• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

⛱️குடைக்குள் தூறும் மழையே..3⛱️

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 52

நாட்டாமை
Author
Joined
Nov 7, 2021
Messages
62
Reaction score
76
⛱குடைக்குள் தூறும் மழையே..3⛱

மேல்தட்டு மக்களின் சொர்க்கபுரியான, அந்தப் புகழ்பெற்ற பப்பின் வெளியே, அதற்கு துளியும் சம்பந்தமில்லாத இரண்டு ஜீவன்கள் கையில் பையோடு காத்துக் கொண்டிருந்தன..

"ஏண்டி அந்த எம்எல்ஏ பொண்டாட்டிக்கு நாற்பது வயசுக்கு மேல இருக்கும், அதெல்லாம் இந்த பப்புக்கு எதுக்கு வருது?, முட்டி வலிக்கு மருந்து போடற வயசுல இதுக்கு எதுக்கு ஆட்டம் ,பாட்டமெல்லாம்! நாளைக்கு கடையில வந்து துணியை வாங்கிக்கலாம்ல... இதைக் கொடுக்க இங்க நம்மள வர சொல்லிட்டு, உள்ளே இது ஆடிட்டு இருக்கு... அந்தம்மா எப்ப வெளிய வரது.. நாம எப்ப இதைக் கொடுத்துட்டு கிளம்புறது… பாரு! நம்மளை ஏதோ மிருக காட்சியில நிற்கிற மிருகத்தை பார்க்குற மாதிரி வினோதமா பார்க்குறாங்க அந்த பாடிகாட் ஜிம் பாய்ஸ்! இரண்டு பேரும் பெருச்சாளி சைஸுக்கு ஆம்ஸ் வெச்சிருக்காங்க! இன்னும் கொஞ்ச நேரம் நாம இப்படியே நின்னா, அலேக்கா தூக்கிட்டு போய் அந்தப்பக்கம் பீச்ல வீசிடுவாங்க போல... எப்ப தான் இந்தம்மா வெளிய வருமோ" என சலித்தபடி சொன்னாள் பனிமலர்.

"போடி நீ வேற... நான் மட்டும் என்ன சந்தோசமாவா நின்னுட்டு இருக்கேன்! நானே உள்ள போய் என்ஜாய் பண்ண முடியலன்னு பீல் பண்ணிட்டு இருக்கேன், உள்ள போறதுக்கே நாம மாசம் முழுக்க சம்பாதிக்கிற பணத்தை கொடுக்கணும் தெரியுமா? என்ன இருந்தாலும் பணம் இருந்தா ரொம்ப சந்தோசமா இருக்கலாம் போல".. என பப்பிலிருந்து வெளியே வந்து கொண்டு இருந்த நவநாகரீக யுவதிகளை ஏக்கத்தோடு பார்த்தபடி சொன்னாள் நிஷா..

"ஒரு முறை கூட சிரிக்காத ஏழையும் இல்ல! ஒருமுறை கூட அழுகாத பணக்காரனும் இல்லை, சந்தோஷத்திற்கும் பணத்துக்கும் சம்பந்தமில்லை நிஷா, மனஅழுத்தம் தாங்கமுடியாம தற்கொலை பண்ணிக்கிறவங்கல நிறைய பேர் பணக்காரங்க தானாம்! என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தவள், பப்பிலிருந்து ஒரு பெண்ணை தன் தோளில் சாய்த்து, அரவணைத்த படி வெளியே வந்தவனை பார்த்து, பேச்சை நிறுத்தி அப்படியே நின்றாள்..
அவனையும், அவள் தோளில் சாய்ந்திருந்த பெண்ணையும் பார்த்து அவளின் உதடுகள் எளனமாய் வளைந்தது..

எதேச்சையாய் அவள் பக்கம் திரும்பிய ஆதவன், அவளின் பாவனையை கவனித்து விட்டான், தன் தோளில் சாய்ந்திருந்தவளை கொஞ்சம் நகர்த்த அவன் முயற்சிக்க.. அவளோ," ஆதி என்னை விடாதே மேன்! நல்லா பிடிச்சிக்க..என்று சொல்லியபடி அவன் மேல், மேலும் நெருக்கமாக சாய்ந்து கொண்டாள்

வேறு வழியின்றி அவளை தாங்கிப் பிடித்துக் கொண்ட ஆதி, தோளில் சாய்ந்தபடியே கார் வரை இழுத்து வந்தான்.

காரின் பின் சீட்டில் அவளைப் படுக்க வைத்து விட்டு காரை எடுத்தவன், கார் கண்ணாடி வழியே பனி மலரை பார்த்தான், அவள் முகத்திலோ ஏளனச் சிரிப்பு, அது தன்னைப் பார்த்துதான் என்று உணர்ந்த ஆதி ஸ்டீரிங் மேலே கோபமாய் குத்தினான்..

பெரிய வெள்ளை பங்களாவின் முன் கார் வேகமாய் நுழைந்தது, கதவை திறந்த ஆதி, உள்ளிருந்தவளை பிடித்து இழுத்து உள்ளே அழைத்துச் சென்று சோபாவில் படுக்க வைத்தான்.

கதவை திறந்து விட்டு ஓரமாய் நின்ற அந்தப் பெரியவரைப் பார்த்து முறைத்தவன்," இதப் பாருங்க சரவணன் சார்! இது தான் கடைசி! இனிமே உங்க பொண்ணு எங்காவது பார்ல, பப்ல குடிச்சிட்டு கிடந்தா,எனக்கு தயவு செஞ்சு போன் பண்ணாதீங்க! நானும் இதுவரை பலமுறை உங்களுக்காக இவளைப் போய் கூட்டிட்டு வந்திருக்கேன், ஆனா இனிமே நான் வரமாட்டேன்! எனக்கு அசிங்கமா இருக்கு, என் பேரு இவளால கெட்டுப் போவதை நான் விரும்பல.. புரியுதா!" என அடிக்குரலில் சீறினான்.

"சாரி! தம்பி இனிமே உங்கள கூப்பிடல.. மனிஷா உங்க பேச்ச தான் கொஞ்சம் மதிக்கிறா.. நீங்க கூப்பிட்டதால் தான் வந்தா.. இதுவே வேற யார் கூப்பிட்டு இருந்தாலும் வரவே மாட்டா. இனி உங்களை தொல்லை பண்ண மாட்டேன் சாரி!"என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்..

"சரி நான் வரேன்! என்றபடி வேகமாய் வெளியேறினான் ஆதி..

பெரியவர் சரவணன்,அந்த ஏரியாவின் வியாபாரிகள் சங்கத் தலைவராக இருக்கிறார், அந்த சங்கத்தில் செயலராக இருப்பவன் தான் ஆதி! ஒரே பெண் என செல்லம் கொடுத்து வளர்த்த விளைவு அவள் குடிக்கு அடிமையாகி, யார் பேச்சையும் காது கொடுத்து கேட்காதவளாக வளர்ந்து நிற்கிறாள்,அவளுக்கு ஆதி மேல், ஆதியின் ஆளுமை மேல் அலாதி ஈர்ப்பு, அதனால் அவன் சொன்னால் கேட்பாள், அதனால்தான் பெரியவர், அவள் பிரச்சினை செய்யும்போது ஆதியை துணைக்கழைப்பார்!ஆதியும் இதுவரை இப்படி கோபப்பட்டதில்லை!,இன்று மலரின் ஏளனப் பார்வை தந்த கோபம் அவனை இப்படி பேச வைத்துவிட்டது!.
..

தன் வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டிருந்தான் ஆதி,நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது, ரகுவுக்கு போன் போட்டான்.

ரகுவோ நல்ல தூக்கத்தில் இருந்தான், கனவில், தன் எதிர்வீட்டு தேவதையிடம் பூவை கொடுத்து காதலை சொல்லிக் கொண்டிருக்க, அவன் "ஐ" என தொடங்கியபோது,.." ஊதுங்கடா சங்கு! நான் தண்டச்சோறு கிங்கு! தமிழ் இஸ் மை மதர் டங்கு! ஐ அம் சிங்கிள் அண்ட் எங்!' என்று அவன் அலைபேசி அலறியது.. பதட்டத்தோடு எழுந்தவன் அழைப்பது பாஸ் என்றதும் பாய்ந்து
எடுத்து காதில் வைத்தான்.

"என்ன பண்ற நீ?" என்றான் ஆதி.

வீட்டுக் கடிகாரத்தின் மேல் பார்வையை பதித்த ரகு , "பேய் !பிசாசு ! உலா போற நள்ளிரவில் போன் பண்ணி என்ன பண்றேன்னு கேட்கறீங்களே!! இது நியாயமா!இப்பத்தான் கனவுல என் அம்முகிட்ட காதலை சொல்லிட்டு இருந்தேன்! கனவுல கூட காதலை சொல்ல விட மாட்டீங்கறீங்களே!"

"உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா!.. சரி அதை விடு, சேதுபதியை நாளைக்கு காலையில விட்டுடு" என்றான் ஆதி..

'நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க பாஸ், நாலு நாளைக்கு முன்னாடி சேதுபதியைக் கடத்த சொன்னிங்க, நானும் நம்ம ரவி மூலமா கடத்தி குடோனில் அடைத்து வைத்தோம், நல்ல சாப்பாடு வாங்கித் தர சொன்னிங்க,வாங்கி தந்தோம், அவனும் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்த மாப்பிள்ளை கணக்கா நல்லா சாப்பிட்டு, நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கான், அப்பப்ப எதுக்கு கடத்தி இருங்கீங்கண்ணு கேட்பதோடு சரி, எதுக்காக அவனை கடத்தினோம், எதுக்காக இப்ப விடறோம், ஒண்ணுமே புரியலையே"!. என தலையை பிடித்தபடி சொன்னான் ரகு..

" நாளைக்கு ஆபீஸ் வா புரியும்!" என்றபடி போனை வைத்தான் ஆதி..

"எதைக் கேட்டாலும் ஒரு வார்த்தையில் தான் பதில் சொல்றார் ,அதில் பாதி புரியதே இல்லை,இவரெல்லாம் மணிரத்தினம் படத்தில் நடிக்கத்தான் கரெக்ட்! என்று சலிப்பாக சொன்னபடி போனை வைத்தான் ரகு!.

….

தன் கேபினில் இருந்த கணினியில் நெருப்புக்கோழி போல் புதைந்திருந்த ஆதி, கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான்.

ரகு தான் வேகமாய் உள்ளே வந்தான், வந்தவன் கையிலிருந்த அன்றைய தினசரியை ரகுவிடம் நீட்ட..

அதை கையில் எடுத்துப் பார்த்தான் ஆதி, கொட்டை எழுத்தில்," பிரபல தொழில் அதிபர் மனைவி, கார் டிரைவருடன் ஓட்டம் பிடித்தார்!" என்ற செய்தி இருந்தது. கீழே சேதுபதியின் திருமண போட்டோவும், அவனின் கார் டிரைவர் போட்டோவும் பிரசுரமாகியிருந்தது..

"பாஸ் இதுக்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? இல்லையா?...

" இருக்குன்னு சொல்லலாம், இல்லைன்னு சொல்லலாம்!" என்றான் ஆதி , இனம் விளங்கா புன்னகையோடு..

"புரியலையே பாஸ்! தெளிவா சொல்லுங்க! நாம சேதுபதியை எதுக்காக கடத்தினோம்?."

"சேதுபதி மனைவியோட பழைய காதலன் தான் அந்தக் கார் டிரைவர், பத்து வருஷமா காதலிச்சுட்டு இருந்தவர்களை, அந்தப் பெண்ணோட பெத்தவங்க பிரிச்சு, பணக்காரங்க என்ற காரணத்தினால், வயசான சேதுபதிக்கு கல்யாணம் பண்ணி குடுத்துட்டாங்க! அந்த காதலனோ, அந்த பொண்ணை மறக்க முடியாமல்,இங்க வந்து சேதுபதிகிட்டே டிரைவரா சேர்ந்துட்டான், இரண்டு பேரும் ஓடிப்போய் சந்தோசமா வாழ முயற்சி செஞ்சுகிட்டு இருந்தாங்க! ஆனா சேதுபதி எப்ப பாரு ஒரு நிழல் மாதிரி பொண்டாட்டி பின்னாடியே சுத்திட்டு இருந்தான், அவன் எங்காவது வெளியூர் போனா அவங்க ஓடிப்போய் இருப்பாங்க! அவனா போகல.. அதனால நான் கடத்தினேன்.. ஒரு காதலை சேர்த்து தான் வெச்சிருக்கோம்,. நல்லதுதான் தப்பில்லை!" என்றான் ஆதி.

"நல்ல காதலை சேர்த்து வச்சா பரவால்ல.. இது கள்ளக்காதல்... இதனால நமக்கு என்ன லாபம்?"

"ஒருத்தன அடிச்சு உதைச்சு காயப்படுத்தினால் அது கொஞ்ச நாள்ல ஆறிடும் , சாகடிச்சா அந்த ஒரு நாளிலேயே வலி மறைந்துவிடும்! ஆனா இதுவே அவன் மனச காயப்படுத்தி அவமானத்துக்கு ஆளாக்கினா, அந்த வலி ஆறவே ஆறாது !அதிலிருந்து மீண்டு எழுந்திரிக்கவே ரொம்ப நாள் ஆகும்! இதோ பேப்பரில் போட்டு நாரடிச்சிட்டாங்க! இந்த அவமானத்தில் தலை குனிந்து நிற்கிற சேதுபதி நிமிர்ந்து நிற்க ரொம்ப நாளாகும்! அவன் எல்லாத்தையும் ஜீரணித்து, மறந்து, பிசினஸ்க்கு திரும்பி வரதுக்குள்ள, அவனுக்கு அந்த தொழிலே இல்லாத மாதிரி, நான் மாற்றி விடுவேன்! எப்ப பாரு பரம்பரை பணக்காரன், பரம்பரை தொழில்காரன்னு என்கிட்ட வம்பு பண்ணிட்டே இருந்தான்,இனி அந்த திமிர் குறையும் இல்லை!" என்ற சொல்லி உரக்கச் சிரித்தான் ஆதி, அந்தச் சிரிப்பு சிங்கத்தின்
கர்ஜனையாய் தெரிந்தது!

"ஆனா, இதுவே அவனுக்கு ஒரு குழந்தை இருந்து இப்படி செய்திருந்தால், அந்த குழந்தையோட வாழ்க்கை என்னவாகி இருக்கும்?.. கவலையோடு சொன்னாள் ரகு..

" முட்டாள்! அப்படி குழந்தை இருந்திருந்தா நான் என்ன செஞ்சு இருப்பேன் தெரியுமா?. என் காதுக்கு வந்த விஷயத்தை சேதுபதிகிட்ட சொல்லி, மனைவியை கண்டித்து, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடக்கச் சொல்லி, அவன் வாழ்க்கையை சரி பண்ண பார்த்திருப்பேன்! தப்பானவங்களுக்கு குழந்தையா பிறந்தால், அந்த குழந்தை எப்படியெல்லாம் கஷ்டப்படும்னு எனக்கு நல்லாவே தெரியும்!" என்றான் ஆதி வேதனையாய், அவன் கண்களுக்குள் நலுங்கிய தோற்றத்தோடு கண்களில் கண்ணீரோடு ஒரு எட்டு வயது சிறுவன் வந்து நின்றான்!.

"சாரி பாஸ்! தெரியாம கேட்டுட்டேன்!.. ஆனா நான் பார்த்தது மா..ல ஆரம்பிச்சு மா ல முடியும் இரண்டெழுத்து வார்த்தை வேலை தானா?" என அவன் தன் சந்தேகத்தை கேட்க..

அவன் கேட்ட விதத்தில் சிரித்த ஆதி, ஒண்ணு தெரிஞ்சுக்கோ ரகு!" எவரிதிங் இஸ் பேர் இன் லவ் அண்ட் வார்!' அப்படின்னு சேக்ஸ்பியர் சொல்லியிருக்காரு, ஆனா என்னைக் கேட்டா, "எவரிதிங் இஸ் பேர் இன் லவ் அண்ட் பிசினஸ்!" என்று சொல்வேன், தொழிலும் போரும் ஒண்ணு தான்.. நீ எதை நினைத்தும் வருத்தப்படாதே, போய் வேலையை பாரு! இப்ப நாம பேக்டரிக்கு போகலாம்! மாணிக்கத்தை கார் எடுக்கச் சொல்லு!" என்றபடி கிளம்பினான் ஆதி, வேறுவழியின்றி அவனைப் பின் தொடர்ந்தான் ரகு..

கார் சாலையில் போகும்போது பூங்காவில் நுழைந்து பெண்ணைப் பார்த்த ரகு முகம் மலர," மாணிக்கம் அண்ணா, கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க!" என்றான்

"என்ன ரகு! என்னாச்சு? என்று கேட்ட ஆதியிடம் புன்னகையோடு திரும்பியவன்,

" அங்க பாருங்க! அந்த பூங்காவிற்குள் போகுதில்ல ஒரு பச்சைக் கலர் டிரஸ் போட்ட பொண்ணு, அதுதான் என் அம்மு!' என்று கைகாட்டினான் ரகு, ஆனால் ஆதி பார்த்தபோது அந்தப் பெண்ணின் பின்புறம் தான் தெரிந்தது முகம் தெரியவில்லை…

ஒரு நொடி யோசித்த ஆதி," மாணிக்கம், காரை ஓரமா நிறுத்துங்க!" என்றான்.

கார் நின்றதும் கீழே இறங்கி ,ரகுவையும் இறங்கச் சொல்ல,

"இப்ப நாம பூங்காவிற்கு போறமா? என்று ஆசையாய் கேட்டான் ரகு

"போறோம் இல்ல.. போற.. நீ மட்டும்.. அது மட்டும் இல்லை என்றவன் அந்த சாலையோர பூக்கடைக்கு அவனைக் கூட்டிச் சென்று ஒரு சிவப்பு ரோஜாவை வாங்கி கையில் கொடுத்து,

"இந்தா! போய் அந்த பொண்ணுகிட்ட உன் காதலை இன்னைக்கே சொல்லு! இழுத்துகிட்டு இருக்காதே! பொண்ணும், பன்னும் ஒண்ணு! எந்த நாய் எப்ப கவ்விட்டு போகும்னு சொல்ல முடியாது போய் சொல்லு! என்றான்.

"என்ன பாஸ்! அழகா பூவைக் கொடுத்துட்டு, அசிங்கமா பேசுறீங்களே?.

"!நான் சொன்னது நிதர்சனம் ரகு! நீ பார்க் போ, உனக்கு ஆஃப் டே லீவ்! ஆனா நாளைக்கு காலையில ஆறு மணிக்கு வேலைக்கு வந்துடணும்!" என்று கண்டிப்போடு சொன்னவன் அவன் தோளில் தட்டி கொடுத்து விட்டு,கண்களில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு காரில் ஏறினார்..

போகும் காரையே பார்த்துக் கொண்டிருந்த ரகு, பின் திரும்பி பூங்காவை நோக்கி நடக்கத் தொடங்கினான்..

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, காதல் அந்த சொர்க்கத்தையே நிச்சயிக்க செய்கிறது... பூமியில் சொர்க்கத்தை நிச்சயம் செய்வானா ரகு?..

மழை தூறும்!!

குடைக்குள் தூறும் மழையே..3

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top