• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

#ஸ்ரீ_பாஞ்சராத்ர_ஸ்ரீஜெயந்தி??? happy krishna jenmastami

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
#ஸ்ரீ_பாஞ்சராத்ர_ஸ்ரீஜெயந்தி???
1599742297897.png
10.9.2020.

???அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி
#ஸ்ரீஜெயந்தி என அழைக்கப்படும் இந்த நாள் #ஆவணி_மாதத்தில் சிம்மம் ராசியில் சூரியன் இருக்கும் சமயம் #அஷ்டமி_திதியும்_ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளான இந்த தினம் #ஸ்ரீஜெயந்தி_தினமாகும் இந்த தினம் ஸ்ரீ #கிருஷ்ண_பகவான்_அவதரித்த_தினமாக_கொண்டாடப்_படுகிறது

#ஸ்ரீ_பாஞ்சராத்ர_ஸ்ரீஜெயந்தி :

வைணவ ஆகமங்களில் #பாஞ்சராத்ரம் #வைகானசம் என்னும் #இரண்டு_விதமான_ஆகமங்கள்_உண்டு. ஆகமங்கள் என்பது #ஆராதனை_முறைகளாகும். #பாக்ன்சராத்ர_ஆகமம் என்பது பத்ரிகாஸ்ரமத்தில்_பகவான்_விஷ்ணு_தானே_நரனும்_நாராயணனுமாகி_நாராயணன்_நரனும்மு_உபதேசித்த_பூஜைமுறைகளாகும், இந்த பூஜை முறை #ஐந்து_ராத்திரிகளில்_சொல்லப்பட்டதால்_பாஞ்சராத்ரம் என்று பெயர் பெற்றது. வைகானச ஆகமம் என்பது பகவான் விஷ்ணு தானே #வகானச_முனிவராகி_சௌனகாதி_முனிவர்களுக்கு உபதேசம் செய்ததாக கூறப்படுவதால் இந்த ஆகமம் வைகானச ஆகமம் என்று கூறப்படுகிறது.
#பாஞ்சராத்ர_ஸ்ரீஜெயந்தி :

பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி என்பது ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் கிருஷ்ணபட்சம் அஷ்டமியன்று கொண்டாடப்படும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். இன்று சூரிய உதயத்தில் சப்தமி அல்லது கிருத்திகை நட்சத்திரம் சம்பந்தம் ஒரு வினாடி ஓம் நமோ நாராயணா இருந்தாலும் அது தோஷமுள்ள நாளாக கருதப்படுவதால் மறுநாள் தான் ஸ்ரீஜெயந்தியாக கொண்டாடப் படவேண்டும். மேலும் சூரிய உதயத்தில் அஷ்டமி ரோகிணி ஆகியவை இல்லாதிருந்தாலும் அன்றே பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி ஆகும்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விரதம்
ஸ்ரீ வைகானச ஸ்ரீஜெயந்தி ஆவணி மாதம் சிம்மத்தில் சூரியன் இருக்கும் சமயம் நடு இரவில் ரோகிணி இருக்கும் சமயம் வைகானச ஸ்ரீஜெயந்தியாகும் அன்று தேய்பிறை அஷ்டமி அர்த்தராத்திரிக்கு முன்பு சிறிதளவு இருந்தாலும் போதுமானது. இவ்வாறு பலவகையிலும் பலவித ஆச்சாரியார்களின் வழிகாட்டுதலின்படி பலவிதமான நாட்களில் பலவித பெயர்களில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

#எட்டு_வகை_கிருஷ்ணர்கள்

ஸ்ரீகிருஷ்ணன் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.
1. சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
8. பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

#கிருஷ்ண_ஜன்மாஷ்டமி:
கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான #கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த #திதியான_அஷ்டமியை_வைத்து_கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

#மதுராவில்_பிறந்து
#கோகுலத்தில்_வளர்ந்து, #துவாரகையிலே_ராஜ்ய_பரிபாலனம் செய்து #பன்னிரெண்டு_ஜோதிர்லிங்க_ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத்_ஷேத்திரத்தில்_பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது.

காலையில் இருந்து #ஸ்ரீமத_பாகவதம், #கிருஷ்ணாஷ்டகம், #கிருஷ்ணன்_கதைகள்_படிக்க_வேண்டும். #துவாதச_மந்திரமான ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்து, மலர்களையும் பழங்களை இனிப்பு வகைகளையும் அவருக்கு படைத்து தூப தீபம் (மணமிக்க ஊதுபத்தி, கற்பூரம் ஆரத்தி) காட்ட வேண்டும். வீட்டிற்கு வரும் கண்ணன் பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும்.

கிருஷ்ணனை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும்!

பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் ஓம் நமோ நாராயணா குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் #ஸ்ரீகிருஷ்ணராக_அவதாரம்_எடுத்தார். இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிகாக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையையும் சமர்ப்பிக்கின்றனர்.

இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்தி பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.

ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராசலீலா, தகி அண்டி என பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது.வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது.

இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்த விதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நடைமுறை கூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான்.மற்ற தேதிகள் போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில், மகாவிஷ்ணு நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம்
.
கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணனாக அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்‘ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது. இப்படி ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள், தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். ஓம் நமோ நாராயணா

அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள், மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

குழந்தை பாக்யம்
குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு, ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சத்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சத்புத்திர பாக்ய யோகத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.

கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

*ஹரே கிருஷ்ணா*

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top