• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் பராக் (பெருமைகள் ) சொல்லும் சுலோகம்: பொதுவாக அந்த காலத்து திரைப்படங்களில் பார்த்து இருப்போம் ஒரு ராஜா அரியணைக்கு வரும் போது முன் அறிவிப்பாக அந்த குலத்தின் பெருமைகளை சொல்லும் வழக்கம் இருந்தது. ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ குல திலக. என ஆரம்பிக்கும் என்பது நாம் திரைப்படங்களில் பார்த்தது தான்.. சாதாரண ஒரு தேசத்தை சில காலங்கள் ஆளும் மன்னருக்கே பராக்கு சொல்லுதல் வழக்கத்தில் உள்ளது என்றால்.. சகலத்தையும் படைத்தது காத்து ரட்சிக்கும் பரதேவதையாம், மகா ராணியாம் ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரியாம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு பராக்கு இருக்காதா என்ன.. ஆம் இதோ அந்த பராக்.. ஆனால் இது ராஜாக்களுக்கு சொல்வது போல எல்லா நேரங்களிலும் சொல்லப்படுவது இல்லை..
பிரம்மோற்சவம் நிறைவடைந்து தினசரி விடையாற்றி உற்சவத்திற்கு அம்பாள் எழுந்தருளி ஊஞ்சல் கண்டு தனது ஆஸ்தானத்திற்கு எழுந்தருளும் போதும், பிரம்மோற்சவத்தின் 6 ஆம் திருநாள் அன்று காலை நடைபெறும் கந்தப்பொடி இடிக்கும் நிகழ்விலும் மட்டுமே சொல்ல படுகிறது.. இதோ அந்த சுலோகம் ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகா
  1. ஸ்ரீ ஜய ஜய ஸ்ரீ காமகிரீந்திர நிலயே!
  2. ஜய ஜய ஸ்ரீ காமகோடி பீடஸ்திதே!
  3. ஜய ஜய ஸ்ரீ த்ரிஸத் வாரிம் சத்கோண ஸ்ரீ சக்ராந்தரால பிந்து பீடோ பாரிலஸத் பஞ்ச ப்ரஹ்மமய மஞ்சமத்யஸ்த ஸ்ரீ சிவகாமேச வாமாங்க நிலயே!
  4. ஜய ஜய ஸ்ரீ விதி ஹரிஹர ஸுரகண வந்தித சரணார விந்தயுக லே!
  5. ஜய ஜய ஸ்ரீமத் ரமாவாணிந்த்ராணி ப்ரமுக ரமணீ கரகமல ஸமர்பித சரண கமலே!
  6. ஜய ஜய ஸ்ரீ நிகில நிகமாகம ஸகல சம்வேத்யமான விவித வஸ்திராலங்கிருத ஹேம நிர்மித அனர்கபூஷண பூஷித திவ்ய மூர்த்தே!
  7. ஜய ஜய ஸ்ரீ அனவ்ரதாபிஷேக தூபதீப நைவேத்யாதி நானாவிதோபாசாரை: பரிஷோபிதே!
  8. ஜய ஜய ஸ்ரீ ஸ்ரீ காஞ்சி நகர் யாம் தவாத்ரிம்சத் தர்மப்ரதிபாதனார்தம் ஸ்தாபித ஹேமத்வஜாலங்கருதே!
    9.ஜய ஜய ஸ்ரீ ஸகல மந்த்ர தந்த்ர யந்த்ரமய பராபிலாகாச ஸ்வரூபே!
  9. ஜய ஜய ஸ்ரீ காஞ்சி நகர் யாம் காமாக்ஷி இதி ப்ரக்யாத நாமாங்கிதே !
  10. ஜய ஜய ஸ்ரீ மஹா த்ரிபுர சுந்தரீ பஹு பராக்!
    சுபம் !
அம்பிகைக்கு உரிய இந்த ஸ்ரீ காமாக்ஷி சூர்ணிகாவை நாமும் அவ்வப்போது வாசித்து அவள் பெருமைகளை மனதார சொல்லி வாயார வாழ்த்தி நலம் பெறுவோம்.. ஜய ஜய காமாக்ஷி
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
ரொம்ப நன்றி நீங்கள் இதை பகிர்ந்ததுக்கு சிஸ்.
1642957737523.png1642958074916.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top