• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

☔ குடைக்குள் தூறும் மழையே..5 ☔

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 52

நாட்டாமை
Author
Joined
Nov 7, 2021
Messages
62
Reaction score
76
☔குடைக்குள் தூறும் மழையே..5☔
…...

அந்த மால் எங்கும் தன் பார்வையைச் செலுத்தி, தன் பொன்மானை தேடினான் ரகு.

மருண்ட விழிகள் கொண்ட பாவை, அவன் பார்வை வட்டத்தில் விழுந்ததும்,அவன் மனம் கவிதை பாடியது..
" விழியால் பல மொழி பேசும் காரிகையே!
உன்னை வைரமுத்து மட்டும் பார்த்திருந்தால்,
விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, என்று எழுதியதற்கு பதிலாய்,
விழியில் விழுந்து எழவே முடியவில்லையே!
என்று எழுதி இருப்பார்!

நாட்டுப்புற பாடகன்
பார்த்திருந்தால்,
" முட்ட கண்ணு முழி அழகி!
மூக்கு விடச்ச பேரழகி!"
என்று கத்திப் பாடி இருப்பான்..
உன்னை பார்த்தது நான் என்பதால்,
பார்த்துக்கொண்டே இருக்கிறேன் பரவசத்தோடு!
உலக அதிசயங்களை ஒன்றாய் பார்த்த பிரமிப்போடு!

என அவள் அருகில் செல்லும் நேரத்திற்குள், கவி படைத்தவன்,ஆனந்தத்தோடு அருகில் சென்று அமர்ந்தான்..

"வெரி சாரி மலர்! ரொம்ப நேரம் உன்னைக் காக்க வச்சிட்டேனா! நான் எப்பவோ இங்க வந்துட்டேன்,என் பைக்கை பார்க்கிங் பன்றப்ப எங்க பாஸ் கார் நின்னுட்டு இருந்ததை பார்த்தேன், டிரைவர் , பாஸ் உள்ள இருப்பதா சொன்னாரு, அவரு கிளம்பும் போது நான் ஆடிட்டரைப் பார்க்க போறேன்னு சொல்லி இருந்தேன், இப்ப மாலுக்கு, அதுவும் உன்னைப் பார்க்க வந்தேன் என்று தெரிஞ்சது அவ்வளவுதான், ரொம்ப திட்டுவாரு! அதான் வெளியே காத்திருந்தேன், இப்ப அவரு அந்தப்பக்கம் கிளம்பவும், நான் இந்தப்பக்கம் வந்துட்டேன்! சாரிமா!" என்று கெஞ்சலாய் சொன்னான் ரகு.

"அரை மணி நேரத்துக்கும் மேல காத்திருந்தேன் ரகு சார்! இப்ப வேற ஒரு பொறுக்கி வந்து வம்பு பண்ணிட்டு போறான்! எனக்கு ரொம்பவே டென்ஷன் ஆயிடுச்சு! என்றாள் மலர்.

"என்னது, உன் கிட்ட வம்பு பண்ணினான.. எங்க அவன்? தோலை உரித்து தொங்க விடுறேன்!" என்று சட்டையை மடக்கி விட்டவாறு எழுந்து நின்றான் ரகு.

"சார் அவன் போய்ட்டான்! அவன் மறுபடி என்கிட்ட வம்பு பண்ணினா நான் சொல்றேன், அப்ப வந்து உங்க வீரத்தை காட்டுங்க!.. இப்ப உட்காருங்க!..

"கண்டிப்பா சொல்லு மலர்! நான் கராத்தேயில் பிளாக் பெல்ட், அந்த பெல்ட்லயே அவனை வெளுத்து விடறேன்! சரி, எதுக்கு என்னை அவசரமா வரச்சொன்னே, நான் ஆபீஸ்ல பொய் வேற சொல்லிட்டு வந்தேன் தெரியுமா?..

"நான் எதுக்கு கூப்பிட்டேன்னு உங்களுக்கு தெரியாதா?" என அவனை கூர்மையாக பார்த்தபடி கேட்டாள் மலர்.

ரகு நெளிந்தபடி," ஓரளவுக்கு தெரியும், அதுதான்னானு தெளிவு பண்ணிக்க கேட்டேன்!" என்றான்.

" நீங்க எங்க அண்ணனை போய் பார்த்தீங்களா? என்ன பேசினீங்க?"

"எதுக்கு கேக்குற.. உங்க அண்ணா ஏதாவது கேட்டாரா?"

"ம் ம்.. கேட்டாரு.. எங்க அண்ணிகிட்ட நீ ஏற்பாடு பண்ணிக்கிற மாப்பிள்ளை நல்லவன் இல்லை, என் தங்கச்சிக்கு அவன் வேண்டாம், அவளுக்கு மாப்பிள்ளை நான்
பார்த்துக்கிறேன்! நீ தலையிடாதே!" என்று சொல்லிட்டார், எங்கிட்ட வந்து," உன் மனசுக்கு பிடித்தவனா, உனக்கு தகுதியானவனா நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்! நீ எதுக்கும் கவலைப்படாதே!" அப்படின்னு சொன்னார், அவரா திடீர்னு இப்படி பேசுவதை பார்த்தால், எனக்கு நீங்கதான் எதோ செஞ்சி இருக்கீங்கன்னு புரிஞ்சது! சொல்லுங்க என்ன பண்ணீங்க?"

" உங்கண்ணா மூர்த்திட்ட நான் பொய் ஏதும் சொல்லல மலர்! நான் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலமா உங்க அண்ணி பார்த்து வச்ச மாப்பிள்ளையோட லைப் ரோட்டினை இரண்டு நாள் வீடியோ எடுக்கச் சொன்னேன், அதை உங்க
அண்ணாகிட்ட காட்டினேன்!" அவ்வளவுதான்..

"அதைப் பார்ததற்கா அண்ணா இந்த அளவுக்கு பேசினாரு! அப்படி அதுல என்ன இருந்துச்சு?"

"என்ன இல்லைன்னு கேளு.. அந்த மல்லுவேட்டி மைனர், செம மஜாவானஆளு! காலையே ஒருத்தியை தேடி வடக்கு வீதி, சாயங்காலம் இன்னொருத்திய தேடி தெற்கு வீதி போறான்! அதை பார்த்தால் எந்த அண்ணன்காரன் தாங்குவான், ஆடிப் போயிட்டாரு!என் பொண்டாட்டி பேச்சைக்கேட்டு, என் தங்கச்சியை பாழும் கிணற்றில் தள்ள இருந்தேனே! என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார், நான்தான் அவருக்கு ஆறுதல் கூறினேன்!"

"அவ்வளவுதானா?" புருவம் உயர்த்தி கேட்டாள் மலர்.

"ஆமா அவ்வளவுதான்! வேற என்ன.. நான் எதோ உன்னை கல்யாணம் பண்ணிக்க உங்க அண்ணா கிட்ட கேட்ட மாதிரி சந்தேகமா கேட்கற?"

"சந்தேகம் இல்ல.. கன்ஃபார்மா தான் கேட்கிறேன்!" உண்மையை சொல்லுங்க!"

ரகு திருதிருவென முழித்தான், "உங்க அண்ணா, தங்கச்சி வாழ்க்கை வீணா போய் இருக்கும்னு புலம்பினார்..அதனால! என திக்கினான் ரகு..

"அதனால!" அதட்டினாள் மலர்.

"நீங்க கவலைப்படாதீங்க! உங்க தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்!" என்று சொன்னேன் என பட்டென்று சொல்லி விட்டு தலையை குனிந்து கொண்டான் ரகு.

"உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நான் தான் எனக்கு காதல் இல்லைன்னு சொன்னேனே, இப்ப போய் கல்யாண பேச்சு பேசிட்டு வந்து இருக்கீங்க.. எங்க அண்ணா ஒரே மாசத்துல கல்யாணத்த வச்சிக்கலாம்னு சொல்றான்!"

"என்னது ஒரே மாசத்துல கல்யாணமா? அட மச்சான் இதை என்கிட்ட சொல்லவே இல்லையே.. என்று வாயெல்லாம் பல்லாக சொல்லியவன் முகத்தில் தண்ணீர் சொட்டியது..

கோபத்தில் மலர்தான் டேபிளில் இருந்த டம்ளர் நீரை எடுத்து அவன் மேல் கொட்டி இருந்தாள்

"ஏன் மலர்? எதுக்கு இவ்வளவு கோபம்! நீ தான் யாரையும் காதலிக்கலை என்று சொல்லிட்டே.. சரி காதல்தானே.. அது எப்ப வேணா வந்துட்டு போகுதுன்னு கல்யாணத்துக்கு அப்புறம் காதலிச்கலாம்னு, உங்க அண்ணா கிட்ட பேசினேன், உங்க அண்ணாவும் அவர் பார்த்த மாப்பிள்ளையை விட எல்லா விதத்திலும் நான் சிறந்தவன் என்று ஓகே சொல்லிட்டாரு, நான் உங்க அண்ணி எற்பாடு செய்த, இந்த சம்பந்தத்தை மட்டும் நிறுத்தி இருந்தா அவங்க சும்மா இருப்பாங்களா? வேற ஏதாவது கெட்டவனை கொண்டு வந்து நிறுத்தி இருப்பாங்க! நம்ம ஊர்ல கெட்டவங்களுக்கா பஞ்சம்?"
என்று நிதானமாய், ஆற்றாமையாக கேட்டான் ரகு.

"அதெல்லாம் சரிதான் ரகு சார்! ஆனா எனக்கு இப்ப கல்யாணத்துல சுத்தமா இஷ்டம் இல்லை! எனக்கு படிக்கணும், வர்ற அகடமிக் இயர்ல காலர்சிப்போடு சீட் கிடைச்சா லண்டனுக்கு போய் படிக்க நெனச்சேன்!" என்றாள் ஏக்கத்தோடு..

"சரி காலர்சிப் கிடைச்சா மட்டும் போதுமா?.உனக்கு படிக்க,செலவுக்கு மேலும் சில லட்சம் பணம் தேவையே அதற்கு என்ன பண்ணுவ?"

"அது எனக்கும் தெரியும்! நான் கொஞ்சம் காசு சேர்த்து வைத்து இருக்கேன்! அங்க போய் படிச்சுட்டு வேலை பார்ப்பேன், இன்னும் ஆறு மாசம் இருக்கு காலேஜ் திறக்க, நான் அதற்காகத்தான் கனவுடன் காத்துக்கிட்டு இருக்கேன்! இந்த நேரத்துல இப்படி பண்ணிட்டீங்களே!"

"கூல் மலர்! கல்யாணம் பண்ணினா படிக்க கூடாதுன்னு யார் சொன்னா? நீ லண்டன்ல போய் படிக்கிற... அதுக்கு நான் கேரண்டி!" என்று தீர்க்கமாய் சொன்னவன், அவளை ஏக்கமாய் பார்த்தபடி,
"மலர் நீ லண்டன் போ!
பாரிஸ் போ!
எங்க வேனா போ!
ஆனா என்னைக் கல்யாணம் பண்ணிட்டு போ!
என்றான் முகம் முழுக்க மோகனப் புன்னகை சிந்தியபடி படு ஸ்டைலாக..

அவன் பாவனையில் மலர் சிரித்துவிட்டாள்.

"இந்த சிரிப்பை சம்மதமாய் எடுத்துக்கலாமா மலர்?"

"அதான், அண்ணாகிட்டயே பேசிட்டிங்களே! இப்ப என் படிப்புக்கும் பிரச்சனை இல்லைன்னு சொல்லிட்டீங்க! சோ அதனால…" என அவள் நிறுத்த..

ரகு வார்த்தைகளை தொலைத்தவன் போல அவளையே பார்த்துக் கொண்டிருக்க..

"அதனால இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்! என்றாள் மலர் இயல்பான மென்மையோடு..

"ஓ வாவ்! தேங்க்யூ சோ மச் மலர்! ஐயோ! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கே! சந்தோசத்துல என்ன பண்றதுனே தெரியல.. நான் வேணா இந்த மாலோட மொட்டை மாடிக்குப் போய் கத்தட்டுமா? என்றான் எழுந்து பரபரப்போடு நின்றபடி..

"ஐயோ ரகு சார்! இது பொது இடம், கொஞ்சம் அமைதியா இருங்க!" என்று மலர் சொல்ல,டேபிளில் தாளமிட்டவாரு அமர்ந்தான் ரகு.

"அதான் ஓகே சொல்லிட்டயே! இன்னும் ஏன் சார்னு கூப்பிடுறே?. ரகு மட்டும் போதுமே!"

"அப்படி சட்டுனு கூப்பிட வரல சார்! கொஞ்ச நாள்ல மாத்திக்கிறேன்!" என்றவள்," சரி நான் கிளம்பட்டுமா?" என்றாள்.

"எங்க தனியா கிளம்புற? இனி நீ என் பியான்சி! என் பைக்ல போலாம் ஜோடியா!" என்றவன், தன் கையிலிருந்த ஜூஸை குடித்துவிட்டு அவளோடு கிளம்பினான்.

பார்க்கிங் வந்து பைக்கை எடுத்தவன்,அதை முறுக்கி வளைத்து அவளருகே சென்று ஏறச் சொன்னான்.

"சாரி சார்! திருமணத்துக்குப் பிறகு உங்க கூட ஒண்ணா வரேன்! இப்போ வர தயக்கமா இருக்கு, நான் ஆட்டோவில் போய்க்கிறேன் ப்ளீஸ்! தப்பா நினைக்காதீங்க!" என்றாள்.

ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்த ரகுவின் முகம் ஜீரோ வாட்க்கு போனது, இருந்தும் அவளுக்கு தலையாட்டி விடை தந்தான்.
……

"சொல்லுங்க சரவணன் சார்! பார்க்கணும் என உடனே வரச் சொல்லிட்டு, ரொம்ப நேரமா எதுவும் பேசாமல் இருக்கீங்களே!" எதிரில் அமர்ந்திருந்த சரவணனை பார்த்தபடி கேட்டான்.

"ஆதி என்னைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்று கேட்டவரை கூர்ந்து பார்த்த ஆதவன்,

"நீங்க ஏதோ கேட்க தயங்குறீங்க! எதுனாலும் நேரடியா கேளுங்க! சுத்தி வளைக்க வேண்டாம்!" பட்டென்று சொன்னான் ஆதி

"சரி என் பொண்ண பத்தி என்ன நினைக்கிறீங்க? அதையாவது சொல்லுங்க? விடாப்பிடியாக கேட்டார் சரவணன்.

"மனிஷாவை பத்தி நான் எதுக்கு சார் நினைக்கிறேன்!" அசட்டையாய் சொன்னான் ஆதி.

"சரி ஆதி, நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்! என் பொண்ணை மேரேஜ் பண்ணிக்க உனக்கு சம்மதமா?..

"வாட்! என அதிர்ந்து கேட்டவன், பின் அவரிடம்,எனக்கு சம்மதம் இல்லை சார்! எனக்கு கல்யாணம்ற கான்செப்ட் மேலேயே சம்மதமில்லை! என் வாழ்க்கையில அந்த தேவையில்லாத கமிட்மெண்ட்ல சிக்க நான் விரும்பல, நான் ஆசைப்படுவதெல்லாம் நம்பர் ஒன் பிசினஸ்மேன் ஆகணும் அவ்வளவுதான்!" தீர்க்கமான பதில் வந்தது ஆதியிடம்..

"உங்களுக்கு தெரியாததல்ல ஆதி, எனக்கு கோடிக்கணக்கில் பிசினஸ் இருக்கு, உங்க தொழிலையே தான் நாம் பெரிய அளவில் பண்ணிட்டு இருக்கேன், எனக்கு ஒரே மகள் தான் அவளை கட்டிக்கிட்டா , என் எல்லா சொத்தும், தொழிலும் உங்களுடையது தான், நீங்க ஆசைப்பட்ட நம்பர் ஒன் இடத்துக்கு என் மருமகனா இருந்தா சீக்கிரம் வந்துடலாம் ஆதி, வாட் யூ சே!"என்று தன் மகளின் வாழ்க்கைக்கு பேரம் பேசினார் அந்த தொழிலதிபர்..

"சோ.. நீங்க என்ன விலை பேசுறீங்க?" குதர்க்கமாக கேட்டான் ஆதி

"நோ ஆதி, எனக்கும் வயசாயிருச்சு, சம்பாதித்தது போதும் ஓய்வெடுக்கலாம் என்று ஆசைப்படுறேன்! என் பொண்ணையும், என்னோட தொழிலையும் ஒரு தகுதியானவன் கையில கொடுக்க ஆசை, மனிஷா கல்யாணம் என்று கேட்டா நோ சொல்றா.. ஆனா அதுவே நீங்க மாப்பிள்ளை என்று சொன்னா சந்தோசமா தலையாட்டிட்டு வெட்கப்பட்டு ஓடுறாள், எனக்கு என் பொண்ணோட சந்தோசம் முக்கியம், அவளுக்கு பிடிச்சவனை கட்டி வைக்க ஆசைப்படுறேன் , இதில் என்ன தப்பு?
கேள்வியை தெளிவாக கேட்டார் சரவணன்..

ஆதி நெற்றி சுருக்கி யோசித்தான், சில நிமிட யோசனையிலேயே, இந்த பிசினஸ் டீல் அவனுக்கு மிகப் பிடித்து இருந்தது தான்! இதுவரை சம்பாதித்ததை போல் இரண்டு மடங்கு இலவசமாய் வரும்போது வேண்டாம் என மறுக்க தோன்றவில்லை அவனுக்கு! கொஞ்ச நேரம் பலவற்றை சிந்தித்தவன், கடைசியில் அவரை பார்த்து," ஓகே!" என்றான்.

"உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே? நான் எல்லா ஏற்பாட்டையும் பார்க்கலாமா ஆதி! பரபரப்போடு கேட்டார் தொழிலதிபர்..

"ஓகே சார்! நீங்க எல்லா ஏற்பாட்டையும் பாருங்க, ரொம்ப கிராண்டா வேண்டாம்! முடிஞ்ச வரை எல்லாத்தையும் சிம்பிளா ஏற்பாடு பண்ணுங்க! நான் கிளம்புறேன். எனக்கு இன்னொரு மீட்டிங் இருக்கு என்றவன் தன் வாட்சை பார்த்தபடி எழுந்து சென்றான்..

திருமணமும் ஒரு வித வியாபாரம்தான் என்பதை அந்த இரு தொழிலதிபர்களும் நினைத்திருப்பார்கள் போலும்!..


மழை தூறும்..
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ரகு.... ஸோ க்யூட் ல....😍
நல்லா பேசறாரு....

மலர் அவர்ட்ட ஓகே சொல்லிட்டாங்க....

ஆதி மனிஷா க்கு ஓகே சொல்லிட்டாரு....

என்ன நடக்கப்போகுது....🤔
 




Anamika 52

நாட்டாமை
Author
Joined
Nov 7, 2021
Messages
62
Reaction score
76
ரகு.... ஸோ க்யூட் ல....😍
நல்லா பேசறாரு....

மலர் அவர்ட்ட ஓகே சொல்லிட்டாங்க....

ஆதி மனிஷா க்கு ஓகே சொல்லிட்டாரு....

என்ன நடக்கப்போகுது....🤔
ஆமா .. ஏதோ நடக்கப் போகுது..என்னவா இருக்கும்🤔🤔
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஆமா .. ஏதோ நடக்கப் போகுது..என்னவா இருக்கும்🤔🤔
நீங்கள் தான் டியர் சொல்லனும்....😅❤
எப்படியும் ரெண்டுமே நடக்காது னு நினைக்கிறேன்....😅
 




Anamika 52

நாட்டாமை
Author
Joined
Nov 7, 2021
Messages
62
Reaction score
76
நீங்கள் தான் டியர் சொல்லனும்....😅❤
எப்படியும் ரெண்டுமே நடக்காது னு நினைக்கிறேன்....😅
:rolleyes::rolleyes: சொல்லிடுறேன் சிஸ்டர் ..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top