• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

வெல்லம் போடுவதெல்லாம் பச்சடியல்ல ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
ஆரஞ்சு தோலில் பச்சடி என்று பெயரை பார்த்ததும் மாங்காய் பச்சடியோடமைண்ட் மேப் பண்ணிகிச்சு . அட! அட! வார வாரம் ஆரஞ்சு வாங்குறோமாஅப்ப இனிமேல மாங்காயை தேடா வேண்டாம் போலையே பச்சடி செய்யஎன்று ஏகத்திற்கு குஷி.
நாலு ஐந்து YouTube வீடியோவை அலசி ஆராய்ந்து... புளி, வெல்லம் காம்பினேஷனை பார்த்ததும்வாவ் மாங்காய் பச்சடி போல சூப்பராக இருக்குமே என்று இதுல கனவு வேற எனக்கு.

பிறவிக்குணம் என்று ஒன்று இருக்கும் என்ன தான் செய்தாலும் அதை மாற்ற முடியாது என்கிறவாழ்க்கை த்த்துவத்தை இந்த ஆரஞ்சு எனக்கு பொட்டுல அடிச்சி புரியவச்சுச்சு.
இந்த ஆரஞ்சு தோலுக்கு என்று இருக்கிற குணத்தை 250 கிராம் வெல்லத்தை போட்டு மாற்றிவிடமுடியுமா? What a pity ??

மாற்றி மாற்றி புளியையும், வெல்லத்தையும், காரத்தையும் போடுறேன் ... போடுறேன்... கசப்பு மட்டும்போகவே மாட்டேன் என்று ஒரே அடம். கடைசியாக ச்சீ போ என்று விட்டு விட்டேன்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
வெல்லம் போடும் எல்லாம் பச்சடியல்ல
அதுவும் மாங்காய் பச்சடியல்ல...

ஆரஞ்சு புளிப்பாக இருக்கும் அதனால தோலையும் அப்படி நினைச்ச என்னை என்ன சொல்வது. So it’s my fault not orange ?
ஆரஞ்சு பச்சடியாக நினைத்து சாப்பிட்டால் ரொம்பவே நல்ல இருந்தது... விட்டமின் C இருக்குஎன்று நினைச்சா இன்னும் சுவையாக இருந்தது...அதுவும் ஊறிய பிறகு சாப்பிடும் போது கூடுதல்சுவையோ சுவை..?

சரி ஒன்னு சொதப்பினா என்ன இன்னொன்று இருக்கே அதான் ஆரஞ்சு என்றாலே ஒட்டி பிறந்தஉடன்பிறப்பு போல கூடவே வருமே ஆப்பிள். எங்க ஊரில் பச்சை நிற ஆப்பிள் கிடைக்கும். அதிலேயும் நிறைய வெராய்ட்டி இருக்கும். நான் போன வாரம் golden delicious apples வாங்கிவந்தேன் யாரும் அதை தொட என்ன திரும்பி கூட பார்க்கவில்லை. How dare they are? ?

என் மகளை ஏமாற்றுவது என்பது எனக்கு எப்பவுமே மிக சுவாரசியமான விளையாட்டு. அந்தஆப்பிளை துருவி மாங்காய் தொக்கு செய்வது போல செய்தேன் கிட்ட நட்ட 95% மாங்காய்தொக்கு போல வந்தது... வாவ் சூப்பார் ஆரஞ்சு கைவிட்ட என்ன ஆப்பிள் இருக்கையிலே... I need some alternate for mangai what to do ...??
என் மகளும் மாங்காய் தொக்கு என்று நம்பி சாப்பிட்டது வேறு கதை... yaa hooo!!! ????

மனதக்காளி கீரை புளிக்குழம்பு இது நான் முதல் முறை செய்யுறேன். என் பிரண்ட் வீட்டுதோட்டத்தில் இருந்து வந்தது. எப்பவுமே பருப்பு போட்டு மட்டுமே கடைந்து பழக்கம். கீரையும்ஒசியில கொடுத்து கூடவே ரெசிபியும் சொல்லி கொடுத்த தெய்வம் அவங்க.
என் மைண்ட் வாய்ஸ் ‘அப்படியே சமைச்சு கொடுத்து இருந்தா இன்னும் எம்புட்டு சூப்பராகஇருக்கும்’ ?
‘புது பொலிவுடன் மனதக்காளி கீரை குழம்பு’ உண்மையாகவே பிரமாதமாக இருந்தது சுவை. ???
சுவீட் பொட்டேடோ சிறுபருப்பு போட்டு கூட்டு. உருளையை விட இதில் தான் ஏகபட்ட சத்துக்கள். இதை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். I used to call life saver ?

அப்புறம் கடைசியாக ரோஸ் பெடல்ஸ் போட்ட healthy ladoo .

உங்க மைண்ட் வாய்ஸ் ‘ஏன்மா தலையில வைக்க வேண்டியதை நீ ஏன்மா லட்டுல போட்ட’ என்பதுஎனக்கு கேட்குது. நான் எதை செஞ்சாலும் பிளான் பண்ணாம செய்ய மாட்டேன்...wait n see ??
இதுவும் என் பிரண்டு வீட்டு தோட்டத்து பன்னீர் ரோஜா. நிரம்ப பூத்து குலுங்கி கண்ணுக்குரம்மியமாக இருந்தது. நான் அதை வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்ததை பார்த்து எனக்கு அதுமேல ஆசை போல என்று நினைச்சு இந்தா இதையும் எடுத்துக்கிட்டு போயி ரோஸ் எசன்ஸ் பண்ணிசாப்பிடு உடம்புக்கு நல்லது என்று ஒரு பெரிய பை நிறைய கொடுத்தாங்க.
நமக்கும் பாலுக்கும் தான் ஆகதே அதனால் ரோஸ் எசன்ஸ்சுக்கு பிக் நோ...??
வீட்டுக்கு வந்து Google ஆண்டவரிடம் வரம் கேட்ட போது அவர் சொன்ன தகவல் தான் என்னைரொம்பவே கவர்ந்து விட்டது. ரோஸ் இதழ்களை சாப்பிட்ட உடல் எடை குறையும்... (இப்பதெரியுதா நான் ஏன் அந்த லட்டுவை செய்தேன் என்று)

அட அட!! சூப்பரான பொருளாக இருக்கே என்ன பண்ணலாம்! என்ன பண்ணலாம்! என்றுயோசிக்கும் போது ஆத்திபழம், ட்ரை நட்ஸ் உடன் இரண்டு கைபிடி ரோஜா இதழ்களை போட்டுசுவையான லட்டு தயார்..

நிஜமாகவே ரொம்ப சுவையாக, மணமாக இருந்தது. Believe me yaah...?

என் புருஷ் மைண்ட் வாய்ஸ் ‘நீ வாயா கட்டினாலே போதும் ஆத்தா இது எல்லாம் எதுக்கு வேண்டாதவேலை ஆத்தா’ ??

குட்டி தகவல்:

‘உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கழகு’ ஔவையார் ஏன் பெண்களை மட்டும் கூறிப்பிட்டு இருக்காங்கஎன்றால் நாம தான் அய்யோ வேஸ்டாக போகுதே என்று குப்பை தொட்டி போல நம்மளோடவயித்துல மீந்த சாப்பாட்டை போடுவோமே அதனால நமக்கு அட்வைஸ் சொல்லிஇருப்பாங்களோ... ??



‘உண்டி சுருங்குதல் அனைவருக்குமே நல்லது’



Eat healthy and stay happy ?
 




Attachments

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
ஆப்பிள் பச்சடி புதுசா இருக்கு டியர் ?. இனி புளிக்கிறதை மட்டும் பச்சடி யா செய்யனும் போல:unsure::unsure:.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top