• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤வீழ்ந்தேனடி 06❤

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
1597036689885.jpg


❤அத்தியாயம் 06❤

"ஹரிஷ்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.." என ஆர்யன் கேட்ட கேள்வியில் மூன்று பெண்களும் விழிபிதுங்கி திகைத்து நின்றனர்.

உடனே சுதாகரித்த ரியா,
"ஹலோ என்ன உங்க இஷ்டத்துக்கு வந்து முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்ககிட்ட சம்மதமே இல்லாம கேள்வி கேக்குறீங்க.. மொதல்ல நீ யாரு மேன்.." - என பொரிந்து தள்ள,

அவளுடைய கோபத்தை அலட்சியம் செய்த ஆர்யன் கூலாக,
"உட்கார்ந்து பேசலாமா லேடீஸ்.. உங்ககிட்ட நிறையவே பேச வேண்டி இருக்கு.." -என சொல்லி அவனும் மற்ற மூவரும் முன்னே நடக்க. வேறுவழி இன்றி அவன் பின்னே சென்றனர் மூன்று பெண்களும்.

தங்களுடன் அபி இல்லாததை உணர்ந்த ஹரி அவனை தேட கோபியர்களுக்கு மத்தியில் புல்லாங்குழல் இல்லாத கண்ணனாக சுற்றி பெண்களுடன் கடலை போட்டுக்கொண்டிருப்பதை கண்டவன் தலையிலடித்துக் கொண்டு அவனை அக்கூட்டத்திலிருந்து இழுத்துட்டு வர நம் அழகு மங்கைகளை கணடவன் "பியூட்டிஃபுல் கேர்ள்ஸ்" என யோகிபாபு பாணியில் கூறி அப்பட்டமாக சைட் அடித்துக்கொண்டு இருந்தான்..

ஆருத்ரா, கயல், ரியா மூன்று பேரும் கையும் களவுமாக மாட்டிப்பட்டதில் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்க அவர்களை கண்களில் கூர்மையுடன் கவனித்துக் கொண்டிருந்தனர் ஐந்து ஆண்களும்..

சிறிது நேரம் மௌனம் ஆட்சி செய்ய ஆர்யனே பேச்சை ஆரம்பித்தனர்.
"உங்களுக்கும் ஹரிஷ்கும் என்ன சம்மதம் இருக்குன்னு எங்களுக்கு தெரியாது.. ஆனா அவன் சாவுக்கு நீங்க தான் காரணம்னு நல்லாவே தெரியும்.. அதுக்கான ஆதாரம் கூட எங்ககிட்ட இருக்கு.. சோ, நீங்க எங்ககிட்ட எதுவும் மறைக்க முடியாது லேடீஸ்.." -என ஆர்யன் சொல்ல,

மூன்று பெண்களும் 'ஆதாரமா' என்று புரியாமல் பார்க்க அவர்களை ஒரு குறுஞ்சிரிப்புடன் பார்த்த ஆர்யன் ,
"என்ன நம்பிக்கையில்லையா... ஓகே... அப்போ இத பாருங்க எல்லாமே புரியும்.." -என்று தனது தொலைப்பேசியில் அன்று பதிவு செய்த வீடியோவை காட்டினான் ஆர்யன்.

அன்று பார்ட்டியில் ஆர்யன் ஆருத்ராவை தேடி சென்ற நேரம் மண்டபத்தின் பின்பகுதியில் கண்ட காட்சியை தொலைப்பேசியில் பதிவு செய்துக்கொண்டான்.
அதுவே இது..

அதில் மண்டபத்தின் பின்பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த இரண்டு கார்ட்ஸ் கீழே மயங்கியிருக்க ஐந்து பெண்களும் மயக்கமடைந்திருந்த ஹரிஷை தங்களுடைய வாகனம் நோக்கி யாருக்கும் தெரியாமல் தூக்கிச்செல்வதே அதில் படமாக்கப்பட்டிருந்தது.

ஆனால், அன்று ஆர்யன் சித்துவின் அழைப்பை துண்டித்து விட்டு அவர்களின் பின்னால் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின்தொடர முயற்சி செய்ய, ஒரு கட்டத்தில் அவனின் கண்ணிலிருந்து அவர்கள் மறைய பின் ஒரு மாதமாக தேடி அலைந்து இன்றே நம் நாயகனிடம் வசமாக சிக்கி உள்ளனர் நம் நாயகியும் அவளின் நண்பிகளும்.

அதனை பார்த்து ஜெர்க்கான மூன்று பெண்களும் கண்கள் விரிய திகைத்து, தங்களுடைய சிறிய கவனமின்மையால் இவர்களிடம் மாட்டிக் கொண்டதை நினைத்து தங்களை தாங்களே கடிந்துக் கொண்டனர். தன்னை நிதானப்படுத்திய ஆருத்ரா ஆர்யனை நோக்கி,
"இப்போ உங்களுக்கு எங்ககிட்ட இருந்து என்ன வேணும்.."- என கூர்மையான பார்வையுடன் கேட்க,

அவள் கேட்ட விதத்தில் புன்னகைத்து,
"கற்பூர புத்திமா உனக்கு உடனே பத்திக்கிட்ட.." என கூறியவன் அடுத்த நிமிடமே இறுகிய முகத்துடன்,
"உங்ககிட்ட இருந்து எங்களுக்கு எதுவும் வேணாம்.. ஆனா எங்களுக்கு அவங்களோட உயிர் வேணும்.. நீங்க எதுக்கு அவனுங்கள கொல்ல நினைக்கிறீங்கன்னு எங்களுக்கு தெரிய வேணாம்.. அதுமாதிரி நாங்க பழிவாங்குரத்துக்கான ரீசனும் உங்களுக்கு தெரிய தேவையில்ல.. பட் இரண்டு டீமும் சேர்ந்து இந்த வேலய பன்னலாம்.. என்ன சொல்றீங்க.." -ஆர்யன்

" நாங்க முடியாதுன்னு சொன்னா.." -என கயல் கேட்க,

"நாங்க அவனுங்கள போட்டு தள்ளிட்டு மாட்டிக்காம இருக்க இந்த வீடியோவ டி.ஜி.பி ஓஃபீஸ்க்கு அனுப்பி வச்சிறுவோம்... எப்பிடி வசதி.."-சித்து

சிறிது நேரம் யோசித்த ஆருத்ரா, "சரி நாங்க ஒத்துக்குறோம்.." என சொல்ல கயலும் ரியாவும் அவளை அதிர்ச்சியாகி பார்க்க, கயல் "ருத்ரா.." என அழுத்தமாக கூறி அவள் கையை பிடித்தாள்.

ஆனால் ஆருத்ரா இறுகிய குரலில்,
"ஆனா ஒன்னு.. இந்த விஷயம் வெளில தெரிஞ்சிச்சின்னா அவங்களால எங்கள பிடிக்கவே முடியாது.. அதேமாதிரி உங்கள எங்ககிட்ட இருந்து யாராலும் காப்பாத்த முடியாது.." - என எச்சரிக்கும் தொனியில் சொல்ல,

அவள் மிரட்டலில் மற்ற ஆண்கள் ஜெர்க் ஆக, அவளுடைய மிரட்டலை ரசித்த ஆர்யன்,
"சரி அதவிடு.. இனிமே உங்க பாதுகாப்புக்காக உங்ககூட சேர்ந்து வேல பார்க்க போறோம்.." என சொல்லி ஏதோ கூற வர,

அவன் கூறியது தான் தாமதம் மூன்று பெண்களும் 'வட்(What)' என்று கோரஸாக கேட்டு முறைக்க, சற்று பதறிய ஆர்யன்,
"ஐ மீன்.. எங்க பாதுகாப்புக்காகவும்... உங்க கூட சேர்ந்து வேல பார்க்க போறோம்னு சொல்ல வந்தேன்... ஹிஹிஹி" -என்று அவன் சமாளிக்க,

அப்போதும் ஆருத்ரா அவனை முறைத்து பார்க்க பேச்சை மாற்றும் பொருட்டு,
"ஐ அம் ஆர்யன்.. உங்க பேர தெரிஞ்சிக்கலாமா..."- என்று கேட்டு வைக்க,

'ஆருத்ரா' என்று தனது பெயரை கூறியவள் அவனுடைய பெயரை தன் மனதில் 'ஆரா' என பதிந்து கொண்டாள்.. அவளும் முதன்முதலாய் தன்னை நோக்கிய ஆர்யனின் ரசனை பார்வையில் அவனின் காந்தக் கண்களில் தன்னை சற்று தொலைக்கத் தான் செய்தாள். ஆர்யனும் ஆருத்ராவுடைய பெயரை மனதில் 'ஆரு' என சொல்லிக் கொண்டு அவளை பார்வையாலையே துளைத்தெடுத்தான்.

ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்த கயல் தனது பெயரை கூறியவுடன் 'ராட்சசி' என ஆதி அவளை வறுத்தெடுத்தது மட்டுமன்றி கயலும் 'சிடுமூஞ்சி' என அவனை மனதில் கருவிக்கொண்டாள்.இருவரும் ஒருவரையொருவர் அப்பட்டமாக பார்வையாலயே எரித்துக் கொண்டிருந்தனர்.

'இந்த கொலைகாரிங்ககிட்ட நம்மள சிக்க வச்சிட்டானே இந்த ஆர்யா நாய்..' என மனதில் புலம்பியபடி ஹரி நிமிர்ந்து பார்க்க அவனை ரியா முறைப்பதை பார்த்து 'ஆத்தீ...' என மனதில் நினைத்து கண்களை பயத்தில் அங்குமிங்கும் உருட்டியவாறு தலையை கீழே குனிந்து கொண்டான்.

தன்னை நோக்கிய அவனுடைய மருண்ட பார்வையை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் அதை வெளிக்காட்டாமல் வெளியில் முறைத்தபடியே இருந்தாள்.ஹரியுடைய இச் செய்கை அவள் மனதை அவன் பால் ஈர்த்தது எனமோ உண்மை தான்...

பின் அனைவரும் விடைப்பெற்று செல்லும் நேரத்தில் பெண்களை தொடர்பு கொள்ள அவர்களின் தொலைப்பேசி எண்ணையும் வாங்கிக் கொண்டனர்.

ஆர்யன் தான் வாகனத்தில் ஏறி செல்லுல் வரை ஆருத்ராவையே விழுங்கி விடுவது போல் பார்க்க அவனது பார்வையில் பெண்ணவள் திணறித்தான் போனாள்.. தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்ட ஆண்கள் தங்கள் திட்டம் நிறைவேறியதை நினைத்து அர்த்தப் புன்னகையை சிந்திக்கொண்டனர்.
----------------------------------------------------------------------

அதே இரவு,
ஆருத்ரா வீட்டில்,

"நீங்க அவனுங்கள சும்மாவா விட்டுட்டு வந்தீங்க.. எவ்ளோ தைரியம் இருந்தா வீடியோ எடுத்து எங்களையே மிரட்டுவாங்க.. நீங்களும் சரின்னு சொல்லிட்டு வந்திருக்கீங்க.. யோசிச்சு தான் முடிவு பன்னிங்களா.." -என துர்கா ஆவேசமாக கத்த,

அவள் தோளில் கையை போட்டு சமாதானம் செய்த ஆருத்ரா,
"இங்க பாரு துரு கோபப்படாத.. நம்மளுக்கு அவனுங்கள பழி வாங்கினா போதும் இவங்களுக்கும் அதே எண்ணம் தான்.. அதனால தான் சரின்னு சொன்னேன்.. அவங்கள பார்த்தாலும் தப்பானவங்களா தெரியல அவங்களால நமக்கு எந்த பிரச்சினையும் வராது.."

"அது எப்பிடி இவ்ளோ உறுதியா சொல்ற ருத்ரா.. ஒருவேள அவங்க எல்லா சேர்ந்து பன்னிட்டு நம்மல மாட்டிவிட்டுட்டா.." -ஆதிரா

"அப்பிடி மட்டும் நடந்தா அவனுங்கள நா கொல்லாம விட மாட்டேன்.."-என கடுங்கோபத்தில் கயல் கூற,

"நாம ஒன்னும் இதே தொழிலா வச்சி சுத்தல்ல.. ஏதோ நம்ம சூழ்நிலையால இந்த நிலைமையில நிக்கிறோம்.. அவ்ளோ தான்.. அவங்கள கொல்றது மட்டும் தான் நம்ம நோக்கம். மத்தவங்களுக்கு நம்மளால எந்த கஷ்டமும் வர கூடாது.. நா வரவும் விடமாட்டேன்.." -என ஆருத்ரா உறுதியாக கூற,

"அப்போ இந்த அஞ்சு பேரால நமக்கு ஆபத்து வந்தா அப்பவும் அமைதியா தான் இருக்கனும்னு சொல்ல வரியா.."- ரியா

"நம்மளோட வேல முடிஞ்சதும் நாம என்ன பன்னனும்னு முன்னாடியே ப்ளான் பன்னியாச்சு... அதுக்கப்றம் யாரு நினைச்சாலும் நம்மள கண்டுபிடிக்க முடியாது நா சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் ..."
-என ஆருத்ரா கூற அதை ஆமோதித்த மற்றவர்களும் தங்களின் வேலையில் கவனமானர்.

---------------------------------------------------------------------
அடுத்த நாள் காலை,
அந்த பெரிய ஹோலில்,

ஹரிஷின் தந்தை மகேஷ், ஆர்னவ், கிரிஷ் மற்றும் ஹரிஷ் கேஸ் தொடர்பாக விசாரனை மேற்கொள்ளும் அந்த முக்கிய CBI அதிகாரிகள் இருவரும் அமர்ந்திருக்க அவர்களுக்கிடையே பேச்சு வார்த்தை நடைப்பெற்றது.

"ஹரிஷ் இறந்து கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகிருச்சி ஆனா நீங்க இன்னும் அந்த கில்லர்ஸ்ஸ கண்டுபிடிக்கல்ல.. என்ன தான் பன்னிக்கிட்டு இருக்கீங்க"- என கண்ணில் கோபம் பொங்க கேட்டான் ஆர்னவ்..

"நீங்களும் சீக்கிரம் கண்டுபிடிச்சிருவீங்கன்னு உங்க பேச்ச நா நம்பினா என் பையன கொலை செஞ்சவங்க பத்தி ஒரு சின்ன தகவல் கூட உங்களால தெரிஞ்சிக்க முடியல.." -மகேஷ் ஆத்திரத்தில் கத்த,

"அங்கிள் இவங்க இதுக்கு சரிபட்டு வருவாங்கன்னு எனக்கு தோணல.. ஒரு மாசமா ஈ ஓட்டிக்கிட்டு இருந்திருக்காங்க.. இத நானும் ஆர்னவும் பாத்துக்குறோம்.. அதுல இவங்கள தலையிட வேணாம்னு மட்டும் சொல்லுங்க.." -கிரிஷ் அவர்களை ஏளனமாக பார்த்தபடி சொல்ல,

கிரிஷின் பேச்சில் ஆத்திரமடைந்த அந்த 1ம் CBI அதிகாரி அதை வெளிக்காட்டாமல்,
"எங்கள மன்னிச்சிருங்க சார்.. அவங்களுக்கு எதிரா எந்த ஆதாரமும் எங்களுக்கு கிடைக்கல்ல.. நாங்களும் விசாரனை பன்னிக்கிட்டு தான் இருக்கோம்..கொஞ்சம் பொறுமையா இருங்க.."

என அவன் பேசிக்கொண்டிருந்ததை இடைமறித்த ஆர்னவ்,
"இன்னும் எவ்வளவு நாள் பொறுமையா இருக்க சொல்றிங்க சார்ர்.." என நக்கலாக கேட்ட,

"கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிருவோம் சார்.. ஹோல்ல இருந்த அத சுத்தி ஃபிக்ஸ் பன்னியிருந்த எல்லா சிசிடிவி கேமராஸையும் ச்செக்(Check) பன்னோம்.. பட் ஹரிஷ் ஹோல்ல இருந்து வெளில போனது எந்த கேமராவுலயும் பதிவாகியில்ல.. நீங்க சொன்ன மாதிரி பவர் கட் ஆகின நேரம் தான் ஏதோ ஆகியிருக்கு.. என்ட் அங்க இருந்த எல்லா சிசிடிவி கேமராவும் கொஞ்ச நேரம் வேர்க் ஆகாம இருந்திருக்கு..அந்த கேப்ல தான் யாரும் கவனிக்காத மாதிரி கில்லர்ஸ் ஹரிஷை கடத்திருக்காங்க.."
- 2ம் CBI அதிகாரி

"என்ட் நீங்க இந்த கேஸ் தொடர்பா சொன்ன முக்கியமான தகவல்.. அதாவது ஹரிஷ்க்கு கடைசியா ஒரு பொண்ணு கோல் பன்னா அவள இன்வைட் பன்ன தான் அவர் வெளிய போனாறுன்னு.. அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சிட்டோம்.. " - என 1ம் CBI அதிகாரி பேச,

அவர் பேசுவதை குறுக்கிட்ட கிரிஷ்,
"அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டிங்களா.. அப்போ அவள விசாரிக்கலாமே.. அவகிட்ட இருந்து அந்த கில்லர்ஸ் பத்தி தகவல் கிடைக்கலாம்.. ஒருவேள அவளா கூட இருக்கலாம்.." -என சொல்ல,

இடமும் வலமுமாக தலையசைத்த அந்த 1ம் CBI அதிகாரி,
"அந்த பொண்ணு இல்ல சார்.. அந்த பொண்ணு அன்னைக்கு பார்ட்டிக்கு கூட வரல.. இன்னும் சொல்லனும்னா அந்த பொண்ணு அப்போ மும்பையிலயே இல்ல."
- என சொல்ல ஆர்னவ், கிரிஷ், மகேஷ் மூவரும் திகைத்து விட்டனர்.

ஒரு பெருமூச்சை விட்ட அந்த அதிகாரி மீண்டும் தொடர்ந்தார்.
"ஹரிஷ்க்கும் அந்த பொண்ணுக்கும் சோசியல் மீடியால பழக்கம் ஏற்பட்டதா அத ஹரிஷே சொன்னதா சொன்னிங்க.. அதனால அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்க ஹரிஷோட இன்ஸ்டாக்ரேம் அக்கௌன்ட்ட ஹெக்(Hack) பன்னோம்.. அதுல அவர் ஒரு பொண்ணு கூட ரொம்ப க்ளோஸாவே பேசியிருக்காரு.. அந்த பார்ட்டிக்கு கூட அவள இன்வைட் பன்னியிறுந்தாரு..

அந்த பொண்ணு வேற யாரும் இல்ல மகேஷ் சார்.. உங்க பிஸ்னஸ் பார்ட்னர் மிஸ்டர்.அமித்தோட பொண்ணு ஷாயா.. ச்சீஃப் மினிஸ்டர் பார்ட்டி நடக்கும் போது ஷாயா மும்பையிலேயே இல்ல அதுக்கு இரண்டு நாள் முன்னாடி தான் அவங்க ஏதோ வேல விஷயமா டெல்லி போயிருக்காங்க.

அவங்கள மும்பை வரவழைச்சி விசாரிச்சதுல தான் எங்களுக்கு எல்லாமே தெரிஞ்சது.. அன்னைக்கு அவங்க மும்பையில இல்ல என்றதுக்கான ஆதாரம் கூட சரியா இருக்கு.. " என அந்த 1ம் CBI அதிகாரி கூறி முடிக்க,

"ஆனா அன்னைக்கு ஹோல்ல இருக்கும் போது ஷாயாவோட நம்பர்ல இருந்து அவங்க வொய்ஸ்ல தான் ஹரிஷோட பேசியிருக்காங்க.. அவர ஹோல்ல இருந்து வெளிய வர வைக்க அந்த கில்லர்ஸ் ஷாயாவ யூஸ் பன்னிருக்காங்க.." - 2ம் CBI அதிகாரி

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ, 1ம் CBI அதிகாரியே அவ் அமைதியை கலைத்தார்.
"எங்க மேல நம்பிக்கை வைங்க சார். எந்த ஆதாரமும் இல்லாம நாங்க அவங்கள கண்டுபிடிக்கிறதுக்கு ரொம்பவே முயற்சி பன்றோம்.. கொஞ்சம் பொறுமையா இருங்க" - 1ம் CBI அதிகாரி

அதை ஆமோதித்த ஆர்னவ், கிரிஷ், மற்றும் மகேஷ்,
"சீக்கிரம் கண்டுபிடிங்க.. ஒரு அளவுக்கு மேல எங்களாலும் பொறுமையா இருக்க முடியாது.. மறுபடியும் உங்கள நம்புறோம்.. அந்த கில்லர்ஸ்ஸ கண்டுபிடிச்சு சீக்கிரம் ஒரு நல்ல தகவல எங்ககிட்ட சொல்லுங்க.. அவங்க செஞ்ச தப்புக்கு அதுக்கும் மேலான தண்டனைய கொடுக்கனும்.."
என கண்ணில் அனல் பறக்க கூறி விட்டு அவ் அறையை விட்டு சென்றனர்.

அவர்கள் சென்றவுடன் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர் இரண்டு CBI அதிகாரிகளும். சில நிமிடங்களில் ஹரிஷ் கேஸ் தொடர்பாக விசாரனை செய்யும் இன்னும் சில அதிகாரிகள் வர,

அவர்களை உட்கார சொல்லி அவர்களுடன் ஹரிஷ் கொலை தொடர்பாக சில முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டார்கள் அந்த இரண்டு அதிகாரிகள்.அவர்கள் கூறியதை கேட்ட மற்ற அனைவரும் யோசனையினூடே தலையாட்டி தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க, ஒரு மர்மப்புன்னகையை புரிந்தான் அந்த 1ம் CBI அதிகாரி..


❤தொடரும்❤

-----------------------------------------------------------------------

marakama unga comments a slluga frnds.. apo thaan en story patthi nega enna nenaikiringannu therijika mudiyum..❤


❤ZAKI❤
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Yen yethukkaga aaryan ivanga kuda koottani vaikkiran? Yethukkaga intha officer ipdi sirikkiraru
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top