• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஶ்ரீம்மாவின் மௌன குமிழிக்கு எனது நேசப் பகிர்வு..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

‘மௌன குமிழியாய் நம் நேசம்’ எதார்த்தமான எளிமையான கதை மாந்தர்களைக் கொண்ட கதை களம்.. ஆசிரியர் கதாபாத்திரங்களை கையாண்ட விதம், அவர்களின் உணர்வுகளை தனது எழுத்து நடையில் நம்மிடம் வெகு இயல்பாக கடத்தியது..

ஆசிரியரின் நடுநிலையான எழுத்து நடை கதையின் உயிரோட்டம்.. பக்கத்திலிருந்து பார்க்கும் உணர்வு கதை வாசிக்கும் போது ஏற்படுத்துகிறது.. காட்சிகளின் சித்தரிப்பு.. மிகைப்படுத்தாமல் உள்ளதை உள்ளபடி கொண்டு போயிருக்கீங்க ஶ்ரீம்மா..

கதை தலைப்பில் உள்ள மௌனம் கதை மாந்தர்களிடம் இல்லாததால் ஏற்படும் நிகழ்வுகளே கதைக் களம்..

வருண பாண்டியன் கதையின் நாயகன் வருமாமாவாக வரும் பொழுது நம்மை சிரிக்க வைப்பவன் பாண்டியனாக வரும் பொழுது கொந்தளிக்க வைக்கிறான்.. அவசரத்தில்.. யோசியாமல் பேசிவிடும் வார்த்தைகள் செயல்கள் நம்மை மட்டுமல்ல நம்மை சார்ந்தவங்களையும் பாதிக்கும், என்பதை அறியாமல் அவன் செய்த செயல், அவன் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. அந்த நம்பிக்கையையும் அதே அதிரடியால் அவன் மீட்பது “அடேய் நீ திருந்தவே மாட்டியாடா”னு கேட்க வைக்குது.. மொத்ததில் இவன் நல்லவன்.. நல்லவன் தான்.. ஆனாலும்.. டெரர் பீஸ் தான்.. தான் நினைத்ததை சாதிச்சிருவான், வியாபாரகாரன்.. ஸ்ப்ப்பாா.. உன்ன பத்தி பேசி பேசி பசி எடுத்துட்டு. ஒரு சில்லி பரோட்டா பார்சல் அனுப்பு முறைக்காத காசு ஆத்தர்ட வாங்கிக்கோ... ஆத்தரே இவன எங்க இருந்து பிடிச்சீங்களோ..???

சிவனியா கதையின் நாயகி சியாபாப்பா.. துரு துரு தென்றல். தைரியசாலி ஆனாலும் திட்டுக்கு பயந்து சில செயல்களை மறைப்பாள்.. மறைச்சு அப்புறம் அதால பிரச்சனைகளை இரண்டு மடங்கு சம்பாதித்தவள்.. யாருக்குலாம் பயப்படுகிறாளோ அவங்களை எல்லாம் ஆட்டி வைப்பவள் அவள்தான் என்று அறியாதவள்.. பாண்டியனால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்து அவனை ஏற்றுக் கொண்டாலும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மேம்படுத்திக் கொள்ளும் பாங்கு அருமை.. பாண்டியனின் முடிவை தன்னிடம் திணிக்கும் போது அதையே அவனுக்கு ஆப்பாக மாற்றி அவனை புலம்ப வைப்பவள்.. தனது உணர்வுகளை அவள் வெளிபடுத்தும் இடங்களில்.. சாப்பிட கொடுப்பது இனிப்பே ஆனாலும் விருப்பம் இல்லாமல் சாப்பிட முடியாது திகட்டும் என்பதை புரிய வைத்தாள்.. அடியேய் நீ நல்லவனு சொல்லிட்டேன்… ஒரு ஜிகர்தண்டா வாங்கி தா.. டப்பு ஆத்தர்ட வாங்கிக்கோ.. ஆத்தரே கொடுத்துருங்க..

அடுத்து என்மனதில் நின்றவர் செங்கமலம்.. வீட்டை எதிர்த்து மணம் புரிந்த கணவனை இழந்த நிலையில் பெண்ணை பெற்றவராக அவரது உணர்வுகளை தனது எழுத்து நடையில் வெகு இயல்பாக உணர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.. பாண்டியனின் செயலால் நம்பிக்கை இழந்து அவர் தவிக்கும் போது நெஞ்சம் கணக்கிறது.. மகளின் புகுந்த வீட்டில் அவளது மரியாதைக்காக சீர் செய்ய அந்த வயதிலும் சுயசம்பாத்தியம் வேண்டும் என்று எண்ணும் அவரது பாதுகாப்பற்ற தன்மையான உணர்வு... நெகிழ்த்துகிறது.. சிறந்த கதாபாத்திரம்...

கோதை.. பாசமான அம்மா.. அதை விட சிறந்த மாமியார்.. தப்பு செய்தது மகனே ஆயினும் கண்டிக்கும் சிறந்த தாய்..

ராமலிங்கம் அனைத்து கதாபாத்திரங்களையும் ஒருங்கிணைக்கும் பாலம்..

ரவி பாவம் கைப்புள்ள.. சிங்கிளாவே இருந்திருவானோனு பயந்தேன் நல்ல வேளை மிங்கிள் ஆகிட்டான்.. அந்த மிங்கிள் ஸ்டேடஸ்க்கு அவன அப்கிரேடு பண்ணவ கனி தான்..

கதிர் இக்கால துடிப்பான இளைஞன்..

தவறிய செல்போனால் ஏற்படும் பாதிப்புகளை விறு விறு காட்சிகளாக சொல்லியது சமூக அக்கறை.. பாதுகாப்பு குறியீட்டின் அவசியத்தை உணர்த்தி அதன் பாதிப்பின் சூட்சமங்களும் புரிய வைத்தது தெளிவான விளக்கம்.. எளிமையான வாழ்க்கை முறையில் அவர்களின் முன்னேற்றத்தை காட்டியது.. நாவல் படிக்கும் சிலருக்காவது சாதிக்கும் உத்வேகத்தைத் தூண்டும்.. எளிமையான அருமையான கதை.. வாழ்த்துக்கள் ஆசிரியரே..

மேலும் பல கதைகள் வரவேற்கப்படுகிறன.. வாசிக்க காத்திருக்கிறோம்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top