• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews ஷாந்தினி தாஸின் மாடிவீட்டு தமிழரசி என் பார்வையில்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மாடி விட்டு தமிழரசி… என் பார்வையில்

ஹாய் மக்களே வணக்கம்,

நாவல் : மாடி வீட்டு தமிழரசி
ஆசிரியர் : எம். சி. ஷாந்தினி தாஸ்.

அருமையான கிராமத்து மணம் கமழும் எழுத்து நடையோடு இந்த நாவலைத் தந்த ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்…

இது நான் படிக்கும் மூன்றாவது நாவல் ஆசிரியருடையது… இந்த நாவலில் எழுத்து நடை அபாரம்… வசனங்கள் ஒவ்வொன்றும் நச்… இயற்கை வர்ணனைகள் அவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது நாவலில்.

இயல்பான கிராமத்து பேச்சு வழக்கு சொல்லாடல்கள் நாவலுக்கு பலம் சேர்க்கிறது… கதாப்பாத்திரத் தேர்வுகளும் மிகவும் அருமை…
ஆலமரத்தான், அழகு, அன்பு, அமுதன், தமிழ் என கதாபாத்திரங்களோடு ஒன்றிப் போகின்றன பெயர்கள்.

ஜாதி என்பது வேரறுக்கவே முடியாத, சமூதாயத்தில் வேரூன்றி கிளை பரப்பி விழுதுகள் ஊன்றி நிற்கும் ஆலமரத்தைப் போன்றது என்பதை ஆலமரத்தான் என்கிற கதாபாத்திரத்தின் வழி ஆணி அடித்தது போல புரிய வைக்கிறார்.
தங்கையோ மகளோ அவர்களது உயிர் ஜாதியை விடப் பெரிதில்லை. ஜாதியை மீறும் போது அவர்கள் உயிர் எடுக்கக்கூட தயங்காத மனிதர்களின் கொடூரத்தைத் தோலுரித்திருக்கிறார்.
அழகு… விசுவாசமான வேலைக்காரன். காதலா விசுவாசமா என்கையில் காதல் ஜெயிக்கப் பார்க்கிறது அவனை… அதைவிட பாசமா விசுவாசமா என்கையில் பாசம் ஜெயிக்கிறது அவனை….
தமிழ்… தமிழரசி… காதலுக்கு இனம் மொழி மதம் ஜாதி மட்டுமல்ல உருவ அழகு கூட தேவையில்லை என்பதை புரிய வைக்கும் கதாபாத்திரம். தன் வீட்டில் வேலை செய்யும் அழுக்குப் பையனின் கூட்டில், அவன் தங்கை மீது வைக்கும் பாசத்தில், தனக்கும் பங்கு கேட்கும் ஜீவன்…

அன்பு, அமுதன் கதாப்பாத்திரங்களின் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை…. தன் காதலுக்காக அன்பு வாதிடும் இடங்கள் வெகுவாக ரசித்த இடங்கள்.
மேலும் சில கதாபாத்திரங்கள் உள்ளன. அவை கதையின் போக்குக்கு உதவியாய் இருக்கின்றன.
பழைய மனிதர்களிடம் ஊறிப் போன ஜாதியை அழிக்க முடியாது… இளம் சமுதாயம் நினைத்தால் மட்டுமே அதை ஒழிக்க முடியும் என்பதை தெளிவாக வலியுறுத்தியுள்ளார்…

மொத்தத்தில் மிகவும் அருமையான நாவல்… படித்துப் பாருங்கள் தோழமைகளே…
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ரொம்ப ரொம்ப நன்றி செல்வாக்கா???? அழகா கதை மாந்தர்கள் பத்தியும் கதையும் லைனையும் சொல்லிட்டீங்க சூப்பர் சூப்பர்???
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
அருமையான விமர்சனம் செல்வாக்கா??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top