வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 20

Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அன்பு தோழிகளே!

வீம்பும் கள்ளியும் வந்துவிட்டார்கள்,நீங்களும் வாருங்கள் உங்கள் கருத்துக்களோடு,இக்கதை முடிவை நோக்கி செல்கிறது,இது மிதமான காதல் கதை மட்டுமே அதனால் எந்த விதமான வில்லிகளும் ட்விஸ்ட்களும் கிடையாது,என் என்ன போக்கு வீம்பு,கள்ளியின் காதல் மட்டுமே,உங்களுக்கு எப்படி என்று சொல்லுங்கள்.வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 20

கள்ளி மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க சாப்பாடு மேஜையில் கவுந்து கிடைக்க,பெருமாள் நாற்காலியில் அமர்ந்து தலைகீழாகப் பேப்பரை பிடித்துப் படிப்பது போல் அவரும் மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தார்,அடுக்கலைக்குள் தலை தெறிக்க ஓடி வந்த பேச்சியை பார்த்த அன்னலக்ஷ்மியும்,திவியாவும் பதட்டமாக எதிர் கொண்டனர்,"அச்சோ பாட்டி என்ன இப்புடி ஓடி வரீங்க கிழ விழுந்தா என்ன ஆகும்",திவ்வியா அவரைக் கடிந்து கொள்ள."என்ன பாவம் பண்ணுனேனோ உன் அக்காரி கிட்ட மாட்டிகிட்டு அல்லோல படுதேன்,இந்த சிறுக்கி மவ புள்ள பேக்குறதுக்குள்ள எம்மா உசுர எடுத்துடுவா போலாடி","ஐயோ என்ன அம்மா வந்து உட்காருங்க எப்புடி மூச்சு வாங்குது பாருங்க",பதறி கொண்டு அன்னலக்ஷ்மி சொல்ல."நீ எம்ம பாத்ததுக்கே இப்புடி சொல்லுற,உம்ம மருமவ ஓட்ட பந்தயக் கணக்கா ஓடுனா, ராசா பாத்துருக்கணும்,அப்பவே சோழி முடுச்சுருக்கும் ",ஐயோ என்ன சொல்லுறீங்க கண்ணாம்பா எங்க,"ராசன் வந்துட்டாருல்ல படம் ஒட்டிக்கிட்டு இருப்பா போய்ப் பாரு”,சொல்லிவிட்டு அமர்ந்தவர் “அடி திவி எம்ம உசுரு போறதுக்குள்ள கொஞ்சம் காப்பித் தண்ணி குடுடி",அவருக்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது,வெளியில் பதட்டமாக வந்த அன்னலட்சுமி மருமகன்,மகன் நிலையைப் பார்த்துப் பதட்டம் நீங்கியவராக உள்ளே சென்றார்.காரை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் வந்தவன் கண்ணில் பட்டது,உணவு மேஜையில் படுத்து இருக்கும் கள்ளி தான்,வேகமாகத் தனது மனைவியிடம் நெருங்கியவன் தோளில் கை வைக்க,அப்போதான் தான் எழுவது போல் கண்களைக் கசக்கி கொண்டு எழுந்தாள்,"என்னம்மா இங்க தூங்குற நம்ம ரூமுக்குப் போய்த் தூங்க வேண்டியது தானே","இல்லங்க சும்மா பேசிக்கிட்டே இருந்தேனா அப்புடியே தூங்கி புட்டேன்"அவளது பேச்சில் பெருமாளுக்கு வியப்பு அவர் மனதிற்குள் "இது உலக மகா நடிப்புடா சாமி" என்று கவுண்டர் கொடுத்தார்.அதன் பின் அவர்களுக்கான நேரம் என்பதால் இருவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்,அவர்கள் பேச்சில் மெல்ல மெல்ல ஒவ்வொருவராக கலந்து கொண்டனர் பொதுவான பேச்சிற்கு பின்,வளைகாப்பு பற்றிய பேச்சு ஆரம்பம் ஆனது,இவர்கள் பேச்சை ஆரம்பிக்கும் போதே அவர்களின் எண்ணம் புரிந்து அதை தடை செய்தவன்,நேராக அனைவரையும் பார்த்து "இங்க பாருங்க இவள பார்த்துக்க பேச்சி டார்லிங்க மட்டும் தான்,அதுவும் இல்லாம் இங்க தொடர்ந்து கட்டிக்கிட்டு இருக்குற டாக்டர்கிட்ட தான் டெலிவரி நடக்கணும்,அவுங்களுக்கு தான் அவளோட கண்டிஷன்ஸ் தெரியும்"."வளைகாப்பு தட புடலா நடத்தலாம் ஆனா அவ இங்க தான் இருப்பா,என்ன பேச்சி டார்லிங்?".."ராசா சொன்னா சரியதேன் இருக்கும்"கள்ளிக்கு தனது கணவன் இந்த முடிவை தான் எடுப்பான் என்பது அறிந்த ஒன்று தான் அதனால் அவள் எந்த விதமான எதிர்மறை கருத்தும் கூறவில்லை,கூறினாலும் அங்கு எடுபட போவதில்லை,நமது வீம்பு வீம்பை பற்றி அறிந்தவள் ஆயிற்றே.அதன் பின் அனைவரும் வளைகாப்பு பற்றிய பேச்சுக்களை தொடர நேரம் ஓடியதே தெரியவில்லை,இரவு உணவுக்குப் பின் தான் கள்ளிக்கும்,வீம்புவிற்கும் தனிமை கிடைத்தது,"என்னடி என் பொண்ணு என்ன சொல்லுறா",அவளை நெருங்கி படுத்துக் கொண்டு கேட்க,அவன் புறம் திரும்பியவள் அவன் காதுக்குள் ரகசியம் சொல்ல,சிரித்தவன் "ரொம்பத் தாண்டி லொள்ளு உனக்கு,நீ தைரியமா தாண்டி இருக்க எனக்குத் தான் பயமா இருக்கு,என் செல்லம் டாக்டர்கிட்ட சொல்லுடி எனக்கு ரொம்பப் பயமா இருக்கு".தலையில் அடித்துக் கொண்டால் கள்ளி,"யோவ்,இதை எப்புடி நான் சொல்லுவேன்",அவளுக்கு அத்தனைக் கோபம்,நாள் நெருங்க நெருங்க மருத்துவர் கூடலை பற்றிச் சொல்லி இருந்தார்,அவ்வாறு செய்வது சுக பிரசவத்திற்கு நன்று என்பது போல ,இயற்கையில் கள்ளியின் உடல் வாகும்,அவளது உடலுக்கு ஏற்ற உயரம் என்பதால்,குழந்தையும் நன்றாக இருப்பதால்,மருத்துவர் அவளுக்கு ஆலோசனை வழங்கினார்.ஆனால் தான் நெருங்கினாள் குழந்தைக்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் தான் அவன் ஒதுங்கி செல்வது, இ தற்கு மேல் கள்ளியாலும் அவனைக் கட்டாயப் படுத்த முடியாது, அவனை திட்டியவரே அவளும் தூங்கி போனால்,அடுத்த நாள் விடியல் வீம்புக்குச் சோதனை நாள் தான் என்பதை அறியாமல் கள்ளியின் வயிற்றில் மெதுவாகக் கை வைத்து உறங்கினான்.வளமை போல் அந்த நாள் விடியல் பரப் பரப்பாக இருந்தது,எப்பொழுதும் போல் வீம்பு சென்றவுடன்,மூவரின் சேட்டை ஆரம்பமாகத் திவியும்,அன்னலக்ஷ்மியும் அவர்களை பார்த்தே பொழுதை ஒட்டி கொண்டு இருந்தனர்,மாலை வேலை நெருங்க இன்று ஹரிஷ் தான் முதலாக வீட்டுக்குள் வந்தான்,வந்தவன் நேரே சென்றது கள்ளியின் அறைக்குத் தான் "அண்ணி ............அண்ணி ..."."வாங்க கொழுந்து எங்க உங்க அண்ணே, அதிசயமா நீக முன்னாடி வந்திட்டீக ".பின்னாடி வருவாரு அண்ணி,இன்னக்கி ஒரு பார்ட்டி ..முடுச்சுடுச்சு வந்துகிட்டே இருப்பாரு,நீங்க அண்ணன் டான்ஸ் ஆடி பார்த்தது இல்லைல அண்ணி,பாருங்க",அவன் போனை எடுத்து காட்ட அதைப் பார்த்த கள்ளி கொதி நிலைக்குச் சென்றால்,"எப்புடி"என்று பீத்தி கொண்ட கொழுந்தை ஒரு முறைப்புடன் பார்த்தால்,"போன தரீங்களா கொழுந்து ,அவுக கிட்ட கட்டிட்டு தாரேன்",அவள் உள்குத்துத் தெரியாமல் வச்சுக்கோங்க அண்ணி உங்களுக்குக் காட்ட தான் வீடியோ எடுத்தேன்”, தாராளம் மனம் கொண்டு கொழுந்து கொளுத்தி விட்டு சென்றதுஇவளது கோபம் புரியாமல் நமது வீம்பு உற்சாகத்துடன் அவளை அழைத்தான் வந்தவளிடம் எப்போதும் போல் அவனது அன்றைய நாளை கேட்டு தெரிந்து கொண்டான்,அவளும் இயல்பாக பேசினால்,தனிமை கிடைக்கும் வரை அவனிடம் தனது கோபத்தை காட்ட கூடாது என்று அழகாக சமாளித்தாள்.அறையில் அவள் வருவதற்கு முன் கணினி உடன் சண்டை போட்டு கொண்டு இருந்தான் வீம்பு,அமைதியாக அவனிடம் வந்து அமர்ந்தவள் ஒன்றும் பேசாமல் அவனுடைய கன்னத்தில் புதிதாக முளைத்திருக்கும் பருவை வருடி கொடுத்தால்,மனைவியாக தன்னை வந்து தீண்டியது ஆச்சிரியமாக இருந்தது அதை கண் மூடி ரசித்து கொண்டு இருந்தான்,அவள் தொடர்ந்து அந்த பருவை சுற்றி தனது விரலால் வருட,சுகமும்,சிறு வலியுமாக இருந்தது.

"வ பாக்குறா காலம் போன கடைசில பரு வருது",அவளது கேள்வியில் தூக்கி வரி போட," யாருடி சொன்னா பொண்ணுக பார்த்த பரு வருமுன்னு,அடிக்குற வெயில், எசி ரூம் எல்லாம் சேர்த்து சுட்ட கிளப்புது, இதுல பரு வரது சகஜமடி", அவன் சொல்லுவது உண்மை என்றாலும் அவள் ஒப்புக்கொள்ள மறுத்து,”அப்புடி ஒன்னும் தெரியல".

"உன் பேச்சே சரியில்லையே,நீயா நெருங்கும் போதே நான் யோசுச்சு இருக்கணும்".

"ஐயாவுக்கு,பொண்ணுக கூட ஆட புடிக்குமோ".

யாருடி சொன்னா ,அவன் கேட்கவே வேமாக அந்த போனை எடுத்து நீட்டினாள்...

அதை பார்த்தவன் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டான் , அது ஹரிஷுடைய போன் என்பதை அறிந்தவன் ,நல்ல தம்பிட நீ மனதுக்குள் ஹரிஷை எண்ணி கடிந்து விட்டு "ஹே, இதுயெல்லாம் பார்ட்டில சகஜம், இத போய் பெருசா எடுத்துக்கிட்டு"."பட்டிக்காட இருந்தாலும் எனக்கும் தெரியும் திவி எனக்கு சொல்லியிருக்கா,ஏன் இடுப்ப புடுச்சு ஆடுனத்தேன் ஆட முடியுமா,அதுவும் ஐயா இடுப்புக்கு மேல""இது என்னடி வம்ப போச்சு"."பேசாதீக நீங்களே பாருக,என்று அந்த விடியோவை பாஸ் செய்துவிட்டு ஜூம் செய்து காட்டினாள்,அவள் சொன்னது போல கொஞ்சம் கை மேல் ஏறி இருந்தது", அவன் கூட அதை ஆடும் உணரவில்லை.

"உனக்கு நல்ல ஆரோக்கியமான கண்ணு தாண்டி,எனக்கே தெரியல வேணுமுன்னு புடுச்சு ஆடலைடி நம்பு", கள்ளியின் காலில் விழாத குறை தான்."நான் ஒன்னும் உங்கள சந்தேகப் படல எம்ம வீட்டா எந்தக் கருவாயனுக்கு யாரும் கிடைக்க மாட்டாக,ஆனா எனக்கு இது புடிக்கல",அவள் சொல்லிய விதத்தில் சிரிப்பு வந்தாலும் இப்பொழுது சிரித்தாள் அவளிடம் சிக்கி சின்னா பின்னம் ஆகி விடுவோமென்று அமைதியாக அமர்ந்து கொண்டான்.அவளை நெருங்கி அமர்ந்தவன் "நீ சொன்னது சரிதாண்டி உன்னைய வீட்டா எவளும் எனக்கு ஈடு குடுக்க முடியாது",அவனது ஒப்புதல் அவளைப் புரட்டி போட புயல் புஸ்வனமாகி விட்டது,எப்பொழுதும் போல் அவளை வீழ்த்தி விட்டான் வீம்பு.அவழுக்கின்று ஒரு சில கோட்பாடுகள் உள்ளது அதைத் தானும் சரி தன் கணவனும் சரி தாண்ட கூடாது என்று நினைத்திருந்தால்,கிராமத்துப் பெண் நகரத்தில் உள்ள நாகரிகம் தெரியாது என்ற கூற்றை உடைத்தெறிந்தால் நம் கள்ளி,அவனுடைய சுந்தரத்தில் தலை இடுவதில்லை அதற்காக அவனை அவன் போக்கில் விடுவதுமில்லை,எந்த நேரத்தில் இழுத்து பிடிக்க வேண்டுமோ அந்த நேரத்தில் பிடித்தால்,இந்த புத்தி சாலி தனமும்,முதிர்ச்சியும் தானே வீம்புவை கள்ளியிடம் மண்டியிட வைத்தது....நள்ளிரவு வரை பேசியவர்கள் எப்பொழுது கண் அயந்தார்கள் என்று அவர்களுக்கே வெளிச்சம்...................

.
 
Last edited:
#7
:love:
சூப்பர் எப்பி..
பொண்ணு தான் பிறக்கப் போகுதா...
வீம்பு முடிவு பண்ணிட்டான்..
நடனம் ஆடிட்டு
கள்ளிகிட்ட பம்முறது:LOL::ROFLMAO:
விவரம் தான்
கடைசியில் கவுத்துட்டான்.
 
Last edited:
#9
ஓட்டப்பந்தயதுல்ல கள்ளி சூப்பர்..😅😅.
வீம்பு அடி வாங்க சான்ஸ் இருந்துச்சு தப்புச்சுட்டான் வழக்கம்போல வாயல...🤣🤣🤣

பொண்ணு வேணுமா அப்போ சரி... 😍😍😍😘😘😘
 

Advertisements

Latest updates

Top