• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤வீழ்ந்தேனடி 36❤

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
1597036689885.jpg




சூரியன் தன் செங்கதிர்களை பாரில் சிதறவிட்டு அடுத்த நாள் பொழுது யாருக்கும் காத்திராது அழகாக விடிந்தது. இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம் என்ற நிலையில் வீடே சிரிப்பு சத்தத்தில் நிறைந்தும் பூக்கள் அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தது.



இங்கு வீட்டில் எல்லா இளம் பெண்களும் தமது கைகளுக்கு மருதாணி இட்டுக் கொண்டும் ஒருவரை ஒருவர் கேலி பேசிக் கொண்டும் இருக்க மருதாணி இடும் பெண்கள் மணப்பெண்ணாக போகின்ற ஹரிணியின் கையில் தமது திறமையை காட்ட அதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர் நம் நாயகிகள்.



திடீரென ஆருத்ராவின் தோளில் ஒரு கரம் தட்ட திரும்பி பார்த்தவளுக்கோ ஆச்சரியம். அவள் பின்னே தியா என்ற சிறுமியே நின்றிருக்க அவள் மலர்ந்த முகத்துடனே அவளையே பார்த்திருக்க அச்சிறுமியோ,
"அக்கா எனக்கும் இந்த மாதிரி போட்டு விடுறிங்களாக்கா.. யாருமே எனக்கு போட்டு விட மாட்டேங்குறாங்க.." என சிணுங்கலுடன் சொல்ல,



சந்தோஷத்துடன் அவளை தன் முன்னே அமர வைத்த ஆருத்ரா அங்கிருந்து ஒரு மருதாணி கோனை எடுத்து தனக்கு தெரிந்தது போல் அவள் கையில் மருதாணி வரைய அச்சிறுமியோ தானும் மருதாணி இட்டுக் கொள்வதில் குதூகலமாக தன் குட்டி கண்களை அகல விரித்து இதழ் முழுக்க புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.



நேற்று தன் நெஞ்சில் சாய்ந்து அழுது கரைந்தவள் தன் மனதிலிருந்த மொத்த பாரத்தையும் இறக்கி விட்ட மிதப்பில் புத்தம் புது பூவாய் சிரிப்புடன் இருப்பதை பார்த்த ஆர்யன் ஓரமாக நின்றுக் கொண்டு தன்னவளின் ஒவ்வொரு அசைவையுமே ரசித்துக் கொண்டிருந்தான்.



பெண்கள் ஒருபுறம் மருதாணி சரியாக இடுவதில் மும்முரமாக இருக்க ஆடவர்கள் அவர்களை சீண்டி பெண்களை சிவக்க வைத்து ஒருவழி ஆக்க அப்போது அபி தோழிகளிடம்,
"நா ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டிங்களே.." என்று கேட்ட அவர்களும் 'என்ன' என்ற ரீதியில் அவனை புரியாமல் பார்த்தனர்.



"நீங்க அஞ்சு பேருமே ஆசிரமத்தில தானே வளர்ந்தீங்க.. உங்கள ஆசிரமத்திற்கு கூட்டிட்டு வரும் போது உங்க ஒவ்வொருத்தருக்கும் என்ன வயசு.." என அவன் கேட்க, மற்ற நான்கு ஆடவர்களும் "டேய்ய்ய்.." என கத்தி அவனை கடிந்து கொண்டனர்.



ஆனால் ஆதிராவோ சிரித்தபடி
"ஏன் அவனை திட்டுறீங்க.. அவன் கேக்குறதுல எந்த தப்பும் இல்லை.. நாங்க ஒவ்வொருத்தரும் ஆசிரமத்திற்கு வரும் போது ரொம்பவே சின்ன வயசு தான்.." என சொல்ல,



"ம்ம்.. ஆமா.. நா ஆசிரமம் வரும் போது எனக்கு ஏழு வயசு தான் இருக்கும்.. ஆதிரா துர்கா இண்டு பேருக்குமே எட்டு வயசு இருந்திருக்கும்.. ரியா ஐ திங்க் ஷி வோஸ் டென்.. பட் ருத்ரா மட்டும் பிறந்ததிலிருந்தே ஆசிரமத்தில தான்.. அவ பிறந்த உடனே அவள ஆசிரம வாசல்ல விட்டுட்டு போனதா அம்மா சொன்னாங்க.." என கயல் சொல்லி முடிக்க ஆர்யனுக்கோ அன்று ஒரு நாள் 'நா உறவுகளோட பாசத்தையே அறியாதவ.. ' என ஆருத்ரா அவனிடம் சொன்னது நினைவில் வர தன்னவளை நோக்கினான்.



ஆனால் அவளோ முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் பிரதிலிக்காது இறுகிய முகத்தில் ஒரு இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.கயல் சொன்னது கேட்டு சுற்றி இருந்தவர்களுக்கு கூட இவர்களின் சிறு வயது நிலையை நினைத்து மனது கஷ்டமாக ஒரு மாதிரி சங்கடமாக உணர அதை எல்லாம் கண்டுக் கொள்ளாது தத்தமது வேலைகளிலே மூழ்கி இருந்தனர் நம் நாயகிகள்.



மதியம் வரை மருதாணியை வைத்திருந்தவர்கள் அதை கழுவி ஒருத்தொருக்கொருத்தர் 'யாருடைய கை மருதாணி சிவந்துள்ளது..' என போட்டி போட இதை அனைத்தையும் ரசித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தனர் பெரியவர்கள்.



அப்போது எல்லாரிடமும் சிரித்து பேசிக் கொண்டிருந்த ரியாவை அழைத்த ஹரியின் அம்மா,
"மாடில ரூம் கபோர்ட்ல ஹரிணியோட நகைப்பெட்டி இருக்குமா.. கொஞ்சம் எடுத்துட்டு வரியா மா.." என கேட்க,



"சரி மா எந்த ரூம்.." என ரியா கேட்க,

"மாடில ஹரிணியோட ரூம்க்கு பக்கத்து ரூம் மா.." என அவர் சொல்ல புன்னகையுடன் அவ் அறைக்கு சென்று கபோர்ட்டில் நகைப்பெட்டியை எடுத்து வந்து கொடுத்தவளது முகமோ வாடி போயிருந்தது.



அதை கவனித்த சாரதா,
"என்ன மா ஆச்சு.. ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு.." என பரிவாக கேட்க,



"ஒன்னுஇல்ல மா லேசா தலைவலி.. அவ்வளவு தான்.." என கூறியவள் ஒரு முடிவோடு தன் அறையை நோக்கி செல்ல அறைக்கு வந்தவளோ பல சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தாள்.



இங்கு வீட்டிலிருந்து வெளியே வளாகத்தில் போடப்பட்டிருந்த பெரிய ஊஞ்சலில் அபி அமர்ந்திருக்க அவனுக்கருகில் அனு அமர்ந்து அவனது ஃபோனில் மீம்ஸ் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். இது வெளியே வந்த ஆதிராவின் கண்ணில் சரியாக பட்டது. ஆனால் அபியோ ஆதிராவை கவனிக்கவே இல்லை..



அவனும் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு தன் மொத்த பொறாமையும் கோபமாக அனுவின் மேல் தாவ வேகமாக அவர்களுக்கருகில் வந்தவள் பக்கத்தில் சுவற்றோடு ஒட்டி போடப்பட்டிருந்த மேசையிலிருந்த தண்ணீர் க்ளாஸை எடுத்து அவள் மேல் ஊற்ற இதை எதிர் பார்க்காத அனுவோ ஆதிராவின் திடீர் செயலில் தன் உடை ஈரமாகி விட்டதில் அவளை திகைத்து பார்த்தாள்.



அபிக்கு எங்கிருந்து தான் வந்ததோ அவ்வளவு கோபம்.. வேகமாக எழுந்தவன் அதே வேகத்தில் அவளை அடிக்க கை ஓங்கி இருக்க இதை ஆதிரா சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று அவள் முகத்திலே அப்பட்டமாக தெரிந்தது.



அப்போது தான் அங்கு வந்த கௌத்தம் அனு ஈர உடையில் இருப்பதை பார்த்து அவளுக்கருகில் வந்து,
"என்னாச்சு அனு.. ஏன் இப்பிடி ட்ரெஸ் நனைஞ்சிருக்கு.." என கேட்க,



ஆதிராவோ தன் தவறை உணர்ந்து சங்கடப்பட்டு தலையை குனிந்து கொள்ள அபியோ அவளை தான் முறைத்து கொண்டிருந்தான். அனுவோ இருவரையும் பார்த்து,
"அது வந்து கௌத்தம்.. தண்ணி குடிக்க க்ளாஸ் எடுத்தேனா மேல கொட்டிக்கிட்டேன்.." என பொய் சொல்ல, ஆதிராவுக்கோ இன்னும் குற்ற உணர்ச்சி ஆகிப் போனது.



கௌத்தமோ ஆதிராவையும் அபியையும் புரியாமல் ஒரு பார்வை பார்த்து விட்டு,
"அப்போ எதுக்கு இங்க நின்னுகிட்டு இருக்க.. போய் ட்ரெஸ் ச்சேன்ஜ் பன்னிட்டு வர வேண்டியது தானே.." என சொல்ல,



அபியோ "கௌத்தம் அனுவ உள்ள கூட்டிட்டு போங்க.." என ஆதிராவிடமிருந்து பார்வையை திருப்பாமலே சொல்ல அவனும் ஏதோ புரிந்தது கொண்டவன் போல் அனுவுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.



அவர்கள் போனது தான் தாமதம் அடுத்து அபி பேசிய பேச்சில் ஆதிராவுக்கே தன்னோட மனுவா பேசியது என்று அதிர்ச்சியாகாமல் இருக்க முடியவில்லை.



"என்ன டி நினைச்சிக்கிட்டு இருக்குற உன் மனசுல.. அவளும் உன்ன மாதிரி ஒரு பொண்ணு தானே.. அவ மேல தண்ணி ஊத்துறதுக்கு முன்னாடி எவ்ளோ சங்கடமா ஃபீல் பன்னுவான்னு யோசிக்க மாட்டியா.. சொல்லு.. " என அதட்டியவன்,
"உன்ன வெறுப்பேத்த தான் அவக் கூட பழகினேன்..நா இல்லைன்னு சொல்லல்ல.. அதுக்காக யோசிக்காம இப்பிடி தான் நடந்து கொள்வியா.. அனு எனக்கு ஒரு நல்ல ஃப்ரென்ட் ஓல்மோஸ்ட் தங்கச்சி மாதிரி.. உன் கூட நா பழகுறதுலயும் அவக் கூட நா பழகுறதுலயும் நிறையவே வித்தியாசம் இருக்கு.. உன்னால அதை கூட புரிஞ்சிக்க முடியலல்ல.. ஒருவேள என்ன பன்னாலும் எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் அமைதியாவே இருக்கான் என்ன வேணா பன்னலாம் எதிர்த்து பேச மாட்டான்னு நினைச்சிட்டியோ.. தொலைச்சிருவேன்.." என விரல் நீட்டி அபி எச்சரிக்க,



எப்பொழுதும் தன் பின்னால் கொஞ்சிக் கொண்டு திரிபவன் இன்று இப்பிடி முதன் முதலில் அதிரடியாக பேசியதில் கண்கள் கலங்க கோபமும் தலைக்கேற மேசையில் அபி குடிக்க வைத்திருந்த கோஃபியை எடுத்தவள் அவன் தலையியிலேயே ஊத்திவிட்டு திரும்பி பார்க்காது ஆதிரா விறுவிறுவென செல்ல அபி தான் உறைந்தே விட்டான்.



தனது அறையில் நாளை ரிசப்ஷனுக்கா தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்த கயல் தன் பின்னால் துளைத்தெடுக்கும் பார்வையை உணர்ந்து சட்டென திரும்பி பார்க்க ஆதி தான் அறைக்கதவை பூட்டி அதில் சாய்ந்து மார்புக்கு குறுக்கே கையை கட்டியவாறு அவளையே பார்த்திருந்தான்.



அவனை பார்த்தவள் அவனை எதிர்ப்பார்க்காது திகைத்தாலும் பின் இடுப்பில் கை வைத்துக் கொண்டு "என்ன.." என்று அழுத்தமாக கேட்க அவனோ அவளருகில் நெருங்க கயல் அதே இடத்திலே அசராமல் நின்றுக் கொண்டு அவனையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.



ஆதி தான் மனதில், "அடிப்பாவி.. ஒரு பையன் பக்கத்துல நெருங்கி வரானேன்னு கொஞ்சமாச்சும் வெட்கம், கூச்சம்னு எதாவது முகத்துல தெரியுதா... ஏதோ போருக்கு ரெடி ஆகுற மாதிரி விறைப்பா நின்னுகிட்டு இருக்கா.." என நினைத்தவன் அவளை மேலும் நெருங்கி பக்கத்திலிருந்த கட்டிலில் தள்ளி விட்டு அவள் மேல் அவனும் விழ கயல் தான் பதறி போனாள்.



"டேய்ய் என்ன டா பன்ற.. சைக்கோ எழுந்துரு டா.. யாராச்சும் வந்தா என்னை தான் தப்பா நினைப்பாங்க.. மடையா மடையா.." என கத்திக் கொண்டே அவனை தள்ள, அவனோ குறும்பாக பார்த்துக் கொண்டே அவள் இதழ் நோக்கி குனிந்தான். ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என அபாய மணி மூளையில் ஒலிக்க கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் கயல்.



சில நொடிகள் கழித்து, 'என்ன நம்ம மேல ஏதோ வெயிட்டு குறைஞ்சாப்ல இருக்கு.. நம்மள கிஸ் பன்னானா இல்லையா..' என நினைத்தவாறு ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்க்க எழுந்து நின்றுக் கொண்டு அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.



கட்டிலிலிருந்து துள்ளி குதித்து எழுந்தவள் அவனை மூக்கு விடைக்க முறைக்க ஆதியோ,
"என்ன பொண்டாட்டி கிஸ் பன்னலன்னு கோபமா.." என நமட்டு சிரிப்புடன் கேட்க,



முதலில் புரியாது விழித்தவள் பின் தான் அனிதாவிடம் கூறிய பொய் நினைவில் வர,
'அச்சச்சோ.. இந்த சிடுமூஞ்சிக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சி போலயே.. ஆனாலும் கயலு மாட்டிக்கிட்டோமேன்னு பதட்டத்த முகத்துல காட்டாம ஸ்டெடியா நில்லு டி...' என தனக்கு தானே மானசீகமாக தைரியம் கூறிக் கொண்டவள் முகத்தில் எதையுமே காட்டாது அப்போதும் அவனையே ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் கை விட்டவாறு அழுத்தமாக பார்த்துக் கொண்டிருக்க ,



"ஆனாலும் உனக்கு தில்லு ஜாஸ்தி தான் டி.. என் பொண்டாட்டின்னு ஊரு பூரா சொல்லிகிட்டு திரியுற.. என்ன ராட்சசி உன் சிடுமூஞ்சி மேல அம்புட்டு லவ்வா..ம்ம்.." என நக்கலாக கேட்டவன் பின்,
"இனிமே இப்பிடி சின்னபுள்ள தனமா எதாவது பன்னிகிட்டு திரிஞ்ச விளைவு ரொம்ப மோசமா இருக்கும் புரியுதா.." என எச்சரிக்கை விட,



அவன் மிரட்டலில் வெகுண்டெழுந்த கயல் அவனே எதிர்ப்பார்க்காத சமயம் அவன் சட்டை கோலரை பிடித்து இழுத்து அவன் இதழில் அழுந்த முத்தமிட்டவள்,
"ஊரா பூரா சொல்றது என்ன.. உன்ன கிஸ்ஸே பன்னிட்டேன்.. இப்போ என்ன டா பன்னுவ சிடூமூஞ்சி.. கற்பு போச்சே மானம் போச்சேன்னு கதறி அழுவியோ... ச்சோட்டா போய்(Boy).." என கிண்டல் பன்ன ஆதி தான் அவள் இழுத்து முத்தமிட்டதில் ஸ்தம்பித்து நின்று விட்டான்.



அவனுக்கு முத்தமிட்டு அவன் கன்னங்களை தட்டிய கயல் அறையை விட்டு வெளியே ஒரே ஓட்டமாக ஓடியே வந்து விட்டாள். சற்று நேரத்தில் தலை முடியை அழுந்த கோதி நடந்ததை சுதாகரித்தவனது இதழ்கள் புன்னகையை தத்தெடுத்திருந்தது என்றால் வெளியே சுவற்றில் சாய்ந்திருந்தவளது இதழில் முதன் முதலில் வெட்கப் புன்னகை பூத்தது.



ஆர்யனோ காலையில் ஆருவை கடைசியாக பார்த்துவிட்டு போனது தான் ஆருவும் வீடு பூராக ஆர்யனை தேடி அலைய அவனோ அவள் கண்ணில் சிக்கவேயில்லை. முடிந்த மட்டும் அவளை விட்டு விலகியே இருந்தான்.அவளின் அழைப்புக்களையும் ஏற்காது அதை புறக்கணிக்க அதை உணர்ந்து கொண்டவளுக்கு தான் மனது பாரமாகி போனது. ஆனால், அவனின் இந்த சிறு விலகலிலே ஆரு தன் காதலின் ஆழத்தை உணர்ந்திருக்க இங்கிருந்து செல்வதற்குள் தன்னவனிடத்தில் வாய்மொழியாக தன் காதலை சொல்லி விட வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டாள். இவ்வாறு அன்றைய நாள் பொழுதும் கழிந்தது.
----------------------------------------------------------------



அடுத்த நாள்,



மாலையில் ரிசெப்ஷனுக்கு இங்கு ஹரிணியின் நண்பிகளும் வருகை தந்திருக்க தோழிகள் ஐவருடன் சேர்ந்து ஹரிணியை போலவே "அக்கா.. அக்கா.." என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.



பிறகு நேரம் நெருங்க ஹரிணியின் நண்பிகள் ஃபேஷியல் போட்டுக் கொள்வதில் மும்முரமாக இருக்க இங்கு நம் நாயகிகளின் மனது தான் ஒரு நிலையில் இல்லை. இரவு முழுவதும் அழுததால் ஆதிராவின் கண்கள் வீங்கி போய் இருக்க மற்றவர்கள் என்ன நடந்ததென்று எவ்வளவோ கேட்டும் ஒரு வார்த்தை கூட அவள் வாயிலிருந்து வரவில்லை. துர்காவோ தீவிரமாக ஒரு பேப்பரில் எதோ எழுதிக் கொண்டும் காகிதங்களை அறை முழுவதும் கிழித்து போடுவதுமாக பிஸியாக இருக்க, கயலோ நேற்று ஆதியை முத்தமிட்டதில் முதன்முறை ஒரு ஆணின் ஸ்பரிசத்தில் அதிலே லயித்திருந்தாள்.



ஆருவுக்கு தான் ஆர்யனின் நடவடிக்கை எதுவுமே புலப்படவில்லை. 'எப்பிடியும் ஈவினிங் வந்து தானே ஆகனும் அப்போ கவனிச்சிக்கிறேன்..' என நினைத்து விட்டு விட்டாள். ரியாவோ நேற்று தான் எடுத்த முடிவை இன்று எப்பிடியும் செய்து விட வேண்டும் என்று ஹரியை தேடி வீடு பூராக அலைய கடைசியில் வீட்டு பின் புற வளாகத்தில் விஷ்வா ஹரியின் குரலை கேட்டதில் அவ்விடத்தை நோக்கி சென்றாள்.



அங்கு,



ஹரியின் முகமோ சந்தோஷத்தில் பிரகாசமாக ஜொலித்துக் கொண்டிருக்க எதையோ நினைத்து நினைத்து தனியா சிரித்துக் கொண்டிருந்தவனை பக்த்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாவோ,



"என்ன ப்ரோ.. பாசமலர் சிவாஜியவே மிஞ்சிடுவிங்க போல.. தங்கச்சி கல்யாணத்துல உன் முகம்ல ஆயிரம் வோல்ட்ஸ் பல்பு மாதிரி பிரகாசமா எரியுது.." என நக்கலாக சொல்ல,



"தங்கச்சி கல்யாணம் மட்டுமில்லை டா.. இது வேற.. நா ரொம்பவே ஹேப்பியா இருக்கேன்.." என ஹரி சந்தோஷத்தில் குதூகலிக்க,



"அப்பிடி என்ன மேட்டர் ப்ரோ.. ஒருவேள ரியா.." என விஷ்வா இழுக்க,



"ரியா.." என யோசிப்பது போல் பாவனை செய்தவன் "இல்ல என் அத்தைப் பொண்ணு கிடைச்சிட்டா அதான் ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.." என மகிழ்ச்சியில் வாய் நிறைய புன்னகையுடன் ஹரி சொல்ல,



"எது அத்தைப் பொண்ணு கிடைச்சிட்டாளா.. வாவ்வ் ஒரே குஷி தான் அப்போ.. எனக்கு ஜோடி கிடைச்சிருச்சி.. சூப்பரு.. நீ ஓல்ரெடி ரியாவ லவ் பன்ற சோ எனக்கு கோம்படீஷனும் இல்ல..யெஸ் யெஸ்.. " என வெற்றிக் குறி போட்டு விஷ்வா குதூகலிக்க,



அதில் அவனை தீயாய் முறைத்த ஹரி,
"டேய்ய் எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டிய உன் ஆளுன்னு சொல்லுவ.. பிச்சு புடுவேன் பிச்சி.. அவ உனக்கு அண்ணி டா.. நா ஆசைப்பட்ட பொண்ணே எனக்கு கிடைச்சிட்டா.. எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா டா.. அம்மா அப்பாக்கெல்லாம் அவ்வளவு சந்தோஷம்.. இன்னைக்கு தான் அப்பா மனசுல எந்த வேதனையும் இல்லாம முழு மனசோட சந்தோஷமா இருக்கிறத அவரோட கண்ணுல பார்த்தேன்.."



என ஹரி கண்கள் மின்ன பேசிக் கொண்டிருக்க, இவ்வளவு நேரம் அவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ரியாவுக்கோ மனசு சுக்கு நூறாக உடைந்து போக இதற்கு மேல் அவ்விடத்தில் இருக்க முடியாமல் அந்த இடத்தை விட்டே நகர்ந்து விட்டாள்.



❤தொடரும்❤
-----------------------------------------------------------



innaiki ud epidinnu marakama unga comments a solluga friends..
keep supporting me guys..❤❤



❤ZAKI❤
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
ammadi kayal uh nalla aalu than ma neeyi... ipdi posuku nu mutha kuduthutta
hari solrathu riya va pathi athu theriyama pavam antha ponnu ivanu theriyama vera yaro nu nenaichukka pora...
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Hayo riya nee thandi avanoda athai ponnu. ithu theriyama ava ena panna pora. Viswa nee romba pesura. nee vena anitha kuda join agi ko
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top