வேல்விழி பெண்ணே

#1
"நீ வீசி சென்ற
ஒரு பார்வையில்
விஞ்ஞானி ஆனேனடி
உன் ஒரு பார்வை
சொல்லிடும்
ஓராயிரம் அர்த்தம்
கண்டிட"

"உன்
விழி வழி
உன் வலி படிக்க
முயன்றேன்
உன் வேல்விழிதான்
வேலி போடுகிறதே
வரம்பு மீறிய
பார்வை கொண்டால்
வன்முறை ஆகிவிடுமென"

"உன்
வேல் விழி
பாய்ந்தால்
வேதனை கொள்ளாமல்
வெட்கம் கொள்கிறது
என் இதயம்
விந்தை இது
எதுவோடி"

"உன்
வேல்விழி
அழகில்
விக்கித்து நிற்கிறேன்"

"உன்
விழி சொல்லும்
சேதியில்
என்னை சேர்ந்திடும்
நாள் நீ சொன்னால்
செழித்திடும்
என் பூஞ்சோலை"

"விழியழகி
நீ
என் வாசல்
வரும் வழி
பார்த்து
என் விழி இரண்டும்
வாடுதடி
வாடிடும்
என் விழிதான்
வாழ்வு பெறுமே
உன் வேல்விழி
தரிசனம்
கிடைக்கையிலே"

"வேல்தனை
விழிகளில்
கொண்டவளே
என் வேதனை
தீர்த்திட
வா அருகே"
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top