வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21

Dhanuja

SM Exclusive
Author
SM Exclusive Author
#11
அது.....💪💪💪👉👉👉😜😂😂 கலவை என்னென்ன செய்ய போகுதோ... நம்ம சங்கத்துல சேர்த்துடனும்..😉😆.. ஆப்பு வைக்க கொஞ்சம் வசதியா இருக்கும்....😁😁😅
Adipavi makka 😂
 

N.Palaniappan

Well-known member
#16
அன்பு தோழிகளே !


வீம்புவும் கள்ளியும் வந்து விட்டார்கள்,படித்து பார்த்து உங்கள் கருத்தை பகிரவும்..........
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 21


யூஜீவனின் வீடு கலை கட்டியது நாளை கள்ளிக்கு வளைகாப்பு,கிராமத்துப் பெண் என்று முகத்தைச் சுளித்தவர் எல்லாம் கள்ளி குடும்ப நடத்தும் பாங்கை பார்த்து வாய் அடைத்து போயினர்,படிப்பில்லை என்று சாடியவர் எல்லாம் அவள் தனது பிறந்து வீட்டுத் தோப்பு துறவை இங்கு இருந்தே கவனித்துக் கொள்ளும் அழகை பார்த்து வியந்தனர்,அது மட்டுமா திவ்வியாவிடம் வீட்டு வேலை முடித்த பின் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதை துருவி துருவி கற்றுக் கொண்டாள்,நம் கள்ளி தான் கற்பூரம் ஆயிற்றே.தன் கணவனுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தன்னைத் தயார் செய்து கொண்டு இருந்தால்,படிப்பு இல்லையென்றால் என்ன பண்பு இருக்கின்றதே,திருமணத்தில் தேடி தேடி குறையைக் கண்டு பிடித்தவர்களுக்கு,எப்பொழுது அதுவும் கிடைக்க வில்லை,தன் சுய மரியாதையும்,புகுந்த வீட்டு பெருமையும் சரி விகிதம் கைப்பற்றி விட்டாள் நம் கள்ளி.............வீம்புவின் செல்ல அக்காவையே ஒரே வார்த்தையில் கவிழித்து விட்டாள்,"வாங்க மதனி"கள்ளியின் அந்த ஒரு பாச அழைப்பில் நாத்தனார் அந்தர் பல்டி அடித்து விட்டார்,அழுகு சிலையெனக் கள்ளமில்லாமல் சிரிக்கும் கள்ளியிடம் பாச கரம் நீட்டிவிட்டார் மேகலை."என்ன மாமா படப் படப் பட்டாசை புஸ்வனமா மாத்திட்டாங்க",சரண்யா வீம்புவின் காதில் கிசு கிசுக்க,"அவ பேசியே கவுத்துருவாடி சரியான தில்லாலங்கடி"."எங்க யூஜீவன் மாமாவா இது","என்ன பண்றது சரண்யா குட்டி இந்தக் காளைய கண்ணுகுட்டிய மாத்தி வச்சு இருக்கா",உள்ளே வராமல் வாசலில் நின்று மாமனும் மருமகளும் மெதுவாகப் பேசிக்கொள்ள,அங்கு வந்த கள்ளி "உங்க அக்கா மவள வீட்டுல கூட்டியாந்து விடிய விடிய பேசுங்களேன்"அவள் சொல்லிவிட்டு சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டே வந்தனர்.நாளை சீமந்தம் என்ற நிலையில் அனைத்தும் வெகு சிரிப்பாகத் தயார் செய்து கொண்டு இருந்தனர்,அன்னலக்ஷ்மியும்,பெருமாளும் ஒரு புறம்,ஹரிஷும்,திவியும் ஒரு புறமென்று சுழன்று கொண்டு இருக்க,பேச்சி பூரித்துப் போய் அதனைப் பார்த்துக் கொண்டு இருந்தார்,தாய்க்கு தாயாக அன்னலட்சுமி கள்ளியை தாங்குவதைப் பார்த்தவர் ஆயிற்றே.காற்று வாங்க கொள்ளை புறத்தில் அக்கட என்று அமர்ந்து இருக்கும் பேச்சியிடம் வந்தாள் கள்ளி "ஏய்,கிழவி",அவளது அழைப்பை எதிர் பார்க்காதவர் துள்ளி திரும்ப அங்கே உக்கிரமாக நின்று கொண்டு இருந்தால் கள்ளி."நீயா,பாவி மவளே மெல்லமா கூப்புட வேண்டியதானடி,ஒரு மயில் தூரம் இருக்குற மாதிரி கத்தரவ",பேச்சி அதிர்ந்த இதயத்தைத் தடவி கொடுத்த வாரே கேட்க."ஏன் கேக்க மாட்ட,அந்த கருவாயன் பேசி இரண்டு நாள் ஆகுது அம்புட்டும் உன்னால ஒழுங்கா அந்த ஆள் எம்மகிட்ட பேசல,ரவைக்குப் போடுற சோத்துல அரளி அரளி விதைத்தேன்",அதிர்ந்த பேச்சி."அடி பாவி ஒரு குவள தண்ணி கூட உம்ம கையால குடிக்க மாட்டேண்டி,அது சரி ராசா பேசாம இருந்தா நான் என்னடி பண்ணுவேன், உம்ம வூடு முழுக்கப் படம் புடிக்குற பொட்டி வச்சு இருப்பீங்கன்னு நான் என்ன கானாவா கண்டேன்",அவரது குமட்டில் குத்திய கள்ளி.நல்ல வக்கணையா பேசு,அதெல்லாம் தெரியாது அவுக ஆபிஸ் போய்ட்டாக,நான் கார் அனுப்புறேன் நீ அவுங்கள அங்க போய்ப் பார்த்து,நடந்ததைச் சொல்லி சமாதானம் படுத்துற,அப்புடி இல்லனா வூட்டுக்கு வராத அப்புடியே போய்டு",பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கள்ளியை பார்த்தார் பேச்சி."என்ன மூஞ்சிய இப்புடி வச்சிகிட்டினா,வுட்டுறுவேனா ஒழுங்கா போ கிழவி",திரும்பி திரும்பி அவளைப் பார்த்த வாரே சென்றார் பேச்சி .பாவம்,நேற்றுக் காலையில் அனைவரையும் கூட்டி ஒரு பஞ்சாயத்தே வைத்து விட்டான் வீம்பு,பெருமாளில் தொடங்கிய அவனது வசவு,அவனது மனைவிடம் வந்து முற்றுப் பெற்றது.நேற்று முன் தினம் பக்கத்தில் தெருவில் களவு போனதை பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் பேசி பத்திரமாக இருக்கச் சொன்னவன்,தனது வீட்டில் உள்ள சிசி கேமரா மூலம் உள்ள பதிவை பார்த்துக் கொண்டு இருந்தான்,பார்த்தவன் கண் நிலை குத்தி நின்றது,கோபம் அதிர்ச்சி என்று அவனை ஆட்டி படைக்கக் கோபமாக நடுக் கூடத்துக்கு வந்து சத்தமாகத் தனது தந்தையை அழைத்தான்."ஏன்டா கத்துற",அவன் இருக்கும் நிலை தெரியாமல் அவர் பேசவே "வயசான மனுஷன் பண்ணுற வேலையா இது கையில் வைத்து இருக்கும் போனை உத்து பார்த்தவர் உறைந்த பார்வையோடு அவனைப் பார்க்க,பல்லை கடித்துக் கொண்டு இருந்தான் வீம்பு.பேச்சி,அன்னலட்சுமி,திவ்வியா அனைவரையும் ஓர் உலுக்கு உலுக்கியவன் கள்ளியிடம் வந்து நின்றான்,"அம்மையாருக்கு ஒலிம்பிக் ஓட்ட பந்தைய வீராங்கனை நினைப்பா,வயித்துல புள்ள யா வச்சுக்கிட்டு இந்த ஓட்டம் ஓடுற,எதுக்குடி ஓடுன?,நான் வரதப் பார்த்துட்டு தானே ஓடுன,அப்போ எனக்குத் தெரியாம திருட்டுத் தனம் பண்ணுற அப்புடித்தானே",அவன் தனது மருமகளைச் சாடுவதை விரும்பாத அன்னலெட்சுமி அனைத்தையும் ஒப்புவிக்க,எரியும் தீயில் பெட்ரோல் ஊற்றியது போலப் பத்தி கொண்டு எரிந்தது."அப்போ நான் சொன்ன எதையுமே நீ கேட்கல,உன் இஷ்டத்துக்குத் தான் இருந்து இருக்க இல்ல,என் குழந்தை மட்டும் ஆரோக்கியமா இல்லாம இருக்கட்டும் உனக்கு இருக்குடி,இனிமே உனக்கும் எனக்கும் பேச்சில்லை ",என்றவன் தனது அறைக்குச் சென்று கதவை அடைத்து கொண்டான்,இரு தினங்களாக அவன் பேச மறுப்பதைப் பொறுக்க முடியாமல் தான் பேச்சியைத் தூதாக அனுப்பி வைத்தாள்,வீம்பு அசைந்து கொடுப்பானா என்ன......பேச்சி நேராகப் பேப்பர் தொழிற்சாலைக்குச் சென்று விட்டார்,தனது மேனேஜர் வந்து சொல்லவே,வீம்பு அவரை அழைத்து வருமாறு பணிந்தான்,"வாங்கம்மா சார் உங்கள கூப்புடுறார்"மேனேஜர் பணிவாக அழைக்க அவரச விண்ணப்பமாகக் கருப்பனுக்கு ஒரு வேண்டுதலை வைத்து விட்டு சென்றார் பேச்சி.அவர் வரவே சிரித்த முகத்துடன் "வாங்க டார்லிங்,என்ன எவுளோ தூரம் என்ன பார்க்காம இருக்க முடியலையா"குறும்பாக அவன் கேட்க குனிந்த தலை நிமிராமல் அமர்ந்து இருந்தார் பேச்சி,அவர் செயல் சிரிப்பை வர வளைக்கத் தனது நாற்காலியில் இருந்து எழுந்தவன் சுற்றி வந்து அவரை அனைத்து கொண்டான்,அவனது செயலில் கண்களில் நீர் துளிர்க்க."ராசா எனக்குச் சோத்துல அரளி விதை வச்சுடுவேன்னு சொல்லுராஅந்தச் சிறுக்கி,எம்ம ரொம்ப ஏசிபுட்டா ராசா",சிறு பிள்ளை போல் புகார் சொல்லும் மூதாட்டியை பார்த்து வாய் விட்டு சிரித்தவன்.அவனும் சிறு குழந்தைக்குச் சொல்வது போல "ஏன் டார்லிங்க திட்டிட்டாளா, நாளைக்கி வரைக்கும் பொறுத்துக்கோங்க டார்லிங்க, வளைகாப்பு முடியட்டும்,அவள உண்டு இல்லனு ஆகிடலாம் சரியா".சந்தோசமாகத் தலை ஆட்டினார் பேச்சி."நீக அவ கூடப் பேசலையாம் ராசா,அதேன் வெசன படுறா,அது மட்டுமில்ல ராசா புள்ளத்தாச்சி வேல பார்ததேன் நல்லது,உடம்பு அசைவு கொடுக்காட்டி உறுப்பெல்லாம் வேல செய்யாது சாமி,துரு புடுச்சு போய்டும்,உம்ம நல்ல மனசுக்கும் எம் பேத்தி மனசுக்கும் ராணி கணக்கா புள்ள பொறக்கும்", வாஞ்சையாக அவர் கன்னம் தடவி சொல்ல."அப்போ அவளைத் தீட்ட வேணாமா"பாவமாக வீம்பு கேட்க, அவசரமாக "அது தனி இது தனி ராசா, எம்ம விரட்டி அடிக்குற",மீண்டும் சிலிர்த்து கொள்ள,"என் டார்லிங்கா என்னமா பயமுடித்து வச்சு இருக்கா,நீங்க கவலைய விடு டார்லிங் வச்சு செய்யுறேன் அவளை"."ராசானா ரசாத்தேன்",வாய்க் கொள்ளப் புன்னகை அவரிடம்.....வெளியில் கோபமாக இருந்தாலும் மனைவி அடிக்கும் கூத்தை உள்ளுக்குள் ரசிக்கவே செய்தான் வீம்பு,அவளிடம் காதலாகக் கசந்துருகிய காலத்தை விட,ஊடல் செய்த காலமே அதிகம்,அதிலும் அவன் கண்டது அழகான காதலே,இன்றும் தனது மனைவி பேச்சியைப் படுத்தி எடுத்ததை எண்ணி சிரித்துக் கொண்டே வந்தான்.வீம்பு இப்புடி,கள்ளி அப்புடி,இவர்கள் இருவரின் கலவை எப்படியோ கடவுள் மட்டுமே அறிந்த ரகசியம்...............
பேச்சி 50 வீம்பு 20 கள்ளி 29 கதாசிரியர் 1
சரிதானே
 

Advertisements

Latest updates

Top