• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤வீழ்ந்தேனடி 37❤

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
1597036689885.jpg


மாலை,



பூக்களின் அலங்காரத்தில் மண்டபம் ஜொலித்துக் கொண்டிருக்க சொந்தபந்தங்களின் சிரிப்பு சத்தங்களும் சின்னஞ்சிறு மொட்டுகளின் சேட்டைகளிலும் மண்டபம் நிறைந்திருந்தது. ரிசப்ஷனுக்கு ஏற்றவாறு இளங்காளைகள்
கன்னிகளை மயக்கவென கோட்சூட்டில் கம்பீரமாக வலம் வர அவர்களை வீழ்த்தவென லெஹெங்காவிலும் சாரிகளிலும் தமது இயற்கை அழகுடன் செயற்கை அலங்காரத்தையும் வாரி வழங்கி ஆடவர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருந்தனர் அழகு மங்கைகள்.



மணப்பெண்ணுக்கே உரித்தான அழகுடனும் பூரிப்புடனும் வெள்ளை நிற கற்கள் பதிக்கப்பட்ட லெஹெங்காவில் தன் அருகில் கம்பீரமாக நின்றிருக்கும் தன் மன்னவனை நிமிர்ந்து காண முடியாமல் ஃபோடோக்ரேஃபர் சொல்லும் போஸ்களை செய்ய வெட்கப்பட்டுக் கொண்டு முகம் சிவக்க அவர்களை ஒருவழிப்படுத்திக் கொண்டிருந்தாள் ஹரிணி.. அவள் பக்கத்தில் அனு, அனிதா படாதபாடு பட்டுக்கொண்டிருக்க, பெண் வீட்டாற்களும் மாப்பிள்ளை வீட்டாற்களும் விருந்தினருக்கு எந்த குறையும் இருக்க கூடாதென்று ஓடி ஆடி உபசரித்துக் கொண்டு தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தனர்.



ஆர்யனை தவிர அபி, சித்து, ஹரி, ஆதி ரெடி ஆகி மண்டபத்திற்கு வருகை தந்திருக்க தன்னவர்களை இன்று ஒருவழி ஆக்க வேண்டும் என்று அவர்களை அசரடிக்கும் அழகில் மணமகள் அறையிலிருந்து வந்தார்கள் ஆருத்ரா, கயல், ஆதிரா, துர்கா..



ஆதியோ மயில் வண்ண நிற லெஹெங்காவில் தேவதை போல் இருந்த தன்னவளை வைத்த கண் வாங்காமல் பார்க்க அவளோ எதிரில் நிற்கும் கன்னிகளை மயக்கும் அழகான கம்பீரத்துடன் நிற்கும் தன்னவனையே குறுஞ்சிரிப்புடன் கடந்து செல்ல அவளை சீண்டும் விதமாக ஆதி,
"ஹலோ.. அம்மா.. குழந்தை அம்மாவ தேடி அழுகுதா.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க மா.. நாளைக்கே உங்க மருமகளை கூட்டிட்டு வரேன்.." என கயலை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேசுவது போல் பாவனை செய்ய அவனின் சீண்டலில் 'க்ளுக்' என சிரித்து அவனை கடந்து சென்றவளையே குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி.



சித்துவோ அவனின் துகியின் ஒற்றை பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருக்க அவளோ அவனை திரும்பி கூட பார்க்கவில்லை. அவள் அவனை பார்க்காததால் முகத்தை சோகமாக தொங்க போட்டுக் கொண்டு வேறுபுறம் திரும்பி கொண்டவனை ஓரக் கண்ணால் பார்த்த கள்ளி தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.



அபியும் ஆதிராவும் ஒருவரையொருவர் கண்டும் காணாதது போல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு இரு திசையில் இருந்துக் கொண்டிருந்தனர். அபியோ ஆதிரா அனுவிடம் அப்பிடி நடந்து கொண்டதில் கோபமாக இருக்க ஆதிராவோ இன்னொரு பெண்ணிற்காக தன்னை திட்டி விட்டான் மனு என்ற ஆத்திரத்தில் இருந்தாள்.



இங்கு ஆருத்ரா ஆர்யனை தேடிக் கொண்டிருக்க அவன் அவள் கண்களில் சிக்கினால் தானே.. அதே நேரம் மேடையில் விருந்தினர்கள் மணமகன் மணமகளுக்கு தங்களது பரிசுகளை வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.



பின் எல்லாம் முடிவுக்கு வந்து கல்யாண மாப்பிள்ளை பொண்ணு சாவகாசமாக அமர அப்போது தான் அடர் நீல நிற ஸ்லிம் சூட், கருப்பு ஷூ அணிந்து இடது கையில் டைட்டன் வாட்ச் கட்டி தலைமுடியை ஜெல் தடவி ஸ்டைலாக வைத்து மண்டபத்தினுள்ளே நுழைந்த ஆர்யனை கண்ட ஆரு அவன் அழகில் சொக்கித் தான் போனாள். அதே நேரம் அரக்கு நிற ப்ளௌஸ், வெள்ளை மற்றும் அரக்கு நிறம் கலந்து கற்கள் பதிக்கப்பட்ட ஸ்கர்ட், அரக்கு நிற போர்டர் கொண்ட வெள்ளை துப்பட்டாவை ஒரு தோளில் விரித்து விட்டு முடியை கர்லிங் செய்து ஒருபுறம் மட்டும் போட்டு கை நிறைய வளையல்கள் காதில் குடை ஜிமிக்கி என அப்சரஸ் போல் ஜொலித்தவளை பார்த்து ஆர்யனுக்கு மூச்சடைப்பே வந்து விட்டது.



அவளை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டே வந்தவன் பின் சுதாகரித்து வேறு புறம் முகத்தை திரும்பி கொண்டாலும் மீண்டும் மீண்டும் அவன் கண்கள் அவளையே நாடின. அவனையே அவன் கட்டுப்படுத்த முடியாது திணறித் தான் போனான் ஆர்யன். அவனின் விழுங்கும் பார்வையில் கூச்சம் ஏற்பட்டாலும் அவன் தன்னை பார்ப்பதை தவிர்ப்பதை உணர்ந்தவளுக்கோ அது ஏன் என்று தான் புரியவில்லை.



சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தளை
"எல்லாருக்கும் என் மாலை வணக்கம்.." என்ற விஷ்வாவின் குரலே கலைத்தது.



எல்லாருடைய பார்வையும் அவன் புற திரும்ப,
"ஃபெஸ்ட் ஒஃப் ஆல் கல்யாணம் என்ற புது ஜெர்னில(Journey) நுழைய போற என்னோட சிஸ்டருக்கு என் வாழ்த்தை சொல்லிக்கிறேன்.. அதே நேரம் அவ கையில மாட்டி சிக்கி சின்னாபின்னமாக போற என் மச்சானுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிச்சிக்கிறேன்.. " என சொல்ல அனைவரும் சிரித்தார்கள் என்றால் ஹரிணியோ அவனை மேலிருந்து குத்துவது போல் பாவனை செய்து மிரட்டினாள்.



பின் அவன் மணமகன் சதீஷ் புறம் திரும்பி "மச்சான் ரௌடி பொண்ணு தான் இருந்தாலும் எங்க கண்ணையே உங்க கிட்ட ஒப்படைக்கிறோம்.. அவ உங்கள உதைச்சாலும் மிதிச்சாலும் உங்க கண்ணுல ஆனந்த கண்ணீரை தான் நாங்க பார்க்கனும்.." என பாசமலர் சிவாஜி சார் பாணியில் அவன் சொல்லி காட்ட அந்த மண்டபமே சிரிப்பலையில் மின்னியது.



பின் சிலபல பேச்சுக்களை பேசி எல்லாரையும் சிரிக்க வைத்து ஹரிணியின் மிரட்டல் சைகைகளையும் வாங்கி தன் பேச்சை நிறுத்த அடுத்தடுத்தென்று ஹரிணியின் நண்பர்கள் நெருங்கிய சொந்தங்கள் என நடுவில் வந்து ஆடி பாடி பங்ஷனையே ஒரு கலக்கு கலக்கினர்.



ரிசப்ஷனில் விருந்தினர்களை வரவேற்க என அங்கும் இங்கும் ஓடி திரிந்து வேலைப்பார்த்த ஹரி வந்ததிலிருந்து ரியாவை காணாமல் குழம்பி ஒரு கட்டத்தில் ஆதிராவிடம் கேட்க,



"ஹரி அவளுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலையாம்.. நாங்களும் எவ்வளவோ கேட்டு பார்த்தோம் வர முடியாது கஷ்டம்னு சொல்லிட்டா.. அங்க ரூம்ல தான் இருக்கா.." என சொல்ல,



ஹரியோ, "ஹோ.." என்று மட்டும் சொல்லி விட்டு யோசனையினூடே அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான்.



பின் ஹோலிற்கு நடுவில் வந்த ஆதி மைக்கை எடுத்து மணமக்களை வாழ்த்தி விட்டு அடுத்து அவன் செய்ததில் அவன் நண்பர்கள் அனைவருக்கும் ஆச்சரியம் என்றால் கயலோ விழிவிரித்து அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள்.



"என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்



எஹ் என்னை தாண்டி போறவளே ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து என்ன கொன்ன

சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண

ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில



என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போனா
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்போதே என்ன அவ கொண்டு போனா



சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்.."




என அவன் கயலை பார்த்துக் கொண்டே சற்றும் தன் பார்வையை அகற்றாது பாட 'என்ன வொய்ஸ் டா இது..' என அவன் குரலில் மெய்மறந்திருந்தவளோ அந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் தனக்கே எழுதப்பட்டது போல் உணர வெட்கம் பீறிட்டு கொண்டு வந்து முகமே சிவந்து விட்டது. பாடி முடித்தவனுக்கோ கை தட்டல்கள் குவிய கயல் தான் அவனை நிமிர்ந்து பார்க்க கூட வெட்கப்பட்டு முகத்தை வேறு புறம் திருப்பி சிரித்து கொண்டு நின்றாள்.



இங்கு துர்காவோ ஓடிச்சென்று விஷ்வாவின் காதில் ஏதோ சொல்ல அவனும் அவள் வாங்க சொல்லிருந்த ரோஜா பூங்கொத்தை கொண்டு வந்து அவளிடம் கொடுத்தான். இடது கையில் பூங்கொத்தை வைத்துக் கொண்டு வலது கையில் மைக்கை துர்கா எடுக்க சித்துவோ 'என்ன பன்ன போறா இவ..' என்ற ரீதியில் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.



தன் வெட்கத்தை ஓரங்கட்டி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு பெருமூச்சுவிட்டு தனக்கு நேரே இருந்த சித்துவை பார்த்துக் கொண்டே தன் செப்பு இதழ்களை திறந்து தன்னவனுக்காக தன்னில் உருவான முத்தான கவிதை வார்த்தைகளை அவன் மேலே சாரலாக பொழிந்தாள் சித்துவின் துகி.



"எழுத்துக்களால் என்னுள் புகுந்த ஆணழகா..
உன் ஒளி முகத்தை காண ஏங்கித் தவித்தேனடா...
என்னுள் ஏற்பட்ட காயத்திற்கு உன் பெயரையே மருந்தாக ஜபித்தேனடா..



உன்னை பார்த்த மறுநொடி நீதான்
என்னவனென்று உலகத்தையே வென்றேனடா..
எட்டே எழுத்திலான மந்திர வார்த்தைக்காக உன்னிடத்தே தவமிருந்தேனடா..



உன்னில் தொலைந்த ஜீவன் இவள்..
உன்னிடமே காதலை யாசிக்கும் பெண்ணவளும் இவள்..."


அவள் சொல்லி முடிக்க சித்துவோ அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியாமல் அவளையே விழி விரித்து பார்க்க அவனை நோக்கி வந்தவள் அவன் எதிரே ஒற்றை காலை மடக்கி ப்ரொபோஸ் செய்வது போல் அமர்ந்து பூங்கொத்தை அவன் புறம் நீட்டியவாறு,
"லவ் யு சித்.." என்று கூற அவன் தான் வானில் சிறகில்லாத பறவையாகி போனான்.



சித்துவும் அவளுக்கு எதிரே மண்டியிட்டு அவள் நீட்டிய ரோஜா பூங்கொத்தை வாங்கி கொண்டு "லவ் யு துகி.." என கூறியவாறு அவளை அணைத்துக் கொள்ள துர்காவுக்கோ சந்தோஷம் தாளவில்லை. எல்லாரும் "ஹே..ஹே..." என கத்தி கோஷம் போட வெட்கம் வந்தாலும் தன்னவனிடம் தன் காதலை சொல்லி விட்ட களிப்பில் துர்கா இருக்க அவள் தோழிகளோ தன் நண்பியை சிரித்த முகத்துடன் ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.



மீண்டும் நடனத்துக்காக பாடல் ஒலிக்க ஆர்யனிடம் ஓடிச் சென்ற ஆரு அவன் கையை பற்றிக் கொண்டு,
" ஆரா எங்க போன.. நேத்து காலைல பார்த்தது அதுக்கப்றம் உன்ன பார்க்கவே முடியல.." என ஏக்கமாக கூறினாள். அன்று தன் மொத்த பாரத்தையும் அவனிடம் கொட்டி தீர்த்த பிறகு ஆர்யனோ அவள் மனதில் தியாவின் இடத்தையே பிடித்திருந்தான்..



"அது.. அது வந்து ஆரு கொஞ்சம் வேலை அதான்.." என கூறியவாறு அவள் கைகளிலிருந்து தன் கையை விடுவிக்க பார்க்க,



ஆருவோ அவன் கையை இறுக்கமாக பற்றி,
"சரி அத விடு.. வா நாம போய் டான்ஸ் பன்னலாம்.." என அவனை இழுத்துக் கொண்டே செல்ல,



"இல்லை வேணாம் ஆரு.." என மறுத்த ஆர்யனின் வார்த்தைகள் ஆருத்ராவிடம் காற்றில் கரைந்த கற்பூரமாக தான் போனது.



ஹோலின் நடுவின் அவனை இழுத்து வந்தவள் அவனை மிக நெருக்கமாக நெருங்கி நின்று அவன் இடது கையுடன் தன் வலது கையை கோர்த்து அவன் வலது தோள் மேல் மற்றொரு கையை வைக்க எப்பொழுதும் போல் அவள் ஸ்பரிசத்திலும் அருகாமையிலும் தன்னை தொலைத்தவனது வவது கை தானாகவே அவள் இடையை இறுக்கமாக பற்றிக் கொண்டது. அவனின் கண்களை பார்த்தவாறே அவனுடன் மேலும் ஒன்றி பாடலுக்கேற்ப ஆடினாள் ஆருத்ரா தன்னவனுடன்.



"நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே..
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே..



போக போக ஏனோ நீளும் தூரமே..
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே..



என் அச்சம் ஆசை எல்லாமே
தள்ளி போகட்டும்..
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும் ஓ...



நான் பகல் இரவு
நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில்
உன் குடை அழகு



நீ வேண்டுமே
எந்த நிலையிலும் எனக்கென
நீ போதுமே.."

இருவரும் தங்களை மறந்து தங்களை சுற்றி உள்ளவர்களை மறந்து ஒருவரையொருவர் விழியால் பருகியவாறு நெருங்கி நின்று ஆடிக் கொண்டிருக்க திடீரென பாடல் மாற்றப்பட்டதில் சுயவுணர்வுக்கு வந்தவர்கள் சட்டென விலகி நின்றுக் கொண்டனர். ஆருத்ராவோ சிறு சிரிப்புடன் ஓடிச் சென்று மணமக்களை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து அவர்களையும் ஆட வைக்க மண்டபத்தில் இருந்த இளசுகளின் நடனத்தில் மண்டபமே கலை கட்டியது.



மண்டபம் முழுவதும் ஆருத்ராவின் சிரிப்பு சத்தமே நிரம்பியிருக்க மூன்று வருடத்திற்கு பிறகு தங்கள் நண்பியின் குறும்புத்தனத்தையும் குழந்தைத்தனத்தையும் கண்ட கயல், ஆதிரா, துர்கா நடுவில் எல்லாருடனும் துள்ளி குதித்து ஆடிக் கொண்டிருந்தவளையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தனர். இவள் மாற்றத்திற்கு காரணமான ஆர்யனுக்கும் நன்றி சொல்ல தவறவில்லை. ஆனால் நாளையே தன் நண்பியின் சந்தோஷம் ஆர்யனால் மீண்டும் புதையப் போவதை அவர்கள் அப்போது அறியவில்லை.



இங்கே மண்டபம் முழுதும் சந்தோஷத்திலும் சிரிப்பு சத்தத்திலும் நிரம்பியிருக்க மணமகள் அறையிலிருந்த ரியாவோ தன் கண்ணிலிருந்து மொத்த கண்ணீரையும் வற்றுமளவிற்கு அழுது கரைந்தாள். தன் பெற்றோரின் புகைப்படத்தை பார்த்து அழுது கரைந்தவளுக்கு தான் பெற்றோர் தன்னை விட்டு பிரிந்து பிறகு நடந்த சம்பவங்களே நினைவில் வந்தது.



சென்னையில் தன் அம்மா அப்பா வெளியில் சென்றிருக்க தாத்தா, பாட்டியுடன் வீட்டிலிருந்த நான்கு வயது குட்டி ரியா அன்றைய நாள் தன் அம்மா அப்பா தன்னை விட்டு போய் விடுவார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.



அன்று ஒரு ஆக்ஸிடன்ட்டில் அவள் பெற்றோர் இறக்க தன் மகன் மருமகளுக்கான காரியங்களை செய்து தமது பேத்தியை சொந்த ஊரான மதுரைக்கே அழைத்து சென்றனர் ரியாவின் பாட்டி தாத்தா.. ரியாவுக்கு பத்து வயதாக இருக்கும் போதே அவர்களும் இறந்து விட அவளின் பாட்டிக்கு நெருங்கிய உறவாக இருந்த நிவேதா ரியாவை அவருடைய ஆசிரமத்திற்கு அழைத்து வந்து விட்டார். அதனாலயே ஹரி ரியாவை பற்றிய தகவல்களை தேடும் போது அவள் பத்து வயதில் குடும்பத்தை இழந்து வந்ததாக இருக்க அவனுக்கு தெரியாமல் போய் விட்டது.



என அன்று நடந்ததை நினைத்து பார்த்தவளுக்கு தான் தான் அவர்கள் தேடும் ஹரியின் அத்தை பெண் என்று நேற்று அந்த கபோர்டில் அவள் அம்மாவின் புகைப்படத்தை பார்க்கும் வரை தெரியாது.



ஹரியின் அம்மா ஹரிணியின் நகைப்பெட்டியை எடுத்த வர சொன்ன கபோர்டை திறந்தவள் அங்கு ஹரியின் குடும்ப புகைப்படம் இருக்க அதை எடுத்து பார்த்தவளுக்கோ அதில் தன் அம்மாவை கண்டவுடன் எல்லாம் புரிந்தது. வாடிய கொடியாக கீழிறங்கி வந்தவள் தான் அத்தைப்பெண் என்று ஹரிக்கு தெரியும் முன் ரியாவாக தன் காதலை உணர வைக்க எண்ணியே இன்று காலை அவனை தேடி சென்றதே.. ஆனால் ஹரி பேசியதை கேட்டவுடன் மொத்தமாக நொறுங்கி போய் விட்டாள்..



தன் அம்மாவின் படத்தை வருடியவள்,
"அம்மா நா இப்போ எங்க இருக்கேன் தெரியுமா.. நீ பொறந்து வளர்ந்த ஊருல உன் வீட்டுல தான் மா.. எனக்கும் அத்தை மாமா சித்தி சித்தப்பா கூடப்பிறக்காத தம்பி அண்ணண் தங்கச்சின்னு என்னைய சுத்தி நிறைய சொந்தங்கள் இருக்காங்க மா.. ஆனாலும் எனக்கு தனியா இருக்குற மாதிரி இருக்கு மா.." என கதறியவள் தொடர்ந்து,

"எப்போ நா தான் சரணோட அவன் தேடிக்கிட்டு இருக்குற அத்தைப் பொண்ணுன்னு தெரிஞ்சிச்சோ அப்போவே அவன் அத்தை பொண்ணா இல்லாம ரியாவா என் காதலை சொல்ல நினைச்சேன் மா.. ஆனா, சரண் அவன் அத்தை பொண்ண தான் காதலிக்கிறானாம்.. எனக்கு என் சரண் என்னை எனக்காக காதலிக்கனும் மா.. அவனோட பழகின ரியாவா தான் என்னை ஏத்துக்கனும்.. அவன் அத்தை பொண்ணுன்னு தெரிஞ்சதுக்கு அப்றம் வர்ற காதல் எனக்கு வேணாம் மா.. அவனுக்கு இந்த ரியா மேல லவ் இல்லை மா.. அவன் அத்தை பொண்ணு மேல தான் லவ் இருக்கு.."



என்று அழுது கரைந்தவள் தானே அவன் அத்தை பெண் என்பதையும் தன்னை எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டான் என்பதையும் வெகுவாக மறந்து போனாள்.. இவள் அறையில் கதற அறை வாசலில் நின்று கொண்டு அவள் கதறலை ஹரியோ கண்கள் கலங்கிய நிலையில் கேட்டுக் கொண்டிருந்தான்...



❤தொடரும்❤
-------------------------------------------------------------------



eppawum pola unga commentskaga wait pnnuwean guys.. idhuku apram storyla romance perusa irukkadhu rombawe adhiradiya than pogum so keep reading..
thanks for ur love and support guys?
keep supporting me❤❤



❤ZAKI❤
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Yen riya ipdi alugura? Avan unnai than solran nu unakku yeppo puriyum? Ellarum kalyana dress la kalakkuranga pa
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top