• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விஷ்ணு புராணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
இப்புராணம் பற்றி…..

பதினெண் புராணங்களுள் இப்புராணம் மிகவும் முக்கியமானதென்று வைணவர்கள் கூறுவர். இந்தப் புராணத்திலும், பின்னர் வரும் பாகவத புராணத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் வரலாறு மிக விரிவாகப் பேசப் படுகிறது. ஆதிசங்கர பகவத் பாதாள் தம்முடைய மஹாபாஷ்யத்தில் விஷ்ணு புராணத்தில் இருந்து பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார். ஆதி சங்கரர் காலம் 8ஆம் நூற்றாண்டு என்பது ஆய்வாளர்கள் கண்ட முடிவாகும். எனவே இந்தப் புராணம் அவரது காலத்துக்கு முன்னரே அதாவது 5, 6ஆம் நூற்றாண்டு களில் மக்களிடையே நன்கு பரவி இருக்க வேண்டும். 5, 6ஆம் நூற்றாண்டுகளில் தோன்றியது என்ற காரணத்தால் இந்திய நாகரிகம், பண்பாடு என்பவற்றின் கருவூலம் இப்புராணங்கள் என்ற கருத்துக்குத் தடை ஏதுமில்லை.

இப்பொழுது கிடைக்கின்ற முறையில் இப்புராணம் 6,000 பாடல்களைக் கொண்டதாகும். இப்புராணம் வியாச பகவானின் மகனாகிய பராசர முனிவரால் சொல்லப்பட்டதாகும். மைத்ரேயி முனிவர் பராசர முனிவரிடம் பாரத நாட்டுத் தோற்றம் பற்றிக் கேட்க, பராசரர் விடை சொல்வதுபோல் அமைந்துள்ளது இப் புராணம்.

இப்புராணம் ஆறு பகுதிகளாகவும், 126 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. நாலாவது பகுதி மட்டும் உரைநடையில் உள்ளது. இந்நாட்டுப் பழங்கால மன்னர்களின் வம்சாவளி பற்றிக் கூறுவதாகும் அது.

ஒரு புராணத்திற்குரிய ஐந்து பண்புகளும் விஷ்ணு புராணத்தில் முழுவதுமாக அமைந்துள்ளன. முதற் பகுதி- பிரபஞ்சம் தோற்றம் பற்றியதாகும். இரண்டாம் பகுதி- இந்நாட்டுப் புவியியல் பற்றியும், வானியல் பற்றியும் கூறுவது மூன்றாவது பகுதி- மன்வந்திரங்கள், யுகங்கள் பற்றிய விளக்கமாகும். இதனுடன் இந்நாட்டின் சமுதாய அமைப்பு, நால்வகை வர்ணம் ஆகியவை பற்றியும் பேசப்பட்டுள்ளன. நான்காவது பகுதியில் சூரிய, சந்திர வம்ச மன்னர்கள் பற்றிய பட்டியல் தரப்பட்டுள்ளது. ஐந்தாவது பகுதியில் கிருஷ்ணனுடைய வரலாற்றுப் பகுதியும் குப்த மன்னர்கள் பற்றிய செய்தியும் பேசப்பட்டுள்ளது.

ஆறாவது பகுதி கலியுகத்தில் மக்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிறது.

பராசர முனிவரைப் பார்க்க ஒருமுறை மைத்ரேய முனிவர் வந்தார். மைத்ரேயர் பராசரரைப் பார்த்து, 'படைப்பு எப்படித் தொடங்கிற்று என்பதைத் தாங்கள் சொல்ல வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டார். பராசரர் பதில் கூறத் துவங்கினார். தொடக்கத்தில் எங்கும் நீரே நிரம்பி இருந்தது. அதில் ஒரு பெரிய முட்டை இருந்து கொண்டிருந்தது. முட்டையினுள் இந்த உலகத்தில் நாம் காண்கிற சர, அசரப் பொருள்கள் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன. அவற்றோடு சேர்ந்து விஷ்ணுவும் அதனுள் இருந்தார். வெளியே ஆகாயம், காற்று முதலிய ஐந்தும் இருந்தன. பூமி நீருக்கடியில் பாதாள லோகத்தோடு சேர்ந்து இருந்தது. பூமியை மேலே கொண்டுவர விரும்பிய விஷ்ணு வராக வடிவம் எடுத்துப் பாதாளத்திற்குச் சென்றார். அங்கிருந்த பூமி தன்னை விடுவிக்குமாறு அவரை வேண்டிக் கொண்டது. பூமியை எடுத்துத் தனது இரண்டு தந்தங்களின் நடுவே வைத்துக் கொண்டு மேலே வந்த விஷ்ணு, பூமியை நீரில் மிதக்க விட்டார். நீரில் மிதந்து கொண்டிருந்த காரணத்தால் நாராயணன் என்ற பெயர் பெற்ற விஷ்ணு, பிரம்மன் வடிவைத் தாங்கி உலகத்து உயிர்களை எல்லாம் படைக்கத் தொடங்கினார். முதலில் படைக்கப்பட்டவர்கள் அவர் வாயிலிருந்து வந்த தேவர்களும், தொடையிலிருந்து வந்த அசுரர்களும், விலாவிலிருந்து வந்த பிறர்களும் ஆவர். படைக்கப்பட்ட யட்சர்கள் படைத்தவனாகிய பிரம்மனையே தின்ன முற்பட்டனர். ஆனால் அவ்வாறு செய்யக் கூடாது என்று ராட்சதர்கள் தடுத்தனர். இதன்பிறகு பிரம்மனின் தலையில் இருந்து விழுந்த ரோமத்தில் கந்தர்வர்கள் உண்டாகினர். பிரம்மனின் நெஞ்சிலிருந்து செம்மறி ஆடுகளும், வாயிலிருந்து வெள்ளாடுகளும், வயிற்றி லிருந்து கால்நடைகளும், பாதத்திலிருந்து யானை, குதிரை, மான், ஒட்டகம் ஆகியவையும் உண்டாயின.
உருத்திரனின் தோற்றம்

ஒரு காலத்தில் பிரம்மன் தமக்கு ஒரு அழகிய புத்திரன் வேண்டும் என்று நினைத்தார். உடனே அவர் மடியில் அழகிய ஆண் குழந்தை ஒன்று கிடந்தது. கிடந்த குழந்தை ஒயாது அழுது கொண்டே இருந்தது. அழுகையை நிறுத்த வேண்டுமானால் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அக்குழந்தை சொல்லிற்று. நான்முகன் அழுகின்ற குழந்தைக்கு 'ருத்திரன்' என்று பெயரிட்டார். சிலநேரம் மகிழ்ச்சியாக இருந்த குழந்தை மறுபடியும் அழத் துவங்கியது. நான்முகனால் அவ்வழுகையை நிறுத்த முடியவில்லை. முன்னமும் தனக்கு ஒரு பெயர் சூட்டப்பட வேண்டும் என்றுதானே இந்தக் குழந்தை அழுதது. எனவே புதுப்புதுப் பெயராக பிரம்மன் பெயர் சூட்டினார். ஆனால் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. ஏழாவது பெயர் சூட்டப்பட்டவுடன்தான் குழந்தையின் அழுகை நின்றது. பிரம்மன் ருத்திரனுக்கு சூட்டிய ஏழு பெயர்கள் வருமாறு:

பவ, சர்வ, மகேச, பசுபதி, பீம, உக்ர, மகாதேவ என்பனவாம். உருத்திரன், சதி என்பவளை மணந்து கொண்டான். சதியின் தந்தையாகிய தட்சன் செய்த யாகத்தில் உருத்திரனை அவமானம் செய்ததால் சதி உயிரை விட்டு, மறுபடியும் உமா என்ற பெயருடன் இமயமலை மகளாகப் பிறந்தாள். அவளை விரும்பி ருத்திரன் மணந்து கொண்டார்.

இலக்குமியின் தோற்றம்

முன்னொரு காலத்தில் மகாதேவன் வழியில் வந்த துர்வாச முனிவர் உலகம் முழுவதிலும் சுற்றித் திரிந்தார். ஒருமுறை ஒரு அழகிய பெண், வனப்பு வாய்ந்த மாலையைக் கையில் ஏந்திக் கொண்டு துர்வாசர் எதிரில் வந்தாள். அம் மாலையில் விருப்பம் கொண்ட துர்வாசர் அம்மாலையைக் கேட்டார். அப்பெண் மகிழ்ச்சியுடன் அம்மாலையை துர்வாசருக்குத் தந்தாள். அவள் தந்த மாலையைத் தலையில் அணிந்துகொண்டு பலவிடங்களிலும் சுற்றித் திரிந்தார் துர்வாசர். ஒருமுறை தன்னுடைய யானையாகிய ஐராவதத்தில் எதிர்கொண்டு இந்திரன் ஊர்வலம் வந்தான். துர்வாசர் தன்னுடைய தலையில் இருந்த அந்த மாலையை எடுத்து இந்திரனுக்குக் கிடைக்குமாறு தூக்கிப் போட்டார். அதன் சிறப்பை அறியாத தேவர்கள் தலைவன், அந்த மாலையை வாங்கி ஐராவதத்தின் மத்தகத்தின் மேல் வைத்து விட்டான். அற்புதமான வாசனையைக் கண்ட ஐராவதம் மேலும் அந்த வாசனையை அனுபவிப்பதற்காக மாலையின் பக்கமாகத் தனது துதிக்கையை நீட்டிற்று. ஆனால் மாலை தவறிக் கீழே விழுந்து விட்டது. மண்ணில் விழுந்த மாலையைக் கண்ட துர்வாசர் மிக்க சினம் கொண்டார். இந்திரன் எவ்வளவு மன்றாடி மன்னிப்புக் கேட்டும் அவர் கோபம் அடங்கவில்லை. இலட்சுமி உன்னை விட்டுப் போய்விடுவாள் என்று சாபமிட்டார். இந்திரன் அமராவதி திரும்பிச் சென்றவுடன் அந்நகரமே பாழ்பட்டுச் சீரழிந்து காணப்பட்டது. காரணம், இலக்குமி அதை விட்டுப் போய்விட்டதுதான். திகைத்துப் போன இந்திரன் தேவருடன் சேர்ந்து பிரம்மனிடம் சென்று நடந்ததைக் கூறினான். நான்முகன் இது என்னால் தீர்த்து வைக்கப்படக் கூடியது அன்று. வாருங்கள். விஷ்ணுவிடம் சென்று தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இந்திரன் முதலானவர்களை அழைத்துக் கொண்டு விஷ்ணுவிடம் சென்றார். விஷ்ணு பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை உண்டால் அசுரர்களை வெல்லலாம் என்று கூறினார். அப்படியே செய்வதென்று முடிவாயிற்று. ஆனால் பாற்கடலை தேவர்கள் மட்டும் கடைய முடியாது. அசுரர்களின் உதவியும் தேவை. எனவே அசுரர்களை அழைத்து இதனைச் செய்தால் கிடைக்கும் அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு தருவதாக தேவர்கள் பொய் கூறினார்கள். இதை அறியாத அசுரர்கள் முயற்சியுடன் கைகொடுக்க முன்வந்தனர். மேரு மலையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி திருமால் கொண்ட மிகப் பெரிய
கூர்மம் (ஆமை) முதுகில் மேரு மலையை நிறுத்திக் கடைந்தார்கள். வாசுகியின் தலைப் பக்கத்தை அசுரர்களும், வால் பக்கத்தை தேவர்களும் பிடித்துக் கொண்டனர். கயிறாகப் பயன்பட்டதால் வாசுகி பெருந்துன்பமுற்று விஷப் புகையைக் கக்கிற்று. அது ஆகாயத்தில் சென்று மழையாய்ப் பெய்தது. கடையும் பொழுது முதலில் சுரபியும் (பசு), அடுத்து வருணி என்ற தேவதையும், தொடர்ந்து பாரிஜாதமாயும் அடுத்து அப்ஸ்ரஸ்களும் அடுத்து சந்திரனும் வந்தான். இவற்றோடு பல தீய பொருட்கள் தோன்றின. இதன் பிறகு தன்வந்திரி அமுத கலசத்தை ஏந்திக் கொண்டு வந்தான். தேவர்களும் அசுரர்களும் ஒருசேர மகிழ்ந்தனர். தன்வந்திரியை அடுத்து அழகிய தாமரைப்பூவில் ஒளி பொருந்திய இலக்குமி கையில் ஒரு தாமரை மலரை ஏந்திக்கொண்டு தோன்றினாள். திசை யானைகள் எட்டும் இலக்குமிக்கு அபிஷேகம் செய்தன. விஸ்வகர்மா இலக்குமிக்கு ஏற்ற ஆபரணங்களைச் செய்து வந்தார். இலக்குமி விஷ்ணுவைத் தழுவிக் கொண்டதாலும், தேவர்களைப் பார்த்துப் புன்சிரிப்புச் செய்ததாலும் இலக்குமி யின் கிருபை தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. இது நடை பெறுகின்ற நேரத்தில் தன்வந்திரியிடமிருந்த அமுத கலசத்தை அசுரர்கள் பறித்துக் கொண்டனர். ஒன்றும் செய்ய இயலாது தேவர்கள் கலங்கி நிற்கையில் விஷ்ணு ஒரு பெண் வடிவுடன் சென்று அசுரர்களை மயக்கி, அமுத கலசத்தைக் கொண்டு வந்து தேவர்கள் உண்ணுமாறு செய்தார். அமிர்தம் உண்ட தேவர்கள் அதிக பலம் பெற்று அசுரர்களை விரட்டியடித்தனர். பிறகு இலட்சுமியை வணங்கிய இந்திரன் சில வரங்களைப் பெற்றுக் கொண்டான். முதலாவது, இலக்குமி தேவருலகம் முதலியவற்றை விட்டுப் பிரியக் கூடாது. இரண்டாவது, யார் இலக்குமியைப் போற்றி வழிபட்டாலும் அவள் அவர்களுக்கு அருள் தர வேண்டும்.

துருவனின் கதை

பிரம்மாவின் உடம்பிலிருந்து ஒரு ஆணும், பெண்ணும் தோன்றினர். மனு என்ற பெயரைப் பெற்றிருந்த அவர்கள் மரபில் பல மக்கள் தோன்றினர். மனுவின் மரபில் தோன்றியதால் அவர்கள் 'மானவர்கள் என்று அழைக்கப் பட்டனர். இவர்களுள் உத்தானபாதன் என்ற மன்னன் சுனிதி, சுருச்சி என்ற இரு மங்கையரை மணந்து ஆட்சி செலுத்தி வந்தான். இளையவளாகிய சுருச்சியின் மகன் உத்தமன், அரசன் மடியில் அமர்ந்திருந்தான். மூத்தவளான சுனிதியின் மகன் துருவன் தானும் தந்தையின் மடியில் அமர விரும்பினான். அப்படி அமர விரும்பும் போது இளையவளாகிய சுருச்சி அவனைத் தடுத்துவிட்டாள். அரசன் மடியில் அமரும் உரிமை உத்தமனுக்கு மட்டும் என்றும், அடுத்தபடியாக ஆளப் போகிறவன் அவன்தான் என்றும் கூறினாள். மிக்க வருத்தத்தோடு தாயிடம் வந்த துருவன் நடந்ததைக் கூறினான். தாய் சுனிதி 'மகனே! இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை. போன பிறப்பில் நல்ல காரியங்களைச் செய்தவர்கள் இந்தப் பிறப்பில் நல்ல பதவிகளையும், செல்வாக்கையும் அடைகின்றனர். சுருச்சியும் அவள் மகன் உத்தமனும் போன பிறப்பில் புண்ணியம் செய்ததால் இப்பிறப்பில் இந்நிலையில் உள்ளனர். நானும் நீயும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இப்பொழுது நல்ல காரியங்கள் செய்தால் அடுத்த பிறவியில் நல்ல நிலையை அடையலாம் என்றாள். அதைக்கேட்ட துருவன் தவம் செய்யவேண்டும் என்ற உறுதியுடன் பக்கத்தில் உள்ள காட்டிற்குச் சென்றான். அங்கே சப்த ரிஷிகள் என்று சொல்லப்படும் முனிவர்களைச் சந்தித்தான். ஐந்து வயது பாலகனாகிய அவன் காட்டிற்குள் வந்ததைப் பார்த்து வியந்து அவன் வந்த காரணத்தை வினவினர். நடந்த காரியத்தைக் கூறிய துருவன், தான் தவம் செய்து உரிய இடத்தைப் பெறுவதற்கு வந்ததாகக் கூறினான். அவன் முடிவை மாற்ற முடியாது என்பதை அறிந்த முனிவர்கள் உன் எண்ணம் நிறைவேற வேண்டுமானால் நீ விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்ய வேண்டும் என்று கூறி ஒரு மந்திரத்தையும் உபதேசித்தனர். துருவன் ஓரிடத்தில் அமர்ந்து விஷ்ணுவையே தியானம் செய்து மந்திரத்தை ஜெபிக்கலானான். நாட்கள் நகர்ந்தன. துருவன் தவ வலிமை தேவர்களையும் அச்சம் கொள்ளச் செய்தது. அவன் ஒருவேளை இந்திரப் பதவிக்கு ஆசைப்படுகிறானோ என்று
சந்தேகித்த தேவர்கள் அவன் தவத்தைக் கலைக்க அரும்பாடு பட்டனர். இவர்களையல்லாமல் அசுரர்களும் அவன் தவத்தைக் கலைக்க முயன்றனர். எதுவும் செய்ய முடியாத நிலையில் விஷ்ணு துருவன் முன் தோன்றினார். விஷ்ணுவை நேரே தரிசனம் செய்தான் துருவன். 'என்ன வரம் வேண்டும்?' என விஷ்ணு கேட்க, தங்களைத் தரிசித்ததே போதுமானது, இதற்கு மேல் ஒன்றும் வேண்டாம் என்று கூறிவிட்டான் துருவன். இருந்தாலும் ஏதாவது ஒரு வரத்தைக் கேள் என்று விஷ்ணு கூற எவரும் அடைய முடியாத இடத்தை தான் அடைய வேண்டும் என்று துருவன் கேட்டான். அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் அசையாத துருவ நட்சத்திரமாக அவனை மாற்றி, சப்த ரிஷி மண்டலத்தின் அடியில் இருக்குமாறு வரம் தந்தார். சப்த ரிஷி மண்டலம் உட்பட எல்லா நட்சத்திரங்களும் இன்றும் துருவனைச் சுற்றி வருவதைக் காணலாம்.

பிரகலாதன் கதை

தைத்தியர்கள் என்றழைக்கப்பட்ட அசுரர்கள் பரம்பரையில் வந்தவன் ஹிரண்யகசிபு என்பவன். மாபெரும் தவங்கள் செய்து மூன்று லோகங்களையும் ஆளும் சக்தியைப் பெற்றான். அன்றியும் இந்திரன், அக்னி, யமன், நிருதி வருணன், வாயு, குபேரன் ஆகிய தெய்வங்களையெல்லாம் வென்று அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து துரத்தி விட்டான். அவர்கள் அனைவரும் இங்குமங்குமாக அலைந்து திரிந்து கடைசியில் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்.

எல்லோரையும் வென்று விட்ட காரணத்தால் ஹிரண்ய கசிபு தனக்குமேல் யாரும் இல்லை, இருக்கவும் முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டான். அதனால் தைத்தியர்கள், தேவர்கள் ஆகிய அனைவரும் தன்னையே வணங்க வேண்டும், தன் பெயரையே உச்சரிக்க வேண்டும் என்று ஆணையிட்டான். மேலும் தைத்திய குலத்திற்கு விஷ்ணு விரோதியாகக் கருதப்பட்டான். எனவே பகைவனின் பெயரை யாரும் சொல்லக் கூடாது என்பது ஹிரண்யனின் கட்டளை. இந்நிலையில் பிரகலாதன் என்ற குழந்தை பிறந்தது. குழந்தை ஒரளவு வளர்ந்தவுடன் ஒர் ஆசிரியனை நியமித்து அக்குழந்தைக்குக் கல்வி புகட்ட உத்தரவிட்டான். கல்வியைத் தொடங்கும் பொழுது விஷ்ணுவின் பெயரைச் சொல்லக் கூடாது என்றும், ஹிரண்யன் பெயரைச் சொல்ல வேண்டும் என்றும் குரு கட்டளையிட்டார். ஆனால் பிரகலாதன் அதற்கு இசைய வில்லை. அவன் விஷ்ணுவின் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தான். சில காலம் கழித்து மகனின் கல்வி வளர்ச்சி எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அறிய ஹிரண்யன் பிள்ளையையும், ஆசிரியரையும் வரவழைத்தான். மகனுடைய கல்வியைச் சோதிக்க எண்ணிய ஹிரண்யன் என்ன கற்றுக் கொண்டாய்? என்று கேட்டான். பிரகலாதன் விஷ்ணுவின் நாமத்தைச் சொல்லி அவன் பெருமையைச் சொல்லத் துவங்கினான். எல்லையற்ற கோபம் கொண்ட ஹிரண்யன் 'யார் அந்த விஷ்ணு?’ என்று கேட்டான். பிரகலாதன், "தந்தையே! அந்த விஷ்ணு உன்னுள்ளும் இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான். காணப்படுகின்ற எல்லாவற்றுக் குள்ளும் இருக்கிறான். என்று கூறினவுடன் எல்லையற்ற சினம் கொண்டான் ஹிரண்யன். தைத்திய சேனையை விட்டு இப்பிள்ளையைக் கொன்று விடுங்கள் என்றான். அவர்கள் எத்தனை ஆயுதங்களைப் பயன்படுத்தியும் ஒன்றும் நடைபெற வில்லை. ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகளை விட்டுப் பிரகலாதனைக் கடிக்கச் செய்தார்கள். ஒன்றும் நடைபெற வில்லை. கையையும் காலையும் கட்டி அரண்மனையில் இருந்து கீழே எறிந்தார்கள். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. ஆசிரியரை அழைத்து, 'மறுபடியும் இவனைக் கூட்டிக் கொண்டுபோய் நல்ல முறையில் கல்வி கற்பியுங்கள் என்று கூறினான். எவ்விதப் பயனும் விளையவில்லை. இம்முறை சுக்ர நியதியின்படி பகைவர்களை எப்படி வெல்ல வேண்டும் என்று ஆசிரியர்கள் கற்பித்தார்கள். பல நூறு ஆண்டுகள் கழித்து மறுபடியும் பிள்ளையை வரவழைத்தான். இந்த முறை விஷ்ணுவைப் பற்றிப் பேச்செடுக்காமல் 'சுக்ரநீதியின்படி பகைவர்களை எவ்வாறு வெல்வது?’ என்று கேட்டான் ஹிரண்யன். அதற்குப் பிரகலாதன் "பகைவர்கள் என்று யாரும் இல்லை. எல்லோரிலும்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
விஷ்ணுவே இருக்கின்றார். ஆதலால் யார் யாருக்கு பகை' என்று பிள்ளை பதில் கூறினான். கோபம் கொண்ட ஹிரண்யன், பிரகலாதன் உடம்பைப் பாம்புகளால் கட்டச் செய்து அவனை சமுத்திரத்துக்குள் போட்டுவிட்டு அவன் மேலே வராமல் இருக்க மலைகளை எடுத்து அவன்மேல் போடுமாறு செய்தான். இத்தனை இடையூறுகளையும் கடந்து பிரகலாதன் வெளியே வந்ததைப் பார்த்த ஹிரண்யன் மகனே! இத்தனை ஆபத்துக்களையும் வெல்லக் கூடிய சக்தியை எங்கிருந்து பெற்றாய்? என்று கேட்டான். அதற்குப் பிரகலாதன், "தந்தையே! இதில் என்னுடைய சக்தி எதுவுமே இல்லை. எல்லாம் விஷ்ணுவின் செயல்தான்" என்று கூறினான். இந்த நிலையில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனைக் கொன்று பிரகலாதனுக்கு முடிசூட்டினார். இந்தப் பிரகலாதன் பரம்பரையில் வந்தவர்தான் மாபலி சக்கரவர்த்தி. நரசிம்ம மூர்த்தி பிரகலாதனைப் பார்த்து, உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, பிரகலாதன், “ஐயனே! இமைப் பொழுதும் உன்னை மறவாதிருக்க வேண்டும்” என்றான். “வேறு என்ன வேண்டும்?” என்று விஷ்ணு கேட்க, "என் தந்தையின் குற்றங்களையெல்லாம் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். விஷ்ணுவும் அவ்விதமே செய்தார்.

பிற உலகங்கள் பற்றிய குறிப்புக்கள்

பூமிக்கு மேல் பல மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, சப்தரிஷி, துருவ மண்டலங்கள் ஆகியவை உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. துருவ லோகத்திற்கு மேல் ஞான உலகமும், அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் தவ உலகமும் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலே சத்திய உலகம் உள்ளது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம், வைகுண்ட லோகம் என்று உள்ளது. பிரம்ம உலகத்தில் பிரம்மனும், வைகுண்ட உலகத்தில் விஷ்ணுவும் உள்ளனர். துருவ உலகம் முதல் சத்திய உலகம் வரை உள்ள நான்கு உலகங்களும் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ புவர், சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன. உண்மையில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு உலகங்களையும் இவற்றிற்குக் கீழே ஏழு பாதாள உலகங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கீழும், மேலுமாக உள்ள இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கி உள்ள அண்டம் இருளால் சூழப் பட்டுள்ளது. அவ்விருளைக் கடந்து தண்ணிரும், நீரைக் கடந்து நெருப்பும், நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.

ஜடபரதன் கதை

முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மகன் இருந்தான். அவன் எப்பொழுதும் விஷ்ணுவை தியானிப்பதிலேயே இருந்தான். ஒருநாள் பரதன் நீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்றான். அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்து வதற்காக வந்திருந்தது. அச்சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்த மான் தன் குட்டியை ஈன்ற உடன் இறந்து விட்டது. ஆற்றில் விழுந்துவிட்ட மான் குட்டியை பரதன் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான். நன்கு உண்டு வளர்ந்த மான் பெரியதாகிச் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவருந்தி வந்தது.

தன்னுடைய அரச பதவி, மக்கள், உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டான். பல ஆண்டுகள் கழித்து மானைப் பற்றி நினைத்துக்கொண்டே உயிர் நீத்தான் பரதன். மானின் நினைவாகவே உயிர் நீத்ததால் மறுபிறப்பில் ஜாதிஸ்மராமானாக பூர்வ ஜென்ம நினைவு களும்) பிறந்து தன் பழைய ஊராகிய சாலகிரமாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். சில காலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் பிராமணனாகப் பிறந்து
விஷ்ணுவே இருக்கின்றார். ஆதலால் யார் யாருக்கு பகை' என்று பிள்ளை பதில் கூறினான். கோபம் கொண்ட ஹிரண்யன், பிரகலாதன் உடம்பைப் பாம்புகளால் கட்டச் செய்து அவனை சமுத்திரத்துக்குள் போட்டுவிட்டு அவன் மேலே வராமல் இருக்க மலைகளை எடுத்து அவன்மேல் போடுமாறு செய்தான். இத்தனை இடையூறுகளையும் கடந்து பிரகலாதன் வெளியே வந்ததைப் பார்த்த ஹிரண்யன் மகனே! இத்தனை ஆபத்துக்களையும் வெல்லக் கூடிய சக்தியை எங்கிருந்து பெற்றாய்? என்று கேட்டான். அதற்குப் பிரகலாதன், "தந்தையே! இதில் என்னுடைய சக்தி எதுவுமே இல்லை. எல்லாம் விஷ்ணுவின் செயல்தான்" என்று கூறினான். இந்த நிலையில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனைக் கொன்று பிரகலாதனுக்கு முடிசூட்டினார். இந்தப் பிரகலாதன் பரம்பரையில் வந்தவர்தான் மாபலி சக்கரவர்த்தி. நரசிம்ம மூர்த்தி பிரகலாதனைப் பார்த்து, உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, பிரகலாதன், “ஐயனே! இமைப் பொழுதும் உன்னை மறவாதிருக்க வேண்டும்” என்றான். “வேறு என்ன வேண்டும்?” என்று விஷ்ணு கேட்க, "என் தந்தையின் குற்றங்களையெல்லாம் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். விஷ்ணுவும் அவ்விதமே செய்தார்.

பிற உலகங்கள் பற்றிய குறிப்புக்கள்

பூமிக்கு மேல் பல மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, சப்தரிஷி, துருவ மண்டலங்கள் ஆகியவை உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. துருவ லோகத்திற்கு மேல் ஞான உலகமும், அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் தவ உலகமும் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலே சத்திய உலகம் உள்ளது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம், வைகுண்ட லோகம் என்று உள்ளது. பிரம்ம உலகத்தில் பிரம்மனும், வைகுண்ட உலகத்தில் விஷ்ணுவும் உள்ளனர். துருவ உலகம் முதல் சத்திய உலகம் வரை உள்ள நான்கு உலகங்களும் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ புவர், சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன. உண்மையில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு உலகங்களையும் இவற்றிற்குக் கீழே ஏழு பாதாள உலகங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கீழும், மேலுமாக உள்ள இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கி உள்ள அண்டம் இருளால் சூழப் பட்டுள்ளது. அவ்விருளைக் கடந்து தண்ணிரும், நீரைக் கடந்து நெருப்பும், நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.

ஜடபரதன் கதை

முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மகன் இருந்தான். அவன் எப்பொழுதும் விஷ்ணுவை தியானிப்பதிலேயே இருந்தான். ஒருநாள் பரதன் நீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்றான். அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்து வதற்காக வந்திருந்தது. அச்சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்த மான் தன் குட்டியை ஈன்ற உடன் இறந்து விட்டது. ஆற்றில் விழுந்துவிட்ட மான் குட்டியை பரதன் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான். நன்கு உண்டு வளர்ந்த மான் பெரியதாகிச் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவருந்தி வந்தது.

தன்னுடைய அரச பதவி, மக்கள், உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டான். பல ஆண்டுகள் கழித்து மானைப் பற்றி நினைத்துக்கொண்டே உயிர் நீத்தான் பரதன். மானின் நினைவாகவே உயிர் நீத்ததால் மறுபிறப்பில் ஜாதிஸ்மராமானாக பூர்வ ஜென்ம நினைவு களும்) பிறந்து தன் பழைய ஊராகிய சாலகிரமாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். சில காலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் பிராமணனாகப் பிறந்து
விஷ்ணுவே இருக்கின்றார். ஆதலால் யார் யாருக்கு பகை' என்று பிள்ளை பதில் கூறினான். கோபம் கொண்ட ஹிரண்யன், பிரகலாதன் உடம்பைப் பாம்புகளால் கட்டச் செய்து அவனை சமுத்திரத்துக்குள் போட்டுவிட்டு அவன் மேலே வராமல் இருக்க மலைகளை எடுத்து அவன்மேல் போடுமாறு செய்தான். இத்தனை இடையூறுகளையும் கடந்து பிரகலாதன் வெளியே வந்ததைப் பார்த்த ஹிரண்யன் மகனே! இத்தனை ஆபத்துக்களையும் வெல்லக் கூடிய சக்தியை எங்கிருந்து பெற்றாய்? என்று கேட்டான். அதற்குப் பிரகலாதன், "தந்தையே! இதில் என்னுடைய சக்தி எதுவுமே இல்லை. எல்லாம் விஷ்ணுவின் செயல்தான்" என்று கூறினான். இந்த நிலையில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனைக் கொன்று பிரகலாதனுக்கு முடிசூட்டினார். இந்தப் பிரகலாதன் பரம்பரையில் வந்தவர்தான் மாபலி சக்கரவர்த்தி. நரசிம்ம மூர்த்தி பிரகலாதனைப் பார்த்து, உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, பிரகலாதன், “ஐயனே! இமைப் பொழுதும் உன்னை மறவாதிருக்க வேண்டும்” என்றான். “வேறு என்ன வேண்டும்?” என்று விஷ்ணு கேட்க, "என் தந்தையின் குற்றங்களையெல்லாம் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். விஷ்ணுவும் அவ்விதமே செய்தார்.

பிற உலகங்கள் பற்றிய குறிப்புக்கள்

பூமிக்கு மேல் பல மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, சப்தரிஷி, துருவ மண்டலங்கள் ஆகியவை உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. துருவ லோகத்திற்கு மேல் ஞான உலகமும், அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் தவ உலகமும் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலே சத்திய உலகம் உள்ளது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம், வைகுண்ட லோகம் என்று உள்ளது. பிரம்ம உலகத்தில் பிரம்மனும், வைகுண்ட உலகத்தில் விஷ்ணுவும் உள்ளனர். துருவ உலகம் முதல் சத்திய உலகம் வரை உள்ள நான்கு உலகங்களும் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ புவர், சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன. உண்மையில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு உலகங்களையும் இவற்றிற்குக் கீழே ஏழு பாதாள உலகங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கீழும், மேலுமாக உள்ள இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கி உள்ள அண்டம் இருளால் சூழப் பட்டுள்ளது. அவ்விருளைக் கடந்து தண்ணிரும், நீரைக் கடந்து நெருப்பும், நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.

ஜடபரதன் கதை

முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மகன் இருந்தான். அவன் எப்பொழுதும் விஷ்ணுவை தியானிப்பதிலேயே இருந்தான். ஒருநாள் பரதன் நீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்றான். அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்து வதற்காக வந்திருந்தது. அச்சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்த மான் தன் குட்டியை ஈன்ற உடன் இறந்து விட்டது. ஆற்றில் விழுந்துவிட்ட மான் குட்டியை பரதன் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான். நன்கு உண்டு வளர்ந்த மான் பெரியதாகிச் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவருந்தி வந்தது.

தன்னுடைய அரச பதவி, மக்கள், உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டான். பல ஆண்டுகள் கழித்து மானைப் பற்றி நினைத்துக்கொண்டே உயிர் நீத்தான் பரதன். மானின் நினைவாகவே உயிர் நீத்ததால் மறுபிறப்பில் ஜாதிஸ்மராமானாக பூர்வ ஜென்ம நினைவு களும்) பிறந்து தன் பழைய ஊராகிய சாலகிரமாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். சில காலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் பிராமணனாகப் பிறந்து
விஷ்ணுவே இருக்கின்றார். ஆதலால் யார் யாருக்கு பகை' என்று பிள்ளை பதில் கூறினான். கோபம் கொண்ட ஹிரண்யன், பிரகலாதன் உடம்பைப் பாம்புகளால் கட்டச் செய்து அவனை சமுத்திரத்துக்குள் போட்டுவிட்டு அவன் மேலே வராமல் இருக்க மலைகளை எடுத்து அவன்மேல் போடுமாறு செய்தான். இத்தனை இடையூறுகளையும் கடந்து பிரகலாதன் வெளியே வந்ததைப் பார்த்த ஹிரண்யன் மகனே! இத்தனை ஆபத்துக்களையும் வெல்லக் கூடிய சக்தியை எங்கிருந்து பெற்றாய்? என்று கேட்டான். அதற்குப் பிரகலாதன், "தந்தையே! இதில் என்னுடைய சக்தி எதுவுமே இல்லை. எல்லாம் விஷ்ணுவின் செயல்தான்" என்று கூறினான். இந்த நிலையில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனைக் கொன்று பிரகலாதனுக்கு முடிசூட்டினார். இந்தப் பிரகலாதன் பரம்பரையில் வந்தவர்தான் மாபலி சக்கரவர்த்தி. நரசிம்ம மூர்த்தி பிரகலாதனைப் பார்த்து, உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, பிரகலாதன், “ஐயனே! இமைப் பொழுதும் உன்னை மறவாதிருக்க வேண்டும்” என்றான். “வேறு என்ன வேண்டும்?” என்று விஷ்ணு கேட்க, "என் தந்தையின் குற்றங்களையெல்லாம் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். விஷ்ணுவும் அவ்விதமே செய்தார்.

பிற உலகங்கள் பற்றிய குறிப்புக்கள்

பூமிக்கு மேல் பல மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, சப்தரிஷி, துருவ மண்டலங்கள் ஆகியவை உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. துருவ லோகத்திற்கு மேல் ஞான உலகமும், அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் தவ உலகமும் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலே சத்திய உலகம் உள்ளது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம், வைகுண்ட லோகம் என்று உள்ளது. பிரம்ம உலகத்தில் பிரம்மனும், வைகுண்ட உலகத்தில் விஷ்ணுவும் உள்ளனர். துருவ உலகம் முதல் சத்திய உலகம் வரை உள்ள நான்கு உலகங்களும் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ புவர், சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன. உண்மையில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு உலகங்களையும் இவற்றிற்குக் கீழே ஏழு பாதாள உலகங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கீழும், மேலுமாக உள்ள இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கி உள்ள அண்டம் இருளால் சூழப் பட்டுள்ளது. அவ்விருளைக் கடந்து தண்ணிரும், நீரைக் கடந்து நெருப்பும், நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.

ஜடபரதன் கதை

முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மகன் இருந்தான். அவன் எப்பொழுதும் விஷ்ணுவை தியானிப்பதிலேயே இருந்தான். ஒருநாள் பரதன் நீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்றான். அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்து வதற்காக வந்திருந்தது. அச்சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்த மான் தன் குட்டியை ஈன்ற உடன் இறந்து விட்டது. ஆற்றில் விழுந்துவிட்ட மான் குட்டியை பரதன் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான். நன்கு உண்டு வளர்ந்த மான் பெரியதாகிச் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவருந்தி வந்தது.

தன்னுடைய அரச பதவி, மக்கள், உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டான். பல ஆண்டுகள் கழித்து மானைப் பற்றி நினைத்துக்கொண்டே உயிர் நீத்தான் பரதன். மானின் நினைவாகவே உயிர் நீத்ததால் மறுபிறப்பில் ஜாதிஸ்மராமானாக பூர்வ ஜென்ம நினைவு களும்) பிறந்து தன் பழைய ஊராகிய சாலகிரமாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். சில காலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் பிராமணனாகப் பிறந்து
விஷ்ணுவே இருக்கின்றார். ஆதலால் யார் யாருக்கு பகை' என்று பிள்ளை பதில் கூறினான். கோபம் கொண்ட ஹிரண்யன், பிரகலாதன் உடம்பைப் பாம்புகளால் கட்டச் செய்து அவனை சமுத்திரத்துக்குள் போட்டுவிட்டு அவன் மேலே வராமல் இருக்க மலைகளை எடுத்து அவன்மேல் போடுமாறு செய்தான். இத்தனை இடையூறுகளையும் கடந்து பிரகலாதன் வெளியே வந்ததைப் பார்த்த ஹிரண்யன் மகனே! இத்தனை ஆபத்துக்களையும் வெல்லக் கூடிய சக்தியை எங்கிருந்து பெற்றாய்? என்று கேட்டான். அதற்குப் பிரகலாதன், "தந்தையே! இதில் என்னுடைய சக்தி எதுவுமே இல்லை. எல்லாம் விஷ்ணுவின் செயல்தான்" என்று கூறினான். இந்த நிலையில் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யனைக் கொன்று பிரகலாதனுக்கு முடிசூட்டினார். இந்தப் பிரகலாதன் பரம்பரையில் வந்தவர்தான் மாபலி சக்கரவர்த்தி. நரசிம்ம மூர்த்தி பிரகலாதனைப் பார்த்து, உனக்கு என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, பிரகலாதன், “ஐயனே! இமைப் பொழுதும் உன்னை மறவாதிருக்க வேண்டும்” என்றான். “வேறு என்ன வேண்டும்?” என்று விஷ்ணு கேட்க, "என் தந்தையின் குற்றங்களையெல்லாம் மன்னிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான். விஷ்ணுவும் அவ்விதமே செய்தார்.

பிற உலகங்கள் பற்றிய குறிப்புக்கள்

பூமிக்கு மேல் பல மைல்களுக்கு அப்பால் உள்ளது சூரிய உலகம். அடுத்து சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி, சப்தரிஷி, துருவ மண்டலங்கள் ஆகியவை உள்ளன. சப்தரிஷி மண்டலம் முதலான உலகங்கள் துருவ நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றன. துருவ லோகத்திற்கு மேல் ஞான உலகமும், அதற்குமேல் தேவர்கள் வசிக்கும் தவ உலகமும் உள்ளன. இவை அனைத்திற்கும் மேலே சத்திய உலகம் உள்ளது. அது இரண்டாகப் பிரிக்கப்பட்டு பிரம்ம லோகம், வைகுண்ட லோகம் என்று உள்ளது. பிரம்ம உலகத்தில் பிரம்மனும், வைகுண்ட உலகத்தில் விஷ்ணுவும் உள்ளனர். துருவ உலகம் முதல் சத்திய உலகம் வரை உள்ள நான்கு உலகங்களும் யுக முடிவில் அழிவதில்லை. இவற்றிற்குக் கீழே உள்ள பூ புவர், சுவர் ஆகிய உலகங்கள் பிரளய காலத்தில் அழிந்துவிடும் இயல்புடையன. உண்மையில் இப் பேரண்டம் என்பது முன்னர் குறிப்பிடப்பட்ட ஏழு உலகங்களையும் இவற்றிற்குக் கீழே ஏழு பாதாள உலகங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கீழும், மேலுமாக உள்ள இந்தப் பதினான்கு உலகங்களையும் அடக்கி உள்ள அண்டம் இருளால் சூழப் பட்டுள்ளது. அவ்விருளைக் கடந்து தண்ணிரும், நீரைக் கடந்து நெருப்பும், நெருப்பைக் கடந்து காற்றும், காற்றைக் கடந்து ஆகாயமும் சூழ்ந்துள்ளன.

ஜடபரதன் கதை

முன்னொரு காலத்தில் சாலக்கிரமா என்ற ஊரில் ரிஷபா என்ற மன்னனுக்கு பரதன் என்றொரு மகன் இருந்தான். அவன் எப்பொழுதும் விஷ்ணுவை தியானிப்பதிலேயே இருந்தான். ஒருநாள் பரதன் நீராடுவதற்காக ஆற்றிற்குச் சென்றான். அங்கு கருவுற்றிருந்த ஒரு மானும் நீர் அருந்து வதற்காக வந்திருந்தது. அச்சமயத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்த மான் தன் குட்டியை ஈன்ற உடன் இறந்து விட்டது. ஆற்றில் விழுந்துவிட்ட மான் குட்டியை பரதன் தன் ஆசிரமத்திற்குக் கொண்டு வந்து வளர்த்தான். நன்கு உண்டு வளர்ந்த மான் பெரியதாகிச் சுற்றுப்புறங்களுக்குச் சென்று உணவருந்தி வந்தது.

தன்னுடைய அரச பதவி, மக்கள், உறவினர்களை மறந்த பரதன் மானை மட்டும் மறக்காமல் பார்த்துக் கொண்டான். பல ஆண்டுகள் கழித்து மானைப் பற்றி நினைத்துக்கொண்டே உயிர் நீத்தான் பரதன். மானின் நினைவாகவே உயிர் நீத்ததால் மறுபிறப்பில் ஜாதிஸ்மராமானாக பூர்வ ஜென்ம நினைவு களும்) பிறந்து தன் பழைய ஊராகிய சாலகிரமாவிற்குச் சென்று அங்கு வாழ்ந்து வந்தான். சில காலம் கழித்துப் பூர்வ ஜென்ம நினைவுகளுடன் பிராமணனாகப் பிறந்து
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
வேத சாத்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்றான். பரப் பிரம்மம் பற்றிய ஞானம் பெற்றதால் வேதங்கள் படிப்பதில் நாட்ட மில்லாமல் துர்நாற்றமுடைய தோற்றத்துடன் உலவி வந்தான். அவன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு உறவினர்கள் அவனுக்குக் கெட்டுவிட்ட உணவையே தந்தனர்.

இகவுமதி ஆற்றின் கரையில் கபில முனிவரின் ஆசிரமம் இருந்தது. ஒருநாள் செளபிர என்ற அரசன் ஞானம் பற்றித் தெரிந்து கொள்ளப் பல்லக்கில் ஏறி, கபில முனிவரை தரிசிக்கச் சென்றான். பல்லக்குத் தூக்குபவர்களில் ஒருவன் குறைந்ததால் அழுக்கு உடம்புடன் இருந்த இந்த பிராமணனைப் பல்லக்குத் தூக்கும்படி செய்தான்.

பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் வேகமாக செல்லவும், பரதன் மட்டும் சற்று மெதுவாக நடந்ததால் பல்லக்கு ஒரே சீராக நகர முடியவில்லை. இதனால் பரதனை மற்றவர்கள் கோபித்தனர். கோபம் கொண்ட அரசன் மிகுந்த பலமுடைய வனாகத் தோற்றமளிக்கும் நீ சிறிது தூரம் பல்லக்கை சுமந்து வந்ததில் எப்படிக் களைப்புற்றாய்?’ என்று கேட்டான். அதற்கு பரதன், 'பல்லக்கை நான் சுமக்கவில்லை, எனக்குக் களைப்பும் இல்லை, நான் பலமுடையவனும் அல்ல' என்றான். இதைக்கேட்ட அரசன் வியப்போடு, நீ பல்லக்கை சுமந்து செல்கிறாய், நீ பலமுள்ளவனாக இருக்கிறாய். இதை எப்படி மறுக்க முடியும்?' என்றான்.

பரதன் பதில் கூறத் துவங்கினான், “நான் யார்? நீ யார், நீ பார்த்தது என்னுடைய உடம்பும், உன்னுடைய உடம்புமே. நான் என்பது என் உடம்பும் அல்ல. நீ என்பது உன் உடம்பும் அல்ல. நம்முடைய ஆத்மாதான் நாம் யார் என்பதை அறிவிக்கும். அந்த ஆத்மாவிற்குக் களைப்போ, பலமோ எதுவு மில்லை. அந்த ஆத்மா பல்லக்கைத் தூக்கிச் சுமப்பதும் இல்லை! - இதைச் சொல்லிவிட்டு பரதன் அமைதியாகி விட்டான். வியப்படைந்த அரசன் கீழே இறங்கி அந்த பிராமணனை விழுந்து வணங்கினான். இவ்வளவு ஞானம் பெற்ற இந்த மனிதன் யார் எனத் தெரிந்து கொள்ள விரும்பினான் அரசன். உடனே பரதன் ஆத்மாவைப் பற்றிக் கூறினான். ஒவ்வொரு பிறப்பிலும் ஒர் உடம்பிலிருந்து மறு உடம்பிற்குச் செல்லுகின்ற இந்த ஆத்மாவிற்கு அழிவே கிடையாது. இதுவே ஜீவாத்மா எனப்படும். எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளாகிய விஷ்ணுவே பரமாத்மா எனப் படுபவர். முழுமையான ஞானம் பெற்றவனுக்கு ஜீவாத்மா விற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. மாயையில் அகப்பட்டிருப்பவனுக்கே ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறுபட்ட பொருள்களாகத் தெரியும். பரதன் ஒரு கதையையும் அரசனுக்குக் கூறினான். பல ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மனின் மகனாகிய ரிபுவும், ரிபுவின் சீடனும் புலத்தியனின் மகனுமான நிடகாவும் தேவிகா நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள விராநகரா என்னுமிடத்தில் வசித்தனர். பரப் பிரம்மம் பற்றி அறிந்து கொள்வதற்குத் தயாராக இல்லாத காரணத்தால் நிடகாவை ஊருக்குள் சென்று வசிக்கும்படி கூறினான் ரிபு. ஒருநாள் தன் சீடனாகிய நிடகாவைக் காணச் சென்றான் ரிபு. தன்னைக் காணவந்த தன் ஆசிரியனை உண்ண அழைத்தான், நிடகா. அவனைப் பார்த்து ரிபு என்ன உணவு படைக்கப் போகிறாய்? தூய்மையானதா?’ என்றான். அதற்கு நிடகா அரிசி, பழங்கள் மற்றும் இனிப்புகள் இருப்பதாகக் கூறினான். இது அசுத்தமான உணவு. அரிசியில் செய்யப் பட்ட உணவு. மற்றும் தயிர் கொடுக்குமாறு கூறினான் ரிபு. ரிபு உணவு உண்டபின் தன் ஆசிரியனைப் பார்த்துப் பசி அடங்கிவிட்டதா என்றும், இங்கு எதற்காக வந்தீர்கள் என்றும் கேட்ட நிடகாவைப் பார்த்து, "பசியோடு இருப்ப வர்களுக்கே உணவு உண்டபின் பசி அடங்கிவிடும். எனக்குப் பசியில்லை. அதனால் இந்தக் கேள்விக்கே இடமில்லை. உடம்பிற்குதான் பசி எடுக்கும். நான் உடம்பல்ல. நான் எங்குச் செல்கிறேன் என்று வினவினாய். என்னுடைய ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது. நீ காணும் நான் நானல்ல. நீ நீயல்ல.
நீ அளித்த உணவைப் பற்றிக் கவலையில்லை. ஏனெனில் அனைத்துமே ஒரே மூலப் பொருளில் இருந்து செய்யப் பட்டவை. இதுவே உண்மையான ஞானம்’ என்றான். இதைக் கேட்ட நிடகா, அஞ்ஞானம் அகன்று தன் ஆசிரியனைப் பணிந்து வணங்கினான்.

ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு நிடகாவைக் காண வந்தான் ரிபு. ஊருக்கு வெளியே புல்லைத் தின்று கொண்டு, மிகவும் மெலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட நிடகா மற்றவர்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வந்தான். பரமாத்மாவினின்று வேறுபட்டது எதுவுமில்லை என்ற உண்மையான ஞானத்தை போதித்து விடை பெற்றான் ரிபு.

இக்கதையைக் கூறிய பரதன், ஒர் அரசன் அறிந்து கொள்ளவேண்டிய ஞானம் இதுவே. மேகம் ஒன்றேயாயினும் சில சமயம் நீலமாகவும், சில சமயம் வெள்ளையாகவும் தோன்றுகிறது. அதுபோல் மாயையின் வசப்பட்டவர்கள் ஆத்மாவை வேறு வேறு என நினைக்கின்றனர். உண்மையில் ஆத்மா என்பது ஒன்றுதான். ஆத்மாவைத் தவிர உலகில் வேறு எதுவுமில்லை, நாம் அனைவரும் இந்த ஆன்மாவின் பிரிவுகளே என்று கூறினான்.

வேதவியாசர் பலர்

ஒவ்வொரு மன்வந்திரத்திலும் விஷ்ணு வேதவியாசராக உருவெடுக்கிறார். உருவெடுத்த பின்பு வேதங்களை வகைப் படுத்துகிறார். வைவஸ்வத மன்வந்திரங்களாகிய இந்தக் கால கட்டத்தில் வேதவியாசர் வேதங்களை 28 முறை வகைப்படுத்தி விட்டார். இதுவரை தோன்றியுள்ள வேதவியாசர்கள் இருபத்தெட்டு பேர் ஆவர். அவர்கள் சுவயம்பு வேதவியாசர், பிரஜாபதி வேதவியாசர், பிருஹஸ்பதி வேதவியாசர், மிருத்யு வேதவியாசர், பரத்வாஜ வேதவியாசர், கிருஷ்ண துவை பாயன வேதவியாசர் முதலானோர். விஷ்ணு புராணத்தின் படி வரப்போகும் வேதவியாசர் துரோணரின் மகனாகிய அசுவத்தாமன் ஆவார். அவர் சிரஞ்சீவி ஆவார்.

'ஓம்' என்ற பிரணவம் நான்கு வேதங்களின் சாரம் எனப்படும். பரப் பிரம்மம் எங்கும், எப்பொழுதும் எப் பொருளிலும் நிறைந்திருந்தாலும் காண்பவர்க்குரிய மன வளர்ச்சி, அறிவு முதிர்ச்சி ஆகியவற்றிற்கேற்ப பல வடிவ மாகத் தெரிபவர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களிலும் 1 இலட்சம் பாடல்கள் உள்ளன. கிருஷ்ண துவைபாயன வேதவியாசர் இந்த வேதங்களைப் பிரிக்க வேண்டுமென்று முடிவு செய்தவுடன் அவரைச் சுற்றி நான்கு முக்கியமான சீடர்கள் அமர்ந்திருந்தனர். பைலா என்பவருக்கு ரிக் வேதமும், வைசம்பாயனருக்கு யஜுர் வேதமும், ஜைமினிக்குச் சாமமும், சுமந்துவிற்கு அதர்வணமும் கற்பிக்கப்பட்டன. கிருஷ்ண துவைபாயன வியாசர் உரோமஹர்ஷனருக்குப் புராணங்களைக் கற்பித்தார்.

யாக்ஞவல்கியர் கதை

முன்னொரு காலத்தில் அனைத்து ரிஷிகளும் ஓரிடத்தில் கூடினர். பெரிய ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டியிருப்பதால் யாரும் இக்கூட்டத்திற்கு வராமல் இருந்துவிடக் கூடாது. அப்படி வராமல் இருந்துவிட்டால், எட்டாவது நாள் ஒரு பிராமணனைக் கொன்ற பாவம் அவர்களைச் சேரும் என்று ரிஷிகள் அறிவித்தனர். என்ன காரணத்தாலோ வைசம்பாயன மகரிஷி இக்கூட்டத்திற்கு வர முடியவில்லை. யாக்ஞவல்கியர் உள்ளிட்ட இருபத்தேழு சீடர்களுக்கு யஜுர் வேதத்தை இருபத்தி ஏழு பங்காகப் பிரித்து அவர் கற்றுத் தந்திருந்தார். கூட்டத்திற்கு வராத காரணத்தால் எட்டாம் நாள் வைசம்பா யனர் தவறுதலாக அவர் மைத்துனர் தலைமேல் காலை வைத்து அவரைக் கொன்றுவிட்டார். இந்த பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க விரும்பிய வைசம்பாயனர் தன் இருபத்தேழு சீடர்களையும் அழைத்து இந்த தோஷம் என்னை விட்டுப் போவதற்கு ஒரு யாகம் செய்யவேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் எனக் கட்டளையிட்டார். இக் கட்டளையைக் கேட்டவுடன் அந்த இருபத்து ஏழுபேரில் ஒருவராகிய யாக்ஞவல்கியர் எழுந்து "சுவாமி, யாகத்தை நன்கு செய்து முடிக்க இவர்களுக்கு ஆற்றல் போதாது. நானே இதைச் செய்து முடிக்கிறேன்” என்று கூறினார். இதுகேட்ட வைசம்பாயனர்
மிகவும் கோபமடைந்து, “என்னுடைய மற்ற சீடர்களை நீ எவ்வாறு குறை கூறமுடியும்? இவ்வளவு அகங்காரம் உள்ள நீ என் சீடனாக இருப்பதற்குத் தகுதியில்லை. ஆகவே என்னிடம் கற்றுக் கொண்டதைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்று கூறினார். யாக்ஞவல்கியர், 'சுவாமி உங்களுடைய நன்மைக்காகத்தான் நான் இவ்வாறு கூறினேன். அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உங்களுக்கு இல்லை. அதற்கு பதிலாக என்மேல் சினம் கொண்டீர்கள். சொல்வதைப் புரிந்து கொள்ளாத குரு எனக்கும் தேவை இல்லை. ஆகவே உங்களிடம் கற்றுக் கொண்டதை இதோ உமிழ்ந்து விடுகிறேன். என்று கூறி உமிழ்ந்தார். அவர் உமிழ்ந்ததை ஏனைய சீடர்கள் தைத்திரப் பறவை வடிவுடன் வந்து உண்டுவிட்டார்கள். இதனால் யஜுர் வேதத்திற்கு மட்டும் 'தைத்திரிய சம்ஹிதை' என்று பெயர் வழங்கலாயிற்று. யஜுர் வேதத்தை இழந்துவிட்ட யாக்ஞவல்கியர் சூரியனையே குருவாக வரித்துத் தவம் செய்தார். அதன் பயனாகச் சூரியன் தோன்றி, யாக்ஞவல்கிய ருக்கு யஜுர் வேதத்தைக் கற்றுத் தந்தார். சூரியனே கற்றுக் கொடுத்ததால் வைசம்பாயனருக்குக் கூடத் தெரியாத பல அர்த்தங்கள் யாக்ஞவல்கியருக்குத் தெரியலாயின.

புராணங்கள் தோன்றிய கதை

இந்த விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியில் இந்தப் புராணமும், ஏனைய புராணங்களும் தோன்றிய வரிசை சொல்லப்படுகிறது. புராண சம்ஹிதை என்ற மூல நூலை வேதவியாசர் தம் மாணவனாகிய லோமஹர்ஷனருக்குக் கற்றுக் கொடுத்தார். லோமஹர்ஷனரிடம் பயின்ற சுமதி, அக்னிவர்சா, மைத்ரேயு, சவர்னி, அக்ரிதவர்னா, சம்சபயனா ஆகிய ஆறு சீடர்களும் தாங்கள் கற்றுக் கொண்ட புராண சம்ஹிதையிலிருந்து ஒவ்வொரு புராணத்தை விரிவாகச் சொல்லினர். இந்த அடிப்படையில்தான் விஷ்ணு புராணமும் சொல்லப் பட்டது. பத்ம புராணத்தை அடுத்து வருகிற விஷ்ணு புராணம் விஷ்ணுவின் சிறப்புக்களை விரிவாக எடுத்துக் கூறுகிறது. இப்புராணத்தின்படி ஞானம் பதினான்கு வகைப்படும். இவை நான்கு வேதங்கள், ஆறு வேத அங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணம், தர்ம சாத்திரம் ஆகியவை ஆகும். இந்த பதினான்கோடு, ஆயுர் வேதம், தனுர் வேதம், சங்கீதம், அர்த்த சாஸ்திரம் ஆகிய நான்கையும் சேர்த்துப் பேசுவதும் உண்டு. ரிஷிகளுள் பிரம்ம ரிஷிகள், தேவ ரிஷிகள், ராஜ ரிஷிகள் என்ற மூன்று வகையினர் உண்டு.

யமன் கதை

உலகத்தில் இறந்தவர்களையெல்லாம் கொண்டு சென்று அவர்கள் செய்த குற்றங்களுக்கு ஏற்ப நரகத்தில் தள்ளி அக் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்கள் அனுபவித்த பிறகு மறுபிறப்பை அவர்களுக்குக் கொடுப்பதுதான் யமனுடைய வேலை. இப்படிப்பட்ட நரக வேதனையை அனுபவிக்காமல் இருக்கவும், யமனிடம் போகாமல் இருக்கவும் ஏதேனும் வழி உண்டா என்று மைத்ரேயு பராசரரைக் கேட்க, தான் ஏற்கெனவே இதுபற்றிக் கேட்ட உரையாடலைப் பராசரர் கூறினார்.

பாண்டவர்களுள் ஒருவராகிய நகுலன், தாத்தாவாகிய பீஷ்மரைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்கிறான். அதற்கு பதில் கூறவந்த பீஷ்மர் நகுலனைப் பார்த்து, 'கலிங்க நாட்டில் எனக்கொரு பிராமண நண்பர் இருந்தார். அந்த பிராமணனுக்கு ஒரு முனிவர் நண்பராக இருந்தார். அந்த முனிவர் இறந்த காலத்தையும், பழம் பிறப்பையும் அறியும் ஆற்றல் உள்ளவர். இந்த சக்திகளின் துணை கொண்டு யமனுக்கும், ஒரு யமதூதனுக்கும் நடந்த உரையாடலை அம்முனிவர் அறிந்திருந்தார். தாம் அறிந்ததை அம்முனிவர் என் பிராமண நண்பருக்குச் சொல்ல அதை அவர் எனக்குச் சொன்னார். அதை நான் இப்பொழுது உனக்குச் சொல்கிறேன். அந்த உரையாடல் விவரம் வருமாறு:
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
யமன்: விஷ்ணுபக்தர்கள் பக்கத்திலேயே நீ போகாதே. என்னைப் பொறுத்தவரை இந்த விஷ்ணு பக்தர்களைத் தவிர மீதமுள்ள அனைவருக்கும் நான்தான் தலைவன். உண்மையில் நான் சுதந்திரமானவன் அல்ல. நான் செய்யும் பணிகளை விஷ்ணுதான் மேற்பார்வை செய்கிறார். அது மட்டுமல்லாமல் என்னை தண்டிக்கும் உரிமையும் உடையவர் அவர். விஷ்ணுவின் கமலப் பாதங்களை வணங்கும் பக்தர்கள் பக்கம் செல்லாதே.

எமதூதன்: ஒருவன் எப்படி விஷ்ணு பக்தன் ஆவது?

யமன்: அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்மத்தை யார் மீறுவதில்லையோ, யாருடைய மனத்தில், அகங்காரம், பொறாமை முதலியவை இல்லையோ, யார் பகைவர் நண்பர் என்ற வேறுபாடு பாராட்டாமல் அனைவருடனும் சமத்துவமாக இருக்கிறார்களோ, யார் அகிம்சையைக் கடைப்பிடிக்கிறார்களோ, யார் கோபத்தை விட்டொழித்தார்களோ அவர்களே விஷ்ணு பக்தர்கள் ஆவார்கள். ஒயாது விஷ்ணுவை தியானிப்பதால் அவர்கள் வனப்பு வாய்ந்த வடிவத்தைப் பெறுகின்றனர். இதயத்தில் விஷ்ணுவை வைத்துப் பூஜிப்பவர்கள் குற்றம் செய்வதே இல்லை. அத்தகைய பக்தர்கள் பக்கத்தில் செல்லாதே. அப்படிச் சென்றால் வலிமை பொருந்திய விஷ்ணுவின் சக்கரம் உன்னையும் என்னையும் பழி தீர்த்துவிடும்.

நான்கு வர்ணங்கள்

விஷ்ணு பக்தர்கள் என்பவர்கள் விஷ்ணுவால் நியமிக்கப் பட்ட வர்ணாசிரம தர்மங்களைத் தவறாமல் கடைப்பிடிப்பர். நான்கு வர்ணங்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பவை ஆகும். பிராமணர்கள் கடமையாவன : கற்றல், கற்பித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறும் ஆகும். சத்ரியர்கள் கடமையாவன : கற்றல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் இவற்றோடு தனுர் வேதம் அறிந்து நாட்டைக் காக்கப் போர் புரிதல். அரசனுடைய கடமை தீயவர்களை தண்டிப்பதும், நல்லவர்களைக் காப்பதும் ஆகும். வைசியர்கள் விவசாயம், ஆடுமாடு வளர்த்தல், வாணிபம் என்பவற்றுடன் கற்றல், யாகம் செய்தல், ஈதல் என்பவற்றைச் செய்ய வேண்டும். சூத்திரர்கள் கடமை ஏனைய மூவருக்கும் தொண்டு புரிதல் ஆகும். இவற்றையல்லாமல் சூத்திரர்கள் வாணிபம், கைத்தொழில் என்பவற்றிலும் ஈடுபடலாம். நால்வருக்கும் பொதுவான சில கடமைகளும் உண்டு. அவை யாவன: பிறரிடம் அன்பு பாராட்டல், தூய்மையோடு இருத்தல், கடினமாக உழைத்தல், சத்தியத்தைக் கடைப்பிடித்தல், நட்புப் பாராட்டல், துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல் ஆகியவை யாகும.

இவற்றையல்லாமல் பிரம்மசரியம், கிரகஸ்தம், வானப் பிரஸ்தம், சந்நியாசம் என்ற நான்கு நிலைகளையும் ஒருவன் மேற்கொள்ள வேண்டும். முதலாவது நிலை பிரம்மசரியம். பூணூல் அணிந்தவுடன் குருவை நாடிச் சென்று அவருடனேயே தங்கி, அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்தல், குரு உறங்கிய பின் உறங்கி, அவர் எழுமுன் எழுந்து காலைக் கடன்களை முடித்து மலர் தண்ணர் முதலியவற்றைக் கொண்டு வரவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் குருவை மறுத்துப் பேசவோ, எதிர்க்கவோ கூடாது. எல்லாச் சாத்திரங்களையும் கற்ற பிறகு குருதட்சணை கொடுத்துவிட்டு அவரது உத்தரவின்பேரில் கிரகஸ்தனாக ஆக வேண்டும். இதுவே இரண்டாவது நிலை. கிரகஸ்தனானவன் தக்க ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து இல்லறம் நடத்த வேண்டும். புதல்வரைப் பெறுதல், வேள்வி செய்தல், மேலும் கற்றல், விருந்தினர்களை உபசரித்தல் ஆகியவை இதன்பாற்படும். மற்ற நிலைகளைக் காட்டிலும் கிரகஸ்தனின் நிலையே உயர்ந்த தாகும். பிராமணர்களும், பிரம்மசாரிகளும் பிச்சை ஏற்பதை மேற்கொள்ளலாம். மூன்றாவது நிலை வானபிரஸ்தம். நிறைவான வாழ்க்கைக்குப் பிறகு ஒருவன் காட்டிற்குச் சென்று தவம் செய்யலாம். அவ்வாறு செல்லும்போது மனைவியை அழைத்துக் கொண்டோ அல்லது மகனின் பாதுகாப்பிலோ விட்டுச் செல்லலாம். வானப்பிரஸ்தர்கள் காய் கனி கிழங்குகளை உண்டு, முடியினை வெட்டாது இருத்தல் வேண்டும். தெய்வங்களை வழிபடுவதோடு தன்னை நாடி வரும் விருந்தினர்களுக்குத் தன்னிடம் இருப்பதைக்
கொடுக்க வேண்டும். அவனுடைய தலையாய கடமை தியானம் செய்வதே யாகும். கடைசி நிலையாக வருவது சந்நியாச நிலையாகும். பந்த பாசங்களை விட்டுவிட்டு, நிலையில்லாத உலகப் பொருட்களின் மீதுள்ள ஆசையினையும் துறந்தவனே சந்நியாச நிலையினை ஏற்க முடியும். சந்நியாசியைப் பொறுத்தவரை எல்லா ஜீவன்களுமே ஒன்றுதான். அவற்றிற்கு எந்தத் தீங்கும் செய்ய மாட்டான். தனிமையில் அமர்ந்து யோகத்தில் ஈடுபடுவதே அவன் கடமையாகும். அவன் ஒர் இரவுக்கு மேல் ஒரு கிராமத்திலும், ஐந்து நாட்களுக்கு மேல் ஒரு நகரத்திலும் தங்கக் கூடாது. சந்நியாசி நிலையில் உள்ளவன் பிச்சை எடுத்தே தன் உணவை உண்ண வேண்டும். ஆனால் ஒரு வீட்டில் பிச்சை எடுக்குமுன்பு, அவ்வீட்டில் உள்ளவர்கள் உண்டுவிட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டே அவ்வீட்டில் பிச்சை எடுக்க வேண்டும்.

சடங்குகள்

ஒரு குழந்தை பிறந்த பொழுதும், ஒருவன் மரித்த பொழுதும் வெவ்வேறு வகையான சடங்குகள் செய்யப் படுகின்றன. குழந்தை பிறந்த பத்தாம் நாள் தந்தை குழந்தைக்குப் பெயர் சூட்டுகின்றான். திருமணங்கள் எட்டு வகைப்படும். அவை பிரம்மம், தெய்விய, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, காந்தர்வ, ராட்சச பைசாச என்பவை ஆகும். ஒவ்வொரு வர்ணத்திற்கும் குறிப்பிட்ட வகைத் திருமணங்கள் குறிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு குடும்பத் தலைவனுக்கும் சில கடமைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடவுளை வணங்குதல், பசு, பிராமணர்கள், முனிவர்கள், வயது முதிர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரை வணங்க வேண்டும். திருடுதல், பொய் பேசுதல், பிறரை நோகச் செய்தல் ஆகியவற்றைச் செய்யக் கூடாது. பிறர் குற்றம் கூறக் கூடாது. பிறருடைய செல்வம் கண்டு பொறாமைப்படக் கூடாது. தீயவர் சேர்க்கை கூடாது. தீப்பிடித்த வீட்டிற்குள்ளோ, மரத்தின் உச்சிமீதோ நுழையவும், ஏறவும் கூடாது. வாய் பொத்திக் கொட்டாவி விட வேண்டும். கொடிகளையும், வணக்கத்திற்குரிய தெய்வங்களின் நிழல்களையும் மிதிக்கக் கூடாது. வீட்டிலும் காட்டிலும் தனித்து வாழக் கூடாது. கொடிய விலங்குகள் அருகே செல்லக்கூடாது.

வீட்டை விட்டுப் புறப்படுமுன் வீட்டின் தலைவன், தெய்வம், மலர், ஆபரணம், நெய் அல்லது மதிக்கத் தகுந்த ஒருவர் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பார்த்துவிட்டுப் புறப்பட வேண்டும். நாட்டிலும், காட்டிலும் நடக்கும் பொழுது கையில் ஒரு தடிக் கொம்புடனும், காலில் செருப்புடனும் நடக்க வேண்டும். ஒருவன் உண்மையே பேச வேண்டும். அந்த உண்மை பேசுவதால் பிறருக்குத் தீங்கு உண்டாகும் என்ற நிலை வந்தால் பேசாமல் இருக்க வேண்டும்.

மகன், மகள் ஆகியோர் திருமணம், புதுமனை புகுதல், குழந்தைகட்குப் பெயர் சூட்டல், முதன்முறையாகப் பிறந்த சிசுவைப் பார்த்தல் ஆகியவை நிகழும் பொழுது அவ்வவற் றிற்குரிய சடங்குகளைச் செய்ய வேண்டும். ஒருவர் இறந்த பொழுது ஒற்றைப் படை எண்ணுள்ள பிராமணர்களுக்குச் சாதாரண உணவு படைத்தால், பிதுர்கள் ஒரு மாதத்திற்கும் மீன் விருந்து கொடுத்தால், இரண்டு மாதத்திற்கும் முயல் கறி கொடுத்தால், மூன்று மாதத்திற்கும் பறவைக் கறி தந்தால், நான்கு மாதத்திற்கும் பன்றிக் கறி கொடுத்தால், ஐந்து மாதத்திற்கும் ஆட்டுக் கறி கொடுத்தால், ஆறு மாதத்திற்கும் மான் கறி கொடுத்தால், ஏழு மாதத்திற்கும் சிறப்பான மான் கறி தந்தால், எட்டு மாதத்திற்கும் கயல் இறைச்சி தந்தால், ஒன்பது மாதத்திற்கும் வெள்ளாட்டுக் குட்டி கறி கொடுத்தால், பத்து மாதத்திற்கும் மாட்டுக்கறி கொடுத்தால், பதினோரு மாதத்திற்கும் குறிப்பிட்ட பறவையின் இறைச்சி கொடுத்தால், கால முழுவதற்கும் திருப்தி அடைவார்கள். சிரார்த்தம் செய்வதற்குச் சிறந்த இடம் கைலை என்ற ஊரேயாகும்.
ககுத்தனின் முன்னோர்

மீனுவின் தும்மலில் பிறந்தவன் இட்சவாகு. இட்சவாகுவின் மகன் விருக்சி. விருக்சிக்கு மிகவும் தைரியம் வாய்ந்த மகன் பிறந்தான். அவன் பெயர் பரஞ்செயன். ஒருமுறை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கடும் போர் நடந்தது. போரில் வெல்ல முடியாத தேவர்கள் விஷ்ணுவை வேண்டினர். அவர்களிடம் விஷ்ணு, தான் பரஞ்செயன் என்ற பெயரில் பூமியில் அவதரித்திருப்பதாகவும், அவ்வாறு அவதரித்த பரஞ்செயன் தலைமையில் தேவர்கள் அசுரர்களை வெல்ல முடியும் என்றும் கூறினார்.

அதனால் தேவர்கள் பரஞ்செயனிடம் வந்து தங்களுக்குத் தலைமை ஏற்றுப் போரிட வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்குப் பரஞ்செய்ன் இந்திரனின் தோளில் ஏறித் தான் போரிட வேண்டும் என்றும், அதனை தேவர்கள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்குத் தர்ன் தலைமை ஏற்றுப் போரிடத் தயார் என்றும் கூறினான். உடனே இந்திரனும் காளை உருவெடுக்க, அதன்மீது அமர்ந்து அசுரர்களை வென்றான் பரஞ்செயன். தோள் என்ற பொருளுடையது 'ககுத் என்ற சொல். தோளின்மீது அமர்ந்து போரிட்டதால், பரஞ்செயன் அன்று முதல் ககுத்தன்' என்று அழைக்கப் பட்டான்.

ககுத்தனின் வழியில் வந்தவன் யுவனசா என்ற அரசன். நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாமையால், அதற்கு வேண்டிய யாகம் செய்யுமாறு முனிவர்களிடம் கூறினான். சடங்குகள் நடு இரவில் முடிவு பெற்றதால், முனிவர்கள் புனித நீரினை இரவு முழுவதும் ஒரு பானையில் வைத்திருந்தனர். யுவனசாவின் மனைவிக்கு அந்தப் புனித நீரினைக் கொடுத்தால் பலம் வாய்ந்த மகன் பிறப்பான் என்று கருதிய முனிவர்கள், அதனைப் பத்திரமாக வைத்திருந்தனர். ஆனால் மிகவும் தாகம் எடுத்த காரணத்தினால், அப்பானையில் உள்ள நீர் புனித நீர் என்பதை அறியாத மன்னன் யுவனசா அதைக் குடித்து விட்டான். இதனால் ஒரு குழந்தை யுவனசாவின் உடலில் புகுந்து மேலும், மேலும் பெரிதாக வளர்ந்தது. அக்குழந்தை இவ்வுலகில் ஜனனம் செய்யவேண்டிய வேளை யில் அம்மன்னனின் வலது பக்கத்தைப் பிளந்துகொண்டு இவ்வுலகிற்கு வந்தது. ஆனால் மன்னன் இதனால் இறக்க வில்லை. ஆயினும் அக்குழந்தைக்குத் தாய் யார் என்ற கேள்வி எழுந்தது. இச்சூழ்நிலையில் இந்திரனே அக் குழந்தைக்குத் தாயாக இருப்பதற்கு ஒப்புக் கொண்டான். அக்குழந்தை “மாந்தாதா என்று பெயர் பெற்றது. இந்திரன் வளர்த்ததால் அக்குழந்தை ஒரே நாளில் முழு வளர்ச்சி அடைந்தது. முழு உலகத்தையும் அவனே ஆட்சி செய்தான்.

மாந்தாதாவின் காலத்தில் செளபரி என்ற முனிவன் பன்னிரண்டு ஆண்டுகள் நீருக்கு அடியில் வாழ்ந்து வந்தான். நீரில் மீன்களின் அரசன் தன் குழந்தைகள், பேரக் குழந்தை களுடன் விளையாடுவதைப் பார்த்தான். உடனே தானும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள், பேரக் குழந்தைகள் பெற வேண்டுமென விரும்பினான். மாந்தாதா அரசனுக்கு ஐம்பது பெண்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டான். ஆனால் வயது முதிர்ந்த தோற்றம் உடைய முனிவனுக்குத் தன் மகளை மணம் செய்து கொடுக்க விரும்பாத அரசன், காரணத்தைக் கூறினால் தன்னைச் சபித்து விடுவானோ என்று நினைத்தான். அதனால் அம்முனிவரிடம் தங்கள் குல வழக்கப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் மணமகனுக்கே மணமுடிப்பதாகக் கூறினார். ஆனால் அரசனின் எண்ணத்தைத் தெரிந்து கொண்ட முனிவன் ஒருமுறை அரசனது மகளைப் பார்க்க அனுமதி கொடுத்தால் அவர்களைப் பார்ப்பதாகவும், அவர்களில் யாரேனும் தன்னை விரும்பினால் ஏற்றுக் கொள்வதாகவும் கூறினான். அவர்கள் அனைவரும் மறுத்துவிட்டால் தான் சென்று விடுவதாகவும் கூறினான். இதற்கு அரசனும் ஒப்புக் கொண்டான். மிகுந்த தவ வலிமையுடைய செளபரி முனிவன், அரசனது பெண்களைப் பார்க்கச் செல்லுமுன் தன்னை மிகுந்த அழகுள்ள இளைஞனாக மாற்றிக் கொண்டான். அவ்வாறே ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து வர அவர்கள் அ ைஎவரும் தனித்தனியே அவனை விரும்பினர். அவர்கள் அனைவரையும் மணந்து கொண்டு தன்னுடைய ஐம்பது மனைவிகளையும் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்ற முனிவன், விஸ்வகர்மாவை அழைத்து ஒவ்வொருவருக்கும் அழகிய மாளிகை அமைக்கச் சொன்னான். ஒவ்வொரு மாளிகையிலும் நீர்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
நிரம்பிய தடாகம் இருக்க வேண்டும் என்றும், அதில் தாமரை மலர் மற்றும், அன்னப் பறவைகள் இருக்க வேண்டும் என்றான். அதைப் போலவே விஸ்வகர்மா அமைத்துக் கொடுத்தான்.

ஒருநாள் மாந்தாதா அரசன் தன் பெண்களைக் காண வந்தான். அவர்களில் முதல் பெண் தான் மிகுந்த மகிழ்ச்சி யுடன் இருப்பதாகவும், தன் கண்வன் தன்னுடனேயே இருப்பதால் மற்ற சகோதரிகள் வருந்துவார்கள் என்றே தான் நினைப்பதாகவும் கூறினாள். மற்றொரு மகளிடம் அரசன் கேட்டபோது, அவளும் இதையே கூறினாள். செளபரி முனிவன் தன் தவ வலிமையால் தன்னைப் போல ஐம்பது உருவங்களை உண்டாக்கி இருந்தான். அவனது தவ வலிமை யைக் கண்ட அரசன் அவனை விழுந்து வணங்கினான்.

சில நாட்களுக்குப் பிறகு தன் மக்களிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்த 'செளபரி முனிவன், இந்தப் பாசம் தன்னுடைய தவத்திற்குப் பெரிதும் இடையூறாக இருப்பதை அறிந்து, இது மாயையின் காரணமாகவே ஏற்பட்டது என்று அறிந்து அன்று முதல் விஷ்ணுவை தியானிப்பதிலேயே தன் மீதமுள்ள நாட்களைக் கழித்தான்.

சகர மன்னன் கதை

மாந்தாதாவின் பரம்பரையில் வந்தவன் புருட்சா என்ற அரசன். அவன் காலத்தில் நாகலோகத்தில் வசிக்கும் நாகர்களின் மாணிக்கங்களைத் திருடுவதற்காக கந்தர்வர்கள் நாகலோகத்திற்குள் புகுந்து முற்றுகையிட்டனர். கந்தர்வர்களை எதிர்க்க முடியாத நாகர்கள் விஷ்ணுவை வேண்டிக் கொண்டனர். விஷ்ணு அவர்கள் முன் தோன்றி 'உலகை புகுந்து கொண்டு கந்தர்வர்களை அழிக்கிறேன்' என்று கூறினார். நாகர்கள் நர்மதா என்ற பெண்ணை புருட்சாவிடம் அனுப்பினர். அவள் சென்று புருட்சாவை நாகலோகத்திற்கு அழைத்து வந்து விட்டாள். புருட்சாவின் உடலில் புகுந்து இருந்த விஷ்ணுவின் உதவியால் கந்தர்வர்கள் தோற்கடிக்கப் பட்டனர். புருட்சாவை அழைத்துக் கொண்டு வந்ததற்காக நாகர்கள் நர்மதாவிற்கு நன்றி பாராட்டினர். மேலும் அவளை காலை, மாலை வணங்குபவர்களை விஷம் தீண்டாது, பாம்புகளும் கடிக்காது என்ற வரத்தைப் பெற்றனர்.

அந்தப் பரம்பரையில் வந்தவன் பகு என்ற மன்னன். அவன் மைந்தன் சகரன் ஆவான். பெருவலி படைத்தவனாகிய சகரன் உலகம் முழுவதையும் ஆண்டு ஒர் அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினான். அவன் இரு மனைவிகளுள் ஒருத்திக்கு ஒரு மகனும், மற்றொருத்திக்கு அறுபதினாயிரம் மக்களும் பிறந்தனர். இவர்கள் அனைவருமே தீயவர்களாக இருந்தனர். இந்த நிலையில் அஸ்வமேத யாகத்தின் குதிரையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சகர மன்னன் இப்பிள்ளைகளிடம் ஒப்படைத்தான். குதிரை இங்குமங்கும் அலைய, மக்கள் அதன் பின்னே சென்றனர். திடீரென்று குதிரை காணாமல் போய்விட, தேடிச் சென்ற பிள்ளைகள் கீழுலகிற்குக் குதிரை சென்றதை அறிந்தனர். அவர்களும் கீழுலகம் செல்ல, குதிரை ஓரிடத்தில் மேய்ந்து கொண்டிருப்பதையும், அதனருகில் கபிலர் என்ற முனிவர் அமர்ந்திருப்பதையும் கண்டார்கள். அறிவு குறைந்த இப்பிள்ளைகள் முனிவர்தான் குதிரையைத் திருடினார் என்று நினைத்து அவர்மேல் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். முனிவரிடத்திலிருந்து புறப்பட்ட தீப்பிழம்பு பிள்ளைகள் அனைவரையும் எரித்துச் சாம்பலாக்கிவிட்டது. இதை அறிந்த சகரன், தன் மூத்த மனைவியின் மகனாகிய அசமஞ்சனின் பிள்ளையைக் கபில முனிவரிடம் அனுப்பினான். அமுஷ்மணன் என்ற அந்தப் பிள்ளை கபில முனிவரிடம் சென்று வணங்கி மிக்க வினயத்துடன் தன்னுடைய தந்தை, சிறிய தந்தைகள் ஆகிய அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வழிசொல்லுமாறு வேண்டிக் கொண்டான். அவன்மேல் இரக்கம் கொண்ட கபிலர் உங்களுடைய பரம்பரையில் ஒரு மன்னன் வரப்போகிறான். அவன் பாகீரதி என்று சொல்லப்படும் கங்கையை தேவ லோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வருவான். இவர்கள் எரிந்த சாம்பலின் மேல் கங்கைத் தண்ணிர் பட்டவுடன் இவர்கள் அனைவரும் மோட்சம் போவார்கள் என்று கூறினார்.

பகீரதன் பரம்பரையில் வந்தவர்களே இராம, இலட்சுமண, பரத சத்ருக்னன் ஆவர்.
ஜனக மன்னனின் கதை

இட்சுவாகுவின் மகனாகிய நிமி ஒரு யாகம் செய்தான். இது ஆயிரம் வருடங்கள் நடைபெற்றது. நிமி ஆயிரம் வருடங்கள் நடத்த வேண்டிய ஒரு யாகத்தைச் செய்ய விரும்பினான். அதற்கு வசிட்டனை ஆச்சார்யனாக வர வேண்டுமென்று கேட்டான். ஐந்நூறு வருடங்கள் நடைபெறும் ஒரு யாகத்தை இந்திரன்,தெய்யப்போவதாகவும். அதற்குத் தலைவனாகத் தான் இருக்க வேண்டியிருப்பதால் அதுமுடிந்த பின்னர் நிமியின் யாகத்தை நடத்தலாம் என்றும் வசிட்டன் கூறினான். அதைக் கேட்டுக் கொண்டு பதில் ஒன்றும் சொல்லாமல் வந்த நிமி, ஐந்நூறு வருடங்கள் காத்திருக்க விரும்பாமல் தன் யாகத்தைத் தொடங்க விரும்பினான். கெளதம முனிவரைத் தலைவராக வைத்துக்கொண்டு மற்ற முனிவர்களையும் வைத்துக் கொண்டு நிமி யாகத்தை நடத்தி னான். இந்திரனுடைய யாக்த்தை முடித்துக்கொண்டு நிமியின் யாகத்தைத் தொடங்கலாம் என்று வசிட்டன் நிமியிடம் வந்தான். கெளதமனைத் தலைவனாகக் கொண்டு நிமியின் யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தன்னைக் கேட்டு தான் சொல்லியபடி நடவாததால் நிமி தன்னை அவமானப்படுத்தி விட்டான் என்ற கோபத்தினால், வசிட்டன் நிமியின் பூதவுடல் இல்லாமல் போகட்டும் என்று சபித்தான். நிமியும் வசிட்டன் கோபம் நியாயமற்றது என்று நினைத்து வசிட்டனுடைய பூதவுடல் இல்லாமல் போதட்டும் ஒன்று சபித்தான். இரண்டு பேரின் பூதவுடல்களும் இல்லாமல் போயின. ஆனால் வருணன் முதலிய தேவர்கள் தயவால் வசிட்டனுக்கு உடனே வேறொரு உடல் கிடைத்தது. நிமியின் உட்லைத் தைலத்தில் போட்டு வைத்திருந்தார்கள். அவ்னுடைய யாகம் முடிந்தவுடன் முனிவர்கள் அவன் உடம்பில் மறுபடியும் அவன் உயிரைச் செலுத்த விரும்பினார்கள். ஆனால், அது தேவையில்லை என்று கூறிவிட்ட நிமி அதற்குப் பதிலாக ஒவ்வொருவருடைய கண் இமையிலும் தான் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அவ்வாறே முனிவர்கள் தந்தார்கள். கண் புருவம் அடிக்கடி கண்ணை மூடுவதால் நிமியின் செயல் அதுவாதலால், நிமிஷம் என்ற சொல்லும் பிறந்தது. நிமிக்குப் பிள்ளைகள் இல்லாததால் ராஜ்ஜியத்தை ஆள ஒருவரும் இல்லை. இதை அறிந்த முனிவர்கள் நிமியின் உடலைப் பொடி செய்தார்கள். அந்தப் பொடியிலிருந்து தோன்றிய பிள்ளைக்கு ஜனகன் என்று பெயர் வந்தது. அவன் தந்தைக்கு உடம்பு இல்லாததால் ஜனகனுக்கு வைதேகன் என்ற பெயரும் வந்தது. ஜனகன் யாகம் செய்வதற்காகப் பூமியை உழுதான். உழுபடைச்சாலில் இருந்து ஒரு பெண் மகவு வெளி வந்தது. அப்பெண்ணே சீதையாவாள்.

விசுவாமித்திரர், ஜமதக்கினி கதை

ஜானுவின் மகனான கதி என்ற அரசனுக்குச் சத்தியவதி என்ற மகள் பிறந்தாள். ரிஷிகா என்ற முனிவன் சத்தியவதியை மணந்து கொள்ள விரும்பினான். ஒரு கிழட்டு முனிவனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத கதி அதை நேரிடையாகச் சொல்ல அஞ்சினான். எனவே உடம்பு முழுவதும் வெள்ளையும், கரிய நிறமுடைய காதுகளும் உடைய ஆயிரம் குதிரைகளைப் பரிசாகத் தந்தால் பெண்ணைக் கொடுப்பதாகக் கூறினான். முனிவனால் குதிரைகளைச் சேகரிக்க முடியாது என்ற எண்ணத்தில்தான் அரசன் இதைச் சொன்னான். ஆனால் முனிவன் வருணனை வேண்டி இந்த ஆயிரம் குதிரைகளையும் பெற்றுவிட்டான். குதிரைகளைக் கண்ட மன்னன் வேறு வழியில்லாமல் தன் மகளை முனிவன் ரிஷிகாவிற்கு மணம் செய்து கொடுத்தான்.

சத்தியவதி தனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டுமென்று முனிவனைக் கேட்டுக் கொண்டாள். முனிவர் ஒரு யாகம் செய்து அதில் கிடைத்த ஒரு கிண்ணம் பாயசத்தைச் சத்திய வதியிடம் தந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சத்திய வதியின் தாயார் தனக்கும் ஒரு ஆண் மகவு வேண்டும் என்று மருமகனிடம் வேண்டிக் கொண்டார். மறுபடியும் ஒரு கிண்ணம் பாயசத்தை வரவழைத்த முனிவர் இரண்டு கிண்ணங்களையும் சத்தியவதியிடம் கொடுத்து. இது உன் தாய்க்கு இது உனக்கு என்று கூறிவிட்டுக் காட்டுக்குள் சென்று விட்டார்.
அவர் சென்ற பிறகு சத்தியவதியின் தாய்க்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. யாருடைய பாயசம் சிறந்த புதல்வனைத் தரும் என்று ஐயம் கொண்டாள். உடனே மகளைப் பார்த்து, நானோ சத்திரியன் மனைவி. என் வயிற்றில் பிறக்கும் பிள்ளை இவ்வுலகத்தை ஆள வேண்டும். நீயோ பிராமணன் மனைவி. உன் பிள்ளை சாதுவாகத் தவம் செய்யவேண்டும். ஆகவே உன்னுடைய பாயசத்தை எனக்குக் கொடுத்துவிட்டு என்னுடைய பாயசத்தை நீ சாப்பிடு என்று கூறினாள், மகள் சத்தியவதியும் அதற்கு உடன்படவே பாயசக் கிண்ணங்கள் கை மாறின. காடு சென்ற முனிவன் திரும்பி வந்தவுடன் அவன் மனைவி சத்தியவதி நடந்தவற்றைக் கூறினாள். முனிவர் மிக்க வருத்தத்துடன் “சத்தியவதி! உன் தாயின் மனத்தில் தோன்றிய இந்த எண்ணம் என் மனத்தில் முதலிலேயே தோன்றிவிட்டது. ஆக சிறந்த சத்திரியனுக்குரிய இலக்கணங் களோடு ஒர் ஆண் மகவு பிறக்க வேண்டும் என்றுதான் உன் தாய்க்குப் பாயசத்தைத் தயாரித்தேன். துரதிருஷ்டவசமாக நிலைமை மாறிவிட்டது" என்று வருந்தினார். பாயசம் கை மாறியதால் சத்தியவதி வயிற்றில் ஜமதக்கினியும், அவள் தாய் வயிற்றில் விசுவாமித்திரனும் தோன்றினர். தன் மகனை விடத் தன் பேரனுடைய வழித் தோன்றல்கள் சிறந்த வீரர் களாக இருக்கவேண்டும் என்று அவள் தாய் விரும்பியதால், அவள் பேரனாகிய ஜமதக்கினியின் மகன் பரசுராமன் பிராமணனாகப் பிறந்தும் சத்ரியர்களையெல்லாம் ஒழிக்கும் வீரமுடையவனாக இருந்தான்.

சயமந்தக மணியின் கதை

சத்தியபாமாவின் தந்தையாகிய சத்ரஜித் கடற்கரையில் இருந்துகொண்டு சூரியனைப் பிரார்த்தித்தான். ஆழ்ந்த அந்தப் பிரார்த்தனைக்கு மகிழ்ந்த சூரியன் சத்ரஜித்தின் முன் தோன்றி னான். ஆனால் சத்ரஜித் கண்களைத் திறந்தவுடன் சூரியனுடைய ஒளி அவன் கண்களை மூடச் செய்து விட்டது. அவன் சூரியனைப் பார்த்து, 'ஐயனே! உன் கழுத்தில் ஏதோ ஒளி பொருந்தியதாக நகை அணிந்திருக்கிறாய். அந்த ஒளி காரண மாக உன்னை நான் தரிசிக்க முடியவில்லை. உன்னை தரிசிக்கு மாறு எனக்கு அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். உடனே சூரியன் தன் கழுத்தில் இருந்த சயமந்தக மணியைக் கழற்றிவிட்டார். இப்பொழுது சூரியனைக் கண் களால் கண்டு மகிழ்ந்த சத்ரஜித் அவரைத் துதித்தார். அவன் துதியில் மகிழ்ந்த சூரியன் உனக்கு என்ன வேண்டும்? கேள், தருகிறேன்!” என்றான். இந்த சயமந்தக மணியை எனக்குத் தரவேண்டும் என்று சத்ரஜித் கூறியவுடன் மறு வார்த்தை பேசாமல் கொடுத்துவிட்டார். அதை அணிந்து கொண்ட சத்ரஜித் துவாரகைக்குள் நுழைந்தான். அவன் மேனி முழுவதும் இந்த மணியின் காரணமாக மிகப்பெரிய ஒளி வீசிற்று. மக்கள் அவனை சூரியன் என்றே நினைத்து விட்டனர். வீட்டிற் கொண்டு சென்று சயமந்தக மணியை ஜாக்கிரதையாக ஒளித்து வைத்திருந்தான். அந்த மணி ஊருக்குள் வந்த காரணத்தினால் துவாரகையில் எவ்வித தீமையும் ஏற்படாமல் மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்கள் பெறும்படியான சூழ்நிலை உருவாயிற்று.

மன்னன் சத்ரஜித் தன்னிடம் இந்த மணி இருப்பதையும் தன் மருமகனாகிய கிருஷ்ணன் அதை உக்கிரசேனருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைப்பதை அறிந்து தன் சகோதரனாகிய பிரசேனனிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொன்னான். அந்த மணியின் சிறப்பு என்ன வென்றால் நல்லவர்கள் கையில் இருந்தால் நாட்டுக்கும் நல்லதை உண்டாக்கி தினமும் ஒரு பொற்காசு தரும். சத்ரஜித் நல்லவனாக இருந்ததால் அந்த மணி அவனுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்தது. மணியை வைத்திருந்த பிரசேனன் அதை அணிந்து கொண்டு வேட்டையாடச் சென்றிருந்தான். அவன் நல்லவனல்ல. ஆதலால் காட்டில் ஒரு சிங்கம் அவனைக் கொன்று விட்டது. சிங்கம் மணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்று முயன்றபோது, கரடிகளில் உயர்ந்தவனாகிய ஜாம்பவான் காட்டிற்கு வந்து சிங்கத்தைக் கொன்று மணியை எடுத்துச் சென்று தன் குழந்தையிடம் விளையாடக் கொடுத்தது.
காடு சென்ற பிரசேனன் நீண்ட நேரம் வராமையால் அவன் இறந்துவிட்டான் என்று முடிவு செய்து விட்டனர். கிருஷ்ணனுடைய எண்ணம் பலருக்கும் தெரியுமாதலால் அவன்தான் பிரசேனனைக் கொன்று மணியை எடுத்துக் கொண்டான் என்று பலரும் நினைத்தனர்.

இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட கிருஷ்ணன் தானே பிரசேனனைத் தேடிக் காட்டிற்குச் சென்றான். இறந்து கிடந்த பிரசேனன், சிங்கம் ஆகிய இரு உடல்களையும் பார்த்தான். நடந்ததை ஒருவாறு ஊகித்துக் கொண்ட கிருஷ்ணன் கால் தடங்கள் பற்றிச் சென்று ஜாம்பவான் இருப்பிடத்தை அடைந்தான். ஜாம்பவானின் குழந்தை மணியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. கிருஷ்ணனைக் கண்டு குழந்தை அலறவே, ஜாம்பவான் வந்தது. இருவருக்கும் பெரும் போர் நடந்தது. அப்போர் இருபத்தியோரு நாட்கள் நீடித்தது. கிருஷ்ணன் வராமையால் அவனைத் தேடி வந்த யாதவர்கள் ஜாம்பவான் வீடுவரை கிருஷ்ணன் சுவடு இருப்பதையும் அதன்பிறகு அது காணாமல் போனதையும் பார்த்தார்கள். இதற்குள் கிருஷ்ணன் சென்று ஒருவாரம் ஆகிவிட்டபடியால் அவன் இறந்துவிட்டான் என்று நினைத்து யாதவர்கள் பலரும் கூடி கிருஷ்ணனுக்கு சிரத்தி சடங்கு செய்தார்கள். சிரத்தையில் ஏற்படுகின்ற புண்ணியம் கிருஷ்ணனைச் சென்று அடைந்ததால் அவன் மிக்க பலத்துடன் போர் செய்து ஜாம்பவானைத் தோற்கடித்தான். இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்ட ஜாம்பவான் கிருஷ்ணன் வீரத்தை மெச்சித் தன் பெண் சாம்பவதியை அவனுக்கு மணம் செய்து கொடுத்து அந்த மணியையும் பரிசளித்தான். கிருஷ்ணன் தன் மனைவியோடு துவாரகைக்கு வந்தான்.

கிருஷ்ணனின் மீட்சியைக் கண்ட யாதவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நடந்தவற்றை அறிந்த சத்ரஜித் கிருஷ்ணனை சந்தேகித்ததற்காக வருந்தினான். அதற்காகத் தன் மகள் சத்யபாமையை மணம் செய்து கொடுத்தான். சயமந்தக மணி மீண்டும் சத்ரஜித்தை அடைந்தது. சத்தியபாமையைத் தாங்கள் அடைய வேண்டும் என்று கருதி இருந்த அக்ருவர், கிருதவர்மா மற்றும் சடதன்வா ஆகியோர் கிருஷ்ணன் மேல் பொறாமையும் வெறுப்பும் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் பாண்டவர்கள் வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் எரிந்து போனார்கள் என்பதைக் கேள்விப்பட்டுக் கிருஷ்ணன் அங்கே சென்றான். கிருஷ்ணன் இல்லாத அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சடதன்வா சத்ரஜித்தைக் கொன்று மணியைக் களவாடி விட்டான்.

தன் தகப்பன் கொல்லப்பட்டதை அறிந்த சத்தியபாமா கடுஞ்சினம் கொண்டு ஒரு ரதத்தில் ஏறி வாரணாவதம் சென்று கிருஷ்ணனிடம் நடந்தவற்றைக் கூறினாள். மீண்டுவந்த கிருஷ்ணன் தன் சகோதரன் பலராமனிடம் நடந்தவற்றைக் கூறி நாம் இருவரும் ஒன்று சேர்ந்து சடதன்வாவைக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இருவரும் சடதன்வாவை எதிர்த்தனர். இவர்கள் எதிர்ப்பை சமாளிக்க முடியாத சடதன்வா அக்ருவரிடம் மணியைக் கொடுத்து வைத்திருக்கச் சொன்னான். தன்னிடம் மணி இருப்பதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று உறுதி பெற்றுக் கொண்ட அக்ருவர் மணியை வைத்துக் கொண்டான். சடதன்வா கிருஷ்ணனுக்கு அஞ்சி குதிரையில் ஏறி ஓடினான். கிருஷ்ணனும், பலராமனும் பின் தொடர்ந்தனர். காட்டின் எல்லையில் குதிரை இறந்து விடவே அவன் இறங்கி ஓடினான். காட்டிற்குள் ரதம் செல்லாது ஆதலால் பலராமனை ரதத்தோடு இருக்கச் சொல்லி கிருஷ்ணன் தான் மட்டும் ஓடினான். இறுதியில் சடதன்வாவைக் கண்டு அவன் தலையை சீவி விட்டான். அவன் உடல் முழுதும் தேடிப் பார்த்தும் மணி அங்கு இல்லை என்று கண்டு கொண்டான். பலராமனிடம் மீண்டுவந்த கிருஷ்ணன் நடந்தவற்றைக் கூறினான். கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பலராமன், 'உன் வார்த்தைகளை நம்பத் தயாராக இல்லை. இன்றிலிருந்து நீ யாரோ, நான் யாரோ! நீ உன் வழியில் செல், நான் என் வழியில் செல்கிறேன் என்று கூறிவிட்டு விதேக நாட்டிற்குச் சென்று மன்னன் ஜனகனிடம் விருந்தினனாக இருந்தான். அங்கு வந்த துரியோதனன் பலராமனிடம் கதாயுதப்போர் முறையைக் கற்றுக் கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
துவாரகையிலிருந்த யாதவர்கள் பலர் கிருஷ்ணனிடம் மணியில்லை என்பதை அறிந்து கொண்டு பலராமனைச் சமாதானப்படுத்தி துவாரகைக்கு அழைத்து வந்தனர். இதனிடையில் தன்னிடம் மணி இருப்பதைக் கிருஷ்ணன் சந்தேகித்து தன்னைக் கொன்று விடுவான் என்று அஞ்சிய அக்ருவன் ஒன்றன் பின் ஒன்றாகப் பல யாகங்களைச் செய்தான். எத்தகைய பகைவர்களையும் யாகம் செய்யும் பொழுது கொல்லக் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். அக்ருவரிடம் மணி இருந்ததால் துவாரகை செழிப்பாக இருந்தது. யாதவர்கள் தங்களுக்குள் செய்துகொண்ட சண்டை யால் ஒருசில யாதவர்கள் துவாரகையை விட்டு ஓடிவிட்டனர். அவர்களுடன் அக்ருவரும் ஒடிவிட்டான். மணி துவாரகையை விட்டுப் போய்விட்டதால் நாட்டில் கொடிய விலங்குகளும், பஞ்சமும் புகுந்து விட்டன. இதை அறிந்த யாதவர்கள் அக்ருவனைத் திரும்ப நாட்டிற்குள் அழைத்து வந்தனர். நாடு மறுபடியும் செழிப்படைந்தது. இதை அறிந்த கிருஷ்ணன் யாதவர்கள் பலரையும் தன் வீட்டிற்கு அழைத்து அக்ருவனைப் பார்த்துப் பின்வருமாறு பேசினான், “அக்ருவா! உன்னிடத்தில் மணி இருப்பதால் நீ இங்கு இருக்கும் வரை நாடு செழிப்பாக இருந்தது. எனக்கு அந்த மணி தேவையில்லை. நல்லவனாகிய உன்னிடம் இருப்பதுதான் நல்லது. இருந்தாலும் பலராமன் என்மீது சந்தேகப்படுகிறான். அவன் சந்தேகம் நீங்க மணியினை எடுத்து எல்லோரிடமும் காட்டு என்றான். வேறு வழி யில்லாமல் அக்ருவரும் மணியைக் காட்டினான். மணியைப் பார்த்த பலராமன் அதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென விரும்பினான். தன் தந்தையாகிய சத்ரஜித் தான் அந்த மணிக்குச் சொந்தக்காரர் என்பதால் தனக்குரியது என்று கருதினாள் சத்யபாமா. விவகாரம் போகிற போக்கை அறிந்த கிருஷ்ணன் அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க விரும்பினான். எல்லோரையும் பார்த்து, "இந்த மணி நல்லவர்கள் கையில் இருந்தால் எல்லோருக்கும் நன்மை செய்யும். அல்லாதவர் கைக்குப் போனால் எல்லோருக்கும் கெடுதல் செய்யும். பதினாறாயிரம் பெண்களை மணந்த நான் நல்லவன் அல்லன். என் மனைவி சத்யபாமைக்கும் இந்தக் காரணம் பொருந்தும். நாள் முழுவதும் குடித்துக் கொண்டே இருக்கும் பலராமனும் நல்லவன் அல்ல. எனவே, இந்த மணி அக்ருவரிடம் இருப்பதே எல்லோருக்கும் நன்மை செய்யும். இதை அவனே வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறினான்.

சந்தனுவின் கதை

குரு வம்சத்தில் வந்த பிரதிபாவின் மகனாகிய சந்தனு இரண்டாவது மகனாகப் பிறந்தும் முதல் மகனாகிய தேவபி காட்டிற்குச் சென்றுவிட்டதால் அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சந்தனு கங்கையையும், சத்தியவதியையும் மணந்தார். கங்கையின் மகனாக பீஷ்மன் பிறந்தான். சத்திய வதியின் வயிற்றில் விசித்ர வீரியனும், சித்ராங்கதனும் பிறந்தனர். விசித்திர வீரியன் மரபில் திருதிராஷ்டனும், பாண்டுவும் தோன்றினர். திருதிராஷ்டன் புதல்வர் துரியோதனன் முதலிய நூறு பேர், பாண்டுவின் புத்திரர்கள் ஐவர். அவர்களே பஞ்ச பாண்டவர்கள்.

கலியுகத்தின் தோற்றம்

விஷ்ணு புராணத்தின் நாலாம் பகுதி கலியுகத்தில் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளை விரிவாகத் தெரிவிக்கிறது. பத்மாநந்தன் என்ற மன்னன் தோன்றி, சத்ரியர்கள் அனைவரையும் இரண்டாவது பரசுராமனைப் போல ஒழித்து விடப் போகிறான். அவனுக்கு 8 பிள்ளைகள் தோன்றுவார்கள். சத்ரியனுக்குப் பிறகு இவர்களே நூறு ஆண்டுக்காலம் ஆட்சி செய்வார்கள். ஆனால் கெளடில்யன் என்னும் பிராமணன் இவர்களைக் கொன்று விடுவான். அதன்பிறகு 'மெளரியர்கள் எனப்படும் சூத்திரர்கள் ஆளுவர். சந்திரகுப்தனையே கெளடில்யன் அரசனாக நியமிப்பான். மெளரியர்கள் நூற்றி முப்பத்திஏழு ஆண்டுகளும், பிறகு வரும் அங்க அரசர்கள் நூற்றிப் பன்னிரண்டு ஆண்டுகளும், கன்வ அரசர்கள் நானுற்றி ஐம்பத்தி ஆறு ஆண்டுகளும் அரசாள்வர். அதன்பிறகு வேறு வேறு பரம்பரையினர் ஆள்வர்.
கலி மிகக் கொடுமையான யுகமாக இருக்கும். ஆட்சி செய்பவர்கள் போடும் வரிக் கொடுமை தாங்காமல் மக்கள் மலைகளுக்குள் ஒடிவிடுவர். உண்ண உணவும் உடுக்க உடையும் இன்றி வருந்துவர். தர்மம் அழிக்கப்படும். மறுபடியும் விஷ்ணு கல்கி அவதாரம் எடுப்பார். இதன்பிறகு மறுபடியும் தருமம் நிலை நிறுத்தப்படும். கலியுகம் மூன்றுலட்சத்து அறுபது ஆண்டுகள் நீடிக்கும்.

தேவக அரசனின் மகளாகிய தேவகியை மணந்தார், வசுதேவர். இவர்களை ஏற்றிக் கொண்டு ரதத்தை செலுத்தினான் கம்ஸன். அப்பொழுது வானில் அசரீரி, 'முட்டாள் கம்ஸனே! யாரை நீ ரதத்தில் ஏற்றிச் செல்லு கிறாயோ அவளுடைய எட்டாவது மகனே உன்னைக் கொல்லுவான் என்றது. இதைக்கேட்ட கம்ஸன் வாளை எடுத்து தேவகியைக் கொல்லப் போனான். உடனே வசுதேவர் அவனைத் தடுத்து அவளுக்குப் பிறக்கும் எல்லா குழந்தை களையும் அவனிடம் ஒப்படைப்பதாகக் கூறினார்.

சுமேரு மலையிலுள்ள தேவதைகளிடம் பிருத்வி ஆகிய பூமி சென்று தைத்தியர்களின் கொடுமை தாங்கவில்லை. முன்னொரு காலத்தில் விஷ்ணு கலாநேமி என்ற அசுரனைக் கொன்றார். அந்தக் கொடியவன் இப்பொழுது உக்கிர சேனனின் மகனாகிய கம்ஸனாகப் பிறந்துள்ளான். கொடிய ஏனைய தைத்தியர்களாகிய அரிஷ்டா, தேனுகா, கேசி, நரகா, சுந்தா ஆகியவர்களோடு சேர்ந்து கம்ஸன் செய்யும் கொடுமைகள் பொறுக்கக் கூடியதாக இல்லை என்று முறையிட்டது.

இவர்கள் கூறியதை உண்மை என்று பிரம்மாவும் கூறினான். எல்லா தேவதைகளும் சேர்ந்து வடக்கே உள்ள கடற்கரைக்குச் சென்று விஷ்ணுவை வேண்டிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். உலகத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்த பொழுதெல்லாம் விஷ்ணுவே பல அவதாரங்கள் எடுத்து பூமியைக் காப்பாற்றி உள்ளார்.

பிரம்மன் முதலிய தேவர்களின் பிரார்த்தனையைக் கேட்ட விஷ்ணு அவர்கள் எதிரே வந்தார். தன் தலையிலிருந்து இரண்டு முடிகளை எடுத்துக் கீழே போட்டு, 'இரண்டும் பூமியில் தீங்கு செய்பவர்களை அழிக்கும். நானே தேவகியின் எட்டாவது மைந்தனாகப் பிறக்கப் போகிறேன் கவலை வேண்டாம் என்று சொன்னார். அசரீரிக்கு பயந்த கம்ஸன் வசுதேவனையும், தேவகியையும் சிறைக்குள் அடைத்து வைத்தான். தேவகிக்குப் பிறந்த ஆறு ஆண் குழந்தைகளையும் வசுதேவன் வாக்குப்படி கம்ஸனிடம் ஒப்படைக்க அவன் அத்தனை குழந்தைகளையும் கொன்று தீர்த்தான். தேவகியின் ஏழாவது குழந்தை சங்கர்ஷன் என்ற பெயருடன் சிறையை விட்டு வெளியே சென்று மறைந்து, வசுதேவரின் இரண்டாவது மனைவியாகிய ரோகினியிடம் வளர்ந்து வந்தது. தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழந்தை வசுதேவரால் நந்தகோபன் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நந்தகோபன் வீட்டில் அவருடைய மனைவி யசோதை பெற்ற பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு அதற்குப் பதிலாக இந்த ஆண் குழந்தையை தேவகியிடம் விட்டுவிட்டு வசுதேவர் சிறைச் சாலைக்கு மீண்டார். விடியற்காலையில் குழந்தை பிறந்த சேதி அறிந்த கம்ஸன், இது பெண் குழந்தை என்று கூடப் பார்க்காமல் கொல்ல யத்தனிக்கையில் அக்குழந்தை ஆகாயத்தில் மறைந்து எட்டுக் கைகளுடைய காளிதேவியாக மாறி, முட்டாள் கம்சனே! போன ஜென்மத்தில் உன்னைக் கொன்ற அதே ஆள் இப்பொழுது பிறந்து விட்டான். அவன் தான் உன்னைக் கொல்லப் போகிறான்’ என்று கூறிவிட்டு மறைந்தது. எட்டுக் குழந்தைகளும் பிறந்துவிட்ட காரணத்தால் தேவகியையும், வசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான். தன்னுடைய தோழர்களை அழைத்து, என்னுடைய ஆற்றலில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னுடன் போர் தொடுக்க முடியாமல் இந்திரன் ஓடிய ஒட்டத்தைப் பார்த்தீர்கள் அல்லவா? நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லை. இருந்தாலும் முன் ஜாக்கிரதையாக இப்பொழுது மதுராவில் பிறந்துள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்று விடுவோம்’ என்று கூறினான். என்னுடைய குருவாகிய ஜராசந்தனைத் தவிர வேறு யாருக்கும் அஞ்சவும் மாட்டேன், வணக்கம் செய்யவும் மாட்டேன்’ என்று கூறி மகிழ்ந்தான்.
பாலகிருஷ்ணன் லீலைகள்

இதன் பிறகு பாலகிருஷ்ணனும் பலராமனும் கோகுலத்தில் வளர்ந்த வரலாறும், பூதனை என்ற அரக்கி கிருஷ்ணனுக்குப் பாலூட்ட முயன்று இறந்ததும், சகடம் உதைத்ததும், கன்றால் விளாங்கனி அடித்ததும் ஆகிய கிருஷ்ண லீலைகள் விஷ்ணு புராணத்தில் இந்தப் பகுதியில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. யசோதை தாமு என்று வடமொழியில் பெயர் கூறப்படும் கயிற்றினால் கண்ணனைக் கட்டிப் போட்டதால் தாமோதரன்' என்ற பெயர் கிருஷ்ணனுக்கு வழங்கலாயிற்று.

காளிங்க நர்த்தனம்

காளிங்க நர்த்தனக் கதையை விஷ்ணு புராணம் வேறு வகையாகச் சொல்லிச் செல்கிறது. முன்னொரு காலத்தில் கருடனால் கொல்லப்பட்ட காளிங்கன் என்ற பாம்பு கடலை விட்டுவிட்டு யமுனையில் குடிபுகுந்தது. ஒரு பகுதியில் காளிங்கனும், அதன் குடும்பமும், உறவினர்களும் ஒரு மடுவில் வசித்ததால் யமுனையின் அப்பகுதி நீர் முற்றிலும் விஷமாக மாறிவிட்டது. இந்த நிலையில் கிருஷ்ணன் நீருக்குள் புகுந்தான். காளிங்கனும் மற்ற பாம்புகளும் கிருஷ்ணன் உடலைச் சுற்றிக் கொண்டு அவனைக் கடிக்கத் துவங்கின. நந்தன், யசோதா, பலராமன் இதைப் பார்த்துக் கதறினர். எல்லோரும் துயரத்தின் எல்லையை அடைந்த பொழுது, பலராமன் கிருஷ்ணா! விளையாட்டு போதும், சீக்கிரம் அவற்றை அழித்துவிட்டு வா' என்றான். உடனே கிருஷ்ணன் எல்லாப் பாம்புகளையும் அழித்து, காளிங்கன் தலையில் ஏறி நடனமாடி அதன் உயிரைப் போக்கும் நிலைக்குக் கொண்டுவந்தான். காளிங்கனும், அவன் மனைவிமார்களும் வேண்டிக் கொண்டதால் கிருஷ்ணன் அவர்களை மன்னித்து, யமுனையில் இனி நீங்கள் தங்கக் கூடாது; கடலுக்கு ஓடிவிடுங்கள்!” என்று ஆணையிட்டு விடுதலை செய்தான். கிருஷ்ணன் பாம்பின் படத்தின்மேல் ஆடியதால் அந்தப் பாதத்தின் சின்னம் எல்லா நாகங்களின் படத்திலும் அமைந்து விட்டதால் அதைப் பார்த்த கருடன் அவற்றை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டான்.

பாகவதம் முதலியவற்றில் கன்றுக்குட்டி வடிவில் கண்ணனைக் கொல்ல வந்த அசுரனை அக்கன்றின் காலைப் பிடித்து சுழற்றி விளாமரத்தின் மேல் எறிந்து விளாங்காய் களை உதிர்த்தான் என்று பேசப்படுகிறது. அந்தக் கதை விஷ்ணு புராணத்தில் சில மாற்றங்களுடன் தரப்பட்டுள்ளது. தேனுகா என்ற அசுரன் கழுதை வடிவு கொண்டு விளா மரங்களைக் காவல் செய்தான் என்ற வேறுபாட்டுடன் அதே கதை பேசப்படுகிறது.

கிருஷ்ணனும் பலராமனும் அவன் நண்பர்களும் ஒட்டப் பந்தயம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். பந்தயத்தில் தோற்றவர் வென்றவரைத் தோளில் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்பது பந்தய ஏற்பாடு. பிரலம்பா என்ற அசுரன் கிருஷ்ணன், பலராமன் இருவரையும் கொல்ல வந்து ஆயர்பாடிச் சிறுவர்களைப் போல் அவர்களுடன் சேர்ந்து விளையாடினான். ஒட்டப்பந்தயத்தில் தோற்றதால் பலராமனை முதுகில் தாங்கிக் கொண்டு ஒடப் புறப்பட்டான். திடீரென்று அசுர வடிவத்தைப் பெற்று மலைபோன்று ஒரு மேனியைப் பெற்றுக் கொண்டான். என்ன செய்வதென்று அறியாத பலராமனைப் பார்த்துக் கிருஷ்ணன், 'உன் சக்தியை உபயோகித்து அவனைக் கொன்று விடு' என்றான். கிருஷ்ணனின் அறிவுரைப்படி உள்ளங்கையை மடக்கி அவன் தலையில் குத்தி அவனைச் சாகடித்தான் பலராமன்.

இதற்கு அடுத்தபடியாக கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த கதையை விஷ்ணு புராணம் பேசுகிறது. இப் பகுதியில் சில புதுமைகள் காணப்படுகின்றன. அவை வருமாறு: மழை ஒய்ந்த பிறகு கிருஷ்ணன் கோவர்த்தன கிரியை அதன் இருப்பிடத்தில் வைத்துவிட்டான். கிருஷ்ணனை வந்து வணங்கிய இந்திரன், 'ஐயனே! கோக்களாகிய பசுக்களை ஏழு நாட்கள் நீ காத்தமையால் இன்றிலிருந்து கோவிந்தன்' என்ற பெயரும் உனக்கு ஏற்படுவதாகும். கிருஷ்ணா! என்னுடைய மகன் அர்ஜுனன் என்ற பெயரில் பூவுலகில் பிறந்துள்ளான். அவனைக் காக்க வேண்டியது உன் பொறுப்பாகும்” என்று கூற, கிருஷ்ணனும் அதை ஏற்றுக்கொண்டான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கிருஷ்ண லீலைகள் மேலும் பலவற்றைப் பற்றி விஷ்ணு புராணம் விரிவாகப் பேசுகிறது. அவற்றுள் சில வருமாறு: அரிஷ்டா என்ற அசுரன் மிகப் பெரிய பாய்ச்சலுடன் காளை வடிவு கொண்டு, கோகுலத்துள் புகுந்து பல அட்டுழியங்களை மிகச் செய்தான். மிக உயரமான அந்த எருதை அடக்க யாரும் முன்வரவில்லை. கிருஷ்ணன் கைகளைத் தட்டி அந்த எருதைத் தன்புறமாக வரவழைத்து அதன் கொம்பை உடைத்து, அதன் உடலையும் பிளந்தான். கேசி என்ற அசுரன் மிகப் பெரிய குதிரை வடிவம் கொண்டு விண்ணையும், மண்ணையும் சாடுகின்ற அளவில் கோகுலத்தில் புகுந்தான். கிருஷ்ணன் அவன் வாய்க்குள் கையைவிட்டு ஒவ்வொரு பல்லாக உதிர்த்துக் கேசியை சாகடித்தான். அதனால் கிருஷ்ணனுக்குக் கேசவன் என்ற பெயர் வந்தது.

இவற்றையெல்லாம் அறிந்த கம்ஸன் சனுரா, முஷ்டிகா என்ற இரண்டு மல்லர்களைத் தயார் செய்து கிருஷ்ண, பலராமனைக் கொல்ல முடிவு செய்தான். அது வெளியில் தெரியாமல் இருக்க யாகம் செய்வதாக எல்லோருக்கும் சொல்லி, அக்ருவர் மூலம் கிருஷ்ண பலராமன் இருவரையும் மதுராவிற்கு வரவழைத்தான். கிருஷ்ண பலராமர்கள் இரண்டு மல்லர்களையும் சாகடித்ததோடு 'குவலயாபீடம் என்ற கம்ஸனுடைய யானையின் கொம்புகளை உடைத்துக் கொன்று விட்டனர்.

மதுராவிற்குள் நுழைந்த பலராமனும் கிருஷ்ணனும் கம்ஸனின் சலவைத் தொழிலாளர்களைக் கொன்று அவரிடம் இருந்த சிறந்த உடைகளைப் பறித்து அணிந்து கொண்டனர். கம்ஸனுக்கு வாசனைச் சந்தனம் அளிக்கும் கூன் விழுந்த அழகிய பெண்ணின் கூனை நிமிர்த்தினர். மல்லர்களை முறியடித்த பின் கிருஷ்ணன் மேடை மீது ஏறிச் சென்று கம்ஸனின் முடியைப் பிடித்து உலுக்கி கையால் அவனைக் குத்திக் கொன்றுவிட்டான். இறந்த கம்ஸனின் உடம்பை அந்த விளையாட்டு அரங்கத்திலேயே புதைத்து விட்டனர். கம்ஸன் இறந்ததனால் அவனால் சிறை வைக்கப்பட்டிருந்த அவன் தந்தை உக்கிரசேனர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கம்சவதம் முடிந்த பிறகு, பலராமனும் கிருஷ்ணனும் சாந்தீபன் என்ற முனிவரிடம் கல்வி கற்கச் சென்றனர். பல ஆண்டுகள் கற்க வேண்டியதை 64 நாட்களில் கற்றுக் கொண்ட அவர்கள் குருதட்சணையாக சாந்திபனுக்குப் பல காலத்திற்கு முன்னர் இறந்துபோன அவருடைய மகனை மீட்டுத் தந்தனர். இந்த மகனை மீட்க கடலின் அடியில் பஞ்சஜன்யன் என்ற அசுரனை வென்று, "பாஞ்சஜன்யம்' என்ற சங்கைக் கண்ணன் பெற்றான்.

கம்ஸன் ஜராசந்தன் என்ற மன்னனுடைய அஸ்டி, பிரப்டி என்ற இருமகள்களையும் மணந்திருந்தான். மருமகன் கொல்லப் பட்டதை அறிந்திருந்த ஜராசந்தன் பெரும் படையோடு மதுராவை எதிர்த்தான். கிருஷ்ணனுக்குத் தேவருலகத்திலிருந்து இரண்டு தேர்களும், சார்ங்கம் என்ற வில்லும், கெளமேதகி" என்ற ஒர் ஆயுதமும், எடுக்கக் குறையாத இரண்டு அம்பறாத் துணிகளும் வந்து சேர்ந்தன. இவற்றை வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் ஜராசந்தனைத் தோற்கடித்தனர். இதேபோல ஜராசந்தன் 18 முறை படையெடுத்துப் பதினெட்டு முறைகள் தோற்றுப் போனான்.

'கார்கியா என்ற பிராமணன் யாதவர்களால் மிகவும் அவமானப்படுத்தப்பட்டான். தென் கடற்கரைக்குச் சென்று 12 ஆண்டுகள் இரும்புத் தூள்களைத் தின்று தவம் புரிந்தான். தவத்தின் முடிவில் மகாதேவர் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்? என்று கேட்க, யாதவர்களை வெல்ல ஒரு மகன் வேண்டும் என்றார். அப்படியே மகாதேவர் வரமளித்தார். கரிய நிறமுடைய ஒரு பலசாலியான பிள்ளை பிறந்தான். யவன அரசன் பிள்ளை இல்லாததால் இந்த பிராமணன் மகனைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டு காலயவனன்' என்ற பெயரும் தந்தான். இப்பிள்ளை
பெரியவன் ஆனதும் நாரதனைப் பார்த்து மிக பலமுடைய அரசர் யார் யார் என்று வினவினான். அரசர்கள் பட்டியலை நாரதரிடம் தெரிந்து கொண்டு மதுராவை எதிர்க்கத் திட்டமிட்டான். இதை அறிந்த கிருஷ்ணன் காலயவனன் தந்தை பெற்ற வரத்தை அறிந்திருந்ததால் அவனை எதிர்ப்பது கஷ்டம் என்று அறிந்து கொண்டார். அதே நேரம் காலயவனன் போர் தொடுக்கும் பொழுது, ஜராசந்தனும் சேர்ந்து கொண்டால், பிரச்சனையைச் சமாளிக்க முடியாது என்று கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்தான். பல காலம் கோட்டைக்குள்ளிருந்தே போர் தொடுக்கக்கூடிய இடமாக சமுத்திரத்தின் நடுவே துவாரகை' என்னுமிடத்தை ஸ்தாபித்தான். அங்கே யாதவர்களை வைத்து விட்டுக் காலயவனனைச் சந்தித்தான். ஆனால் அவனைச் சட்டைசெய்யாமல் மேலே நடந்து சென்றதால் காலயவனனும் இவனைப் பின்தொடர்ந்தான். திடீரென்று ஒர் இருண்ட குகை எதிர்ப்பட கிருஷ்ணன் அதனுள் நுழைந்து விட்டான். உள்ளே தேவாசுர யுத்தத்தில் ஈடுபட்டு தேவர்களுக்கு உதவியாக அசுரர்களை வென்றுவிட்டு குகையில் உறங்கிக் கொண் டிருந்தான் முசுகுந்தன் என்ற மன்னன். கிருஷ்ணன் உள்ளே போனதைப் பார்த்த காலயவனன் குகைக்குள் நுழைந்தான். இருட்டில் ஒன்றும் தெரியாததால் உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனைக் கிருஷ்ணன் என்று நினைத்துக் காலால் எட்டி உதைத்தான். துளக்கத்தில் எழுப்பப்பட்ட முசுகுந்தன் மிக்க கோபம் கொண்டு கண்ணை விழித்தனன். கண்பார்வை பட்டவுடன் காலயவனன் எரிந்து சாம்பலானான். யுத்தத்தில் தங்களுக்கு உதவிய முசுகுந்தனுக்கு தேவர்கள் கொடுத்த வரமாகும் இது. உறக்கத்தில் இருந்து யார் அவனை எழுப்பு கிறார்களோ அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள் என்பது அவ்வரம்.

ஜராசந்தன் உறவினனாகிய பீஷ்மகா தன் மகள் ருக்மணியைச் சிசுபாலனுக்கு மணமுடிக்க விரும்பினான். திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கிருஷ்ணன் ருக்மணியைத் தூக்கிச் சென்றுவிட்டார். போர் தொடுத்தவர்களையெல்லாம் பலராமன் வென்று விட்டான். ருக்மணியின் சகோதரனாகிய 'ருக்மி கிருஷ்ணனை வெல்லாமல் நாடு திரும்புவதில்லை என்று வஞ்சினம் கூறிக் கிருஷ்ணனை எதிர்த்தான். தோற்றுவிட்டபடியால் தன் நாட்டிற்குத் திரும்பாமல் வேறொரு நாட்டை ஸ்தாபித்து அங்கு வாழ்ந்து வந்தான். கிருஷ்ணனுக்கும், ருக்மணிக்கும் பிறந்த குழந்தை பிரத்யும்னனை, சம்பராசுரன் என்பவன் தூக்கிச் சென்று கடலில் எறிந்து விட்டான். அக்குழந்தை தப்பிச் சென்று பின் சம்பராசுரனைக் கொன்று விட்டது. பிறகு பிரத்யும்னன் ருக்மியின் பெண்ணை மணந்து கொண்டான். அந்த மண விழாவில் ருக்மியும் பலராமனும் சூதாடுகையில், வாய்ச் சண்டை முற்றிவிட பலராமன் ருக்மியையும், அவனுக்கு உதவியாக வந்த அரசர் பலரையும் கொன்று விட்டான்.

பிருத்வியின் மகனாகிய நரகாசுரன் பிரத்ஜோதிஷ்புரம்' என்ற தலைநகரில் இருந்து உலகை ஆண்டு வந்தான். மிக்க கொடியவனாகிய அவன் தேவமாதர், அசுரமாதர், மானிட மாதர் என்பவர்களில் பதினாறாயிரம் பெண்களைச் சிறையில் அடைத்து வைத்திருந்தான். ஒருமுறை இந்திரன் கிருஷ்ணனிடம் வந்து நரகாசுரன் கொடுமையைச் சொல்லி வருத்தப்பட்டான். உடனே கிருஷ்ணன் கருடனை நினைத்தார். கருடன் வணங்கி நின்றவுடன் சத்தியபாமாவும் கிருஷ்ணனும், பிரத்ஜோதிஷ் புரத்திற்குச் சென்றனர். மிகப் பெரும் போரை விளைத்து நரகாசுரனை வென்றனர்.

பாரிஜாத மரம்

நரகாசுரனை வென்ற கிருஷ்ணன் இந்திரனுடைய நகரமாகிய அமராவதிக்கு சத்தியபாமாவுடன் சென்றார். தேவர்கள் வந்து கிருஷ்ணனை வழிபட்டனர். இந்திரன் தாயாகிய அதிதியிடம் இருந்து நரகாசுரன் பறித்துச் சென்ற காதணிகளைக் கிருஷ்ணன் அவளிடம் தந்தார். சத்திய பாமா, கிருஷ்ணன் இருவரையும் அவள் ஆசீர்வதித்தாள். அமராவதியில் இருந்த பாரிஜாத மரத்தைப் பார்த்து அதைத் துவாரகைக்குக் கொண்டு செல்ல விரும்பினார். உடனே கண்ணன் மரத்தை
வேரோடு பறித்து கருடன் முதுகில் வைத்து விட்டார். அந்த மரம் இந்திரன் மனைவியாகிய சச்சிக்குச் சொந்தமானது என்பதால் அவள் கடும் கோபமுற்றாள். கிருஷ்ணனும் சத்தியபாமாவும் வெறும் மனிதர்கள் என்று நினைத்த அவள், தேவர்களையும் இந்திரனையும் ஏவி கிருஷ்ணனுடன் போர் புரியச் செய்தாள். தேவர்கள், குபேரன், அக்னி, எமன், வருணன், மிருத்துக்கள், அஸ்வினிக்கள் ஆகிய அனைவரும் கண்ணனிடம் தோற்று ஓடினார்கள். இறுதியாக இந்திரன் வஜ்ராயுதத்தை எடுத்து விட்டான். கிருஷ்ணன் சக்கரத்தை ஏந்தியவுடன் தேவர்களே கலங்கினார்கள். இந்திரன் வஜ்ராயுதத்தை கிருஷ்ணன்மேல் ஏவினான். கிருஷ்ணன் சக்கரத்தை ஏவாமல் வஜ்ராயுதத்தை ஒரு கையால் பிடித்து விட்டான். உடனே இந்திரன் கிருஷ்ணன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். கிருஷ்ணன், வஜ்ராயுதத் தையும் பாரிஜாத மரத்தையும் திருப்பிக் கொடுத்தான். இந்திரன் வஜ்ராயுதத்தை மட்டும் வாங்கிக் கொண்டு இந்த மரம் துவாரகையிலேயே இருக்கட்டும். கிருஷ்ணன் இறந்த பிறகு அது தானே தேவலோகம் வந்துவிடும்’ என்று சொன்னான்.

கிருஷ்ணனின் பதினாறு ஆயிரம் மனைவியர்க்கு ஒர் இலட்சத்து எண்பது ஆயிரம் மக்கள் தோன்றினர். அவருள் ருக்மணியின் மகனான பிரத்யும்னன் முக்கியமானவன். அவன் ருக்மியின் மகளை மணந்து அவனுக்கு அநிருத்தன் என்ற மகன் இருந்தான். இதனிடையில் மகாவலியின் மகனாகிய வனாசுரனுக்கு உஷா என்ற பெண் இருந்தாள். ஒருமுறை உஷா, மகாதேவனையும் பார்வதியையும் வணங்கி, எனக்கு எப்படிப்பட்ட கணவன் வருவான் என்று கேட்டாள். பார்வதி, வைகாசி மாதப் பெளர்ணமி அன்று உன் கனவில் ஒருவன் காட்சி அளிப்பான். அவனே உன் மணாளன் ஆவான் என்றாள். அதுபோலவே உஷா கனவு கண்டாள். ஆனால் அவன் யாரென்று அறிந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய தோழி சித்ரலேகா தேவர்கள், அசுரர்கள் ஆகிய பலருடைய படங்களையும் அவரிடம் காட்டியபொழுது அவர்கள் யாரும் இல்லை. இப்படங்கள் அவள் கனவில் கண்டவன் இல்லை என்று அறிந்தவுடன், பூலோக வாசிகளில் மனிதர்களுள் அரசகுமாரர் படங்களைக் காட்டினாள். அநிருத்தன் படத்தைப் பார்த்து இவன் தான் என்று கூறி விட்டாள். அநிருத்தன் யாரென்று அறிந்த தோழி, துவாரகை சென்று இரகசியமாக அநிருத்தனை அழைத்து வந்து உஷாவிடம் சேர்த்து விட்டாள். அநிருத்தன் வாணாசுர கோட்டைக்குள் நுழைந்தவுடன் கொடி இரண்டாக உடைந்து விட்ட்து. ஆயிரம் கைகளை உடைய வாணாகரன் யாரிடமாவது போர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பொழுது, மகாதேவன், ‘என்று உன்னுடைய கொடி இரண்டாக ஒடிகிறதோ அன்று உன் விருப்பப்படி சண்டை செய்யலாம்' என்று கூறியிருந்தார். இன்று அதிருத்தனுடன் வாணாசுரன் போர் தொடுத்தான். அநிருத்தன் துணையாக யாதவர்கள், பலராமன், கிருஷ்ணன் ஆகியோர் போர் செய்தனர். மகாதேவனும் கார்த்திகேயனும், வாணாசுரன் பக்கம் நின்று போர் செய்தனர். கிருஷ்ணன் சக்கரம் ஏவி வாணாசுரனின் ஆயிரம் கைகளை வெட்டி விட்டான். அவனைக் கொல்ல எத்தனிக்கையில், மகாதேவன் குறுக்கிட்டு அவனுக்கு உயிர்ப் பிச்சை தருமாறு கேட்டார். கிருஷ்ணனும் அதை ஒப்புக் கொண்டான். இறுதியாக உஷா, அநிருத்தன் இருவரும் துவாரகை சென்றனர்.

சம்பாவின் திருமணம்

கிருஷ்ணனின் மகன்களுள் ஒருவனாகிய சம்பா, துரியோதனன் மகளைக் களவாடி மணம் புரியச் சென்று கெளரவர்களால் கைது செய்யப்பட்டான். இதை அறிந்த யாதவர்கள் கெளரவர்கள்மேல் போர் தொடுக்க விரும்பினர். அதைத் தடுத்து பலராமன் தான் தனியாகச் சென்று காரியத்தை முடித்து வருவதாகக் கூறிவிட்டு அஸ்தினாபுரத்து எல்லையை அடைந்தான். பலராமன் வருவதைக் கேள்வியுற்ற பீஷ்மர், கர்ணன், துரியோதனன் ஆகியோர் நகரத்திற்கு வெளியே வந்து அவனை வணங்கி வரவேற்றனர். உபசரணை முடிவில் பலராமன் ‘சம்பாவை விடுவித்துத் தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று யாதவர்கள் விரும்புவதாகக் கூறினான். இதைக் கேட்ட
கெளரவர்கள் கடுங்கோபம் கொண்டனர். “யாதவர்கள் எங்களுக்குச் சமமானவர்கள் அல்லர். எங்கள் தரத்திற்கு மிகவும் கீழாக உள்ள அவர்கள் எங்களை இவ்வாறு கேட்பது வேலைக்காரன் தன் எஜமானை ஏவுவது போல் இருக்கிறது. பலதேவா, நீ திரும்பிச் செல்லலாம்” என்று கோபத்தோடு கூறிவிட்டு, அவர்கள் நகருக்குள் போய்விட்டனர். அவர்கள் சென்றபிறகு நகர எல்லைக்குள் காலடி எடுத்து வைத்த பலராமன் தன் கலப்பையை பூமியில் ஊன்றி அழுத்தினான். அஸ்தினாபுரம் முழுவதையும் கங்கைக்குள் அமிழ்த்திவிட வேண்டும் என்பதே அவன் விருப்பம். நகரத்தின் ஒரு பகுதி சாய்ந்து கங்கையின் அருகில் போவன்தக் கண்ட கெளரவர்கள், கலங்கிப் போய் ஒடி வந்து பலராமன் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். சம்பாவையும், அவன் மனைவியையும் பலராமனோடு அனுப்பி வைத்தனர்.

விஷ்ணு புராணத்தின் முடிவுரை

யாதவர்கள் முடிவு பிண்டாரகா என்ற கூேடித்திரத்தில் கண்வர், விஸ்வா மித்திரர், நாரதர் ஆகிய முனிவர்கள் தங்கி இருந்தனர். ஆணவம் படைத்த யாதவ இளைஞர்கள் சிலர், கிருஷ்ணனின் மகனாகிய சம்பாவிற்குப் பெண் வேஷமிட்டு அம் முனிவரிடம் அழைத்துச் சென்றனர். அவர்களைப் பார்த்து முனிவர்களே! இப்பெண்ணுக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா?’ என்று கேட்டனர். முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் இத்திமிர் பிடித்த செய்கையைக் கண்டு, "இவள் பெண் அல்ல, ஆண் இவனுடைய உடம்பில் இருந்து ஒர் இரும்பு உலக்கை தோன்றப் போகிறது. அந்த உலக்கை யாதவ சமுதாயத்தை அழிக்கப் போகிறது” என்று கூறினார். பயந்து போன இளைஞர்கள் அரசர் உக்கிரசேனரிடம் சென்று முறையிட்டனர். முனிவர்கள் சாபத்தை ஒன்றும் மீறமுடிய வில்லை. உரிய காலத்தில் சம்பாவின் உடலில் இருந்து ஒர் இரும்பு உலக்கை வெளியாயிற்று. அரசன் உக்கிரசேனன் அதைக் கண்டு பயந்து அந்த இரும்பு உலக்கையைப் பொடிப் பொடியாகத் தூள் செய்து சமுத்திரக் கரையில் தூவி விட்டான். முழுவதும் பொடியானாலும் ஒரு சிறு பகுதியைப் பொடி செய்யவே முடியவில்லை. அந்தச் சிறு துண்டைக் கடலுக்குள் வீசி எறிந்து விட்டான். கடற்கரையில் தூவப்பட்ட அச்சிறு துகள்கள் மிகக் கூர்மையான- வலிமையுடைய கோரைகளாக முளைத்தன. அக்கோரைகள் முளைத்த இடத்தில் பிரபஸ்சா என்ற க்ஷேத்திரம் அமைந்திருந்தது. ஒருமுறை யாதவர்கள் அனைவரும் இந்த ஸ்தலத்தில் வழிபாட்டிற்காகக் கூடினர். இவர்களுள் ஒருவனான உத்தவா என்பவன் மட்டும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் “கந்தமாதனம்' என்ற மலையில் தவஞ்செய்யச் சென்று விட்டான். அவனைத் தவிர கூடியிருந்த யாதவர்கள் அனைவரும் அளவுக்கு மீறிக் குடித்துக் களித்தனர். எல்லை மீறிக் குடித்ததன் விளைவாக அறிவை இழந்து தங்களுக்குள் சண்டையிடத் தொடங்கினர். கைச்சண்டை முற்றி இரும்புப் பொடியில் இருந்து முளைத்த கோரையைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்துவிட்டனர். கிருஷ்ணனும், அவன் நண்பன் தாருகனும் எவ்வளவு முயன்றும் இச் சண்டையை நிறுத்த முடியவில்லை. இறுதியில் இவர்கள் இருவர், எங்கோ அமர்ந்திருந்த பலராமன் தவிர யாரும் மிஞ்சவில்லை. யாதவர்களின் மிகப் பெரும் பகுதி இவ்வாறு அழிந்துவிட்டது. இந்த நிலையில் கிருஷ்ணனும், தாருகனும் பலராமனைத் தேடிச் சென்றனர். பலராமன் பக்கத்தில் சென்றதும் ஒர் அதிசயக் காட்சி நடைபெற்றது. பலராமன் வாயில் இருந்து ஒரு மிகப் பெரிய பாம்பு வெளிப்பட்டுக் கடலுக்குள் சென்றது. தங்களுடைய முடிவை அறிந்து கொண்ட கிருஷ்ணன், தாருகனை அழைத்துப் பின்வருமாறு பேசினான்: "தாருகா! பலராமன் முடிந்தபிறகு என்னுடைய காலமும் நெருங்கி விட்டதை அறிகிறேன். நீ துவாரகைக்குச் சென்று மன்னர் உக்கிரசேனரிடம் நான் சொன்னதைச் சொல்வாயாக. இங்கு வந்த யாதவர்கள் அனைவரும் மடிந்து விட்டனர். இன்னும் சிறிது நேரத்தில் நானும் சென்று விடுவேன். நான் சென்ற பிறகு துவாரகையைக் கடல் பொங்கி எழுந்து மூடிவிடும். அதற்குள் ஒடிச்சென்று அருச்சுனனை அழைத்து வா. துவாரகையில் எஞ்சி இருக்கிற யாதவர்களைத் தன்னுடன் அழைத்துச் செல்லுமாறு அருச்சுனனுக்குச் சொல்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
உடனடியாக அவர்கள் துவாரகையைக் காலி செய்ய வேண்டும்” என்று கூறித் தாருகனை அனுப்பி வைத்தான். அதன்பிறகு கிருஷ்ணன் ஒய்வெடுத்துக் கொள்ள பலராமனின் பக்கத்தில் படுத்திருந்தான்.

மன்னர் உக்கிரசேனர் இரும்பு உலக்கையைப் பொடி செய்த பொழுது, பொடியாகாத ஒரு பகுதியைக் கடலில் தூக்கி எறிந்தார் அல்லவா? அதனை ஒரு மீன் உண்டது. அந்த மீனை ஒரு வேடன் பிடித்து அரியும்பொழுது அதில் இருந்து இரும்புத் துண்டை எடுத்து ஒர் அம்பாகத் தீட்டினான். படுத்திருந்த கிருஷ்ணனின் பாதம் ஒரு மான் போல அந்த வேடனுக்குத் தெரியவே, தான் தீட்டி வைத்திருந்த அம்பை மான் என்று நினைத்து கிருஷ்ணன் பாதத்தில் ஏவி விட்டான். அதனால் கிருஷ்ணன் இறக்க நேரிட்டது. தான் எய்த அம்பு கிருஷ்ணனின் மேல் பாய்ந்து விட்டது என்று அறிந்த வேடன் கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டான். கிருஷ்ணன் அவனை மோட்சத்துக்கு அனுப்பிவிட்டான்.

துவாரகைக்கு வந்த அருச்சுனன் கிருஷ்ணன், பலராமன், யாதவர்கள் இறந்ததைக் கண்டு அவர்களுக்கு இறுதிக் கடன் செய்தான். உக்கிரசேனர், வசுதேவர், தேவகி, ரோகிணி முதலானோர் தீப்பாய்ந்து தங்கள் வாழ்நாளை முடித்துக் கொண்டனர். கிருஷ்ணன் வீட்டில் வளர்ந்த பாரிஜாத மரமும், சுதர்மா என்ற மண்டபமும் தேவலோகத்தைச் சென்று அடைந்து விட்டன. இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்தவுடன் கலி யுகம் பிறந்து விட்டது. கடல் கொந்தளித்து கிருஷ்ணனுடைய வீட்டைத் தவிர துவாரகை முழுவதையும் மூழ்கடித்து விட்டது. எஞ்சியவர்களை அழைத்துக்கொண்டு அருச்சுனன் புறப்பட்டுச் செல்கையில், கொள்ளைக்காரர்கள் இவர்களுடைய சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வளைத்துக் கொண்டார்கள். அருச்சுனன் தன் வில்லை எடுத்தான். ஆனால் அம்பு எய்யும் சக்தியை இழந்துவிட்டதை அறிந்து கொண்டான். கிருஷ்ணன் போன பிறகு தன் பலம் முழுவதும் போய்விட்டது என்பதை அருச்சுனன் உணர்ந்தான்.

கலியுகம்

கலியுகம் பிறந்து விட்டதால் அது எவ்வாறு இருக்கும் என்று மைத்ரேயி கேட்க பராசர முனிவர் பதில் சொல்ல ஆரம்பித்தார். தர்ம சாத்திரங்களில் சொல்லப்பட்ட வர்ணாச்சிரம தர்மம் கலியுகத்தில் பின்பற்றப்பட மாட்டாது. கடவுளை ஒருவரும் வழிபட மாட்டார்கள். குரு சிஷ்யர் களுக்கிடையே உள்ள உறவு முறிந்துவிடும். தடி எடுத்தவன் தண்டல்காரன் ஆவான். பெண்கள் கூந்தலை அழகு செய்வதிலேயே காலம் தள்ளுவர். பணம் பாதாளம் வரை பாயும். பணத்தைப் பிறர் பொருட்டுச் செலவு செய்யாமல், செல்வந்தர்கள் தன்னலத்திற்கே அதைப் பயன்படுத்துவார்கள். பணத்தை அறவழிகளில் சம்பாதிக்காமல் தீய வழிகளிலேயே சேர்ப்பார்கள். ஆண்கள் சாப்பிடுமுன் குளிக்கக்கூட மாட்டார்கள். ஆண்களும், பெண்களும் குட்டையாகி விடுவர். பெண்கள் கணவனுக்குப் பணிந்து நடக்க மாட்டார்கள். அரசர்கள் குடிமக்களைக் காப்பாற்ற மாட்டார்கள். அதற்கு பதிலாக வரி என்ற பெயரில் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொள்வர். இளமையிலேயே முதுமை அடைவர். யாரும் விஷ்ணுவை வணங்க மாட்டார்கள்.

சத்திய யுகத்தில் பத்து ஆண்டுகள் தவம் செய்து பெறும் பயனை- திரேதாயுகத்தில் ஒர் ஆண்டிலும், துவாபரயுகத்தில் ஒரு மாதத்திலும், கலியுகத்தில் ஒரு நாளிலும் தவம் செய்து அதே பலனை அடைய முடியும். இதுவே கலியின் சிறப்பு அம்சமாகும்.

பிரளயங்கள்

மூன்று வகையான பிரளயங்கள் உண்டு. முதலாவது பிரளயம், பிரம்மனுடைய ஒரு நாள் கழிந்தவுடன் நடைபெறுவ தாகும். இதற்கு நைமித்திக்க பிரளயம் என்று பெயர். இந்தப் பிரளயம்
தொடங்குவதற்கு முன்னர் நூறு ஆண்டுகள் மழை என்பதே இல்லை. இப்பொழுது விஷ்ணு ருத்ர சொரூபம் எடுத்து ஆறு, கடல் எல்லாவற்றிலும் உள்ள நீரைக் குடித்து விடுவார். சூரியனுடைய ஏழுவகைப்பட்ட கிரணங்களும் தனித் தனியாக ஒரு சூரியன் போல் இருந்து நிலத்தைக் கொளுத்தும். இந்தச் சூரிய கிரணங்கள் இந்த பூலோகத்தை அல்லாமல், யுவர், புவர், சுவர் ஆகிய மூன்று லோகத்தையும் கொளுத்தி விடும். இதன்பிறகு கரிய மேகங்கள் சூழ்ந்து நூறு வருடங்கள் வரை விடாது மழை பெய்யும். மறுபடியும் உலகம் தோற்றுவிக்கப்படும் வரை விஷ்ணு தண்ணிரின்மேல் மிதந்து உறங்கிக் கொண்டிருப்பார்.

இரண்டாவது பிரளயம், பிரகிருத பிரளயம் எனப்படும். தாமசம், ராஜசம், சத்துவம் ஆகிய மூன்று குணங்களும் தம்முள் அளவொத்து இருப்பது பிரகிருதி எனப்படும். பிரளய காலத்தில் பிரகிருதி பரமாத்மாவிடம் சென்று அடங்கி விடும். இதுதான் பிரகிருத பிரளயம் என்று சொல்லப்படும்.

மூன்றாவது பிரளயம், அத்யதிக பிரளயம் எனப்படும். ஆதி ஆத்மிகம், ஆதிதைவிகம், ஆதிபெளதிகம் என்று சொல்லப்படும் மூன்று வகைத் துன்பங்களும் மறைந்துவிடும் சூழ்நிலை ஏற்படும். ஆதி ஆத்மிகம் என்பது உடம்பைப் பற்றிய நோய்களாகும். ஆதிதைவிகம் என்பது குளிர்ச்சி, சூடு என்பவற்றால் ஏற்படுவதாகும்; ஆதி பெளதிகம் என்பது பிற உயிர்களால் வரும் துன்பங்கள். அதி அந்திகா என்ற மூன்றாவது பிரளயத்தில் மேலே சொல்லப்பட்ட அனைத்தும் போய்விடும்.

விஷ்ணு புராணத்தின் இறுதிப் பகுதி புராணம் யாரிடம் தோன்றி, யார் யார் மூலமாக யார் யாருக்குக் கிடைத்தது என்று ஒரு பெரிய பட்டியல் போட்டுக் காட்டி, பிரம்மனிடத்தில் தொடங்கி மைத்ரேய முனிவர் வரை வந்த வரலாற்றைச் சொல்கிறது.

(விஷ்ணு புராணத்தில் காணப்பெறும் மிக முக்கியமான செய்தி ஒன்று இங்கே குறிக்கப்பட வேண்டும். மற்ற புராணங்கள் நான்கு வர்ணத்தைப் பற்றிப் பேசி, சூத்திரர்கள் தாழ்ந்த பிறப்பினர் என்றும், பெண்கள் ஒருவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறார்கள் என்றும் கூறிச் செல்கின்றன. இதன் எதிராக விஷ்ணு புராணம் இதுபற்றிக் கூறும் அரிய செய்தியினைக் கீழே தந்துள்ளோம்).

ஒருநாள் பல முனிவர்கள் கூடி பகவான் வேத வியாசரைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் வருகின்ற நேரத்தில் வேதவியாசர் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தார். தம்மிடம் சில முக்கியமான செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வருகிறார்கள் என்பதைத் தம் ஞான திருஷ்டியால் அறிந்த வேதவியாசர் அவர்கள் காதில் விழும்படியாக மிக உரத்த குரலில், “சூத்திரர்கள் உயர்ந்தவர்கள்; பெண்கள் உயர்ந்தவர்கள், கலியுகம் மிக உயர்ந்தது” எனக் கூறினார். அவர் குளித்துக் கரைக்கு வந்தவுடன் அவர் கூற்றைக் கேட்டுக் குழப்பமடைந்த முனிவர்கள், “நாங்கள் இதுவரையில் கேள்விப்பட்டது வேறாக உள்ளதே. கலியுகம் மிக மோசமானது, சூத்திரர்கள் தாழ்ந்த பிறப்பினர் என்றெல்லாம் கேள்விப் பட்டிருந்தோம். எங்கள் சந்தேகங்களைப் போக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டனர்.

வியாசர் சொல்ல ஆரம்பித்தார்: “சத்திய யுகம் முதலியவற்றில் எல்லாரும் நேர்மை உடையவர்களாகவும், அந்தந்த வர்ணத்திற்குக் குறிக்கப்பட்ட ஒழுக்கங்களைப் பின்பற்றுப வர்களாகவும் இருந்தார்கள். கலியுகத்தில் இந்த ஒழுங்கு முறைகளைப் பின்பற்றி நடப்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் மிகக் கடினமாக உள்ளது. ஆடம்பரம், செல்வச் செருக்கு, அதிகாரம் என்பவற்றில் சிக்கிய மூன்று வர்ணத்தாரும் இத்தனையையும் மீறித் தம் வர்ணத்திற்கு வகுக்கப்பட்ட வழிகளில் செல்வது ஏறத்தாழ முடியாத காரியம் ஆனால் சூத்திரர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக்கு என்று தனியாக எந்தக் கடமையும் விதிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் தாங்கள் செய்யும் வேளாண்மை முதலிய தொழில் களில் முழு ஈடுபாட்டோடு பணிபுரிந்து பிறருக்கு உபகாரமான வாழ்க்கையையும், எளிமை நிறைந்த வாழ்க்கையையும் கைக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வதால் கடமையிலிருந்து தவறிய முதல் மூன்று வர்ணத்தாரைவிட இவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். இதனால் சூத்திரர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறினேன். பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக் கென்று தனியாக எதையும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் கணவன்மார்களுக்கும், குடும்பத்திற்கும் வேண்டியதைத் தன்னலம் இல்லாமல் அன்போடு செய்வதால் ஏனையோரைவிட அவர்கள் உயர்ந்து விடுகிறார்கள். அனைவரும் செம்மையாக நடந்து கொள்ளும் மற்ற யுகங்களில் தனிப்பட்ட ஒருவர் செம்மையாக நடந்து கொள்கிறார் என்று கூறுவதால், தனிச் சிறப்பு ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் பலரும் கடமை மறந்து செல்வச் செருக்கில் ஈடுபட்டு, பிறருடைய நன்மையைக் கருதாமல் வாழுகின்ற இந்தக் கலியுகத்தில், ஒருசிலர் பண்புடையவர்களாக வாழ்வதால் அவர்கள் தனியே சிறப்பிக்கப்படுகிறார்கள். அதனால்தான் கலியுகம் சிறந்தது என்று கூறினேன்.”
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top