• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஷாந்தனி தாஸ் 's தேன் மழை பொழியும் மேக காதலன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai Friends

post நா தா but story sha எழுதுயது....

தேன்மழை பொழியும் மேகக் காதலன்...!

நீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை... இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டின் அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க... இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது!

“இளவரசே...!” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்.

என்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்!

நிமிர்ந்து அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு!

மார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலிருந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,
“சொல் முத்தழகா...” என்றான் ஆதித்த கரிகாலன்.

ஆம்... அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.

வரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.

செல்லும் பாதை நீண்டு வளர்ந்துக் கொண்டிருந்தது. கரிகாலன் முகத்தையே பார்த்தபடி வந்துக் கொண்டிருந்தான் முத்தழகன்.

“என்ன முத்தழகா என்ன பார்வை?”

“அரசே...”

“சொல் முத்தழகா”

“அந்த நந்தினிக்காக ஏன் இத்தனை மெனக்கெடுகிறீர்கள்? அவள் ஒரு சூழ்ச்சிக்காரி”

“இப்பொழுது அவள் என் காதலி முத்தழகா”

“அதற்காக அவள் உயிரை காக்க காட்டுக்கு செல்ல போகிறீர்களா?”

”நாட்டு மக்களுக்கு ஒன்று என்றால் நாம் இப்படி செல்வதில்லையா? அதே போல் இதையும் எண்ணிக் கொள் முத்தழகா”

“என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை அரசே”

“அந்த மூலிகையை பறிக்கும் வரை பொறுத்துக் கொள்”

“முடியாது அரசே”

குதிரையை நிறுத்திய காலன் “ஏன்?” அமைதியாக ஏறிட்டு நோக்கினான்.

“நீங்கள் செல்லும் ஒவ்வொரு தவறான பாதைக்கும், உங்களின் ஆயுள் குறையும், ராஜ சித்தவைத்தியர் கூறியதை மறந்து விட்டீர்களோ?”

“என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா முத்தழகா?”

“தங்கள் மேல் எனக்கு மலையளவு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அந்த நந்தினி மேல் நம்பிக்கை இல்லை, இதுவும் அவளின் சூழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தால்?” கேள்வி எழுப்பினான் அவன்.

அமைதியாக புரவியை செலுத்தினான் ஆதித்தகரிகாலன், அவன் மனதிலோ சில நாட்களுக்கு முன் நடந்தவை படமாக ஓடின,

அந்த ஏரிகரையோரத்தில் வான் நிலவில் பார்வையை பதித்தபடி அவனின் தேவிக்காக காத்திருந்தான் ஆதித்தன். தூரத்தில் முத்து சிலம்பொலியில் கண்களை அந்த இருட்டில் உலவவிட்டான் அவன்.

அரண்மனை தீப ஒளியில் அணிகலன் பளிச்சிட, மஞ்சள் நிற உடையில், கண்களை எங்கும் சுழல விட்டபடி, மேல் அணிந்திருந்த சால்வையால் முகத்தை மறைத்தபடி வேகமாக வந்துக் கொண்டிருந்தாள் அவள்.

வெறும் புல் தரையில் படுத்திருந்தவனின் கறுத்த தேகம் அவள் கண்களுக்கு புலப்படாமல் போக, அவன் மேல் கால் தடுக்கி அவன் நெஞ்சில் வந்துவிழுந்தாள் அவள்.

தன் மேல் பூக்கூடை ஒன்று விழுவதை உணர்ந்த காலன், புன்சிரிப்புடன் அவளை இடதுக்கையால் அணைத்துக் கொண்டான்.

தன் மனம் கவர்ந்தவன் ஸ்பரிசம் உணர்ந்தவள் “அரசே...! என்னை ஏன் இந்த இரவு நேரம் அழைத்தீர்கள்” அவனின் நெஞ்சில் சுகமாய் சாய்ந்தபடியே வினவினாள்.

“ஏன், என் தேவியை அழைக்க நேரம் காலம் பார்க்க வேண்டுமா என்ன?” அவளின் முகவடிவை விரலால் கோலமிட்டபடி வினவினான் அவன்.

“சரி சொல்லுங்கள் ஏன் என்னை அழைத்தீர்கள்”

“என் தேவியின் அழகு முகத்தை காணவே அழைத்தேன்” நெற்றியில் இருந்து கோலமிட்டபடியே மயக்கமாக கூறினான் அவன்.

“உண்மையை கூறுங்கள் அரசே”

“தேவியின் கைபிடித்து ஆற்றின் ஓரமாக நடப்போமா?” அவளின் கையை பிடித்தபடிக் கூறினான்.

“தங்களுக்கு இன்று என்னவாகிற்று? இந்த இரவில், கடுங்குளிரில் ஆற்றை சுற்றி நடக்க அழைக்கிறீர்களே?” அவன் நெஞ்சில் இருந்த தழும்பை ஸ்பரிசித்தப்படி வினவினாள்.

“பௌர்ணமி நிலவில், இந்த தேவனுக்கு, தேவி மேல் காதல் அதிகரித்தமாம்?”

“அப்படியா?”

“ஆம் தேவி, வாருங்கள்” அவளின் கையை பிடித்தபடி எழுந்தான் ஆதித்தகரிகாலன்.

“தேவி அந்த நிலவை பாருங்கள்”

“ம்ம்... நிலவு என்றும் அழகு தான் அரசே”

“இன்று பேரழகு தேவி”

“எப்படி கூறுகிறீர்கள் அரசே?”

“வாருங்கள் தேவி, உங்களுக்கு என் கண்ணில் தெரியும் பேரழகை காட்டுகிறேன்” அவளின் கை பிடித்து ஆற்றில் மெதுவாக கால் வைத்தான் ஆதித்தகரிகாலன்.

“ஐயோ! அரசே...! என்ன செய்கிறீர்கள், மிகவும் குளிராக உள்ளது”

“என் கரத்தை இறுக்க பற்றிக் கொள்ளுங்கள் தேவி”

அவள் முகத்தை மறைத்திருந்த சால்வையை எடுத்த ஆதித்தன், அவளின் மார்போடு சேர்ந்து கை வளவியில் பிணைத்தவன்,

“இப்பொழுது இந்த நிலவை பாருங்கள் தேவி, பேரழகு கண்ணில் காட்சி தரும்”
மெதுவாக குனிந்து தண்ணீரை பார்த்தாள் தேவி, அதில் தெரிந்த வான் நிலவில் இருவர் முகமும் பளிச்சென மின்னியது.

“ஆம். அரசே... நான் இருவரும் இணைந்தால் பேரழகு தான்” ரசித்துக் கூறினாள் நந்தினி.

“இதற்கு தான் அழைத்தேன் தேவி, வாருங்கள் கரைக்கு செல்வோம்”

அவன் கையை பற்றியபடியே கரைக்கு வந்தனர். அந்த புல் தரையில் அமர்ந்திருந்து பல கதைகள் பேசிக்கிடந்தனர்.

“ஆஆஆஆஆ... அரசே” மயங்கி சரிந்தாள் நந்தினி.

“தேவி... தேவி... என்னவாகிற்று எழுந்துக் கொள்ளுங்கள்”

“அரசே... ஏதோ என் கால்களை தீண்டியது” மெதுவாக கண்களை திறந்த நந்தினி கூறி மீண்டும் அரை மயக்கத்துக்கு சென்றாள்.

வேகமாக அருகில் இருந்த பந்தத்தை பற்ற வைத்தவன், எங்கும் சுற்றி பார்க்க, பெரிய ராட்சச ஜந்து ஒன்று வேகமாக புற்களுக்கு இடையே ஓடியது.

அதை பார்த்ததும் அறிந்துக் கொண்டான் நாகத்துக்கு விஷம் கொடுக்கும் ஜந்து என்று. அது ஒரு ஆளை கொல்லும் ஜந்து. கொஞ்சம் கொஞ்சமாக உயிரை எடுக்கும்.
ரத்தத்தை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக உறைய வைத்து, உயிரைப் பறித்து ரத்தமற்ற வெள்ளை சதையாக தள்ளும்.

“முத்தழகா”

“கூறுங்கள் அரசே...!” தூரத்தில் காவலுக்கு இருந்த முத்தழகன் ஓடி வந்தான்.

“உடனே ராஜ சித்த வைத்தியரை அழைத்து வா” கட்டளையிட்டான் ஆதித்தகரிகாலன்.

ஏதேதோ பச்சலையை இடித்து சாறு எடுத்து நந்தினிக்கு புகட்டினார் வைத்தியர்.
ஆனால் சாறு எல்லாம் உள்ளே செல்லாமல் வெளியே கசிந்தது.

“என்னவாகிற்று வைத்தியரே?”

“சாறு இறங்கினால் கூட ஏதாவது செய்யலாம், இப்படி இருந்தால் தன்னால் எதுவும் செய்ய இயலாது”

“வேறு என்ன தான் செய்வது, சீக்கிரம் கூறுங்கள்”

“நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இளவரசி உயிருக்கு ஆபத்து அரசே”

“ஏதாவது செய்யுங்கள் வைத்தியரே”

கண்களை மூடிய வைத்தியர் “அரசே... காட்டில் மலைகளுக்கு இடையே மலைஜாதி பூ ஒன்று உண்டு, விசத்தை முறிக்கும் வல்லமை கொண்டது, அதை கொண்டு வந்தால் இளவரசியை காப்பாற்றலாம்”
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
"தளபதிகளே சீக்கிரம் ஆகட்டும், எங்கிருந்தாலும் அந்த பூவை கொண்டு வாருங்கள்” கட்டளையிட்டான் அரசன்.

“வேண்டாம் அரசே?”

“ஏன் வைத்தியரே?”

“அவர்கள் தவறாக தட்டும் ஒவ்வொரு மலைக்கும், இவர்களின் ஆயுள் குறையும்”

“இது என்ன புது கதை வைத்தியரே?”

“ஆம், அரசே அது ஒரு அதிசய பூ”

“சரி நானே செல்கிறேன், நானே அதை பறிக்கிறேன், என் தேவிக்காக என் ஆயுள் குறைந்தாலும் நான் கவலைக் கொள்வதில்லை. ஒரு நாள் என்றாலும் என் தேவியோடு சந்தோசமாக வாழ்ந்து செல்கிறேன்”

“அரசே வேண்டாம், மிகவும் கடினம், உங்களால் முடியாது?”

“ஏன் முடியாது? என் வீரத்தை தாங்கள் மறந்து விட்டீர்களோ?”

“இது வீரத்தால் வெல்வது அல்ல அரசே, மதியால் வெல்வது”

“என்னால் முடியும் வைத்தியரே, எனக்கு ஆசி வழங்குங்கள்” அவர் முன் குனிந்து வணங்கியவன் முத்தழகை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இதோடு மூன்று மலையை தட்டி விட்டான் ஆதித்தகரிகாலன், அவனின் ஆயுள் குறைந்துக் கொண்டே வந்தது.

“முத்தழகா”

“கூறுங்கள் அரசே?”

“மிகவும் களைப்பாக உள்ளது, சிறிது ஒய்வெடுக்கலாமா?”

“தாங்கள் ஓய்வெடுங்கள் அரசே... நான் தண்ணீர் எங்கேனும் தென் படுகிறதா என்று காண்கிறேன்”

“சரி ஆகட்டும் முத்தழகா”

ஆதித்தகரிகாலனின் குதிரையை அங்கிருந்த மரத்தில் கட்டியவன், தன் குதிரையை கைகளில் பிடித்தபடி ஆற்றை தேடி சென்றான்.

தூரத்தில் மூங்கில் தோட்டமும் அதை தொடர்ந்து, ஓர் ஆறும் ஓட, அங்கிருந்த மூங்கில் மரத்தில் புரவியை கட்டியவன், கால் உறையில் வைத்திருந்த சிறு கூர்கத்தியை எடுத்து, பெரிதாக வளர்ந்திருந்த மூங்கிலை வெட்டி சிறு சிறு துண்டுகளாக்கியவன் அதில் நீரை நிரப்பி குதிரை உறையில் போட்டுக் கொண்டான். மிகவும் சுத்தமாக தெளிந்த நீராக இருக்க, இரு கைகளையும் கொண்டு தண்ணீரை மொண்டுக் குடித்தான். அமிர்தமாக இனித்தது. இந்த வெயிலின் தாகத்தை குறைத்தது. கொஞ்ச தூரத்தில் மீன்கள் துள்ளி குதித்து விளையாடியதைக் கண்டவன், தன் பசியை உணர்ந்தான். வேகமாக மூங்கிலை கிழித்தவன், சிறு சிறு நீள நாறாக கிழித்தவன், நொடியில் சிறு அரிப்பு ஒன்றை செய்துக் கொண்டான். இன்னும் கொஞ்சம் இளம் மூங்கிலை வெட்டியவன், சிறு சிறு நீள குச்சிகளாக வெட்டி, நீளம் நீளமாக கட்டி ஆற்றில் தடுப்பாக வைத்து, கூடையை இந்த பக்கம் வைத்து மீன் விழ காத்திருந்தான்.

மரத்தின் அடியில் ஓய்வெடுத்த ஆதித்தகரிகாலனோ, சிறிது நேரத்தில் எழுந்து மனம் போக்கில் நடக்க ஆரம்பித்தான். தூரத்தில் ஒரு இடம் செழிப்பாக தெரிய, வேகமாக அங்கு சென்றான் ஆதித்தன். எங்கிலும் செழிப்பான மரங்கள் நிறைந்திருந்தது அந்த இடம் எங்கும் பச்சை பச்சை மட்டுமே!

‘நமது கானகத்தில் இப்படி ஒரு இடமா!’ அதிசயமாக எண்ணிக் கொண்டான்.
தரையில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கியது. இதுவரை அவன் கானகத்தில் காணாத பல வண்ணங்களில் கண்ணை கவரும் நிறத்தில் பூத்து குலுங்கியது. அங்கு வீசிய நறுமணம் அவன் தேவியின் மேனியில் வீசும் சந்தன நறுமணத்தை அவன் நாசி உணர்ந்தது. தூரத்தில் ஒரு வெள்ளி மலை அவன் கண்களுக்கு தெரிய வேகமாக அதை நோக்கி ஓடினான்.

ஆனால் அங்கு செல்லாதபடி ஒரு அருவியுடன் கூடிய ஆறு அவனை தடுத்தது. அந்த பக்கம் கடந்து செல்ல ஒரு பாசிகள் படிந்து, இத்துப் போன ஒரு மர பாலம் தொங்கியது. அதன் கூடவே அந்த பக்கம் உள்ள ஏதோ ஒரு மரத்தின் கிளைகளும் தொங்கியது.

‘அந்த பக்கம் சென்றால், எப்படியாவது அந்த பூ இருக்கும் இடத்தை அடையலாம்?’ எண்ணியவன் மிக கவனமாக அந்த பாசி படிந்த பாலத்தில் காலை வைத்தான்.
அந்த பாலம் இவன் காலை வழுக்கி விட, தொங்கிய மரகிளையை இறுக்க பற்றியபடி அந்த பக்கம் வந்தவன். அந்த வெள்ளி மலை முன் வந்து நிற்க,
“அங்கேயே நில்” என்ற குரல் கேட்க, மெதுவாக திரும்பி பின்னால் பார்த்தான் ஆதித்தன்.

அவன் முகத்தையும், அவன் கண்ணில் தெரிந்த தேஜஸ்தையும் கண்ட முகம் முழுவதும் முடியை வளர்த்திருந்த பெரியவர் “அரசே தாங்களா?” பணிந்து வணங்கினான்.

“பெரியவரே! இந்த மலையை எப்படி திறப்பது?”

“அரசே அதன் அருகில் சென்று...”

“அரசே...அரசே... இன்னும் என்ன உறக்கம் எழுந்துக் கொள்ளுங்கள், நாம் செல்லும் தூரம் இன்னும் அதிகம்” தட்டி எழுப்பினான் முத்தழகன்.

“அருகில் சென்று, சொல்லுங்கள் பெரியவரே?” என்றபடி கண்களை திறந்துப் பார்க்க, கைகளில் சுட்ட மீனை பிடித்தபடி நின்றிருந்தான் முத்தழகன்.

“நீ இங்கு என்ன செய்கிறாய்? அந்த பெரியவர் எங்கே?” அவசரமாக எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டான் ஆதித்த கரிகாலன்.

“அரசே... யாரை தேடுகிறீர்?”

“அது தான் அந்த பெரியவர், வெள்ளி மலையை அடையாளம் காட்டிய பெரியவர்”

“வெள்ளி மலை எங்கிருக்கிறது அரசே” ஆதித்த கரிகாலனை உலுக்கி கேட்டான் முத்தழகன்.

“அது தான் தெரியவில்லை முத்தழகா? தேடுவோம், தேடி பார்ப்போம், எங்கே கொடு அந்த மீனை” அவன் கையில் இருந்த மீனை வாங்கி ரசித்து உண்டான் ஆதித்த கரிகாலன்.

“அரசே... இது மீன் தின்னும் நேரம் இல்லை, அந்த மலையை காணும் நேரம்”

“மீன் என்னை வா வா என்று அழைக்கிறதே?”

“அழைக்கும்... அழைக்கும், வாருங்கள் செல்வோம்” ஒரு கையில் அவன் குதிரையை பிடித்தவன், மறுகையால் அரசனைப் பிடித்து கட்டி வைத்திருந்த குதிரை அருகில் கொண்டு வந்து நிறுத்தினான்.

“மிகவும் அருமையாக இருக்கிறது முத்தழகு, எங்கே பிடித்தாய்?” ரசித்து உண்டபடி கேட்டார் ஆதித்த கரிகாலன்.

“அரசே..!”

“என்ன அழகா?”

“இது விளையாடும் நேரம் அல்ல?”

“தெரியும் முத்தழகா, இது மீன் உண்ணும் நேரம்?” ஒரு கையில் கட்டியிருந்த புரவியை பிடித்து, மறுகையால் மீனை உண்டபடி கூறினார் ஆதித்தன்.

மெதுவாக நடந்துக் கொண்டிருந்தவன் ஒரு நொடி நின்று “இந்தாருங்கள் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள், இன்னும் மீன் உண்ண வேண்டுமல்லவா?” கடுப்பாக கேட்டான்.

“கொடு... கொடு... விக்குகிறது” சிரிப்புடன் வாங்கி தொண்டையில் சரித்தான் அவன்.

“அரசே... குதிரையில் ஏறுங்கள், விரசாய் செல்வோம், அடர்ந்த காட்டுக்குள் இரவுக்குள் சென்றால் நலம்” என்றவன் குதிரையை வேகமாக விட, அவனை விட வேகமாக குதிரையில் பறந்தான் ஆதித்தன்.

தூரத்தில் பெரிய மரம் ஒன்று வழியை மறைத்தார் போல் நிற்க, அதில் வாகாக செல்லலாம் என எண்ணிய முத்தழகு வாகாய் அதன் இடையில் நுழைய, குதிரை கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை மரக்கிளை இழுக்க, குதிரை முன்னங்காலை தூக்கி கனைக்க, தவறி கீழே விழுந்தான் முத்தழகு.

அதற்குள் அவனை தொடர்ந்து வருவதற்குள் ஆதித்தனின் மேலாடையை தன் வசப்படுத்தியிருந்தது அம்மரம். டக்கென்று குதிரையை விட்டிறங்கிய ஆதத்தன்.

“முத்தழகு” என்றபடி அவனிடம் தாவி வர,

“எனக்கு ஒன்றும் இல்லை அரசே... தாங்கள் நலம் தானே?” ஆதித்தனை ஆராய்ந்தபடி வினவினான்.

“நான் நன்றாக இருக்கிறேன், முத்தழகு, வா கையில் ரத்தம் கசிகிறது பார், வா வந்து ஓய்வெடு” அவன் கைபிடித்து மரம் அருகில் விட்டவன், கனைத்துக் கொண்டிருந்த குதிரை கழுத்தில் தடவிக் கொடுத்து அருகில் நிறுத்திக் கொண்டான்.

“எனக்கு ஒன்றும் இல்ல அரசே... வாருங்கள் புறப்படுவோம், அங்கு தேவி ஆபத்தில் இருக்கிறார்?” நியாபகப்படுத்தினான் முத்தழகு.

“சரி... வா செல்வோம்” என்றவன் தன் இடையில் கட்டியிருந்த மூலிகையை கசக்கி அதன் சாறை அவன் காயத்தில் இட்டு அழைத்து சென்றான்.
சென்றனர்... சென்றனர்... வெகு தூரம் சென்றனர்... தூரத்தில் ஆதித்தனின் கனவு இடம் கண்ணில் தெரிந்தது. குதிரையின் வேகத்தை குறைத்தான் ஆதித்தன்.

“என்னவாகிற்று அரசே...ஏன் நின்று விட்டீர்கள்?”

“அதோ தெரிகிறது பார் அங்கு தான் அந்த பூ உள்ளது”

“எப்படி கூறுகிறீர்கள் அரசே?”

“அதோ அந்த இடம் தான் என் கனவில் வந்தது, வா விரசாய் செல்வோம்” குதிரையின் வேகம் அதிகரித்தது.

அந்த பச்சை பசேல் இடம் வரவும் குதிரை தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து ஆதித்தனைப் பார்த்தது.

“என்னவாகிற்று சீக்கிரம் செல்” கட்டளையிட்டான் அவன். அசையமறுத்தது குதிரை.

“இறங்கி நடக்க வேண்டுமா?”

“ஆம்” என தலையசைத்தது குதிரை.

“முத்தழகா குதிரையை கெட்டியாக கையில் பிடித்துக் கொள்” என கூறி இருவரும் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்.

அதே வண்ண மலர்கள், அதே சந்தன வாசம், அதே ஆறு, அதே பாசி படிந்த பாலம். தூரத்தில் அதோ அந்த மலை. ஆனால் அந்த பெரியவர் மட்டும் காணவில்லை.
அங்கிருந்த மரத்தில் புரவியை கட்டியவன் கனவில் சென்றதுப் போல் அங்கு சென்றான்.

அவன் பின்னே முத்தழகு சென்றான். வெள்ளி மலை முன் நின்ற ஆதித்தன் சுற்றிலும் எங்கும் பார்த்தான். அதை திறக்கும் வழியை கூற யாரும் அங்கு இல்லை. ‘எங்கே அந்த பெரியவர்’ யோசனையாக சுற்றிப் பார்த்தான்.

மெதுவாக சுற்றிலும், சுற்றிப் பார்க்க, அவன் இடையில் தொங்கிய வாள் அந்த மலையில் பட, பெருத்த சத்தம் எழும்பியது,

முத்தழகு இரண்டடி பின்னால் நகர, ஆதித்தனோ நின்ற இடத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றான்.

“கட...கட...” என்ற கல் அரைபடும் சத்தத்துடன் அந்த பெரிய வெள்ளி மலை திறந்துக் கொண்டது.

உள்ளே செல்ல, சந்தன வாசம் நாசியை நிறைத்தது. ஒரு பெரிய பள்ளம், அதை தாண்டி பல வண்ண மலர்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. கூடவே சில ராட்சச கொடிகளும் அதை பிண்ணி பிணைந்து காட்சி தந்தது.

‘அந்த பள்ளத்தை தாண்டி தான் பூவை பறிக்க இயலும், அங்கிருக்கும் பூவில் எது மலைப் பூ என்று எப்படி கண்டுபிடிப்பது’ யோசனையாக பார்த்தான்.

‘உன் வீரத்தால் முடியாது, மதியால் வெல்வது’ என வைத்தியர் கூறியது மனதில் எழ அந்த பள்ளத்தையே பார்த்திருந்தான்.

‘எப்படி பள்ளத்தை தாண்டுவது’

“அரசே... தாங்கள் இங்கேயே நில்லுங்கள், நான் சென்று பறித்து வருகிறேன்”

“எப்படி செல்வாய் முத்தழகு”

“அது தான் மேலே தொங்குகிறதே கிளை அதை பிடித்து ஒரே பாய்ச்சலில் அங்கு குதிக்க வேண்டியது தான்?”

“அது மிகவும் கடினம் முத்தழகு, அங்கு செல்ல ஏதாவது வழி இருக்கும் யோசிப்போம்”

“ம்ம்ம்”

முத்தழகு கையை கெட்டியாக பிடித்த ஆதித்தன், காலை அந்த பள்ளத்தில் வைக்க, அடுத்த நொடி அங்கு ஒரு கல் உதயமாகி மறைந்தது.

“ஏய்...! முத்தழகு இங்கே பார்” ஆச்சரிய கூப்பாடுப் போட்டான் ஆதித்தன்.

“என்ன அரசே...!”

“நீ இந்த பள்ளத்தில் காலை வை”

“ஏன் அரசே?”

“வை கூறுகிறேன்”

முத்தழகு காலை வைக்க எதுவும் நடக்கவில்லை. யோசனையாக அவனைப் பார்த்தவன், தன் காலை வைக்க ஒரு நொடிக்குள் ஒரு கல் தோன்றி மறைந்தது.
ஆதித்தனை ஆச்சரியமாக பார்த்தான் முத்தழகு.

“முத்தழகு இங்கு மிகவும் கவனமாக நில், நான் வேகமாக அங்கு செல்கிறேன், நான் கீழே விழுவதுப் போல் இருந்தாலும், பதட்டபடாதே, பதட்டத்தில் என்னையும் அழைக்காதே. இந்தா இந்த வாளை கையில் பிடித்துக் கொள்”
அவனிடம் வாளை கொடுத்து, கடவுளை வணங்கி, எம்பி மேல் உள்ள கிளையைப் பிடித்தவன், பள்ளத்தில் கால் வைக்க, ஒரு கல் தோன்ற அது மறையும் முன்னே காலை வேகமாக எட்டி வைக்க, அடுத்த கல் உதயமாகியது. இவ்வாறு அடுத்தடுத்த கல் உருவாக அடுத்த பக்கத்தில் கால் வைக்க அங்கிருந்த கிளைகள் அவனை சூழ்ந்துக் கொண்டது.

தன் காலில் மறைத்து வைத்திருந்த கூர்கத்தியை எடுத்தவன் சர் சர்ரென அதை வீசி தள்ளி, அந்தரத்தில் தொங்கிய அங்கிருத்த பூவில் கைவைக்க அது மறைந்தது.
அங்கு கிட்டத்தட்ட பல பூக்கள் ஒரே போல இருக்க, நிஜ பூ எது என்று குழம்பிப் போனான் ஆதித்தன்.

அடுத்த பூவை பிடிக்க வர அது போக்கு காட்டி போனது, மீண்டும் அதை துரத்தி பிடிக்க குறுக்கு மறுக்காக ஓடியது.

இங்கிருந்த முத்தழகோ ‘அரசே அதை பிடியுங்கள்’ என மனதில் மட்டுமே கூறிக் கொண்டான்.

சில பல நேரம் ஒவ்வொரு பூவாக விரட்டிப் பிடித்து மிகவும் களைத்துப் போனான் ஆதித்தன்.

சில நொடிகள் முட்டில் கை வைத்து குனிந்து நின்றவன் முதுகை உரசி சென்றது அந்த பூ.

ஒரு விதமாக ஊசியால் கோலமிட்ட உணர்வை உணர்ந்தானவன். எழுந்து எல்லா பூக்களையும் பார்க்க, பூவின் அடிப்பகுதி கொஞ்சம் தட்டையாக இருந்தது,
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
'நான் எடுக்க வேண்டிய பூ, ஊசி முனையை கொண்டது’

கவனத்தை எங்கும் சிதறவிடாமல் பார்த்துக் கொண்டே வந்தான் ஆதித்தன்.
ஒரு இடத்தில் அந்த பூ தெரிய வேகமாக அதை கையில் பிடிக்க வர, சிறிது நகர்ந்த அந்த பூ தானாக அவன் கையில் அமர்ந்த நேரம், பெரும் சத்தத்துடன் அந்த வெள்ளி மலை வெடித்து சிதறி, அந்த பள்ளமும் நிரம்பியது.

முன்னால் அவன் கண்ணுக்கு தெரிந்த மாய தோற்றம் எல்லாம் மறைந்து, சாதாரண விளைநிலங்களாக காட்சி தந்தது. அந்த பூ இருக்கும் வரை தான் அது சொர்க்கம்.
அந்த நிலத்தை பார்வையிட்டவன், முத்தழகை அழைத்துக் கொண்டு, வேகமாக புரவியில் கிளம்பினான்.

இவன் வெற்றியுடன் வந்துக் கொண்டிருப்பது மக்களுக்கு தெரிய ஆராவார கூப்பாடுப் போட்டனர்.

பூவின் வாசம் எங்கும் நிறைந்தது. புரவியை விட்டு வேகமாக குதித்து அரண்மனையை நோக்கி ஓடினான்.

அந்த பூவை கையில் வாங்கிய ராஜ சித்தவைத்தியர், அந்த பூவை நந்தினி நாசி அருகே கொண்டு செல்ல, அவள் தானாக திறந்துக் கொண்டது.

அந்த பூவின் நடுவில் இருந்த மகரந்தத்தை வேகமாக பிடித்திழுக்க, கீழே இருந்த ஊசி வழியாக ஒரு சொட்டு தேன் போன்ற திரவம் அவள் இதழில் பட்டு தொண்டையில் இறங்கியது.

இன்னும் சில பச்சிலைகளை கையில் கசக்கியவர், அவளின் உள்ளம் கையில் வைத்து வேகமாக தேய்த்தார்.

இன்னும் சில இலைகளை ஆதித்தன் கையில் கொடுத்து அவள் பாதத்தில் தேய்க்க கூற, கையில் வாங்கி உள்ளங்கையில் வைத்து கசக்கி பாதத்தில் தேய்த்தான்.
மெது மெதுவாக கண்களை திறந்துப் பார்த்தாள் நந்தினி. ஒரு திங்களில் பரிபூரண குணமடைந்தாள் அவள். வெளுறிய அவள் தேகம் ரத்த நிறம் கொண்டு அழகுற மிளிர்ந்தாள்.

“அரசே தங்களை காண தேவியார் வருகிறார்”

அரண்மனையில் அழகிகள் படை சூழ, நீராடிக் கொண்டிருந்தான் ஆதித்த கரிகாலன்.

பால், ரோஜா இதழ் கலந்த நீரில் தலையை வெளியே நீட்டி படுத்திருந்தான் ஆதித்தன். அவனை சுற்றியிருந்த அழகிகள் அவன் மேல் ரோஜா இதழைப் போடுவதும், நீரை இறைத்து வாரி இறைப்பதுமாக இருந்தனர்.
கைகளை கொண்டு முகத்தை மறைப்பதும், அவர்கள் மேல் நீர் வீசுவதுமாக அந்த ஆணழகன், அழகிகளுடன் கழித்து குளித்துக் கொண்டிருந்தான்.

தேவி அவள் படைகளுடன் அறையில் நுழைய, அவளை வணங்கி வெளியில் சென்றனர்.

திரும்பி தன் பின்னால் வந்தவர்களை, ‘செல்லுங்கள்” என்னும் விதமாகப் பார்க்க, அவர்கள் வெளியில் நின்றனர்.

மெதுவாக அன்னநடையிட்டு, கைகளில் தவழ்ந்த சால்வையை பிடித்து கைகளில் சுற்றிக் கொண்டே வந்தாள் அவள்.

“என்ன தேவியாரே திடீர் விஜயம்”

“அரசன் பார்வை தேவியில் மேல் படவில்லை, அது தான் தங்களை காண வந்தேன்” நீராடிக் கொண்டிருந்த தொட்டி அருகில் வந்து நின்றாள் அவள்.

கழுத்தில் மஞ்சள் தாலி தவழ்ந்தாட அவனை பார்த்திருந்தவளையே கண் கொட்டாமல் பார்த்திருந்தான் ஆதித்தன்.

அவள் முகம் முழு பௌர்ணமியை அவனுக்கு நினைவுப்படுத்தியது. மெதுவாக எம்பி அவள் கையை பிடித்திழுக்க, எதிர் பாராமல் அவன் மேலையே பொத்தென விழுந்தாள் அவள்.

“அரசே என்ன விளையாட்டு இது”

“என் தேவியுடன் விளையாடாமல் வேறு யாருடன் விளையாட” கேட்டபடியே அங்கிருந்த நீரை கையில் அள்ளி அவள் மேல் தெளித்தானவன்.

தொட்டியில் இருந்த ரோஜா இதழை கையில் எடுத்து, அவள் முகத்திலிருந்து கோடிழுத்தவனின் கை அவளின் மார்பருகில் வர, அவன் கையை தடுத்தாளவள்.
அவளின் கையை அப்படியே பிடித்து அவளை கீழே சரித்து அவள் மேல் விழுந்தவன் அவளின் செவ்விதழை சிறை செய்தான்.

“அரசே என்ன இது, வெளியில் சேவகிகள் இருக்கிறார்கள்”

“முத்தம் தேவி” கூறியவன் அவளின் பட்டு கன்னத்தில் இதழைப் பதித்தான்.
அவனின் கறுத்த புஜத்தில் கைவைத்து தள்ளியவள் அவன் மேல் சரிய, அவளின் முழுதாக நனைந்த உடை அவளின் அழகை அவனுக்கு எடுத்துக் காட்ட, கிறங்கிப் போனான் அந்த அழகு தேவியின் தேவன்.

அவளில் கிறங்கி, உருகி, மருகி நீராடிக் கொண்டிருந்தனர் அந்த காதல் ஜோடிகள்... அவர்களின் காதலும், உருகலும் மேலும் தொடர நாம் அவர்களை தொந்தரவு செய்யாமல் வாழ்த்தி விடைபெறுவோம்.


...நன்றி...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top