விழியில் உன் விழியில் 6

#1
விழியில் உன் விழியில் 6

ஒரு மாசம் கழிந்த்து... கல்யாண பிஸி அதை தொடர்ந்த சாங்கியங்கள் சம்பிரநாயங்கள் எல்லாம் முடிந்து தாமொதரன் வீடு மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. சகுந்தலா தன் செல்ல மகள் சத்தம் இல்லாத வீட்டில் இருக்க முடியாமல் தவித்தார். இளமதியே அவருக்கு ஆறுதலாக இருந்தாள்...

அவள் அத்தையின் மனதிற்க்கு இதமாக வேறு விஷயங்களை பேசி அவரை திரும்பவும் பழைய நிலைக்கு மாற்ற பெரும் பிரயத்தனம் செய்து கொண்டு இருந்தாள்.

தாமோதரனோ கல்யாணம் முடிந்த அடுத்த வாரமே தன் தொழிலில் மூழ்கி விட்டார்... அவருக்கும் சங்கடமாகத்தான் இருந்தது. ஆயினும் ஆண்களின் பொதுவான இயல்பு போல் வெளியே காட்டிக் கொள்ளாது அடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் இறங்கினார்.

ஒரு நாள் மாலை பொழுது அப்பா அழைப்பதாக ரவீந்தர் கூறவும் விட்டிற்க்கு வந்து இருந்தான். செழுமை மிகுந்த ஏரியாவில் மிக்க தோரணையாக கட்ட பட்டிருந்த வீட்டிற்க்குள் நுழைந்தான். உள்ளே நுழையும் போது கலீர்ரென்ற சிரிப்பு சத்தம் கேட்டான்... வரவேற்ப்பறையில் மதிதான் சகுந்தலா ஏதோ சொல்ல சிரித்துக்கொண்டு இருந்தாள். சகுந்தலாவோ அவளை செல்லமாக முறைத்துக்கொண்டு இருந்தாள்.

ஆதியை பார்த்த சகுந்தலா அவனை வரவேற்றார்...

"வாப்பா ஆதி... அப்பா வர சொல்லி இருந்தாரா. உட்கார் இப்ப வந்திடுவார்."

"சரிம்மா... ரவி இல்லையா"

"அவனும் அப்பாகூட தான் மில் வரைக்கும் போய்ருக்கான். வந்திடுவான். மதி எல்லார்க்கும் காப்பி போடறியா"

மதி தலைஆட்டி விட்டு சிட்டாக பறந்தாள். திரும்பி வரும்பொழுது ஆதியும் அத்தையும் கடை சம்பந்தமாக ஏதொ ஆன்லைன் வர்த்தகம் சம்பந்தமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

இருவருக்கும் காப்பி எடுத்துக்கொடுத்தாள். ஆதி காப்பியை உறிஞ்சியவன் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தான். ஏதோ புது வித காப்பியோ என நினைத்து குடித்தவன் கடைசியில் கப்பில் சிறிதளவு மண் இருப்பதை பார்த்தான்.... சட்டென மனதில் ஏதோ தோன்ற மதியை பார்த்தவன். சகுந்தலாவிடம் கேட்டான்..

"அம்மா. இந்த பொண்ணு யாருன்னு சொல்லையே"

"அத்தை நீங்க சொல்லிடாதீங்க"

"ஓஓஓ அம்மா சொல்லிட்டி நான் கண்டுபிடிக்க மாட்டேனா. எனக்கு என்ன உன்னை மாதிரி தலையில மண் இருக்குன்னு நினைச்சியா"

"என் தலையில மண் இருக்குன்னு நீ வந்து பாத்தியா"

"நான் ஏன் உன் மண்டைய தட்டி பாக்கனும் அதுதான் தன்னால உன் தலையில இருந்து காப்பி கப்ல கொட்டி இருக்கே"

" அது உன் தலையில இருந்து கொட்டினதா இருக்கும். நல்லா பார்"

இருவரும் பேசியதை கேட்டு அவன் காப்பி கப்பை உற்றுபார்த்த சகுந்தலா அதில் மண் இருப்பதை கண்டவர் மதியை மீண்டும் செல்லமாக முறைத்து முதுகில் ஒரு அடி வைத்தார்..

" ஏஏஏ வாலு மதி உன்னை எல்லாரும் வாலுன்னு சொல்றதுல தப்பே இல்ல.. காப்பிக்குள்ளயா மண்ணை போடுவ. "

" ஏன் மா கோவிச்சுக்கிறீங்க... மண்ணும் உடம்புக்கு நல்லதுதான்... அதுலயும் சத்து இருக்கு. அதுவும் இந்த ஆதி மாதிரி மூளை இருந்தும் யோசிக்க தெரியாதவங்களுக்கு மண்ண சாப்பிட குடுத்தா தப்பே இல்ல.... நான் கொஞ்சூன்டு காப்பிக்குள்ள தான போட்டேன்... "

சகுந்தலா வாலுமதி என கூறக்கேட்ட ஆதி ஆச்சர்யத்தில் கண்களை விரித்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...இந்த வாலுமதி எங்க இங்க... மனம் உற்சாகத்தில் மிதந்தது. உற்சாகமாக மீண்டும் சிறுபிள்ளையாக மாறி அவளை வம்பு இழுக்க தொடங்கினான்

" மண் சத்தானதா.. அப்ப நீ மண் சாப்பிட்டு தான் உன் அறிவ வளர்த்து வச்சிருக்கியா என்ன. ஆனா அறிவு வளர்ந்த மாதிரி தெரியலையே. வாலு மட்டும் தான் நீளமா வளர்ந்துருக்கு "

"எனக்கு ஒன்னும் அந்த அவசியம் இல்ல.... உனக்குத்தான் தேவை. என் திறமையை பத்தி அத்தைகிட்ட கேளு சொல்லுவாங்க"

"அதையேன் அம்மாகிட்ட கேக்கனும்.... அதுதான் பாத்தாலே தெரியுதே... ஏன்மா இத்தனை நாளா இந்த வாலு எந்த காட்டுக்குள்ள இருந்தது. இப்ப எதுக்கு புடிச்சுட்டு வந்து வீட்டுல வச்சுருக்கீங்க"

" என்ன காட்டுக்குள்ள இருந்தனா... ஹேய் நான் சென்னைல இருந்தேன் தெரியுமா. இப்ப நான் பேஷன் டிசைனர். அத்தைக்கு தொழில்ல உதவியா இருக்க வந்துருக்கேன்."

"அம்மா உங்களுக்கு வேற ஆளே கிடைக்கலையா... துணிகடைய கூடிய சீக்கிரம் மணல் கடையா மாத்திர போறா. அப்புறம் நீங்க செங்கல்லும் ஜல்லியும் தான் விக்கணும்... "

" என்னை சேர்த்தா அதுவாது விப்பாங்க.. உன்னை சேர்த்தா மொத்தமா கடைய இழுத்து மூட வேண்டியதுதான்"

" ஏஏ வாலு ஓவரா பேசுற"

" அப்படிதான்டா பேசுவேன்
என்ன செய்வ"

இவங்க இரண்டு பேரும் பேசிக்கறத கேட்க முடியாத சகுந்தலா இடையிட்டார்

"அடடடா இவங்க சண்டையே பெருசா இருக்கே... நான் என்ன பேச நினைச்சேன் நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க. வியாபாரம் விரிவாக்க வழி கேட்டா... நீங்க கடைய மூடறது பத்தி பேசிகிட்டு இருக்கீங்க..நான் இப்ப பேசவா இல்லை போகவா"

ஆதியும் மதியும் அமைதி ஆயினர்.. ஆதி ஆரம்பித்தான்

" சரிம்மா உங்க ஐடியா என்ன. முதல்ல சொல்லுங்க"

" இன்னொரு கிளை ஆரம்பிக்கலாமா"

" ம்ம்ம் பண்ணலாம்மா.... கோயமுத்தூர் ல பாக்கலாமா. அங்க வசதியும் இருக்கும். பக்கமாகவும் இருக்கும்"

" ம்ம்ம் நானும் அதைதான் யோசிச்சேன் ஆதி"

"அத்தை. நான் ஒரு ஐடியா சொல்றேன்... தனியா ஒரு கடையா ஆரம்பிக்கறதுக்கு பதிலா நாம ஆன்லைன்ல பண்ணலாம்...தனியா கடை ஆரம்பிக்க எத்தனை செலவ சமாளிக்கனும். இது செலவே இல்லாம செய்யலாம். இப்ப இதுதான் ட்ரெண்டு"

" ஏஏஏ வாலு உன் மண்டையில மண்ணு தான்னு மறுபடியும் நிருபிக்கிற அதுல ரெகுலர் கஸ்டமர் வர மாட்டங்க. நிறைய சிக்கல் இருக்கு. கூரியர் துறைய நம்பிதான் இறங்கனும். நம்ம கடைக்குன்னு பேர் இருக்காது. நேர்ல பாத்து வாங்குற சாட்டிஸ்பேக்ஷன் அதுல இருக்காது...கலர் சரியல்ல, குவாலிட்டி சரியில்லைன்னு ஆயிரத்தெட்டு குறை சொல்லுவாங்க"

" நீ சொல்றது எல்லாம் சரிதான். ஆனா இத்தனையையும் மீறி சரியா செய்யறவங்க இருக்கத்தான் செய்யறாங்க... மார்க்கெட்ல நம்ம சௌத் காட்டன் துணிகளுக்கு தனி மதிப்பு இருக்கு.... இப்ப ஒரு கடை ஆரம்பிச்சா அங்க மட்டும் தான் வியாபாரம் பாக்க முடியும். ஆனா ஆன்லைன்ல பண்ணும்போது உலக அளவுல பண்ணலாம். பிக்அப் ஆக கொஞ்ச நாள் பிடிக்கும்.. நாம ஒன்னும் ரீடெயுல் பண்ண வேண்டாம் அதுல தான் சிக்கல் அதிகம். மொத்த வியாபாரம் பண்ணலாம். நாம சூரத் போய் மொத்தமா வாங்கிட்டு வர மாதிரி சௌத் காட்டன் அங்க இருக்க வியாபாரிகள் வாங்குவாங்க. நம்ம தரம் குறையாம தரும் போது சிக்கலே இல்ல.. அதுவும் போக கொஞ்சம் முயற்ச்சி எடுத்தா நிஜமாவே உலக அளவுல செய்யலாம்... இந்த காலத்துல ஆன்லைன் பிஸினஸ் குறைச்சு மதிப்பு போடாத. கடைக்கு வாடைகை, வேலையாள் சம்பளம், கரண்ட் பில் வரி.... இப்படி செலவு பண்றதுக்கு பதிலா உருப்படியா மெட்டீரியல்ல பண்ணலாம்... "

அவள் யோசனையை நினைத்து ஆச்சர்யபட்டனர் சகுந்தலாவும் ஆதியும்...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top