• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஷாஹி பனீர் Shahi Paneer

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
தேவையான பொருட்கள் :

பனீர் - 200gms
பெரிய வெங்காயம் - இரண்டு
தக்காளி - 6
பட்டை - இரண்டு
ஷா ஜீரா(Shah Jeera) - ஒரு ஸ்பூன்
அன்னாசிப்பூ - இரண்டு
ஏலக்காய் - ஒன்று
கிராம்பு - இரண்டு
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
Khoya சர்க்கரை இல்லாதது - 50 கிராம்
Fresh cream - இரண்டு டேபிள் ஸ்பூன்
முந்திரி - இரண்டு டேபிள் ஸ்பூன்
பாதாம் - பத்து முதல் பதினைந்து
பூண்டு - பத்து பல்
இஞ்சி - இரண்டு துண்டு
வெண்ணெய் - நான்கு ஸ்பூன்
மராட்டி மொக்கு - இரண்டு
கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிதளவு


செய்முறை :

வெங்காயம் மற்றும் தக்காளி இவற்றை ஒன்றிரண்டாக வெட்டி வைக்கவும்...

அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலி வைத்து நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, முந்திரி, பாதாம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, மராட்டி மொக்கு, ஷா ஜீரா, இஞ்சி, பூண்டு, வெண்ணெய் - ஒரு ஸ்பூன் இவற்றை போட்டு இரண்டு நிமிடத்திற்கு வதக்கிவிட்டு ஒரு அரை டம்ளர் தண்ணீர் (தக்காளியில் தண்ணீர் இருக்கும்) சேர்த்து மிதமான தீயில் பத்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்....

பத்து நிமிடம் கழித்து பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசிபூ மராட்டி மொக்கு இவற்றை மட்டும் வெளியில் எடுத்துவிட்டு மற்றவற்றை தண்ணீர் இல்லாமல் எடுத்து ஆற வைக்கவும்... இந்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்..

நன்கு ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்....

பனீரை சிறிதாக நறுக்கி எடுத்து வைக்கவும்...

ஒரு வாணலி வைத்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெண்ணெய் மூன்று ஸ்பூன் சேர்த்து கரைந்ததும் அதில் மல்லித்தூள், மிளகாய்தூள், கரம் மசாலா தூள், கொத்தமல்லிதழை சேர்த்து நன்கு கலந்துவிட்டு, நறுக்கி வைத்துள்ள பனீர் சேர்த்து நன்றாக இரண்டு நிமிடம் வதக்கவும் ........

பிறகு இதில் Khoya சேர்த்து கிளறவும்...

கிளறிய பிறகு அரைத்து வைத்த விழுது சேர்த்து, நான் வேக வைத்து எடுத்து வைத்த தண்ணீரையும் சேர்த்து இதனுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடம் கொதிக்க விடவும்....

ஏழு நிமிடத்திற்கு பிறகு இதனுடன் Fresh Cream சேர்த்து ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்....

சுவையான Shahi Paneer தயார்.....

20211014_210738_50.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Fresh cream na ice cream aaa🙄🙄🙄



(Paneer a theriyum next street la than irukanga aana intha Shahi Yarnu than theriyala🤷‍♂️🤷‍♂️🤷‍♂️)
amam oru bucket ice cream vangi vachu neeye nee mattum ukkanthu thinnu 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️ 🤦‍♀️


amam panner anga irukan la avane than.. shahi athukkum pakkathu veetula irukkira, un chinna thangachi
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top