• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤வீழ்ந்தேனடி 04❤

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
1597036689885.jpg


❤அத்தியாயம் 04❤


அதே சமயம்,
ஆர்னவின் ஃபார்ம் ஹவுஸில்,

"டேய் உண்மைய சொல்லு அவன் இரண்டு நாளா எங்க போனான்.." - என தன் முன் நின்ற கிரிஷிடம் கோபமாக கேட்டுக் கொண்டிருந்தான் ஆர்னவ்.

"எனக்கு சத்தியமா தெரியல டா"-என்று பாவமாக கூறிய கிரிஷை கண்ணில் கோபம் கொப்பளிக்க முறைத்து பார்த்த ஆர்னவ்,

"அவன் கடைசியா உன் கூட தான் இருந்தான்.. இப்போ தெரியலன்னு அசால்ட்டா சொல்ற." - ஆர்னவ்

"நா அன்னைக்கே சொன்னேன்.. அவன பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு அவள அழைச்சிட்டு வரேன்னு போனான்னு.. அதுக்கு அப்பறம் தான் அவன் திரும்ப வரவேயில்லை" - கிரிஷ்

"அவன் எந்த பொண்ணுன்னு உன்கிட்ட சொன்னானா.. ஒரு வேளை அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சு அவள விசாரிச்சா அவன் எங்க இருக்கான் அவனுக்கு என்ன ஆச்சுன்னு சின்ன க்ளூ ஆவது கிடைக்கும்ல.." -ஆர்னவ்

"அதுதான் டா அந்த பொண்ணு யாருன்னு எனக்கே தெரியல.. டென்ஷன் ஆகாத டா அவனுக்கு எதுவும் ஆகியிருக்காது... கண்டிப்பா மகேஷ் அங்கிளோட எனிமீஸ் யாரவதா தான் இருக்கும்.. அவர் சீக்கிரமா கண்டுபிடிச்சிறுவாரு டா.. அவன் நம்மகிட்ட வந்துறுவான்.." - என கிரிஷ் ஆர்னவை சமாதானப்படுத்த

"ஓகே டா மச்சி.. அவன பத்தி எதாவது தகவல் தெரிஞ்சா உடனே எனக்கு சொல்லு.. டாடி மூலமா டிபார்ட்மன்ட்ல பேசி அவன தேடிகிட்டு தான் இருக்காங்க" - ஆர்னவ்

"ஆமா டா... பாவம் மகேஷ் அங்கிள் தான் ரொம்ப குழப்பத்துல இருக்காரு.. சீக்கிரமே அவன கடத்தினவங்கள கண்டுபிடிச்சு அவன பாதுகாப்பா மீட்டெடுத்தாலே போதும் டா.." -கிரிஷ்

பின் இருவரும் ஹரிஷ் பற்றிய யோசனையில் நன்றாக குடித்து விட்டு மட்டையாகினர்..
------------------------------------------------------------------------

நள்ளிரவு 2.00 மணிக்கு,

குப்பைகள் கொட்டப்படும் பகுதியில் நீரில் ஊறி உடல் அழுகி பார்க்கவே முடியாதவாறு ஒரு உடல் தென்பட, அப் பிரதேச மக்கள் பொலீஸுக்கு தகவலை தெரிவித்தனர். அந்த உடல் இருந்த நிலை அது யாரென்று கூட அடையாளம் கண்டுக் கொள்ள முடியாதவாறு இருந்தது..

அங்கு வந்த காவலர்கள் அப் பிரதேச மக்களை அப்புறப்படுத்தி அவ் உடலை பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.. பரிசோதனையின் முடிவில் அது தொழிலதிபர் மகேஷின் மகன் என்று தெரிய வர அவர்களுக்கு தகவலை தெரிவித்தனர்.
------------------------------------------------------------------------

மகேஷின் வீட்டில்,

அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க தனக்கு வந்த தொலைப்பேசி அழைப்பின் சத்தத்தில் விழிப்பு தட்ட அழைப்பை ஏற்று காதில் வைத்தார் மகேஷ். மறுமுனையில் சொன்ன செய்தியில் அவருக்கு தூக்கி வாரிப் போட்டது..

பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவரின் மனையாளும் அழைப்பின் சத்தத்தில் விழித்து தன் கணவனின் முகத்தை காண அவர் அசையாத தோற்றத்திலும் அவர் முத்தில் தெரிந்த உணர்ச்சியிலும் ஏதோ சரியில்லை என உணர்ந்து,
"என்னாச்சுங்க.." என ஹரிஷின் அம்மா வினவ,

திடுரென தன் மனைவியின் குரலில் திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்தவர் 'இவளிடம் எப்படி கூறுவது விஷயத்தை சொன்னால் தாங்கிக் கொள்வாளா ..' என அவர் மனதில் நினைத்தவாறு கண்கலங்க அமர்ந்திருக்க,

அவருடைய கண்கள் கலங்கியிருப்பதை கண்ட ஹரிஷின் அம்மா பதட்டமடைந்து அவருடைய கண்களும் கலங்கிய நிலையில்,
" என்னங்க என்னாச்சுங்க.. ஏன் இப்பிடி இருக்கீங்க.. எதாவது பிரச்சினையா.. நம்ம பையனுக்கு எதுவும் இல்லல்ல.." அவர் சற்று அழுத்தமாகவே கேட்க,

அவர் கேட்டதில் மகேஷ் வாய்விட்டே அழுது தன் மகன் தொடர்பான செய்தியை மனைவியிடம் கூற அதிர்ச்சியான ஹரிஷின் அம்மா அச் செய்தியை தாங்க இயலாது அப்படியே மயங்கி சரிந்தார்.

பின் தன் மனையாளுக்கு ஆறுதலாகவும் , பாதுகாப்பாகவும் வீட்டில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளுமாறு கூறி வைத்து தன் மகனின் உடலை காண மோட்ச்சரிக்கு தன் ஆட்களுடன் விரைந்தார்.
------------------------------------------------------------------------

மோட்ச்சரியில்,

ஒரு தந்தை தன் மகனை எந்த நிலையில் காணக்கூடாதோ அத்தகைய நிலையில் கண்ட அவர் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் இதயமே வெடித்து சிதறும் அளவிற்கு அவ்விடத்திலேயே கதற தொடங்கினார்.

அவருடன் வந்த அவருடைய ஆட்கள் அவரை சமாதானப்படுத்த மோட்ச்சரியில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து விட்டு தன் மகனின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து ஆக வேண்டிய காரியங்களை செய்தனர்.

----------------------------------------------------------------------

காலையில்,
ஆர்னவின் ஃபார்ம் ஹவுஸில்,

நல்ல குடித்து விட்டு மட்டையாகிருந்த ஆர்னவிற்கு தொலைப்பேசி அழைப்பு வர அதை ஏற்று காதில் வைத்தவன் ஏற்கனவே மது அருந்தியதால் ஹேங்கோவரில் தலை வலி வேறு அதிகமாக இருக்க தொலைப்பேசியில் சொன்ன செய்தியில் அவனுக்கு தலை சுற்றவே ஆரம்பித்தது.

சொன்ன செய்தியில் மொத்த போதையும் இறங்கி விட அருகிலிருந்த கிரிஷை எழுப்பியவன் தானும் கிளம்பி அவனையும் கிளம்ப சொல்லி கிரிஷ் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லாது அவசர அவசரமாக அவனை அழைத்து கொண்டு மகேஷ் வீட்டிற்கு விரைந்து சென்றான்..

துக்க வீடு என்பதை வெளிப்படுத்தும் விதமாக எல்லோரும் வெள்ளை ஆடை அணிந்திருக்க வீட்டு வாசல் வரை வந்தவர்கள் நடு ஹோலில் தன் நண்பன் வெள்ளை துணியால் சுற்றப்பட்டு உயிரற்று ஜடமாக படுத்திருப்பதை பார்த்து செயலிழந்து சிலை போல் உறைந்தே விட்டனர்.

ஹரிஷின் உடலிற்கு அருகில் அவனது தாய் கதறி அழுகுவதை பார்த்து சுற்றி இருப்பவர்களுக்கும் கண்கள் கலங்கின. வீட்டு சோஃபாவில் மகேஷ் தன் மகன் தன்னை விட்டு பிரிந்ததில் மொத்த சாம்ராஜ்யமும் இடிந்து விட்டது போல் சோக உருவமாய் காட்சியளித்தார்..

தன் நண்பனின் உடலின் அருகில் வந்து அமர்ந்த ஆர்னவ் மற்றும் கிரிஷ் தன் நண்பனின் நிலையை பார்த்து இனி அவன் நம்மோடு இல்லை என எண்ணி கதறி அழ தொடங்கினர்.

"மச்சான்.. என்னால தானே டா உனக்கு இந்த நிலைம.. நா உன்ன தனியா விட்டிருக்க கூடாது.. எல்லா என்னோட க்யார்லெஸ் (Careless) தான் டா என்ன மன்னிச்சிறு டா.." - என கிரிஷ் கதறி அழ,

அவனை தன் தோளோடு அணைத்துக் கொண்டு தன் நண்பர்களின் நிலையை எண்ணி அவனை சரியாக கவனிக்காமல் விட்டோமே என்று தன்னை தானே நொந்து கொண்டான் ஆர்னவ்..

அப்போது சரியாக ஹரிஷ் தொடர்பாக விசாரனையை நடத்துகின்ற CBI அதிகாரிகள் இருவர் வருகை தர தன் மகனின் நிலைக்கு இவர்களின் கவனமின்மை தான் காரணம் என்று எண்ணி ஆத்தித்தில் அவர்களின் அருகில் வேகமாக சென்ற மகேஷ் அதில் ஒரு அதிகாரியின் சட்டையை பிடித்து ஆவேசமாக கத்த தொடங்கினார்..

"உங்களால தான் டா என் மகனுக்கு இந்த நிலைம.. நீங்க மட்டும் கவனமா வேலைய பார்த்து என் மகனை கண்டுபிடிச்சிருந்தா இந்நெரம் அவன் உயிரோட இரூந்திருப்பான்..உங்க பொறுப்பில்லாத வேலையால தான் டா அவன் எங்கள விட்டு போய்ட்டான்" - என்று ஹரிஷின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாது அந்த இயலாமை மொத்தத்தையும் கோபமாக மாற்றி அவர் கத்த,

அவர் அருகில் வந்து அவரை சமாதானப்படுத்திய ஆர்னவ் அந்த CBI அதிகாரியிடம் திரும்பி,
"இவனோட இந்த நிலைமைக்கு யாரு காரணம்னு கண்டுபிடிச்சீங்களா.. இவரோட பிஸ்னஸ் எனிமீஸ் யாராவதா... யாருன்னு மட்டும் சொல்லுங்க.. அவனுக்கு என் கையால தான் சாவு.." -என கண்களில் அனல் பறக்க பேசினான் ஆர்னவ்.

" இல்ல சார்.. இவரோட எந்த தொழில் முறை எதிரிகளும் இல்ல.. அந்த கில்லர்ஸ் ரொம்ப கவனமா பக்காவா ப்ளான் பன்னி செய்திருக்காங்க... அவங்க தொடர்பா ஒரு சின்ன எவிடன்ஸ் கூட எங்களுக்கு கிடைக்கல.. நாங்களும் அவங்கள கண்டுபிடிக்க முயற்சி பன்ன தான் செய்றோம்.. ஆனா அவங்கள பத்தி சின்ன தகவல் கூட எங்களால கண்டுபிடிக்க முடியல.. என்ன பொருத்த வரைக்கும் உங்க மறைமுகமான எதிரியா கூட இருக்கலாம்.. சீக்கிரம் நம்மகிட்ட சிக்குவாங்க சார்.."
-என CBI அதிகாரிகளில் முதலாம் நபர் கூற,

ஒரு பெருமூச்சை விட்ட இரண்டாவது CBI அதிகாரி,
"நாங்க உங்கள பத்தி கேள்விப்பட்ட வரை நீங்க மூனு பேரும் எது செய்தாலும் ஒன்னா தான் செய்வீங்க ஒன்னா தான் இருந்திருக்கீங்க..ஒருவேளை இது உங்க மூனு பேருக்கும் விரிக்கப்பட்ட வலையா கூட இருக்கலாம்.. இப்போ இவரோட மகன் அதுக்கு முதல் பலி ஆகியிருக்காரு.. அடுத்த டார்கெட் நீங்களா கூட இருக்கலாம்.. சோ, இனிமே நீங்க இரண்டு பேரும் பாதுகாப்பா இருங்க சேர்.. நாங்களும் எங்களால முடிந்த பாதுகாப்பு ஏற்பாட்டை செய்றோம்.. கூடிய சீக்கிரம் அவங்கள கண்டுபிடிச்சு கண்டிப்பா உங்ககிட்ட ஒப்படைப்போம் சார்.." -என அவர் கூறி முடிக்க,

அவர் கூறியதன் உண்மையை உணர்ந்த ஆர்னவும் கிரிஷும் யோசனையினூடே அவ் அதிகாரிகளுக்கு ஒரு தலையைசைப்பை கொடுத்து அவர்களை வழியனுப்பி விட்டு, மகேஷை சமாதானம் செய்து ஹரிஷின் உடலுக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளையும் செய்து முடித்தனர்.

இச் செய்தி கழுகு கண் போல் செய்திக்காக காத்திருக்கும் பல பத்திரிகை நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. பத்திரிகை நிறுவனங்கள் தங்கள் பிரபலத்திற்காக இல்லாத பொல்லாத பொய்களையும் செய்தியில் அள்ளித் தெளித்து செய்தியை வெளியிட அடுத்த ஒரே நாளில் ஹரிஷ் கொலை செய்யப்பட்டது மும்பை மாநகரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது

டிவி செய்திகளிலும் இதுவே தலைப்பு செய்தியாக ஒளிபரப்பாக கதாநாயகிகளை தவிர்த்து இன்னும் சில கண்களும் அவனின் மரணத்தை எண்ணி மின்னின..

ஹரிஷின் மரணத்திற்கு பிறகு தங்கள் நண்பன் தங்களை விட்டு பிரிந்த மனவேதனையில் இருந்த ஆர்னவும் கிரிஷும் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கும் வெறியில் இருந்ததோடு தங்களையும் பாதுகாத்துக் கொண்டனர்..

இவ்வாறு நாட்கள் ஓட,,

ஒரு மாதத்திற்கு பிறகு,

இரவு 8.00 மணியளவில்,

வேலைக் களைப்பில் தன் பக்கத்தில் படுத்திருந்தவன் மேல் காலையும் கையையும் போட்டு உறங்கி கொண்டிருந்த ஆர்யனுக்கு தொலைப்பேசி அழைப்பு வர, தூக்கம் கெட்டு விட்ட கடுப்பில், ஒருவித சலிப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறுமுனையில் சொன்ன செய்தியில் பதறியடித்துக் கொண்டு எழுந்தான்...



❤தொடரும்❤

------------------------------------------------------------------------


நானகாவது அத்தியாயத்தை பதிந்து விட்டேன் நண்பர்களே..marakama unga comments a slluga❤


❤ZAKI❤
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Very interesting nest target krish ah aryan aah. Heros enga ma ala kanom
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
ஹீரோயின் a enga sister?????

Nice ud sister ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top