• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விழியோரக் கவிதைகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கவிதை – 21

“தம்பி...” என்ற குரலைக் கேட்டு, திரும்பிய அனைவரும், வீட்டு வாயிலில் நின்றுக் கொண்டிருந்த வயதில் மூத்தவரை புரியாமல் பார்க்க,



“வாங்க ராமண்ணா... என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தாச்சா? நேத்து வந்ததை நியாபகம் வச்சிக்கிட்டு நேரா இங்கயே வந்துட்டீங்களா?” கேட்டுக்கொண்டே அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.



“இல்ல தம்பி... நான் இங்கேயே இருக்கேன்... ஜோசப்பும் வந்திருக்கான்...” ராமண்ணா தயக்கத்துடன் சொல்லவும், ஒரு சில வினாடிகள் அவரை குழப்பமாக பார்த்த ப்ரித்வி, வெளியில் சென்று பார்க்க, ஒரு காரில் ஜோசப்புடன் சில ஆட்கள் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து, சிரித்துக் கொண்டே ராமண்ணாவைப் பார்த்தான்.



“என்ன ராமண்ணா... என் மேல நம்பிக்கை இல்லையா? ஜோசப்பை கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று கேட்டபடியே, ஜோசப்பை பார்த்து கையசைக்க, ஜோசப் ப்ரித்வியின் அருகே ஓடி வந்தான்.



“வணக்கம் தம்பி...” அவன் கும்பிடவும், அவனது கையை எடுத்து விட்டவன், கஜாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, சிறிது நேரம் அவனுடன் பேசிக் கொண்டு நிற்க, கஜா தயக்கத்துடன் மெல்ல அவன் அருகில் வந்தாள்.



“வாங்க லக்ஷ்மிம்மா... நல்லா இருக்கீங்களா?” ராமண்ணா கேட்கவும்,



“நல்லா இருக்கேன் ராமண்ணா...” அவளது பதிலில்,





“நீங்க இந்த ஊர்க்காரவுங்களே இல்லைன்னு இங்க எல்லாரும் சாதிக்கவும், தம்பி ரொம்ப பயந்து போயிட்டார்... தூங்கவே இல்ல... உங்களை பார்த்த அப்பறம் தான் அவருக்கு நிம்மதியா இருந்திருக்கும்... உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்களா?” ராமண்ணா படபடவென்று கேட்கவும்,



“என்ன ராமண்ணா... புதுசா வாங்க போங்கன்னு பேசிட்டு இருக்கீங்க... எப்பவும் போல லக்ஷ்மின்னு கூப்பிடுங்க... இன்னும் உங்க தம்பி எதையும் வாய் விட்டு சொல்லவே இல்ல.. அதுக்குள்ள நீங்களா எப்படி என்னை உங்க முதலாளியம்மான்னு முடிவு செய்துக்கறீங்க? என்னவோ போங்க ராமண்ணா” கண்கள் அவனிடம் கதை பேசினாலும், அவளது குரலில் இருந்த ஏக்கம் ப்ரித்விக்கு புரிய,



“எல்லாம் எதையெதை எப்போ சொல்லணுமோ அப்போ சொல்லுவோம்... ரொம்ப சலிச்சுக்காத... வாய் விட்டு சொன்னா தான் புரியுமோ? அப்போ உன்னைத் தேடி வந்தது எல்லாம் எதுக்காம்...” என்றவன்,



“சரி நீ உள்ள போ... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” ராமண்ணாவைப் பார்த்துக் கொண்டே அவன் சொல்லவும்,



“பேசிட்டு வாங்க ராமண்ணா... காபி எடுத்துட்டு வரேன்...” என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே திரும்ப,



“ஆமா ராமண்ணா... இங்க யாரோ, நாம முன்ன காபி கேட்டதுக்கு, சுடு தண்ணி தான் கிடைக்கும்ன்னு சொன்னாங்க...” ப்ரித்வி அவள் முகம் சுருங்கி உள்ளே செல்லத் திரும்பவும், வம்புக்கு இழுக்க,



“யாரோ... அது யாரோ?” கஜா அவனது வம்பு புரிந்து பாடவும்,



“அது என்னோட முறைப்பொண்ணு தான்... இன்னிக்கு முறைச்சுக்கிட்டே, சில்லுன்னு தண்ணி தான் கொடுத்தா... மாமா வந்திருக்கானே... விருந்து சமைப்போம்னு தோணுதா பாரு... ஒண்ணுமே இல்ல... தத்தி மாதிரி லுக்கு தான் விடறா...” கள்ளப் புன்னகையுடன் சொன்ன ப்ரித்வியை ஜோசப் ஆச்சரியமாகப் பார்க்க, ‘நான் சொன்னேன் இல்ல’ என்பது போல ராமண்ணா, ஜோசப்பைப் பார்த்தார்.



அவர்களது பார்வை பரிமாற்றத்தைப் பார்த்தவன், “ஹஹாஹா... அதுக்குள்ள ராமண்ணா எல்லாத்தையும் சொல்லியாச்சா?” என்று கேட்ட ப்ரித்வி,



“நீ போய் காபிக்கு ரெடி பண்ணு லக்ஷ்மி...” என்றபடி, ஜோசப்பின் தோள் மீது கைகளை போட்டு அழைத்துக் கொண்டு, பேசிக் கொண்டே வெளியில் சென்றான்.



அந்த நேரம், வேக நடையுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த செல்வராசுவும், அவரைத் தொடர்ந்து ஓடி வந்துக் கொண்டிருந்த தனபாக்கியத்தையும், அவர்கள் இருவரின் பின்னால் கெஞ்சிக் கொண்டே வந்துக் கொண்டிருந்த பழனியையும் பார்த்த ப்ரித்வி, என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்து, அவர்களை வேடிக்கைப் பார்க்க,



“இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்ச... உன் காலை வெட்டிருவேன்... ச்சே... ஒரு பொறுக்கிய நம்பி... நான் என் பொண்ணை கொடுக்க இருந்தேனே...” செல்வராசு உறுமவும்,



“புதுசா, படிச்ச பணக்கார மருமவன் வந்துட்டான்னு தானே இந்த ஆட்டம் ஆடற... அநாதைப் பையன்... கேட்க ஆளே இல்ல... இம்புட்டு பணம் வச்சிருக்கற அவன் மட்டும் என்ன உத்தமனாவா இருந்திருப்பான்... அவனைப்பத்தி, அவன் ஊருல கேட்டுப் பாருங்க... தெருவுக்கு ஒரு பெண்டாட்டி வச்சிருப்பான்...” ப்ரித்வி அங்கு நிற்கவும், அதைப் பார்த்து மேலும் கோபம் கொண்ட பழனி, அவனையும் அசிங்கப்படுத்திவிடும் நோக்கத்தில் வார்த்தையை விட,





“டேய்... யாரைப் பார்த்து என்ன பேசற? பெங்களூர்ல வந்து கேட்டுப் பாருடா... அவரைப் பத்தி... ஒரு பொண்ணை திரும்பி பார்த்து இருப்பாரான்னு...” ஜோசப் கோபமாக உறுமவும்,



“டிக்கெட் எடுத்துக் கொடு வந்து விசாரிக்கறேன்...” பழனி நக்கலடிக்க,

அவனது நக்கலில் கொதித்த ஜோசப்... “யாரைப் பார்த்து பேசற நீ? ஓவரா பேசின... பல்லு அதனையும் தட்டி எண்ணி கையில கொடுத்திருவேன்” என்று ஜோசப் உறும, யாரது புதிதாக வந்திருப்பது என்று பார்த்த செல்வராசு... அது முக்கியமில்லை என்று உணர்ந்து, பேசுவதற்கு முன்,



“டேய்... சத்தியமா அவர் உன்னைப் போல பொய் சொல்லி இருக்க மாட்டார்டா... ‘ஏன் பழனி... நீ அந்த பொண்ணு வீட்டுக்கு அடிக்கடி போயிட்டு வரதா முத்து சொல்றானே... என்னன்னு கேட்டேன் தானே... நீ என்ன சொன்ன?



‘அவ என் தங்கை மாதிரி... அவளுக்கு உதவ யாரும் இல்ல... அவளை எல்லாரும் தப்பான பார்வையால தொல்லை செய்யறாங்க... அதுக்கு நான் காவலா இருக்கேன்...’ அப்படின்னு எல்லாம் கற்பூரம் அடிச்சு சத்தியம் செய்யாத குறையா ஆத்தா கோவில் முன்னால நின்னு நீலிக் கண்ணீர் வடிச்சியேடா... சாமி முன்னால பொய் சத்தியம் செய்ய, உனக்கு கொஞ்சம் கூடவா மனசு அறுக்கல...



வேலிக்கு ஓணான் காவல்ங்கற கதைய சொல்லிட்டு... ஏண்டா... நானும் தெரியாம தான் கேட்கறேன்... ஒரு தங்கச்சி வீட்ல, அண்டர்வேரோட உனக்கு என்னடா வேலை... அதுவும் அவ பாவாடையை போத்திக்கிட்டு... கலைஞ்ச தலையோட... கதவைப் பூட்டிகிட்டு... என்ன, வீடு துடைச்சு கொடுத்துட்டு இருந்தியா?” தனபாக்கியம் கேட்கவும்,



“ஆமா அக்கா...” அவன் உளற,



“அடி செருப்பால... இன்னமும் பொய்யா சொல்லிக்கிட்டு திரியற... பஞ்சாயத்து முடிஞ்ச பின்னால... கஜா உடம்பு முடியாம வாந்தி எடுத்தாளே... அது என்னாச்சுன்னு பார்க்க வந்தியாடா... அதெல்லாம் விட்டுட்டான்... அந்த இவளுக்கு வீடு துடைக்க போனானாம்...



சரி பொண்ணுங்கள பார்த்தா கொஞ்சம் இளிக்கிற தான்... அதெல்லாம் கல்யாணம் ஆனா சரியா போயிரும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்... சீ.. தூ.... உன்னை நம்பி என் பொண்ணை கொடுக்க இருந்தேனேடா... நீ எல்லாம் மனுஷனா... நம்மளை இந்தளவுக்கு நம்பறாங்களே... அதைப் பொய்யாக்குற மாதிரி நாம தப்பு செய்யறோமேன்னு உடம்பு கூசல... போடா இங்க இருந்து...” நம்பி ஏமாந்த கோபத்தில் தனபாக்கியம் அவனை பிடித்துத் தள்ளிவிட்டு திட்ட,



“அக்கா... நான் சொல்றதை நம்புக்கா... சத்தியமா... இது யாரோ செய்த சதி...” பழனி கெஞ்சவும்,



“வாய திறந்த, வாய கிழிச்சு பொலி போட்ருவேன்...” என்று தனபாக்கியம், வாயைக் கிழிப்பது போல அவன் அருகே செல்லவும், குடி போதையின் தள்ளாட்டத்தில் அவன் மீண்டும் கீழே விழுந்தான்.

விடாமல் தள்ளாடிய படி எழுந்து நின்ற பழனி, “உன் மவளுக்கு எப்படி கல்யாணம் ஆகுதுன்னு நானும் பார்க்கறேன்... புதுசா மாப்பிள்ளை வந்த உடனே என்னிய வெளிய துரத்தற இல்ல... அவளை என்ன செய்யறேன் பாரு...” என்று தனபாக்கியத்தை நோக்கி பழனி கத்த, வீட்டின் உள்ளே சென்றுக் கொண்டிருந்தவர், திரும்பிக் கூடப் பார்க்காமல், எந்த பதிலும் பேசாமல், அவனது கத்தலுக்கு பதிலாக அவரது கால் செருப்பே அவனுக்கு நேராக வந்து விழுந்தது.



அதைப் பார்த்தவன், மேலும் வெகுண்டெழுந்து, “எல்லாம் உன்னால வந்துச்சுடா... ஊருக்கே தெரியாம, ரெண்டு வருஷமா பொத்தி காப்பாத்திட்டு வந்தேன்... இப்படி என்னை டவுசரோட கெஞ்ச விட்ட இல்ல... அவளை என்ன செய்யறேன் பாரு... அதுக்கப்பறம் நீ அவளை கட்டறியான்னு நானும் பார்க்கறேன்...” என்று தொடையில் தட்டி ப்ரித்வியை நோக்கி சபதம் செய்தவன், ஒரு கல்லை எடுத்து ப்ரித்வியின் மேல் வீசிவிட்டு செல்ல, அதில் இருந்து அவன் விலகினாலும், லேசாக உரசிவிட்டே அது விலகி சென்றது.



ப்ரித்வி அடி பட்டதை பார்த்ததும் ஜோசப் பாய்ந்து பழனியை தாக்க முயல... அவனை ப்ரித்வி தடுத்து நிறுத்தினான்... “தம்பி... அவனை என்ன செய்யறேன்னு பாருங்க...” ஜோசப் உறும, அவனைத் தடுத்து, அர்த்தம் நிறைந்த பார்வை பார்த்துவிட்டு, உள்ளே செல்ல,



“இருங்க தம்பி...” என்று தனது கைக்குட்டையை எடுத்து ராமண்ணா, அந்த இடத்தில் வைத்து, ரத்தத்தை ஒற்றி எடுக்க,



“நான் உள்ள போய் மருந்து போட்டுக்கறேன் ராமண்ணா...” என்றவன்,

“ஜோசப்...” என்று கூர் பார்வை ஒன்றைப் பார்த்துவிட்டு, சிறு தலையசைப்புடன் உள்ளே செல்ல, ஜோசப்பும் பதிலுக்கு தலையசைத்து, அமைதியாக நின்றான்.



“என்னங்க என்னாச்சு...” அவன் நெற்றியில் கசிந்த ரத்தத்தைப் பார்த்து கஜா பதற,



“ஒண்ணும் இல்ல... உங்க பழனி மாமா கொடுத்த பரிசு...” உதட்டில் சிரிப்பை அடக்கிக் கொண்டே அவன் சொல்லவும்,



“இன்னும் பெரிய கல்லா... இந்த வாய் மேல போட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்... அப்போ தான் இப்படி நக்கலடிக்க மாட்டீங்க... ஒண்ணா, உர் உர்ன்னு உறுமிக்கிட்டே இருக்க வேண்டியது... இல்ல... இப்படி கிண்டல் செய்ய வேண்டியது...” என்று போலியாக சலித்துக் கொண்டவளைப் பார்த்தவன், உதட்டை குவித்துச் சிரிக்கவும், அதில் இருந்த கள்ளம் புரிய, டக்கென்று அவனது முகத்தில் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டவள்,



“ராமண்ணா... எல்லாருக்கும் விருந்து சமைக்க சொல்றேன்... ஆனா... நீங்க எப்போ சாப்பிட்டீங்களோ... மொதல்ல இந்த காபியும் பலகாரமும் சாப்பிடுங்க... வாங்க... சீக்கிரம் சமையல் முடிக்க சொல்றேன்” கஜா சொல்லவும்,



“இவ சுடு தண்ணி கொடுக்காம விட மாட்டா போல ராமண்ணா... என்னோட சேர்ந்து உங்களுக்கும் தண்டனை... வாங்க போகலாம்...” என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, கஜா அவனை முறைத்தபடி, அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டே வந்தவள், ப்ரித்விக்கு கொடுக்காமல், உள்ளே திரும்பிச் செல்ல,



“லக்ஷ்மி எனக்கு?” ப்ரித்வி கேட்கவும்,



“அவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு ஒண்ணும் நீங்க இந்த சுடுதண்ணியை குடிக்க வேணாம்... கொஞ்ச நேரத்துல சமையல் செய்துட சொல்றேன்... உங்களுக்கு மட்டும் என் கையால தான் சமையல்... அதுல வைக்கிறேன் உங்களுக்கு கச்சேரிய...” ஒருமாதிரி எச்சரித்துவிட்டு உள்ளே செல்ல,



“வேண்டாம் லக்ஷ்மி... நான் பாவமில்ல... உனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஊருக்குள்ள வந்தேன்... அதெல்லாம் நினைச்சு பார்த்து நல்ல சாப்பாடா போடக்கூடாதா? உன் மாமா இல்ல... உன் ப்ரித்வி இல்ல...” கெஞ்சிக் கொண்டே ப்ரித்வி, அவள் பின்னால் செல்லவும், மன நிறைவுடன் ராமண்ணா அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, அவனது புதிய தோற்றத்தை பார்த்த ஜோசப், ஆச்சரியமாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.



“என்னடி மருமகளே... என் புள்ளைக்கு ஒழுங்கா சோறு போட மாட்ட போல... இதெல்லாம் சரிப்படாது போல... ராஜா.. நீ வா.. நான் உனக்கு வேற நல்ல பொண்ணைப் பார்த்து கட்டி வைக்கிறேன்...” ப்ரித்வி கெஞ்சுவதை பொருட்படுத்தாமல் செல்லும் கஜாவைப் பார்த்த பார்வதி இடையில் பேசவும்,



“ஆமாம்மா... பாருங்க... எனக்கு ஒரு காபி கூட கொடுக்காம போறா... எனக்கு வேற ஒரு நல்ல அழகான பொண்ணா பாருங்க.. அதுவும் நல்லா சமைக்கணும்...” ப்ரித்வி சொல்லி முடிப்பதற்குள்,



“என்னது... வேற பொண்ணா? பார்த்திருவீங்களா நீங்க? கண்ண நோண்டி எடுத்து காக்காய்க்கு போட்டுடுவேன்..” சேலைத் தலைப்பை இழுத்து சொருகிக் கொண்டு சண்டைக்கு வந்தவளைப் பார்த்த அனைவருக்கும் புன்னகை விரிய,



“உன்னை விட்டா அவன் வேற யாரடி கட்டிக்க போறான்... கொத்திக்கிட்டு போகத் தானே வந்திருக்கான்...” என்ற பார்வதி,



“சீக்கிரம் போய் சமையலை கவனி... நான் அண்ணன் கிட்ட பேச வேண்டியதைப் பேசி முடிச்சிடறேன்...” பார்வதி சொல்லவும், ‘நீ உள்ளே போ.. உனக்கு இங்கு இனி வேலை இல்லை’ என்ற செய்தி அதில் ஒளிந்திருக்கவும், ப்ரித்வியைப் பார்த்த கஜா, உள்ளே சென்று மறைந்தாள்.



“சொல்லுண்ணே... நான் என் மருமகளை உறுதி பண்ண வந்திருக்கேன்... நீயானா என்னனென்னவோ பேசிட்டு நேரத்தை கடத்திட்டு இருக்க... இப்போவே மணியாகப் போகுது... நீ என்ன செய்யப் போறே? உறுதியா சொன்னா... நான் என் முடிவை சொல்ல வசதியா இருக்கும்...” முடிவாக பார்வதி கேட்கவும்,



“என் மவளும், உன் மகனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க... அதுவும், நான் என் முடிவை சொல்றதுக்கு முன்னாடியேதான் என் பொண்ணு விருந்து சமைக்க போயிட்டாளே... அவளை என் மருமகன் கூட சேர்த்து வைக்கிறது தான் முறை...” செல்வராசு முறையைப் பற்றி பேசவும்,



“அவங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதைப் பத்தி நல்லா தான் பேசற... ஆனா... இந்த எண்ணம் நேத்து இல்லையே... இவனை பொய் சொல்லி வெளிய அனுப்பிட்டு... கஜாவை அந்த கேடு கெட்டவனுக்கு தான் கல்யாணம் செய்து கொடுப்பேன்னு தானே ஒத்தைக் காலுல நின்னீங்க நீயும் உன்ற பொஞ்சாதியும்...



முத்து அந்த பழனியைப் பத்தி எவ்வளவு தடவ சொல்லி இருக்கான்... அதுல உண்மை இருக்கும்ன்னு ஒரு தரவ கூட யோசிக்கத் தோணல... அப்படி அறிவு மழுங்கிக் கிடக்கு.. அண்ணி பேச்சை கேட்க வேண்டியது தான்... ஆனா ஊர் பெரியவனான நீ நாலையும் யோசிச்சு தான் முடிவெடுக்கணும்...



இந்த ஊருல உன்னை ஆலோசனைக் கேட்டுத் தான் எல்லாமே செய்யறாங்க... அப்படி இருக்க... நீ இந்த ஊருக்கு முன் உதாரணமா இருக்கணுமே தவிர, ஜாதியோட பேரைச் சொல்லிட்டு உன் பொண்ணு வாழ்க்கையை பாழடிக்கக் கூடாது... எதுனாலும் யோசிச்சு முடிவெடு.. இனியாவது....” பார்வதி அழுத்தமாகச் சொல்லவும், வேறு சமயமாக இருந்தால், ஏட்டிக்கு போட்டி பேசும் தனபாக்கியம், அமைதியாக தலைகுனிய,



“இன்னைக்கு என் புள்ளையால தெரிஞ்ச விஷயம்... அவனோட கல்யாணம் முடிஞ்ச பின்னால தெரிஞ்சிருந்திச்சுன்னா... உன் சாதியும், உன் ஊரும் வந்து காப்பாத்துமா என்ன? ‘அய்யோ பாவம்ன்னு’ ரெண்டு நாள் மூக்கை சிந்திட்டு போயிருவாங்க... கடைசியில படப் போறது யாரு?” கண்டிக்கும் குரலில் கூறியவர்,



“சீக்கிரம் உன் முடிவைச் சொல்லு... இந்த தட்டு பூ... கூறைப் புடவை எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு நாளைக்கு காலையில இருக்கற முஹுர்த்தத்துல அவங்களுக்கு கல்யாணத்தை முடிச்சு வைக்கறீங்களா? இல்ல நானே எல்லாத்தையும் பார்த்துக்கவா?” உறுதியான குரலில் பார்வதி கேட்கவும், அவரது உறுதி தெரிந்த செல்வராசு, தனபாக்கியத்தைப் பார்க்க,



“இருங்க நான் தட்டெடுத்துட்டு வரேன்...” என்று உள்ளே திரும்பிச் சென்றார்.



“பட்டு வேஷ்டி... சட்டை... பூ பழம்...” என்று வரிசைத் தட்டுக்களை விரைவிலேயே அடுக்கிக்கொண்டு வந்தவர், செல்வராசுவிடம் கொடுக்க,



“கஜாவை கூட்டிட்டு வாங்க அண்ணி...” என்று கூறிய பார்வதி, கஜாவுக்கென்று முத்துவை விட்டு வாங்கிக்கொண்டு வந்த பட்டுப்புடவையையும், பூவையும் எடுத்து வைத்தார்.



“அம்மா... ஒரு நிமிஷம்...” என்ற ப்ரித்வி...



“ராமண்ணா... நாம நேத்து போய் வாங்கிட்டு வந்ததை எடுத்துத் தாங்க...” என்று கேட்கவும், செல்வராசு அவரை யார் என்பது போல பார்க்க,



“ஹையோ... சொல்ல மறந்துட்டேன் பாருங்க... இவர் தான் என் கூட எப்பவுமே இருக்கறவர்... எனக்கு எல்லாமே....” என்று ராமண்ணாவை அறிமுகப்படுத்தியவன்,



“என்னோட அம்மா ராமண்ணா...” என்று ராமண்ணாவிற்கு பார்வதியை அறிமுகப்படுத்தி வைக்கவும்,



அவர் கைக் கூப்பி, “உங்களைப் பத்தி என் மகன் நிறைய சொல்லி இருக்கான்...” என்று சொல்ல, ராமண்ணா அவரைப் பார்த்து புன்னகைத்து,



“இவர் சும்மா சொல்லி இருப்பாருங்க... எங்களுக்கு இவர் தான் எல்லாம்...” என்று ராமண்ணா தொடங்கவும்,





“ஆஹா... இவர் தொடங்கினா இன்னைக்கு முடிக்க மாட்டார்... அதை அப்பறம் பேசிக்கலாம்...” என்றவன், ராமண்ணா கொடுத்த கவரை வாங்கி, பார்வதியிடம் கொடுக்க, பார்வதி அவனை ஏற இறங்கப் பார்த்தார்.



“இல்லம்மா... நேத்து ரிப்போர்ட்டர் வேஷம் போட ஜிப்பா வாங்க போகும் போது, லக்ஷ்மியை இங்க இருந்து எப்படியாவது வெளிய கொண்டு போயிருவேங்கற நம்பிக்கை இருந்தது. அப்படி கூட்டிட்டு வந்தா, இங்க கோவில்லையே கல்யாணம் செய்துக்க வசதியா இருக்கும்ன்னு பட்டுப்புடவையும், அதுக்கு பக்கத்துக்குல இருந்த கடையில கொஞ்சம் நகையும் வாங்கினேன்... அது தான் இது... வேற ஒண்ணும் இல்ல...” என்று அவரிடம் கவரை நீட்டவும், அதைப் பார்த்த பார்வதி, சந்தோஷத்தில்,



“ரொம்ப அருமையா இருக்குடா ராஜா.... இந்த பச்சை புடவைக்கு தகுந்த மாதிரி இந்த முத்து நெக்லசும்... இந்த வளையலும், ரொம்ப அழகா இருக்கு... அவளுக்கு பொருத்தமா பார்த்து பார்த்து வாங்கி இருக்க...” என்றபடி, அதை செல்வராசுவிடம் காட்ட, அவர் தனபாக்கியத்தை ஏளனமாகப் பார்க்க,



“நான் என்னங்க செய்யட்டும்... எனக்கு புத்தி மழுங்கிப் போயிருச்சு... பரிசம் போடக் கூட, நான் தான் என் பொண்ணுக்கு புடவை வாங்கினேன்... பொய், பகட்டு.. தேவை இல்லாத வீம்பு... இப்போ அதெல்லாம் தப்புன்னு உணர்ந்துட்டேன்” வருந்தியக் குரலில் அவர் சொல்லவும்,



“விடுங்க அண்ணி... போய் என் மருமகளை கூட்டிட்டு வாங்க...” பார்வதி சொல்லி முடிப்பதற்குள், கஜா அங்கு வந்து நின்றாள்.



“என் மருமவளுக்கு இருக்கற அவசரத்தைப் பாரேன்...” என்ற பார்வதி கஜாவிற்கு திருஷ்டி கழித்து,



“இந்தா ராஜா... அவ கையில இந்தப் புடவையைக் கொடுத்து... அவ தலையில இந்த பூவை வச்சு விடு...” பார்வதி சொல்லவும், ப்ரித்வியும் அவ்வாறே செய்ய அவளை நெருங்கினான்.



தனியாக அவனுடன் காரில் பயணம் செய்து வந்த போது இல்லாத ஒரு உணர்வை, புது தயக்கத்தை, புது வெட்கத்தை, உரிமையுள்ளவனாக அவனது நெருக்கம் தர, எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், ஆசையும், நாணமும் கலந்த பார்வையை அவன் மீது செலுத்தினாள்.



அவளின் விழிகள் கவிதை மொழிப் பேச, அதனை ரசித்துக் கொண்டே பூச்சூடியவன், அவளிடம் புடவையைக் கொடுக்க, அவனது காலில் பணிந்து வணங்கியவள், மனம் நிறைந்த பூரிப்புடன் அதனை பெற்றுக் கொண்டாள்.



“ஹே... என்ன இதெல்லாம்...” ப்ரித்வி பதற,



“அதெல்லாம் அப்படி தான் ராஜா... அது தான் முறை...” என்று செல்வராசு சொல்லவும்,



“சரிண்ணே... அப்பறம்... நாளைக்கு காலையில.... முன்ன வச்சிருந்த அதே ஆறு மணி முஹுர்த்தத்துல நாம இவங்க கல்யாணத்தை வச்சிக்கலாம்... நாங்க இப்போ வீட்டுக்கு கிளம்பறோம்...” பார்வதி சொல்ல,



“அம்மா... லக்ஷ்மி விருந்து சமைச்சிருக்காளே...” அவரது காதில் ப்ரித்வி முணுமுணுக்க, முத்து அவனது தோளைத் தட்டினான்.



“இப்போ தானே ராஜா கொஞ்ச நேரத்துக்கு முன்ன, பறக்கறது ஓடறதுன்னு ஒண்ணையும் விடாம, அத்தை செய்ததை எல்லாம் மொக்கிட்டு வந்த... அதுக்குள்ள லக்ஷ்மி சமையலை சாப்பிடறேன்னு சொல்ற? இது உனக்கே நியாயமா இருக்கா? நீ வாயைத் திறந்தா காக்கா கொத்திட்டு போற அளவுக்கு முழுங்கிட்டு... இந்த அநியாயம் செய்யறியே...” முத்து ப்ரித்வியின் காலை வாரவும்,



“அதெல்லாம் சீரணம் ஆகிப் போச்சு... ஒரு வளர்ற பையனைப் பார்த்து கண்ணு போடறான் பாருங்கம்மா...” பார்வதியிடம் சிறுபிள்ளைப் போல அவன் கோள் மூட்ட,



“முத்து... அவனைப் பார்த்து கண்ணு போடாதே... சும்மா இரு...” பார்வதி மிரட்டவும்,



“ராஜா... இது உனக்கே நியாயமா இருக்கா? உன்னோட வேலையை மட்டும் பார்த்துக்கறியே... இன்னும் எங்க முஹுர்த்தத்தை இவங்க முடிவு செய்யல ராஜா... அதையும் கொஞ்சம் கவனி” முத்து சத்தமாகவே சொல்லவும், முல்லைக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள, அவளது விழிகள் பிதுங்கி வெளியில் வந்துவிடும் போல் காட்சியளிக்க,



“லக்ஷ்மி... முல்லையை பிடி... இல்ல மயங்கி விழுந்திறப் போறா...” ப்ரித்வி கத்தவும், அனைவருமே முல்லையைப் பார்த்து சிரிக்க, முல்லை வெட்கத்துடன் முத்துவிடம் ஓடிச் சென்றாள்.



“பார்த்தியா, உன் மயக்கம் ஊரறிஞ்ச ஒரு விஷயமா இருக்கு..” முத்து சொல்லவும், அவன் முதுகில் ஒட்டிக்கொண்டவள், “போங்க மாமா...” என்று சிணுங்க, மீண்டும் ஒரு சிரிப்பலை அங்கே எழும்பியது.



“சரி பார்வதி... அப்போ கஜா ஏற்பாடு செய்யற விருந்தை, நாம மாப்பிள்ளை அழைப்புக்கே வச்சிடலாம்... என்ன மாப்பிள்ளை உங்களுக்கும் சம்மதம் தானே...” அவர் கேட்கவும்,



“சரிங்க மாமா...” நல்ல பிள்ளையாக ப்ரித்வி சொல்லவும், கஜா அவனுக்கு பழிப்புக் காட்ட,



“உங்க வீட்ல இருந்து மாப்பிள்ளைக்கு நலங்கு வச்சு... மாப்பிள்ளை அழைப்பை வச்சு கூட்டிக்கிட்டு வந்துடலாம்... நான் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யறேன்.... என்ன சொல்ற?” அவர் கேட்கவும், பார்வதிக்கும் அது சரியாகப் பட,



“சரி அப்போ நாங்க இங்க வந்து பொண்ணுக்கு நலங்கு வைக்கறோம்...” என்று அவரும் சொல்லவும், முத்து ப்ரித்வியைப் பார்த்து முறைக்க,



“மாமா... எங்க கல்யாணத்தோட, முத்துவுக்கும் முல்லைக்கும் கல்யாணம் வச்சிடலாம் மாமா... பாவம்... அப்பறம் முத்து ஏக்க மூச்சு விட்டே இருக்கற வெயில் சூட்டை அதிகப்படுத்திடுவான்...” ப்ரித்வி கேலி செய்யவும்,



“ஆமா... இந்த கூத்துல அதை விட்டுட்டேன் பாரு... ராசய்யா அண்ணா.... இங்க வாங்க...” என்று அழைத்தவர்,



“நம்ம முன்னையே பேசி இருந்தது போல, முத்துவுக்கும் முல்லைக்கும் அதே முஹூர்த்தத்துல கல்யாணத்தை வச்சுடலாம்... இங்கயே ஒரே மேடையா போட்டுடலாம்... நீங்க என்ன சொல்றீங்க?” கேட்க,



“நீ சொன்னா சரியா தான் இருக்கும் செல்வராஜு...” முத்துவின் அப்பா பதில் சொல்லவும், முத்து - முல்லையின் திருமணமும், மறுநாளே நடக்க உறுதியாகியது.



பேசிக்கொண்டபடி, மாப்பிள்ளை அழைப்புக்கு தயாராவதற்கு பார்வதி ரெக்கை கட்டிக் கொண்டு பறந்தார். தனது வீட்டில் வேலை செய்யும் ஆட்களை அனுப்பி, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வர பட்டியலிட, ப்ரித்வி அவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.



வீடே சில மணி நேரத்தில், கல்யாணக்களை கட்ட, பார்வதியின் கணவன் வழி சொந்தங்கள், வேலை செய்ய ஆட்கள் என்று அந்த வீடே நிரம்பி வழிந்தது. இத்தனை பேருக்கும் இந்த குறைந்த நேரத்தில் எப்படி தகவல் சென்றது என்று வியந்தபடி ப்ரித்வி அமர்ந்திருக்க,



“என்ன ராஜா... அப்படியே என்னை வேடிக்கைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்க... சீக்கிரம் போய் குளிச்சிட்டு... இந்த துணிமணியை போட்டுக்கிட்டு ரெடியா கிளம்பி இரு...” என்று ஒரு பேன்ட் சட்டையை அவர் கொடுக்கவும்,



“இது எப்போ வாங்கினதும்மா...” நெகிழ்ச்சியான குரலில் அவன் கேட்க,



“முத்துக்கிட்ட அப்போவே உனக்கு நல்ல உடையா வாங்கிட்டு வரச் சொன்னேனேய்யா... அவன் அப்போவே, உனக்கு கல்யாணத்துக்கு தகுந்த மாதிரி வாங்கிட்டான்...” என்றவர்,



“என்ன ராமண்ணா... பார்த்துக்கிட்டே இருக்கீங்க... சீக்கிரம் அவனை தயார் பண்ணுங்க...” என்று விரட்ட, சிரித்துக் கொண்டே, ராமண்ணா ப்ரித்வி தயாராக உதவ, விரைவிலேயே மாப்பிள்ளை கோலத்தில் நின்றான்.



“என் கண்ணே பட்டுடும் போலிருக்கு ராஜா... அப்படியே ராஜா கணக்கா இருக்க...” என்று கண்கலங்க நெட்டி முறித்தவர்,



“அஞ்சு வயசுல காணாம போன நீ... இந்த ஊருக்கு மாப்பிள்ளயா தான் வரணும்னு விதி இருக்கு போல... உங்க அப்பா உன்னை இந்தக் கோலத்துல பார்த்தா... அப்படியே உருகி போயிருப்பார்...” நெகிழ்ந்த குரலில் கண்ணீருடன் அவர் சொல்லவும்,



“அம்மா... ஏம்மா வருந்தறீங்க...” என்றவன், சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...” ப்ரித்வி ஆரம்பிப்பதற்கு முன், பேன்ட் வாத்தியங்களும், வாண வேடிக்கையின் சத்தமும், அந்த ஊரே அதிரும்படி ஒலிக்கத் தொடங்கின.



“மாப்பிள்ளை அழைப்புக்கு பொண்ணு வீட்டுல இருந்து வந்துட்டாங்க... வளவளன்னு பேசாம, தயாரா இரு... ராமண்ணா... கொஞ்சம் பார்த்துக்கோங்க” என்றுவிட்டு, பார்வதி வெளியில் சென்று, பெண் வீட்டாரை உபசரிக்கத் தொடங்கினார்.



நிமிடங்கள் கடந்த பின், “ராஜா... நலங்கு வைக்க கூப்பிடறாங்க... வா ராஜா...” என்றபடி பார்வதி வர, ஒரு பெருமூச்சுடன் ப்ரித்வியும் அந்த சடங்குகளில் கலந்துக் கொண்டான். சடங்குகள் முடிந்து, அலங்கரித்த குதிரை வண்டியில், ப்ரித்வியை ஊர்வலமாக அழைத்துச் சென்றார் செல்வராசு...



அது போலவே கஜாவிற்கும் நலங்கு வைத்து முடிய, முத்துவிற்கும் முல்லைக்கும் சேர்த்து, செல்வராசு தனது வீட்டிலேயே விருந்திற்கும், மணப்பந்தலுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.



வீட்டில் உள்ள அனைவரும் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டும், பூக்களை தொடுத்துக் கொண்டும், மறுநாள் விருந்திற்கு காய்களை வெட்டிக்கொண்டும் இருக்க, கஜாவின் அறையில் முல்லை அமைதியாக அமர்ந்திருந்தாள்.



“என்ன முல்ல... இவ்வளவு அமைதியா உட்கார்ந்து இருக்க? இப்போவே கனவா?” கஜா கிண்டலடிக்கவும்,



“இல்ல கஜா... நாளைக்கு விடிஞ்சா கல்யாணம்... நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு...” முல்லை பயத்துடன் சொல்லவும்,



“என்ன முல்லை... முத்து அண்ணா உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாரு... உனக்கு எதுக்கு இப்போ பயம் வருது?” கஜா கேட்கவும்,



“கல்யாணம் குடும்பம் இதெல்லாம் நினைச்சா உனக்கு பயமாவே இல்லையா? எனக்கு வயித்தை கலக்குது” சிறு பிள்ளை போல வந்த முல்லையின் பதிலில், அவள் அருகே வந்து அமர்ந்தவள், அவளது கைகளை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.



“இல்ல முல்லை... எனக்கு பயமா இல்ல... நான் எதுக்கு பயப்படணும்... இத்தனை கஷ்டத்துக்கு பிறகு, நான் என்னோட ப்ரித்வியைக் கைப் பிடிக்க போறேன்... அவரோட சேர்ந்து என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கிட்டு, எங்க ரெண்டு பேரோட உணர்வு, உயிர் எல்லாம் ஒண்ணுதான்னு சொல்ற அளவுக்கு என் வாழ்க்கை இருக்கணும்... இருக்கும்... அவரும் அப்படித் தான் நினைப்பார் முல்ல... நம்ம காதலை, கானல் நீரா ஆகவிடாம, அழகான பூஞ்சோலையா மாத்தறது நம்ம கையில தானே இருக்கு...



முத்து அண்ணனும் ரொம்ப நல்லவங்க... அவங்க சொல்றதை கேட்டு, அனாவசியமான உன் பயத்தை விட்டுட்டு தைரியமா வாழ்க்கைய ஏத்துக்க பழகு... எல்லாம் சரியா போயிரும்... நாளைக்கு, ப்ரித்வி என் கழுத்துல தாலி கட்டற அந்த தருணத்தை நானும், நீ, அண்ணனுக்கு சொந்தமாகற அந்த தருணத்தையும் மனசுல எதிர்ப்பார்த்து ரசிக்க ஆரம்பி... பயம் போயிரும்...” கண்களை மூடிக் கொண்டு, ரசித்து சொல்லிக் கொண்டே வந்தவளை, முல்லையும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க,



“ஆமா ... இப்போ ரெண்டு நாளுக்கு முன்ன... யாரோ... எனக்கும் எங்க மாமாவுக்கும் கல்யாணம் நடக்கணும்ன்னு ஜபம் பண்ணிட்டு இருந்தாங்க... அது யாரு...” கஜா முல்லையை கேலி செய்யவும்,



“சீ போடி...” முல்லை சிணுங்க,



“கஜா... முல்லை... அங்க என்ன சும்மா பேசிக்கிட்டே இருக்கீங்க... பேசாம படுத்து தூங்குங்க... நாளைக்கு காலையில சீக்கிரம் எழணும்...” என்று தனபாக்கியம் குரல் கொடுக்க,



“சரிடி முல்ல... நீ படு... நான் பின்பக்கம் போயிட்டு வரேன்...” என்று கஜா வெளியில் செல்ல, முல்லை உறக்கம் வராமல் அவளுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.



சில நிமிடங்கள் பல நிமிடங்களாகக் கரைய, “எங்க இவ... போய் ரொம்ப நேரமாச்சு?” முல்லை... ‘கஜா’ என்று அழைத்துக் கொண்டே வர,



“என்ன முல்ல... எதுக்கு அவளை கூப்பிட்டுக்கிட்டு இருக்க? அவ தான் அப்போவே அறைக்கு வந்துட்டாளே...” குரலில் சிறிது பதட்டம் தொற்றிக்கொள்ள தனபாக்கியம் கேட்கவும்,



“இல்லையே அத்தை... அவ வெளிய போனவ தான்... உள்ள வரவே இல்லையே.. நான் இவ்வளவு நேரம் அவளுக்காக காத்திருந்துட்டு, இப்போ தேடிட்டு வரேன்...” பதட்டத்துடன் முல்லை சொல்லவும், அங்கிருந்த அனைவருமே பதட்டத்துடன் கஜாவை ஆளுக்கொரு பக்கமாக தேடத் தொடங்கினர்.



“ஐயோ... அந்த பழனி சொன்னது போல ஏதாவது செய்துடுவானோ? என் பொண்ணு எங்க தேடியும் கிடைக்கலையே...” தனபாக்கியம் அழத் தொடங்கவும், செல்வராசு, பார்வதி, முத்து, முல்லை அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் திகைக்க, ராமண்ணா, ஜோசப்பிற்கு அழைக்கச் சென்றார்.



கவிதைகள் தொடரும்....
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கவிதை – 22



“என்னங்க இது? என்னைக் காணோம்னு அங்க எல்லாரும் பதறிப் போயிருவாங்க... உங்களுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா? இப்படி என்னை தனியா தள்ளிட்டு வந்திருக்கீங்க?” ப்ரித்வி இழுத்த இழுப்பிற்கு நகர்த்து கொண்டே கஜா சிணுங்க,



“தேடட்டும்... என் லக்ஷ்மியை என் கண்ணுல காட்டாம ஒளிச்சு வச்சு, எப்படி எல்லாம் தேட விட்டாங்க... நான் எப்படி எல்லாம் பதறி இருப்பேன்... இப்போ திடீர்ன்னு நான் உன்னோட அத்தை பையன்னு தெரிஞ்ச உடனே, நான் நல்லவனா போயிட்டேனா?” ஒருமாதிரிக் குரலில் ப்ரித்வி கேட்கவும்,



“அதானே... எங்க உர் உர் ப்ரித்வி காணோமேன்னு பார்த்தேன்... அது உள்ளுக்குள்ள தான் ஒளிஞ்சு இருக்கு... அந்நியன் மாதிரி அது அப்போ அப்போ வெளிய வரும் போல ...” கஜா சொல்லவும்,



“அது என்ன அந்நியன்...?” ப்ரித்வி புரியாமல் கேட்க,



“ராசா... உத்தம ராசா... நீங்க தான் ரெம்ப நல்லவங்க ஆச்சே... நான் தான் தெரியாம சொல்லிட்டேன்... இப்போ அந்நியனைப் பத்தின ஆராய்ச்சி எல்லாம் நமக்கு வேண்டாம்... என்னை எதுக்கு இழுத்துட்டு வர்ரீங்க... அதைச் சொல்லுங்க...” அவனை முறைத்துக் கொண்டே அவள் கேட்கவும்,



“சரி... சரி... இப்போ அது நமக்கு வேண்டாம்.... நாம தனியா பேச ஒரு இடம் வேணும்... சீக்கிரம் எங்கயாவது கூட்டிட்டு போ...” ப்ரித்வி அவசரப்படுத்தவும், கஜா புன்னகையுடன், அவனைப் பாதாள அறைக்கு அழைத்துச் சென்றாள்.



“என்ன இந்த ரூம் இப்படி வேர்க்குது...” உள்ளே நுழைவதற்கு முன்பே ப்ரித்வி ‘உஸ்... புஸ்..’ என்று திணறவும்,



“இந்த ரூம்ல தான் நீங்க வர வரை இருந்தேன்... கண்டா முண்டா சாமான் எல்லாம் போட்டு வைக்கிற ரூம்... இப்போதைக்கு யாரும் வர மாட்டாங்க... சொல்லுங்க... அப்படி என்ன என் ராஜாவுக்கு அவசரம்...” அதே புன்னகை மாறாத முகத்துடன் கேட்டுக்கொண்டே, அங்கிருந்த சிறு ஃபேனை ஓட விட, ப்ரித்வி அவளை இறுக அணைத்தான்.



அவனது அணைப்பினில் கரைந்தாலும், “என்னங்க இது?” மெல்லிய குரலில் அவள் கேட்க, அவளது கன்னத்திலும், கைகளிலும் இருந்த காயங்களையும் அவன் தடவிப் பார்க்க, தனபாக்கியம் அவளுக்கு போட்ட சூட்டையும் அவள் காட்ட, கைகள் நடுங்க அதை வருடிப் பார்த்தவனின் கண்கள் கலங்கியது.



“காலையில வாந்தி எடுக்கற அளவுக்கு ஜுரம் இருந்ததேடா... இப்போ பரவால்லயா?” தொண்டையடைக்க அவன் கேட்கவும்,



“இங்க வைத்தியர் கொடுத்த மருந்தை சாப்பிட்டு, நான் கொஞ்சம் தூங்கி எழவும் சரியா போச்சுங்க... உங்களைப் பார்த்ததும் எனக்கு எந்த கஷ்டமும் மனசை எட்டவேயில்ல... நீங்க விட்டுட்டு போனது மட்டும்தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு... ஆனா இப்போ நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று கண்களை மூடி தனது சந்தோஷத்தை சொல்லியவளின் கரத்தைப் பற்றியவன்,



“இருந்தாலும்.... இந்த இடத்துலையா நீ அடைஞ்சு கிடந்த? ஏன் இப்படி எல்லாம்? உன் முகத்தைப் பார்த்தபிறகும் அவங்களுக்கு எப்படி இவ்வளவு வருத்த தோணுச்சு?” வருத்தம் தோய்ந்து வெளிவந்த அவனது குரலைக் கேட்டவள்,



“என் ப்ரித்விக்காக தவம் இருந்தேன்னு சொல்லலாமா?” என்று கண்சிமிட்டிக் கூறவும், அவனது அணைப்பு இன்னும் இறுகியது.



சிறிது நேரம் அவன் மனதின் வலியைப் புரிந்து அணைப்பில் கரைந்தவள், “உங்களுக்காக நான் என்ன வேணா தாங்குவேனுங்க... இப்போ அதெல்லாம் பத்தி பேச வேண்டாம்... அதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா உங்களை நான் படுத்திக்கறேன்... இப்போ என்னவோ பேசணும்னு சொன்னீங்களே...” என்று மெல்ல இழுக்க, அவளது மூக்கைப் பிடித்து ஆட்டிக் கொண்டே,



“உன் வாய் இருக்கே வாய்... அதுக்கு நான் தர தண்டனையில... அது பதிலுக்கு பதில் பேசுதான்னு பார்க்கறேன்...” என்று கண்ணடித்தவன், அவள் சிணுங்கவும்,



“இப்படி நீ கேட்டு கேட்டு தானே அப்போ ரெண்டு பேரும் மாட்டினோம்... இல்லன்னா கொஞ்சம் ஸ்மூத்தா நம்ம கல்யாணம் நடந்திருக்குமோ என்னமோ?” ப்ரித்வி கேட்கவும், கஜா மண்டையை உருட்டினாள்.



“நல்லா மண்டையை ஆட்டு... சரி லக்ஷ்மி... இப்போ நான் சொல்லப் போறது ரொம்ப முக்கியமான விஷயம்...” ப்ரித்வி தனது முகத்தைத் துடைத்துக் கொண்டே சொல்லவும், தனது புடவை முந்தானையை எடுத்து, கஜா அவன் முகத்தைத் துடைத்தாள்.



அவளது கையைப் பிடித்தவன், “நான் இது வரை பொய் சொன்னது இல்லைன்னு உனக்கே தெரியும்...” ப்ரித்வி தொடங்கவும்,



“அதைப் பத்தி அப்பறம் பேசலாமா? இப்போ நான் உங்க மடியில தலை வச்சிக்கவா? இப்போ நடக்கறதை எல்லாம் பார்த்தா எனக்கு கனவு மாதிரி இருக்கு... இது எல்லாம் கனவு இல்லதானேங்க... நீங்க விட்டுட்டு போன அப்பறம் என்ன நடந்துச்சு தெரியுமா? எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? ஏன் அப்படி செய்தீங்க?” தொண்டையடைக்க அவள் கேட்கவும்,



“என்னடா கேட்டுட்டு இருக்க.... படு...” என்றவன், அந்த அறைக்குச் செல்லும் படியில் அமர்ந்து, அவளது தலையை தனது மடியில் தாங்கினான்.



அவளது தலையைக் கோதிக் கொண்டே, தான் அப்பொழுது இருந்த மனநிலையையும், ராமண்ணா தன்னை தெளிவித்ததையும் சொன்னவன்,



“அதுவும் இல்லாம, உன்னை விட்டு என்னால உன் காலேஜ் காம்பவுண்ட் கேட்டை கூட தாண்ட முடியல... உன்னைத் தேடி ஓடி வந்துட்டேன்...” என்று அவன் சொல்லவும்,



“அது என்னவோப்பா... நீங்க நிஜமாவே ஓடித் தான் வந்தீங்க போல... மறுநாள் தானே வந்தீங்க..” அவள் குறைபட,



“இல்ல லக்ஷ்மி... நான் மதியமா கிளம்பலாம்ன்னு நினைச்சு நல்லா தூங்கிட்டேன்... எழுந்து பார்த்தா மணி எட்டு... அப்பறம் எங்கேர்ந்து உங்க ஊரை தேடறது...” என்று அசடு வழிந்துக் கொண்டே அவன் சொல்ல, கஜா தனது தலையில் அடித்துக் கொண்டாள்.



“சின்ன பையன்... முதல்முறையா ஒரு பொண்ணை லவ் பண்றேன்.. அதனால சின்ன சின்ன தப்புங்க நடக்கறது சகஜம் தான்... இனிமே போக போக ஒழுங்கா நடப்பேன்...” மன்னிப்பு வேண்டும் குரலில் அவன் கேட்கவும்,



“போக போக ஒழுங்கா நடப்பீங்களா? அப்போ எத்தனை பொண்ணுங்களை ரூட்டு விடறதா உத்தேசம்... மவனே காலை உடைச்சு அடுப்புல போட்டுடுவேன்...” அவள் மிரட்டவும், அவளைப் பார்த்து சிரித்த ப்ரித்வி, அவள் தலையில் வலிக்காமல் கொட்டினான்.

சிறிது நேர சிரிப்பிற்கு பிறகு, “என்னை ஏன் லக்ஷ்மி உனக்கு இவ்வளவு பிடிக்குது? நான் உனக்கு என்ன செய்தேன்?” அந்த அறையைச் சுற்றி பார்வையை ஓட்டிக்கொண்டிருந்தவன், அந்த அறையின் நிலையைப் பார்த்து, மனம் ஆறாமல் கேட்கவும்,



“என்ன சொல்றது?” என்று சிறிது நேரம் யோசித்தவள், “நீங்க கோபத்தோட தான் என்னை வண்டியில ஏற அனுமதிச்சீங்க... அப்போ என்மேலே உங்களுக்கு பெரிசா ஒண்ணும் நல்ல அபிப்பிராயம் இல்லைங்கறது என்னோட அனுமானம். ஆனாஅதுக்காக என்னை ஒருதரவ கூட தப்பா நடத்தலை... அதுவும் இல்லாம... எனக்கான தேவைகளை, நான் வாய் மொழியா சொல்றதுக்கு முன்னையே பார்த்து பார்த்து செய்தீங்க... கோபமா இருந்தாலும், அது உங்க நல்ல மனசை தான் காட்டிச்சு...



முன்பின் தெரியாத நீங்க.. என்கிட்டே காட்டின கரிசனை... என்னை அறியாமலே நான் பழனியையும், உங்களையும் ஒப்பிட்டு பார்த்தேன்... பழனி எங்க! நீங்க எங்கே! அது தப்புன்னு மனசுக்கு தோணினாலும், உங்களோட ஒவ்வொரு செயல்லயும், என்னாலஒப்பீடு செய்யாம இருக்க முடியல... நேரமாக ஆக, என் மனசு உங்ககிட்ட சாயறதை என்னால தடுக்கவே முடியல..



என் கணவரா வரப் போறவர் எப்படி எல்லாம் இருக்கணும்னு நான் நினைச்சேனோ அப்படியே நீங்க இருந்தீங்க.... அப்படி இருந்த போது தான், நான் வயித்து வலியில தவிச்ச போது, நீங்க பதறின பதட்டமும், என் வயித்து வலி எதுனாலன்னு கூட புரிஞ்சிக்க முடியாம, ரொம்ப நல்லவரா நீங்க இருந்தீங்களா.... 'இவரை விட நல்லவன் உனக்கு எங்கேர்ந்து கிடைக்கப்போறான் கஜா... கோழிய அமுக்கு'ன்னு மனசு அடிச்சு சொல்லுச்சா... ஹிஹி... லவ் பண்ணிட்டேன்...” முதலில் சீரியசாக தொடங்கியவள், இறுதியில் கேலியாக முடிக்க, ப்ரித்வி, அவளது காதைப் பிடித்து திருகினான்.



“வாலு... நான் கோழியா?” அவன் மிரட்ட,



“இல்ல சேவல்... மாத்தி சொல்லிட்டேன்... போதுமா? நீங்க சொல்லுங்க உங்களுக்கு ஏன்... எப்படி என்னை பிடிச்சது ப்ரித்வி... நான் உங்க முன்னாடி ஒரு பொய்யை சொல்லித்தானே வந்தேன்... பொய்யே உங்களுக்கு பிடிக்காதே...” மடியில் இருந்து எழாமல், அவனை நிமிர்ந்துப் பார்த்து கேட்க, அவளது கன்னத்தை பிடித்து ப்ரித்வி ஆட்டினான்.



“ஆமா... ஆனா... அந்த பொண்ணு தானே எனக்கே தெரியாம... இந்த கண்ணை உருட்டி மிரட்டி எதிர்த்து பேசி... என் மனசை திருடிட்டா... திருட்டு கூட எனக்கு பிடிக்காத ஒண்ணு தான்... அதனால தான் தண்டனை கொடுக்க வந்துட்டேன்...” சிரித்துக் கொண்டே அவன் சொல்லவும், அவனது இடுப்பை நன்றாக கிள்ளியவள்,



“சாமியாரு... சாமியாரு...” என்று சிணுங்க, அவளைத் தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டான்.



அவனது அன்பைக் கண்டு மனம் பூரித்தவள், அவனோடு நன்றாக ஒன்றிக்கொள்ள, “நான் உன்னை விட வயசுல ரொம்பப் பெரியவன் ... அதாவது நமக்குள்ள வயசு வித்தியாசம் அதிகம்ன்னு சொல்றேன்...” அவள் தெரிந்துக் கொள்ள வேண்டுமே என்று மெல்ல தயங்கிய படி இழுக்க,



“என்ன உங்களுக்கு ஒரு அறுபது வயசு இருக்குமா? பரவால்ல ப்ரித்வி... நான் உங்களை அறுபதாம் கல்யாணம் செய்துக்கறேன்... போதுமா?” விளையாட்டாக அவள் சொல்லவும், அவளது தலையில் நறுக்கென்று குட்டியவன், “வாலு... வாலு...” என்று கொஞ்சவும் செய்தான்.



“எனக்கும் பழனிக்கும் கல்யாணம்ன்னு பேசினாங்க இல்ல.. அவனுக்கு இப்போ முப்பத்தி மூணு வயசாகுது... அதை விட உங்களுக்கு ஒண்ணும் அதிகமா இருக்காது... அப்படியே இருந்தாலும் எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்ல... எனக்கு என் ப்ரித்வி போதும்.. புரியுதா?” மிரட்டும் தொனியில், கண்களை மட்டும் உயர்த்தி அவள் கேட்கவும்,



“ஹாஹஹா... இல்லவே இல்ல... நான் சின்ன பையன் தான்...” என்று சிரித்தவன், வெளியில் கேட்ட சத்தத்திற்கு, காதுகளை கொடுத்தவன் ,



“நம்ம ரெண்டு பேரையும் தேடறாங்க போல... நான் பேச வந்தது என்ன? நீ என்னை பேச வைக்கிறது என்ன?” என்று கேட்டவனை முறைத்தவள்,



“கொஞ்ச நேரம் பேசாம இருங்க...” என்று பழிப்பு காட்டவும், அதற்கு மேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத ப்ரித்வி, அவளது தலையை உயர்த்தி, அவளது இதழை சிறை செய்தான்.



“ஐயோ... நீங்க ரொம்ப மோசம்...” அவனைத் தள்ளி விட்டு, அவனிடம் இருந்து விலகியவளை அணைத்தவன்,



“எவ்வளவு மோசம்ன்னு கொஞ்சம் சொல்லேன்... இல்ல நான் திருத்திக்கறேன்...” குறும்பாக அவன் கேட்கவும், நாணத்துடன் அவன் மடியில் கவிழ்ந்தவள்,



“ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துட்டே... என்ன வேலை எல்லாம் செய்யறீங்க?” என்று அவள் சிணுங்கவும்,



“அப்படியா?” என்று கேட்டவன், அந்த இனிமையை சிறிது நேரம் ரசித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.



நேரம் ஆவதை உணர்ந்தவன், “லக்ஷ்மி... நான் உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் சொல்லப் போறேன்... கொஞ்சம் நடுவுல குறுக்கிட்டு பேசாம இதை மட்டுமாவது கேளு...” அவன் சொல்லி முடிப்பதற்குள்,



“நான் எங்க?” என்று அவள் தொடங்க,



“இதோ பாரு.... இப்போ தானே சொன்னேன்...” என்று மிரட்டியவன், அவள் வாய் மீது கையை வைத்துக் கொண்டு பார்க்கவும், நமுட்டு சிரிப்பு சிரிக்க,



“இப்போ நீங்க தான் கெட்ட பையனா மாறி இருக்கீங்க? கெட்ட கெட்ட வேலை எல்லாம் செய்யறீங்க?” என்று மூடிய விரல்களுக்கு இடையே அவள் சொல்லவும், அவள் தலையில் முட்டியவன், அவளை நிமிர்த்தி, தன்னைப் பார்த்தவாறு அமரச் செய்ய, அவனது முகத்தில் இருந்த பாவத்தில் இருந்தே, கஜாவும் அமைதியாக, அவன் சொல்லப் போவதைக் கேட்கத் தயாரானாள்.



“ஒருவேளை நாளைக்கு நம்ம கல்யாணம் நடக்காம போனா என்ன செய்வ லக்ஷ்மி?” முதல் கேள்வியே இப்படியாக இருக்க, கஜா பதட்டத்துடன் நிமிர்ந்துப் பார்க்க, ப்ரித்வி அவளை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.



“என்ன ப்ரித்வி? ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க?” பதட்டமாக கஜா கேட்கவும்,



“இல்ல... நான் உங்க அத்தை மகன் இல்லைங்கறது தெரிஞ்சா உங்க அப்பா எனக்கு உன்னை கல்யாணம் செய்துத் தருவாரா?” அவன் கேட்கவும், அவன் கேட்டதில் ஆஸ்வாசப் பெருமூச்சு விட்டவள், அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.



“என்ன லக்ஷ்மி... நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா இப்படி சிரிச்சுக்கிட்டு இருக்க?” அவன் கேட்கவும்,



“இல்ல இப்போ என்ன வந்துச்சு... அது தான் ஊரே உங்களை அத்தையோட பையன்னு ஒத்துக்கிட்டாங்களே... அப்பறம் என்ன?” சாதாரணமாக அவள் கேட்கவும், இப்போது ப்ரித்வி அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.



“என்ன ப்ரித்வி இவ்வளவு அதிர்ச்சியா பார்க்கறீங்க?”



“இல்ல லக்ஷ்மி... நீ... உனக்கு எப்படி?” அவன் திணறவும், எம்பி அவனது கன்னத்தை பிடித்து திருகியவள்,



“நீங்க அம்மாவோட பாசத்துக்காக எவ்வளவு ஏங்கி போயிருக்கீங்கன்னு எனக்குத் தெரியும் ப்ரித்வி... ஆனா, காலையில அத்தை சொல்லும்போது, உங்க முகத்துல இருந்த அதிர்ச்சி... நீங்க முத்து அண்ணா முகத்தை முகத்தை பார்த்துட்டு நின்னீங்க... அதாவது பொய்யை புதுசா சொல்ற பயமோ குழப்பமோ... என்னவோ ஒண்ணு உங்க முகத்துல தெரிஞ்சது....



அதுவும் இல்லாம, நீங்க காலையில கூப்பிட்ட ‘அம்மா’ல உங்க அம்மா திருப்பி கிடைச்சிட்டாங்கங்கற சந்தோசமோ, மனநிறைவோ இல்ல... இப்போ விருந்து நடக்கும் போது கூப்பிட்ட ‘அம்மா’ல கொஞ்சம் உங்களோட பாசம் தெரிஞ்சது தான்... ஆனா, நீங்க ஏங்கி போயிருக்கற அளவு பாசம் இருக்கான்னா...” என்று கேட்டவள் உதட்டைப் பிதுக்க, ப்ரித்வி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான்.



“என்ன ஆச்சு ப்ரித்வி.. இப்படி பார்த்துட்டே இருக்கீங்க?” அவனிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும், கஜா கேட்க,



“இல்ல லக்ஷ்மி... நான் உன்னை சின்னப் பொண்ணுன்னு நினைச்சேன்.... நீயானா.. இப்படி என்னோட ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தத்தைப் படிச்சு சொல்லிட்டு இருக்க.... அது தான் பேச்சே வரல...” அவன் அதே ஆச்சரியம் விலகாமல் சொல்லவும், கஜா மீண்டும் அவன் மடியில் தலை வைத்துக் கொண்டாள்.



“என்னங்க இப்படி சொல்றீங்க? நான் சின்ன பிள்ள... விளையாட்டாவே இருப்பேன்னு நினைச்சுட்டீங்க இல்ல?” வருத்தமாக அவள் கேட்க, எந்த பதிலும் சொல்லாமல் ப்ரித்வி அவளது தலையை கோதிக் கொடுத்தான்.



“எப்போ முதிர்ச்சியா நடந்துக்கணும்... எப்போ விளையாட்டா நடந்துக்கணும்ன்னு எனக்கு தெரியுங்க...” தொடர்ந்து அவள் சொல்லவும்,



“இல்ல லக்ஷ்மி... நான் மிருதுளா... அது தான் ராமண்ணா பொண்ணு... அவகிட்ட, என்னன்னா... என்னன்னு பேசி இருக்கேன் தான்... அதுக்கும் மேல நான் பொண்ணுங்க கூட பழகினது இல்ல... வார்த்தைக்கு வார்த்தை சண்டை போட்டு, என் கூட வம்பு வளர்த்துக்கிட்டு வந்தியா? நான் இந்தளவுக்கு ஒரு பொண்ணோட பேசுறது இதுதான் முதல் தடவை.ஆக, நீ சண்டை போட்டே என் மனசுக்குள்ள நுழைஞ்சுட்ட......” அவன் வாஞ்சையாக சொல்லவும், மீண்டும் எழுந்து அமர்ந்தவள், அவனை முறைக்க,



“இப்போ எதுக்கு முறைக்கற?” ப்ரித்வி புரியாமல் கேட்டான்.



“ஹ்ம்ம்... உங்களைப் பார்த்து முறைக்கணும்ன்னு சாமிகிட்ட நேர்ந்துக்கிட்டேன்.... அது தான்...” என்றவள், அவன் பதில் சொல்வதற்கு முன்,



“அதெல்லாம் இருக்கட்டும் ப்ரித்வி... இப்போ எதுக்காக அப்பாகிட்ட உண்மைய சொல்லணும்... அதுவும் இப்போ நீங்க என்ன வேலை செய்தீங்க? திருட்டு பூனை... செய்யறது எல்லாம் செய்துட்டு... ‘கல்யாணம் நடக்கலைன்னா’ன்னு கேள்வியா கேட்கறீங்க?” இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டே அவள் கேட்கவும், மீண்டும் ப்ரித்வி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.



“இதுக்கு எல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்ல...” என்று அவள் நொடித்துக் கொள்ள,



“எதுக்கு?” சிரிப்புடன் அவன் கேட்டதில், நாணத்துடன், அவன் மார்பில் புதைந்தவள்,



“இல்லங்க... அது தான் எனக்கு உண்மை தெரியுமே... அப்பறம் என்னங்க... வேற என்ன செய்ய போறீங்க?” அவள் புரியாமல் கேட்கவும்,



“இல்ல லக்ஷ்மி... ஒரு பொய் சொல்லி... அதுல நம்ம பந்தம் தொடங்கறதுல எனக்கு விருப்பம் இல்ல... நீ எனக்கு சொந்தமாகறதுக்கு முன்ன, கட்டாயம் நான் அவங்க மகன் இல்லைங்கற உண்மைய, அம்மாகிட்டயும், உங்க அப்பாகிட்டயும் சொல்லித் தான் ஆகணும்... அப்பறம் அவங்க விருப்பம்...” சீரியசாக அவன் சொல்லவும், கஜா சிறிது நேரம் யோசனையாக அமர்ந்தாள்.



“ஏங்க... எங்க அத்தை தான் உறுதியா நீங்க அவங்க மகன் தான் அப்படின்னு சொல்றாங்க இல்ல.. அதுவும்... ஜாடை, உங்க தோள்பட்டையில இருக்கற தழும்பு... எல்லாமே அவங்க சொல்ற மாதிரி தானே இருக்கு... ஒருவேளை நிஜமாவே நீங்க தான் அவங்க பையனோ என்னவோ... நீங்க தான் தேவை இல்லாம மனசை போட்டு குழப்பிக்கற மாதிரி எனக்குத் தோணுது...” ஒருவேளை இப்படி இருக்குமோ என்று அவள் கேட்க, ப்ரித்வி மறுப்பாக தலையசைத்தான்.



“அவங்க பையன் காணாம போன போது, அஞ்சு வயசு இருக்கும்ன்னு சொல்றாங்க... ஆனா... என்னை வளர்த்தவங்க கையில நான் கிடைச்ச போது வயசு மூணு தான்... நானும், தொழில் தொடங்கின புதுசுல, ஒரு ஆர்வத்துல, எங்க அப்பா அம்மா யாருன்னு தெரிஞ்சிக்க, நான் தொலைந்து போன வருஷத்தை வச்சு, ஒரு டிடெக்டிவ் ஏஜென்சிய வச்சு தேடித் பார்த்தேன்... அதுல என்னைப் பத்தின ஒரு விவரமும் இல்ல... அதாவது, என்னை தொலைச்சவங்க, என்னைக் காணோம்ன்னு கம்ப்ளைன்ட் கூட பண்ணல...



என்னை கண்டெடுத்தவங்க தான்.... நான் இந்த இடத்துல கிடைச்சதா போலீசுக்கு தகவல் கொடுத்து, என்னைத் தேடி என்னைப் பெத்தவங்க வந்தா, ஒப்படைக்கறேன், அதுவரை, என்னை அவங்க பொறுப்புல வச்சுக்கறேன்னு லெட்டர் எழுதி கொடுத்துட்டு என்னை கூட்டிட்டு போயிருக்காங்க...



ஆனா, அவங்க எழுதிக் கொடுத்த, ரெண்டு நாளுல அந்த இடத்துல ஒரு பொண்ணோட பிணமும், ஒரு ஆணோட பிணமும் கரை ஒதுங்கி இருக்கு... அவங்ககிட்ட பிளாஸ்டிக் கவர்ல சுத்தி இருந்த பர்ஸ்ல இருந்த போட்டோவ வச்சு அவங்க ரெண்டு பேரும் புருஷன் பெண்டாட்டின்னு கண்டுபிடிச்சு இருக்காங்க...



அதுல என் போட்டோவும் இருந்து இருக்கும் போல... அதனால அவங்களோட பிள்ளையா தான் நான் இருப்பேன்ங்கற சந்தேகம் போலீஸுக்கு... அதனால என்னை ஒரு அநாதை இல்லத்துல ஒப்படைச்சுட்டு, அவங்க மூலமா, என்னை வளர்த்தவங்க சட்டப்பூர்வமா தத்து எடுத்திருக்காங்க...



எனக்கு தெரிஞ்சு... என்னைப் பத்தின உண்மைகள் இது தான்... இப்போ சொல்லு.. நான் எப்படி பார்வதியம்மாவோட மகனா இருக்க முடியும்?” ப்ரித்வி கேட்கவும், கஜா அவனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.



“முடியாது...” மனதின் சிறு மூலையில் எழுந்த சின்ன ஆசை நிராசையாகிப் போனதை எண்ணி அவள் இழுக்க...



“மறுபடியும் உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாது லக்ஷ்மி... உங்க அப்பா என்னை ஏத்துக்க முடியாதுன்னு சொன்னாலும்... நான் அவங்க கிட்ட உண்மைய சொல்லிட்டு... அவங்க கண்ணு முன்னால தாலிய கட்டி உன்னை இங்கேர்ந்து கூட்டிட்டு போயிருவேன்... பயப்படாதே...” என்று அவளுக்கு நம்பிக்கையளிக்க, கஜா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.



“இல்லன்னா... நீங்க வெளிய போகறதுக்கு முன்ன... நான் போய் உங்க கார்ல ஏறி உட்கார்ந்துடுவேன்...” கஜா மிரட்ட, ப்ரித்வி சத்தமாக சிரிக்க, கஜாவின் முகம் இன்னமும் யோசனையையே காட்டியது.



“என்ன லக்ஷ்மி... இன்னும் என்ன யோசனை...” அவன் கேட்க,



“இல்ல... அத்தை பாவம்... ரொம்ப நாளுக்கு அப்பறம் அவங்க சந்தோஷமா இருக்காங்க... ஒரே நாளுல அவங்க சந்தோஷத்தை நாம குலைக்கணுமா?” அவள் கேட்க,



“காலையில அவங்க சொன்னதைக் கேட்டு, எனக்கே பாவமா தான் இருந்துச்சு லக்ஷ்மி... ஆனா, அவங்க என் மேல காட்டற பாசம், அவங்க எனக்காக ஒவ்வொண்ணும் யோசிச்சு செய்யறது எல்லாத்தையும் பார்த்து, அவங்க சொல்லறது எல்லாம் நிஜம் தான்னு சொல்ல முடியலையேன்னு எனக்கும் வருத்தமா தான் இருக்குடா... நான் என்ன செய்வேன்...



நானும் முத்துவும் வேற மாதிரி பொய் சொல்லத் தான் நினைச்சோம்... அதுக்குள்ள இவங்க வந்து பேசவும், எனக்கும் முத்துவுக்கும் ஒண்ணுமே புரியல... நான் சமாளிக்க திணற, அவன் தான் சமாளிச்சான்... எனக்கும் வேற வழி தெரியல.... பேசாம இருந்துட்டேன்... ஆனா, பொய்யோட நம்ம பந்தம் தொடங்க கூடாது லக்ஷ்மி... நீ தான் என்னோட முதல் சொந்தம்... அந்த சொந்தமும் இப்படி பொய் சொல்லித் தான் வரணுமான்னு இருக்கு...” அவன் சொல்லவும், அவனது இயல்பு புரிந்த அவளும் அமைதியாக, அவன் முகத்தைப் பார்த்தாள்.



“சரி ப்ரித்வி... எதுவா இருந்தாலும்... நாம சேர்ந்தே சமாளிப்போம்... நீங்க அய்யாகிட்ட எப்போ உண்மைய சொல்லப் போறீங்க?” அவள் கேட்டவும்,



“நாளைக்கு காலையில...” ப்ரித்வி யோசனையுடன் சொல்ல, கஜாவும் தலையசைத்து கேட்டுக் கொண்டாள்.



“சரி... வா நாம வெளிய போகலாம்...” ப்ரித்வி சொல்லவும், கஜாவும் எழுந்து அவனுடன் படியேற, கதவின் அருகில் வந்ததும், அவளை அணைத்தவன்,



“ஒண்ணும் பயமில்ல லக்ஷ்மி... நான் இனி உன்னை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்... என்னை நம்பு...” ப்ரித்வி சொல்லவும், புன்னகையுடன் அவனை அணைத்தவள்,



“உங்களை நம்பாம யாரை நம்பப் போறேன்...” நம்பிக்கையுடன் வந்த அவளது பதிலில், அவளது பிறை நெற்றியில் இதழொற்றிவிட்டு, மெல்ல கதவைத் திறந்து, இருவரும் வெளியில் வர, அவர்களைக் காணாமல் அனைவருமே, ஆளுக்கு ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க, தனபாக்கியம் நடுக்கூடத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தார்.



“என் பொண்ணை அவன் எதுனா செய்யறதுக்குள்ள காப்பாத்தி கூட்டிட்டு வாங்க... ஒரு குடிகாரனை நம்பி என் பெண்ணை கட்டிக் கொடுக்க இருந்ததுக்கு எனக்கு சரியான தண்டனை தான்... ஆண்டவா... என் பொண்ணை பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடு...” என்று அவர் புலம்பிக் கொண்டிருக்கவும், கஜா ப்ரித்வியைப் பார்த்து சிரித்தாள்.



பழனி சூளுரைத்ததையும், கஜா இப்பொழுது மாயமாய் மறைந்து போயிருந்ததையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்த்து தனபாக்கியம் அவ்வாறு புலம்பிக் கொண்டிருக்க,



“பழனியால இனி ஒண்ணும் செய்ய முடியாது... அவனுக்கு நம்ம கல்யாண பரிசா ஒரு பெரிய பரிசு கொடுக்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்...” ப்ரித்வி கள்ளப் புன்னகையுடன் சொல்லவும், கஜா அவன் தோளில் செல்லமாக இடித்துவிட்டு, மெல்ல அவனிடம் இருந்து நழுவி, தனது அறைக்குச் செல்ல, அங்கு முல்லை அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்.



அவளைப் பார்த்தவுடன் விளையாட்டு குணம் தலை தூக்க, “என்ன முல்ல... விடிஞ்சா கல்யாணத்தை வச்சுக்கிட்டு... எதுக்கு இப்போ அழுதுகிட்டு இருக்க?” கஜா கேட்கவும், அவளைப் பார்த்த முல்லை அதிர்ச்சியுடன் விழிக்க,



“கஜா... உன்னை... பழனி...” என்று சொல்லி முடிக்கும் போதே,



“அம்மா தாயே... எல்லாத்துக்கும் மயங்கி விழுந்தன்னா... முத்து அண்ணா பாவம்...” அவள் சிரிக்கும் போதே,



“அத்தை... மாமா... கஜா இங்க இருக்கா...” என்று முல்லை குரல் கொடுக்க, அடுத்த நிமிடம், அங்கிருந்தவர்கள் அனைவரும், கஜாவின் அறைக்கு முன் குழுமி இருக்க, அவர்களுடன் சேர்ந்து ப்ரித்வியும் அங்கு வந்தான்.



“எங்க கஜா போன? எல்லாரும் பயந்து உன்னை தேடிட்டு இருக்கோம்...” பார்வதி கேட்கவும்,



“நான் இங்க தான் தோட்டத்துல இருந்தேன் அத்தை... பிரெண்ட்ஸுக்கு எல்லாம் எனக்கு நாளைக்கு கல்யாணம்னு சொல்லவே இல்லயே அத்தை... அதான் தோட்டத்துல போய் போன் பேசிட்டு வந்தேன்... அப்படியே ஒருதரவ டூர் போல, பெங்களூருக்கு வந்து, நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரச் சொல்லி இருக்கேன் அத்தை... நீங்க தான் எனக்கு விருந்து சமைக்க சொல்லித் தரணும்...” என்று கூறியவள்,



“நான் அங்க இருக்கறது தெரியாம நீங்க எல்லாம் என்னை தேடி இருக்கீங்க போல...” கஜா சரளமாக பொய் சொல்லவும்,



“அடிப்பாவி..” ப்ரித்வி வாய்க்குள் முணுமுணுக்க, அவர்கள் இருவரின் முகத்தைப் பார்த்த ராமண்ணா, தனக்குள் சிரித்துக் கொண்டார்.



கவிதைகள் தொடரும்....
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கவிதை – 23

அன்றைய இரவு முழுதும் ப்ரித்வி, உறக்கம் வராமல், அலைந்துக் கொண்டிருந்தான். இரண்டு முறை பார்வதி, “என்ன ராஜா... போய் தூங்கலாம் இல்ல... விடிஞ்சா கல்யாணம்... இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சும் போய்ரும் இப்படியே தூங்காம இருந்தா.. அப்பறம் முகம் ரொம்ப சோர்வா இருக்கும்யா...” என்று கூறவும், அந்த பாசம், ப்ரித்வியை தவிக்க தான் வைத்தது.

“இந்த கள்ளமற்ற தாயன்பை பெறக் கூட எனக்கு தகுதி இல்லையா? எத்தனையோ பொய் சொல்லி அவங்க அவங்க கல்யாணம் செய்துக்கறாங்க தான்... ஆனா, எனக்கு அப்படி செய்துக்க முடியலையே...” அவரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவன் வருந்திக் கொண்டிருக்கவும்,

“என்ன ராஜா... என்னை இப்படிப் பார்த்துட்டு இருக்க? என்னாச்சு...” மீண்டும் பார்வதி கேட்கவும்,

“அம்மா... நான் உங்க மடியில படுத்துக்கலாமா?” ப்ரித்வி தயக்கத்துடன் கேட்க,

“என்ன ராஜா... நான் உன் அம்மாடா... இப்படி அனுமதி கேட்டுக்கிட்டு இருக்க? படுய்யா...” என்று அவனது தலையை தனது மடி மீது வைத்துக் கொள்ளவும், மெல்ல ப்ரித்வி, அவரது மடியில் தலை சாய்ந்தான்.

இத்தனை நேரம் இருந்த குழப்பம் போய், தாய்மடி தந்த சுகம், மனதின் குழப்பத்தை களைந்து, அவனை மெல்ல கண் மூட வைத்தது... அவரின் மடியிலேயே அவன் உறங்கிப் போக, அவனது தலையை கோதிக் கொண்டே பார்வதி அமர்ந்திருந்தார்.

மெல்ல இரவுப் போர்வை நீங்கத் துவங்கி, பறவைகள் தங்கள் கூட்டை விட்டு வெளி வரத் துவங்கி இருந்த வேலையில், சூரியனின் ஒளிக் கிரணங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து, கீழ் வானம் வெளுக்கத் துவங்க... சேவல் கூவி அந்த பொழுது விடிந்ததை சொல்லத் துவங்கி இருந்தது.

மறுநாள் என்ன நடக்கும் என்பது தெரிந்திருந்தாலும், ப்ரித்வி அவளுக்கு தைரியம் கூறி இருந்தாலும், கஜாவின் மனதில் பதட்டமே நிறைந்திருந்தது.

“ஏலேய் முத்து... அங்க என்ன அடுப்பு கிட்ட நின்னுட்டு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க... இன்னும் ஒரு மணி நேரத்துல உனக்கு கல்யாணம்... சீக்கிரம் போய்... குளிச்சு தயாராகு...” தனபாக்கியம் உறக்கத் கத்தும் சத்தமும்,

“என்ன முல்ல... கஜா... இன்னுமா தலையை உலர்த்திக்கிட்டு நிக்கறீங்க? சீக்கிரம்... சீக்கிரம் போய் தயாராகுங்க... ஏண்டி மூத்தவளுங்களா... சீக்கிரம் ரெண்டு பேரையும் அலங்காரம் செய்து கூட்டிட்டு வாங்க...” என்று மேலும் கத்திக் கொண்டே, அங்கேயும் இங்கேயும் தனபாக்கியம் நடந்துக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கஜாவிற்கு அடிவயிறு கலங்கியது.

“ப்ரித்வி உண்மைய சொல்லிட்டா என்ன நடக்கும்...” மனதில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த பயம், நேரமாகமாக மிகவும் வாட்டத் துவங்கியது.

கஜா மெல்ல கண்களை உயர்த்தி முல்லையைப் பார்க்க, அழகிய மாம்பழ வண்ணப் பட்டுப்புடவையில் வெட்கமும், பூரிப்பும் முகத்தில் கலந்து விகசிக்க, அவள் தயாராகி நிற்கவும், கஜாவின் மனம் துணுக்குற்றது.

“இவளது சந்தோசம் நிலைக்குமா? முத்து அண்ணா மேல இவ ரொம்ப அன்ப வச்சிருக்காளே.. கல்யாணம் நின்னா என்ன ஆகறது? நான் என் வாழ்க்கையை மட்டும் பார்த்துட்டு போக முடியுமா?” கஜா யோசனையுடனே, கிளம்பித் தயாரானாள்.

அதே நேரம் ப்ரித்வியை மடியில் தாங்கி பார்வதி அசையாது அமர்ந்திருக்கவும், அவரைக் காணாது தேடிக் கொண்டு வந்த செல்வராஜூ, “என்ன பார்வதி? இன்னும் மாப்பிள்ளை எழலையா? பாவம் நல்லா தூங்கி எவ்வளவு நாளாகுதோ?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே வரவும்,

“ஆமாண்ணே... ரொம்ப நேரமா தூக்கம் வராம உலாதிட்டே இருந்தவன், மடியில படுத்த உடனே நல்லா தூங்கிட்டான்... மனசுல என்னத்தை போட்டு குழப்பிக்கறானோ?” பார்வதி கவலையுடன் சொல்லவும், பேச்சுக் குரல் கேட்ட ப்ரித்வி, மெல்ல கண் விழித்துப் பார்த்தான்.

இரவு அமர்ந்த நிலையிலேயே அமர்ந்திருந்த பார்வதியைப் பார்த்தவன், பதறிப் போய், “என்னம்மா... நீங்க தூங்கவே இல்லையா? அப்படியே உட்கார்ந்து இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே பதட்டத்துடன் எழ,

“அதனால என்ன ராஜா... நீ நிம்மதியா தூங்கின இல்ல...” என்று காலை நெட்டி முறித்துக் கொண்டே சொல்லவும், அவரது காலடியில் அமர்ந்த ப்ரித்வி, அவரது காலை, மெல்ல பிடித்து விட்டுக்கொண்டே,

“என்னம்மா... நான் நல்லா தூங்கினா அதுக்காக இப்படியேவா உட்கார்ந்து இருப்பீங்க? என் தலையை எடுத்து கீழ வச்சு இருக்கலாம் இல்லம்மா?” என்று நெகிழ்ச்சியுடன் கேட்டு, அவனது கண்கள் கலங்கியது.

“என் மகனை மடி தாங்க எனக்கு கசக்குமா என்ன?” பார்வதியின் பதிலில், கலங்கிய கண்ணீர் வழியத் துவங்கியது.

“என்ன ராஜா இது சின்னப்பிள்ளை மாதிரி கண் கலங்கிட்டு இருக்க...” அவனது கண்களை துடைத்துக் கொண்டே பார்வதி கேட்கவும், அவனுக்கு மறுபுறம் அமர்ந்த செல்வராஜூ, அவனது தோளைத் தட்டிக் கொடுத்தார்.

“ஒரு அஞ்சு நிமிஷம் மாமா... இங்கயே இருங்க... நான் வந்துடறேன்... அம்மா நீங்களும்... நான் வந்து பேசின உடனே நீங்க கிளம்பித் தயாரானா போதும்... நான் வரேன்” என்றவனை வாயிலில் முத்து எதிர்கொண்டு,

“ராஜா...” என்று தயக்கமாக அழைக்கவும், அவனை அர்த்தப்பார்வை பார்த்தவன், செல்வராஜுவைத் திரும்பிப் பார்த்து விட்டு, தன்னுடைய சோப்பு, டவல், உடைகளை எடுத்துக் கொண்டு, முத்துவின் அருகில் வந்தான்.

“என்ன ராஜா... நிஜமாவே உண்மைய சொல்லப் போறியா?” முத்து பதட்டமாகக் கேட்கவும்,

“உண்மைக்கு எப்பவுமே சக்தி உண்டுன்னு சொல்லுவாங்க... அது நிஜம்னா... எல்லாம் நல்லதே நடக்கும்...” என்று கூறிய ப்ரித்வி,

“இப்போ நான் எங்க குளிக்கறது?” என்று கேட்க, முத்து காட்டிய இடத்தில், சிறிதும் தாமதிக்காமல், ப்ரித்வி, குளித்து முடித்து வந்தான்.

அதே நேரம் அவனுக்காக காத்திருந்த செல்வராசுவும், பார்வதியும், “என்னாச்சு... மாப்பிள்ளை சீர் செனத்தி எதுனா எதிர்ப்பார்க்கறானா?” செல்வராசு கேட்கவும்,

“ஏன் அண்ணே... என் பிள்ளையப் பார்த்தா சீர் வாங்கி பொழைக்கிற மாதிரியா இருக்கு?” பார்வதி கோபமாகக் கேட்க,

“அப்படி சொல்லல பார்வதி... அப்பறம் எதுக்கு இப்போ பேசணும்னு சொல்றான்? செல்வராசு இழுக்க,

“என் மவன் உன்னை என்னை விட எல்லாம் பெரிய பணக்காரன்... அவனுக்கு எவ்வளவு தொழில் இருக்குத் தெரியுமா?” என்று கேட்ட பார்வதி, முந்தய தினம் ப்ரித்வி கூறியவற்றை எல்லாம் கூறி, தனது மகனின் பெருமையைப் பேசிக் கொண்டிருக்க, குளித்துவிட்டு உள்ளே வந்த ப்ரித்விக்கு, அதைக் கேட்டு மீண்டும் தொண்டையடைத்தது.

“என்ன ராஜா... அதுக்குள்ள குளிச்சிட்டு வந்தாச்சா?” செல்வராஜு கேட்கவும்,

“ம்ம்...” என்றவன், “நீ போய் கிளம்பு முத்து... நான் கொஞ்சம் பேசிட்டு வரேன்...” என்று கூற, முத்து அவனை வருத்தமாகப் பார்க்கவும், கண்களை மூடி நம்பிக்கையளித்துவிட்டு, கதவை அடைத்தான்.

“என்ன ராஜா... என்னாச்சு? எதுக்கு இப்போ கதவடைக்கிற?” பார்வதி பதட்டத்துடன் கேட்கவும்,

“இல்லம்மா... எனக்கு கொஞ்சம் பேசணும்...” அவனது பதிலுக்கு,

“இப்போ என்னய்யா பேச வேண்டிக்கிடக்கு? எல்லாம் கல்யாணம் முடியட்டும்... அப்பறம் பேசிக்கலாம்...” பார்வதி சொல்லவும், ப்ரித்வி மறுப்பாக தலையசைத்துவிட்டு, அவரது காலடியில் அமர்ந்தான்.

“என்னாச்சு ராஜா? அப்படி என்ன இந்த நேரத்துல அவசரமா பேசணும்?” செல்வராசு கேட்கவும்,

“மாமா... உங்க ரெண்டு பேர்கிட்டயும் முக்கியமான விஷயம் பேசணும்... சொல்றேன் இருங்க...” என்றவன், கண்களை மூடி, தன்னை நிதானித்துக் கொண்டு,

“அம்மா நினைக்கிற மாதிரி நான் அவங்க சொந்த மகன் இல்ல...” ப்ரித்வி சொல்லி முடிக்கும் போதே, “என்னது?” என்று செல்வராசு அதிர,

“அதனால என்னய்யா?” பார்வதி, சாதாரணமாக கேட்ட கேள்வியில், இப்பொழுது அதிர்வது ப்ரித்வியின் முறையாயிற்று.

“அம்மா... உங்களுக்கு?” ப்ரித்வி வார்த்தை வராமல் திக்க,

“என்னய்யா? என்ன அதிர்ச்சியா இருக்கா?” அவரது பதிலில், செல்வராசுவுமே, அதிர்ச்சியுடன்,

“என்ன பார்வதி சொல்ற?” என்று திணற,

“ரெண்டு பேருக்குமே சொல்லிக்கறேன்... இது நான் பெத்த ராஜா கிடையாது.... அவன் இப்போ உயிரோட இருக்கானான்னே தெரியாது... ஏன்னா அவன் பயந்து இந்த ஊரை விட்டு ஓடிப் போகும் போது, விஷக்காய்ச்சல் கண்டிருந்துச்சு... உசுரு பிழைக்க வாய்ப்பே இல்லன்னு தான் வைத்தியரும் சொல்லிட்டு இருந்தார்.... உனக்கு அதை எல்லாம் கேட்க எங்க நேரம் இருந்துச்சு... சாதியோட பேரைச் சொல்லி... எத்தனை பேரோட குடும்பத்தை கெடுத்துட்டு இருந்த....” தொண்டையடைக்க சொன்னவர், தனது தொண்டையை சரி செய்து கொண்டு,

“அதனால என்ன? அது தான் என் மகன் இந்த ராஜா இருக்கானே... இவன் எனக்கு போதும்...” என்று சொன்னவர், இன்னமும் இருவரும் அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, பார்வதி மெல்ல எழுந்தார்.

“என் பையனுக்கு இவனைப் போல தீக் காயம் இருக்கும் தான்... ஆனா... அதுக்கும் கீழ, அந்த சாதிக் கலவரத்துல அவனுக்கு ஏற்பட்ட வெட்டுக் காயத் தழும்பும் இருக்கும்... அது இவனுக்கு இல்ல...” மெல்ல ப்ரித்வி தான் பெற்ற மகன் இல்லை என்பதை அவர் விளக்க, ப்ரித்வி நெகிழ்ச்சியுடன், என்ன பேசுவதென்று தடுமாற,

“அப்பறம் எதுக்கு பார்வதி, ஊரு மொத்தத்தையும் கூட்டி வச்சு இவனை உன் பையன்னு சொல்லி ஏம்மாதி இருக்க?” செல்வாரசுவின் குரலில் சூடு ஏறவும்,

“ஏன்னா இந்த சாதியினால நான் என் மவனத் தொலைச்சது போதும்.... உன் மவளும்... அதான் என் மருமகளும் தொலய வேண்டாம்... உன்னோட ஜாதி வெறியால... நீ நிச்சயம் செய்து வச்சிருந்த மாப்பிள்ளையோட லட்சணத்தைப் பார்த்த தானே? அவனுக்கு அவளை கல்யாணம் செய்துத் தரத்துக்கு நீ அவளை பாழும் கிணத்துல பிடிச்சு தள்ளி விட்டுடலாம்... அந்த கஷ்டம் கூட உனக்குத் தர வேண்டாம்ன்னு தான் அந்தப் பிள்ளையும், உசுர விட துணிஞ்சிருச்சு போல...” கசப்பான குரலில், ஏளனமாக பார்வதி சொல்லவும், முதலில் அதிர்ந்த செல்வராசு, அதில் இருந்த உண்மை சுட, தலைகுனிந்தார்.

“இங்கப் பாரு... இப்போவும் உன் சாதி தான் முக்கியம்ன்னு நீ நினைச்சா... இவனையும் உன் சாதிக்கு நான் கொண்டு வரேன்...” பார்வதி சொல்லவும், செல்வராஜு குழப்பமாக பார்க்க,

“என்ன புரியலையா? ஊரறிய இவனை நான் தத்து எடுத்துக்கறேன்னு சொல்றேன்... அதை எந்த கொம்பனாளையும் தடுக்க முடியாது... அப்போவும் இவன் உன் பொண்ணுக்கு முறைப் பையன் தான் ஆவான்.. நான் கேட்டா நீ பொண்ணு கொடுத்துத் தான் ஆகணும்... முடியாதுன்னு சொன்னா.. உன் தங்கச்சிய நீ உயிரோடவே பார்க்க முடியாது...” கோபமாக பார்வதி சொல்லவும்,

“அம்மா...” ப்ரித்வி அதிர,

“பார்வதி...” செல்வராசும் அதிர, இருவரையும் பார்த்தவர்,

“இவனும் என் மகன் தான்... கொஞ்சம் கொஞ்சம் இவனும் என் ராஜா ஜாடையில தான் இருக்கான்... நான் பெக்களைன்னா என்ன? இவன் என் மகன் தானே... என்னவோ இவனைப் பார்த்த முதல் பார்வையிலேயே, எனக்கு இவன் மேல ஒரு பாசம்... அது ஏன் என்னன்னு எனக்கு விவரிக்க தெரியல... பூர்வ ஜென்ம பந்தமோ... யாருக்குத் தெரியும்...” என்றவர், தொடர்ந்து,

“எனக்கும் வயசாகிருச்சுண்ணே... இத்தனை நாளா நான் ஒண்டிக்கட்டியா இருந்தது போதும்ன்னு தோணிருச்சு... என் மவன் இருந்திருந்தா, இப்போ அவனுக்கு இத்தனை வயசாகி இருக்கும்... இருந்திருந்தா இப்போ கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கலாம்... இப்போ என்னை வயலுக்கு போக விடாம வேலைக்கு போயிருப்பான்... இப்போ எதுவுமே இல்லாம தனியா தவிக்க விட்டு போயிட்டியே ராஜான்னு, அவனோட போட்டோவ பார்த்து பார்த்து, ஏங்கி தவிச்சிருக்கேன்..

இவனைப் பார்க்கும் போது, அந்த ஏக்கத்தை எல்லாம் போக்க வந்தவன் போல தான் தோணிச்சு... அதனால நான் இவனுக்கு எல்லா நல்லதும் செய்து பார்க்கணும்... இவனுக்கும் அந்த ராஜா வயசு தானே இருக்கும்... அவன் இருந்திருந்தா கல்யாணம் காட்சின்னு செய்து பார்த்திருப்பேன் தானே.. அதையே நான் இவனுக்கு செய்ய ஆசைப் படறேன்... இவனுக்கு உன் பொண்ணைக் கட்டிக் கொடு...

எனக்கும் பேரன் பேத்திங்கன்னு என் வம்சம் தழைக்கணும்... அதை நான் கண் குளிர பார்க்கணும்...” கண்ணீருடன் அவர் சொல்ல, ப்ரித்வி, அவரது கையைப் பிடித்துக் கொண்டு வார்த்தை வராமல் கண் கலங்க, செல்வராஜு என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினார்.

“நான் இனிமே என் மகன் கூடத் தான் இருக்கப் போறேன்... இங்க என் சொத்தை எல்லாம் முத்துவுக்கு கொடுத்துட்டு, நானும் அவனோட பெங்களூருக்கு போறேன்... நீயே உன் ஊரை கட்டிக்கிட்டு அழு... ஆனா, அதுக்கு முன்ன என் மவன் கல்யாணம் நடந்தாகணும்.. என் உசுரக் கொடுத்தாவது நான் நடத்தி வைப்பேன்... இனிமேலும் நான் ஒண்டிக்கட்டை இல்ல... ராஜா மாதிரி ஆஜானுபாகுவா என் மகன் இருக்கான்...” கோபமாக பார்வதி பேசிக் கொண்டே போகவும்,

“அம்மா...” ப்ரித்வி அவர் அருகில் சென்று, அவரது தோளில் புதைந்து,

“எனக்கு இங்க எதுவுமே வேண்டாம்மா... நீங்க மட்டுமே எனக்கு போதும்... நீங்க என்கூடவே வந்திருங்கம்மா... நான் உங்களை நல்லா பார்த்துக்கறேன்... எனக்கு நீங்க போதும்... உங்களை போல ஒரு அம்மா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்மா...” தனக்கு மீண்டும் தாயன்பு கிடைக்கப் போவதை எண்ணி மனம் மகிழ்ச்சியில் விம்ம கண்ணீர் வடிக்க,

அவரது தோளில் ஈரம் உணர்ந்தவர், “அழுவாத ராஜா... உங்க அம்மா நான் இருக்கேன்....” என்று ஆறுதலாக பார்வதி அவனது தோளைத் தட்டினார்.

“இதை எல்லாம் மனசுல வச்சுட்டு தான் நேத்து ராத்திரியில இருந்து குழம்பிக்கிட்டு கிடந்தயாக்கும்.... ஏன்யா உன் ஆத்தா நான் இருக்க, என்னய்யா பயம் உனக்கு... என் அண்ணன், பொண்ணு கொடுக்கறாரா பாரு... இல்ல... “லக்ஷ்மின்னு’ ஒருவார்த்தை கூப்பிடு... அது உன் கூடவே வந்திரும்... இவங்க தடுத்தாங்கன்னா... நான் ஒரு கை பார்துக்கறேன்...” பார்வதி ப்ரித்விக்கு தைரியம் சொல்லவும்,

“இல்லம்மா... எனக்கு பொய் சொல்றதும் ஏம்மாத்தறதும் பிடிக்காதும்மா..... இப்போ கூட நானா வாயைத் திறந்து சொல்லி இருக்கலைன்னா நீங்களும் சொல்லி இருக்க மாட்டீங்க... ஆனா, அது என் லக்ஷ்மிக்கு நான் கொடுக்கற மரியாதை இல்ல... அவளை நான் உண்மையா கைப் பிடிக்கணும்... அதனால தான் இப்போவே நான் இந்த உண்மைய சொல்லணும்னு நினைச்சேன்...

ஒரு பொய்யால எங்க பந்தம் தொடங்கக் கூடாதுன்னு நான் நினைச்சேன்... இதுக்கும் மேல முடிவெடுக்க வேண்டியது எல்லாம் அவரோட வேலை...” என்றவன், அங்கு டேபிளில் வைத்திருந்த பட்டு வேஷ்டியையும், மாலையையும் நகர்த்தி வைத்து விட்டு, அதன் மீது ஏறி அமர்ந்தான்.

சிறிது நேரம், செல்வராசுவிடம் பதில் ஏதும் பேசாமல், அமைதியாகவே அமர்ந்திருக்க, ப்ரித்வியும் பார்வதியும் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் பதில் சொல்வதற்கான எந்த அடையாளமும் தென்படாமல் போக, “சரிங்கம்மா... நாம கிளம்பலாம்... முத்துவ கூப்பிடுங்க... அப்படியே லக்ஷ்மியையும் கூப்பிடுங்க... அவளுக்கு இந்த விஷயம் நேத்திக்கே தெரியும்... மக்கு என்ன நினைச்சு உளப்பிட்டு இருக்காளோ... போய் அவளைப் பார்த்து பேசிட்டு நாம ஊருக்கு கிளம்பலாம்... இவர் இந்த வெட்டி வைராகியத்தை பிடிச்சிக்கிட்டு தொங்கட்டும்....” என்றவன், தாவி குதித்து இறங்கவும், பார்வதி அவன் அருகில் வந்தார்.

“ஆமாய்யா... முத்துக்கு இன்னைக்கு கல்யாணத்தை நடத்திப்புட்டு... அவனுக்கு வயலைப் பார்த்துக்கற அதிகாரத்தை எழுதிக் கொடுத்துட்டு போகலாம்... என் மருமகளை விருப்பமில்லாத கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்தறாங்கன்னு கூடவே போலீஸ்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு... நாம மருமகளை கூட்டிக்கிட்டு கிளம்பலாம்... அவ எதுக்கய்யா இங்க தனியா கிடந்தது கஷ்டப்படணும்... இவங்களே இந்த ஊரையும் சாதியையும் கட்டியாளட்டும்...” பார்வதி சொல்லிக்கொண்டே, ப்ரித்வியை அழைத்துக் கொண்டு நகர, இருவரும் நகரவும், சுரணை வந்தவர் போல,

“மாப்பிள்ளை... கொஞ்சம் இருங்க...” செல்வராசு அவர்களைத் தேக்கினார்.

இருவரும் திரும்பிப் பார்க்கவும், “என் பொண்ணை நீங்க எந்த அளவு நேசிக்கறீங்கன்னு எனக்கு இப்போ புரியுது மாப்பிள்ளை... உங்களுக்கு பிடிக்காத பொய்ய சொல்லிக்கிட்டு, அவளுக்காக நீங்க வந்திருக்கீங்க... ராஜா... ராஜா தானே உன் பேரு...” செல்வராசு சந்தேகமாக இழுக்கவும்,

“ப்ரித்வி ராஜ்...” அவன் தனது பெயரைச் சொல்லவும், “பேருக்கு ஏத்தது போல நீ ராஜா தான்...” என்றபடி, பார்வதி அவனது கன்னத்தை வழித்து நெட்டி முறித்தார்.

ப்ரித்வி அவரைப் பார்த்து புன்னகைக்கவும், “ம்ம்... சரி ராஜா... நேத்து இங்க வீடே கஜாவைக் காணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்த போது.. நீங்க கீழறையில இருந்து வெளிய வரதை நான் பார்த்தேன்...” செல்வராசு சொல்லி முடிப்பதற்குள்,

“தப்பா எதுவும் நடக்கல மாமா..... உங்ககிட்ட நான் உண்மைய சொல்லறதுக்கு முன்னால... அந்த உண்மைய லக்ஷ்மிக்கு சொல்லணும்னு நான் நினைச்சேன் மாமா... அதனால தான் அவளை தனியா ஒரு இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனேன்... ஆனா, அதுக்கு முன்னையே ‘நீ உண்மையான ராஜா இல்லன்னு எனக்குத் தெரியும்’ன்னு அவ சொல்றா... எப்படின்னு கேட்டா.. நான் தாய் பாசத்துக்கு எவ்வளவு ஏங்கி போயிருக்கேன்னு அவளுக்கு தெரியுமாம்... அந்த ஏக்கத்துக்கு உண்டான ஒட்டுதல் நான் அம்மாகிட்ட காட்டலையாம்... சொல்லி என்னை அசத்திட்டா... நான் கூட அவளை சின்ன பொண்ணுன்னு நினைச்சேன்... ஆனா... ஒரே நாளுல என்னோட அசைவை இந்த அளவு புரிஞ்சு வச்சிருக்கான்னா... என் லக்ஷ்மி... புத்திசாலி தான்...” விளக்கம் சொல்லத் தொடங்கியவன், லக்ஷ்மியை பாராட்டத் தொடங்கவும், செல்வராசுவின் இதழிலும் சிறு புன்னகை அரும்பியது.

“இல்ல மாப்பிள்ளை... நானும் தப்பா சொல்லல... அந்த அளவு என் பொண்ணு உங்க மேல நம்பிக்கை வச்சு இப்போவும் தயாராகிட்டு இருக்கா... என் தங்கை உங்களை தன்னோட மகன்னே சொல்றா... எல்லாத்துக்கும் மேல... உண்மைய சொல்லாம நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு நீங்க நிக்கறீங்க?

இப்போவும் என்னை ஏமாத்தி என் பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போக உங்களுக்கு ரொம்ப நேரம் பிடிச்சிருக்காது தான்... ஆனா.. உங்க நேர்மை அதை சொல்ல வச்சிருச்சு... உங்களை விட எனக்கு வேற நல்ல மாப்பிள்ளை கிடைக்க மாட்டான் மாப்பிள்ளை... நீங்க கஜாவ நல்லபடியா வச்சிப்பீங்கன்னு எனக்கு புரியுது... இதுக்கும் மேல வேறென்ன வேணும்... நீங்க தான் என் மருமகன்... இதுல எந்த மாற்றமும் இல்ல...” செல்வராசு சொல்லவும்,

“அப்போ... ஊரு?” பார்வதி சந்தேகமாக இழுக்கவும்,

“அவளைப் பெத்தவன் எனக்கு உண்மை தெரிஞ்சா போதும்... நீயே மாப்பிள்ளைய மகன்னு சொல்லிட்ட... இதுக்கும் மேல என்ன வேணும்? வேற யாருக்கும் இந்த உண்மை தெரிய வேண்டாம்... மொதல்ல இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு புத்தி வந்து மாறின மாதிரி... மெல்ல நான் இந்த ஊரையும் திருத்திக்கறேன்... இப்போ இது வெளிய தெரிஞ்சா, வாய்க்கு மெள்ள அவல் கிடைச்ச கணக்கா... மென்னுட்டு இருப்பாங்க... அதனால யாருக்கும் தெரிய வேணாம்... தனபாக்கியத்தை நான் பிறகு பார்த்துக்கறேன்...” செல்வராசு சொல்லவும், ப்ரித்வி அவரை நம்பாமல் பார்க்க,

“நிஜமா தான் சொல்றேன் மாப்பிள்ளை” என்றவர், “சாதிய விட, எனக்கு மனுஷங்களும், மனசும் தான் முக்கியம்ன்னு நீங்களும் என் தங்கச்சியும் புரிய வச்சிட்டீங்க... நேத்து பேசிட்டு இருந்த போதும் ராமண்ணா, உங்களை வளர்த்தவங்களோட சொத்து வருமானத்துல இருந்து வர பணத்துல, நீங்க எத்தனை பேரை படிக்க வைக்கறீங்கன்னு சொல்லிட்டு இருந்தார்... நீங்க நினைச்சிருந்தா.. எப்படியோ இருந்திருக்க முடியும்... அதெல்லாம் இல்லாம உழைப்பு, ஒழுக்கம்ன்னு இருக்கறது... எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

பணம் இருந்துட்டா மட்டும் ஊருல பெரியவன்னு சொல்லிக்கிறதுல ஒண்ணும் இல்லன்னு இப்போ புரிஞ்சு போச்சு மாப்பிள்ளை...” என்றவர், அவனுக்கு பட்டு வேஷ்டியை எடுத்து கையில் கொடுத்து, “சீக்கிரம் கட்டுங்க...” என்று அவசரப்படுத்தவும், ப்ரித்வி, அதை கையில் வாங்கி வைத்துக் கொண்டு, முழிக்க,

“என்ன மாப்பிள்ளை... நீங்க இந்த என்னோட மாற்றத்தை எதிர்ப்பார்க்கலையா? இந்த முழி முழிக்கறீங்க?” அவர் கிண்டல் செய்யவும்,

“அவனைப் போய் வேட்டிய கட்டச் சொன்னா... அவனுக்கு எங்க கட்டத் தெரியும்... நேத்தே முத்து தானே கட்டி விட்டான்...” என்று பார்வதி சிரிக்கவும்,

“ஹாஹஹா... இது வேறயா?” என்று மீசையை முறுக்கிச் சிரித்தவர்,

“சரி... நீ போய் குளிச்சிட்டு தயாராகு பார்வதி... நான் மாப்பிள்ளையைத் தயார் செய்யறேன்...” என்ற செல்வாராசு வேஷ்டியை கையில் எடுக்கவும், சந்தேகமாகவே பார்வதி அவரைப் பார்த்துவிட்டு, விரைவாகவே குளித்து தயாராகி வந்தார்.

பார்வதி வெளியில் செல்லவும், முத்து அவசரமாக உள்ளே நுழைய, “என்னடா முத்து.. நீயும் இவங்க கூட கூட்டா?” என்று சிரித்துக் கொண்டே செல்வராசு கேட்கவும், அவர் சிரிப்பில் கோபம் இல்லை, நிறைவே இருப்பதை கண்டுக் கொண்ட முத்து,

“நாங்க வேற ப்ளான் போட்டோம் சித்தப்பா... ஆனா... இவன் தான் பொய் சொல்லவே மாட்டேன்னு ஒரே பிடிவாதம் பிடிச்சான்... பேசி பேசி சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள என் நாக்கு தள்ளிருச்சு...” முத்து சொல்லவும், ப்ரித்வி அவனை “என்ன இது?” என்பது போல பார்க்க, முத்து அவனைப் பார்த்து சும்மா இரு என்பது போல சமிக்ஞை செய்தான்.

“என்ன ப்ளான் செய்தீங்க?” செல்வராஜு கேட்கவும்,

“அதெல்லாம் என் மச்சான் என் தங்கை கழுத்துல தாலிய கட்டட்டும் பிறகு சொல்றேன்...” நமட்டுச் சிரிப்புடன் அவன் சொல்லவும், செல்வராஜு அவனுக்கு பத்திரம் காட்டிவிட்டு, ப்ரித்விக்கு வேட்டியை முடிய, முத்துவை பார்த்த ப்ரித்வி கண்ணடித்து சிரித்தான்.

“ஏலேய் முருகா... மாப்பிளை ரெடின்னு சொல்லுங்க... அய்யர தயாரா இருக்கச் சொல்லுங்க...” என்று குரல் கொடுக்க,

“என்னங்க... நீங்க தான் மாப்பிள்ளையோட தாய்மாமன்... நீங்க தான் அவருக்கு முதல் மாலை போடணும்...” தனபாக்கியம் சொல்லவும், டேபிளில் இருந்த மாலையை எடுத்த செல்வராஜு, அவனுக்கு அணிவிக்க, ராமண்ணா ப்ரித்வியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

“என்ன ராமண்ணா... இப்படி பார்க்கறீங்க?” கூச்சத்துடன் ப்ரித்வி கேட்கவும்,

“உங்களை மாப்பிள்ளை கோலத்துல பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா? லக்ஷ்மிம்மா ரொம்ப கொடுத்து வச்சவங்க...” என்றவர், கைக் கூப்ப,

“கையை கீழே போடுங்க ராமண்ணா... வயசுல பெரியவங்க நீங்க... கை கூப்பிக்கிட்டு...” என்று அதட்ட, அவனை பெருமையுடன் செல்வராசு பார்க்க, பார்வதியும் தன் மகனான, ப்ரித்வியை கண் குளிர பார்த்துக் கொண்டிருந்தார். முத்துவும் தயாராகி வர, இருவரையும் மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்.

மணமேடைக்கு செல்லும்பொழுது, ப்ரித்வியை செல்வாராசு அழைத்துச் செல்ல, “மாமா... உங்களுக்கு ஒண்ணும் மனசு கஷ்டமில்லையே..” ப்ரித்வி கேட்கவும்,

“எனக்கு என்ன மாப்பிள்ளை கஷ்டம்... உங்களை போல மாப்பிள்ளை கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்...” என்று செல்வராசு சொல்லவும், மன நிறைவுடன், ப்ரித்வி மண மேடையில் அமர்ந்தான்.

அறையின் உள்ளே இருந்த கஜாவிற்கு, ப்ரித்வி தன் தந்தையிடம் சொன்னானா சொல்லவில்லையா என்று கூடத் தெரியாமல், உள்ளம் தவித்துக் கொண்டிருந்தாள். கல்யாண வேலையும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கவும், ப்ரித்வி சொல்லவில்லை என்பதை தானே யூகித்துக் கொண்டவள், நகத்தை கடித்து துப்பிக்கொண்டிருந்தாள்.

“என்ன கஜா... என்னை சொல்லிட்டு நீ இவ்வளவு டென்ஷனா இருக்க?” முல்லை கிண்டல் செய்யவும்,

“போடி... உனக்கு என் டென்சன் புரியாது.... ப்ரித்வி என்ன செய்யறாருன்னே தெரியலையே...” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த கஜாவின் அக்காக்கள்,

“அய்யரு உங்களை கூட்டிக்கிட்டு வரச் சொல்லறாரு.. வச வசன்னு பேசாம அமைதியா வாங்க...” என்று அழைக்கவும், அமைதியாக கஜாவும் முல்லையும் அவர்களுடன் நடந்தனர்.

கஜா ப்ரித்வியின் அருகே சென்று அமர, அய்யர் கூறும் மந்திரங்களையும், அவர் சொல்வதையும் செய்துக் கொண்டிருந்தவன், அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் போக்குக் காட்ட, சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவள், அவனது தொடையை நறுக்கென்று கிள்ளினாள்.

“ஆ...” என்றபடி, அவளைத் திரும்பிப் பார்த்தவன், “எதுக்கு இப்போ என்னை கில்லற?” என்று முணுமுணுக்க,

“அப்பாகிட்ட உண்மைய சொல்லிடீங்களா இல்லையா? என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு தெரியாம நான் உள்ள குழம்பிட்டு, பயந்து கிடக்கேன்... நீங்க என்னடான்னா... இங்க வந்து உட்கார்ந்துக்கிட்டு கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டு இருக்கீங்க...” அவளும் பதிலுக்கு முணுமுணுக்க,

“எல்லாம் சொல்லியாச்சு சொல்லியாச்சு... சொல்லாம நான் இங்க வந்து உட்கார்ந்து இருப்பேனா?” அவன் பதில் கேள்வியாக கேட்கவும்,

“சொல்லியாச்சா... அதை கேட்டு அவர் ஒண்ணும் சொல்லலையா?” அவன் புறம் திரும்பிக் கொண்டு, விழிகளை விரித்து கொஞ்சம் சத்தமாகவே அவள் கேட்கவும், மேடையில் நின்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த செல்வராசு...

“அம்மாடி... கல்யாண பொண்ணா லட்சணமா தலை குனிஞ்சு உட்காரு...” செல்வராசு சொல்லவும், அதற்கு மேல் கஜா தலையை நிமிர்த்தாமல் மணப்பெண்ணாய் அமர்ந்திருந்தாள்.

“முல்ல... நீ தான் நாத்தனார் முடிச்சு போடணும்... இங்க வா...” என்று பார்வதி அழைக்கவும், ப்ரித்வியும் அவளை ‘வா’ என்று தலையசைத்து அழைக்க,

“கெட்டி மேளம்... கெட்டி மேளம்..” என்ற அய்யரின் குரலைத் தொடர்ந்து, ப்ரித்வி, மஞ்சள் கயிற்றில் மின்னிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை, தனது லக்ஷ்மியின் கழுத்தில் முடிச்சிட, மீதி முடிச்சை முல்லை போட, ப்ரித்வி, கஜாவை தன்னுடையவளாக்கிக் கொண்டான்.

முல்லை கஜாவிற்கு முடிச்சிட்டு முடிக்கவும், மீண்டும் ஒருமுறை கெட்டிமேளம் கொட்ட, கஜாவின் அக்கா முடிச்சிட, முத்து, முல்லையை தன்னுடையவளாக்கிக் கொண்டான்.

“எங்க அப்பா ஒண்ணும் சொல்லலையா?” அக்னியை மூன்று முறை வளம் வரும் பொழுது மீண்டும் கஜா தொடங்கவும்,

“ஒண்ணுமே சொல்லலையே... நான் உனக்கு கிடைக்க நீ ரொம்ப தவம் பண்ணி இருக்கணுமாம்... நீ என்னை கண்கலங்காம பார்த்துக்கணுமாம்...” ப்ரித்வி சொல்லத் தொடங்கவும், “சப்பா... இந்த வாய் தான்யா உன்னை வாழ வைக்குது...” என்று கஜா சலித்துக் கொள்ள,

“அதை நீ சொல்றா?” என்று கேட்ட ப்ரித்வி, அவள் முறைக்கவும், உல்லாசமாக அவளது கைப் பிடித்து சுற்றி வந்தான்.

பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிறகு, விருந்து கலைக்கட்டத் துவங்கியது. ப்ரித்வியும், முத்துவும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, செல்வராஜு அவர்கள் அருகில் நெருங்கினார்.

“என்ன சித்தப்பா... அங்க உங்க பங்காளிங்க உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்க... நீங்க இங்க சுத்திட்டு இருக்கீங்க? எங்க பெண்டாட்டிங்கள இங்க கூட்டிட்டு வந்தா நல்லா இருக்கும்...” முத்து கிண்டல் செய்ய,

“மொதல்ல என்ன பிளான் போட்டு என்னை ஏமாத்த நினைச்சீங்கன்னு சொல்லுங்க...” செல்வராசு ரகசியமாகக் கேட்கவும், ப்ரித்வி சத்தமாக சிரிக்கத் தொடங்கினான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல சித்தப்பா... இவன் முதல் முறை ஊருக்குள்ள வந்துட்டு போன போதே, திரும்பவும் வருவான்னு தோணிச்சு... நான் நினைச்சது போலவே, அடுத்த நாள் காலையிலயே, இவன் ஊருக்குள்ள வந்து தில்லா, நம்ம ஊரு மக்கள் கிட்ட பேசிட்டு நின்னானா... அதுவும் இவன் போட்டு இருந்த கெட்அப்பு ஒண்ணும் இவனை அடையாளம் தெரியாத மாதிரி ஒண்ணும் இல்ல... இருந்தாலும் செம தில்லா ஓடி ஒளியாம நின்னான் பாருங்க...

அப்போவே எனக்கு இவன் கஜா மேல வச்சிருக்கற காதல் உண்மைன்னும்... இவன் அவளை நல்லா பார்த்துப்பான்னும் தோணிச்சு... அந்த பழனியைப் பத்தி தான் எனக்கு அப்போவே தெரியுமே... நான் எத்தனை முறை உங்ககிட்டையும் சொல்லி இருக்கேன்... நீங்க எங்க கேட்டீங்க?” சந்தடி சாக்கில், அவருக்கு கொட்டு வைக்க,

“நான் செய்தது தப்பு தான் ராசா... மேல சொல்லு...” கதை கேட்கும் சுவாரஸ்யத்துடன் அவர் கேட்கவும்,

“லக்ஷ்மி அன்னிக்கு காலையில சொன்னதை எல்லாம் முத்து சொன்னான்... எனக்கு வயிறு கலங்கிருச்சு... அவளை மீட்க நான் என்ன செய்யவும் தயாரா இருக்கேன்.. எனக்கு அவ வேணும்னு நான் முத்துகிட்ட கோபமா கத்தினேன்... அதுக்கு அவன் கொஞ்ச நேரம் குறுக்கையும் நெடுக்கையும் யோசிச்சிட்டு... திடீர்ன்னு என்னை தள்ளிவிட்டு, என் கையை அவன் துண்டால கட்டி, இழுத்துட்டு போக ஆரம்பிச்சான்... போற வழியில..

ஊர் முன்னால உன்னை நிறுத்தறேன்... எப்படியும் சவுக்கால அடிக்கணும்ன்னு தான் சொல்லுவாங்க... அப்போ நீ மயங்கி விழறா மாதிரி விழுந்து, உனக்கு பழசெல்லாம் நியாபகம் வந்தா மாதிரி நடின்னு, அம்மாவைப் பத்தியும்... ராஜாவைப் பத்தியும் சொன்னான்... ‘எந்த பிரச்சனையும் இல்லாம லக்ஷ்மியை கல்யாணம் செய்துக்க இதைத் தவிர வேற வழி இல்ல... பெரியவங்க ஆசீர்வாதத்தோட உங்க கல்யாணம் நடக்கணும்... இல்லன்னா... சாதி... வெளியூருன்னு... இப்படி பல காரணங்கலாள... நீ எவ்வளவு நல்லவனா இருந்தாலும், என்ன செய்தாலும் உனக்கு கட்டித் தர மாட்டாங்க...

அதுவும் இல்லயா... நீ வீடு புகுந்து அவளைத் தூக்கணும்... ஒத்தையாளா இருந்துட்டு நீ என்ன செய்வ? நீ ஒண்ணும் சினிமா ஹீரோ கிடையாது பத்து பேரை அடிச்சு அவளை தூக்கிட்டு போக... எது நல்லதுன்னு பார்த்துக்கோ... உனக்கு யோசிக்க ரொம்ப நேரம் எல்லாம் இல்ல... நாளைக்கு காலையில பழனி கூட கல்யாணம்ன்னு, சித்தப்பா முடிவு செய்திருக்கார்... இனி உன் முடிவுதான்’னு முத்து சொன்னான்....

எனக்கும் லக்ஷ்மிய மீட்க வேற வழி தெரியல... யாருமே இல்லாம அநாதையா இருக்கற எனக்கு... பெரியவங்க ஆசீர்வாதத்தோட தான் லக்ஷ்மிய கைப்பிடிக்கணும்னு ஆசை... அதனால நான் சரின்னு ஒத்துக்கவும், இவன் என்னை ஊர் முன்னால நிறுத்தி... ஊரைக் கூட்டிட்டான்...

ஆனா... பழனி என் சட்டையை கிழிச்சதுல இருந்து... எங்க பிளானே மாறிப் போச்சு... அம்மா வந்து அவங்க கையில எங்க பிளானை எடுத்துக்கிட்டாங்க..

அதுல நான் ஏதோ சொல்லப் போக தான்... என்னை பேசிக் குழப்பாதேன்னு முத்து அடக்கிட்டான்... அப்பறம் நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே மாமா... எனக்கு அம்மாவை ஏமாத்தறோமேன்னு தான் ரொம்ப உறுத்திட்டு இருந்துச்சு... உண்மைய சொல்லிடலாம்... அப்பறம் நடக்கறதைப் பார்த்துப்போம்ன்னு முத்துகிட்ட சொல்லிட்டேன்... லக்ஷ்மியை விடவும் மனசில்லாம, பொய்ய தொடரவும் பிடிக்காம தவிச்சிட்டு இருந்தேன்... அம்மா மடி தான் எனக்கு எல்லா தைரியத்தையும் கொடுத்துச்சு... துணிஞ்சு உங்க கிட்ட உண்மைய சொல்லிட்டேன்....

காலையில அம்மா பேசினதைக் கேட்டு... எனக்கு வந்த நிம்மதி... சொல்ல வார்த்தைகள் இல்ல மாமா... உங்க பொண்ணால எனக்கு எவ்வளவு சொந்தம் கிடைச்சிருக்கு தெரியுமா? என் லக்ஷ்மி என் வீட்டு மகாராணி மாமா..” என்றவன்,

“இன்னமும் முழுசா என்னைப் பத்தி தெரியாது தானே மாமா...” என்ற ப்ரித்வி, அவர் பதில் பேச இடமே அளிக்காமல், தன்னைப் பற்றி சொல்லி முடித்து, ‘ராமண்ணா..’ என்று அழைக்க, ராமண்ணா அவனது அருகில் வந்தார்.

“என்னோட போனை கொடுங்க ராமண்ணா... மாமாவுக்கு நம்ம வீட்டைக் காட்டறேன்...” என்றவன், தனது செல்லில் இருந்த புகைப்படத்தை அவருக்கு காட்ட, செல்வராஜு அசந்தே போனார்.

“நம்ம மாப்பிள்ளை சின்ன இடமெல்லாம் இல்ல சித்தப்பா... பெரிய இடம் தான்...” முத்து கிண்டல் செய்யவும்

“என் மாப்பிள்ளை குணத்தால உசந்தவர் தான்...” முத்துவிற்கு அவர் பதில் சொல்லவும், அப்பொழுது அங்கு வந்த தனபாக்கியம், அவரது கையில் இருந்த புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்க,

“போதும் வாயை மூடு... போய் மீதி வேலை எல்லாம் கவனி...” செல்வராசு அவரை விரட்டி அனுப்ப,

“மாப்பிள்ளை வீட்டை இவர் தான் பார்ப்பாராம்... நல்லா கதையா இருக்கு இது..” என்று நொடித்துக் கொண்டு அவர் உள்ளே செல்ல,

“அண்ணே... மணியாச்சு.... நாங்க கிளம்பறோம்...” பார்வதி வந்து நிற்கவும், செல்வராசுவிற்கு மனதில் மகளை பிரியும் சிறு வலி எழுந்தது...

“மாமா... உங்களை அக்கா வரச் சொல்றாங்க...” கஜாவின் தம்பி வந்து நிற்கவும்,

“வாடா என் மச்சான்... இத்தனை நேரம் அங்க இங்க ஓடி ஆட்டம் காட்டிட்டு இப்போ எப்படி பக்கம் வந்த...” ப்ரித்வி சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, முத்துவைப் பார்த்துவிட்டு, அவனுடன் நடக்கவும், முத்துவும், தனது தந்தையின் அருகில் சென்றான்.

“இல்ல மாமா... உங்களைப் பார்த்தா பயமா இருந்துச்சு... அது தான்...” அவன் இழுக்கவும்,

“என்னை பார்த்து பயப்பட நான் ஒண்ணும் பூதம் கிடையாது...” என்று சொல்லிக்கொண்டே அவன் கஜா இருக்கும் இடத்திற்கு வர,

ப்ரித்வியைப் பார்த்ததும், “சரி... நீ போய் பெட்டியை எல்லாம் எடுத்து வைக்கிற வேலையைப் பாரு... நான் மாமாகிட்ட பேசிக்கறேன்...” என்று அவனை விரட்டிய கஜாவைப் பார்த்து உல்லாசமாக சிரித்தவன்,

“ஹாய் புது பெண்டாட்டி... என்ன மாமன பார்க்காம சோறு உள்ள இறங்கலையா?” என்று அவள் நெற்றியில் முட்டிக் கொண்டே கேட்கவும்,

“இப்போ தானே உங்க கூட உட்கார்ந்து ஒரு பிடி பிடிச்சிட்டு வந்து இருக்கேன்... அதனால பசிக்காது.. இப்போ நான் கூப்பிட்டதே வேற விஷயத்துக்கு...” அவசரமாக அவள் சொல்லவும்,

“என் மேல உனக்கு இவ்வளவு ஆசையா செல்லம்... உனக்கு இல்லாததா...” என்று உதட்டை குவித்து, அவளது இதழை நெருங்கவும்,

“அய்யே... ஆசையைப் பாரு.. எப்பப் பாரு இதே நினைப்பு தானா?” என்று சிணுங்கியவள், அவனிடம் இருந்து விலகி நின்று,

“உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழனி... நேத்து குடி போதையில, கீழ விழுந்து கால் ரெண்டும், கை ரெண்டும் உடைஞ்சு போச்சாம்... இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கானாம்...” கஜா ஒருமாதிரிக் குரலில் சொல்லிவிட்டு, ப்ரித்வியை சந்தேகமாகப் பார்க்க, ப்ரித்வி கள்ளப் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்ன... எல்லாம் உங்க வேலையா? இது தான் நீங்க சொன்ன கல்யாண பரிசா?” விழிகளை விரித்து அவள் கேட்கவும்,

“பின்ன.... என் பெண்டாட்டியை வேக வைப்பேன்னு சொன்னவன் வாயும், அவளை சூடு வச்சவன் கையும்... என்னை எட்டி உதைச்சவனோட காலும், நல்லா இருக்கலாமா?” அதே புன்னகையுடன் அவன் கேட்கவும்,

“இது எப்போ நடந்தது...” கஜா ஆச்சரியமாகக் கேட்கவும்,

“இங்க நேத்து உன்கிட்ட பேசிட்டு, நேரா அவனைப் பார்க்கத் தான் போனேன்... ஏற்கனவே ஜோசப் அவனை பிடிச்சு வச்சிருந்தான்.... நானும் போய்... என் கையால நாலு தட்டு தட்டிட்டு, சத்தமில்லாம வீட்டுக்கு திரும்ப வந்துட்டேன்...” என்று ராகம் பாடிக் கொண்டே, அவளை தன்னருகே இழுத்தவன், பழனி சூடு வைத்த புண்ணில் இதழை ஒற்ற, அவன் தனக்காக செய்திருக்கிறான் என்ற சந்தோஷத்தில், அவனது கன்னத்தில் எம்பி முத்தம் வைத்தவள்,

“என் மாமான்னா... மாமா தான்...” என்று கொஞ்சவும் செய்ய, அப்பொழுது அவர்களை அழைக்க வந்த பார்வதி, “அடிப்பாவி...” என்று வாய் பிளந்து நிற்க, கஜா வெட்கத்துடன், “மாமா... ஐயோ அத்தை பார்த்துட்டாங்க...” என்று அவன் பின்னால் ஒளிந்தாள்.

“அம்மா... நான் ஒண்ணும் செய்யலம்மா... சும்மா அங்க உட்கார்ந்துட்டு இருந்த நல்ல பிள்ளய.. இவ தான் கூப்பிட்டு அனுப்பினா... வேணும்ன்னா கோடிஸ்வரன் கிட்ட கேட்டுப் பாருங்க...” ப்ரித்வி நல்ல பிள்ளை போல சொல்லவும்,

“அத்தை... மொதல்ல நான் ஒண்ணும் முத்தம் தரல... உன் மவன் தான்... நான் தான் நேத்தே சொன்னேனே... உன் மகன் சரியான ஜொள்ளுன்னு” ப்ரித்வியை இடித்துக் கொண்டே, கஜா வேகமாக சொல்லவும், இருவரையும் பார்த்து சிரித்தவர்,

“சரி... சரி... சீக்கிரம் கிளம்புங்க... நல்ல நேரம் போறத்துக்குள்ள நம்ம வீட்டுக்குப் போகலாம்...” பார்வதி அவர்களை விரட்டவும், இருவரும் கிளம்பத் தயாரானார்கள்.

மதிய விருந்திற்கு பார்வதி ஏற்பாடு செய்திருக்க, “ராமண்ணா.. நீங்க வேணா ஜோசப் கூட கிளம்புங்க... நான் நாளைக்கு லக்ஷ்மியையும், அம்மாவையும் கூட்டிட்டு வரேன்... நீங்களும் வந்து நாளாச்சே...” ப்ரித்வி சொல்லவும்,

“அதனால என்ன தம்பி... இன்னைக்கு ஒரு நாள் தானே...” அவர் சொல்லிக் கொண்டிருக்கவும்,

“இல்ல ராஜா... நாளைக்கு காலையில மறுவீட்டு விருந்துக்கு போயிட்டு தான் நீ ஊருக்கு கிளம்ப முடியும்... எப்படியும் அது ஒரு மூணு நாள் ஆகும்...” சொல்லிக் கொண்டே பார்வதி வர,

“அம்மா... என்ன சொல்றீங்க? நான் மட்டும் கிளம்பவா... அப்போ நீங்க? நான் காலையில சொன்னது பேச்சுக்கு சொல்லலைம்மா... நீங்க என் கூட வந்திருங்க...” ப்ரித்வி அழைக்கவும்,

“எனக்கு இந்த ஊரு தான் ராஜா எல்லாமே... இதை விட்டு நான் எப்படி?” அவர் தயங்கவும்,

“ஏன்ம்மா... என்கூட நீங்க வர மாட்டீங்களா? நீங்க வருவீங்கன்னு நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேனே.. எங்களோட இருங்கம்மா... நான் அப்போ அப்போ உங்களை இங்க கூட்டிட்டு வரேன்... மாசம் ஒரு தரவ... சரியா...” அவரை சம்மதிக்க வைக்கும் நோக்கோடு அவன் கேட்க, பார்வதி தயங்கி நின்றார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
“நீங்க வரலன்னா... என்னோட பேசாதீங்க... நான் இப்போவே கிளம்பறேன்...” அவனும் வீம்புக்கு சொல்ல,

“சரி... சரி கோவிச்சுக்காத கண்ணு... நான் வரேன்... அப்படியே உங்க அப்பா போலவே அடம்...” என்ற பார்வதி அவனைப் பார்த்து புன்னகைத்தார்.

“ஹ்ம்ம்.. இது நல்ல அம்மாவுக்கு அழகு... அதே வேகத்தோட போய், இந்த மூணு நாள்ல கிளம்பற வழியையும் பாருங்க... நாளைக்கு முத்துவைப் பார்த்து பேசிடலாம்...” என்ற ப்ரித்வி,

“ராமண்ணா... அப்போ விருந்து முடிஞ்சு கிளம்ப இன்னும் மூணு நாள் ஆகுமாம்...” ப்ரித்வி சிரிக்க,

“சரிங்க தம்பி... எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல... நான் வீட்ல சொல்லிடறேன்... அப்பறம் டாக்டர் உங்களுக்கு வாழ்த்து சொல்லச் சொன்னா... அண்ணிய பார்க்க அவ ஆவலா காத்துட்டு இருக்காளாம்..” அவர் சொல்லவும்,

“அவ பேசின அப்போ என் கிட்ட கொடுத்திருக்கலாமே ராமண்ணா... நான் பேசி இருப்பேனே...” என்றவன்,

“இல்ல தம்பி... நீங்க அப்போ உள்ளார பேசிட்டு இருந்தீங்க... அதனால நான் தரல... ஊருக்கு போய் பேசிக்கலாம்...” என்று சொல்லவும், “இப்போவும் காலேஜ்ல இருப்பா...” என்ற சிந்தனையுடன், ப்ரித்வி ஒப்புதலாக தலையசைத்தான்.

“நான் ஜோசெப்ப அனுப்பிட்டு இங்க இருக்கேன் தம்பி... எதுக்கும்... என் மனசு திருப்திக்கு... நீங்க ஒண்ணும் காரை ஓட்டிட்டு வர வேண்டாம்... டிரைவர் நான் எதுக்கு இருக்கேன்...” அவர் சொல்லவும்,

“சரிங்க ராமண்ணா... உங்க இஷ்டம்...” என்றவன், அவருடன் பேசிக் கொண்டிருந்தான்.

ப்ரித்வி ராமண்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தாலும், அவனுடைய பார்வை, பார்வதியுடன் அங்கும் இங்கும் சென்றுக் கொண்டிருத்த கஜாவையேத் தொடர, அவளும் அவனையே பார்வையில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

மாலையும் கவிழ்ந்து இரவும் கவிழ, முத்துவின் வீட்டில், முத்து முல்லைக்கு முதலிரவிற்கான ஏற்பாடு நடந்துக் கொண்டிருக்க, தங்களது அறையில், பார்வதி, ப்ரித்விக்கும் கஜாவிற்கும் ஏற்பாடு செய்ய, தனபாக்கியம் மகளுக்கு பல அறிவுரைகளை வழங்கி, அறைக்குள் அனுப்பி வைத்தார்.

உள்ளே நுழைந்தவள், அங்கு ப்ரித்வி, லேப்டாப்பும் கையுமாக அமர்ந்திருக்கவும், முதலில் தலையில் அடித்துக் கொண்டவள், இருக்கும் அறை நினைவிற்கு வர, நாணத்துடன் மெல்ல அடியெடுத்து வைத்தாள். அவனை நெருங்கி நின்றவள், “என்னங்க...” என்று மெல்லிய குரலில் அழைக்க,

“என்ன லக்ஷ்மி... நான் முக்கியமான வேலையில இருக்கேன்... தொல்லை பண்ணாம போய்ப் படு...” அவன் கடுகடுவென்ற முகத்துடன் சொல்லவும்,

“ஹ்ம்ம்... சாமியாரு... மரமண்டை... முதலிரவு ரூமுக்குள்ள இவனுக்கு யாரு லேப்டாப்பை கொண்டு வந்து கொடுத்தது... எல்லாம் அந்த ராமண்ணா வேலையா இருக்கும்...” மனதினில் திட்டிக் கொண்டவள்,

“இந்த பாலை குடிச்சிட்டு... உங்க காலை கொஞ்சம் காட்டினா... எங்க ஆத்தா சொன்னா மாதிரி செய்துட்டு நான் தூங்குவேன்...” கோபமாக அவள் சொல்லவும், தனது காலை நீட்டியவன், அவளைப் பார்க்காது,

“எனக்கு பால் பிடிக்காது... முடிஞ்சா காபியோ டீயோ போட்டு எடுத்துக்கிட்டு வா... இல்ல... இதை நீயே குடிச்சிட்டு படு...” என்று சொல்லவும்,

“மரமண்டை...” கொஞ்சம் சத்தமாகவே திட்டியவள்,

“இன்னைக்கு பிடிக்கலைனாலும் குடிக்கத் தான் வேணுமாம்... அத்தை சொன்னாங்க...” பல்லைக் கடித்துக் கொண்டு அவள் வார்த்தையை கடித்து துப்ப,

“நான் குடிக்கலைன்னு உனக்கு மட்டும் தானே தெரியும்... நீ தான் நிறைய பொய் சொல்லுவியே... அப்படியே இதையும் சொல்லிடு... இப்போ எனக்கு நிறைய வேலை இருக்கு.... என்னை இப்போ பேசியே தொல்லை செய்யாதே... ரொம்ப முக்கியமான வேலையில இருக்கேன்” என்றவன், கண்களை இன்னமும் லேப்டாப்பை விட்டு அகற்றாமல் இருக்க, அதற்கு மேல் பொறுமை இழந்த கஜா, பால் சொம்பை டேபிள் மீது வைத்துவிட்டு, சேலையை தூக்கி சொருகிக் கொண்டு, அவனது தலையை பிடித்து உலுக்கத் தொடங்கினாள்.

“இங்க ஒருத்தி... அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு... வராத வெட்கத்தை கஷ்டப்பட்டு கொண்டு வந்து, வெட்கப்பட்டுட்டு வந்து நின்னா... அதை எதையும் பார்க்காம... அந்த லேப்டாப்ல என்ன விளையாடிக்கிட்டு இருக்கீங்க... அப்படி என்ன அது என்னை விட முக்கியம்..” அவனது தலை முடி, அவளது கையில் பாடாய் பட, மெல்ல லேப்டாப்பை அருகில் வைத்தவன், அவளை பிடித்து, தன்னுடன் இறுக்கிக் கொண்டு,

“அங்க என்ன இருக்குன்னு பாரு... என் அழகான பெண்டாட்டிய பார்த்து ரசிச்சுக்கிட்டு இருக்கேன்... வந்து தொல்லை செய்யறியே...” என்று செல்லமாக நெற்றியில் முட்ட,

“ஆமா... உங்க அழகான பெண்டாட்டி தான் உங்க கண்ணு முன்னையே நின்னுட்டு இருக்கேனே... அப்பறம் எதுக்கு இந்த போட்டோ எல்லாம்...” அவனது கையில் வாகாக சாய்ந்துக் கொண்டவள், அவனிடம் செல்லமாக சிணுங்க,

“என்ன இருந்தாலும்... நீ எனக்கு சொந்தமான தருணம் இல்லையா லக்ஷ்மி... அதை ரசிச்சுக்கிட்டு இருக்கேன்... எல்லாம் ராமண்ணா எடுத்த போட்டோ தான்... அப்படியே நீ செய்த சேட்டையை எல்லாம் எடுத்து வச்சிருக்கார்...” ப்ரித்வி சிரிக்க, தாவி அந்த புகைப்படத்தைப் பார்க்க, அவள் முறைப்பது போல இருக்கவும்,

“என்னங்க இது? இதெல்லாம் போய் எடுத்து வச்சிருக்கார்... நாளைக்கு ராமண்ணாவ கவனிக்கறேன் இருங்க...” என்று அவள் சண்டைக்கு நிற்கவும், “ஹஹாஹா..” என்று சத்தமாக சிரிக்கத் தொடங்கினான்.

“நல்லா சிரிங்க... என்னைப் பார்த்தா உங்களுக்கு கேலியா இருக்கு இல்ல...” அவனது மார்பில் குத்திக் கொண்டே அவள் கேட்கவும்,

“உன்னை பார்த்து அவர் ஏற்கனவே பயந்து நடுங்கறார்... பார்த்தும்மா... இப்படி அவர் கிட்ட சண்டைக்கு நின்ன... அப்பறம் அவர் இப்போ லக்ஷ்மிம்மான்னு சொல்றது போய்... உன் மிரட்டல்ல பயந்து லக்ஷ்மி மேடம்ன்னு கூப்பிட தொடங்கிடப் போறார்...” அவன் வாய் விட்டு சிரித்துக் கொண்டே சொல்லவும்,

“சிரிக்காதீங்க... சிரிக்காதீங்க... ப்ளீஸ்...” என்று சிணுங்கியவள், அவனது வாயை மூட,

அவளது விரலைப் பிடித்து முத்தமிட்டு, “இந்த பயணம் கிளம்பும் போது... இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு கிடைக்கும்னே நான் எதிர்ப்பார்க்கலை லக்ஷ்மி... ஐ லவ் யூ பேபி... ஐ லவ் யூ டார்லிங்... ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்.... ஐ லவ் யூ....” ஒவ்வொரு முறை காதலைச் சொல்லும் பொழுதும், அவளது கன்னம், கண், நெற்றி, என்று இதழ்கள் பதித்துக் கொண்டே வந்தவன், அவளது இதழைத் தீண்ட, முகம் குங்குமமாய் சிவக்க, அவனுள் புதைந்தவளை, தன்னுடன் புதைத்துக்கொண்டு, கவிதை எழுதத் தொடங்க, மனம் நிறைந்த காதலுடன் தன்னைக் கொடுத்தவள், அவனது மார்பில் தலை சாய்த்தபடி, அவனது காதில்,

இனியெல்லாம் சுகமே

திகட்ட வைக்கும்

சந்தோசங்களும்

திருடிக் கொள்ளும்

இன்பங்களுமாய்

காதோரம் கிசு கிசுக்கும்

காதல் மொழிகள் ...

அடிக்கடி நமது நெருக்கத்தில் வெட்கப்பட்டு

ஒதுங்கி நிற்கும் காற்று,

ஊடல் பாதி காதல் மீதி என

இனி உன் சமையலறை

குறும்புத்தனங்கள்

சொல்லவிருக்கும்

ஆயிரம் காதல் கதைகள் !!

சோகத்தை உலர்த்துவதற்கு இனி

என் விரல்கள் தேவை இல்லை

நீ இருக்கிறாய் !!

இனியெல்லாம் சுகமே !!!

என காதலுடன் மெல்ல முணுமுணுக்க, அந்த அன்பில் நெகிழ்ந்தவன், மீண்டும் அவளுடைய விழியோரக் கவிதைகளை படிக்கத் தொடங்க, அந்த கவிதைகளை படித்துக் கொண்டே மீண்டும் அவளை சிறையெடுத்தான்.

மூன்று நாட்களும் விருந்து வைத்தே ப்ரித்வியை தனது பாசத்தில் செல்வராசு மூழ்கடித்து இருந்தார்.

“லக்ஷ்மி... நான் பெங்களூர் போன உடனே ஜாகிங்க்கு போய் தான் இப்போ சாப்பிடற விருந்துல ஏறின களோரீஸ குறைக்க முடியும் போல...” என்று புலம்பிக்கொண்டே அவன் சாப்பிட்டாலும், அந்த அன்பில் அவன் கரைந்து தான் போனான்.

“சும்மா சாப்பிடுங்க... நான் வந்து சமைக்கிற சமையல்ல...” கஜா தொடங்கவும்,

“அதுல சரி பண்ணிக்கலாம்ன்னு சொல்றா? அதுவும் கரெக்ட் தான்... நல்லவேளை அம்மா நம்ம கூட வரேன்னு சொல்லி என் வயித்தை காப்பாத்தினாங்க... இல்ல... நான் என்ன நிலைக்கு ஆகறது...” என்று விடாமல் அவன் வம்பிழுக்கவும், அவனை நறுக்கென்று கிள்ளியவள்,

“அப்பறம் லக்ஷ்மி... லச்சுன்னு கொஞ்சிக்கிட்டு வருவீங்க தானே... அப்போ உங்களை கவனிக்கறேன்...” என்று முறைக்க,

“இப்படி எல்லாம் சொன்னா... நான் என்ன ஆகறது லச்சு... கோவிச்சிக்க கூடாது என் செல்ல பொண்டாட்டி...” என்று கொஞ்சி அவளிடம் சரணடைய, “அது...” என்ற மிரட்டலுடன், அவனுக்கு உணவை பரிமாறி, அவனை கவனமாக பார்த்துக் கொண்டாள்.

மூன்று நாட்கள் முடிந்து, அவர்கள் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது. கஜாவை பிரிவதை எண்ணி முல்லை அழுது கொண்டிருக்க, அவளது அழுகையை நிறுத்த எண்ணி, “நான் பெட் கட்டினது போல... என் ப்ரித்வி வந்து... என்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறார் பார்த்த இல்ல... நான் தானே ஜெயிச்சேன்...” என்று வம்பு வளர்க்க,

“சீ போடி... எந்த நேரத்துல எதைப் பத்தி பேசிட்டு இருக்க... நானே நீ ஊருக்கு போறன்னு அழுதுட்டு இருக்கேன்...” முல்லை சொல்லவும்,

“இல்லையே... இனி என் தொல்லை இல்லாம இருக்கலாம்ன்னு தானே நீ சந்தோஷத்துல கண்ணீர் விடற...” மேலும் கஜா அவளை வம்பிழுக்கவும், முல்லை அவளை அடிக்கத் தொடங்கினாள்.

முத்துவிடம் சென்ற ப்ரித்வி, “நீ செய்த உதவிக்கு... நன்றிங்கற ஒரு வார்த்தையால என் நன்றியை சொல்ல முடியாது.. ஆனாலும் ரொம்ப தேங்க்ஸ் முத்து... இந்தா உங்க கல்யாணத்துக்கு என்னோட சின்ன பரிசு...” என்றவன், அவனது கையில் ஒரு கவரை வைக்க, அதைப் பிரித்துப் பார்த்த முத்து, குழப்பமாக ப்ரித்வியைப் பார்த்தான்.

“மதுரைல இருந்து, நீயும், முல்லையும் பெங்களூர் வர பிளைட் டிக்கெட்.... உங்க ரெண்டு பேருக்கும் தேன் நிலவு அங்க தான்... நல்லா ஊரை சுத்திப் பார்க்கறோம்... ஜாலியா என்ஜாய் பண்ணறோம்... சரியா...” ப்ரித்வி சொல்லவும்,

“நான் என்ன பெருசா செய்துட்டேன்... அதுல என் சுயநலமும் இருக்கு இல்ல... என் தங்கை வாழ்க்கை நல்லா அமையணும்ன்னு தானே நானும் உனக்கு உதவினேன்... ஒருவேளை அந்த பழனி நல்லவனா இருந்திருந்தா... நான் உனக்கு உதவி இருப்பேனோ என்னவோ...” முத்து சங்கடமாக சொல்லவும், ப்ரித்வி அவனது தோளைத் தட்டினான்.

“எனக்கு ஒரு நல்ல பிரெண்ட் கிடைச்சிருக்க... எதுக்கு அப்படி இருந்தா... இப்படி இருந்தான்னு நாம யோசிக்கணும்... நான் சொன்ன மாதிரி... பழனி கூட கல்யாணம் நடக்கக் கூடாதுங்கற வேகத்துல தான் லக்ஷ்மி, பிரெண்ட்சை விட்டு தனியா கிளம்பி வந்தா... பழனி நல்லவனா இருந்திருந்தா... இந்த பந்தம் தொடங்க காரணமே இருந்திருக்காதே... எல்லாம் நல்லதுக்கு தான்...” என்ற ப்ரித்வி,

“இன்னும் ரெண்டு நாள் கழிச்சு உங்களுக்கு டிக்கெட் எடுத்திருக்கேன்... மதியம் மூணு மணிக்கு பிளைட்... நீங்க அங்க ஒரு மணிக்கு இருக்கணும்... நான் காலையில எட்டு மணிக்கு, என் பிரெண்ட்கிட்ட சொல்லி, இங்க காரை எடுத்துட்டு வரச் சொல்லி இருக்கேன்... அதுல ஏறினா... உங்களை பிளைட் ஏத்தற வரை அவங்க உங்களை பார்த்துப்பாங்க... பெங்களூர் வாங்க... நான் உங்களை பார்த்துக்கறேன்...” ப்ரித்வி, தனது ஏற்பாட்டை சொல்லவும்,

“எதுக்கு ராஜா இதெல்லாம்...” அவன் தயங்க,

“அங்கப் பாரு... ரெண்டு பாசமலர்களும் அழுது கரைஞ்சிட்டு இருக்காங்க... அவங்களுக்கும் கொஞ்சம் மன திருப்தியா இருக்கும் இல்ல...” என்றவன், ‘லக்ஷ்மி...’ என்று அழைக்கவும், கண்களைத் துடைத்துக் கொண்டு, ஓடி வந்தாள்.

“எதுக்கு இப்போ அழற... இன்னும் ரெண்டு நாளுல முத்துவும் முல்லையும், நம்ம வீட்டுக்கு வந்திருவாங்க... பெங்களூர் சுத்திப் பார்க்கலாம்...” அவன் சொல்லவும்,

“நான் அழலங்க.... இவ தான் என்னை அழுது அழுதே அழ வைக்கிறா?” என்று கஜா சிணுங்கவும்,

“சரிடா லக்ஷ்மி... டைம் ஆச்சு கிளம்பலாமா?” ப்ரித்வி கேட்கவும், தனது தந்தை, அன்னை, சகோதர சகோதரிகள், முல்லை என்று அனைவரிடமும் விடைப்பெற்றவள், காரில் ஏறினாள்.

“அண்ணே... நானும் போயிட்டு வரேண்ணே...’ பார்வதி விடைபெறவும்,

“பார்த்து போயிட்டு வா பார்வதி... உன் மகனோட சந்தோஷமா இரு...” கண்கலங்க செல்வராசு வழியனுப்பவும், பார்வதியை அழைத்துக் கொண்டு காரில் ஏற, ராமண்ணா, காரை எடுத்தார்.

சிறிது தூரம் அமைதியாக வந்தவள், காரில் ஒளிர்ந்த பாடலைக் கேட்டதும், ப்ரித்வியை சந்தித்த நினைவுகள் மனதில் ஓடத் துவங்க, ப்ரித்வியின் தோளில் சாய்ந்தவள், நிம்மதியுடன் கண் மூடினாள்.

எதேச்சையான நெருக்கங்கள்

ஏற்கனவே பின்னப்பட்டு இருந்தாலும்

என்னவன் என்ற

உரிமையில்

நீ பூச்சூடும்

இந்த தருணம் ,

என் பெண்மைக்கான

மொத்த நாணமும்

இடைவெளிகள் குறைந்த

நமக்குள் சிந்த,

வெட்கத்தில் சிவக்கும்

கன்னங்களையும்

விழியோரக் கவிதைகளில்

அரங்கேறும்

காதல் கணங்களையும்

அழியாது செதுக்கி வைக்க

ஆயத்தமாகி கொள்கிறேன் ....



அந்த இனிமையான தருணத்தைப் போல, அவர்களின் வாழ்க்கைப் பயணமும் இனிதே அமைய வாழ்த்தி விடைபெறுவோம்...

சுபம்....
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமையான கதை அழகான நிறைவு அருமை 👌👌👌, பிரிதிவி ராஜா ♥கஜலட்சுமி காதல் எதார்த்தமாக பாசம் உண்மை உரைத்தல் கலந்த கதை அருமை 👌👌👌, முத்து ♥முல்லை அவர்கள் பந்தம், ராஜா, கஜாவுடன் பல போராடங்களுக்கு நடுவே முத்து, ராஜா கூட்டணியுடன் அவர்கள் திருமணம் நடந்தது வெகு சிறப்பு, பார்வதி தன் மகனாக ராஜா மீது பாசம்வைத்து அவனுக்காக தன் அண்ணன் மகளை திருமணம் செய்துவைப்பதும் ஜாதி கலவரத்தில் தன் மகனை பறிகொடுத்ததை சொல்லி தன் மகனாகவே ராஜாவிற்க பேசுவதும் அருமை, ராஜா தனது திருமணம் பந்தம் பொய்யில் ஆரம்பிக்க கூடாது என்று நினைத்து அவன் தன் தாயாய் நினைக்கும் பார்வதியிடம் உண்மை சொல்வதும் கஜா தந்தையிடம் உண்மை சொல்லி அவர்கள் சம்மதித் பின்பு திருமணம் புரிவதும் அவன் நற்பன்பை காட்டியது அருமை 👌👌👌, நிறைவான மகிழ்வான கதை நிறைவு அருமை 👌👌👌, வாழ்த்துக்கள் 🌹🌹🌹வாழ்க வளமுடன் 🌹🌹🌹
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,353
Reaction score
6,243
அருமையான கதை அழகான நிறைவு அருமை 👌👌👌, பிரிதிவி ராஜா ♥கஜலட்சுமி காதல் எதார்த்தமாக பாசம் உண்மை உரைத்தல் கலந்த கதை அருமை 👌👌👌, முத்து ♥முல்லை அவர்கள் பந்தம், ராஜா, கஜாவுடன் பல போராடங்களுக்கு நடுவே முத்து, ராஜா கூட்டணியுடன் அவர்கள் திருமணம் நடந்தது வெகு சிறப்பு, பார்வதி தன் மகனாக ராஜா மீது பாசம்வைத்து அவனுக்காக தன் அண்ணன் மகளை திருமணம் செய்துவைப்பதும் ஜாதி கலவரத்தில் தன் மகனை பறிகொடுத்ததை சொல்லி தன் மகனாகவே ராஜாவிற்க பேசுவதும் அருமை, ராஜா தனது திருமணம் பந்தம் பொய்யில் ஆரம்பிக்க கூடாது என்று நினைத்து அவன் தன் தாயாய் நினைக்கும் பார்வதியிடம் உண்மை சொல்வதும் கஜா தந்தையிடம் உண்மை சொல்லி அவர்கள் சம்மதித் பின்பு திருமணம் புரிவதும் அவன் நற்பன்பை காட்டியது அருமை 👌👌👌, நிறைவான மகிழ்வான கதை நிறைவு அருமை 👌👌👌, வாழ்த்துக்கள் 🌹🌹🌹வாழ்க வளமுடன் 🌹🌹🌹

thank you so much ma .. 🙏 🙏 🙏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top