• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

☔குடைக்குள் தூறும் மழையே..8☔

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 52

நாட்டாமை
Author
Joined
Nov 7, 2021
Messages
62
Reaction score
76
☔குடைக்குள் தூறும் மழையே...8☔
..............................................

அதுவரை நடந்த எதுவும் புரியாத ஒரு உறைந்த நிலையில் இருந்தாள் மலர், அவள் தோழி நிஷா , சிலையென இருந்தவளை உலுக்கி,
" என்ன ஆச்சுடி உனக்கு?. இங்க என்ன நடக்குதுன்னு புரியாம, நீ பாட்டுக்கு கல்லு மாதிரி இருக்க! உங்க அண்ணி இதுதான் சமயம்னு உன்னை அவன் கூட அனுப்பி வைக்க ப்ளான் பண்றாங்க! ஏதாவது பேசுடி!" என சொன்னாள்.

வெடுக்கென நிமிர்ந்த மலரின் மனக்கண்ணில், ஒருமுறை நடந்தவை மீண்டும் ஓட, கோபத்தோடு நிமிர்ந்தவள்,"அண்ணி என்ன செய்றீங்க! நான் இவன் கூட போகணுமா? பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் இவன் யாரென்று தெரியாது, இந்தத் தாலியை என் கழுத்துல கட்டி விட்டான் என்ற காரணத்தினாலே இவன் கூட நான் போகணுமா?.. ஆற்றாமையோடு கேட்டாள்.

"பின்ன.. போகாம என்னடி பண்ணுவ? கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்! என்று உனக்கு தெரியாதா? இனிமே இவன்தான் உன் புருஷன், இவன் கூட தான் நீ வாழ்ந்தாகணும், வீட்டில் வாழ வெட்டியா உன்னை ஒருபோதும் என்னால வெச்சுக்க முடியாது என்றவளை, குறுக்கிட முயற்சித்த மூர்த்தியை முறைத்தவள், அவனிடம், "இந்த மாப்பிள்ளை வேண்டாம்னு நான் சொன்னப்ப கேட்டீங்களா? செவத்த தோலு, நல்ல சம்பளம் என்று கட்டிக் கொடுக்க ஆசைப்பட்டீங்களே! அந்த ஆளு பண்ண வேலையை பாருங்க, ஃபேக்டரிய கொளுத்தி இருக்கானாம், இப்படிப்பட்டவங்கிட்ட இருந்து உங்க தங்கச்சி தப்பிக்க இவர் தான் காரணம், இவரும் சாதாரணமானவர் இல்லை, ரகுவிற்கே வேலை தந்த முதலாளி, பணக்காரர்,அதனால அவளை ஒழுங்கு மரியாதையா இவரோட போய் வாழ சொல்லுங்க, அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வர ஐடியா இருந்தா, நீங்களும் வீட்டு பக்கம் வந்துடாதீங்க! என்று தீர்க்கமாய் சொன்னாள் வித்யா.

வாக்குவாதங்கள் தொடர்ந்தன, வித்யாவிடம் பேசி புரிய வைக்க முயன்ற மலருக்கும், மூர்த்திக்கும் ஒன்று புரியவில்லை, வித்யா அவள் மேல் இருக்கும் பாசத்தில் பேசவில்லை, வஞ்சத்தில் பேசுகிறாள் என்பது..

அது வரை பொறுமையாய் பேசிய மலர், பொறுமை இழந்தவளாக, "இந்தத் தாலி என் கழுத்துல இருப்பதுதானே இப்ப பிரச்சனை?' என்று வேகமாக அதை கழட்ட போனாள்.

சுற்றம் பதறியது, தெய்வானை ஓடி வந்து அவளைத் தடுத்து," வேண்டாம் தாயி! தாலியை கழட்டாதே! அது அபசகுணம்! ஒரு பொண்ணுக்கு ஒரு தடவைதான் தாலி ஏறனும்! அதை அவளா கழட்டவே கூடாது!" என்றாள் கண்ணீரோடு..

"தாலி!.. எது தாலி?.. மனசுக்கு புடிச்சவன், மனசார கட்டினால்தான் அது தாலி! யார் மேலேயோ உள்ள கோபத்தில், பழிவாங்க யாரோ, யாருக்கோ கட்டினா அது தாலி ஆயிடுமா?. அர்த்தமே இல்லாத இந்தக் கயிற்றுக்கு கட்டுப்பட்டு, என் வாழ்க்கையை அர்ப்பணித்து அடிமையா நான் வாழணுமா? அப்படி வாழ்ந்தால் தான் நான் நல்ல பொண்ணா?".. வில்லில் இருந்து புறப்பட்ட அக்னி கணைகளாக வெளிப்பட்டது அவளின் கேள்விகள்.

அங்கே அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல யாரும் இல்லை..

"முடிவா நீ என்னதான் சொல்ற?" கேட்டாள் வித்யா.

"என்னால யார்கூடவும் போக முடியாதுன்னு சொல்றேன்! இந்த தாலியை என்னால் சுமக்க முடியாது ன்னு சொல்றேன்.. புரியுதா!"குறையாத கோபத்தோடு சொன்னாள் மலர்.


கூடியிருந்த கூட்டத்தில் இருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண், "அம்மா இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து இருந்தால் இவளுக்கு தெரியும் தாலியோட மகத்துவம்! தாயில்லாமல் வளர்ந்தவ தானே, இப்படி தருதலையாகத்தான் வளர்ந்து நிப்பா! ஏம்பா மூர்த்தி! இவ கிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு, கழுதையை கட்டுனவன் கூட போகச்சொன்னா போகாமல் கல்லு மாதிரி நிக்கறா, அடித்து விரட்டு!" என நாக்கில் நரம்பில்லாமல் பேசினாள்.

மலருக்கு அந்த வார்த்தை தாள முடியாத வேதனையை தந்தது! தான் என்ன தவறு செய்தோம்? எதற்காக இப்படி பேசுகிறார்கள்? என எண்ணிக் குமைந்தாள்.

ஆதியோ, எதுவும் பேசாமல் தூணில் சாய்ந்தபடி, நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான், அவனுக்கு ரகு போலீஸ் உடன் போனதே திருப்தி! மீதியெல்லாம் ஒரு சினிமாவை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான்! தனக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல்..

மாறி,மாறி சுற்றியிருந்த அனைவரும் மலரிடம் வாக்குவாதம் செய்ய, அதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவளால்!

"எல்லோரும் நிறுத்துங்க! உங்களுக்கு என்ன? எனக்கு அவர் தாலி கட்டிட்டார், இனி நான் அவரோட வாழணும்,அவ்வளவு தானே, சரி ஒத்துக்கிறேன் நீங்க வந்த வேலை முடிந்ததா?..சாப்பிட்டுட்டு கிளம்புங்க! நான் போய்க்கிறேன்!" என்றவள், கழுத்தில் இருந்த மாலையை கழட்டி வீசி விட்டு வேகமாய் நடந்தாள்.

வெளி வாசலுக்கு வந்து விட்டவள், பின்னால் திரும்பிப் பார்க்க ,அங்கே ஆதி, அதே நிலையில் நின்று கொண்டிருந்தான்! அவனை முறைத்தவள்,
"என்ன அங்கேயே நின்னுட்டு இருக்க? எல்லோரும் சொன்னது கேட்டுச்சு தானே!" என சத்தமாய் கேட்க, அவள் பேச்சில் அசந்து நின்ற ஆதி, அவளை நோக்கிப் போனான்.

மாணிக்கம் ஓடி வந்து காரை ஸ்டார்ட் செய்ய, பின்னால் ஏறிய மலர், கதவை அறைந்து சாத்தினாள், ஆதி முன்னால் அமர கார் வேகமெடுத்தது!

ஆதி தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான், அவனுக்கு தான் எதற்கு இங்கு வந்தேன்? எதற்காக இந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினேன்? எதற்காக இப்போது இவளை அழைத்துப் போகிறேன் என எழுந்த கேள்விகளுக்கு , பதில் அவனிடமும் இல்லை! ரகுவை கைது செய்ய தான் அவன் வந்ததே! ஆனால் அவனைப் பழிவாங்கும் வேகத்தில், மலரின் கழுத்தில் தாலி கட்டியது அவன் அறிவுக்கு அப்பாற்பட்டது அனிச்சையாய் நடந்தேறியது! அதன் பின் விளைவுகளை அவன் யோசிக்கவே இல்லை! இப்பொழுது காரில் அமர்ந்திருப்பவளை என்ன செய்வது? என்று அவன் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது! கொஞ்ச தூரம் சென்றதும் காரை நிறுத்தச் சொன்னாள் மலர்.

காரிலிருந்து இறங்கியவள் முன்னால் வந்து கதவைத் தட்டி ஆதியை," இறங்கி வா!" என்றாள், அந்த சாலையின் ஓரத்தில் இருந்த மர நிழலில் சென்று நின்றவள், எதிரில் இருந்தவனைப் பார்த்து,

"உனக்கு என்ன நெஞ்சழுத்தம் இருந்திருந்தா இப்படி பண்ணி இருப்பே?. ரகு உன்கிட்ட வேலை பார்ப்பவன், நீ சொல்ற மாதிரி அவன் தப்பு பண்ணியிருந்தாலும் அவனைத்தான் நீ கண்டித்து இருக்கணும், எதுக்காக என்னை தண்டித்தாய்?.அர்த்தமே இல்லாம இருந்த என் வாழ்க்கை, இனிமேதான் அழகா மாறப்போகிறது என்று இருந்தேன், உன்னால மறுபடியும் என் வாழ்க்கை அர்த்தம் இல்லாததா ஆயிடுச்சு! எல்லோரும் சொல்ற மாதிரி நான் உன் கூட வந்து வாழ்வேன் என்று நினைத்தாயா?.. நிச்சயம் மாட்டேன்! பிரச்சனையை பெரிசாக்க வேண்டாம், என் நிலைமை வேடிக்கைப் பொருளாக இருக்கக் கூடாது என்று தான் உன் கூட வந்தேன்! அதுக்காக உன்னோடு வாழ்வேன் என நினைச்சுக்காதே! இப்பவும் சொல்றேன், தங்கத்தால செஞ்சதா இருந்தாலும், இந்தத் தாலி எனக்கு வெறும் ஒரு கயிறு தான்! இதுக்கு மதிப்புக் கொடுத்து, என் வாழ்க்கையை அடமானம் வைக்க முடியாது! எதற்காக இந்த முட்டாள்தனத்தை செஞ்ச நீ?..

இங்க பாரு என பேசத் தொடங்கிய பின் நெற்றியைத் தேய்த்துக் கொண்ட ஆதி," ஆமா! உன் பெயர் என்ன?.. எனக் கேட்டான்.

அப்போது மலர் பார்த்தாளே ஒரு பார்வை, நிச்சயம் அவள் கண் வீச்சுக்கு மட்டும் கதிர்வீச்சின் சக்தி இருந்தால், அந்த நொடி ஆதி அப்படியே எரிந்திருப்பான், அப்படி ஒரு பார்வை பார்த்தவள்,

"என் பேர் கூட தெரியாமலா என்னைக் கடத்தின,இப்ப தாலியும் கட்டின?

" நான் நிஜமா உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படவில்லை, எனக்கு உன்னை பார்த்தாலே பிடிக்காது, நான் வந்தது ரகுவை கைது பண்ணத்தான், நான் உள்ள வந்தப்போ மேடையில் அவன் சந்தோசமா உட்கார்ந்து,உன்னை விழுங்கிறமாதிரி பார்த்துட்டு இருந்தான், நான் கஷ்டப்பட்டு உருவாக்கின கோட்டையை அவன் ஒரே நாள்ல காலி பண்ணிட்டு, கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழ்வானா! அதை நான் பார்த்துட்டு இருப்பேனா, அவனை கைது செய்தாலும், கொஞ்ச நாள்ல வெளிய வந்து, உன்னைக் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழ்வான், அவன் சந்தோசமா இருக்க கூடாதுன்னு நினைச்சேன், அவன் சந்தோஷமே நீதான்! அதான் திடீர்னு அப்படி பண்ணிட்டேன்! அப்ப ரகு முகத்தைப் பார்க்கணுமே, பேயறைஞ்ச மாதிரி ஆயிருச்சு! போகும்போது சொன்னானே நீ கவனித்தாயா? இதுக்கு நீங்க என்னை கொன்னே இருக்கலாம்னு... அந்த வார்த்தை.. அந்த வார்த்தை தான் எனக்கு அத்தனை சந்தோசத்தை தந்தது, என்னோட கனவை எரித்தவன் கனவை, நான் கலைத்துவிட்டேன், இனி அவன் வெளியே வந்தாலும், செத்த பிணமாகத்தான் இருப்பான் எனப் பேசிக்கொண்டு போனவனை இடையிட்டவள்,

"அடச்சீ! மிருகம் கூட தனக்கு பசி எடுத்தால் தான் இன்னொரு மிருகத்தை திங்கும், ஆனா உன்னை மாதிரி மனிதன் என்ற பெயரில் இருக்கற மிருகங்க, அற்பக் காரணங்களுக்காக மனுஷங்களை,அவங்க மனசை அநியாயமா கொன்னுட்டு இருக்கீங்க! இதில் உனக்கு என்ன சந்தோஷம்?"

"ஏய் எனக்கு சந்தோசம் தான்! எனக்கு தெரியும்,உன்னை.. ஐ மீன் அவனோட அம்முவை எந்தளவு ரகு காதலிச்சான் என்பது, அவனுக்கு அவன் அம்மு கிடைக்கக்கூடாது! இனி கிடைக்கப் போவதில்லை! என்றான் கர்வமாக..

"உனக்கெல்லாம் என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை! சொல்லி புரிஞ்சிக்க நீ மனுசனும் இல்லை! குட் பாய்!" என்று சொன்னவள், அவள் பாட்டுக்கு சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

சிறிது தூரம் நடந்தவள், அவனைத் திரும்பிப் பார்த்து," யார் சொன்னா ரகுவுக்கு அவனோட அம்மு கிடைக்க மாட்டாள் என்று, நான் புயல் காத்து மாதிரி, தாலி என்கிற வேலி போட்டு என்னை உன்னால தடுக்க முடியாது! உன்னால முடிஞ்சதை பண்ணிக்கோ!" என்று சொல்லிவிட்டு கம்பீரமாய் நடந்தாள்..

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி!..

மழை தூறும்..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஆதி.... 🙄
சரி அவர் எப்போ நியாயமா நடந்தாரு....

மலர் கோபம் நியாயம் தான்.....
ஆனா அவங்க ரகு ட்ட மறுபடி போகவேணாம்.... பேசாம எதும் job தேடி ட்டு கிளம்பிடுங்க....😔

நைஸ் epi dr.... ❤
 




Anamika 52

நாட்டாமை
Author
Joined
Nov 7, 2021
Messages
62
Reaction score
76
ஆதி.... 🙄
சரி அவர் எப்போ நியாயமா நடந்தாரு....

மலர் கோபம் நியாயம் தான்.....
ஆனா அவங்க ரகு ட்ட மறுபடி போகவேணாம்.... பேசாம எதும் job தேடி ட்டு கிளம்பிடுங்க....😔

நைஸ் epi dr.... ❤
🤔🤔🥰🥰🥰🥰 Thanks sister
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top