ஸ்ட்ராபெரி முத்தங்கள் 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,664
Reaction score
11,476
Points
113
Age
29
Location
Thovalai
இத்தனை நாள் காணாமல் போனதுக்காக மன்னிச்சிருங்க நண்பர்களே ... ஒருமாசமா ஊர்ல இல்லை பா ... அதான் அப்டேட் போட முடியல ... என்ன பா உன்னை எவ்வளவு தான் மன்னிக்கிறதுன்னு தானே கேட்குறீங்க... புரியுது பா ... இனிமே இப்படி பட்ட தடை நடக்காம பார்த்துகிறேன் ... எவ்வளவு வேண்டுமானாலும் என்னை திட்டுங்க ஆனா உங்க கருத்தை மட்டும் மறக்காம பதிவு பண்ணுங்க அடுத்த பதிவை கொடுத்திருக்கேன் படிச்சிட்டு குறைகள் மற்றும் நிறைகளை என்கிட்ட சொல்லுங்க ...
 
Naemira

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Mar 21, 2018
Messages
2,664
Reaction score
11,476
Points
113
Age
29
Location
Thovalai
ஸ்ட்ராபெரி முத்தங்கள் 11

இதுவரை ....

இந்நேரம் வரையில் தன் தவறை உணர்ந்து,அவள் அறைந்ததை ஏற்றுக்கொண்டு மௌனமாய் நின்ற அஸ்லன் அவளது வார்த்தைகளைக் கேட்டு கொதித்து போய் ரௌத்திரமானான் ...

இதுவரையில் தன்னிடம் கெஞ்சிக் கொண்டு பொறுமையாக இருந்தவன்,இப்போது தலைகால் புரியாத் கோபத்துடன்,கை முஷ்டி இறுக,கண்கள் சிவக்க,தன்னை பார்த்த விதம் பார்த்து அதிர்ந்து நின்றாள் ஜிஷா....

இனி .........

மிரண்டு போய் நின்ற ஜிஷாவை கோபத்துடன் நெருங்கிய அஸ்லன் ,

"என்ன பேசிட்டு இருக்க ஜிஷா ..... உன் மனசை புரிஞ்சிக்காம நான் என் ஆசையை உன்கிட்ட வெளிப்படுத்தினது தப்பு தான் ... ஒத்துக்கறேன்...ஆனா நான் உன் உடம்ப தான் விரும்புறேன்னு நீ சொன்னது ரொம்பவே கஷ்டமா இருக்கு ஜிஷா .... இட்ஸ் ஹர்டிங் நீ என்னை ரொம்ப காயப்படுத்திட்ட ... என் காதலை சந்தேகப்படுற .... ஜிஷா உனக்கு என் காதலை எப்படி புரியவைக்கிறது...

நான் என்னைக்குமே உன்னை ஒரு சாய்ஸா பார்த்ததே இல்லை .... என் வாழ்க்கை முறை உன்னை என்னை பத்தி தப்பா நினைக்க வச்சிருக்குன்னு எனக்கு புரியுது ஆனா உன்னை பார்த்ததுக்கு அப்புறம் நான் மாறிட்டேன் ஜிஷா...

உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு எனக்கு புரியுது ஆனா இந்த மனசு உன்னைப் பார்த்தா மட்டும் அதோட கட்டுப்பாட்டை இழந்திருது ...என் காதலை நீ புரிஞ்சுக்காத போது அதை வேற எப்படி உனக்கு புரியவைக்கிறதுன்னு எனக்கு சத்தியமா தெரியலடி...இப்பக்கூட நீயாத்தான் வந்து என்னைக் கட்டிப்புடிச்ச ...உன்னை நான் குத்திக்காட்டல.... நீயா வந்ததும் நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் ...தப்பு என் மேலதான்... என்ன இருந்தாலும் நான் அப்படி நடந்துக்கிட்டது ரொம்ப பெரிய தப்புதான்...மன்னிக்கவே முடியாத தப்பு.... .ஆனா உன்னைத் தவிர வேற யார்க்கிட்டயும் என் கண்ட்ரோல் மீறி நான் நடந்துக்கிட்டது இல்லை .... இப்போ கூட என் தவறை நியாயப்படுத்த நான் பேசல .... என் காதலை உனக்கு புரியவைக்க தான் நான் பேசிட்டு இருக்கேன் ... ஆனா ஜிஷா சத்தியமா உன் உடம்பை நான் விரும்பல ....இந்த வார்த்தை சொன்னதுக்கு பதிலா நீ என்னை சாக சொல்லிருக்கலாம் ரொம்ப வலிக்குது ஜிஷா ....

என் காதல் உண்மையானது அதை என் கரக்ட்டர் வச்சோ என் பழைய வாழ்க்கை முறைய வச்சோ கொச்சைப்படுத்தாத ...ஃப்ளீஸ்..."என்று ஆத்திரத்தில் ஆரம்பித்து வலியுடன் முடித்தான் அஸ்லன் ...

கொஞ்சம் கூட தடுக்காமல் அஸ்லன் கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ஜிஷா அவன் தரப்பை கூறியதும் ," வாவ் .... அஸ்லன் எவ்ளோ அழகா உன் தப்பை நியப்படுத்துற ?? " அலட்சியத்துடன் கேட்டாள்..

"ஜிஷா ப்ளீஸ் .... உன் மேல உள்ள காதல்ல ... உரிமையில கிஸ் பண்ணிட்டேன் தப்புதான்... வேணும்ன்னா என்னை அடிச்சிரு .... ஆனா வொர்ட்ஸ் இப்படி .... வார்த்தையால என்னை காயப்படுத்தாத ..." வார்த்தைகள் தடுமாற கூறினான் ...

"என்னது...அடிக்கணுமா ..ச்ச ..உன்னை பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் உன்னை பார்க்கவே எனக்கு கூசுது ...மன்னிப்பு கேட்டுட்டா

என் காயம் ஆறிடுமா அஸ்லன் .... நீ உன் கலாச்சாரம் .... உன் பழக்கவழக்கம் இது எல்லாமே எனக்கு அருவறுப்பா இருக்கு "

" ஜிஷா நான் செஞ்சது தப்பு தான் .....அதுக்கு உன் கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன் என்னை இப்போ வேற என்ன செய்ய சொல்ற.... இப்போ உன் வார்த்தையால என்னை நீ உயிரோட எரிச்சிட்டு இருக்க டி ரொம்ப வலிக்குது ... நீ என் காதலை உடனே ஏத்துக்க வேண்டாம் அட்லீஸ்ட் கன்சிடராச்சும் பண்ணு ப்ளீஸ் ..." கெஞ்சினான் ..

"என்ன கன்சிடர் பண்ணனுமா ... அஸ்லன் இட்ஸ் ஓவர் .... எல்லாம் முடிஞ்சிது ... உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை ... எப்படி எப்படி நான் உன்னைக் கட்டிப்பிடிச்சதாலதான் நீ என்னைக் கிஸ் பண்ணினேன்னு

கொஞ்சம் கூட கூசாம சொன்னியே ... உனக்கு மனசாட்சி இல்லை ...

மழை இடின்னா எனக்கு எவ்வளவு பயம்ன்னு உனக்கு தெரியுமா டா ... நீ ரொம்ப மோசம் அஸ்லன் .... என்னை ரொம்ப கேவலமா நினைச்சிட்டல .... அதனால தான் என் இயலாமைய நீ யூஸ் பண்ணிருக்க "ஜிஷாவின் விழிகள் கலங்கியது ..
ஜிஷாவின் கண்ணீர் அஸ்லனின் மனதை காயப்படுத்த அவனும் கண்கலங்கினான்."ஜிஷா ப்ளீஸ் ஸ்டாப் க்றயிங் .... தயவு செஞ்சு அழாத .... என்னால சத்தியமா தாங்க முடியலை கஷ்டமா இருக்கு .... நாம பேசி சால்வ் பண்ணிக்கலாம் " மீண்டும் ஜிஷாவிடம் கெஞ்சினான் .

" ஓகே ஜிஷா நான் இப்போ என்ன பண்றது .... என்ன செஞ்சா என் காதலை நீ நம்புவ .... நீ விரும்புனா நாம கல்யாணம் கூட பண்ணிக்கலாம் .... எனக்கு ஓகே தான் .... நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட லவ் பண்ணலாம் .... அப்போ உனக்கு இதெல்லாம் தப்பா தெரியாது ... சீக்கிரமாவே பண்ணிக்கலாம் ......"என அஸ்லன் சொல்லவும் தலைகவிழ்ந்து அழுது கொண்டிருந்த ஜிஷா விலுக்கென்று தன் தலையை நிமிர்த்தினாள்.

"வாட் ???கல்யாணமா...?!?!?!" அலட்சியமாய் சிரித்தவள் , " இது என்ன புது ட்ராமா அஸ்லன் ... ம்ம்ம்ம்ம் ... புரிஞ்சிருச்சு மத்தவங்க மாதிரி நான் உன்கிட்ட மயங்கல .... அதான் லைசென்ஸோட பண்ணலாம்ன்னு பாக்குறியா...ம்ம்ம்... எப்படி கல்யாணம் பண்ணிட்டு உன் வேலை முடிஞ்சதும் என்னை வச்சிருப்பியா ?? இல்லை கழட்டி விட்டுருவியா ?? ஏன் கேட்குறேன்னா உனக்கு தான் ஒவ்வொரு நைட்க்கு ஒவ்வொரு பொண்ணு வேணுமே ... நீ பெரிய ஆளு அஸ்லன் ..... சூப்பர்... என் மனசை காயப்படுத்திட்டு எவ்ளோ ஈஸியா என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேக்குற ..???இவ்வளவு பேசியும் எந்த தைரியத்துல என்னைப் பார்த்து இப்படி கேட்ட ??.எப்படியாச்சும் உனக்கு என்னை அடையனும்ன்னு வெறி ...நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா...??? நல்ல ஆம்பளையா லட்சணமா நடந்துக்கோ அஸ்லன் ... பிஹேவ் லைக் அ மேன்( Behave like a man ) "என்று வார்த்தையாலேயே அவன் நெஞ்சில் வாள்வீசினாள் ஜிஷா.

ஜிஷாவின் கொடிய வார்த்தைகளினால் ஜீவன் அற்றுப் போனவனாக அஸ்லன் " காதல் இவ்வளவு காயப்படுத்தும்ன்னு தெரியாம அதுல விழுந்துட்டேன்... ஆனா என் காதல் என்னைக்குமே மாறாது ஜிஷா ..."

"போதும் .... இவ்வளவு சொல்லியும் இப்படியே பேசிட்டு இருக்க ... இரக்கப்பட்டு மனசை மாத்திக்குவேன்னு நினைக்கிறியா ??? அஸ்லன் நீ என்னை காயப்படுத்திருக்க அதை ஏன் புரிஞ்சிக்கவே மாட்டிக்கிற ???ம்ம்ம்... நீ ரொம்பவே சுயநலக்காரன் .. உன் புத்தி ஏன் இப்படி இருக்கு ... கல்யாணம் பண்ணிக்கிட்டா எல்லாம் சரியாகிருமா ... சொல்லு அஸ்லன் ... அஸ்லன் நீ என்ன பண்ணினாலும் எனக்கு உன் மேல நம்பிக்கை வராது ... தயவு செஞ்சி என்னை விட்டு தள்ளி போ " ஜிஷாவின் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு வழிந்தது

" வேண்டாம் நீ என்னை நம்பவே வேண்டாம் ... ஒன்னு சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ ஜிஷா ..நீ என்னை லவ்

பண்ணினாலும் சரி,பண்ணலனாலும் சரி... .நீ என்னை என்ன நினைச்சாலும் பரவாயில்ல...என் வாழ்க்கையில நீ மட்டும்தான் என் காதலி ....

என்ன சொன்ன உன் உடம்புக்காகத்தான் உன்னைக் கிஸ் பண்ணினேன்னு .... நல்லா கேட்டுக்கோ நீயா என்னை நெருங்காத வரைக்கும் ... உன்னை நான் தொட்டது இன்னைக்கு தான் முதலும்,கடைசியும்...இனி உன் சம்மதமில்லாம என் விரல் நுனி கூட உன்மேல படாது... ..சீக்கிரமே என் காதலைப் புரிஞ்சுக்கிட்டு நீயாவே என்கிட்ட காதலோட வருவ..நீயா வருவ நான் எந்த முயற்சியும் செய்யாமலே ...என்ன ஆம்பளையா நடந்துக்கணுமா ?? பாரு

ஆம்பளை எப்படி நடந்துக்குவான்னு நான் காட்டுறேன் ...."என கடுமையாக மொழிந்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்..

ஜிஷா கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க , அஸ்லன் கோபத்துடன் செல்வதை பார்த்து இருவருக்கும் இடையே என்னவாயிற்றோ என்று பதறியடித்துக் கொண்டு விரைந்து வந்தனர் அவளது நண்பர்கள் .

ஜிஷா கண்ணீருடன் நின்றிருக்கவும்,என்னவோ ஏதோவென்று அவளை நோக்கி ஓடி வந்து, சிலை போல நின்றிருந்தவளைப் பிடித்து உலுக்கினர்.

"ஏய் ஜிஷா என்னாச்சுடி...அஸ்லன் ஏன் கோபமா போறாரு ??? ஏன் நீ அழுதுட்டு இருக்க ..??? அவன் உன்னை என்ன பண்ணினான் ???"என சிறிது கோபமாகக் கேட்டாள் ஷைலஜா . அப்பொழுது சைலஜாவையே வெறித்து பார்த்த ஜிஷாவின் கண்முன்னே அவளது கடந்த கால கோரமான சம்பவங்கள் வந்து போக ... அதே இடத்திலே மயங்கி விழுந்தாள் ...

ஜிஷாவின் நண்பர்கள் ' ஜிஷா என்னாயிற்று ' என்று கத்தும் சத்தம் கேட்டு திரும்பிய அஸ்லன் .... அவளது நண்பர்கள் ஜிஷாவை எழுப்ப முயற்சிப்பதை பார்த்து ,தான் பேசிவிட்டு வந்ததில் தான் அவள் மயக்கம் அடைந்து விட்டாள் என அலறியடித்துக் கொண்டு அவன் அவர்களிடம் ஓடி வந்தான்.

அவனைக் கண்டதும் சைலஜா ,"அஸ்லன் , ஜிஷாவ என்ன செஞ்சீங்க ??? ... ஏற்கனவே அவளுக்கு மழை , இடின்னாலே ஆகாது பயந்துட்டா ... பேசணும்ன்னு தானே சொன்னீங்க இப்போ உங்க இஷ்டத்துக்கு விட்டுட்டு போய்ட்டிங்க ..??"என ஆத்திரம் சற்றும் குறையாமல் வினவினாள்.

" என்ன மழைன்னா பயப்படுவாளா ?? மழைக்கு யாரவது பயப்படுவாங்களா என்ன ??? அதுவும் ஜிஷாக்கு மழைன்னா ரொம்ப புடிக்குமே ?? " என புரியாமல் விழித்தான் அஸ்லன் ... அவன் எண்ணத்தை படித்துக்கொண்ட மீரா ," இது சண்டை போடுற நேரமா முதல்ல ஜிஷாவை பாரு " என நிலைமையை சமாளித்தாள் ...

ஜிஷாவை தூக்கவிருந்த அஷோக்கை தடுத்த அஸ்லன் ... தானே தன் கைகளில் ஏந்திக்கொண்டு சென்று அவளது அறையில் படுக்க வைத்த அஸ்லன் ,

" நான் டாக்டர்க்கு கால் பண்றேன் "என்று அஸ்லன் தன் அலைபேசியை எடுத்தான்

" வேண்டாம் ..." உடனே மீரா மறுத்தாள் .

" ஏன் வேண்டாம் ... ஜிஷாக்கு இன்னும் மயக்கம் சரி ஆகலை " என பதற்றத்துடன் அஸ்லன் கூறினான் .

" அது அப்போ அப்போ வர்றது தான் ... கொஞ்ச நேரத்துல சரியாகிரும் ப்ளீஸ் நீங்க போங்க " என்றாள் மீரா ...

அப்பொழுது தன் மயக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட ஜிஷா கெட்ட சொப்பனத்தில் இருந்து விழிப்பது போல பயத்தில் மழங்க மழங்க விழித்தாள் .

" என்னடி அஸ்லனோட அழகுல மயங்கிட்டியா என்ன ??" என நிலைமையை மாற்ற மீரா ஜிஷாவை வம்பிழுக்க ...

மீரா என்ன கேட்டாள் என்றே தெரியாமல் ,"ம்ம்ம்..."என்று தன் தலையை ஆட்டி ஆட்டினாள் .

" என்ன ஆமாவா " என்று மீரா சிரிக்க ... அனைவரும் அவளுடன் இணைந்து கொண்டு ஜிஷாவை கிண்டல் செய்ய .

அஸ்லனோ பதிலுக்கு ஒரு வெற்றுச்சிரிப்பை உதிர்த்தான் ... ஜிஷாவோ புரியாமல் விழித்தாள் ... அப்பொழுது " உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சா ... நீ இவரை மன்னிச்சிட்டியா ஜிஷா " என அசோக் கேட்க ... ... " நீ ஏன் அழுதுட்டு இருந்த ?? " ஷைலஜாவும் இணைந்து கொண்டாள்.

அப்போதுதான் ஜிஷாவுக்கு மீரா தன்னிடம் என்ன கேட்டாள் .... அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்பதற்கான காரணம் விளங்கியது.' இவங்க வேற நிலைமை தெரியாம கிண்டல் பண்ணிக்கிட்டு...'என அஸ்லனை கோபத்துடன் ஏறிட்டாள்.

அவனோ வதனத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் ஜிஷாவை வெறுமையுடன் பார்த்தான் ...

அவனது பார்வையின் வெறுமை ஜிஷாவுக்கு மனதிற்குள் லேசாக நெருடியது.'சற்று முன் காதலை உதிர்த்த விழிகளா இவை...???இப்பொழுது ஏன் இப்படி உணர்ச்சி இன்றி தன்னை பார்க்கின்றன ...???'என யோசிக்கவும் ,'அப்புறம் நீ பேசுன பேச்சுக்கு வேறொரு ஆம்பளையா இருந்திருந்தால், ஆண் கர்வத்தில் உன்னை வேண்டாம் என்று போயிருப்பான் ...அஸ்லனாக இருக்கப் போயின் இன்னும் உன்னையே சுத்தி சுத்தி வாரான் ... நீ அப்படியே சுகர் சிரப்பை அவன் காதுல குளிர குளிர ஊத்திருக்க பார்த்தியா உன்னை பார்த்ததும் அவன் சிரிக்கிறதுக்கு ... எல்லாம் பேசிட்டு அவன் காதலோட பார்க்கணும்ன்னு வேறு எதிர்பார்க்கிறாயா நீ...'என பெண்ணின் மனம் பெண்ணவளுக்கு இடித்துரைத்தது . ஆனாலும் அதை கிடப்பில் போட்டவள் தான் செய்ததே சரி என்பதை போல அவனை முறைத்து பார்த்தாள் ...

" ஏய் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கோம் ... பதில் சொல்லு " என சைலஜாவின் கேள்விக்கு ஜிஷா பதில் கூறாமல் அமைதியாக இருக்க ... அப்பொழுது அஸ்லன் " இப்போ எப்படி இருக்கு " என அக்கறையுடன் வினவினான் .

"ம்ம்ம்ம் " என தன் தலையை மட்டும் அசைத்தாள் .

" ஹாஸ்ப்பிட்டல் போகணுமா " என அஸ்லன் மீண்டும் கேட்டகவும் ...

" போதும் அஸ்லன் ... ஜஸ்ட் ஸ்டாப் இட் ...நான் நல்லா இருக்கேன், உன்னுடைய கரிசனம் எனக்கு தேவை இல்லை ... போய்டு அஸ்லன் எங்கையாவது போ ... முடிஞ்சா என் வாழ்க்கையில மறுபடியும் வராத... ப்ளீஸ் , கடைசியா வார்ன் பண்றேன் ஜஸ்ட் கெட் லாஸ்ட் " என ஜிஷா கூறவும் வேதனை தாங்காமல் அங்கிருந்து சென்றான்...

அப்பொழுது அறைக்கு வெளியே அஸ்லன் அஷோக்கிடம் " அவளை பார்த்துக்கோங்க ... ஏதும் உதவி தேவைப்பட்டா உடனே கால் பண்ணுங்க " என தன் விசிட்டிங் கார்டை கொடுத்தான் .

" தேங்க்ஸ் " என்ற அஷோக் ... அங்கிருந்து செல்ல இருந்த அஸ்லனிடம்,

" அஸ்லன் இதை உங்க கிட்ட சொல்லலாமான்னு தெரியலை .... ஜிஷா ரொம்ப காயப்ட்ருக்கா ... அதனால தான் இப்படி நடந்துக்கறா ... அவளை கொஞ்ச நாளைக்கு தொந்தரவு பண்ணாதீங்க ... ப்ளீஸ் " என்றான் ...

" ம்ம்ம்ம் ... இனிமே அவளை விட்டு தள்ளியே இருக்கேன் ... என்னால உங்க தோழிக்கு எந்த தொந்தரவும் வராது அஷோக் " என்றான் அஸ்லன் ... அஷோக் தன் நன்றியை ஒரு புன்னகையில் கூற ... அஸ்லனின் நிலையை பார்த்த மீராவுக்கு தான் மிகுந்த சங்கடமாக இருந்தது .

உடனே மீரா அஸ்லனிடம் ," தப்பா எடுத்துக்காதீங்க அவ சரியாகிருவா ... கொஞ்சம் டைம் குடுங்க ... ஏற்கனவே அவளோட அப்பா விஷயத்துல ரொம்ப கவலையா இருக்கா ... "

மீரா இவ்வாறு கூறியதும் அஸ்லன் கூர்மையாகி "ஏன் அவ அப்பாக்கு என்னாச்சு ...???"என சாதாரணமாக கேட்பது போல கேட்டான்.

"அதான்...அவளுடைய "என மீரா உண்மையை உளற ஆரம்பிக்கவும் அவளது கைப்பற்றித் அஷோக் தடுக்க சுதாரித்துக்கொண்ட மீரா ,"அதான் எல்லாருடைய வீட்ல நடக்குறது தான் ... ..."என அஸ்லனுக்கு சந்தேகம் வராதவாறு ஏதோ கூறி சமாளித்தாள் ...

" ஓ ...புன்னகையுடன் சமாளித்தாள் .

" ஓகே பார்த்துக்கோங்க " என அஸ்லன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்ற பிறகு ...

"அவங்களுக்குள்ள என்ன நடக்குதுன்னே தெரியலை ... அதுக்குள்ள நீ எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி உளர பாக்குற..." என அஷோக் மீராவை திட்டினான்.

" சரி விடு பா அதான் சமாளிச்சிட்டேன்ல " என்றாள் மீரா ... ஆனால் அஷோக்கும் மீராவும் அறிந்திருக்கவில்லை ...தான் என்னதான் சமாளிக்கப் பார்த்தாலும் அஸ்லனின் மனதில் அப்பொழுதே சந்தேக விதை விழுந்து விட்டது என்று...

ஜிஷாவின் முகத்தை பார்த்து ஏதோ இருவருக்கும் இடையே நடந்திருக்கிறது என்பதை கண்டுவிட்ட சைலஜா "ஜிஷா உன் முகமே சரியில்லையே...ஏண்டி....ஏதாச்சும் பிரச்சனையா...???"எனத் துருவினாள்.

உடனே ஜிஷா " அதெல்லாம் இல்லை "

" சரி அவன் கிட்ட சொன்ன ???"

" முடிவா நான் அவன் கிட்ட முடியாதுன்னு சொல்லிட்டேன் ... "

" மனசுக்கு கஷ்டமா இருக்கா "

" ம்ம்ம் ... "

" அவனும் ரொம்ப கஷ்டப்படுறான்னு தான் நினைக்கிறேன் "

"அதுக்காக அவனை எப்படி என்னால ஏத்துக்க முடியும் "

" சரி தான் உன் மனசுக்கு என்ன தோணுதோ அதையே பண்ணு ... கொஞ்சம் ரெஸ்ட் எடு " என்றாள் ஷைலஜா.

இப்படி இங்கே ஒரு மனம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்க ஒரு மனமோ வலியில் துடித்துக் கொண்டிருக்க, என இருவேறு மனநிலையில் இருவரும் தத்தளித்து கொண்டிருந்தனர்.... ஆனால், விதி இவர்கள் இருவரையும் சேர்த்து உதயம் காண தயாராகிக் கொண்டிருந்தது.

நாளை ...

" என்ன மிஸ்டர் அஸ்லன் டேவிட் உன் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுதே ... என்ன ஒரே ரொமான்ஸா " என நிலைமை புரியாமல் மிதுன் தன் நண்பனை வம்பிழுக்க

" ஆமா டா ... வா வந்து நல்லா பாரு ஒளிவட்டம் நல்லா பிரகாசமா இருக்கா " என சீறினான் .

" என்னடா ஆச்சு எல்லாம் ஓகே தான "

கோபத்தில் தன் நெற்றியை நீவிய அஸ்லான் ," மிதுன் பேசுறதுக்கு எதுவும் இல்லை ... நான் கிளம்புறேன் " என கூறி வேகமாக தன் அறைக்கு சென்றான் .

" என்னடா ஆச்சு எங்க போற " என வினவியபடியே மிதுனும் பின்தொடர்ந்தான் .

" அஸ்லன் உன்னை தான் டா கேட்கிறேன் பதில் சொல்லுடா "

" மிதுன் உனக்கு என்ன வேணும்?? " என கேட்டான் தனது பொருட்களை தன் பெட்டியில் தூக்கிப் போட்டபடி ..

" என்ன வேணும்ன்னு என்னை கேட்குற நீ தான் டா சொல்லணும் ... என்னாச்சுன்னு "

" சரி சொல்றேன் கேட்டுக்கோ ... அவளுக்கு நான் வேண்டாமாம் ... எல்லாம் முடிஞ்சிதுன்னு சொல்லிட்டா "

" ஏன் டா அப்படி சொன்னா ???"

" மிதுன் ப்ளீஸ் என்னால முடில டா ... வேற எதுவும் கேட்க்காத நான் கிளம்புறேன் ... கனடா போறேன் நாளைக்கு ஈவினிங் பிளைட் ... "

" அஸ்லன் அவளுக்காக ஏண்டா நீ போகணும் "

" மிதுன் ப்ளீஸ் ... எனக்கு மூச்சு முட்டுது ... எனக்கு தனிமை வேணும் இங்க இருக்க முடியாது ப்ளீஸ் ... நீ பார்த்துக்கோ நான் கால் பண்றேன் ... ப்ளீஸ் " என்றவன் மிதுனிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றான் .
- தொடரும்
 
Last edited:

Shakthi R

Well-known member
Joined
Feb 4, 2019
Messages
6,595
Reaction score
18,528
Points
113
Location
Madurai
Jisa life la appidi enna nadantatu waiting dear
 
Shruthi subbu

Well-known member
Joined
Jul 5, 2021
Messages
909
Reaction score
872
Points
93
Location
Bangalore
Ena pa achi jisa ku avanga appa..... Avanga appa ku enna.... En mazhaiya bayam.... 🤔🤔🤔🤔

Aslan avaluku etho prblm konjam time kudu ava prblm ena nu therichika try pannu🤐

Va da vanthu paaru olivattum nalla theriyutha🤣🤣🤣en mithun nee vera... Pulla pavam kadupula iruku...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top