• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஸ்ரீ சாயி விரத விதிமுறைகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸ்ரீ சாயி விரத விதிமுறைகள்

1. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் அனுஷ்டிக்கலாம்.

2. இந்த விரதத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் ஏற்கலாம்.

3. இந்த விரதம் அற்புதப் பலன்களைத் தரவல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையிலும், சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதைத் தூய மனதில் சாயிபாபாவை எண்;ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

5. காலை அல்லது மாலையில் சாயிபாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்கவும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும். பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும் நைவேத்தியம் வைத்து பிரசாத்தை விநியோகிக்கவும்.

6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.

7. ஒன்பது வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி சிரத்தையுடன் செய்யலாம்.

8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.

9. விரதத்தை ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலோ விரதம் இருக்க முடியவில்லை என்றால் அந்த வியாழக் கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அடுத்த வியாழக் கிழமை விரதம் இருந்து, ஒன்பது வியாழக் கிழமைகள் நிறைவு செய்யவும்.

விரத நிறைவு (உத்யாபனம்) விதிமுறைகள்

1. ஒன்பதாவது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று ஐந்து ஏழைகளுக்கு உணவு (தங்களால் இயன்ற உணவு) அளிக்க வேண்டும். நேரடியாக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும்.

2. சாயிபாபாவின் மஹிமை மற்றும் விரத்தைப் பரப்புவதற்காக, நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம், தெரிந்தவர் என்று இந்த விரதப் புத்தங்களை 5, 11, 21 என்று தங்களால் இயன்ற அளவு விநியோகம் செய்யலாம்.

3. ஒன்பதாவது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து, பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தைப் பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும்.

மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

ஸ்ரீ சாயி விரத கதை

குஜராத்திலுள்ள ஒரு ஊரில் மனோகரி என்று பெண்மணியும், அவரது கணவர் மஹேஷ_ம் வசித்து வந்தார்கள். இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்புடன், மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால் மஹேஷோ சுபாவத்தில் முரட்டுத்தனம் மிக்கவராகவும், சண்டைக்காரராகவும் இருந்தார். வரைமுறையற்ற பேச்சு, சிடுமூஞ்சித்தனம் போன்ற துர்க்குணங்கள் அவரிடம் இருந்தன. அதனால் அவரது அக்கம்பக்கத்தினர் மகேஷால் அடிக்கடி தொல்லைகள் அடைந்தனர்.

ஆனால் மனோகரி அம்மாள், இதற்கு நேர் மாறாக மிகவும் ஒழுக்க நெறியுள்ளவராக இருந்தார். இறைவன் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு, கணவரது குணத்தை சகித்துக் கொண்டு இருந்தார்.

வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த மஹேஷின் வியாபாரம், கொஞ்சம் கொஞ்சமாக நஷ்டமடைய ஆரம்பித்து, நாளடைவில் வருமானம் முற்றிலும் நின்றுபோய் விட்டது.

அதன்பிறகு மஹேஷ் வியாபாரத்தைக் கவனிக்கப் போகாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்க ஆரம்பித்தார். அதனால் அவரது குணம் மேலும் மோசமடைந்தது. முன்பைவிட சண்டையும் சச்சரவும் அதிகமானது.

அவ்வாறு இருக்கையில் ஒரு மதிய நேரம், முதியவரான ஒரு சாது, மஹேஷின் வீட்டு வாசலருகே வந்து நின்றார். அவரது முகத்தில் ஒளியும் தேஜஸ{ம் நிறைந்து வழிந்தது.

அவர் மனோகரி அம்மாளிடம், சிறிது சாதமும் பருப்பும் அளிக்கும்படிக் கூறினார். மனோகரி அம்மாளும் சாதம், பருப்பை அளித்துவிட்டு, சாதுவை இருகைகள் கூப்பி வணங்கினார்.

சாதுவும் மனோகரியை நோக்கி, “சாயி உங்களை சுகமாக வாழ வைப்பார்!” என்று ஆசீர்வதித்தார்.

மனோகரி அம்மாளும், “ஐயனே! சுகம், சாந்தி எல்லாம் இனி எங்கள் வாழ்வில் இல்லை போலிருக்கிறது!” என்று தனது துன்பக் கதையை சாதுவிடம் கூறி வருந்தினார்.

சாதுவும், ஸ்ரீ சாயிபாபாவின் விரதத்தைப் பற்றி கூறலானார்.

“ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ ஆகாரங்கள் அல்லது ஒருவேளை உணவு உட்கொண்டு, முடிந்தால் சாயிபாபாவின் கோயிலுக்குச் செல்லவும்.

வீட்டிலேயே சாயிபாபாவுக்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்யவும். சாயி விரதம் ஒன்பது வாரங்கள் செய்து, விதிமுறைப்படி நிறைவு செய்யவும்.

ஏழைகளுக்கு உணவு அளித்து, சாயி விரதப் புத்தகங்களைத் தன்னால் இயன்ற அளவு 5, 11, 21, என்ற எண்ணிகையில் மக்களுக்கு விநியோகிக்கவும்.

இவ்வாறு சாயி விரதத்தின் மகிமையைப் பரப்பினால், சாயிபாபா உங்கள் அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பார்! இந்த விரதம் கலியுகத்திற்கு ஏற்ற மிக உன்னதமான அற்புதங்கள் நிகழ்த்தும் விரதம்!

இந்த விரதம் கண்டிப்பாக அனைவருக்கும் மிகுந்த பலன்கள் அளிக்கவல்லது. ஆனால் விரதமிருப்போர் சாயிபாபாவின் மேல் உறுதியான நம்பிக்கையும், பக்தியும் வைத்தல் மிகவும் அவசியம். பொறுமையும் மிக மிக அவசியம்.

யார் மேற்கூறியபடி விரதமும், நிறைவும் செய்கிறார்களோ அவர்களுடைய விருப்பங்களை சாயிபாபா நிச்சயம் நிறைவேற்றுவார்!” -என்று ஆசீர்வதித்துவிட்டுச் சென்றார்.

மனோகரி அம்மாளும் ஒன்பது வியாழக் கிழமைகள் விரதம் இருந்தார். ஒன்பதாவது வியாழக்கிழமையன்று ஏழைகளுக்கு உணவு அளித்தார். சாயி விரதப் புத்தங்களையும் விநியோகித்தார்.

அவர்கள் வீட்டில் சண்டை, சச்சரவு எதுவும் இல்லாமல் போனது. வீட்டில் சுகம், அமைதி, ஆனந்தம் நிலவத் தொடங்கியது.

கூடவே மஹேஷின் முரட்டு சுபாவமும் மாறி, அவர் நற்குணவானாக மாறினார். முடங்கிப் போயிருந்த அவரது வியாபாரம் பெருகி, சிறிது நாட்களிலேயே செல்வம் பெருகியது. கணவன் மனைவி இருவருமே ஆனந்தமாக வாழ்ந்தனர்.

இவ்வாறு இருக்கையில், ஒருநாள் மனோகரி அம்மாளின் மைத்துனரும், அவரது மனைவியும் சூரத்திலிருந்து வந்திருந்தனர்.

அவர்கள், தங்கள் குழந்தைகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், தேர்வில் தோற்றுப் போய்விட்டனர் என்றும் கூறி வருந்தினர்.

உடனே, மனோகரி அம்மாள், தான் கடைப்பிடித்த ‘ஒன்பது வியாழக்கிழமைகள் விரதத்தின் மகிமை’யைப் பற்றி அவர்களிடம் கூறினார்.

கூடவே, “சாயி பக்தியினால் குழந்தைகள் நன்றாகப் படிக்கத் தொடங்குவர். ஆனால் சாயிபாபாவின் மீது உறுதியான நம்பிக்கையும், விசுவாசமும் வைத்தல் வேண்டும்;: சாயி அனைவருக்கும் அருள்புரிவார்” - என்றும் கூறினார்.

மைத்துனரின் மனைவி விரத முறைகளைக் கேட்டார். மனோகரி அம்மாளும் விரதம் பற்றிக் கூறலானார்.

ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு அருந்தி இந்த விரதம் இருக்க வேண்டும். ஒன்பது வியாழக்கிழமைகளும் சாயிபாபா கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து வரவும். மேலும்,

  • இந்த விரதம் ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வியாழக்கிழமை சாயிபாபா போட்டோவிற்குப் பூஜை செய்யவும்.
  • மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம் நிவேதனம் செய்து, விநியோகம் செய்து சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும்.
  • சாயி விரத கதை, சாயி ஸ்மரணை, சாயி பாமாலை, சாயி பாவனி இவற்றைப் பக்தியுடன் படிக்கவும்.
  • ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவு அளிக்கவும்.
  • ஒன்பதாவது வியாழக்கிழமை இந்த சாயி விரதப் புத்தகங்களை இலவசமாக 5, 11, 21 என்ற எண்ணிக்கையில் விநியோகிக்கவும்.
மனோகரி அம்மாளின் மைத்துனரும், அவரது மனைவியும் இதைக்கேட்டுவிட்டு சூரத் சென்று விட்டனர்.

சில நாட்களிலேயே சூரத்திலிருந்து மனோகரி அம்மாளுக்குக் கடிதம் வந்தது. அதில்,

அவர்களது குழந்தைகள் சாயி விரதம் இருப்பதாகவும், மிக நன்றாகப் படிக்கத் துவங்கி விட்டனர் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

மேலும் அவரும் இந்த விரதம் இருந்ததாகவும், விரதப் புத்தகங்களை அலுவலகத்தில் விநியோகம் செய்ததாகவும் எழுதி இருந்தார்.

மேலும், அவரது தோழி சாருவின் மகளுக்கு சாயி விரத பலனாக மிக நல்ல இடத்தில் வரன் அமைந்து, நல்ல விதமாகத் திருமணம் நடந்தது.

அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவரின் நகைப்பெட்டி தொலைந்து போய் இருந்தது. அவரும் சாயி விரதம் கடைப்பிடித்து, 2 மாதங்களுக்குப் பிறகு நகைப்பெட்டி திரும்பக் கிடைத்துவிட்டது. (யார் திருப்பிக் கொண்டு வைத்தார் என்று தெரியாது) இப்படிப் பல அற்புதங்கள் நடந்தன.

மனோகரி அம்மாளும் சாயி விரத மகிமையை நன்கு புரிந்து கொண்டார். ஓ! சாயி! இப்படி எல்லோரின் மீது பொழியும் கருணையை என் மேலும் பொழிவீராக!
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

ஸ்ரீ சாயிநாதர் திருவடி

சாயி நாதர் திருவடியே

ஸம்பத் தளிக்கும் திருவடியே

நேயம் மிகுந்த திருவடியே

நினைத்த தளிக்கும் திருவடியே

தெய்வ பாபா திருவடியே

தீரம் அளிக்கும் திருவடியே

உயர்வை அளிக்கும் திருவடியே

ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் காயத்ரி

ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி ஸ்ரீநிவாஸாய வித்மஹே

ஸர்வ தேவாய தீமஹி

தந்நோ ஸர்வ ப்ரஜோதயாத்



ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்



பத்ரி க்ராம ஸமத் புதம்

த்வாரகா மாயீ வாசினம்

பக்தா பீஷ்டம் இதம் தேவம்

சாயி நாதம் நமாமி:

ஸ்ரீ சாயி ஸ்மரணை

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

பக்தர் உம்மை அழைக்கின்றோம்!

விருப்பம் ஈடேற வேண்டும்!

பக்தி பலமுற வேண்டும்!

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி! 1



துக்கம் போக்க வாரும் சாயி!

ஆனந்தம் அளிக்க வாரும் சாயி!

சேய் உமை அழைத்தேன் சாயி!

தாய் மனதோடு இளகுவாய் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி! 2



கீர்த்தனம் சாயி, பூஜை சாயி!

வாழ்வும் சாயி, வளமும் சாயி!

ஆனந்தம் சாயி, செல்வம் சாயி!

அற்புதம் சாயி, அபயம் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி! 3



ஷீர்டி வாசி எங்கள் சாயி!

பக்தரின் இனிய அன்பர் சாயி!

கருணைக் கடலே எங்கள் சாயி!

அருள் பார்வை பாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!



கிழக்கும் சாயி மேற்கும் சாயி!

வடக்கும் சாயி தெற்கும் சாயி!

எத்திசையில் நீ இருந்தாலும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!



ஹிந்து சாயி, முஸ்லிம் சாயி!

ஜீவன் சாயி, யாத்திரை சாயி!

யேசு சாயி, குருநானக் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!



தர்மம் சாயி! கர்மம் சாயி!

தியானம் சாயி! தானம் சாயி!

தூணிலும் சாயி, துரும்பிலும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!



திருப்தி சாயி முக்தி சாயி!

பூமி சாயி ஆகாயம் சாயி!

சாந்தி சாயி ஓம் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!



சத்யம் சாயி, சிவம் சாயி!

சுந்தரம் சாயி, ஈஸ்வரன் சாயி!

இரக்கம் சாயி, எளியவர் சாயி!

அன்பு சாயி, அமைதி சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!



சக்தி சாயி பக்தி சாயி!

சிவன் சாயி விஷ்ணு சாயி!

ப்ரஹ்மா சாயி பஞ்சபூதம் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!

வாரும் சாயி, வாரும் சாயி!
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அருமையான பதிவு சிஸ்டர் Write your reply...
 




SaiDivya

புதிய முகம்
Joined
Apr 28, 2020
Messages
9
Reaction score
1
Location
Chennai
நெய்வேதிய மந்த்ரா

குருவே சாய்! குருவே சாய்!
எனக்கு உணவு அளிக்கும் எந்தன் குருவே சாய்!
இந்த நைவேத்தியத்தை தாழ்மையுடன் படைக்கிறான் சாய்!
இதை ஏற்று கொண்டு என் வாழ்வில் ஒளி வீசுவார் சாய்!
பழம் பால் தேன் படைத்துள்ளேன்!
கங்கை யமுனை காவேரி நீர் படைத்துள்ளேன்!
வெத்தலை பாக்கு ஏலக்காய் படைத்துள்ளேன்!
இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு
என் துன்பம் துடைக்க வாரும் சாய்!​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top