• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤வீழ்ந்தேனடி 32❤

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
1597036689885.jpg


அன்று,



"கயல்.. கயல்.." என கத்திக் கொண்டே வந்த ஆர்யன் அவள் தோட்டத்தில் அமர்ந்து காதில் ஹெட்ஃபோன் போட்டு தனது லேப்பில் வேலை செய்துக் கொண்டிருந்ததை கண்டவன் அவள் அருகில் வந்து அவள் காதில் இருந்த ஹெட்ஃபோனை கலட்ட நிமிர்ந்து ஆர்யனை புரியாமல் பார்த்தாள் கயல்.



அவள் எதிரில் அமர்ந்தவன் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருக்க அவனை புரியாமல் பார்த்து, "என்னாச்சு.." என கயல் கேட்க,



"இன்னும் என்ன ஆகனும்.. உன் ஃப்ரென்டு அந்த கௌத்தம் கூட வெளில போக ரெடி ஆகுறா.. நீ இங்க இருந்துகிட்டு ஹாயா லேப்ல படம் பாத்துகிட்டு இருக்க.." என பொங்க,



'எது படம் பாக்குறேனா.. அட குழப்பத்துக்கு பொறந்தவனே..' என மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவன், "வா வந்து தொலை.. எதாவது ட்ரை பன்றேன்.." என சொன்னவள் வாசலை நோக்கி செல்லவும் ஆருவும் கௌத்தமும் சிரித்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. இதைப்பார்த்து ஆர்யனின் முகம் இன்னும் இறுக கௌத்தமை அப்பட்டமாக முறைத்துக் கொண்டிருந்தான்.



ஆருவிடம் வந்த கயல், "என்ன ருத்ரா வெளில போறியா.." என கேட்க,



கயலை திரும்பிப் பார்த்தவள், "ஆமா டி கௌத்தமுக்கு ஊர் சுத்திக் பார்க்கனும்னு ஆசையா இருக்காம் அதான்.." என சொல்ல,



"என்ன ருத்ரா நீ.. நீயே ஊருக்கு புதுசு உனக்கென்ன தெரியும் இந்த ஊர பத்தி.. கொஞ்சம் வெயிட் பன்னு.." என கூறியவள் அங்கு தன் ஃபோனை உயர்த்தி சிக்னல் தேடுவது போல் பாவனை செய்துக் கொண்டிருந்த ஆர்யனை அழைக்க



அவனும் எதும் தெரியாதது போல் கயல் பக்கத்தில் வந்து,
"என்ன கயல் ஏதாவது ஹெல்ப் பன்னனுமா.. ஹோ ஆருவும் இங்க தான் இருக்காளா.. என்ன ஆரு எங்காச்சும் வெளில போறியா.. எனி ஹெல்ப்.." என நல்ல பிள்ளை போல் கேட்க,



அவன் நடிப்பை கண்டவளோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு,
"அது ஒன்னும் இல்லை ஆரா.. கௌத்தம்கு ஊர சுத்தி பார்க்கனுமாம்.. அதான் வெளில போறோம்.. ஆனா பரவாயில்லை நாங்க தனியாகவே போயிக்கிறோம்.. எனக்கு இந்த ஊர் நல்லாவே பழகிட்டு.." என அவனை சீண்ட ஆரு சொல்ல,



ஆர்யனோ, "நோ.. நோ ஆரு .. காலம் கெட்டு போயிருக்கு.. வெளிய வீட்டுப் பொண்ண அனுப்பி வச்சிட்டு வயித்துல நெருப்ப கட்டிட்டு இருக்க முடியாதுல பாரு.. நீ தொலைஞ்சு போயிட்டேன்னா.. உனக்கும் ஊர் அவ்வளவு பழக்கம் இல்ல.. உன் ஃப்ரென்டுக்கும் நம்ம ஊர் புதுசு.. சோ, வா வா.. சீக்கிரம் ஊர் சுத்தி பார்த்துட்டு வந்துரலாம்.." என்று அவன் பாட்டிற்குபேசி விட்டு முன்னே செல்ல ஆருத்ராவோ கயலை திரும்பி பார்த்தாள்.



அவளோ சிரிப்புடன் கண்சிமிட்டி விட்டு செல்ல,
"உன் ஆளு ரொம்ப தான் ருத்ரா.. இவ்வளவு பொஸ்ஸெஸிவ் ஆகாது.. ஆனாலும் ஒருத்தர வெறுப்பேத்துறது ஜோலியா தான் பா இருக்கு.." என சொல்லிக் கொண்டே கௌத்தம் செல்ல அவளுக்கும் ஆர்யனின் செய்கையில் சிரிப்பு தாளவில்லை.



பின் இருவரையும் தேனியில் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றான் ஆர்யன். சுருளி அருவிக்கு அழைத்து செல்ல அங்கு சில மக்கள் கூட்டங்களாக அங்கும் இங்கும் இருக்க எல்லாவற்றையும் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டு வந்தான் கௌத்தம்.



அவள் அருகில் வந்த ஆர்யன் கௌத்தமிடம்,
"என்ன ப்ரோ இப்பிடி பாத்துகிட்டு வர்ரீங்க.. இதுக்கு முன்னாடி மனுஷங்களையே பார்த்தது இல்லையா.." என நக்கலாக கேட்க,



அதில் சிரித்த கௌத்தம்,
"அப்பிடி எல்லாம் இல்லை ப்ரோ.. நா பொறந்ததிலிருந்தே யு.எஸ்ல தான்.. டாடி இந்தியா மாம் அமெரிக்கன்.. டாடி ஏதோ வேலை விஷயமா யு.எஸ் வந்த சமயம் தான் லவ் ஆகி கல்யாணம் பன்னிக்கிட்டாங்க.. அம்மாகிட்ட வளர்ந்தாலும் நா தமிழ் கத்துக்கனும்னு அப்பா நைட் தமிழ் கத்து தருவாரு.. நா வளர்ந்த ப்ளேஸ்ல இந்த ஊர் ஆளுங்கள பார்க்குறதே அபூர்வம் அதனால தான் என்னவோ எனக்கு ருத்ரா கயல மீட் பன்ன உடனே ரொம்ப புடிச்சு போச்சு.. அதான் இப்போ இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங் ஆ இருக்கு.." என சொன்னான்.



இவ்வாறு பேசிக் கொண்டே நடந்து வந்தவர்களுக்கு சுருளி அருவி பார்வைக்கு தெரிந்தது. சில மக்கள் தங்கள் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டு சில பேர் அருவியில் குளித்துக் கொண்டும் இருக்க ருத்ராவோ அருவியையும் சுற்றியுள்ள பகுதிகளையும் பார்த்துக் கொண்டு தன் ஃபோனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தாள்.



அப்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஆர்யன் தன் சந்தேகத்தை தீர்த்து தெளிவு பெற எண்ணி கௌத்தமிடம்,
"கௌத்தம் அது.. அது வந்து உங்ககிட்ட ஒன்னு கேக்கனும்.." என கேட்க,



கௌத்தமும் புரியாமல், "என்ன ஆர்யன்.." என கேட்க,



ஆர்யனோ, "நீங்க யாராச்சும் லவ் பன்றிங்களா.." என சட்டென்று கேட்க,



கௌத்தமும் சட்டென்று, "யெஸ் ஆர்யா.." என சொல்ல இதைக் கேட்ட ஆர்யனின் முகம் வாடிவிட முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டு
"யாரு.." என இறுகிய குரலில் கேட்டான்.



அந்நேரம் பார்த்து ஆருவோ வீடியோ எடுத்தவாறு பின்னாடி பார்க்காது பின்னோக்கி நடக்க அதை கவனித்த கௌத்தமோ, "ருத்ரா.." என கத்திக் கூப்பிட்டவாறு அவளை நோக்கி செல்ல இதை ஆர்யனோ அவன் கேட்டதுக்கு பதில் சொல்லியதாக நினைத்து முகம் இறுகியவனுக்கு இதயத்தை ஈட்டியால் துளைத்தெடுத்தது போலவே அவ்வளவு வலியாக இருந்தது.



இருவரையும் ஒன்றாக பார்க்க முடியாது அவன் வெளியில் சென்று வண்டியில் இருக்க சிறிது நேரத்திலே கௌத்தமும் ருத்ராவும் வந்தனர். பின் அவர்களை திராட்சை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான் ஆர்யன்.



கௌத்தமோ திராட்சை தோட்டத்தை பராமரிப்பவரிடமும் இதைப் பற்றி கேட்டுக் கொண்டும் அவர் தரும் பழத்தை சுவைத்துக் கொண்டும் அங்கு ஃசெல்பி எடுத்துக் கொண்டும் இருக்க ஆர்யனோ ஒரு கம்பியில் சாய்ந்தவாறு தரையை பார்த்துக் கொண்டே உம்மென்று இருந்தான்..



அவனைப் பார்த்தவாறே வந்த ஆரு அவன் அருகில் நெருங்கி நின்றுக் கொண்டு தன் ஃபோனில் கேமராவை ஓன் செய்து,
"ஆரா கேமாராவ பாரு.." என சொல்ல,



ஆர்யனோ அவளிடமிருந்து தள்ளி நின்று,
"ஆரு என்ன பன்ற.. அவர் பார்த்தா என்ன நினைப்பாரு தள்ளி போ.." என சொல்ல,



முதலில் அவன் சொன்னதில் புரியாமல் விழித்தவள் பின் அவன் கௌத்தமை தான் சொல்கிறான் என்பதை புரிந்துக் கொண்டு அடக்கப்பட்ட சிரிப்புடன்,
"உங்க அவரு ஒன்னும் சொல்ல மாட்டாரு.. நீ வா.." என அவனை இழுக்க அவள் மேலே மோதி நின்றான் ஆர்யன்.

அவன் கைகளை பிடித்தவாறு இவள் செல்ஃபி எடுக்க ஆர்யனுக்கு தான் அவள் அருகாமை அவஸ்தையாகி போனது. அவளை விட்டு தள்ளி தள்ளி இவன் நிற்க ஆருவோ வேண்டுமென்றே அவனை நெருங்கி உரசிக் கொண்டு அவனை சோதித்தாள்.ஒரு வழியாக இருவரையும் அங்கு இங்கு என சில இடங்கள் சுற்றி காண்பித்து விட்டு வீட்டுக்கு அழைத்து வந்தான் ஆர்யன்.

உள்ளே நுழைந்தவர்கள் கண்ணிற்கு முதலில் பட்டது தோட்டத்தில் அனு திருதிருவென முழித்துக் கொண்டிருக்க அவனுக்கு சற்று தள்ளி ஆதிரா அபியை குனிய வைத்து அவனை துவைத்துக் கொண்டிருக்க அபி அலறிக் கொண்டிருக்கும் காட்சி தான்.



இதைப்பார்த்து மூவரும் ஓடிச்சென்று ஆதிராவை ருத்ரா அபியிடமிருந்து பிரித்தெடுக்க ஆர்யனும் கௌத்தமும் அபியை ஆதிராவிடமிருந்து காப்பாற்றி தாங்கி பிடித்துக் கொண்டு இருந்தனர்.



"என்னை விடு ருத்ரா.. இன்னைக்கு இவன சும்மா விட மாட்டேன்.. விடு டி.." என ஆதிரா கத்த என்ன நடந்ததென்றே புரியாமல் அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.



அபியோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி,
"ஆத்தாடி.. பார்க்க தான் டி குள்ள பூதம் மாதிரி இருக்க.. ஆனா என்னா அடி.." என அலற,



ஆதிராவுக்கோ அவன் பேச்சு இன்னும் சீண்ட,
"என்னையா டா பூதம்னு சொல்ற.. உன்ன.." என அடிக்க போனவளை சமாதானப்படுத்திய ஆருத்ரா " என்னாச்சு டி.." என கேட்க, அபியை முறைத்த வண்ணமே நடந்ததை கூறினாள்.



தோட்டத்தில் ஆதிரா அவள் பாட்டிற்கு செவனேன்னு உட்கார்ந்திருக்க அப்போது ஆதிராவை வெறுப்பேற்ற அனுவை இழுத்துக் கொண்டு வந்த அபி அவளுக்கெதிரே அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டு அவளை வெறுப்பேற்றும் முயற்சியில் இருந்தான். உள்ளுக்குள் பிபி எகிறினாலும் காட்டிக் கொள்ளாது இரைக்காக காத்திருக்கும் கழுகு போல் அபி தன்னிடம் சிக்கும் சமயத்திற்காக ஆதிரா பல்லை கடித்துக் கொண்டு காத்திருக்க அடுத்த கொஞ்ச நேரத்திலே வோன்டெட் ஆக போய் மாட்டிக் கொண்டான் அபி.



அனுவிடம் கதையளந்துக் கொண்டிருந்த அபிக்கு திடீரென ஒரு யோசனை தோன்ற,
"அனு ஹரிணி ரிசப்ஷன்ல நாம ஒரு டான்ஸ் பெஃபோமன்ஸ் பன்னலாமா.." என கேட்க,



"வாவ் அபி சூப்பர் ஐடியா.. செம்மயா இருக்கும்.." என அனு குதூகலிக்க,



"அப்போ ஓகே இப்போவே சோங் செலக்ட் பன்னி ப்ராக்டிஸ் பன்னி பாக்கலாம்.." என அபி சொல்லி இருவரும் தீவிரமாக தேடி ஒரு பாட்டை தேர்ந்தெடுத்தனர். இதை அனைத்தையும் எதிரே இருந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. இருந்தும் ஓரக் கண்ணால் அபியின் கூத்தை கண்ணில் அனல் பறக்க பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதிரா.



"முன் தினம் பார்த்தேனே..
பார்த்ததும் தோற்றேனே..
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே.. "




என்ற பாடல் ஃபோனில் ஒலிக்க அபியும் அனுவும் கையை பிடித்த வண்ணம் அவர்கள் பாட்டிற்கு ஆட ஆதிராவை வெறுப்பேற்ற அவள் அமர்ந்திருந்த கதிரையையே அடக்கப்பட்ட சிரிப்புடன் சுற்றி சுற்றி ஆடிக் கொண்டிருந்தான் அபி. அனுவிற்கு ஏதும் புரியாவிட்டாலும் அபியின் நடவடிக்கைகளும் ஆதிரா கைகளை கட்டிக் கொண்டு தரையையே முறைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதும் சிரிப்பை வரவழைக்க அவளும் முட்டிக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஆடுவதில் மும்முரமாக இருந்தாள்.



இப்பிடியே ஆதிராவை சுற்றிய வண்ணம் அனுவின் கையை விட்டு தன்னை ஒரு சுற்று சுற்ற கால் இடறி அப்பிடியே ஆதிராவின் மேல் விழுந்தவன் அவள் அமர்ந்திருந்த கதிரையுடன் அவளையும் கீழே தள்ளி அவள் மேலே விழுந்து விழ அவள் கன்னத்தில் அவன் இதழ்கள் நச்சென்று ஒட்டிக் கொண்டது.



இதை முதலில் எதிர்ப்பார்க்காதவள் அவனை திகைத்து பார்த்து பின் 'பட்சி வலைல சிக்கிகிச்சு..' என நினைத்தவாறு அவனது முத்தம் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தாவிடினும் இதற்கு முன் அவன் அனுவுடன் போட்ட கூத்திற்கு இதை சாக்காக வைத்து அவனை ஒரு புரட்டு புரட்டி எடுத்து விட்டாள் ஆதிரா.



அனைத்தையும் ஆதிரா கூறியவுடன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிய வண்ணம் அவளை சந்தேகப்பார்வை பார்த்த ஆருத்ரா,
"நிஜமாவே அதான் ரீஸனா.. இல்ல.." என சந்தேகமாக இழுக்க,



"அது.. ஹான்.. பின்ன.. எவ்வளவு தைரியம் இருந்தா என் மேலயே விழுவான்.. விழுந்தது மட்டுமில்லாம கிஸ் பன்னிட்டான் ருத்ரா.. சும்மா விடுவேனா நானு.." என தட்டுத்தடுமாறி ஏதோ சமாளிக்க அபியை திரும்பி பார்த்த ஆருத்ராவுக்கோ அவனை பார்க்கவே பாவமாக இருக்க ஆர்யனுக்கும் கௌத்தமுக்கும் அவனை பார்க்கவே சிரிப்பு சிரிப்பாக வந்தது. இவ்வாறு அன்றைய நாள் பொழுதும் கழிந்தது.
----------------------------------------------------------------
அடுத்த நாள் காலை,



ஹரி தங்கையின் கல்யாண வேலையில் மும்முரமாக இருக்க காலையில் கோவிலுக்கு செல்ல தயாரான ஹரியின் அம்மாவுடன் தாங்களும் துணைக்கு வருவதாக அடம்பிடித்து அவருக்கு துணையாக சென்றனர் ஆதியும் ஆர்யனும்.



கோவிலில் நுழைந்த ஆர்யனும் ஆதியும் ஹரியின் அம்மாவுடன் கடவுளை வணங்கி விட்டு வெளியில் வர எத்தனிக்க ,
"கோவிலுக்கு வந்தா சாமி கும்பிட்டுட்டு உடனே கிளம்ப கூடாதுப்பா.. நா கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்.." என அவர் அங்கு இருந்த படிகளில் அமர ஆர்யனும் ஆதியும் தாங்கள் வண்டியில் காத்திருப்பதாக கூறி வெளியில் வந்தனர்.



வெளியில் வந்தவர்கள் வண்டிக்கு செல்ல மனமில்லாது அவர் வரும்வரை அப்பிடியே கோவிலுக்கு பின்னாடியுள்ள பகுதிக்கு நடந்து போக,



ஆர்யனின் வாடிய முகத்தை பார்த்த ஆதி,
"என்ன டா ஆச்சு உன் ஃபேஸ் ஃப்யூஸ் போன பல்பு மாதிரி டல்லா இருக்கு.." என கேட்க,



அவன் கேட்டது தான் தாமதம் ஆர்யனோ பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு,
"உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்..
தங்கமே ஞான தங்கமே..
என்னை நினைச்சேன் நானும் சிரிச்சேன்..
தங்கமே ஞான தங்கமே.."

என மேலே பார்த்த வண்ணம் சோகமாக படிக்க,



அவனை புரியாமல் பார்த்த ஆதி,
"டேய்ய் எளவெடுத்தவனே.. என்ன ஆச்சுன்னு கேட்டா உன் இஷ்டத்துக்கு பாட்டு பாடிக்கிட்டு இருக்க.. கேக்க முடியல உன் வொய்ஸ்ஸ.. என்ன ஆச்சுன்னு சொல்லி தொலை டா.." என கோபப்பட,



அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த ஆர்யன் மீண்டும்,
"வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்..
தரை மீது காணும் யாவும்..
தண்ணீரில் போடும் கோலம்..
நிலைக்காதம்மா...



யாரோடு யார் வந்தது
நாம் போகும் போது
யாரோடு யார் செல்வது..



வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்.."




என மீண்டும் சோகப் பாட்டு படிக்க கடுப்பான ஆதி அவனை மூக்கு விடைக்க முறைக்க முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு ஆர்யன் திரும்பவும் கோவிலின் பின் பகுதிக்கு வரவும் சரியாக இருந்தது. ஆதியின் புறம் திரும்பியவன் அவனுக்கு பின்னால் தெரிந்த காட்சியில் அதிர்ந்து தான் போனான்.



❤தொடரும்❤
-----------------------------------------------------------



frnds marakama unga comments a solluga..
thanks for ur support guys?
keep supporting me❤❤




❤ZAKI❤
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,777
Location
Chennai
எட்டி எட்டி பார்த்தேன் எனக்கு எதுவும் தெரியல. அவனுக்கு மட்டும் தெரியுது ???Super?????
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Sothappuranugale yenda dei yenda
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top