நண்பர்களே மன்னித்துவிடுங்கள் இந்த பதிவும் சிறியதாக அமைந்து விட்டது ஆனால் அடுத்த பதிவதை நீங்கக் கேட்டது போலப் பெரிதாகத் தருகிறேன்....
நண்பர்களே கதையின் தேவையைப் பொறுத்து இந்த பதிவில் பெண் மது அருந்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் .... விருப்பம் இல்லாதவர்கள் படிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .... யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்பதையும் பதிவுசெய்கிறேன் ...
கதைக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றிகள்
நட்புடன்
நெமிரா
இதுவரை ....
"அஸ்லன் இட்ஸ் டைம் டூ மூவ் ஆன் .... ஜிஷா உனக்கு இல்லை அதை இப்போவாது புரிஞ்சிக்கோ ... உள்ள உனக்காக ஏஞ்சல் வெயிட் பண்ணிட்டு இருக்கா ... நீ நேசிக்கிறவ உனக்கு இல்லை ... அட்லீஸ்ட் உன்னை நேசிக்கிற ஒருத்திக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு ... முடிவு நீ தான் எடுக்கவேண்டும் " என்று மிதுன் கூற ... தன் எதிரே இருந்த மது கோப்பையை தன் வாயில் சரித்து தன் விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தபடி ஏஞ்சலை தேடிச் சென்றான் ...
இனி...
ஹோட்டல் அமனோ கிராண்ட் சென்ட்டரின் ரூஃப் டாப் பார்ட்டி ஹால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற மெழுகுவர்த்திகளின் ஒளியில் மின்னியது ... அழகுக்கு வைக்கப்பட்டிருந்த சிவப்பு ரோஜா மலர்கள் மற்றும் அவற்றின் நறுமணம் அவனது நாசியைத் தீண்டினாலும் அவன் கண்கள் தேடியது எஞ்சலைத் தான் ...
சில நொடிகளில் கண்டுகொண்டான் ! கார்னர் டேபிளில் அலங்கரித்த பொம்மை போல அமர்ந்திருந்தாள் ..வெள்ளை நிற பால் வதனம் ... சிவப்பு சாயம் பூசிய செக்க சிவந்த இதழ்கள் ... தோளில் துவண்டு விழுந்த சுருட்டிவிடப்பட்ட கற்றைக் குழல் .... வேறு பிடிமானம் இல்லாமல் அவள் உடலை இறுக்கமாய் பற்றியிருந்த குட்டை உடை அவளது வனப்பைத் தெளிவாய் காட்டியது ... அழகி ! ஆம் சந்தேகமே இல்லை அழகி தான் ... ரசனையுள்ள எந்த ஆணும் அவளைக் கண்ட மறுநிமிடம் அவள் முன்பு மண்டியிட்டு அவளிடம் காதலை யாசிப்பான் .
அஸ்லன் மட்டும் என்ன விதிவிலக்கா தன் உதட்டோரம் புன்னகைத்தவாறே அவள் முன்பு மண்டியிட்ட படி அவளது பூவினும் மென்மையான கரங்களை மென்மையாய் பற்றினான் .... அவள் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் ... அதைக் கண்டவனின் உதட்டில் ஒருவித புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது ...
ஹோட்டலில் மீராவின் அறையில் ஜிஷா மெத்தையில் படுத்திருக்க அவளது நண்பர்கள் அவளைச் சுற்றிப் பல கேள்விகளுடன் நின்றுகொண்டிருந்தனர்...
" ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கேன்னு நீ சொன்னதும் நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா " - என்று அஷோக் ஆரம்பித்துவைக்க ... அவனை தொடர்ந்து மீரா , ஷைலஜா கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க ...
" ப்ளீஸ் எதுவும் கேட்காதீர்கள் பதில் சொல்லற நிலைமையில் நான் இல்லை ப்ளீஸ் " - என்று அவர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பதிலைக் கூறினாள் ....
" அதான் ஏன் ?? அப்படி என்னாச்சு ??.... எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு " - அசோக் அவளது அருகில் வந்து அமர்ந்தபடி கேட்க ...
" ப்ளீஸ் அசோக் இன்னைக்கு வேண்டாம் கண்டிப்பா சொல்கிறேன் " - குரல் உடைந்து ... வார்த்தைகள் தெம்பற்று வர ... அவளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு அஷோக்கும் ஷைலஜாவும் அங்கிருந்து கிளம்பினர் .
இப்பொழுது அறையில் ஜிஷாவுடன் மீரா மட்டும் இருக்க ... ஓடிச்சென்று தன் தோழியை கட்டியணைத்துக்கொண்டவள் ... தேம்பித் தேம்பி அழத் துவங்கினாள்... அவள் விழிகளில் இருந்து விடாமல் வழிந்த கண்ணீர்த் துளிகள் மீராவுக்குப் பயத்தை ஏற்படுத்த ...
சிறிது நேரம் கழித்து ஜிஷா ஆசுவாசம் அடைந்த பிறகு அவளது மனவாட்டத்திற்கான காரணத்தை மீரா கேட்டாள் ... தயக்கம் இருந்தாலும் அந்த நொடி தன் மன பாரத்தை யாரிடமாவது இறக்கிவைக்க வேண்டிய நிலையில் இருந்ததால் ஜிஷா ஏஞ்சலை சந்தித்ததில் ஆரம்பித்து நடந்த அனைத்தையும் கூறினாள் ....
கேட்டதும் மீராவின் முகம் கோபத்தில் சிவந்தது ...
" அவளை லவ் பண்ணிட்டு ஏன் டி உனக்கு முத்தம் கொடுத்தான் "
" தெரியல ... ரொம்ப ஒருமாதிரியாகிடுச்சு "
" அவன் என்ன உன்னை யூஸ் பண்ண நினைக்கிறானா ??"
" அவன் முன்னாடியெல்லாம் அப்படி கிடையாது "
" என்ன அப்படி கிடையாது... ஒரு அஞ்சு நாள் பழக்கத்தை வச்சு அப்படி என்ன அவன் மேல் உனக்கு இவ்வளவு நம்பிக்கை அதுவும் இவ்வளவு நடந்த பிறகு அவனுக்கு சப்போர்ட் பண்ற .... எதை வச்சு நீ அவனை இவ்வளவு விரும்புகிற " - பதிலை எதிர்பார்த்து அழுத்தமாய் கேட்டாள் ...
ஜிஷாவின் நினைவுகள் ஐந்து வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நோக்கிப் பயணித்தது ...
அது தான் அந்த ஐந்து நாள் கேம்ப்பின் இறுதி நாள் ... முதல் சந்திப்பிலேயே அஸ்லனிடம் தன் மனதைப் பறிகொடுத்தவள் ...அவன் அவளிடமும் மற்றவர்களிடமும் முக்கியமாகப் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையும், மனதில் பட்டத்தைத் தயிரியமாகக் கூறும் அவனது குணமும் நாளுக்கு நாள் அஸ்லன் மீது அவள் கொண்டுள்ள காதலை அதிகரிக்கச் செய்ய ... காதல் நோயில் வசப்பட்டாள் ... அஸ்லனை பற்றி முழுவதும் தெரியாமல் அவன் மீது தீராத காதல் கொண்டாள் ...
இன்னும் ஒருநாளில் பிரியப் போகிறோம் என்கின்ற பரிதவிப்பில் தன் மனதில் உள்ளதை அவனிடம் எப்படியும் கூறிவிட வேண்டும் என்கின்ற ஆவலில் அவனைத் தேடி தன் விழிகளைச் சுழலவிட்டாள் .... ட்ரிபின் இறுதி நாள் என்பதால் கெஸ்ட் ஹவுஸ் வழக்கத்தை விடச் சற்று அதிகமாகவே ஆட்டம் பாட்டு என்று களைக்கட்ட ... அஸ்லனை காண்பதே அவளுக்குச் சவாலாய் இருந்தது ...
" எங்க டா இருக்க " என்று தன் மனதிற்குள் பேசியவாறே வாசல் பக்கம் திரும்பிய ஜிஷா ஒரு நொடி மூச்சு விடவே மறந்தாள் ...
வாயிலில் கருப்பு நிற வி கட் டீ ஷட்டில் கம்பீரமாய் நடந்து வந்த அஸ்லனின் தோரணையில் தன்னையே மறந்தாள் .... தன் நண்பன் மிதுனுடன் பேசியபடி வந்த அஸ்லன் தன் எதிரில் நின்றிருந்த ஜிஷாவின் எழிலில் தன் நிலைதடுமாறினான் ...
அவள் பார்வையும் தன் மீதே நிலைத்திருப்பதை உறுதி செய்தான் ... எவ்வளவோ அடக்கி பார்த்தான் அடங்காத மனம் அடங்க மறுத்து ... ஜிஷாவின் அழகை ரசித்தது
' செனோரிட்டா ' அவனது உதடுகள் தன் நிலையை மறந்து முணுமுணுக்க, அப்பொழுது செலீனாவை கரம்பிடிப்பதாக தன் தந்தைக்கு தான் செய்து கொடுத்த சத்தியம் நினைவிற்கு வர .... அவன் மனது அவளிடம் பாயத்துடிப்பதை நினைத்து மிகவும் அஞ்சியவன் ... வேறு திசையை நோக்கிச் சென்றான் ...
" என்ன இவன் இன்றைக்கு ரொம்ப அழகா இருக்கான் ... சத்தியமா முடியலா எப்படி இவன் கிட்டச் சொல்ல போகிறோம் ... அவனை தூரத்துல பார்த்தாலே உடம்பெல்லாம் நடுங்குதே " - அவளது மனம் தவித்தது ... ஆனால் அவனோ தன் மனதிற்குள் அவளையே நினைத்துக்கொண்டிருந்தாலும் ... வெளியில் அவளைக் கண்டுகொள்ளாததைப் போல மிதுனிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான் ...
சிறிது நேரத்தில் அங்கிருந்த அனைவரும் ஜோடிகளாக இழைக்கப்பட்ட இசையின் தாளத்திற்கேற்ப நடனம் ஆட ... ஜிஷாவுக்கு அஸ்லனுடன் நடனம் புரிய ஆசையாக இருந்தது ... ஆனாலும் அவனிடம் கேட்கத் தயங்கியபடி அதே இடத்திலே அவள் நின்றுகொண்டிருக்க அங்கே வந்த வெயிட்டர் அவளிடம் குடிப்பதற்குப் பானம் வேண்டுமா என்று கேட்டார் ...
இரண்டு விதமான பானங்கள் இருப்பதைப் பார்த்தவள் கேள்வியாய் அவனைப் பார்க்க .... அவளது பார்வையிலேயே புரிந்து கொண்டவன் ,
" மேம் இது ஆல்ககால், இது ஃபூருட் ஜூஸ் "
" ஓ " என்றவள் ... சில நொடிகள் யோசித்துவிட்டு வெயிட்டர் தடுக்க தடுக்க ... மதுபானம் நிரம்பிய கிளாஸை ஒன்று இரெண்டு என்று கசக்க கசக்க தன் வாயில் சரித்தாள் ...
" மேம் ஆனால் இது ஆல்ககால் ... இது நீங்கச் சாப்பிடக் கூடாது அஸ்லன் சார் நீங்க ஃபூருட் ஜூஸ் மட்டும் தான் குடிப்பீங்கன்னு சொல்லிருக்காரு "
" அப்படியா இன்றைக்கு இது தான் எனக்கு வேண்டும் ... போங்க நிறையக் கொண்டு வாங்க " - என்றவள் ... லேசாக உளறியபடி அஸ்லனின் அருகில் சென்றாள் ...
அவனை நெருங்கிய ஜிஷா ," ஹாய் அஸ்லன் " -என்றாள் கொஞ்சும் குரலில்
" ஹாய் " - அவளை தன் எதிரே கண்டதும் திடுக்கிற்றான் ...
" வில் யு டான்ஸ் வித் மீ " - மத்த ஜோடிகளைக் காட்டியபடி கேட்டாள் . அவனுக்கு அடுத்த அதிர்ச்சி...
முதலில் தயங்கியவன் பிறகுத் தன் ட்ரேட்மார்க் இளநகையுடன் ," யா இட்ஸ் மை ப்ளஷர் " என்று அவளது மென்கரங்களை மென்மையாய் பற்றியபடி டான்ஸ் ஃப்ளோருக்கு நடுவே அழைத்துச் சென்றான் .
மிக அருகில் தன்னவளை தன் எதிரில் கண்டவன் மீண்டும் தன் நிலை தடுமாற ... அனைத்தையும் மறந்து அவளுடைய கரத்தை சுண்டி இழுக்க .... சற்றென்று அவன் நெஞ்சில் வந்து மோதினாள் ...
ஒரு கையை அவளது கையுடன் கோர்த்தவன் ... தன் மறு கையை அவளது இடையில் பதித்தான் ... அவளது நெருக்கம் அவனை மயக்க .... அவள் அருந்திய மதுவோ அவளை வெகுவாய் மயக்கியது ... அவன் ஒருமுறை சுற்றி விட்டதுக்கே நிலைதடுமாறி அவன் மீது சரிந்தாள் ...
" என்னாச்சு " அவன் பதறியபடி கேட்க ..
தட்டுத்தடுமாறி நின்றவள் ஒருவித புன்னகையுடன் அஸ்லனை பார்த்து,
" ஒண்ணுமில்லையே நான் நல்லா இருக்கேன் " - விசித்திரமாய் சிரித்தாள் ... அனைத்தும் புரிந்த அவனுக்கு ' ஐயோ ' என்றானது ...
' பசங்க யாரும் வேணும்னே இவளுக்கு ட்ரிங்க்ஸ் குடுத்துட்டாங்களோ ' என்று மனதிற்குள் எண்ணியவன் அவளிடம் ," உனக்கு யாரு ட்ரிங்க்ஸ் கொடுத்தது "
" எனக்கா .... ம்ம்ம் யாரு ?? ஹான் அவன் தான் வா அங்க இருக்கான் நான் காட்டுறேன் " என்றவள் அவனது சட்டையைப் பற்றியபடி இழுத்துச் செல்ல .. அவளது திடீர் செய்கையில் திணறிய அஸ்லன் ," ஏய் ஜிஷா விடு யாரவது பார்க்க போறாங்க " - கெஞ்சினான் ... ஆனால் அது எதையும் தன் காதில் வாங்காதவள் அவனை அழைத்துக்கொண்டு நேராக ஹாட் ட்ரிங்க்ஸ் இருக்கும் இடத்திற்குச் சென்று ... அங்கே நின்று கொண்டிருந்த வெயிட்டரை காட்டி
" இவன் தான் எனக்குக் குடிக்க கொடுத்தான் " - அஸ்லனிடம் கூறினாள் ...
" இவங்களுக்கு ட்ரிங்க்ஸ் ஏன் குடுத்தீங்க ??... இவங்க அதெல்லாம் குடிக்க மாட்டாங்க " - கோபத்துடன் கேட்டான் ..
" அப்படி அஸ்லன் தான் நல்லா கேளு ... " - என்றாள் அரைமயக்கத்தில்.
" சார் அவங்க பொய் சொல்றாங்க நான் சொல்ல சொல்ல கேட்காம அவங்க தான் குடிச்சாங்க "
" பொய்யா !!... நானா !! ... நோ நெவர் நான் பொய் சொல்ல மாட்டேன் ... ஜிஷா பொய் சொல்ல மாட்டா ... அவன் தான் ஏமாற்றித் தந்தான் " - முட்டைக்கண்ணை விரித்து சத்தியம் செய்தாள்.
" சத்தியமா இல்லை சார் "
" சத்தியமா இல்ல சார்...... " - வெய்ட்டரை போலப் பாவலா செய்து சத்தமாகச் சிரித்தவள் கால் தடுமாறி கீழே சரியப் போக உடனே தாங்கி பிடித்தான் அஸ்லன்....
உடனே அவனிடம் இருந்து விலகிய ஜிஷா .... " ஏய் குட்டி பையலே போ போய் அக்காக்கு குடிக்க ஏதாவது கொண்டு வா " என்றவள் - தன் வாய்க்கு வந்தபடி ஏதேதோ உளறிக்கொண்டு நடக்க ... " குட்டி பயலா நானா " என்றபடி அவளைச் சென்று பிடித்த அஸ்லன் யாரும் பார்ப்பதற்குள் அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றான் ...
அவளும் அவனது பிடியில் இருந்து தப்பிப்பதற்காக திமிறிக்கொண்டே வந்தாள் ... ஆனால் அவனோ விடுவேனா என்பது போல அவளை தன்னுடன் இறுக்கமாய் பிடித்திருந்தான் ...
" ஏய் வெள்ளைக்காரா என்னை ஏன் வெளியிலே கூட்டிட்டு வந்த "
" ம்ம்ம் என்ன வெள்ளைக்காரனா அது சரி அப்புறம் ... இது என்ன ம்ம்ம் புதுசா ட்ரிங்க்ஸ் எல்லாம் அடிச்சிருக்க பயங்கர ஷாக்ல இருக்கிறேன் தெரியுமா "
" ட்ரிங்க்ஸா அவ்வாவா " - என்று தன் வாயைப் பொத்தியவள் மீண்டும் " சீ குடி குடியைக் கெடுக்கும் ... நான் நோ நெவர் ... ஜிஷா தாமஸ் வில் நெவர் ட்ரின்க் இன் ஹேர் லைஃப் ... அந்த வெய்ட்டர் தான் குடுத்துட்டான் " - என்று சிரித்தாள் ...
" ஏன் சிரிக்கிற " - அவன் கேள்விக்கு ஒரு மார்க்கமாய் ஜிஷா தன் வாயில் கைவைத்தபடி சிரிக்க ..
" ஏன் சிரிக்கிற உன்னைத் தான் "
"ம்ம்ம்ம் சொல்லுவேன் நீ கோபப்படாத ... இப்படி தான் உன் கிட்டப் பொய் சொன்னேன் ... நீயும் லூசு பையன் மாதிரி நம்பிட்ட .... லூசு பையா லூசு பையா " - வாய்விட்டுச் சிரித்தபடி அவன் கன்னத்தைத் திரும்பத் திரும்ப தட்ட ... தன் முன் குழந்தையாய் மாறியிருந்த தன்னவளை காதலாய் பார்த்தான் ...
" அப்போ வேணும்னே குடுச்சிருக்க ... ஏன் ட்ரின்க் பண்ணின "
" ஏன் இப்போது கோபமா கேட்கிற " - உதட்டைப் பிதுக்கியபடி பொய்யாய் நடித்தாள் ...
" ஏன் ட்ரின்க் பண்ணினன்னு தானே கேட்டேன் ? அதுக்கு ஏன் அழுதுகொண்டு இருக்க .. பாரு நீ ட்ரின்க் பண்ணினதுனால எப்படி உளறிட்டு இருக்கன்னு "
" நானா நோ நான் உளறலையே சொல்லப்போனா நான் எவ்வளவு ஸ்டெடியா இருக்கிறேன் தெரியுமா " - என்று அவன் மார்பில் விழுந்து சிரிக்க ... புன்னகைத்தவன் தன்னவளை தன் கரங்களில் தாங்கிக்கொண்டான் ...
" நான் குடிக்கிறதுக்கு நீ தான் காரணம் " - என்றவள் திடீரென்று அவன் மார்பில் அவன் தடுக்க தடுக்க தன் கரங்கள் ஓயும் வரை குத்தினாள்...
" ஜிஷா போதும் ஏன் அடிக்கிற "
" நீ ஏன் இவ்வளவு அழகா பிறந்திருக்க... உன்னைப் பார்த்தாலே என் கையெல்லாம் நடுங்குது ... ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டிக்கிற ... நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணிட்டு இருக்கேன்னு உனக்கு தெரியுமா? இல்லை தெரியாதா ? சொல்லு டா முட்டாளே " - என்றபடி அவன் மார்பில் தன் முகத்தைப் புதைக்க ...
" முட்டாள் தான் நான் ... என் கண்ணு முன்னாடி என் வாழ்க்கைய வச்சிட்டு அனுபவிக்க முடியாத அதிர்ஷ்டம் கெட்ட முட்டாள் நான் " - விரக்தியுடன் கூறினான் ....
சற்றென்று நிமிர்ந்தவள் அவன் முகத்தைப் பார்த்து ...
" என்ன சொன்ன "
" என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும் ... வெறும் அஞ்சு நாள்ல என்னை நீ எப்படி காதலிச்ச "
" ஏன்னா நான் உன்னை நம்புகிறேன் ... உன்னை மட்டும் " - அதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் அஸ்லன் பூரித்துப் போனான் .. அவளோ தொடர்ந்து
" உன்கிட்ட நான் ப்ரொபோஸ் பண்ணவேண்டும் ... கவிதை எல்லாம் யோசிச்சு வைத்திருந்தேன் ...ம்ம்ம்ம் பெண்ணவள் ... நானே ம்ம்ம் மறந்துட்டேன் ... வெயிட் " - என்றவள் யோசிப்பது போலப் பாவலா செய்து , " ஹான் ஞாபகம் வந்திருச்சு நான் உனக்கு ... இல்லை அழிச்சிறு .... ம்ம்ம் ஆண்மகனே இல்லை சீ சொதப்பிட்டேன் ... எல்லாத்தையும் மறந்துட்டேன் டா ... இனிமே இதெல்லாம் சரி பட்டு வராது " என்றவள் ... அவன் இதழை நோக்கியபடி தன் பாதத்தை உயர்த்த முடியாமல் அவன் உயரத்திற்கு உயர்த்த முற்பட ... அவளைத் தடுத்தவன் ,
" வேண்டாம் ஜிஷா இது சரியா வராது..... தப்பு வேண்டாம் ... உண்மை தெரியும் பொழுது என்னை விட நீ அதிகமா கஷ்டப்படுவ ... " - தன் உணர்ச்சிகளை மிகவும் சிரமத்துடன் கட்டுப்படுத்தினான் ...
" இது தான் உன்கிட்ட எனக்கு புடிச்சது " என்றவள் அவனது கன்னத்தைக் கிள்ளினாள் ...
" வேண்டாம் ஜிஷா "
" ஏன் "
" சொன்னா புரிஞ்சிக்கிற நிலைமையில் நீ இல்ல"
" சொல்லு புரிஞ்சிக்கிறேன் "
" நான் கல்யாணம் பணிக்க போறேன் "
" ஓ இப்பவே பண்ணிக்கோ " என்றவள்
உடனே அருகில் கிடந்த பெஞ்சின் மீது சென்று ஏறி ... பின்னால் நிகழப்போகும் விளைவைப்பற்றி அறியாமல் அவனை தன் அருகில் அழைத்து ," இப்போ சரியா இருக்கும் " - என்றவள் அவன் சுதாரிப்பதற்குள் தன்னவன் இதழில் தன் முதல் முத்தத்தைப் பதித்தாள் ... அடுத்தக்கனமே அவளது கன்னத்தில் 'பளார் ' என்ற சத்தத்தில் இடியென அடி ஒன்று இறங்கியது ... தன் கன்னத்தைத் தாங்கிப்பிடித்தபடி ஜிஷா கீழே விழுந்தாள்...
அஸ்லனின் விழிகள் கோபத்தில் சிவந்திருந்தது ...

- தொடரும்
Last edited: