• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience வீரயுகநாயகன் வேள்பாரி புத்தகம் பற்றிய விமர்சனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
வீரயுகநாயகன் வேள்பாரி

வாசிப்பு துறைக்கு நான் குழந்தை.... பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்பால் கொடுப்பது போல வரலாற்று புதினத்திற்கு வேள்பாரி தான் எனக்கு தாய்பால் போல ஆம் நான் படித்த முதல் வரலாற்று புதினம் ....

இந்த புத்தக வெளியிட்டு விழா கண்ணொலியை பார்த்து அப்படி என்ன தான் இருக்கு இந்த புத்தகத்தில் என்று கபிலரை போல அதை அறிந்து கொள்ளும், தெரிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும் நோக்கத்தோடு தான் மூன்று வாரத்துக்கு முன்னால் என் பயணம் தொடர்ந்தது....

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல இந்த மொத்த கதைக்கும் அந்த முன்னுரை மட்டுமே போதும்...

பார் புகழும் அறிஞர்
பல பாடல்களை பாடிய கவிஞர்
செந்தமிழ் புலமைவாய்ந்த புலவர்
ஞானசெறுக்கு கொண்டவர்
அவர் தான் கபிலர்

பாணர்களால் ஓயாமல் புகழ்ந்து பாட படுபவன்....
கருணையின் ஊற்று என்று அறியப்பட்டவன்.....போற்றப்பட்டவன்...
யாருடா அந்த தலைவன்....
முல்லைக்கு தேர் கொடுத்தவன்...
வேறு யாரு வீரயுகநாயகன் வேள்பாரி.....

அப்படி ஒருவன் இருக்கவே முடியாது என்றும், அதை தாமே நேரில் சென்று பார்த்துவிட்டு வ்ருகிறேன் என்று சென்றவர் .... (அவருக்கு தெரியவில்லை திரும்ப வரவே முடியாத இடத்துக்கு செல்கிறார் என்று.. பாரியின் கருணையை கண்ட பின் திரும்ப முடியுமா...)

முதல் பதிவு படிச்ச பிறகு ஒன்று புரிந்தது கபிலரின் சொல் மட்டும் அறுபடவில்லை என் மனசும் காற்றில் அறுபட்ட பட்டம் பறப்பது போல..... காய்ந்த சருகு காற்றில் மிதப்பது போல என் மனசு நீலன் கூடவே போயிவிட்டது.... திரும்பி வருமா என்று தெரியவில்லை.... ஏன்யென்றால் அது போய் விழுந்தது வேள்பாரியின் பாதத்தில் ....

உயருள்ளது, உயிரற்றது என எந்தவித பேதமின்றி நேசிக்கும் மனம் படைத்தவன் வேள்பாரி... நாம் அறிந்தது ஒரு சிறு துளியே பாரியை பற்றி.... கடலை கூட அளந்து விட முடியும் .... பாரியின் கருணையை அளந்து விட முடியுமா?.....

இந்த வானும்
இந்த கடலும்
இந்த விண்மீன்களும்
இருக்கும் வரை பாரியை யாராலும் மறக்க முடியாது.....மறைக்க முடியாது....

என் கண்ணில் இருக்கும் கண்ணீர் கூட வற்றலாம்
என் நாவில் இருக்கும் எச்சில் கூட காயலாம்
ஆனால் பாரியின் புகழ் என்றைக்கும் வற்றாது... அழியாது...தேயாது...மறையாது....

வெளிநாட்டு பொருட்கள் மட்டும் அல்ல மது, மாது இரண்டின் மீதும் இருக்கும் மோகம் அன்று முதல் இன்று வரை...?? மாறவேயில்லை..

ஒரு குலத்தை அழித்து தான் ஆட்சி செய்தவர்கள் என்றும்... அதிகாரத்தால் ஆட்சி செய்தவர்கள் என்றும் .... தாங்கள் புகழ் பெற எந்த எல்லைக்கும் செல்லும் அறமற்றவர்கள் என்று தெரிந்த போது வெறுப்பு வந்தது... மூவேந்தர்கள் இப்ப என் கண்ணுக்கு corporate முதலைகள் போன்று தான் தெரிகிறார்கள்... இத்தனை நாள் நான் அறிந்த வியந்த எல்லாமே இப்ப தலைகீழாக தெரிஞ்சது... கற்றது கை அளவு கல்லாத்து உலகளவு.....

எண்ணிலடங்கா தகவல்கள்....
எத்தனை வகை புற்கள்
எத்தனை வகை மலர்கள்
எத்தனை வகை மரங்கள்
எத்தனை வகை கொடிகள்
எத்தனை வகை செடிகள்
எத்தனை வகை பாம்புகள்
எத்தனை வகை பூச்சிகள்
எத்தனை வகை கள் ......
அவை எல்லாமே நம் வியப்பை அதிகரித்துக்கொண்டே போகும்...சரி இவைகள் தான் வியப்பா என்றா அதை விட நிறைய இருக்கு....

இது முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டம் ..... இது வரை இப்படி பட்ட வேடத்தில் பார்த்தே இருக்க முடியாது.....முருகன் என்றால் உருகாதார் உண்டோ ..... அழகு என்ற சொல்லுக்கு முருகா..... இப்படியெல்லாம் தான் நான் அறிந்த தமிழ் கடவுள்... அத்தனை அழகான பெயர் முருகனுடையது... ஆனால் முருகனின் பெயர்காரணம் மட்டும் இது வரை நான் கேட்டதும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை....

முருகன் வேடர்குலத்தை சேர்ந்தவன், வள்ளி கொடிகுலத்தை சேர்ந்தவள் ... ஒரு நாள் வள்ளி கேட்ப்பாள் முருகனிடம் உனக்கு ஏன் இந்த பெயரை வைத்தார்கள் என்று.... தெரியவில்லை எங்க அம்மா வைத்தார்கள் என்று சொல்வான். இல்ல எங்க ஊரில் முருகு என்று ஒரு வகை கள் இருக்கு நீயும், உன் பேச்சும் மயக்குற மாதிரி இருப்பதால் உனக்கு அப்படி ஒரு பெயர் வைச்சாங்களோ... என்று சொல்லுவாள் ...

முருகு என்றால் கள் அதனால்தான் அவன் பெயரை சொன்னாலே நாம் எல்லாம் கள் அருந்தாமலே மயங்குகிறோமோ??

அன்னமழரசி உண்டால் உடலை மயக்கும்
நரந்தம்புல் நுகர்ந்தால் மனதை மயக்கும்
ஆனால் ஆசிரியரின் எழுத்தோ புலன் அறியமுடியாத மயக்கத்தை தருகிறது....
நான் கிறங்கி ... உருகி..... மயங்கிய படிச்ச இடங்கள் என்றால்

முருகன் வள்ளி .... பாரி ஆதினி ..... நீலன் மையிலா ..... அங்கவை உதிரன் காதல் காட்சிகள் தான்..... எல்லாம் நம் கற்பனை சக்திக்கு அப்பால் .... வேற லேவல்... ஜஸ்கட்டி மாதிரி உருகிய தருணங்கள் தான்..

2016 ல் தொடர்கதையாக ஆரம்பித்து கிட்ட தட்ட 111 வாரங்களாக ஆனந்த விகடனில் வெளிவந்த கதை எனக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தான் தெரியும் ..... படிக்க ஆரம்பிச்ச பிறகு என்னால நிருத்தவே முடியவில்லை.... அதே சமயம் ரொம்பவே கவலையாவும் இருந்தது இதை தொடர்கதையாக வரும் போது படிக்க முடியாமல் போய் விட்டதே..... அந்த சுவரஸ்யத்தை, தவிப்பை, இன்பத்தை, சுகத்தை அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே.... என்று... வார்த்தைகளால் விவரிக்க முடியாதா உணர்வு ...its an experience...உணரமட்டுமே கூடியது...

நின்னா, நடந்தா, படுத்தா.... எப்பவுமே மண்டைகுள் ஒடுற ஒரு விஷயமாக இப்ப எனக்குள்ள இருப்பது வேள்பாரி..... வேள்பாரி என்று உச்சரிக்கும் போது கண்ணில் கண்ணீர்.... என்ன மாதிரியான ஒரு மனிதன்.... எப்படி இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா என்று ஓயாமல் எனக்குள் எழுகிற கேள்வியை நிறுத்த முடியவில்லை...பிரமிச்சு ஒயவில்லை.... என் வாழ்நாளில் எந்த ஒரு மனிதரை பார்த்தும் நான் ஆச்சரியத்தில் இப்படி வியந்ததேயில்லை....

முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி....
கடை ஏழு வள்ளல்களில் ஒருவன் ....
இதை தவிர வேறு எந்த தகவல்களும் ஏன் நமக்கு சொல்லவில்லை என்கிற கவலையும், கோபமும் கூட வந்தது....

எனக்கு ரொம்ப பிடிச்ச வரி கலப்படத்தில் தானே புதுமை பிறக்கும் என்று பாரி கபிலரிடம் சொல்லும் ஒரு காட்சி வரும்.... ரொம்ப ரொம்ப நெகிழ்ந்தேன்.... இந்த ஜாதி, மதம் எல்லாம் அப்ப இல்ல... விரும்பியவர்களுடன் கைகோர்த்து.... காதலுடன் வாழ்ந்து இருக்காங்க நம் முன்னோர்கள் .... நாகரிகம் வளர்ந்ததால் தான் இவ்வளவு பாகுபாடு, வேறுபாடு எல்லாம்.. போலும் என்று எண்ண வைத்தயிடம்..

நானும் பொற்சுவை போல ஏன் ஆசிரியர் 111வது பதிவில் கதையை முடித்தார் வேறு ஏதாவது மறைபொருள் இருக்கோ என்று சிந்தித்த போது ஒன்று விளங்கியது .... இதன் மூலம் சதி செய்து பாரியை கொன்ற மூவேந்தர்களுக்கு ஆசிரியர் ஒன்று சொல்வது போல உணர்ந்தேன்....

111 என்றா நமக்கு நினைவுக்கு வருவது பட்டை நாமம் நிஜத்தில் பாரியை எதிர்கொள்ள முடியாமல் கோழைகளை போல சதி செய்து அழித்த மூவேந்தர்களுக்கு வீரயுகநாயகன் வேள்பாரி மூலம் பட்டை நாமம் தான் கிடைத்தது. போட்ட திட்டம், வகுத்த சூழ்ச்சி, திரட்டிய படை, கைகோர்த்த சதிகாரகூட்டணி.... எல்லாமே நாசமாக போயி..... ஒன்னும் இல்லாமல் உயிரை காத்துக்கொள்ள தப்பித்து ஒடியவர்களுக்கு ஆசிரியர் போட்ட பெரிய பட்டை நாமம் தான் 111

வீழ்த்த நான் என்ன மரமா.... வீழ்ந்தாலும் வீருகொண்டு எழும் பனம்பழம் என்று மூவேந்தர்களுக்கு பாரி சொன்னது போல இருந்தது...

பனையன் மகனே படலை யாரும் அழமால் படித்து இருக்க வாய்ப்பே இல்லை....

வியப்பில் தொடங்கி....
காதலில் மயங்கி....
கருணை கடலில் சிக்கி.....
சதிகார மனிதர்களை கண்டு பொங்கி.....
கண்ணீரிலே முழ்கி...
என்றும் என் நினைவு அடுக்குகளில் நீங்காமல் இருப்பான் வேள்பாரி...

ஆசிரியரை பாராட்டாமல் இருக்கவே முடியாது... எத்தனை உழைப்பு... எத்தனை மெனகிடல்...கிட்டதட்ட ஆறு ஆண்டுகளுக்கு மேல் இதற்கான தகவல்களை திரட்டி... எல்லாவற்றுக்கும் மேல 111 வாரம் தொடர்ந்து கதையை எழுதுவது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல... அவருடைய ஆர்வம் என்பதை விட தமிழ் மீதும் சங்க இலக்கியத்தின் மீதும் அவருக்கு இருக்கும் காதல் மட்டுமே இப்படி பட்ட காவியங்களை படைக்க காரணமாக இருக்க முடியும்... அருமை என்று ஒத்த வார்த்தை பத்தாது .... இதை முடிஞ்ச வரை நிறைய பேருக்கு கொண்டுபோய் சேர்க்கனும் அது மட்டுமே அவருடைய உழைப்புக்கு நாம் செய்யும் நன்றிகடனாக இருக்க முடியும்....

பின் குறிப்பு :

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை அறிந்து கொள்ள... இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அற்புதமான வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள.... போர் முறையை பற்றிய விசாலமான நுட்பத்தை அறிந்து கொள்ள... கட்டாயம் இதை எல்லோரும் படிக்கனும்....

Don’t miss out....

2CDAD652-D302-4833-92F1-E26B24179329.jpeg
 
Last edited:

Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
samaaa premi akka sathiyamaa neenga sonna mathiri
mullaikku ther koduthar pari apdirndra quotes ah thavira ethuvume theriyathuu namma padichathu ellam onnume illa inime innum nerayaaa padikka iruku nu super ah solli irukingaa ka varalattru novels padikkbothu undaguraa feeling ah super kaa nerayaa per historical novels padikka pidikum nu sonna samayaa kalaippangaa

books padichaaa ennavo mathiri pappangaa unmayilee nammma nammoda history kuda therinjikkama irukarathu evlo periyaa madathanam nu neraya perukku therilaa Namma pakkathula iruka koil pathii kuda theriyamaa ukkanthu irukarom nu nenaikumbothu rombave avamanama iruku ka

ithula namma oor pathiyum Tamilnadu sirapppai pathi lam kavala padave matengurom

oru book ah padichathu mattum illamaa enga kitta athai pathi ivlo azhagaa share panni antha book ah padikkanum thona vaikureengaa Premii kaa loveeeeee uu soo muchhh

Ungalodaa ezhuthkkal moolamaaave antha novel ah padikkanum aarvam undakkura vaikureengaa kaa ithu mathiri neenga padichaa novels ungaa favourite novels pathiyum sollungaa kaaa novel super naa ungalodaaa reviews umm romba super ka unga review pathi solla words ah illa ka neenga evlo enjoy panni intha novel ah padichirukeenga nu theriyuthaa kaa

nann intha posture ah pathu iruken ka ana padichathillai ippathan theriyuthu epdipatta story ah miss panni iruken nu
Kandippa antha book ah padichittu vanthu solren kaaaa
 
Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Yakkaaa... Ipadilaam ennai tempt pannuna exam aavathu onnavathu purappattu poyiruven parangi malai ku solliten.. ???????????????????????

Wow.. akka intha review vaa author kitta fb la podunga kaa appadi alluthu.. athuvum 111 pathi unga karapanai vera level.. ?????????

Ungaluku aavathu moonu vaaram munnadi terinchathu enaku neenga solli thaana teriyuthu... ??? Naan kelvi pada kooda ila athuku munnadi.. but miss pannira koodathu 11 april i am going to parangimalai ???✨??????
 
Premi

அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
1,011
Reaction score
2,292
Location
coimbatore
Su.Venkatesanen in veerayuga nayagan velpaari ....u tube la 100 th episode celebration pathu dha intha kadhai pathi therinjathu ana na pakum pothu book uh release ayiduchu ...thodar ra varum pothu padika mudiyalenu oru varutham irnthuchu ...innu intha novel na innu padiklaa ...unga review super ka ....romba rasichu unarnthu solirkinga ??
 
பரங்கிமலை இல்ல...
பறம்பு மலை... ?
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
samaaa premi akka sathiyamaa neenga sonna mathiri
mullaikku ther koduthar pari apdirndra quotes ah thavira ethuvume theriyathuu namma padichathu ellam onnume illa inime innum nerayaaa padikka iruku nu super ah solli irukingaa ka varalattru novels padikkbothu undaguraa feeling ah super kaa nerayaa per historical novels padikka pidikum nu sonna samayaa kalaippangaa

books padichaaa ennavo mathiri pappangaa unmayilee nammma nammoda history kuda therinjikkama irukarathu evlo periyaa madathanam nu neraya perukku therilaa Namma pakkathula iruka koil pathii kuda theriyamaa ukkanthu irukarom nu nenaikumbothu rombave avamanama iruku ka

ithula namma oor pathiyum Tamilnadu sirapppai pathi lam kavala padave matengurom

oru book ah padichathu mattum illamaa enga kitta athai pathi ivlo azhagaa share panni antha book ah padikkanum thona vaikureengaa Premii kaa loveeeeee uu soo muchhh

Ungalodaa ezhuthkkal moolamaaave antha novel ah padikkanum aarvam undakkura vaikureengaa kaa ithu mathiri neenga padichaa novels ungaa favourite novels pathiyum sollungaa kaaa novel super naa ungalodaaa reviews umm romba super ka unga review pathi solla words ah illa ka neenga evlo enjoy panni intha novel ah padichirukeenga nu theriyuthaa kaa

nann intha posture ah pathu iruken ka ana padichathillai ippathan theriyuthu epdipatta story ah miss panni iruken nu
Kandippa antha book ah padichittu vanthu solren kaaaa
Waiting baby....for your review ??

வரலாற்று நாவல் எல்லாம் உண்மையான சம்பவத்தில் கொஞ்சம் புனைவுடன் இயற்றப்படுவது தான்... நம்மலோட வேறை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வரலாற்றுப்படம் புதினம் அவசியம்
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Su.Venkatesanen in veerayuga nayagan velpaari ....u tube la 100 th episode celebration pathu dha intha kadhai pathi therinjathu ana na pakum pothu book uh release ayiduchu ...thodar ra varum pothu padika mudiyalenu oru varutham irnthuchu ...innu intha novel na innu padiklaa ...unga review super ka ....romba rasichu unarnthu solirkinga ??
முடிஞ்சா படிங்க பா...
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,015
Location
madurai
நிச்சயமா படிக்க முயற்சி செய்றேன் டியர் இந்த
novel பத்தி சொன்னதுக்கு தேங்க்ஸ் :love::love::love::love:டார்லி
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
கையில் புத்தகம். ஆனாலும் அமைதியாக படிக்க அவகாசம் வேண்டி காத்திருக்கிறேன். தொடராக வந்த பொழுது விகடன் வந்த அன்றே ஓடி பிடித்து வாங்கி படித்த என் சகோதரன் தமிழரின் வரலாற்றில் சிற்றரசன் பேரரசை பயம் கொள்ள வைத்த புதினம் . கண்டிப்பாக படிக்க வேண்டியது என்று ஆர்வத்தை தூண்டிய வரலாறு. உங்களின் விமர்சனம் அதை அதிகம் ஊக்கப்படுத்திகிறது.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top