ஸ்ட்ராபெரி முத்தங்கள் 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,453
Reaction score
11,152
Points
113
Age
29
Location
Thovalai
ஸ்ட்ராபெரி முத்தங்கள் 10

Copy of LOVE BOOK COVER TEMPLATE - Made with PosterMyWall.jpg
இதுவரை ....

ஸீ இரண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் அவ்வளவு லவ் பண்றங்க .... இன்னும் அவங்க அந்த சந்தோஷத்தை அனுபவிக்கவே இல்லை ... அவர்கள் டிசைட் பண்ணட்டும் இது அவர்களுடைய வாழ்க்கை ... எனக்கு தெரிஞ்சி இது பிரச்சனையே இல்லை .. அஸ்லன் இதெல்லாத்தையும் சமாளிச்சிக்குவான் மியா நான் அஸ்லன்க்காக மட்டும் பேசல ஜிஷாக்கும் சேர்த்துத் தான் பேசுறேன் ப்ளீஸ் புரிஞ்சிக்கோ " என்றான் .

" இரண்டு பேரும் சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம் தான் "

" நீ ஜிஷாகிட்ட எதுவும் பேசிக்காத சரியா "

" ஓகே "

" சரி நீ போ நான் அவனைப் போய் பார்க்குறேன் " என்ற மிதுன் அங்கிருந்து கிளம்பினான் .
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,453
Reaction score
11,152
Points
113
Age
29
Location
Thovalai
இனி...

ஜிஷா மற்றும் அவளது நண்பர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அமனோ கிராண்ட் சென்ட்ரலில் உள்ள ஓபன் கார்டன் ரெஸ்டாரண்டில் ...

" என்ன ஜிஷா பேசாமல் அமைதியா இருக்க ... அந்த அஸ்லன் யார் ... அவனிடம் ஏன் அஷோக்கை உன் ஹஸ்பண்டுன்னு சொன்ன ??" - சைலஜா கேட்க ..

" சைலஜா நீ டென்ஷன் ஆகாத ... நான் சும்மா தான் சொன்னேன் ... அஷோக்கும் நானும் நிஜமாகவே நடப்பாகத்தான் பழகுறோம் "

" அட சீ ... உன்னையோ என் அஷோக்கையோ நான் சந்தேகப்பட்டு கேட்கல ... அந்த அஸ்லன் உன்கிட்ட ஏதும் பிரச்சனை பண்ணிட்டு இருக்கானோன்னு நினைச்சு கேட்கிறேன் "

" ஆமா ஜீஷா அவன் உன்னை ஏதும் தொந்தரவு பண்ணிட்டு இருகானா என்ன ? மறைக்காம என்கிட்ட சொல்லு நான் அவனை பார்த்துக்கறேன் " - அக்கறையுடன் வினவினான் அஷோக் ...

" அப்படியெல்லாம் ஏதும் இல்லை அஷோக் ... ஜிஷா தயங்கியபடி கூறினாள் ...

" எனக்கு அப்படி தோணலை .... மீரா உனக்கு ஏதாவது தெரியுமா " - மீரா ஜிஷாவை பார்க்க ... ஜிஷா வேண்டாம் என்பது போல தன் தலையை அசைக்க ... அப்பொழுது அஷோக் " மீரா நீயாவது இப்போ உன்மைய சொல்ல போறீயா இல்லையா " - கோபமாகக் கேட்க ...

இதற்கு மேல் மறைத்து பயனில்லை என்பதை என்பதை உணர்ந்த மீரா தனக்கு தெரிந்த அனைத்து விஷயங்களை கூறினாள்..

இதைக் கேட்ட அஷோக் ஜிஷாவிடம் " என்ன ஜிஷா இது இவ்வளவு விஷயம் நடந்திருக்கு நீ ஷைலஜா கிட்டயும் என்கிட்டயும் இதை பத்தி ஒரு வார்த்தை சொல்லல .... நீ எங்களை உன் நண்பர்களாகவே நினைக்கல அப்படி தானே " - வருத்தத்துடன் வினவினான் .

" நோ அஷோக் அப்படியெல்லாம் இல்லை ... சந்தோஷத்தைச் சொல்லலாம் துக்கத்தை எப்படி சொல்றது .... "

" துக்கத்தை பகிர்ந்துக்க தான் நாங்க இருக்கோம் "

" எவ்வளவு தான் நீங்க பகிர்ந்துக்குவீங்க ... அஞ்சு வருஷமா அதைத் தான் பண்ணிட்டு இருக்கீங்க ... நான் நிறைய கஷ்டங்களை மட்டும் தான உங்களுக்கு கொடுத்திருக்கிறேன் ... மேலும் என் கஷ்டத்தைச் சொல்லி உங்களைச் சங்கடப் படுத்த எனக்கு விருப்போம் இல்லை "

" ப்ச் , இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுற.... பழசை விடு ! இவன் பிரச்சனைக்கு வருவோம் ... அவனுக்கு இரண்டு பொண்ணுங்க கேக்குதா ... வேற ஒரு பொண்ணை காதலிச்சிக்கிட்டு உன்னையும் சித்திரவதை செய்துகொண்டு இருகானா அவனை நான் பார்த்துக்கறேன் " - அஷோக் கோபமாகக் கூற ... உடனே தடுத்த ஜிஷா " வேண்டாம், அஷோக் உன்னை பார்த்துட்டான்ல இனிமே பிரச்சனை பண்ண மாட்டான் ... இந்த டாபிக்கை இனிமேல் பேச வேண்டாம் "

" என்ன வேண்டாம் ... அவனுக்கு இருக்கு உன்னை அவன் என்னனு நினைச்சிகிட்டான் .... கேட்க ஆள் இல்லையென்று நினைச்சிட்டான் போல ... மே அவன் என் கண்ணுல படட்டும் நாலு வார்த்தை நல்ல நறுக்கென்று கேட்கிறேன் " - மீரா ஆவேசமாய் கூறவும் ...

அஸ்லன் புன்னகையுடன் அவர்களை நோக்கி வரவும் சரியாக இருந்தது .. அப்பொழுது எதிர்பாராதவிதமாகத் திரும்பிய ஜிஷா அஸ்லனை கண்டதும் திகைத்துப்போனாள் ...

இதைக் கண்டு கொண்ட அஸ்லன் தன்னைக் கண்ட தன்னவளின் விழிகள் முதலில் திகைப்பில் விரிந்து,பின் அதில் சிறிது சிறிதாகச் சினம் ஏறிச் சிவக்கக் கண்டவன், சில நொடிகள் அப்படியே நின்று " அவ கோபமா இருக்கா போலையே ... வேணும்ன்னா நாளைக்கே பேசிக்கலாமா " என்று எண்ணியவன் பின்பு " முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கென்று" எண்ணியபடி உள்ளுக்குள் லேசாக உதறிய போதும் வெளியே வழக்கம் போல வசீகரமாகச் சிரித்துக் கொண்டே அவர்கள் அமர்ந்திருந்த மேஜையருகே சென்றான்.

அஸ்லன் அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கருகில் வரும் வரையில் அவனை தன் பார்வையால் தொடர்ந்த படி முறைத்துக்கொண்டிருந்த ஜிஷா ,அவன் தங்களுக்கருகில் வந்து ஒரு சேரை இழுத்துப் போட்டு அமரவும்,

" ஹலோ மிஸ்டர்..." என அவனைத் திட்ட வாயெடுக்கும் முன்னே,

அதற்குச் சந்தர்ப்பமே தராமல் அஸ்லன் ஜிஷாவை விடுத்து மற்ற அனைவரிடமும் பொதுவாக அதே சமயம் உற்சாகமாக,

"ஹாய் கைஸ் .."என்றான் தன் டிரேட்மார்க் புன்னகையுடன் .

அஷோக் அஸ்லன் அங்கே வருவதற்கு முன்பே அலைபேசியில் பேசிட்டுவிட்டு வருவதாகச் சொல்லி அங்கிருந்து சென்றிருக்க ...

பெண்கள் மட்டுமே அங்கே இருந்தனர் ... அவனிடம் பதிலுக்கு ஹாய் சொல்லலாமா வேண்டாமா என சைலஜாவும் , ஜிஷாவும் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,மீரா முதல் ஆளாக,

"ஹாய்..."என்றாள் ஒரு அறிமுகச் சிரிப்புடன் .

அஸ்லன் பளீரென்ற புன்னகையுடன்,"ஹாய்...ஐ ஆம் அஸ்லன் ...யுவர் குட் நேம் ஃபிளீஸ்..???"என கை நீட்டினான்.

உடனே அவன் கையைப் பற்றி குலுக்கியவள்,"ஐ ஆம் மீரா ..."என்றாள்.

"ஓ...நைஸ் நேம்..உங்களை மாதிரியே..."

"தேங்க்ஸ்..."என்றாள் சற்று கூச்சத்துடன்.

சைலஜா மீராவின் கையில் கிள்ளியபடி "ஹேய்...என்னடி நடக்குது இங்கே...???இவன் ரொம்ப மோசம் இவனைப் பார்த்தா நாலு வார்த்தை நல்லா நறுக்குன்னு கேட்ப்பேன்னு சொன்ன...இப்ப என்னமோ ஹாய்...பாய்ன்னு கைய குடுத்துட்டுருக்க...ஒழுங்கா அவனைத் திட்டு "என மீராவை உசுப்பினாள்.

அப்போதுதான் மீரா நினைவு வந்தவளாக," ம்ம்ம்...மிஸ்டர் அஸ்லன் உங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ... என் ஃப்ரண்ட பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு .... அவளை நீங்க ரொம்ப டார்ச்சர் பண்றீங்க... ... அவளுக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சுல அப்புறம் ஏன் அவ பின்னாடியே வரீங்க பார்க்கப் பக்கா ஜென்டில் மேனா தெரியுறீங்க...அப்புறம் ஏன் சார் இப்படி பண்றீங்க...???"என தன்மையாகக் கேட்கவும்,

சைலஜா ,'சுத்தம்...இவகேக்குற லட்சணத்தை பாரு...திட்டுவான்னு பார்த்தா கொஞ்சிக்கொண்டு இருக்கா ...இது வேலைக்கு ஆகாது...'என நினைத்துக் கொண்டவள் ,

"யார் நீங்க...???எதுக்காக ஜிஷுவ டார்ச்சர் பண்றீங்க...???உங்களுக்கு என்ன வேண்டும்...??மனசுல என்ன ரோமியோன்னு நினைப்பா ??"- என்று கோபமாக சைலஜா கேட்க ... அப்பொழுது அங்கே வந்த அஷோக் ,

" ஹலோ இங்க என்ன பண்றீங்க ..யாரைப் பார்க்க வந்திருக்கீங்க ... முதல்ல கிளம்புங்க " - என்று அஸ்லனை மிரட்ட ...

"என் லவ்வரை பார்க்க வந்தேன் அது எப்படி தப்பாகும்...???என் மனசத் திருடிய என் தேவதை செனோரீட்டாவ , என் செல்ல குட்டி ஸ்ட்ராபெரிய ...என் டார்லிங்க... நான் பார்க்காம வேற யாரு பார்ப்பா "என ஜிஷாவை தன் தோளோடு அணைத்தவாறே நிதானமாகக் கேட்டான்.

சைலஜா அஸ்லனிடம் ," ஹல்லோ யாருக்கு யாரு லவ்வர் ?? அவளுக்கு அஷோக் கூட கல்யாணம் ஆகிடுச்சுங்க "

" ஓ ஓகே ... பரவாயில்லை ... கொஞ்சம் நேரம் தனியா பேசணும் பேசிட்டு போயிடுறேன் "

" என்ன பரவாயில்லையா ?? ... ஹலோ என் மனைவி யார்கிட்டையும் பேச மாட்டா நீ கிளம்புங்க " - அஷோக் திமிர ..

" ஓ வாங்க சார் நீங்க தான ஜிஷாவோட கொஞ்ச நேரப் புருஷன் ... நான் உங்க திடீர் பொண்டாட்டி கூட கொஞ்சம் பேசணும் " - என்று கூற .... அஷோக் அதிர்ச்சியுடன் பார்க்க ...

ஜிஷாவோ அவன் ஏதோ திட்டத்தோடு தான் வந்திருக்கிறான் என்று கோபத்துடன் அமர்ந்திருந்தவள் தான் இருந்த கோபத்தில் தன் மேல் தோளில் மேல் இருந்த அவன் கையை வெடுக்கென்று கிள்ளி விட்டாள்.

"செல்ல குட்டி ..என்ன பண்ற மாமாவைத் தொட்டுப் பார்க்க அவ்வளவு ஆசையா .. அப்போ ஏன் ரசகசியாமா பண்ற ... வா நல்லாவே தொட்டுக்க " என்று இன்னும் நெருங்கி வர ... அஸ்லனின் இந்த அதிரடி பேச்சில் மூவரும் வாயடைத்து நின்றனர் .

அப்பொழுது அவர்களைப் பார்த்து சிரித்த அஸ்லன் ," அஷோக் எனக்கு எல்லாம் தெரியும் .... நீங்க உங்க ஆள் கூட லவ் பண்ணிட்டு இருங்க அதுவரைக்கும் நான் ஜிஷா கூட கொஞ்சம் பேசிட்டு வரேன் " என்றவன் அசோக்கின் தோளில் நட்ப்பாக தட்டி விட்டு ஜிஷாவிடம் " அங்கே வெயிட் பண்றேன் உன் ஃப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வா " என்றவன் அங்கிருந்து சென்று ஜிஷாவுக்காக காத்திருந்தான் ..
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,453
Reaction score
11,152
Points
113
Age
29
Location
Thovalai
அப்பொழுது அங்கே வந்த ஜிஷா "என்ன அஸ்லன் .... என் ஃபரெண்ட்ஸ் முன்னாடி என்னை அசிங்கப்படுத்தி பார்குறீங்களா..."என அவனைக் கூர்ந்துப் பார்த்துக்கொண்டே கேட்டாள்.

"ஜிஷா " என பதறியவன்,அவளது முறைப்பைக் கண்டு உடனே,"நீ என்னைத் தப்பா புரிஞ்சி வைத்திருக்க ... நான் உன்னை மனப்பூர்வமா காதலிக்கிறேன்... அதை உனக்குப் புரிய வைக்கத் தான் வந்திருக்கிறேன் ...என் காதல் உனக்கு உன்னை அசிங்கப்படுத்துற மாதிரி இருக்குதா ???"எனக் கண்களில் வலியுடன் கேட்டான் அஸ்லன் .

"காதலா...?!?!?!"என அதீத வெறுப்பில் முகம் சுருக்கியவள்,"என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு அஸ்லன் ... அன்னைக்கு என்னைப் பார்த்ததும் எனக்கு முத்தம் கொடுத்த ... நான் கூட நீ என் மேல உள்ள ஆசையில் தான் குடுத்தன்னு நினைத்தேன் .... ஆனால் என்னாச்சு ஏஞ்சல் உன்னை லவ்வர்னு சொல்றா நீயும் பேசாம அப்படியே நிக்கிற ..இப்போ வந்து என்னை காதலிக்கிறேன்னு சொல்ற ... என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது ம்ம்ம்ம் உன் பணத்துக்காக டேலி உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு இருக்காங்களே அந்த பொண்ணுங்கள்ள ஒருத்தி மாதிரி தெரியுதா ???"என ஆவேசமாகக் கேட்டாள்.

"அப்படி சொல்லாத ஜிஷு ..என் காதல் என்ன உனக்கு அவ்வளவு கேவலமா தெரியுதா...???"எனச் சிறிது குரலை உயர்த்தியவன்,பின் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

"இங்கப் பாரு ஜிஷா ...நான் உன்னைப் கஷ்டப்படுத்திட்டேன் ...இல்லைன்னு சொல்லல...நீ இல்லாத நாட்கள்ல பொண்ணுங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணிருக்கேன் ..அதையும் நான் மறுக்கல....ஆனா என் காதல் நிஜம்... அது நிஜம் ! எப்படி புரியவைக்கிறதென்று எனக்கு தெரியல ...ஃபிளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோ..

.என்னோட காதல் உன்னைப் பார்த்த முதல் நொடியிலேயே ஆரம்பிச்சுருச்சு...ஆனா அது சத்தியமா நீ சொல்ற மாதிரி உன் உடம்ப பார்த்து வந்த இனக்கவர்ச்சி கிடையாது...ஏன் உன் பேருக் கூட தெரியறதுக்கு முன்னாடியே வந்த அழகான உணர்வு அது..

அப்போ நான் இருந்த சூழ்நிலை உன்னை என்னால ஏத்துக்க முடியல ... இத்தனை வருஷத்துல நான் உன்னையே நினைச்சிட்டு வாழல தான் ஆனா என் மனசுல உன்னைத் தவிர வேற யாருக்கும் நான் இடமும் கொடுக்கலை .. அன்னைக்குக் கூட அதான் உன்னைப் பார்த்ததும் ஏதோ இவ்வளவு வருஷமா உனக்காகத்தான் காத்துக்கிட்டுருந்த மாதிரி ஒரு உணர்வு, ஏன் வந்துச்சுன்னு எனக்கே தெரியல அதான் ஆசையில முத்தம் கொடுத்துட்டேன் ...

ஆனா அந்த உணர்வு உண்மை...என் காதல் உண்மை...அதனால தயவுசெய்து என்னையும்,என் காதலையும் புரிஞ்சுக்கிட்டு என்னை ஏத்துக்கோ ஜிஷு ..."என அஸ்லன் ஜிஷாவின் கண்ணசைப்பிற்காக தன் கர்வம்,வெட்கத்தை விட்டு கெஞ்சிக் கொண்டிருந்தான்.

" எனக்கு புடிக்கலை "

" ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி புடிச்சிருந்துச்சு , இப்போது மட்டும் புடிக்கலையா ??"

" நான் காதலிச்ச அஸ்லன் வேற .... இப்போ என் முன்னாடி நிற்கிற அஸ்லன் வேற "

" நான் தான் அது ... கொஞ்சம் என்னை பாரு என் கண்ணை பாரு என் காதல் உனக்கு புரியும் ... எனக்கு என்ன தகுதி இல்லையென்று நீ நினைக்கிற... என் காதலைக் கொஞ்சம் கன்சிடர் பண்ணக்கூடாதா ???"என ஆதங்கத்தோடு கேட்டான் அஸ்லன்

" போ அஸ்லன் ப்ளீஸ் "

"ஜிஷா நான் இப்பவும் பழைய அஸ்லன் தான் ... இனி எப்பவும் நான் ஒரே மாதிரிதான் இருப்பேன் ... உன் அஸ்லனா இருப்பேன் ...என்னை நம்பு ... இப்ப உன்மேல எனக்கிருக்குற காதல் என்றைக்குமே மாறாது...ஆனா அத நிரூபிக்க எனக்கு தெரியல ....ஆனா அதை காட்ட நீ எனக்கு ஒரு வாய்ப்பாச்சும் கொடு ஜிஷு ..."என மன்றாடினான்.

" உங்களைப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்பறம் என் மனசு உங்களை ஏத்துக்க மாட்டிக்குது அஸ்லன் .... உங்களை நம்பி என்னை ஒப்படைக்க நான் தயாராயில்ல... ஏற்கனவே என்னை ரொம்ப காயப்படுத்திடீங்க தெரிஞ்சே மறுபடியும் நம்ப எனக்கு விருப்பம் இல்ல..."என்று கடுமையுடன் கூறியவள் அவனைத் தவிக்கவிட்டு செல்ல முனைந்தாள்

அப்பொழுது நெஞ்சம் முழுவதும் வலியுடன் நின்றிருந்த அஸ்லனின் கண்கள் கலங்குவதைக் கண்டு வான்மகளுக்கே பொறுக்கவில்லை போலும்...அந்நேரம் பார்த்துச் சரியாக ஒரு பயங்கர சத்தத்துடன் இடி மின்னலுடன் மிரட்டவும் அங்கிருந்து செல்ல முனைந்த ஜிஷா பயத்தில் அஸ்லனை இறுக்கக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள் .

ஒரு நொடி அஸ்லனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை...'இவள் இவ்வளவு நேரம் பேசியதிற்கும் ..???இப்போது செய்வதற்கும் சம்பந்தமே இல்லையே .???என்ன விளையாட்டு இது ??'எனக் குழம்பியவன் குனிந்து தன் நெஞ்சில் அழுந்தப் புதைந்திருந்த அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.

இடியின் மிரட்டலில் மிரண்டு நடுங்கிக் கொண்டிருந்த ஜிஷா விடாமல் கொட்டிய மழையில் இன்னும் நடுங்கிக்கொண்டிருந்தாள்.அதைக் கண்ட அஸ்லனின் உணர்ச்சிகள் உயிர் பெற அவன் அறியாமலே அவன் கரங்கள் ஜிஷாவை தன் மார்போடு இறுக்கிப் பிடித்தன.

இந்த நொடி இப்படியே நீளாதா...???என்றிருந்தது அஸ்லன் ..தன்னவளை ரசித்தபடி தன் இமைமூடாமல் பார்த்திருந்தான் ...

ஜிஷாவின் மென் கரங்கள் அஸ்லனின் முன்புற சட்டை காலரை இறுக்கப் பற்றியிருந்தது.அவளது உச்சந்தலையில் விழுந்த மழைநீர்,பயத்தில் இறுக மூடியிருந்த அவளது இறகு இமைகளில் பட்டுத் தெறித்து,நாசி வழியே வழிந்து,அவளது ஸ்ட்ராபெரி இதழிலிருந்து சொட்டிக் கொண்டிருந்தது.

தன்னவளின் தேகம் முழுவதும் தன்னுடன் பிணைந்து இருக்க , அவனை மயக்கும் அவளது ஸ்ட்ராபெரி இதழ்களோ அவனது மார்பில் உரசிக்கொண்டிருந்தது .... அவனுக்குள் பற்றியெரிந்த மோகத்தீயை அணைக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த அஸ்லனுக்கு இவ்வளவு நெருக்கத்தில் தன் நெஞ்சில் உரசிக்கொண்டிருக்கும் அவளது இதழ்களைக் கண்டதும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் போக ...

மெல்ல தன்னவளைஅணைத்திருந்த கரங்களை விடுவித்தவன் அவள் மென் வதனத்தை தன் இருக்கைகளில் ஏந்தி தன்னை மயக்கும் தன் ஸ்ட்ராபெரியை சுவைத்தான்

ஜிஷா அதிர்ச்சியில் இருக்க ..அஸ்லனுக்கோ காதல் மயக்கம்...ஜிஷா விடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வராமல் இருக்கவும்,தன்னிலை மறந்து இன்னுமின்னும் அவள் இதழ்களில் அழுத்தமான முத்தத்தைப் பதித்தவனின் அவளது கன்னத்தை பற்றியிருந்த இரு கரங்களும் மெல்ல நகர்ந்து அவளது வெற்றிடையில் முற்றுகையிட்டிருந்தது ... அவனது இதழ்கள் இப்பொழுது அவளது கழுத்தில் புதைந்திருக்க ...

அவ்வளவு நேரம் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஜிஷா அஸ்லன் தன்னிடையை இறுகப் பற்றவும்,சுதாரித்துக்கொண்டவள் அஸ்லனை அவன் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டு நொடி கூட தாமதிக்காமல் அவன் கன்னத்தில் " பளார் " என்ற சத்தத்துடன் இடியென அடியை இறக்கினாள்.

ஆனால் அதன் பின் அவள் உதிர்த்த வார்த்தைகள் அதை விடவும் பலமாக அவன் நெஞ்சில் வந்து ஈட்டியைப் போல இறங்கியது..." சீ ...இவ்வளவு கேவலமானவனாடா நீ...வெக்கமா இல்ல உனக்கு....இவ்வளவு நேரம் நான் சொல்லியும் என்னை யூஸ் பண்ணிக்க தான பாக்குற ... உனக்கு எப்பவுமே இது தான் முக்கியம் அப்படி தான .. நினைப்பெல்லாம் இது மேல் தான் இருகுல்ல ... என் மனசு என்ன சொல்லுது அதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு அதெல்லாம் உனக்கு முக்கியமே இல்லை அப்படி தான ... உன்னைப் பொறுத்த வரைக்கும் நான் உனக்கு ஒரு சாய்ஸ் ... செலினா இல்லைனா நான் ...ஏஞ்சல் இல்லையென்றால் நான் ... நைட் பொண்ணுங்க கிடைக்கலைன்னா நான் அப்படி தான .... இப்போ உனக்கு என்ன நான் வேண்டும் இன்னைக்கு ஒரு நாளைக்கு உன் ஆசையா தீர்த்துக்கொள்ள நான் வேணும் அப்படி தானே, வா ... காதலித்த பாவத்துக்கு என்னை எடுத்துக்கோ ??? அதுக்கு அப்புறம் என் முன்னாடி நீ வரவே கூடாது ! "எனக் கொடிய வார்த்தையெனும் திராவகத்தை அவன் மீது வீசினாள்.

இந்நேரம் வரையில் தன் தவறை உணர்ந்து,அவள் அறைந்ததை ஏற்றுக்கொண்டு மௌனமாய் நின்ற அஸ்லன் அவளது வார்த்தைகளைக் கேட்டுக் கொதித்துப் போய் ரௌத்திரமானான் ...

இதுவரையில் தன்னிடம் கெஞ்சிக் கொண்டு பொறுமையாக இருந்தவன்,இப்போது தலைகால் புரியாத கோபத்துடன்,கை முஷ்டி இறுக,கண்கள் சிவக்க,தன்னை பார்த்த விதம் பார்த்து அதிர்ந்து நின்றாள் ஜிஷா....

- தொடரும்
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top