• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஷ் இது வேடந்தாங்கல் 17 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala sundar

நாட்டாமை
Joined
Feb 12, 2019
Messages
26
Reaction score
73
Location
Sivakasi
அங்கே ஒருவர் ஆவேசமாக டிராஃபிக் போலிசிடம் பேசினார் “சார் ரோடே சின்ன ரோடு அதிலே ஒரு ஓரமாய் குப்பைத் தொட்டியிருக்கு. பஸ்போகின்ற பாதையில் டூவீளர் காரன் குப்பைத்தொட்டி மேல் பறந்தா போக முடியும்? கார்ப்ரேஷன் ஆளங்களை எல்லாம் லாட்ஜில் ரூம் போட்டு தூங்கச் சொல்லுங்க.
பணத்தைக் கண்டதும் பொணம்மாதிரி வாயைத் திறக்கும் ஆளுங்க. எவன்டா இங்க இன்ஸ்பக்டர்? கூப்பிடு அவனை. நாங்க யாரும் இடத்தைவிட்டு நகரமாட்டோம். பஸ்ஸைத் தாண்டும் போது குப்பைத தொட்டியிருந்ததால் ஓரம் கட்ட முடியாமல் இறந்த அந்த புள்ளைக்கு இருபத்தினாங்கு வயசுதான் ஆகுது. தருவானா கார்ப்ரேன்காரன் போன உசுரை? தண்டச்சோறுங்க! டார்கட் வச்சிருப்பானாம். நாங்க மிடில்கிளாஸ் வியாபாரத்தில் இவ்வளவு சரக்கு விக்கணும் என்று சேல்ஸ் டார்கட் வச்சிருப்பதுபோல் அவனும் இந்த வருத்தில் மேல் அதிகாரிக்கு இரண்டு சி கொடுக்கணும் அவனுக்கு ஐம்பது லட்சம் கிம்பளப் பணம் ஒதுக்கணும் என்று டார்கட் வச்சிருப்பானாம்!

பேசிக்கொண்டே இருந்தவர் கூட்டத்தில் அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவரது மனைவி நகரவும் அவர் மனைவியைப் பார்த்து கத்தினார்
“ஏய் உட்காருடி இங்க! நகரக்கூடாது. ஒண்ணும் ஆகப்போறதில்ல. ஆனா செத்துப்போனவன் மேல இருந்து பார்ப்பான்! நாம நாலுபேர் தட்டிக்கேட்டா அவன் ஆத்மா கொதிக்காமல் சாந்தி அடையும. நம்ம புள்ளகுட்டி கண்ணால் மழையைப் பார்க்கணும்ன்னா எல்லாரும் உட்காருங்க! ”

ராஜன் தனது கைபேசியில் பத்து ஃபோன் செய்தான். டி.ஐ.ஜி யும் அவருடன் இரண்டு உயர் அதிகாரிகளும் வந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைத்து கூட்டத்தை சமாதானம் செய்தனர்.

இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையும் இரண்டு லட்சம் நிவாரணத்தொகையும் வழங்கப்படும் என்று டி.ஐ.ஜி உறுதி தந்தார். மேலும் அந்த சாலையில் இனி பேருந்து இயக்கப்படாது என்றும் உறுதி படக்கூறினார்.

ராஜன் சில காவலர்களிடம் அந்த சாலையில் கன ரக வாகனங்கள் போக முடியாதபடி தரையிலிருந்து ஆறடிக்கு மேல் ஒரு இரும்பு கம்பிகொண்டு தடுப்பு போடுவதற்கான ஏற்பாடுகளை செய்தான். ஏதோ யோசனையில் பேன்ட் பாக்கெட்டிற்குள் கைகளை விட்டபோது பைக்சாவி தட்டுப்பட்ட போதுதான் ஸ்ரீயின் ஞாபகம் வந்து அவளைத் தேடினான்.

அவள் இடதுபுறமும் இல்லை வலதுபுறமும் இல்லை. மற்ற இரண்டு திசையில் கண்களை திருப்பியபோது ரோட்டோரமாய் கிடந்த ஒரு கல்மேல் உட்கார்ந்து தலையை குனிந்திருந்தாள் ஸ்ரீ.

அவள் அருகே சென்று அவன் நின்றபோது அவளும் நிமர்ந்தாள். அவள் நாடியில் அரைத்த விழுதுபோல் தோசையும் கன்னங்களில் கண்ணீரும் முகத்தில் விழிந்து அவள் நிலையைச் சொல்ல ராஜன் அவளை எழுப்பி நிற்க வைத்தான். இரும்பு கைகள் என்று ஏன் சொல்லுகிறார்கள்? அப்படிச் சொன்னவனை ராஜனைப் போன்றவன் தொட்டு பேசியிருப்பான். மனித உடலை
போர்த்திய ஊண் இவன் உடலை போர்த்தும்போது உறைந்துவிட்டதோ? இல்லை இந்தப் பாதகன்தான் உறைய வைத்திருப்பான். அவன் தொடுபவரை பயமுறுத்தவே ஊணை உறைய வைத்திருப்பான். அவனது முரட்டு பிடி அவளை பேச உந்தவில்லை. ஆனால் இவ்வாறு சிந்திக்க வைத்தது.

“இங்கிருக்கும் பிரச்சனையில் எங்கும் வாயை கொப்புளிக்க தண்ணீர் கிடைக்காது. வா உன் துப்பட்டாவில் முகத்தை துடை. துப்பட்டாவை சுருட்டி கையில் வச்சிக்கோ. அதை வீட்டுக்கு போனபிறகு அலசிக்கலாம். வா. வாந்தி வாடை மூக்கில் படாமல் அதனை வச்சிக்கோ. அப்புறம் திரும்ப வாந்தி வரும். ” என்று கூறியவன் அவளை தனது பைக்கில் ஏற்றிச் சென்றான்.

துப்பட்டாவை பாத்ரூமில் போட்டவள் முகத்தை கழுவிக்கொண்டு வந்தபோது ராஜன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். எவ்வளவு கொடூரமான ஆக்சிடன்ட்? எறும்பைப்போல் மனிதன் மனிதன் உருவாக்கிய சாதனத்தாலேயே நசுக்கப்பட்டு உயிரை விடுகிறான். அதை பார்த்தபிறகு எப்படி கல்லாட்டம் இருக்கான் பாரு! காக்கிச் சட்டையை அயர்ன் பண்ணுவதுபோல் போலிஸ்காரன் இதயத்தையும் அயர்ன் பண்ணிட்டுதான் தினம் டியுட்டிக்கு போவான் போல என்று அதைப்பற்றி நினைத்தவளுக்கு வாந்தியின்வாடை மீண்டும் வந்து குமட்டியது. மேலும் ஏதோ ஒரு புளித்த வாசனை வாயில் அடிக்கவும் அடுக்களைக்குள் சென்று தண்ணீர் குடிக்கச் சென்றாள். அடுக்களைக்குள் செல்லும்முன் ராஜன் நிழல் அறை வாசலில் ஆடியது. திரும்பி அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்வையை அவனிடம் ஓட்டினாள். ராஜன் தனது கைக்கடிகாரத்தின் செல் பட்டனை ஆன் செய்து ஆஃப் செய்து கொண்டிருந்தான். பத்து முறை அதையே செய்தவன் ஒருநிமிடம் ஆனபிறகும் அதையே செய்தான். பட்டனின் கிளிக் செயலை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தால் என்ன விவரிக்கும்?

அவனுக்கு எரிச்சலா? கோபமா? இதில் எது அவன் மனநிலை என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் இரண்டில் ஏதோ ஒன்றுதான் அவனை பிடித்துக் கொண்டிருந்தது என்பதை ஸ்ரீ உணர்ந்தாள். அழுகைதான் துக்கத்தின் வருத்தத்தின் வெளிப்பாடு என்பதை அவள் அன்று சந்தேகித்தாள். கோபத்தால்கூட துக்கத்தை அனுசரிக்க முடியுமோ?அழுக முடிந்தவன் அழுதுவிடுகிறான். மற்றவன்?

ஸ்ரீயைப் பார்த்ததும் ராஜன் அவளிடம் “ஸ்ரீ மேஜையில் பால் பாக்கெட் இருக்கு. காபி போடு என்றான். ”

அவனிடம் இருந்து தப்பி ஓட நினைத்ததை கேட்காதவரை அவளுக்கும் நிம்மதிதான். அவன் பேன்ட் சட்டை வாலட் ஆகியவற்றை கடத்தியதை கேட்டுவிட்டால் இஞ்சி திண்ண குரங்கின் கதைதான். இல்லை ரிஷியின் சடாமுடியைப் பிடித்து இழுத்து எழுப்பிய மோகினியின் கதை தான். என்ன ராஜன் சாபமெல்லாம் தரமாட்டான். குத்து மதிப்பாக பத்து நாள் ரிமான்ட் வாங்குவான் என்பது அவள் வ்யூகம்.

அதனால் அவன் ஏவிய வேலையை தட்டாமல் செய்தாள். குமட்டல் புரட்டல் எல்லாம் வயிற்றின் ஓரமாய் ஒளிந்து கொண்டது. (போலிஸ்காரனை பார்த்து அதுவும் பயந்துவிட்டது போலும்)
காபியைப் போட்டவள் அதன் ருசியை இரண்டு முறை சரி பார்த்தாள். ராஜன் சோர்வாக தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

ஸ்ரீயின் கால்களுக்கு அவன் அருகே செல்லக்கூட துணிவு வரவில்லை. முழு தைரியத்தையும் திரட்டிக்கொண்டு அவன் அருகே சென்று காபி டம்ளரை வைத்தாள். வைப்பதற்கு முன் மனதில் பல கேள்விகள்.

காபி நல்ல சூடாக இருந்ததா? இருந்தது என்றது அவள் கைகள்!

காபியில் இனிப்பு எப்படி இருந்தது? மிகவும் திட்டமாக! என்றது அவள் நாவு.

காபியின் கசப்பு லேசாக தெரிந்ததா? ஆம் கசப்பு தேவையான அளவு தெரிந்தது.

காபியின் நிறம்? அது விளம்பரத்தில் காட்டுவான்ல? அது போலத்தான் இருந்தது என்றது அவள் கண்கள்.

சோர்வாக இருந்தவன் மெல்ல இமைகளைத் திறந்து அவள் காபியை டேபிளில் வைத்தபோது பார்த்தான். அதன்பிறகு
அவளை பார்க்கவில்லை. அவன் அயர்ச்சி அவனை கவனிக்க விடவில்லை. இரண்டு மணிநேரமாக ஆக்சிடன்ட் நடந்த இடத்தில் நின்றுகொண்டே இருந்தானே? அதனால்தானோ? என்று ஸ்ரீ நினைத்தபோது. அவன் காபியை எடுத்துக் குடித்தான். குடித்துக்கொண்டிருந்த போதே கண்களை மூடித் திறந்தான். பத்து நிமிடத்திற்குப் பிறகு ஸ்ரீ அவனைத் தாண்டி பாத்ரூம் போகப் போனபோது அவளை அழைத்தான் “ஸ்ரீ இங்க வா. ”

இப்போதுதானே அவ்வளவு சோம்பலாக இருந்தான்? கொஞ்சம் தெளிவாக பேசுறானே. எப்படி?
“ஸ்ரீ உன்னிடம் பேசணும். ”

அட பத்து நிமிஷத்திற்கு முன்பு தலையில் கை வைத்திருந்தானே? இப்ப கைகளை சோபாவின் கைகளில் அழுத்தமாக வைத்திருக்கிறானே! எப்படி?

“ஸ்ரீ இப்பதான் காபி குடித்தபிறகு தலைவலி விட்டிருக்கு. நீ ஆடி அசைந்து வருவதற்குள் திரும்ப வந்திடும் போல. வா இங்க. நான் கேட்பதுக்கு பதில் சொல். உண்மையாக பதில் சொல். அங்கயே நின்னுகிட்ட இருந்தா என்ன அர்த்தம்? என் கையில் மைக் இல்லை. பக்கத்தில் வா! ”

‘ச்ச! காபியை கேவலமாக போட்டிருக்கணும். இல்லை படு கேவலமாக போட்டிருக்கணும். கஷாயமாக இருந்திருக்கணும் அவனுக்குத் தந்த காபி. அப்பதான் இவன் தலையில் வைத்திருந்த கையை எடுத்திருக்கவே மாட்டான்.’ என்று மனதில் விவாதித்தவள் அவன் சொன்ன இடத்தில் வந்தமர்ந்தாள்.

அவள் முகத்திற்கு நேரே தனது உடலைத் திருப்பி அவள் கண்களைப்பார்த்து அவளுடைய கண்களின் முழு ஈர்ப்பையும் பெற்றவன் அவளிடம் “ஸ்ரீ உன்னிடம் இரண்டு கேள்வி கேட்பேன். எனக்கு சரியான பதில் வரணும். என்ன? ”

“ம். கேளு ராஜன். ”

“கௌன்சிலர் பணம் என்னாச்சு? ”

“பணம் பவித்ராகிட்டதான் இருந்திச்சு. ஆனால் அவள் என்னிடம் பணத்தை தரல்ல. ப்ராமிஸ். ”

“சரி. ஏன் இங்கிருந்து போக நினைச்ச? ”

“நாங்க வெறும் ஃப்ரண்ட்ஸ் மட்டும் கிடையாது. ஒரே குடும்பம். அக்கா தங்கச்சி மாதிரி. ஐந்து வயசுலயிருந்து ஒன்னா இருந்திருக்கோம். மோகனா அக்காவுக்கு நான் மக மாதிரிதான். தனுவும் மோகனா அக்காவும் சென்னையில் இருக்காங்க. அவுங்களுக்கு நான் இல்லாம எப்படி சாமாளிக்க முடியும்? நான் போனாதான் மோகனா அக்கா அவுங்க பையனை ஸ{கூளில் சேர்க்க முடியும். என்னிடம் தான் நாங்க வீட்டு சாமான்களைவிற்ற பணம் இருக்கு. அந்தப் பணத்தைக் கொண்டு ஏதாவது தொழில் வைக்கணும். அப்புறம் இங்க சும்மாவே உட்கார்ந்திருப்பது வெறுப்பா இருக்கு. அவுங்க நான் ஏன் இன்னும் வரவில்லை என்று தேட மாட்டாங்களா? இன்னைக்குதான் அவுங்ககூட ஃபோனில் பேசினேன். என்னோட குடும்பம் அவுங்க. மிக்சி கிரைன்டர் லாப்டாப் செல்ஃபோன் என்று எல்லாத்தையும் விற்ற பணத்தை ஒழுங்கா செலவு செய்யணும்தானே? ”

“மிக்சி கிரைண்டர் சரி. கட்டிலும் வித்தாச்சா? ”

கொழுப்பெடுத்த நாவுக்காரன். இவனுக்கு உடம்பில் உள்ள கொழுப்பு முழுதும் நாவில்தான் என்பதை ஐயம் திரிபர உணர்ந்து சொன்னாள் “தனு மோகனா பற்றி தெரியாது. என் கட்டிலை வித்தாச்சு! சந்தேகமா? நான் இந்த பத்து நாளும் இங்கிருந்து தப்ப வேற முயற்சி செய்துப்பார்க்காதபோதே நீ இதைப் புரிஞ்சிருக்கணும் ராஜன். ”


அவள் சொன்னதை முழுவதும் உள்வாங்கியவன் அவளிடம் கேட்டான் “ஆமாம் என்னை ராஜன் என்று பேர் சொல்லிக் கூப்பிடுறியே.. என் கையால் இரண்டு அப்பு அப்பணுமா? ”
“நீ குட்ஷெப்பர்ட் ஸ்கூல்தானே? ”
“ஆமா. ”
“நானும் குட்ஷெப்பர்ட் ஸ்கூல்தான். நீ நிர்மல் ரக்~க் செட்தானே? உன் ஸ்கூல் ஃபோட்டோவில் பார்த்தேன். அவுங்க எல்லோரும் என்னை விட இரண்டு வருஷம் ஜுனியர். நாங்க எல்லோரும் ஆனுவல் எக்ஸாமில் ஃபெயில் ஆகி திரும்ப பரீட்ச்சை எழுதினோம். அதனால் அவுங்களை நல்லாவே தெரியும் எனக்கு. ”

பிறந்தது ஜனவரி 23’ 1992 வருஷம் தானே? உன் சர்டிபிகேட்டை ஃபைல் போட்டு வச்சிருக்கியே அதில் பார்த்தேன். ”

“அதனால்? ”

“அதனால்தான்! கட்டிலைப்பற்றி மட்டும் இல்லை எனக்கு கொஞ்சம் கணக்கும் தெரியும். என்னோட பிறந்தநாள் தேதி நாளை சொல்றேன். இரண்டையும் கழித்துப் பார். நான் உன்னைவிட எத்தனை நாள் எத்தனை மாதங்கள் எத்தனை நிமிடங்கள் நான் உன்னைவிட மூத்தவ என்று உனக்கும் தெரியும். நான் குளிக்கப் போறேன். ” என்று சொன்னவள் விறு விறுவென்று குளியலறைக்குள் சென்று வேலையை முடித்துக்கொண்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

நம்மைவிட மூத்தவளா? எப்படி? பார்த்தா அப்படித் தெரியலையே! முகத்தில் உடம்பில் எதுவுமே கண்டுபிடிக்க முடியலையே! பொய் சொல்றாளோ? ச்ச இருக்காது. நான் அவள் கேஸை பார்க்கும்போது பொய்யெல்லாம் சொல்ல மாட்டா. கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? நமக்கே இருபத்தொண்பது முடியப்போகுது. அப்படினா அவளுக்கு முப்பது இருக்குமா? இருக்கும்! என்ற முடிவுக்கு வந்தவனாய் இரவு சாப்பாட்டிற்கு இட்லி வாங்கிவர ஆள் அனுப்பினான்.

ஒரு பார்சலை ஸ்ரீக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பாட்டு வேலையை முடித்தவன். அவள் கைகழுவ வந்தபோது “என்னை விட எத்தனை நாள் நீ மூத்தவ? ”

“அது இப்ப ரொம்ப முக்கியமா? உனக்கு வேற வேலை இல்லையா? கவர்மென்ட்ல்ல வி.ஆர்.எஸ் கொடுத்துட்டாங்களா? இன்னைக்கு முழுதும் வீட்டிலிலேயே இருக்கியே அதான் கேட்டேன். நான் நாளைக்கு காலையில் சென்னைக்கு போகணும். அனுப்புவியா மாட்டியா? ”
ராஜன் பதிலே பேசவில்லை.

“நான் உன்கிட்டதான் பேசிக்கிட்டுயிருந்தேன். ”

ராஜன் தனது யூனிபார்மை அவிழ்த்து ஷார்ட்]_குள் புகுந்தான். தனது செல்ஃபோனை சார்ஜில் போட்டான். ஸ்ரீ என்னும் உயிர்தினைப்பொருள் அங்கிருப்பதை அவன் நினைவில் இருந்து அகற்றினான். உன்னிடம்தான் பேசிக்கிட்டுயிருக்கேன் என்று அவள் சொன்னபோது மும்முரமாய் குனிந்து தனது காலில் இருந்த ப்ரௌன் சாக்ஸை கழற்றினான். ஷ_வைக் கழற்ற எத்தனித்தபோது.. ஸ்ரீ அவனிடம்
“நான் பேசுறது உனக்கு கேலியாக இருக்கா? என்னால் இங்க இருக்க முடியாது. நான் போறேன். ”

ஷ_வை பொறுமையாக கழற்றியவன் தனது அறைக்குச் செல்லும் வரை எதுவும் பேசவில்லை அறை வாலில் நின்றுகொண்டு “எவ்வளவு முயன்றாலும் ஏதோ ஒன்றின் வாலை நிமிர்த்தமுடியாதாமே. அது ஏன் என்று எனக்கு உன் மூலமாக புரியுது. இனி பவித்ராவுக்காகயெல்லாம் பார்த்திட்டுயிருக்க மாட்டேன். அடுத்து என்னை ராஜன் என்று பெயர் சொல்லிக்கூப்பிட்டால் பல்லைத் தட்டி கையில் கொடுத்திடுவேன். இரண்டு வார்த்தைக்கு மேல் பேசின.. கௌன்சிலர் ஆளுங்க என்ன.. எவன் வந்து வாடின்னு இழுத்திட்டு போனாலும் அமைதியாக நின்னு வேடிக்கை பார்ப்பேன். இங்கிருந்து அடுத்த தெருவுக்கு நீ போகும்முன் நாலு மஃப்டி போலிஸ் இருப்பாங்க. அதனால் திரும்ப ஓட நினைக்காதே. பத்து நாளில் உன்னை அனுப்பிடுறேன். இல்லை எவனிடமாவது மாட்டிக்கிட்டு பவித்ரா மாதிரி ஓடுற வண்டியிலிருந்து குதிக்கணும்ன்னா எனக்கு ஒன்றுமில்லை. உன் வசதி என்ன என்று நீயே யோசிச்சுக்கோ. ”
சரவெடியாய் அவன் வெடித்தான் ஆனால் பற்றிக் கொள்ளாத புஸ்வானமாய் அவள் நின்றுபோனாள். ஸ்ரீயின் கோபத்தை இது பல மடங்கு அதிகரித்தாலும் வாதத்தில் முடங்கியவனைப் போல் அவளும் தனது அறையில் முடங்கிப் போனாள்.

இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட நம் தேசியத்தந்தை யார் என்று அவளிடம் கேட்டால் “தப்பா நினைச்சுக்காதீங்க அவரிடம் இப்ப நான் விடுதலையடைய ஏதாவது ப்ளான் யு இருக்கான்னு கேளுங்க.. ப்ளான் யு இல்லைன்னா ப்ளான் டீ தரச்சொல்லுங்க. ப்ளான் டீ இல்லைன்னா ப்ளான் ஊ தரச்சொல்லுங்க. அதுவும் இல்லைன்னா ப்ளான் ணு ஆவது தரச்சொல்லுங்க.” என்று கெஞ்சிக்கேட்கும் நிலையில் ஸ்ரீ இருந்தாள்.

விடிய விடிய ஸ்ரீ தூங்கவில்லை. யாரும் தன்னைத் தேடிவந்து எந்த ப்ளானும் தரப்போவதில்லை என்று புரிந்துகொண்டு நாளை என்ன செய்ய வேண்டும் என்று அவளே ஒரு ப்ளான் உருவாக்கியபிறகுதான் நிம்மதியாக கண் மூடினாள். இரண்டு மணிக்கு மூடிய கண்கள் ஐந்து மணிக்கு தானாக திறந்தது. ராஜன் கதவைத் திறந்துகொண்டிருந்தபோது ஸ்ரீ அவனிடம் “ஏட்டையா வீட்டிற்குப் போகணும் ” என்றாள்.

“எதுக்கு? ”

“ஸ்நேகாகூட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருப்பேன். ”

“அவளை இங்க வரச் சொல்றேன்.” என்று பதில் சொன்னவனும் தனது கைகளில் ரிஸ்ட்பேன்ட் அணிந்து கொண்டே வாசல் தாண்டிச் சென்றான்.

தன் திட்டப்படி எல்லாம் நடக்கவும் ஸ்ரீ வேறு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள். அவன் சொன்னபடி ஸ்நேகா காலை ஒன்பது மணிக்கே வந்துவிட்டாள். ஸ்நேகா வந்ததிலிருந்து அவள் மாமாவின் பிள்ளையைப் பற்றி ஒரு விக்கிபிடியா வாசித்தாள்.

அவனை ஸ்ரீக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவள் மாமா பையன் ஸ்ரீயிடம் வழிந்ததுமட்டுமின்றி தனது கம்பெனியின் பெறுமையடித்தான். “அவ்வளவு பெரிய கம்பெனியா? நான் பார்த்ததேயில்லை.” என்று சொன்னவளிடம் “என் கம்பெனி கேபிலேயே சுத்திக் காண்பிக்கிறேன்.” என்றான். ஸ்ரீ “தாங்க்ஸ் ” என்று அவன் கைகளைப் பற்றி சொன்னபோது அவன் விஷமமாய் விரல்களை வருடினான். ஸ்ரீ சட்டென்று கைகளை உறுவிக்கொண்டு கஷ்டப்பட்டு ஒரு சிரிப்பு சிரித்து வைத்தாள்.
ஒருநாள் ஸ்நேகாவின் பிதற்றலைக் கேட்டுக் கொண்டே மசூத் எண்ணிற்கு ‘ஸ்ரீ’ என்று மெசேஜ் செய்தாள்.
அவள் நினைத்தபடி பத்து நிமிடத்தில் பதில் மெசேஜ் வந்தது. மசூத்திடம் தனக்கு கொரியரில் ஐயாயிரம் பணம் அனுப்பச் சொன்னாள். மசூத் ‘ஏன்’ என்று கேட்ட மெசேஜுக்கு பதில் மெசேஜ் இல்லை. மசூத் ‘சரி ’ என்ற மெசேஜுக்கு ‘நன்றி’ என்ற மெசேஜ் அனுப்பினாள்.

மறுநாள் பகல் ஒரு மணிக்கு அவளுக்கு ஒரு கொரியரில் ஒரு புத்தகமும் அதில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐயாயிரமும் தூக்க மாத்திரைகள் அடங்கிய ஒரு பாட்டிலும் வந்தது. கொரியர்காரன் வந்து போனது யாருக்கும் சந்தேகம் தரவில்லை. அது ராஜன் பெயருக்கு வந்திருந்ததால் ஸ்நோகாகூட சந்தேகிக்கவில்லை.
ஏட்டையாவின் மனைவியே கொரியரை கையெழுத்திட்டு வாங்கி ஸ்ரீயிடம் கொடுத்தார். அவரிடம் ஸ்நோவை மறுநாள் விட்டுவரும் சாக்கில் ஏட்டையா மனைவியிடம் தாமாக பேச்சை ஆரம்பித்தாள்.
“அந்த கொரியரை ராஜன் சார் பிரித்ததும்தான் நான் உங்களுக்கு குழம்பு கொண்டுவந்தேன் ஆன்டி. மதியம் வாங்கிய சாப்பிட்டில் குழம்பு மிஞ்சிடுச்சு. அவர் பிரிக்கின்ற அவசரத்தில் இருந்தாரா அதனால் அவரிடம் சொல்லாமல் வந்துவிட்டேன். காபியெல்லாம் வேண்டாம். சாரி ஆன்டி. நான் சீக்கிரம் போகணும். பிறகு வந்து காபி சாப்பிடுறேன். ஸ்நேகா நாளை வந்திடு. சரியா? நாம சி.டியில் படம் பார்ப்போம். ராஜன் சார் நிறைய சி.டி வைத்திருந்தார்..” என்று ஒருவாறு சாமாளித்துவிட்டு வந்தவள் தனது திட்டத்தின் வரைபடத்தை தாமே வரைந்தாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top