• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விழியில் உன் விழியில் 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Joined
Jun 18, 2019
Messages
38
Reaction score
55
Location
Coimbatore
இளமதி சகுந்தலா வை காண சென்றாள். கொஞ்சி பேசும் கிளியோ என பச்சை பட்டில் அழகுற இருந்தாள். சகுந்தலா அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீ யை காண சென்றார்...

அதற்க்குள் மணப்பெண் க்கு அலங்காரம் செய்ய பார்லரில் இருந்து ஆள் வந்து விட... மதியை ஜெய்ஸ்ரீ யின் பக்கத்திலேயே இருக்க சொல்லி விட்டு சென்றார்...

யோசனையுடன் இருந்த மதி யை பார்த்த ஸ்ரீ...

"அழ்ந்த யோசனையா இருக்கு... என்ன விசயம் மதி.."

" ஆதி ய பார்த்தேன்... அவனுக்கு சுத்தமா என்னை நியாபகம் இல்ல... அதான்... அவனும் பாக்க முன்ன மாதிரி இல்ல.. ஆளே ஓஞ்சு போய் இருக்கான். என்ன ஆச்சு"

"அது ஒரு பெரிய கதை... உன்ன பாத்து எத்தனை வருஷம் ஆச்சு...
எனக்கே உன்ன அடையாளம் தெரியல... அவனுக்கு மட்டும் எப்படி தெரியும்.. அதிலும் அவன் முன்ன மாதிரி இருந்தா பரவாயில்ல இப்பஅவன் நிலைமையே வேற... இனிமே இங்கதான இருக்க போற.... சொல்றேன்"

என கூறிவிட்டு மேக்கப் செய்ய தன் முகத்தை பார்லர் பெண்ணிடம் காட்டினாள்...

மதி அமைதி ஆகிவிட்டாள்..

அன்று முழுவதும் யோசனையில் தான் இருந்தாள்.. தன்னை சுற்றி சுற்றி முதல் நாள் தான் பார்த்த மாதிரியே தன்னை யோசனையுடன் பார்த்த ஆதியை கண்டு கொள்ளாமல் இருந்தாள்..

இப்ப ஆதி கடுப்பு ஆகிட்டான்..பேசாம இருந்தவன பாத்துட்டே இருந்தா.. இப்ப கண்டுக்க மட்டேங்குறா.. என்ன டிசைன் டா இவ. யாரு இவ மண்டைய பிச்சுகிட்டான்..

மணவரைல அவ இருந்தான்னு இவன் நகரல.மத்த வேலைகளை அருளை பாக்க சொல்லிட்டு பலியா அங்கயே நின்னான். மதிக்கு ஆதி நிக்கறது தெரிஞ்சாலும் அவன் இருக்கற திசை பக்கமே திரும்பல..

அருள் போன் பண்ணாண்... டேய் மச்சி என்ன தாண்டா பண்ற காலைல இருந்து என்னமோ பெவிக்கால் போட்டு ஒட்ட வைச்ச பொம்மை மாதிரி மேடைலயே நிக்குற.. இந்த வேலையெல்லாம் எனக்கு தலையும் புரியல வாலும் புரியல...

ஏற்பாடு பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு இப்ப என்னை பாக்க சொன்னா எனக்கு என்னடா தெரியும்"

" டேய் இங்க முக்கியமான வேலை... முகூர்த்தம் முடிஞ்சதும் நானே வந்துடறேன்...அது வரைக்கும் நான் சொல்றத மட்டும் செய்.. "

" அப்படி என்ன முகூர்த்தம் வரைக்கும் முக்கிமான வேலை அந்த பச்சை சேலை பொண்ணுக்கு தாலி கட்ட போறியா என்ன? காலைல இருந்து முறைச்சு பாத்துகிட்டே நிக்குற... அதுதான் உன்ன கண்டுக்க மாட்டேங்குறாள்ள அப்புறம் என்ன இறங்கி வா.. "

" ஹிஹிஹி பாத்துட்டியா.. "

" டேய் உன்னதான் பெரிய ஸ்கரீன்ல மண்டபமே பாக்குதே... நான் பாக்க மாட்டேனா.. கொஞ்சம் தள்ளி நின்னாவது பாருடா... தாமு அப்பா கண்ல மாட்டிராத... "

" அய்யய்யோ... இந்த போட்டோகிரஃபர் மாப்பிள்ளைய விட்டுட்டு என்னை ஏன்டா போகஸ் பண்றான்... "

" பட்டு வேட்டி சட்டை போட்டு நீயும் மாப்பிள்ளை மாதிரி இருக்கியா அதான்... யாருடா இவன்.... மாறனுக்கு பக்கத்துலயே நின்னா நீயும் தான தெரியுவ... மரியாதையா இங்க வந்து சமையல் வேலை கரெக்டா நடக்குதா பாரு... இல்லைனா நான் கிளம்பி போய்டுவேன். சொல்லிட்டேன்.."

"சரி சரி வரேன் இரு.. "

வரேன்னு சொல்லிட்டு அப்பவும் அங்கயே நின்னு மதியையே பார்த்தான்..
ஐயர் பொண்ண அழைச்சுட்டு வர சொல்ல... போகும் போது திரும்பி இவன முறைச்சு பாத்துட்டு... போனா...

என்னதான் நடக்குது நம்மளுக்கும் ஒரே கன்ப்யூசனா இருக்கு... சரி முதல்ல கல்யாணம் முடியட்டும் பின்ன யாரையாவது புடிச்சு விசாரிப்போம்...

இவள பாத்துட்டு இருந்தா இனி வேலைக்கு ஆகாதுன்னு அவனும் அங்க இருந்து நகர்ந்துட்டான்...

முகூர்த்தம் முடிஞ்சு... பொண்ணு மாப்பிள்ளை மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்ப, ஆதியும் அவர்களுடன் சென்றான்.
மதி உறவினர்களை கவனிக்க வேண்டி அங்கேயே இருந்தாள். மதிய விருந்து எல்லோரையும் அழைத்து சாப்பிட வைத்தாள். அருளும் அங்கேயே இருந்தான்.விருந்து முடிய மணமக்கள் இன்னும் வராததல் அருளிடம் பேச்சு குடுத்தாள் மதி..

"அண்ணா, உங்களுக்கும் என்னை அடையாளம் தெரியலையா..."

அவன் தலையை சொரிந்து இல்லையே என உதட்டை பிதுக்க

"நான் தான் இளமதி...
நீங்க எல்லாரும் என்னை வாலுமதி ன்னு கூப்பிடுவிங்களே மறந்துட்டீங்களா"

"ஏஏஏயய்ய்...வாலுமதியா நீ..அப்ப உன் வால நீ இன்னும் ஆதி கிட்ட நீட்டலையா"

" அதெல்லாம் நேத்தே ஆச்சு... தலையில தண்ணிய ஊத்திட்டேன"

"அப்படியா விஷயம்... அந்த பய மறைச்சுட்டானே... சரி விடு அவன் என்ன சோன்னான்.. "

" ஒன்னும் சொல்லல... இன்னும் என்னை அடையாளம் தெரியல.. ரொம்ப சீரியஸா இருக்கான்.. என்ன ஆச்சு"

" நீங்க இந்த ஊர விட்டு போய் ரோம்ப வருஷம் ஆச்சுல்ல.. அவன் ஸ்கூல் படிக்கிறப்ப இருந்த மாதிரியே தான் காலேஜ் லயும் இருந்தான். எதையும் கண்டுக்காம அசல்டா இருந்தான்..

வீட்ல அவன் தங்கச்சி ராதிகாவுக்கு கல்யாணம் ஆச்சு... நிறைய சீர் செஞ்சு கல்யாணம் முடிக்கறதுக்குள்ள அவங்க அப்பா ஓஞ்சு போய்ட்டார்... "

" என்னது ராதுக்கு கல்யாணம் ஆகிடுச்சா... "

" ஆமா... அப்ப ஆரம்பிச்சதுதான் அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் பிரச்சனை...
வீட்ல எதையும் கவனிக்காம வேலை வெட்டிக்கு போகாம இருக்கியேன்னு அவரு தினமும் இவன திட்ட. ஒரே ரணகளம் தான்.

அதோட ஒரு நாள் ராது அவ புகுந்த வீட்ல கோவிச்சுட்டு இங்க வந்துட்டா. இவன் என்னன்னு கேட்க அவங்க தீபாவளிக்கு இன்னும் அஞ்சு பவுன் நகை அவருக்கு போட சொல்றாங்கன்னா ன்னு அழுக... மாப்பிள்ளை வீட்டுக்கு போய் எப்படி நீங்க இன்னும் கேக்கலாம்ன்னு சண்டை போட்டுட்டடு வந்துட்டான்.

வீட்டுக்கு வந்தா இவனுக்கு சரியான திட்டு... என் மருமகனுக்கு இன்னும் அஞ்சு பவுன் என்ன பத்து பவுன் கூட சேர்த்து செய்வேன்... அவரு சம்பாதிச்சு குடும்பத்தை உன் தங்கச்சிய தங்கமா பாத்துக்குறார்... உன்ன மாதிரியா.. என்னமோ நீ இருந்து மாப்பிள்ளை பாத்து, சீர் செனத்தி செஞ்சு, செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வச்ச மாதிரி பொங்குற... என் மகளுக்கு என்ன பண்ணணும்ன்னு எனக்கு தெரியும்..
ஒரு பத்து ரூபா காசாவது சம்பாதிச்சு அம்மா கைல குடுத்துட்டு அப்புறம் இந்த வீட்ல நீ பஞ்சாயத்து பண்ணு, அதுவரைக்கும் வீட்ல சாப்பிட மட்டும் தான் வாய் திறக்கனுமன்னு சொல்லிட்டார்.. "


" ஹா ஹா ஹா.. செம பல்பு... ஹீரோயிசம் பண்ண போய் சாப்பிட்டு க்கு மட்டும் தான் வாய் திறக்கனுமன்னு சொல்லிட்டாங்களா... சூப்பர் சூப்பர்.. எத்தன பேச்சு பேசிருப்பான் நல்லா வேணும்... "

" உனக்கு சிரிப்பா இருக்கா... ஆனா அப்படிதான் இருக்கும்.. கொஞ்சத்து பாடா படுத்துனான் உன்னை..."

" ஆமா.. இப்ப நிலைமை என்ன.. சார் வேலைக்கு போனாரா.. இல்ல வீட்ல மௌன விரதம் இருக்காரா"
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top