• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews ஷாந்தினி தாஸின் - மாடி வீட்டு தமிழரசியுடன் நான்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் ப்ரெண்ட்ஸ்

நம் உலகம் எவ்வளவுதான் விஞ்ஞான வளர்ச்சியை எட்டினாலும் அடிப்படையில் நம்ம சமூகத்தில் சில விசயங்கள் மாறவில்லை அதில் ஒன்றே சாதி அடிப்படையில் ஏற்றதாழ்வு... இருவேறு சாதியினரிடையே காதல் வந்தாலும் அடிப்படையில் மாற்றம் வருமா? வந்தாலும் ஏற்றுக் கொள்ளுமா? கதைகளம் பல வருடங்களுக்கு முந்தையதாக பின்னப்பட்டாலும் இக்காலத்துடனும் பொருந்திய ஒரு கதைகளமே!

ஆலமரத்தான் - கதையின் ஆணி வேர் உயர்ந்த சாதி வீட்டு பெரியமனிதனாம்... ஆனால் இவனது குணமோ... சிறுமை சேர்ப்பதாய்... சாதியை பெற்றதாய் நினைக்கும் மனித மிருகம்... இதன் பசிக்கு பெற்ற பிள்ளை கூட விதிவிலக்கல்லவோ?

அழகு - பாசமான அண்ணன்... அன்பை மட்டுமே கொடுக்கத்தெரிந்த விசுவாசமான படித்தாண்டா வேலைகாரன்... ஆனால் காதல் வந்தால்... அந்த இமயமலையே தடை இல்லை என்னும்போது வீட்டுபடியெல்லாம் தடையாகுமா? அதுவும் தான் நேசிப்பதை விட தன்னை நேசிப்பவளின் காதலையடைய... துணிச்சல் வரும் தானே... ஆனால் அவனும் விட்டான் தனது காதலை வென்றது தங்கை மீதான பாசம்... அவனது காதல் காப்பாற்றப்பட்டதா?

தமிழரசி - பெற்றவர்களின் கூட்டுக்குள் வளரும் அரண்மனை சிட்டு, பருவ வயதில் காதல், அப்பாவின் ஜாதி வெறி பெண்ணவள்க்கு புரியா பாடமே... தந்தையின் தன்மீதான பாசம் அதை உடைக்கும் என நம்பி ஏமாந்தவள்.. இருவேறு பாச போராட்டத்தில் ஒன்றை மட்டுமே கைபற்ற முடியும் எனும்போது சாதியை துறந்து காதலை கைப்பற்றியவளின் நிலை?

அன்பு - பாசமான அண்ணனின் கூட்டில் வளர்ந்து உலகறியா கூண்டு கிளி... குழந்தையாய் திறிந்தவள் குமரியாய் மாறினாள் அவளனவனின் காதலில்... சாதிபாகுபாட்டால் தன்னை சுற்றி பின்னபட்ட சூழச்சியை தகர்ந்தெரிந்து வெற்றி கண்டவளா?

அமுதன் - சாதி பாகுபாட்டால் காதலியை இழந்த பாண்டியனின் வளர்ப்பு மகன், அதே சூழ்நிலை தனக்கும் வர தடைகளை தகர்த்து கைப்பிடத்தானா?

சிலுக்கு - சிந்தாமணி - முக்கிய கதாபாத்திரம்... கதையின் திருப்பு முனை புத்திபேதலித்தவளாம்.. எதனால்? ஆனால் அவளது நடவடிக்கை... தனது நிலைக்கு காரணமானவனை எதிர்க்கும் துணிச்சல்.. என்ன செய்தாள் அவள்?

இந்த கேள்விக்கெல்லாம் விடையாய்...

ஷாந்தினிதாஸின் - மாடி வீட்டு தமிழரசி

கதையின் உயிரோட்டமே கதைகாக என்று மாற்றாமல் உள்ளது உள்ளபடி கூறிய ஆசிரியரின் எதார்த்தம் மாறா கதைகளம் கதையை இன்னும் மெரூக்கூட்டியது...

கிராமித்து மொழி நடை, காட்சி சித்திகரிப்பு, கை பிடித்தாலே குழந்தை வந்திடும் என்று அன்பு பயந்த காட்சிலாம் அந்த அறியா சூழ்நிலையை கண் முன்னே அழகாக விரிக்கிறது எழுத்து நடை...

கதையின் ஆரம்பத்தில் வரும் அரண்மனை வீட்டின் வருணனையை விட, மனைவியான காதலிக்காக அவன் கட்டும் மாடி வீடு கதை தலைப்பின் வெகு பொருத்தமாய்...

வாழ்த்துக்கள் ஆசிரியர் ஷாந்தினி தாஸ் ?????
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
யப்பா எப்படியோ வந்துட்டேன் சைட்டுக்குள்ள? ரொம்ப ரொம்ப நன்றி ஜெயா?? அழகா கதைமாந்தர்களை பத்தி சொல்லிட்ட... கதையை சொல்லாம நீட்டா ரிவியூ??? ரொம்ப நன்றிகள்???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top