வில்லனின் வீணையவள் -இறுதி அத்தியாயம் 1&2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

Author
Author
SM Exclusive Author
Joined
May 24, 2018
Messages
913
Reaction score
2,496
Points
93
Age
31
Location
Sri lanka
வில்லனின் வீணையவள் கதை இன்றோடு நிறைவு செய்கிறேன்...
இதுவரை என்னுடையதாமதமான பதிவுகளுக்காக காத்திருந்து படித்தமைக்கு அன்பின் நன்றிகள்.கதை படித்து உங்கள் கருத்துக்களோடு இணைந்திடுங்கள்.
Happy Reading...

இறுதி அத்தியாயம் 1மற்றும் 2 பதிவிட்டுள்ளேன்

மூன்றாவது பகுதி பிற்பகல் பதிவிடுகிறேன்...

//இறுதி அத்தியாயம் 1//"நிழலைத் தீண்டவே
அஞ்சும் மித்ரா...

என்..நிஜத்தோடு நீ
விளையாடியதை...
எப்படிச் சொல்வேன்...

ஒரு வேலை
நினைவுப் பரணில்...
அது ஞாபகமாய்
வெளிப்பட்டால்...

உளிபட்ட இதயம்
உன் இதயமாகாதா?

உன்னை வெறுத்து
ஓட நினைப்பதாய்
என்னும் அபராதம் வேண்டாம்...

உன் கண்ணோக்கும் எனக்கு
விபரீதம் தாண்டா??


என்றும் உன் காதலின்
படியில் நம் வாழ்க்கை


உன் மறதியின்
பிடிதான் தீர்மானிக்கும்
அதன் போக்கை...

அன்புடன்
உன் மீட்டலை
வேண்டும்...
உன் வீணை"//இறுதி அத்தியாயம் 2//

"கிளிகளின்
காதல்..
கிளைகள்(உறவினர் - கிளை) அறியும்!!

பூவின்..
தென்றல்..
வருட்டல்..

இரசிப்பவர்கள் அறியாத
காதலா??

அழகிய ஓவியம்.
பாயும் அருவி
பால் வண்ண நிலா
ஆண்டு கடந்த சிற்பம்
போலத்தான்..

இருவர் செய்யும்
பண்பான நேசமும்..
பாரால் போற்றப்படும்..
கலையாய் ஏற்றப்படும்..

இந்த வீணையை மீட்ட
விரல்கள் இவன்தான்
என உற்றார் உறவினர்
பெற்றோர் முனைந்தன.

ஆனால்..

தனை மீட்டிடத் துடிக்கும்
வீணையின் கண்கள்..
காயா நனைந்தன.

காதல் இல்லையோ??
இல்லை...
பெருங்காதல் ❤

அதனால் தான்...
பேசாப் பொருளில்...
பேசிக் கரைந்தன
கண்கள்!!

வீராவோ...
வில்லனோ...
மித்ரனோ...
அவளுக்கு ...
இவன்தான்...
அன்பெனும் நோய்...
இன்னொரு தாய்...

விடவும் இயலாமல்
விலகவும் முடியாமல்...
நெருங்கவும் முடியாமல்...
நொறுங்கினால் அவள்...
ஆகினால் ஆயிரம் துகள்...


அவன் ஒரு விரல் தொட்டு
நாடி உயர்த்த...
குனிந்த தலை நிமிர்ந்தது...
குளம் போல கண் நிறைந்தது...

மறுகணம் சாய்ந்தாள்...
அவன் நெஞ்சம்...
அவள் சாயக் காத்திருந்த
மயிர் மஞ்சம்...

இந் நொடி போதும்
எனக் கெஞ்சும்...

இனி அந்த வீணை
அவ்வில்லனிடம்...
தஞ்சம்.❤"
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top