மகாராஜாவிடம் உண்மையான நம்பிக்கை உள்ளவர்கள்.” என்று தீர்மானமாகச் சொன்ன வீரகுப்தன் ஆசனத்தை விட்டு எழுந்தான். இரு பெண்களும் எழுந்தார்கள்.
“எத்தனை துரிதமாகக் கிளம்பினாலும் நான் சித்தமாயிருப்பேன் சத்ராப்.” என்று கூறிவிட்டு இரு பெண்களுடனும் அந்த அறையை விட்டு வெளியே சென்றான் வீரகுப்தன்.
அன்று முழுவதும் யூடாமஸ் ஒரு நிலையில் இல்லை. படை திரட்ட உடனடியாக உத்தரவிட்டான். ஆனால் அவனுக்குப் பயணத்தில் இஷ்டமில்லை. அன்று நடுநிசியில் தன் அறையில் உலவிக் கொண்டிருந்தவன் சட்டென்று மாறுடை புனைந்து முகத்தை ஒரு பெரிய கவசத்தால் மறைத்துக்கொண்டு அந்த மாளிகையின் பின்புறத் திட்டி வாசல் வழியாக நந்தவனத்துக்குச் சென்று அதன் ஒரு கோடியிலிருந்த ஒரு சிறிய தோப்புக்குள் நுழைந்தான். அங்கிருந்த ஒரு சிறு வீட்டின் கதவைத் தட்ட அது திறக்கப்பட்டதும் உள்ளே சென்றான். அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஒரு யவனனை எழுப்பி, “விஷயம் தலைக்கு மேல் போய்விட்டது.” என்றான்.
“என்ன அப்படி நேர்ந்தது?” என்று கேட்டான் யவனன்.
மந்திராலோசனை விவரங்களைச் சொன்னான் யூடாமஸ்.
“இவனை இன்னும் இரண்டு நாட்களுக்குள் கொல்லாவிட்டால் நாம் நியாஸாவை மறந்துவிடுவது நல்லது.” என்றும் கூறினான் கவலையுடன்.
யவனன் சிறிது சிந்தித்தான்.
“கவலைப்படாதீர்கள் சத்ராப்! இவனை நான் கவனித்துக் கொள்கிறேன்.” என்ற யவனன், “அவன் தங்கும் அறை எது?” என்று வினவினான்.
யூடாமஸ் அதை விளக்கவே, “நீங்கள் செல்லலாம்.” என்று அதிகாரத்துடன் கூறினான் யவனன்.
அவனுக்குத் தலைதாழ்த்தித் திரும்பினான் யூடாமஸ். திரும்பும்போது, “தூதரே! உமக்கு விநாச காலம் பிடித்து விட்டது.” என்று உள்ளூர சொல்லிக்கொண்டான். ஆனால் ஸெலூகஸின் தூதன் முகத்தில் கொடுமையான சிரிப்பு ஒன்று தவழ்ந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
57. வெண்புறா

எத்தனையோ கொலைகளை இரக்கமின்றி அனாயாசமாகப் புரிந்திருக்கும் யவன தூதனுக்கு வீரகுப்தனைக் கொல்லுவது ஒரு பெரிய காரியமாகத் தெரியவில்லை. இந்த ஒரு மனிதனை ஒழித்துக்கட்ட முடியாத யூடாமஸ், அலெக்ஸாண்டரின் அடுத்த வாரிசான ஸெலூகஸ் பாரதத்தை வெற்றி கொள்ள எந்த வகையில் உதவமுடியும் என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.
ஆனால் வீரகுப்தனைப் பற்றி தான் வந்தது முதல் யூடாமஸ் அஞ்சி நடுங்கிப் பேசிக் கொண்டிருந்ததை நினைத்து ஒருவேளை இந்த வீரகுப்தன் பெரிய வீரனாயிருப்பானோ என்று சந்தேகமும் கொண்டானானாலும், “எப்பேர்ப்பட்ட வீரனாயிருந்தாலும் அவன் உடல் மனித உடல்தானே? கத்தியை அசப்பில் சொருகிவிட்டால் அவன் உடலில் மட்டும் கத்தி புதையாதா என்ன?” என்று தனக்குத்தானே வினா எழுப்பிக்கொண்டு சிறிது நகைக்கவும் செய்தான்.
மறுநாள் எப்படியும் வீரகுப்தனை வேலை தீர்த்துவிட ஒரு திட்டமும் தயாரித்தான். அதனால் குதூகலப்பட்டவனாய் அன்றிரவே கிளம்பி நகருக்குள் சுற்றி வீரகுப்தனைப் பற்றி ஆங்காங்கு சாதாரணமாக விசாரிக்கலானான். எங்கும் வீரகுப்தனைப் பற்றி மட்டுமின்றி அவன் காதலி விலைராணியைப் பற்றியும் பாராட்டுகள் அதிகமாயிருந்ததை உணர்ந்த யவன தூதன் பெரும் தந்திரமுள்ள ஒரு திட்டத்தைத் தயாரித்தான். அந்தத் திட்டத்தைச் செயலாக்க யூடாமஸின் உதவியை நாடினான்.
பட்டப்பகலில் எங்கோ திரிந்துவிட்டுத் தனது அறைக்குள் புகுந்த யவன தூதனைக் கண்டதும் விவரிக்க இயலாத அச்சத்துக்கும் கோபத்துக்கும் இலக்கான யூடாமஸ், “தூதரே! உமக்கு அறிவு ஏதாவது இருக்கிறதா?” என்று விசாரித்தான். அவசரமாகத் தனது அறைக்கதவைத் தாளிடவும் செய்தான்.
யூடாமஸின் சினத்தை யவன தூதன் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அங்கிருந்த பெரிய மஞ்சத்தில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, “சத்ராப்! நல்ல மது இருந்தால் சிறிது கொண்டு வாருங்கள்...” என்று கேட்டான்.
அந்தச் சமயத்தில் கோபத்தால் பயனில்லை என்பதை உணர்ந்துகொண்ட யூடாமஸ் யவன தூதன் கேட்டபடி மதுக் குப்பியொன்றைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினான். யவன தூதன் மதுக்குப்பியை வாயில் வைத்துப் பெரும் சத்தத்துடன் ஒருமுறை மதுவை உறிஞ்சிவிட்டு குப்பியைக் கீழே வைத்து யூடாமஸை நோக்கி, “சத்ராப்!” என்று இன்னொரு முறை அழைத்தான்.
யூடாமஸின் எரிச்சல் எல்லையைத் தொட்டுக் கொண்டிருந்ததால், “சத்ராப்... என்ன மண்ணாங்கட்டி சத்ராப் வேண்டியிருக்கிறது?” என்று எரிந்து விழுந்தான்.
பதிலுக்குப் பெரிய சிரிப்பு ஒன்றை உதிரவிட்ட யவன தூதன், ஸெலூகஸ் மண்ணாங்கட்டியை சத்திரபதியாக்கினாலும் அது சத்திரபதிதான்.” என்று கூறித் தனது நகைச்சுவையை நினைத்து மீண்டும் பெரிதாக நகைத்தான்.
யூடாமஸ் நகைச்சுவையை அனுபவிக்கும் நிலையில் இல்லாததால் அவன் புருவங்கள் சுருங்கின சிறிது. முகத்தில் என்றுமில்லாத வேதனை பரவியது. தூதனை ரகசியமாக வைத்திருக்க நந்தவன மூலைத் தோப்பு விடுதியில் தங்க வைத்திருக்க, அவன் பட்டப் பகலில் ஊரைச் சுற்றி வந்து தன்னைப் பிரகடனப்படுத்தியது எத்தனை அபாயம், என்று எண்ணியிருந்ததால், “இந்த மாதிரி முட்டாளை ஸெலூகஸ் எங்கிருந்து கண்டுபிடித்தார்?” என்று உள்ளூர வினவிக் கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல், “உங்களைக் காரணமாகத்தான் ரகசியமாக நந்தவன விடுதியில் வைத்திருந்தேன். நீர் வந்திருக்கும் விஷயம் வீரகுப்தனுக்குத் தெரிந்தால் நீர் அடுத்த கணம் பிணமாகிவிடுவீர்...” என்று கூறினான் யூடாமஸ்.
“அவ்வளவு பெரிய வீரனா அவன்?” தூதன் வினவினான்.
“பாரதத்தின் மிகச்சிறந்த வீரரில் ஒருவன்.” என்று யூடாமஸ் சொன்னான்.
“அதனால்தான் அவனைக் கொல்ல என்னை நியமித்தீரா?”
“ஆம். நான் கொல்வதற்கில்லை...”
“ஏன்?”
“அரசியல் காரணங்கள் இருக்கின்றன...”
“கொலைக்கும் அரசியல் இருக்கிறதா?”
“வரலாற்றைப் பாருங்கள். அரசியலில்தான் கொலைகள் அதிகம்...”
தூதன் மீண்டும் மெல்ல நகைத்தான்.
“நல்லது சத்ராப்! வீரகுப்தனைக் கொன்று நீர் வரலாற்று நாயகனாகப் பார்க்கிறீர்?” என்றும் கேட்டான் நகைப்பின் ஊடே.
“கொலை செய்யச் சொன்னது எனக்காக அல்ல, ஸெலூகஸுக்காக. வீரகுப்தன் இருக்கும்வரை ஸெலூகஸ் இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்க முடியாது. படைகளை நடத்துவதில் இணையற்றவன்.” என்று விளக்கிய யூடாமஸ், “என்ன வேண்டும் உங்களுக்கு? எதற்காக இங்கு வந்தீர்?” என்று சீற்றத்துடன் வினவினான்.
தூதன் சிறிது சிந்தித்தான். பிறகு கேட்டான்.
“விலைராணி என்ற ஒருத்தியைப்பற்றி நேற்றிரவு சொன்னீர்களே.” என்று.
“ஆம். அவளுக்கென்ன?” என்று யூடாமஸ் கேட்டான் குழப்பத்துடன்.
“அவளை நந்தவனத்துக்கு அனுப்புங்கள்...”
“எதற்கு?”
“பெண் புறாவைத் தேடி ஆண் புறா வரும். அப்பொழுது...”
யூடாமஸ் தூதன் கருத்தைப் புரிந்துகொண்டதால் தன்னையும் மீறி நகைத்தான்.
“நான் கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்தால் அது உருகி கண்ணில் விழுந்து கொக்கு கண்ணை மூடிக்கொள்ளும். அப்பொழுது நீர் பிடித்துவிடுவீர்?” என்று வினவினான் நகைப்பின் ஊடே.
“இதில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது?”
“விலைராணி நான் சொன்னபடி கேட்கும் பொம்மையா?”
“இல்லையென்பது எனக்குத் தெரியும். ஏதாவது பொய் சொல்லி அவளை நந்தவனத்துக்கு அனுப்புங்கள். மற்றவற்றை நான் கவனித்துக் கொள்கிறேன்.” என்று கூறிவிட்டுத் தூதன் கிளம்பினான் வெளியே செல்ல.
“இருங்கள்.” என்று அவனை நிறுத்திய யூடாமஸ் தான் மட்டும் வெளியே சென்று அங்கிருந்த காவலனை அனுப்பி விட்டுத் தூதனை வெளியே செல்ல அனுமதித்தான்.
“இன்று மாலை அல்லது இரவின் ஆரம்பத்தில் பெண் புறாவை எதிர்பார்க்கிறேன்.” என்று கட்டளையிட்ட தூதன் யூடாமஸைப் பார்த்து நகைத்துவிட்டு வெளியேறினான்.
அவன் சென்ற பிறகு யூடாமஸ் தனது தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான். அவன் மனத்தில் திகில் பெரிதும் குடிகொண்டிருந்தது. விலைராணியை நந்தவனத்துக்குப் போக எப்படித் தூண்டுவது என்று எண்ணமிட்டான். எந்த வழியும் தெரியாது போகவே எதையோ நினைத்துக்கொண்டு, வீரகுப்தன் அறையை நாடிச் சென்றான்.
வீரகுப்தன் அறையில் பெரும் உற்சாகத்துடன் காணப்பட்டான். கிரேக்கச் சிலையும் விலைராணியுங்கூட அவனுக்கெதிரேயிருந்த மஞ்சத்தில் அமர்ந்திருந்தார்கள். மூவருமே நகைத்துக் கொண்டிருந்த சமயத்தில் உள்ளே நுழைய முயன்ற யூடாமஸ் ஒரு விநாடி கதவின் அருகிலேயே நின்றான். அவனைக் கண்டதும் வீரகுப்தன், “சத்ராப்! வாருங்கள். என்ன விசேஷம்?” என்று வினவினான்.
“ஒன்றுமில்லை. நாம் இரண்டு நாட்களில் புறப்படுவதானால் எத்தனை படைகள் வேண்டும், எந்த வகைப் படைகள் வேண்டும் என்பதை அறிந்துபோக வந்தேன்.” என்று சமாளித்துக்கொண்டான் யூடாமஸ்.
“அதிக படைபலம் வேண்டியதில்லை. இரண்டாயிரம் புரவிப்படை போதும்.” என்றான் வீரகுப்தன்.
“இரண்டாயிரம் புரவிப் படையைக் கொண்டு பெரிய பெளரவனை வெல்ல முடியுமா?” என்று யூடாமஸ் கேட்டான் வியப்புடன்.
“பெரிய பெளரவனுடன் போருக்குப் போகவில்லை நாம். மகதப் படையெடுப்புக்கு அவன் உதவியையும் நட்பையும் நாடப் போகிறோம். அப்படியிருக்க பெரும்படையுடன் சென்றால் அவனுக்குச் சந்தேகம் வரும். படையைக் காட்டி பெரிய பெளரவனை மிரட்ட முடியாது.” என்ற வீரகுப்தனை வியப்புடன் நோக்கினான் யூடாமஸ், “நீங்கள்தானே சொன்னீர்கள் பெளரவனை, முடிந்தால் சமாதானத்தால் முடியாவிட்டால் கட்டாயத்தால் பணியவைக்க வேண்டுமென்று.” என்று வினவினான்.
“ஆம். சொன்னேன்...”
“அதற்கு இரண்டாயிரம் படைவீரர் போதுமா?”
“போதும்.” என்று பேச்சுக்கு முடிவு கட்டிய வீரகுப்தன் ஏதோ நினைத்துக்கொண்டு, “யூடாமஸ்! இன்று என்னைத் தொந்தரவு செய்யாதே. இருக்கும் இரண்டு நாட்களை உல்லாசமாகக் கழிக்க விரும்புகிறேன். இன்றிரவு நான், விலைராணி, கிரேக்கச் சிலை மூவரும் நந்தவனப் பளிங்குக் குளத்தில் நீராடப் போகிறோம். உணவும் அங்கேயே உண்போம். அங்கு காவலர் யாரும் வரவேண்டாமென்று எச்சரித்து வை.” என்றான் சர்வசாதாரணமாக.
“நீங்கள் மூன்று பேருமா?” என்று வினவினான் யூடாமஸ்.
“வேண்டுமானால் நீயும் வா. இது ஒன்றும் ரகசிய நீராட்டமில்லை.” என்ற வீரகுப்தன் புன்முறுவல் செய்தான்.
வீரகுப்தன் சொற்கள் யூடாமஸுக்குப் பரம திருப்தியாயிருந்தும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை.
“தங்கள் சித்தம்.” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.
அன்று மாலை வரை அவன் உள்ளத்தில் நிம்மதியில்லாமல் உலாவிக்கொண்டிருந்தான். இரவு மூண்டு நிலவு கிளம்பியதும் நந்தவனத்தில் நடப்பதென்னவென்பதைக் காண அங்கு சென்று பளிங்குச் சுனைக்கருகில் இருந்த ஒரு மரத்தில் மறைந்து நின்றான்.
நாழிகைகள் ஓடின. யாரும் அங்கு வருவதாகக் காணாததால் ஒருவேளை வீரகுப்தனுக்கு விஷயம் தெரிந்துவிட்டதோ என்ற சந்தேகம் அவன் மனத்தில் உதயமாயிற்று. அந்த சந்தேகத்தை நிவர்த்திக்க வந்த தேவதைபோல் விலைராணி நல்ல வெள்ளை உடையணிந்து வெண்புறாவைப் போல் தன்னந்தனியாக வந்து கொண்டிருந்தாள் மாளிகையின் பின்புற வழியாக.
பளிங்குச் சுனையருகிலிருந்த புல்வெளிப் பகுதியில் நடந்து வந்தாள். அவள் அந்தப் பகுதியைத் தாண்டியதும் எதையோ நினைத்துக் கொண்டு ஆகாயத்தை நோக்கினாள். பிறகு தலையை ஆட்டிவிட்டுப் பக்கத்திலிருந்த தோப்பில் நுழைந்தாள். சில விநாடிகள் ஓடின. தோப்புக்குள் திடீரென பெரும் அலறல் கேட்டது. அடுத்து அத்துடன் பயங்கரச் சிரிப்பொலியொன்று கலந்தது.
“விடு என்னை, விடு என்னை.” என்று கூச்சலிட்டது வெண்புறா. புறாவைப் பிடித்த வல்லூறு அதை விடவில்லை. ஒருமுறை அதன் முகத்தில் தன் மூக்கால் கொத்தியது. புறா முனகியது. வல்லூறு தனது நீண்ட கால்களால் நடக்க முற்பட்டது. யூடாமஸின் முகத்தில் திருப்திக்கு அறிகுறியாகப் புன்முறுவலொன்று படர்ந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
58. வீரகுப்தனின் புதிய நண்பன்

விலைராணி அலறியதும், அதை அடுத்து பயங்கரச் சிரிப்பு கேட்டதும், பிறகு தோப்பில் யாரோ நடந்து செல்லும் அரவம் காதில் விழுந்ததும், விலைராணி யவன தூதனிடம் சிக்கிவிட்டாளென்ற திருப்தியில் மீண்டும் அரண்மனையை நோக்கி நடக்க முற்பட்டான் யூடாமஸ்.
நிலவு நன்றாகப் பளிச்சிட்டு அந்த நந்தவனத்தின் அழகைப் பன்மடங்கு அதிகப்படுத்தியதாலும், கிரேக்கச் சிலை, விலைராணி, அவர்களுடன் தானும் இரவு பளிங்குச் சுனையில் நீராடப் போவதாக முன்னமே வீரகுப்தன் அறிவித்திருந்ததாலும், வீரகுப்தன் அங்கு வர அதிக நேரமாகாதென்று நினைத்த யூடாமஸ், தான் அங்கு மேலும் நிற்பது உசிதமல்ல என்ற எண்ணத்தினால் வேகமாகவே நடையைக் கட்டி அரண்மனையை அடைந்தான். அடைந்ததும் தனது காவலனை அழைத்து வீரகுப்தனைப் பார்க்க விரும்புவதாகக் கூறி, “சமயம் எப்படி இருக்கிறதென்று பார்த்து வா.” என்று கட்டளையும் இட்டான்.
வீரகுப்தனை நாடிச் சென்ற சிறிது நேரத்தில் திரும்பிவிட்ட காவலன் வீரகுப்தர் அறையில் இல்லையென்றும், சற்று முன்புதான் தோட்டத்துக்குச் சென்றாரென அங்கிருந்த காவலர் அறிவித்ததாகவும் தெரிவிக்கவே, தனது திட்டம் தன்னையும் மீறி பலிப்பதை உணர்ந்த யூடாமஸ் தனக்கு நல்ல காலம் திரும்பிவிட்டதை நினைத்துப் பெரிதும் உவகை கொண்டான்.
“யவன தூதன் விலைராணியை அனுப்பச் சொன்னான். நான் ஏதும் சொல்லாதிருக்க வீரகுப்தனே தான் அன்றிரவு விலைராணி, கிரேக்கச் சிலை இருவருடன் நீராடப் போவதாகவும், யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக்கூடாதென்றும் சொன்னான். இரு பெண்களுடன் அவன் வருவான் என்று நினைத்தால் விலைராணி தனியாக வருகிறாள். யவன தூதனிடம் சிக்கிக்கொள்கிறாள். எப்படி, அதிர்ஷ்டம் எனக்கு அனுகூலமாகத் திரும்புகிறது! இத்தனையும் நடந்தபின்பு வீரகுப்தனை யவன தூதன் தீர்த்துக்கட்டாமலா இருப்பான்?” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான் யூடாமஸ்.
இத்தனையிலும் ஒரு விசாரம் மட்டுமிருந்தது யூடாமஸாக்கு. வீரகுப்தன் ஒருவேளை யவன தூதனைக் கொன்று விட்டால் என்ன செய்வது என்று சிந்தித்தான். அல்லது வீரகுப்தன் கொல்லப்பட்டால் ஏற்படக்கூடிய கிளர்ச்சியை எப்படிச் சமாளிப்பது என்றும் எண்ணிப் பார்த்ததால் சிறிது நடுக்கமும் கொண்டானானாலும், அதற்குத் தகுந்த சமாதானங்களைக் கண்டுபிடித்தான்.
“யவன தூதன் கொல்லப்பட்டால் அவனிருப்பது தனக்குத் தெரியாதென்று வீரகுப்தனிடம் கைவிரித்துவிடலாம். வீரகுப்தனிடம் சேர்ந்துகொண்டு அவன் யாரென்பதைப் பற்றி விசாரணையும் நடத்தலாம். வீரகுப்தன் கொல்லப்பட்டால் யவன தூதனைச் சிறை செய்து தூக்கில் தொங்கலாட வைத்து அவனை ஒழித்துக்கட்டலாம். எப்படி. நிலைமை திரும்பினாலும் எனக்கு அனுகூலந்தான்.” என்று அடுத்து நேரிடக்கூடிய விளைவுகளுக்கும் முடிவை ஏற்படுத்திக் கொண்டான்.
இப்படிப் பலவாறு நினைத்து அறையில் மஞ்சத்தில் மல்லாந்து கால்களை நீட்டிவிட்ட யூடாமஸுக்கு உறக்கம் வராது போகவே மஞ்சத்தில் புரண்டான். நந்தவனத் தோப்பில் நிகழ்ந்திருப்பது என்னவென்பதை அறிய அவன் இதயம் துடித்தாலும், தான் அங்கு செல்வது ஆபத்தென்பதை உணர்ந்திருந்ததால் மஞ்சத்திலேயே புரண்டான். நேரம் ஓடியது. நள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்ததால் நியாஸா நகரத்தில் அமைதியும் குடிகொண்டது.
ஆனால் யூடாமஸ் மனத்தில் நிம்மதி சிறிதுமில்லாததால் அவன் மஞ்சத்தை விட்டு எழுந்து அறையில் அங்குமிங்குமாக உலாவினான். பிறகு சாளரத் தண்டை சென்று வெளியே நந்தவனத்தை நோக்கித் தனது பார்வையையும் செலுத்தினான். வெளேரென்ற பால் நிலவும், நிலவில்லாத இடத்தில் தோப்பு மரங்களும் செடிகளும், காற்றில் ஆடிய புஷ்பச் செடிக் கிளைகளில் ஆடி. ஆடி அவனைப் பார்த்து நகைத்த புஷ்பக் கொத்துகளையும் தவிர வேறெதுவும் தெரியவில்லை.
என்ன காரணத்தினாலோ யூடாமஸின் மனம் திக் திக்கென்று அடி.த்துக்கொண்டது. தனது திட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்துவிட்டதோ என்று நினைத்து ஓரளவு அச்சமும் கொண்டான். அதன் விளைவாக நந்தவனத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டே சாளரத்தண்டை நின்றிருந்தான். பிறகு சாளரக்கட்டையில் சாய்ந்து தலையை வெளியே நீட்டியும் நந்தவனத்தை ஆராய்ந்தான். எங்கும் எந்தவித சலனமும் இல்லை.
ஒருவேளை வீரகுப்தன் நீராடித் திரும்பியிருப்பானோ என்று சந்தேகங்கொண்டான் யூடாமஸ். அப்படியானால் யவன தூதன் என்ன ஆனான் என்ற சந்தேகமும், அதனால் விளைந்த பீதியும் யூடாமஸின் உள்ளத்தை ஆட்கொண்டன. எதற்கும் இன்னொரு முறை நந்தவனத்துக்கு நேரில் போய்ப் பார்த்துவிட்டாலென்ன என்று நினைத்தான். அது மிகவும் ஆபத்து என்ற காரணத்தால் செய்வதென்னவென்று திகைத்தான்.
இரவு ஓடிக்கொண்டிருந்தது. மூன்றாவது ஜாமமும் நெருங்கியது. யூடாமஸின் கண்களையும் இயற்கை மூடத் தொடங்கியதால் அவன் திரும்பவும் மஞ்சத்தை அடைந்து உடைகளைக் களையாமல் ஏற்கனவே தரித்திருந்த உத்தியோக உடையுடனேயே படுத்து உறங்கிவிட்டான். எத்தனை நேரம் உறங்கியிருப்பானோ அவனுக்கே தெரியாது. உதய கால வாத்தியங்கள் அரண்மனையில் முழங்கியதுகூட அவன் காதுகளில் விழவில்லை. வெளியே இருந்த காவலன் ஒருவன் பலமாகக் கதவைத் தட்டவே அவன் மெள்ள விழித்துக் கண்களைக் கசக்கிக்கொண்டு எழுந்து தள்ளாடி நடந்து கதவைத் திறந்தான்.
“எதற்காகக் கதவை அப்படி இடிக்கிறாய்?” என்று காவலன்மீது எரிந்தும் விழுந்தான்.
பதிலுக்குக் காவலன் சொன்ன செய்தி யூடாமஸுக்கு பெரும் திகிலை விளைவித்தது.
“வீரகுப்தர் தங்களை எழுப்பச் சொன்னார்.” என்றான் காவலன்.
“என்ன! வீரகுப்தர் எழுப்பச் சொன்னாரா?” என்று வியப்புடன் வினவினான் யூடாமஸ்.
“ஆம் சத்ராப்!” காவலன் பதிலில் மரியாதை இருந்தது. ஆனால் சொற்களில் நகைப்பு இருந்தது.
“என்ன காரணமாம்?” யூடாமஸ் மீண்டும் எரிந்து விழுந்தான்.
“அவர் நண்பர் ஒருவர் வந்திருக்கிறாராம். அவரைத் தாங்கள் சந்திக்க வேண்டுமாம்.” காவலன் பதிலில் மரியாதை அதிகமாகத் தொனித்தது.
“நண்பரா”
“ஆம்.”
“எப்பொழுது வந்தாராம்? யாரது?”
“எனக்குத் தெரியாது சத்ராப். அவரும் வீரகுப்தரும் மற்ற இரு பெண்களுடன் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருக்கிறார்கள்...”
இதைக் கேட்ட யூடாமஸ் பெரும் குழப்பத்திற்கு உள்ளானான்.
“நீராடிவிட்டு வருவதாகச் சொல்.” என்றான் முடிவில்...
காவலன் நின்ற இடத்தை விட்டு அசையாமல் நிற்க, “ஏன் நிற்கிறாய்? இன்னும் ஏதாவது சொல்ல வேண்டியது பாக்கியிருக்கிறதா?” என்று வினவினான் யூடாமஸ்.
“இருக்கிறது சத்ராப்.” என்றான் காவலன்.
“சொல்லித் தொலை.” என்றான் யூடாமஸ்.
“வீரகுப்தர் அவர் அறையில் இல்லை.” என்று கூறினான் காவலன்.
“எங்கிருக்கிறார்?” யூடாமஸ் சந்தேகத்துடன் வினவினான்.
“நந்தவனத்தில் இருக்கிறார்.” என்றான் காவலன்.
“அங்கு என்ன செய்கிறார்?”
“மந்திராலோசனையில் இருக்கிறார்...”
“நந்தவனத்திலென்ன மந்திராலோசனை?”
“அங்குதான் ரகசியமாகப் பேசலாமாம். அங்கு உபதளபதிகளையும் வரச்சொல்வியிருக்கிறார்.”
காவலன் தந்த விவரங்கள் யூடாமஸை மேலும் குழப்பின. தான் முற்றும் எதிர்பாராத திருப்பம் ஏதோ ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அதன் விளைவாக அவன் மனத்தில் சிறிது கிலியும் ஏற்படவே சீக்கிரமாக நீராட்டத்தை முடித்துக்கொண்டு ராணுவ உடை அணிந்து தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டான்.
கதிரவன் கிளம்பி ஆறு நாழிகை ஆகிவிட்டாலும் நந்தவனம் நல்ல குளிர்ச்சியாகவே இருந்தது. பறவைகளின் “கிலா கிலா.” சப்தம் காதுக்கு மிக ரம்மியமாக இருந்தது. புஷ்பக்கொடிகளில் தவழ்ந்து வந்த பூங்காற்றுகூட அவன் நாசிகளில் நறுமணத்தைப் புகுத்தியது. இத்தனையும் இன்பம் தரவில்லை யூடாமஸாக்கு. தீர்க்க சிந்தனையுடன் நந்தவனச் சின்னஞ்சிறு தோப்புகளின் ஊடேயும், இடை இடையே உள்ள வெளிப் பகுதிகளிலும் நடந்தான்.
எங்கும் யாரும் தென்படவில்லை. காவலன் ஏதோ உளறியிருக்கிறானென்ற நினைப்பில் திரும்ப முயன்ற சமயத்தில் கோடித் தோப்பிலிருந்து ஒரு காவலன், “சத்ராப்! சத்ராப்!” என்று அழைத்த வண்ணம் ஓடி வந்தான்.
யூடாமஸ் திரும்பி, காவலனை நோக்கினான்.
“தங்களுக்காகத்தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்...” என்றும் கூறி, “இப்படி வாருங்கள்.” என்று வழிகாட்டி, அழைத்துச் சென்றான்.
யூடாமஸின் திகில் அதிகமாயிற்று. அந்தத் தோப்பில்தான் யவன தூதன் தங்கியிருந்த வீடு இருந்தது. அங்கு எதற்காகக் காவலன் அழைத்துச் செல்கிறான் என்று எண்ணிப் பார்த்து விடை காணாததால் சிந்தனையில் திளைத்த வண்ணம் நடந்தான் யூடாமஸ்.
அந்த வீட்டுக்கே காவலன் அவனை அழைத்துச் சென்றதால் பெரும் சந்தேகம் அவனைச் குழ்ந்துகொண்டது. அந்த சந்தேகத்தின் விளைவாகத் திரும்பிவிட முதலில் நினைத்த யூடாமஸ் அதனால் எந்தப் பலனும் இல்லையென்பதை உணர்ந்ததால் அந்தத் தோப்பு வீட்டுக்குள்ளே புகுந்தான்.
அவன் கண்ணெதிரே விரிந்த காட்சி நின்ற இடத்திலே அவன் கால்களை உறைய வைத்தது. அந்தத் தோட்ட வீட்டின் சிறு முற்றத்தில் வீரகுப்தனும் யவன தூதனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். இரு உபதளபதிகள் மிக்க மரியாதையுடன் சற்று எட்ட நின்றிருந்தார்கள். அந்தச் சமயத்தில் விலைராணியும் கிரேக்கச் சிலையும் சற்று எட்ட இருந்த அறையிலிருந்து ஒரு மதுக்குப்பியையும் நான்கு சிறு பாத்திரங்களையும் தட்டுகளில் வைத்து ஏந்தி வந்தார்கள்.
அந்தச் சூழ்நிலையை வியப்புடனும் குழப்பத்துடனும் நோக்கினான் யூடாமஸ். அந்தச் சமயத்தில் வீரகுப்தன் சொன்னான், “யூடாமஸ்! இவர்தான் எனது நண்பர். என்னிடம் உபதளபதியாக இருக்க ஓப்புக்கொண்டிருக்கிறார். நம்முடன் இவரும் பெரிய பெளரவன் நாட்டுக்கு வருகிறார்.” என்று. அத்துடன் யூடாமஸ் அமர தனது அருகிலிருந்த ஆசனத்தையும் சுட்டிக் காட்டினான்.
சொப்பனத்தில் நடப்பதுபோல் நடந்த யூடாமஸ் அந்த ஆசனத்தில் அமர்ந்தான். இரு மாதரும் கொடுத்த மதுவையும் கனவில் அருந்துவதுபோல் அருந்தினான். வீரகுப்தனும் யவன தூதனும் மது பாத்திரங்களைக் கையில் எடுத்துக்கொண்டதும், “நண்பரே! உமது புதுப் பதவிக்கு எனது பாராட்டுதல்கள். நீர் வந்தபிறகு பெரிய பெளரவன் நாடு நம் வசமாகுமென்பதில் சந்தேகமில்லை.” என்று வீரகுப்தன் கூறி மதுவை அருந்தினான்.
பிறகு யூடாமஸை நோக்கி, “யூடாமஸ் இவா் பாபிலோன் நாட்டிலிருந்து வந்திருக்கிறார். உன்னை அறிமுகம் செய்துகொள்ள விரும்பினார். அதனால்தான் உன்னை வரவழைத்தேன்.” என்று கூறிவிட்டு, “யவன வீரரே! இவர்தான் யூடாமஸ், சமீபத்தில் சத்ரபதியானவர்?” என்று அறிமுகம் செய்து வைத்தான்.
யவன தூதன் முகத்தில் கொடிய புன்னகை அரும்பியது.
“சத்ராப்! எனது பாராட்டுகள்.” என்று சொன்னான்.
“எதற்குப் பாராட்டுகள்?” யூடாமஸின் கேள்வியில் குழப்பமிருந்ததால் சொற்கள் தெளிவாக வரவில்லை.
“சத்ராப் ஆனதற்கு. அதுமட்டுமல்ல. நீங்கள் செய்திருக்கும் பாக்கியத்திற்கு. உமக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.” என்றான் யவன தூதன்.
“என்ன அதிர்ஷ்டம்?” என்று வினவினான் யூடாமஸ்.
“பாரதத்தின் மகாவீரர், எனது நண்பர் வீரகுப்தரிடம் சேவை செய்வதைவிட வேறு என்ன அதிர்ஷ்டம் வேண்டும்?” என்ற யவன தூதன் யூடாமஸின் முதுகில் செல்லமாக அறைந்தான்.
யூடாமஸ் விழித்தான். தனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை என்பதைத் தீர்மானித்துக் கொள்ளத் தன் தலையை ஒருமுறை ஆட்டிக்கொண்டான். தான் கனவுலகத்தில் இல்லையென்பதை உறுதி செய்துகொள்ளத் தனது இடது தோளை ஒருமுறை தனது வலது கையால் நிமிண்டியும் கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
59, பெளரவன் விருந்தாளிகள்

யூடாமஸுக்கு விஷயம் ஏதுமே புரியாததால் மெளனத்தைவிட சிறந்த சாதனம் அத்தகைய சூழ்நிலையில் கிடையாதென்பதை உணர்ந்து பேசாமடந்தையானான். அடியோடு ஒருவரையொருவர் அறியாத யவன தூதனும் வீரகுப்தனும் நண்பர்களானதும், வீரகுப்தன் தூதனை உபதளபதியாக்கிக் கொண்டதும் எப்படி சாத்தியம் என்று உள்ளூர எண்ணமிட்டாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் எப்படியும் உண்மை வெளிவரும் என்று மதுவை மீண்டும் சிறிது ஊற்றச்சொல்லி உறிஞ்சலானான்.
வீரகுப்தன் அவன் மனநிலையை உணர்ந்திருந்த காரணத்தால் அவனே நடந்த விஷயங்களை மெதுவாக அவிழ்க்கத் தொடங்கி, “சத்ராப்! உமது அறைக்காவலன் நமது ஆண்ட்ரியால் நியமிக்கப்பட்டவன்...” என்று சுட்டிக் காட்டிவிட்டு, “இல்லையா ஆண்ட்ரி?” என்று கிரேக்கச் சிலையை நோக்கிக் கேட்டான்.
“ஆம். அவன்தான் சொன்னான் யவன நாட்டிலிருந்து நண்பர் ஒருவர் வந்திருப்பதாக.” என்று கிரேக்கச் சிலை ஒப்புக்கொண்டு புன்முறுவலும் செய்தாள்.
“அப்படித் தெரிந்த பின்பு அவரைச் சந்திக்காமலிருப்பது நாகரிகத்துக்கு விரோதம் என்று நினைத்தேன். ஆகவே முதலில் விலைராணியை நீராட்டத்துக்கு அனுப்பிவிட்டு நானும் தொடர்ந்தேன். கிரேக்கச் சிலையையும் வரச்சொன்னேன். மூவரும் நீராடத்தான் சென்றோம். ஆனால் அது நடக்கவில்லை.” என்று பெருமூச்செறிந்தான் வீரகுப்தன்.
யூடாமஸ் முகத்தில் குழப்பம் அதிகமாகத் தெரிந்தது.
“மூவரும் ஒன்றாகப் போனீர்களா?” என்று வியப்புடன் வினவினான் யூடாமஸ். விலைராணி தனியாக வந்ததை, தான் பார்த்திருக்க முழுப் பொய்யைச் சொல்கிறானே வீரகுப்தன் என்று நினைக்கவும் செய்தான்.
அவன் உள்ளத்திலோடிய எண்ணங்களை வீரகுப்தன் புரிந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே விளக்கினான். முதலில் ராணிதான் போனாள் பளிங்குச் சுனைக்கு. நான் அவளைத் தொடர்ந்து தோப்பு வழியாகச் சற்று மறைந்து சென்று அவள் தோப்பில் வந்ததும் அவளைப் பிடித்தேன். அவள் என்னை யாரோ என்று நினைத்து அலறினாள். நான் நகைத்தேன். நகைத்ததும் அவள் அடங்கினாள். பிறகு ஆண்ட்ரியும் வரவே மூவருமாக நண்பர் தங்கியிருக்கும் இந்த வீட்டுக்கு வந்தோம்.” என்று.
ராணியின் அலறலையும் வீரகுப்தன் நகைப்பையும்தான் எத்தனை தவறாக அர்த்தம் செய்துகொண்டான் என்பது யூடாமஸுக்கு அப்பொழுதுதான் விளங்கியது. தான் கிரேக்கச் சிலையின் ஒற்றர்களால் தூழப்பட்டிருப்பதும் புரிந்தது அவனுக்கு. தனது ஒவ்வொரு செய்கையும் கவனிக்கப்படுவதை அவன் உணர்ந்தாலும் இயற்கையாக அவனுக்கிருந்த தைரியத்தால் வருவது வரட்டும் என்று அசிரத்தையாகவே இருந்தான்.
வீரகுப்தன் மேலும் விளக்கினான்.
“இந்த விடுதியில் நான் கதவைத் தட்டியதும் யவன நண்பர் என்னை விரோதியென்று நினைத்துக் கத்தியால் குத்த முயன்றார். அது சரியல்லவென்று தெரியப்படுத்த அவர் கையிலிருந்த கத்தியை அகற்றினேன்...” என்று சொல்லிக்கொண்டு போன வீரகுப்தனை இடைமறித்த யவன தூதன், “கத்தியை அகற்றினீர்களா! கத்தியைப் பிடுங்கினீர்கள் என்றல்லவா சொல்ல வேண்டும். உங்கள் கையால் ஒங்கிய என் கையை வளைத்து மணிக்கட்டை இறுக்கி கத்தியை எடுத்துக்கொண்டதை நான் ஆயுள் உள்ளவரை மறக்கமாட்டேன். என் கையை இதுவரை யாரும் மடக்கியதில்லை. ஆனால் வீரகுப்தரே! உமது கை கையல்ல, இரும்புத் துண்டம்.” என்றான்.
“சே! சே! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.” என்று சமாதானம் சொன்ன வீரகுப்தன், “பிறகு நண்பரைச் சமாதானப்படுத்தி நாங்கள் மூவரும் உள்ளே அழைத்துச் சென்றோம். அவரை உபதளபதியாக இருக்கும்படி வேண்டிக்கொண்டோம். முதலில் மறுத்தார். பிறகு கிரேக்கச் சிலை அலெக்ஸாண்டருக்கு வேண்டியவள் என்று தெரிந்ததும் ஒப்புக்கொண்டார்.
ஸெலூகஸ் அலெக்ஸாண்டரின் படைத்தலைவர். கிரேக்கச் சிலை அலெக்ஸாண்டரின் வளர்ப்புப் பெண். தக்ஷசீலத்தின் அதிகாரி. நியாஸாவை ஆள்பவள். இருவரும் சேர்ந்து பெரிய பெளராணியைப் பணிய வைக்க முயல்வது எத்தனை பொருத்தம்! அதுமட்டுமா. கிரேக்கச் சிலையின் படைக்கு நான் தலைமை வகிக்க, யவன நண்பரும் யூடாமஸும் எனது உபதளபதிகளாக வருவது எத்தனை பொருத்தம்!” என்று பொருத்தங்களை அடுக்கினான்.
யூடாமஸ் விஷயங்கள் தலைக்குமேல் போய்விட்டதை உணர்ந்து சிலையென உட்கார்ந்தான்.
“யூடாமஸ்! நாம் இன்று நியாஸாவிலிருந்து கிளம்புகிறோம். சிரியாவிலிருந்து வந்த புது யவனர்களையும் இங்குள்ள பழைய யவனர்களையும் சேர்ந்த படையுடன் கிளம்புகிறோம். எல்லாம் உன் திட்டப்படி நடக்கிறது. படைகளைச் சித்தம் செய்ய உன் சார்பில் கிரேக்கச் சிலையே உத்தரவிட்டுவிட்டாள்.” என்றும் விளக்கிய வீரகுப்தன் எழுந்தான் தனது ஆசனத்தை விட்டு.
“யவன தூதரே! தாங்களும் யூடாமஸும் அரண்மனைக்கு வந்து சேருங்கள். நானும் பயணத்திற்கு சித்தம் செய்துகொள்கிறேன்...” என்று கூறிவிட்டு இரு மாதருடன் வெளியே சென்றான்.
அவர்கள் மூவரும் வெளியே சென்றதும் யூடாமஸ், “தூதரே இதற்கென்ன பொருள்?” என்று கேட்டான்.
“பொருள் உமக்கு விளங்கவில்லையா?” என்று தூதனும் சீறினான்.
“என்ன விளங்க வேண்டும் எனக்கு?” யூடாமஸின் கேள்வியில் கடுமை பலமாயிருந்தது.
“உமக்குத்தான் இங்கு அதிகாரமென்றும், ஏதோ ஒரு வீரனைக் கொலை செய்யச் சொல்கிறீரென்றும் நினைத்தேன். இங்கு ஆள்வது நீங்களல்ல. அலெக்ஸாண்டரின் அபிமான மகள். வீரகுப்தன்மீது நான் கைவைத்து அவள் சீறினால், என்னை தூக்கு மேடை ஏற்றினால் உமக்கு எந்த நஷ்டமுமில்லை. உமக்கு இங்கு அதிகாரம் இருக்கிறதென்று நம்பித் தான் ஸெலூகஸ் உம்மை சத்ரபதியாக நியமித்து அதிகாரச் சீட்டும் எழுதிக் கொடுத்தார். இங்குள்ள நிலைமையே வேறு.
நீர் மற்றவர்களைக் கண்காணிப்பதற்குப் பதிலாக மற்றவர்கள் உங்களைக் கண்காணிக்கிறார்கள். தவிர யவனர்கள் மனம் உங்களுக்குத் தெரியுமல்லவா? அவர்கள் மதிக்கும் ராணி, இங்கு இந்த ஆண்ட்ரி, உத்தரவிட்டால் நாமிருவரும் கிழித்து எறியப்படுவோம். நியாஸா முழுதும் உமது வசத்திலில்லை. உமது காவலனே ஒற்றன். இன்னும் நிலைமையை நீர் புரிந்தகொள்ளாவிட்டால் உமது மண்டையில் களிமண் தானிருக்கிறது.” என்ற யவன தூதன், “இவனுடன் போவோம். இவனைத் தீர்த்துக்கட்ட சந்தர்ப்பம் கிடைக்காமல் போகாது.” என்றும் தெரிவித்தான்.
இந்த விளக்கத்தைக் கேட்ட யூடாமஸ், நியாஸா இரண்டாகப் பிளவுபட்டிருப்பதை உணர்ந்தான். ஒரு பாதி கிரேக்கச் சிலையிடமும் இன்னொரு பாதி தன்னிடமும் பக்தியுடனிருப்பதால் எதையும் நிதானித்துச் செய்வது உசிதமென்று எண்ணினான். அந்த எண்ணத்துடனே வெளியேறவும் செய்தான். நேராக தனது அறைக்கு வந்ததும் பெளரவன் நாட்டுக்குப் புறப்பட தன்னைச் சித்தமும் செய்துகொண்டான்.
சரியான நடுப்பகல் தாண்டிய இரண்டாவது நாழிகையில் வீரகுப்தன் பூர்ண கவசமணிந்தான். அவன் இரு புறங்களிலும் நின்ற கிரேக்கச் சிலையும் விலைராணியும் அவனை எச்சரிக்கையுடனிருக்கும்படி. யோசனை சொன்னார்கள்.
“யடாமஸும் அந்தப் புதுக் கொலைகாரனும் உங்களை இரவில் தூங்கும்மோது கழுத்தை வெட்டினாலும் வெட்டுவார்கள்.” என்றாள் கிரேக்கச் சிலை.
விலைராணியின் முகத்தில் மிதமிஞ்சிய கவலை தெரிந்தது.
“நீங்கள் தனிப்பட்ட மனிதரல்ல. விவாகமானவர். நான் ஒருத்தி இருக்கிறேனென்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மிகுந்த எச்சரிக்கையுடனிருங்கள்...” என்று சொன்னாள், கவலை துளிர்த்த குரலில்.
அந்தச் சமயத்தில் ஆண்ட்ரி எதையோ நினைத்துக் கொண்டவள் போல், “படை புறப்படும் நேரத்துக்கு வருகிறேன்.” என்று கூறி அவர்கள் இருவரையும் தனியாக விட்டு அறைக்கதவையும் சாத்திக்கொண்டு சென்றாள். அவள் சென்றதும் புன்முறுவல் செய்தான் வீரகுப்தன்.
“பெண்கள் ஜாடை புரிந்தவர்கள்.” என்று கூறினான். அத்துடன் விலைராணியை அணைத்தும் கொண்டான்.
அவன் மார்பிலிருந்த இரும்புக் கவசத்தின் விளைவாக அவள் அவன் மார்புடன் இழைய இயலவில்லையென்றாலும் கவசத்தின் ஸ்பரிசமே ஆனந்தமாக இருந்தது அந்த வீரமகளுக்கு. அவன் குனிந்து அவள் கன்னங்களையும் இதழ்களையும் மாறி மாறி தன் உதடுகளால் தொட்டபோது அவள் உணர்ச்சி மிகுதியால் நடுங்கவே செய்தாள். எத்தனையோ ஆபத்தான கட்டங்களில் அவனுடனிருந்து அவன் வீரத்தை உணர்ந்திருந்துங்கூட இம்முறை அவள் உள்ளத்தில் என்ன காரணத்தாலோ பயம் துளிர்த்திருந்தது. பயத்தால் அவள் தேகம் லேசாக நடுங்குவதை அவன் உணர்ந்தான். ஆகவே கேட்டான், “ராணி! என் வீரத்தில் உனக்கு நம்பிக்கையில்லையா?” என்று.
“இருக்கிறது. ஆனால் நீங்கள் இரண்டு கொலைகாரர்களுடன் செல்கிறீர்கள். பெரிய பெளரவன் உங்கள் கோரிக்கைக்கு இணங்குவாளென்றும் தோன்றவில்லை எனக்கு.” என்றாள் விலைராணி.
வீரகுப்தன் அதை மறுக்கவில்லை.
“உண்மைதான் ராணி. ஆனால் பெரிய சாம்ராஜ்யங்கள் பயத்தினால் நிறுவப்படுவதில்லை. தியாகத்தாலும் வீரத்தாலும் நிறுவப்படுகின்றன. வீரனுக்குக் கடமை முக்கியம். இந்த நாட்டுக்குக் கிரேக்கர்களிடமிருந்து விடுதலை முக்கியம். ஆகவே எந்த ஆபத்திலும் நான் கடமையைச் செய்துதான் ஆக வேண்டும். நீயும் வீரன் மனைவியாக நடந்துகொள். துணிவுடன் இரு.” என்று தைரியம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் விலைராணியும், கிரேக்கச் சிலையும் அக்கம் பக்கத்தில் வர அரண்மனைப் படிகளில் இறங்கி இரண்டாயிரம் புரவிப் படைகள் அணிவகுத்து நின்ற இடத்திற்கு வந்தான். அம்மூவரையும் கண்டதும் வெற்றி முரசங்கள் முழங்கின. வீரகுப்தன் அதற்குப் பிறகு இரு பெண்களையும் திரும்பிப் பார்க்காமல் படைமுகப்பில் யவன தூதனுக்கும் யூடாமஸுக்கும் இடையிலிருந்த தனது புரவியில் ஏறிக்கொண்டு யவனர் பாணியில் வலது கையைத் தூக்கி சைகை செய்ய கொம்புகள் இரண்டு ஊதப்பட்டன, படை நகர்ந்தது. படையின் முன்னணிக்குத் தனது புரவியைச் செலுத்திய வீரகுப்தன் விரைந்து செங்குத்தாக உட்கார்ந்த வண்ணம் பயணம் செய்தான்
அன்று மாலை படை சிந்து நதியின் மேல்கரையை அடைந்ததும் நதியைத் தாண்ட வேண்டாமென்றும், நதிக்கரை யோரமே தெற்கு நோக்கிப் பயணம் செய்யுமாறும் படைகளுக்கு உத்தரவிடும்படி யூடாமஸிடம் கூறினான்.
“நதியைக் கடப்பது குறுக்கு வழி.” என்று கூறினான் யூடாமஸ்.
“எப்பொழுதும் குறுக்கு யோசனைகள் வேலை செய்வதில்லை.” என்று கூறிய வீரகுப்தன் படைகளைக் கரையோரமே செலுத்தினான்.
இரவில் சிறிது நேரமே தங்கி விடியற்காலையில் படைகளை இயக்கிவிட்ட வீரகுப்தன் ஒரு வாரத்திற்குள் சிந்து நதியிலிருந்து ஜீலம் பாயும் இடத்திற்கு வந்து சட்டென்று கிழக்கே திரும்பி இரு நதிகளையும் கடந்து அடுத்த நான்கு நாட்களில் பெரிய பெளரவன் நாட்டுக்குள் நுழைந்து சற்று வடக்கே திரும்பி ஜீலத்தின் ஆரம்பக் கட்டத்தின் கீழ்க்கரையிலிருந்த பெரிய பெளரவனின் பிரதான நகரத்துக்கு வந்து சேர்ந்தான். படைகளை நகரத்துக்கு எல்லைப் புறத்திலேயே நிறுத்திவிட்டு, “யூடாமஸ்! நீ போய் பெளரவ மன்னனை சக்கரவர்த்தி சந்திரகுப்தரின் தூதன் பார்க்க விரும்புவதாகத் தெரிவி.” என்று கூறினான்.
முதலில் யூடாமஸ் தயங்கினான்.
“சந்திரகுப்த மகாராஜாவை பெளரவர் சக்கரவர்த்தியென்று ஒப்புக் கொள்வாரா.” என்று கேட்டான்.
“நான் சொன்னதைச் சொல், மற்றவற்றைப் பிறகு கவனிப்போம்.” என்றான் வீரகுப்தன்.
மிகுந்த தயக்கத்துடன் யூடாமஸ் சென்றான் பெளரவன் மாளிகைக்கு. அவன் திரும்பியபோது இரவு முற்றிவிட்டது. இரண்டு பந்தங்களுக்கிடையில் நின்றிருந்த வீரகுப்தன் வினவினான், “பெளரவர் என்ன சொன்னார்?” என்று.
“நாளைக் காலையில் தங்களுக்குப் பேட்டியளிப்பதாகச் சொன்னார்.” என்றான் யூடாமஸ்.
“வேறெதுவும் சொல்லவில்லையா?” என்று வினவினான் வீரகுப்தன்.
“இல்லை...” யூடாமஸ் இழுத்தான்.
“என்ன இழுக்கிறாய்?” என்று வீரகுப்தன் கேட்டான்.
“தூதுச் செய்தியைச் சொன்னபோது என்னை இகழ்ச்சியாகப் பார்த்தார் பெளரவர். பிறகுதான் தங்களைச் சந்திக்க ஒப்புக் கொண்டார்.” என்றான் யூடாமஸ்.
வீரகுப்தன் அதற்குமேல் அவனிடம் ஏதும் பேசவில்லை. மறுநாள் காலை நீராடிப் போருடை அணிந்து யூடாமஸும் யவன தூதனும் இரு புறங்களிலும் வர பெளரவன் நகரத்துக்குள் நுழைந்தான். நகரம் போருக்குத் தயாராயிருந்தது. பெரிய பெளரவன் தனது அரண்மனை சபா மண்டபத்தில் வீரகுப்தனை வரவேற்றான்.
வீரகுப்தனுக்கு ஆசனமேதும் கொடுக்காமல் அரியணையில் அமர்ந்தபடி வினவினான், “வீரகுப்தா! சந்திரகுப்தன் என்று சக்கரவர்த்தியானான்?” என்று. இதைக் கேட்டு புன்முறுவலும் செய்தான்.
புரூரவ சக்கரவர்த்தியின் வம்சத்தில் வந்தவனும் அலெக்ஸாண்டரையே எதிர்த்தவனும், மாவீரனும், வயோதிகம் சிறிதே தலைகாட்டத் தொடங்கிய பருவத்திலிருந்தவனும், அடர்ந்த மீசையும் தாடியும் முகத்துக்குத் தனி கம்பீரத்தைக் கொடுத்ததால் வீரலக்ஷ்மி முகத்தில் தாண்டவமாட கோபி சந்தனத்தை நெற்றியில் தீட்டியிருந்தவனும், நவரத்ன சகிதமான கிரீடத்தை அணிந்திருந்தவனுமான பெளரவனை ஏறெடுத்து நோக்கிய வீரகுப்தன் உள்ளத்திலும் பெளரவனைப் பற்றிய மதிப்பு அதிகமாயிற்று. ஆகவே தலைவணங்கிப் பேசினான் வீரகுப்தன்.
“புரூரவ சக்கரவர்த்தித் தோன்றலே! பாஞ்சாலத்தில் தங்கள் நாட்டைத் தவிர மற்ற நாடுகளெல்லாம் சந்திரகுப்தர் ஆதிக்கத்துக்குள் வந்துவிட்டன. வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து, கிரேக்கர்கள் ஆட்சியிலிருந்து பஞ்சநதி நாடுகளுக்குச் சந்திரகுப்தர் விடுதலையளித்துவிட்டார். தாங்களும் அவருடன் சேரும் பட்சத்தில் நமது நாடு பிற ஆதிக்கத்திலிருந்து முழுதும் மீட்கப்படும்.” என்று கூறினான் வீரகுப்தன்.
பெரிய பெளரவன் மெல்ல நகைத்தான்.
“சந்திரகுப்தன் என்னைத் துணைக்கு அழைக்கிறானா அல்லது அவன் ஆதிக்கத்தில் வாழ அழைக்கிறானா?” என்று வினவவும் செய்தான் புன்முறுவலின் ஊடே.
‘வீரகுப்தன் மிகுந்த சாமர்த்தியமாகப் பதில் சொன்னான்.
“சிறு சிறு ராஜ்யங்களாக வட பாரதம் பிரிந்திருப்பதால் அலெக்ஸாண்டர் அரசுகளை உடைக்க முடிந்தது. பெரிய ஒரே சாம்ராஜ்யமாயிருந்தால் அது நடந்திருக்காது. ஆகவே அத்தகைய ஒரு சாம்ராஜ்யம் பாரதத்துக்கு அவசியம் என்று சந்திரகுப்தர் மட்டுமல்ல, சாணக்கியரும் கருதுகிறார்.” என்றான்.
பெரிய பெளரவன் வீரகுப்தன் பேச்சை எண்ணி உள்ளூர மகிழ்ந்தான். ஆகவே, “பதில் நாளை சொல்கிறேன். அதுவரை நீங்கள் மூவரும் இந்த அரண்மனை விருந்தினர்களாயிருக்க வேண்டும்.” என்று சொல்லி அறரியணையிலிருந்து எழுந்திருந்தான்.
வீரகுப்தனும் யூடாமஸும் யவன தூதனும் அரண்மனைக் காவலரால் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். பெரிய தனி அறை ஒன்றில் தங்க வைக்கவும்பட்டனர். பிறகு புரிந்தது வீரகுப்தனுக்கு அந்த அறை தங்கள் சிறையென்பது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
60. பலிக்காத தூது

மகா வீரனும் மேதையுமான பெரிய பெளரவ மன்னன் தூதர்களான தங்களைச் சிறையிலடைப்பானென்று மனத்தினால்கூட எண்ணாத வீரகுப்தன் அந்த அறையிலேயே தங்களுக்கு முக்காலமும் உணவு அளிக்கப்பட்டதையும், தாங்கள் எந்த இடத்திற்குப் போனாலும் தடையேதும் இல்லாவிட்டாலும் நாலைந்து வீரர்கள் தங்களை ஏதுமதியாதவர்களைப் போல் தொடர்ந்து வருவதையும் கண்டதும், உள்ள நிலையை எளிதில் உணர்ந்துகொண்டான்.
அப்படி உணர்ந்துங்கூட அவனும் ஏதுமறியாத பூனைபோல நடந்துகொண்டான். ஒருநாள் பூராவும் பெளரவ மன்னனிடமிருந்து எந்தச் செய்தியோ உத்தரவோ கிடைக்காது போகவே வீரகுப்தனே மன்னரைப் பேட்டி காண விரும்புவதாக அறைக்கு வெளியில் நின்றிருந்த இரு காவலரிடம் தெரிவித்தான். அவன் கோரிக்கையைத் தெரிவிக்க விரைந்த காவலன் வெகு சீக்கிரம் திரும்பி வந்து மன்னர் அவர் மந்திராலோசனை அறையிலிருக்கிறாரென்றும், அங்கேயே அவரைக் காணலாமென்றும் கூறவே, வீரகுப்தன் தனது உடைகளை அணிந்து புறப்படலானான்.
அவனுடன் யூடாமஸும், யவன தூதனும் கிளம்ப முயற்சிக்கவே காவலன் அறிவித்தான், “உங்களிருவரையும் மன்னர் பார்க்க விரும்பவில்லை. தவிர நீங்கள் பேட்டி கேட்கவும் இல்லை. ஆகவே அவர் மட்டும் வந்தால் போதும் என்று.
“நாங்கள் மூவரும் ஒன்றாகத்தான் வந்தோம்.” என்று சுட்டிக்காட்டினான் யூடாமஸ்,
“இருக்கலாம். ஆனால் இப்பொழுது அப்படி வருவதற்கில்லை.” என்று திட்டமாகக் குறிப்பிட்டான் காவலன்.
“வந்த இடத்தில் சர்ச்சை வேண்டாம். மன்னர் உத்தரவை மீறி நடக்கும் நிலையிலும் நாம் இல்லை. இங்கேயே இருங்கள். நான் வந்து நடந்ததைச் சொல்கிறேன்.” என்று கூறிவிட்டுக் காவலனைத் தொடர்ந்தான் வீரகுப்தன்.
பெளரவ மன்னன் வீரகுப்தனைத் தனது அந்தரங்க அலோசனை அறையில் சந்தித்துத் தனக்கு சமானமாக உட்கார ஆசனமும் அளித்தான். வீரகுப்தன் அதில் அமராமலே, “மன்னவா! இப்படி என்னை நடத்துவது தங்கள் பெருமையையும் பண்பாட்டையும் உணர்த்துகிறது. இருப்பினும் நான் தூதன். மன்னருக்கு சரிசமானமாக உட்காரத் தகுதியற்றவன்...” என்று தனது அடக்கத்தைக் காட்டினான்.
பெளரவன் தனது பெரிய மீசைக்குள்ளும் மறைந்து கிடந்த வாயைத் திறந்து பற்களை லேசாகக் காட்டி நகைத்தான். அந்த நகைப்பிலும் ஒரு பெரும் தோரணை இருந்ததைக் கவனித்த வீரகுப்தன், ‘என்ன இருந்தாலும் அலெக்ஸாண்டரை எதிர்த்த ஒரே மன்னனல்லவா இவன்?’ என்று உள்ளூர அவனைப் பாராட்டினான்.
அதை பெளரவனும் உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். ஆகவே புரிந்துகொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான்.
“வீரகுப்தா! சந்திரகுப்தனை சக்கரவர்த்தியென்று நீ சொல்லவில்லை நேற்று?” என்று வினவவும் செய்தான்.
“ஆம் மகாராஜா!” வீரகுப்தன் பதிலில் பணிவும் ஒலித்தது, பெருமையும் ஒலித்தது.
“அப்படியானால் சக்கரவர்த்தியின் அண்ணன் என்னைப் போன்ற சாதாரண மன்னனோடு சரிசமானமாக உட்காருவதில் என்ன தடை?” என்று கேட்டான் பெளரவன்.
பெளரவன் தன்னை ஆழம் பார்க்கிறானென்பதை வீரகுப்தன் புரிந்துகொண்டதால் புன்முறுவல் கொண்டு, “மன்னவா! என் தம்பிதான் சக்கரவர்த்தியே தவிர நான் சக்கரவர்த்தியல்ல. அவனது படைத்தலைவர்களில் ஒருவன். இப்பொழுது தூதன்.” என்று விளக்கினான்.
“ஆனால் நீ மகாவீரன். வீரன் வீரனுக்கருகில் உட்கார என்ன தடை இருக்க முடியும்?” பெளரவன் கேள்வி சர்வ சகஜமாயிருந்தது.
வீரகுப்தன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. மெளனமாக நின்றான் பல விநாடிகள், பிறகு கேட்டான், “இருப்பினும் இந்த நாட்டு விரோதிகளுடன் சமாதானம் செய்துகொண்டிருக்கிறீர்கள். இந்த நாட்டின்மீது படையெடுத்துப் பல அரசுகளை நசுக்கிய அலெக்ஸாண்டரிடம் நட்பு கொண்டீர்கள். இப்பொழுது இந்த நாட்டை ஒன்றுபடுத்த வெளிநாட்டாரை விரட்டிய சந்திரகுப்தனோடு சேர ஏன் மறுக்கிறீர்கள்?” என்று.
பெளரவன் சிறிது சிந்தித்தான். பிறகு தனது கைகளைத் தட்டினான். அதைக் கேட்டு அறைக்குள் வந்த இரு காவலரை நோக்கி, “என் மேலங்கியைக் கழற்றுங்கள்...” என்றான். அவன் உத்தரவுப்படி மேலங்கி கழற்றப்பட்டதும் எழுந்து நின்ற பெளரவன், “வீரகுப்தா! நீயும் வீரன். ஆகையால் என் உடலைப் பார்.” என்று கூறினான்.
ஆறடி உயரத்துக்கு ஆஜானுபாகுவாய் மேல் அங்கியின்றிப் பொன்னைப் போல் மின்னும் உடலுடன் காட்சியளித்த அந்த மகா வீரனைப் பார்த்த வீரகுப்தன் பிரமை பிடித்து நின்றான். பெளரவனுடைய மார்பிலும் தோளிலும் வயிற்றிலும் மொத்தம் ஒன்பது காயங்களின் தழும்புகள் இருந்ததைக் கவனித்த வீரகுப்தன், இந்த ஒன்பது தழும்புகளில் ஏதாவது ஒன்றே ஒருவன் உயிரை மாய்க்கப் போதும் என்று எண்ணினான்.
‘இத்தனையும் மீறி மன்னன் எப்படிப் பிழைத்தான்?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.
வீரகுப்தன் முகத்தில் உதயமான வியப்பைக் கண்ட பெளரவன் முறுவல் செய்தான்.
“நான் மட்டும் இத்தனை காயங்களுக்கு இலக்காகாவிட்டால் போரிட்டே மடிந்திருப்பேன். அது மட்டுமல்ல வீரகுப்தா! ஜீலம் நதிக்கரைப் போரில் எனது பிள்ளைகள் இருவரும் போரிட்டே மடிந்தார்கள். அதற்கே நான் இறந்திருக்க வேண்டும். இறந்தும் இருப்பேன். அதற்கு இடம் கொடுக்கவில்லை அலெக்ஸாண்டர். என்னை சரிசமானமான சக்கரவர்த்தி போல நடத்தினான். என் காயங்களுக்கு அவனது கூடாரத்திலேயும் சிகிச்சை நடந்தது.
அவன் நட்புக் கரத்தை உதற முடியவில்லை என்னால். என் நாட்டைத் திருப்பிக் கொடுத்தான். அது மட்டுமல்ல. அவன் ஏற்கனவே வெற்றி கொண்ட நாடுகளுக்கும் தலைவனாக்கினான். ஒரு விதத்தில் என்னைப் பஞ்ச நதி பிராந்தியத்தின் சக்கரவர்த்தியாக்கிச் சென்றான். இப்பொழுது என்னை சந்திரகுப்தன் அடிமையாக்கப் பார்க்கிறான். யார் பக்கம் நான் இருக்கட்டும்? என்னை உயர்த்தின அலெக்ஸாண்டர் பக்கமா என்னை அடிமையாக்க முயலும் சந்திரகுப்தனிடமா?” என்று கேட்ட பெளரவ மன்னன் முடிவையும் சொன்னான்.
“சொல் சந்திரகுப்தனிடம், அவனது நாடோடிக் கொள்ளைப் படைக்கு நான் தலைவணங்க மாட்டேனென்று. ஒரு முறை கொண்ட நட்பை முறிக்க நான் அசத்தியவானல்ல என்றும் சொல்...” என்ற பெளரவன் மீண்டும் தனது ஆசனத்தில் அமர்ந்தான்.
“வருகிறேன் மன்னவா! நாம் அடுத்து சந்திப்பது போர்க்களத்தில் தானிருக்கும்.” என்று கூறித் தலை வணங்கினான் வீரகுப்தன்.
“போய் வா வீரகுப்தா. ஆனால் உன்னுடன் வந்த இரண்டு அயோக்கியர்களும் என்னுடனிருக்கட்டும்.” என்றான் பெளரவன்.
வீரகுப்தன் புருவங்கள் எழுந்தன கேள்வி கேட்பன போல்.
“வீரகுப்தா! அலெக்ஸாண்டர் உத்தரவுப்படி இந்த நாட்டிலுள்ள யவனர்கள் என் உத்தரவுக்குப் பணிய வேண்டும். அவர்களை நான் காக்க வேண்டும்.” என்று பதில் சொன்னான் பெளரவன்.
“அலெக்ஸாண்டர்தான் இறந்துவிட்டாரே?” வீரகுப்தன் வினவினான் சந்தேகக் குரலில்.
“சிலர் ஆணை, இறந்த பின்னும் இருக்கும். சிலர் ஆணை, அவர்கள் இருக்கும்போதே போய்விடும்...”
“இப்பொழுது அலெக்ஸாண்டர் ஸ்தானத்தில் ஸெலூகஸ் இருக்கிறார்...”
“அவர் ஸ்தானத்துக்கு யாரும் வர முடியாது. உன்னுடன் வந்திருக்கும் ஸெலூகஸின் தூதனையும் நான் நம்பவில்லை. யூடாமஸையும் நான் நம்பவில்லை.” இதைத் திட்டமாக அறிவித்த பெளரவ மன்னன் வீரகுப்தன் போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையால் சைகை செய்தான்.
அங்கிருந்து வெளி வந்த வீரகுப்தன் தனது அறைக்கு வந்து தனது மாற்று உடைகளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டான்.
“எங்கே புறப்படுகிறாய் வீரகுப்தா?” என்று வினவினான் யூடாமஸ் சந்தேகத்துடன்.
“வந்த இடத்துக்குப் போகிறேன்.” வீரகுப்தன் பதிலில் இகழ்ச்சி கலந்திருந்தது
“நமது தூது...” யூடாமஸின் குரலில் இம்முறை சந்தேகம் பெரிதாக ஒலித்தது.
“எனது தூது என்று சொல்வது பொருந்தும்...” வீரகுப்தன் பதிவில் விஷமம் ஒலித்தது.
“சரி, அதற்கென்ன?”
“பலிக்கவில்லை.”
“தூது பலிக்கவில்லையா?”
“இல்லை...”
“அப்படியானால் நாங்களும் வரவேண்டியதுதானே?”
“அதுதான் இல்லை. பெளரவர் இன்னும் சில நாட்கள் உங்களை வைத்து உபசரிக்க விரும்புகிறார்...”
“உன்னை?”
“நாடு கடத்திவிட்டார்.”
இதை நம்பவில்லை யூடாமஸ்.
“வீரகுப்தா! பெளரவன் கையில் எங்களைத் தள்ளிவிட்டுப் போகாதே.” என்று கெஞ்சினான்.
அவன் சொன்ன எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் கிளம்பினான் வீரகுப்தன். அவனைத் தொடர முயன்ற இரு யவனர்களையும் காவலர் தடுத்தனர். அவர்களில் ஒருவன் சொன்னான், “உங்களுக்கு வேறு இடம் தருகிறோம் பகல் உணவிற்குப் பிறகு.” என்று. பகல் உணவிற்குப் பிறகு இருவரும் அரண்மனைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
அவர்கள் நிலையைப் பற்றிக் கவலைப்படாத வீரகுப்தன் தனது புரவியை விரைவாகச் செலுத்தி ஜீலம் நதியைத் தாண்டி தக்ஷசீலத்தை அடையுமுன்னால் அவனை நோக்கி வந்த ஒரு படைப் பிரிவின் தலைவன், “இதோ அவரே சிக்கிவிட்டார்...” என்று கூற, சுமார் இருபது வீரர்கள் வீரகுப்தனைச் சுற்றிக்கொண்டார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
61. சத்திரத்து மர்மம்

பெளரவன் தலைநகரிலிருந்து கிளம்பிய நிமிடத்திலிருந்து, ஏற்கனவே ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும், இனி நேரிடக்கூடிய விளைவுகளையும் எடைபோட்டுக் கொண்டு தீர்க்க சிந்தனையில் இறங்கிவிட்டதன் காரணமாக எதிரே ஒரு படைப் பிரிவு வந்ததை அறவே கவனிக்காத வீரகுப்தன், அந்தப் படை வீரர் தன்னைச் சூழ்ந்துகொண்டதும் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமலும் வாளின் மீதுகூட கையை வைக்காமலும் ஏதும் பேசாமலும் புரவிமீது செங்குத்தாக விறைத்து உட்கார்ந்துகொண்டே இருந்தான்.
அவனை வளைத்துக் கொண்ட படைப் பிரிவின் தலைவனே முதலில் பேசத் துவங்கி, “தாங்கள்தான் வீரகுப்தராயிருக்க வேண்டும்...” என்றான் மெதுவாக.
தலைவனின் குரலிலிருந்த மரியாதையைக் கண்ட வீரகுப்தன், “ஆம், நான்தான் வீரகுப்தன். தாங்கள் யார் என்பதைச் சொல்லலாமா?” என்று வினவினான் வறட்சியாக ஒலித்த குரலில்.
வந்தவன் பதில் சர்வசாதாரணமாயிருந்தாலும் வீரகுப்தனைத் தாக்கிப் போடச் செய்தது.
“தங்கள் உபதளபதி.” என்று பதில் சொன்னான் படைப் பிரிவின் தலைவன்.
“என் உபதளபதியா?” வியப்பும் அவநம்பிக்கையும் ஒலித்தது வீரகுப்தன் கேள்வியில்.
“ஆம் பிரபு!” தலைவன் இப்படிச் சொல்லி தலையையும் வணங்கினான்.
“என் உபதளபதிகளை நான்தான் நியமிப்பது வழக்கம்...” என்றான் வீரகுப்தன்.
அதில் தொனித்த சந்தேகத்தைக் கவனிக்கவே தலைவன் புன்முறுவல் கொண்டு, “தாங்கள் சொல்வது பழைய வழக்கம்...” என்றான்.
“இப்பொழுது புது வழக்கம் ஏற்பட்டிருக்கிறதா?” வீரகுப்தன் கேள்வி மேலுக்கு சாதாரணமாயிருந்தாலும் உள்ளூர இகழ்ச்சி தெரிந்தது அதில்.
“ஆம் தளபதி.”
“யார் ஏற்படுத்தியது புது வழக்ககத்தை?”
“சக்கரவர்த்தி...”
“எந்த சக்கரவர்த்தி?”
“பாரதத்தில் இப்பொழுது இருப்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரே சக்கரவர்த்தியின் பெயர் தான்...”
“அந்தப் பெயர்?”
“சந்திரகுப்த மெளரியர்...”
இதைக் கேட்டதும் பெரு வியப்புக்குள்ளான வீரகுப்தன், “யார்? சந்திரகுப்தரா?” என்று கேள்விகளைத் தொடுத்தான்.
“ஆம் தளபதி.” தலைவன் பதிலில் பெரும் மரியாதை தெரிந்தது. தளபதி என்ற சொல்லைச் சொன்ன போதெல்லாம் அவன் தலையையும் அளவுக்கதிகமாக வணங்கச் செய்தான்
“எல்லோருக்கும் உபதளபதிகளை சக்கரவர்த்தியே நியமிக்கிறாரா?”
“ஆம் ஆனால் யாரை நியமிக்க வேண்டுமென்று உத்தரவிடுவது குருநாதர்...”
“எந்த குருநாதர்?”
“கெளடில்யர், எல்லோர் வணக்கத்துக்கும் உரிய சாணக்கியர்.” என்ற தலைவன் குருநாதர் பெயரை உச்சரித்த போதும் தலையை வணங்கினான்.
அதற்குமேல் விவாதத்தில் இறங்க விரும்பாத வீரகுப்தன், “உன் பெயரென்ன?” என்று வினவினான்.
“சமரகுப்தன்.” என்ற தலைவன், “அடியவன் தங்களுக்கும் உறவினன். ஆகையால்தான் கெளடில்யர் தங்களுக்கு உபதளபதியாக என்னைத் தேர்ந்தெடுத்தார்.” என்றும் தெரிவித்துக்கொண்டான்.
வீரகுப்தன் தனது உபதளபதியை உற்றுநோக்கினான். தன்னைச் சூழ்ந்து நின்ற வீரர்களையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தான். சமரகுப்தன் கண்களில் ஏதோ ஒருவித சலனமிருப்பது தெரிந்தது வீரகுப்தனுக்கு. அவன் சொன்ன விஷயங்கள் உண்மை போலத் தோன்றினாலும் அதில் முக்கால்வாசி பொய் என்பதை சந்தேகமறப் புரிந்து கொண்டாலும் அதை வெளிக்குக் காட்டவில்லை வீரகுப்தன்.
‘இந்த வீரர் படை என்னைத் தேடுவதற்காக அனுப்பப்பட்டிருந்தால் நடந்துகொண்டிருக்க வேண்டிய முறையே வேறு. தூரத்திலேயே நின்று தலைவன் மட்டும் என்னை நோக்கி வந்திருக்க வேண்டும். வீரர்களைக் கொண்டு என்னைச் கூழ்ந்துகொள்ள அவசியமில்லை. இதில் ஏதோ பெரும் சூது இருக்கிறது.’ என்று தனக்குள் எண்ணமிட்ட வீரகுப்தன், “சமரகுப்தா!” என்று அழைத்தான்.
“தளபதி!” பணிவுடன் வந்தது பதில்.
“நீ எனக்கு உபதளபதியாகக் கிடைத்தது எனது அதிர்ஷ்டம்.” என்றான் வீரகுப்தன் விஷமமாக.
“எனக்குத் தாங்கள் தளபதியாகக் கிடைத்தது அதிர்ஷ்டமல்லவா?” என்றான் சமரகுப்தன்...
அவன் தன்னைப் பாராட்டுகிறானா, ஏளனம் செய்கிறானா என்பதைப் புரிந்துகொள்ள முடியாத வீரகுப்தன், “நாம் இருவருமே அதிர்ஷ்டசாலிகள்.” என்று கூறிவிட்டு, “சரி, போவோம். வழியைக் காட்டு.” என்று தனது புரவியை நடத்தினான்.
சமரகுப்தனும் தனது புரவியைத் திருப்பிக்கொண்டு வீரகுப்தனுக்குப் பின்னால் செல்ல, இருவரையும் இரு பக்கங்களிலும் அணைத்தபடி மற்ற வீரர்கள் அணிவகுத்துத் தனக்கு மரியாதை காட்டுவதைப் போலிருந்தாலும் உண்மையில் தன்னைத் தப்பவிடாதிருக்கவே அந்த ஏற்பாடென்றும், பின்னால் வரும் உபதளபதி எந்த விநாடியிலும் தன் முதுகில் வாளைப் பாய்ச்சலாமென்றும் உணர்ந்துகொண்டாலும் அதைப்பற்றி லட்சியம் செய்யாமலும் ஒருமுறைகூடத் திரும்பிப் பார்க்காமலும் பயணம் செய்தான்.
அன்று முழுவதும் பயணம் செய்து மாலை நேரத்தில் தக்ஷசீலத்துக்குச் செல்லும் பாதை பிரியுமிடத்திற்கு வந்ததும் சமரகுப்தன் சற்று முன்னால் வந்த வீரகுப்தனை வணங்கி, “தளபதி! நமது வீரர்கள் இரண்டு நாட்களாக தங்களைத் தேடி அலைந்ததாலும் தொடர்ச்சியான பயணத்தாலும் அலுத்திருக்கிறார்கள். இன்றிரவு மட்டும் அவர்கள் இளைப்பாற அனுமதித்தால் நல்லது.” என்று விண்ணப்பித்துக் கொண்டான்.
வீரகுப்தன் அக்கம் பக்கத்திலிருந்த வீரர்களைக் கவனித்தான். அவர்கள் முகத்தில் உண்மையாகவே களைப்பு தெரிந்த காரணத்தால் சமரகுப்தன் சொல்லுவதில் தவறில்லையென்ற முடிவுக்கு வந்து, “சரி, அப்படியே செய்வோம்.” என்று கூற சமரகுப்தன் தளபதிக்கு நன்றி தெரிவித்து, “தாங்கள் இங்கேயே வீரர்களோடு தங்கினால் நான் அதோ தெரியும் ஊருக்குள் போய் இரவைக் கழிக்க ஏதாவது சத்திரமிருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்.” என்று கூறிவிட்டு தளபதியின் சம்மதத்துக்காகக் காத்திராமல் புரவியைத் தட்டிவிட்டான்.
வீரகுப்தனும் அவன் போவதை சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வீரர்களை நோக்கி, “உபதளபதி வரும் வரையில் பக்கத்துத் தோப்பில் தங்குவோம்.” என்று உத்தரவிட்டு அந்தத் தோப்பை நோக்கிப் புரவியை நடத்தினான். மற்ற வீரர்களும் அவனைச் சூழ்ந்து வர அந்தப் படைப் பிரிவு தோப்புக்குள் நுழைந்தது.
தோப்பு தோப்பாக இல்லாமல் காடாக இருந்தது. பெரிய பெரிய மரங்கள் பஞ்ச நதி தீரத்தின் செழிப்பால் மிக அடர்த்தியாக இருந்தன. மாலைச் சூரியனின் கிரணங்கள் கூட அதிகமாகப் புக முடியாத அளவுக்கு மரங்கள் செடிகொடிகள் அடர்த்தியாக இருந்ததன்றி, ஆங்காங்கு பாம்புப் புற்றுகளும் பயங்கரமாகக் காட்சியளித்தன.
இத்தனை பயங்கரத்தைப் பற்றியும் லட்சியம் செய்யாத வீரகுப்தன், அந்தத் தோப்புக் காட்டுக்குள் புகுந்து கிட்டத்தட்ட அதன் நடுவுக்கு வந்து புரவியிலிருந்து இறங்கி அதன் முதுகில் சேணத்தைப் போட்டு அதன் பின்பகுதியில் ஒரு தட்டுத் தட்ட அந்தப் புரவி தோப்புக்குள் சென்று சில விநாடிகளில் மறைந்துவிட்டது. அதைத் தொடரப்போன வீரன் ஒருவனை கையின் சைகையால் தடை செய்த வீரகுப்தன், “அதைத் தொடாதே. எங்கும் போகாது. மேய்ந்துவிட்டு தானே வரும்.” என்றான். பிறகு அங்கிருந்த பெரிய மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு, “யாரிடமாவது மது இருக்கிறதா?” என்று கேட்டான்.
அதற்குள் தங்கள் புரவிகளிலிருந்து இறங்கிய வீரர்களில் ஒருவன் தன்னிடமிருந்த மதுக்குப்பியொன்றை நீட்ட அதிலிருந்து சிறிது மதுவை அருந்திய வீரகுப்தன், “உபதளபதி வந்ததும் என்னை எழுப்புங்கள்.” என்று கூறிவிட்டு அலுப்பினால் பெருமூச்சு விட்டு மரத்தின்மீது சாய்ந்து கண்களையும் மூடினான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவன் நன்றாக உறங்கிவிட்டதை ஒரே சீராக வந்த அவனது மூச்சிலிருந்தே புரிந்துகொண்ட வீரர்களிலொருவன், “இவர் மிகவும் அலுத்திருப்பதாகத் தெரிகிறது.” என்றான்.
அதைக் கேட்ட மற்றவர்கள் புன்முறுவல் கொண்டார்கள். ஏதோ காரணமாகத் தலையையும் அசைத்தார்கள். இருள் மெள்ள மெள்ளக் கவியலாயிற்று. காட்டின் பயங்கரத்தை அதிகப்படுத்த காட்டுப்பன்றி, கடம்பை ஆடு முதலிய துஷ்ட மிருகங்களின் ஒலிகளும் கேட்கத் தொடங்கின. சற்று எட்ட இருந்த பெரிய புற்றிலிருந்து, “புஸ்...” என்று சத்தம் கேட்கவே இரு வீரர்கள் காட்டுச் சுள்ளிகளை எடுத்துக் கற்களை எடுத்துத் தட்டிப் பற்ற வைத்து சுள்ளிகளை பந்தங்களாக மரத்தின் கிளைகளில் கட்டியதால் சிறிது வெளிச்சமும் காட்டின் இருளைக் கிழித்தது.
நாழிகைகள் ஓடிக்கொண்டிருந்தன. நீண்ட நேரமாகியும் சமரகுப்தன் திரும்பவில்லை. அதைப்பற்றி வீரர்கள் கவலைப்பட்டாலும் வீரகுப்தன் கவலை ஏதுமின்றி மரத்தில் சாய்ந்த வண்ணம் கால்களை நன்றாக நீட்டி உட்கார்ந்த நிலையிலேயே உறங்கலானான்.
முதல் ஜாமம் சற்று ஏறியபின்பே திரும்பிய சமரகுப்தன், ஆங்காங்கு வீரர்கள் அசட்டையாக உட்கார்ந்து இருந்ததையும், வீரகுப்தன் உறங்குவதையும் கவனித்து முகத்தில் உஷ்ணத்தைக் காட்டினான். பிறகு அதை மறைத்துக்கொண்டு, “தளபதி! தளபதி!” என்று இருமுறை அழைத்தான்.
தளபதி மெதுவாகக் கண்களைத் திறந்தார்.
“யார் எழுப்புவது என்னை?” என்று சீறவும் செய்தார்.
“தளபதி! நான்தான், தங்கள் உபதளபதி.” என்றான் சமரகுப்தன்.
“அதற்குள் பொழுது விடிந்துவிட்டதா? இப்பொழுது தானே கண்ணை மூடினேன்?” என்ற வீரகுப்தன் மிரள மிரள விழித்தான் சமரகுப்தனை நோக்கி.
“தளபதி நன்றாக விழித்துக்கொள்ளுங்கள். இப்பொழுது தான் முதல் ஜாமம். சத்திரம் ஏற்பாடு செய்துவிட்டேன். சரியான இடம் கிடைக்காததால்தான் நான் வர சிறிது நேரமாகிவிட்டது. சத்திரத்தில் தாங்கள் நீராடி, உணவருந்தி உறங்கலாம். சகலத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன்...” என்றான் சமரகுப்தன்.
வீரகுப்தன் தனது கண்களை நன்றாகத் துடைத்துக் கொண்டு தனது விகார முகத்தைச் சிறிது சுளித்து மேலும் விகாரப்படுத்திக் கொண்டான்.
“ஆம் ஆம். இப்பொழுது புரிகிறது. நீ இடம் தேடப் போனாய். நான் மூன்று நாட்களாகத் தூங்காத அலுப்பால் என்னையும் மீறி உறங்கிவிட்டேன்...” என்று கூறிய வண்ணம் எழுந்து நின்று கைகளை இருமுறை தட்டவே அவனது புரவி காட்டுக்குள்ளிருந்து ஓடி வந்தது.
அப்பொழுதும் அதன்மீது சேணத்தின் கயிறுகள் வீரகுப்தன் போட்டபடி இருந்ததைக் கண்ட வீரர்கள் பிரமித்தனர். அந்தப் புரவியும் அவர்களைப் பார்த்து நகைப்பதைப்போல் பற்களை நன்றாகத் தெரியக் காட்டி கனைத்தது. அதைத் தட்டிக் கொடுத்து வீரகுப்தன் அதன்மீது ஏறிக்கொள்ள மற்ற வீரர்களும் தம் புரவிகளில் ஏறி தளபதியையும் உபதள பதியையும் சூழ்ந்து வர, ஏதோ மகாராஜனின் ஊர்வலம் போல் அந்தப் படைப் பிரிவு ஊருக்குள் நுழைந்தது. ஊர் சற்று பெரிதாகவே இருந்ததால் நாலைந்து தெருக்களைத் தாண்டி பெரிய வீதியிலிருந்த சத்திரத்துக்குப் படைப்பிரிவு வந்து சேர்ந்தது.
சத்திர வாயிலில் சமரகுப்தன் இறங்கியதும் அவனையும் வீரகுப்தனையும் சத்திர அதிகாரிகள் மூவர் வரவேற்றனர். அவர்களில் சற்று உயரமாயிருந்தவன் மற்றவர்களை வீரகுப்தனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“இவர்தான் சத்திரம் கட்டிய பிரபு. இவர் கணக்கு வைப்பவர். நான் பொது நிர்வாகி.” என்று அவர்களையும் அறிமுகப்படுத்தித் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“தங்கள் வரவால் இந்த சத்திரம் இன்று புனிதமாகிறது. அர்த்த சாஸ்திரியானmகெளடில்யரின் சீடர்கள் கால் வைக்கும் இடங்களில் பணம் கொழிக்கும் என்று சொல்கிறார்கள். அது பொய்யல்ல. இதே சத்திரத்தில்mகெளடில்யர் ஒருநாள் தங்கினார். அன்றுமுதல் இதற்கு எந்தவித குறைவும் இல்லை. இன்று அதே அறையை அவருடைய சீடரான தங்களுக்கு ஒழித்து வைத்திருக்கிறோம்...” என்று கூறிய சத்திரத்து நிர்வாகி வீரகுப்தனை உள்ளே அழைத்துச் சென்றான்.
சமரகுப்தனும் வீரகுப்தனைத் தொடர்ந்தான். மற்ற வீரர்களைக் கணக்கர், சத்திரத்தின் பின்புறம் அழைத்துச் சென்றார்.
வீரகுப்தனுக்கு விடப்பட்ட அறை மிக விசாலமாயிருந்தது. சகல செளகர்யங்களும் இருந்தன அந்த அறையில். சமரகுப்தனுக்கு அடுத்த அறை ஒழித்துவிடப்பட்டிருந்தது.
“உபதளபதியும் என்னுடன் தங்கலாமே.” என்றான் வீரகுப்தன்.
“இந்த அறையில் யாரையும் அனுமதிப்பது கிடையாது. தாங்கள் குருநாதரின் சீடராதலால் பொது விதிக்கு விலக்கு.” என்று திட்டமாக அறிவித்தான் சத்திரக்காரன்.
சமரகுப்தனும், “தளபதி! நான் அடுத்த அறையில் இருக்கிறேன். தேவையானால் ஒரு குரல் கொடுத்தால் ஒடி வருகிறேன்.” என்று கூறிவிட்டுச் சத்திரக்காரனுடன் சென்றான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் சத்திர நிர்வாகி வந்து, “தாங்கள் நீராட வேண்டுமானால் வரலாம்.” என்றான்.
வீரகுப்தன் நீராடி மீண்டும் அறைப் பஞ்சணையில் உட்கார்ந்ததும் ஒரு பெரிய தட்டில் உணவும், மதுவும் வைத்துப் பெரிய இலையொன்றையும் சுருட்டி வைத்து பஞ்சணையில் வைத்துப் பரிமாறாமல் நின்றான் சத்திரக்காரன்.
வீரகுப்தன் தானே பரிமாறிக்கொள்ளலாமென்று சுருட்டி வைக்கப்பட்டிருந்த இலையைப் பிரித்தான். இலையைப் பிரித்தவன் அதில் உணவை எடுத்து வைக்கவில்லை. நகத்தால் இலையில் கீறப்பட்டிருந்த இரு வரிகளைக் கவனித்தான்.
“எச்சரிக்கை. இன்றிரவு தங்களைக் கொல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.” என்ற வரிகளைக் கண்ணுற்ற வீரகுப்தன் சத்திரக்காரனை ஏறெடுத்து நோக்கினான்.
சத்திரக்காரன் சிலையென நின்றான் இமையைக்கூட அசைக்காமல். வீரகுப்தன் தனது கையில் எடுத்த இலையைக் கிழித்தான் நார் நாராக.
“இந்தக் கிழிந்த இலையைத் தவிர வேறு இலை இல்லையா? வேறு இலை கொண்டு வா.” என்று கூவினான் எரிச்சலுடன்.
சத்திரக்காரன் அப்பொழுதுதான் புன்முறுவல் செய்தான். இந்த இலைக் கிழிசல்களை எடுத்துக்கொண்டு போய் சிறிது நேரத்துக்குள் வேறு இலையுடன் திரும்பினான். இம்முறையும் இலை சுருட்டப்பட்டிருந்தது. அதைக் கொடுத்தவுடன் சத்திரக்காரன் அங்கு நிற்காமல் திரும்பிச் சென்றுவிட்டான்.
சுருட்டிய இலையைப் பிரித்தான் வீரகுப்தன். அதில் மிக மெல்லியதான நீளமான கத்தியொன்று இருந்தது. அது பயங்கர ஆயுதம் என்பதைப் புரிந்துகொண்ட வீரகுப்தன் அதைத் தலையணையின் கீழ் பத்திரப்படுத்திவிட்டு உணவை அருந்தி முடித்து, “யாரங்கே?” என்று கூவ ஒரு பணியாள் வந்தான். தட்டை எடுத்துக்கொண்டு போக அவனைப் பணித்த வீரகுப்தன் பஞ்சணையை நன்றாகத் தட்டிப் போட்டுப் படுத்தான். அவன் வலதுகை மட்டும் தலையணையின் கீழிருந்த அந்த மெல்லிய கத்தியைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தது.
நாழிகைகள் ஓடின. நடுநிசி தாண்டியும் எந்த அரவமும் காணோம். கொலை முயற்சி சத்திரக்காரனின் வீண் பிரமையாயிருக்குமோ என்று வீரகுப்தன் எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த அறைக்கதவு மெதுவாகத் திறந்தது. ஒரு உருவம் ஓசைப்படாமல் நுழைந்தது. நுழைந்தவன் சமரகுப்தனல்ல.
நுழைந்தவன் யாரென்பதை விளக்கொளியில் கண்ட வீரகுப்தன் பெரு வியப்படைந்தான். அதனால் தனது வலது கை தடவிக்கொண்டிருந்த மெல்லிய கத்தியையும் எடுக்கவில்லை. வருகிறவன் அருகில் வரட்டும் என்று காத்திருந்தான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top