• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

✨♥️இணையயா காதல்♥️✨

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Crazee queen

மண்டலாதிபதி
Joined
Oct 14, 2019
Messages
129
Reaction score
827
Age
29
Location
Pudukkottai


அதிகாலை வேளை சூரியன் தன் கதிர்களால் மக்களை எழுப்பி விட அதே சமயம் மெலிய வாடை காற்றும் வீசியது. அந்த காலை நேரத்திலும் மக்கள் அங்குமிங்கும் சென்று கொண்டு இருந்தனர் லண்டனில். விமான நிலையத்தில் ஒரு பெண் வந்து இறங்கி தன் கைபேசியை எடுத்து யாருக்கோ ஒரு செய்தி அனுப்பி விட்டு தன் கண்களை அலை பாய செய்தாள். அவளின் கண்கள் நாங்கள் மை தீண்டா விழிகள் என்றது, அவள் நாசி கூறாக இருந்தது, அவள் இதழ்கள் சாயம் தீட்டாமல் சிவந்து இருந்தது, அவள் வல கையில் ஒரு மோதிரமும் பிரேஸ்லெட்யும் அணிந்து இருந்தாள் மற்றும் இட கையில் வாட்ச் அணிந்து இருந்தாள். அவள் காதோடு ஓட்டி அவள் செவிகளில் உரையாடி கொண்டு இருந்தது சின்ன தங்க கம்மல். அவள் இடையே தாண்டிய கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் இருக்க அவளை இந்தியா பெண் என்று சொல்லாமல் சொன்னது. மீண்டும் கைபேசியை பார்த்த அவளால் மூச்சு தான் விட முடிந்தது. ஒப்பனை ஏதும் இன்றி அதிகாலையில் மலர்ந்த மலர் போல பிங்க் வண்ண டாப் மற்றும் வெள்ளை நிற பண்டில் அழகாக இருந்தாள்.

சாலையில் கவனம் மேற்கொண்டு அனைவரையும் முந்தி கொண்டும் கார் ஓட்டி கொண்டே அருகில் உள்ளவளிடம் திட்டும் வாங்கிய படி வந்தான். அவளின் பேச்சை காது கொடுத்து கேட்டும் கேட்காதது போல அவன் நடிக்க பெரும்பாடு பட்டான். அந்த நவநாகரீக மங்கையோ விடாமல் வசைபாடி கொண்டே வந்தாள். ஒரு வழியாக விமான நிலையம் வரவும் காரை நிறுத்தி விட்டு அந்த மங்கையை தன்னோடு அழைத்து கொண்டு சென்றான் அவன். அவள் அவனுடன் சென்றாலும் வாய் மட்டும் நிற்கவில்லை. அந்த பிங்க் நிற உடை அணிந்த பெண்ணை கண்ட நவநாகரீக மங்கை ஓடி சென்று கட்டி கொண்டாள். "சாரி மது, வர லேட் ஆகிடுச்சு எல்லாம் இந்த லூசு பண்ண வேலை" என்று வந்ததும் அவனை பற்றி குறை கூறினாள். "பா முடியல இன்னுமா ரெண்டு பேரும் சண்டை போடுறீங்க? எப்போ தான் உங்க சண்டை முடியுமோ? கடவுளுக்கு தான் வெளிச்சம்" என்றவள் சுற்றி பார்க்க. அவன் அங்கு உள்ள நாற்காலியில் அமர்ந்து குளிர்பானம் அருந்தி கொண்டு இருந்தான். "ஹே, மது மாமா இங்க இருக்கன் டா, உங்க அக்கா வாய் ஓயவே இல்லை என்ன வாய், ஏதோ கொஞ்சம் தூங்கிட்டு இவ கிட்ட நான் வாங்குன திட்டு இருக்கே காதுல இரத்தம் தான் வரல இன்னும்" என்றான் அவன். "ராஜேஷ், போதும் அவ வந்து ரொம்ப நேரம் ஆகி இருக்கும் வீட்டுக்கு போலாமா இல்ல நீ மட்டும் இங்கேயே இருக்கியா?" என்று சொல்லி விட்டு அவன் பதிலை கூட எண்ணாமல் மதுவின் கையே பிடித்து கொண்டு சென்றாள். "அனி, இரு வரேன் கார் சாவி என்கிட்ட தான் இருக்கு" என்று கத்தி கொண்டே சென்றான். பின் மூவரும் வலவலத்து கொண்டு விட்டிற்கு சென்றனர். அவர்கள் செல்வதற்குள் அவரகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

அவர்கள் பேசியது வைத்தே தெரிந்து இருக்கும் இருவரும் அக்கா தங்கை என்று. அப்பா - ஞானசேகர் (பிசினஸ் மேன்), அம்மா - வசுமதி (ஆசிரியர்), அக்கா - அனிதா (சாப்ட்வேர் என்ஜினியர்) எல்லாரும் இப்படி இருக்க இவள் மட்டும் விதிவிலக்கு காரணம் மது பயோடெக்னாலஜி ஆராய்ச்சியாரள். தற்போது லண்டனில் ஆராய்ச்சி உதவியாளர் என்ற பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இங்கு வந்து உள்ளாள். ராஜேஷ் - ஞானசேகர் இன் அக்கா மகன் அவன் தன் தந்தையின் தொழிலை லண்டனில் பார்த்து கொண்டு இருக்கிறான். 1 வருடத்திற்கு முன்னாள் தான் இவனுக்கும் அனிக்கும் திருமணம் முடிந்து லண்டன் வந்து 8 மாதம் முடிந்தது. இவர்கள் இங்கு இருப்பதால் இவர்களை நம்பி தான் மது லண்டன் செல்ல சம்மதித்தனர். இதெல்லாம் தாண்டி மதுவிற்கு லண்டன் செல்ல வேண்டும் என்பது அவள் சிறு வயது ஆசை அதுமட்டும் இன்றி அவனை ஒரு முறையேனும் பார்க்க முடியாதா என்றும் தான்!

யார் அவன்? பார்க்கலாம்♥

வீட்டிற்கு சென்றதும் அவளுக்கு ஒடுக்கிய அறையே காட்டி அவளை ஃப்ரெஷ் ஆகி ஓய்வு எடுக்கும் படி சொல்லி விட்டு அவர்களும் சென்றனர். அவள் தன் கைபேசியில் தாய் மற்றும் தந்தைக்கு செய்தி அனுப்பி விட்டு, ஒரு செயலியை திறந்து அதில் உள்ள புகைப்படத்தை தொட்டு பார்த்தாள் (அது பார்ப்பதற்கு கார்ட்டூன் கதாப்பாத்திரம் போல இருந்தது) பின் மாற்று உடை எடுத்து கொண்டு குளியல் அறைக்கு சென்று குளித்து முடித்து உடை மாற்றி பேடில் அமர்ந்து அவள் உடைகளை வாட்ரோபெபில் அடுக்கி வைத்து விட்டு தன் டைரியை எடுத்து முதல் பக்கத்தில் எழுதினாள்.

"என்னுடைய இந்த தேடல்
உனக்காகவா இல்லை உன்னை காணவா?
தேடலின் முடிவை எண்ணி நான்"

என்று முடித்து அதை தன்னோடு அனைத்து கொண்டு கட்டிலில் விழுந்தாள்.

காதலுடன்♥ இணையுமா?

முடிவு உங்கள் கையில்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top