• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

❤வீழ்ந்தேனடி 40❤

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
1597036689885.jpg


அன்று இரவு,
அந்த காட்டுக்கு நடுவில் உள்ள பங்களாவில்,



ஹரிஷ், க்ரிஷ் கொலை செய்யப்பட்ட அதே அறையில் ஐந்து பெண்களும் கதிரையில் அமர்த்தப்பட்டிருக்க அவர்களிடமிருந்து ஒரு வார்த்தை கூட பெற முடியவில்லை நம் நாயகர்களால்.



அன்று நாள் முழுக்க அமைதியாக இருந்த பார்த்த ஆர்யன் இதற்கு மேல் முடியாதென்று அவர்களின் முன் கதிரையில் அமர்ந்து தன் முட்டியில் இரு கைககைளையும் கோர்த்து ஊன்றி ஆருத்ராவை கூர்மையாக பார்த்தவாறே,
" அகைய்ன் கேக்குறேன்..ஆர்னவ் எங்க ஆருத்ரா.." என அழுத்தமாக கேட்க,



ஆருத்ராவோ அவன் பார்வைக்கு சற்றும் சளைக்காது கைகளை கட்டியவாறு அவனையே கூர்மையாக பார்த்திருக்க, ஆர்யனோ மெச்சுதல் பார்வையுடன் சிரித்தவாறு நிமிர்ந்து உட்கார்ந்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு,
"எப்பிடி கண்டுபிடிச்ச ஆரு.." என கேட்டான். இப்போது சிரிப்பது ஆருத்ராவின் முறையானது.



"என்ன மிஸ்டர் ஆர்யன் எங்களுக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு ரொம்ப தான் சேஃபா இருந்தீங்க.. ஆனாலும் யானைக்கும் அடி சறுக்கும்னு சும்மாவா சொன்னாங்க.. எங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் மறைச்சிட்டீங்க.. பட், உங்க ரூம்ல இருந்த ஃபோட்டோ உங்க மேல அப்போவே சந்தேகத்தை உண்டாகிருச்சி.." என சொல்ல, அப்போது தான் ஆர்யனுக்கு நியாபகம் வந்தது அந்த அறை கபோர்ட்டில் இருந்த அவன் ட்ரைனிங் போது எடுத்த ஃபோட்டோ இருப்பது.



"ஆனா, என்ன தப்பு நடந்துச்சுன்னா என் காதல் என் புத்தியை மழுங்கடிச்சிருச்சி அதான்.. உங்க மேல வந்த சந்தேகத்தை உள்ளுக்குள்ளே புதைச்சிட்டு.." என ஆருத்ரா முகத்தை சுழித்தவாறு சொல்ல,



"அப்றம் எப்பிடி.." என ஹரி சந்தேகமாக கேட்க,



"என்ன மிஸ்டர் வேலைல இருந்தா உங்க தங்கச்சிய கூடவா பார்க்க போக மாட்டிங்க.. அண்ணனுங்க கேஸ், க்ரிம்னல், இன்வெஸ்டிகேஷன் இப்படியே தான்னு ரொம்ப புலம்புறாங்க.. ஒரு அண்ணனா பொறுப்பா நடந்துக்க மாட்டிங்க.." என ரியா நக்கலாக கேட்க, ஹரிக்கோ ரியா சொன்னதில் ஹரிணி உளறி வைத்தது புரிய உள்ளுக்குள்ளேயே தங்கையை வறுத்தெடுத்தான்.



"சரி எப்படியோ நாங்க யருன்னு தெரிஞ்சிருச்சி.. அதை விடுங்க.. இப்போ சொல்லுங்க ஆர்னவ்வ என்ன பன்னிங்க.. அவன் எங்க இப்போ.." என ஆதி கேட்க,



அப்போதும் அவர்கள் எதுவும் பேசாது அமைதியாக இருக்க, ஏதாவது எவிடென்ஸ் கிடைக்குமா என அலசி ஆராய்ந்து விட்டு அவர்களிடம் வந்து நின்றனர் அபியும், சித்துவும்..ஆர்யன் கேள்வியாக பார்க்க,
"ஆர்யா ச்செக் பன்னும் போது எங்களுக்கு இதான் கிடைச்சது.. " என சித்து கூறி ஒரு கவரை ஆர்யனிடம் ஒப்படைக்க,



"இது ஏதோ இன்ஜெக்ஷனோட கவர் மாதிரி இருக்கு.. என்ட், இங்க இருந்த கம்ப்யூட்டர்ஸ் எதுவுமே வர்க் ஆகுது இல்ல.. இது மட்டும் தான் ரூம்ல எவிடென்ஸ்ஸா கிடைச்சிருக்கு..." என அபி சொல்லி முடிக்க,



மற்ற இரண்டு பேரை விட ஆர்னவின் நிலை ரொம்ப மோசமாக முடிந்துள்ளது என்பதை புரிந்து கொண்ட ஆர்யன் அபியிடம் கண் ஜாடை காட்ட அபியோ வேகமாக சென்று ஓரத்தில் அமர்ந்திருந்த ஆதிராவின் நெற்றியில் துப்பாக்கி வைக்க அவளோ நிமிர்ந்து அவனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைத்துக் கொண்டிருந்தாள்.



ஆனால், அபி அவள் பக்கம் தன் பார்வையை திருப்பவே இல்லை. தூப்பாக்கியை ஆதிராவின் பக்கம் வைத்திருந்தவன் பார்வையை ஆர்யனை நோக்கியே பதித்திருந்தான்.



ஆர்யனோ அவர்களையே அழுத்தமாக பார்த்து,
"எங்களுக்கு எங்க கடமை ரொம்பவே முக்கியம்.. எங்க வேலைக்காக நாங்க என்ன வேணாலும் பன்னுவோம்.. அது எங்க உறவு சம்மந்தப்ட்டிருந்தா கூட.. சோ, நோ ஒப்ஷன் நீங்க சொல்லி தான் ஆகனும்.." என கறாராக சொல்ல,



அவனை உக்கிரமாக முறைத்த ஆருத்ரா ஒரு பெருமூச்சு விட்டவாறு நடந்ததை கூறத் தொடங்கினாள்.



அன்று,



இரவு ஏர்போர்ட்டிலிருந்து வெளியேறிய
ஆர்னவ் கேப் புக் செய்து விட்டு அதற்காக காத்திருக்க அடுத்த பதினைந்து நிமிடத்தில் கேப் வர அதிலேறியவன் தன் கெஸ்ட் ஹவுஸை நோக்கி செல்ல சிறிது தூரம்
சென்ற பிறகு தான் சொன்ன இடத்திற்கு
எதிர் திசையில் வண்டி செல்வதை பார்த்து
ட்ரைவரிடம்,



"ஹெலோ மிஸ்டர் தப்பான வழில போறிங்க.. இங்க பாருங்க.." என கத்த, அவன் குரலில் அந்த ட்ரைவர் திரும்ப அவனை பார்த்த ஆர்னவ் " நீ..." என அதிர்ச்சியாக பார்த்தான். ஆம் அது வேறுயாருமில்லை.. இவன் காதலிப்பதாக நாடகம் ஆடி சீரழித்து ஏமாற்றிய பெண் சாருவின் தந்தையே..



அன்று ஆருத்ராவிடம் அவர் கூறியவுடன் இவனுக்கு நரகமான தங்களிடம் இவர் தான் அவனை அழைத்து வர வேண்டும் என அப்போதே குறித்து கொண்டாள் நம் நாயகி. பின் அவரை மீண்டும் சந்தித்து நடந்ததை கூறி அவரிடம் தன் ப்ளானையும் சொல்ல தன் மகளை கொன்றவர்களை எப்போது தன் கையால் கொல்ல என காத்திருப்பவர் முடியாது என்றா சொல்ல போகிறார். அவரோ கண்கள் கலங்க அவர்ளுடைய திட்டத்திற்கு தானும் துணை நிற்பதாக வாக்கு கொடுத்தார்.



இப்போது அவரை கண்ட ஆர்னவ் ஆச்சரியமாக பார்த்து ஏதோ பேச வர அவர் எதிர்ப்பார்க்காத சமயம் அவன் முகத்தில் மயக்க ஸ்ப்ரேயை அடித்தார். அவனும் சுயநினைவு இழந்து மயங்கி விழ அவரது கார் சென்றது அந்த காட்டிலுள்ள பங்களாவை நோக்கி தான்.



ஒரு மணி நேரம் கழித்து,

தன் மேல் ஏதோ செலுத்தப்படுவதில் மயக்கத்திலிருந்து தெளிந்து மெல்ல கண் திறந்து பார்த்த ஆர்னவ் கையில் ஏதோ வலியை உணர சட்டென தன் கையை பார்த்தான். தன் உடலில் ஏதோ இன்ஜெக்ஷன் ஏற்றுவதை பார்த்தவன் நிமிர்ந்து பார்க்க கயலோ அவன் உடம்பில் அதை செலுத்தி விட்டு சுவிங்கத்தை மென்றவாறு அவனை பார்த்து சிரித்து விட்டு செல்ல அவனுக்கு தான் ஒன்றுமே புரியவில்லை.



அப்போது தான் மற்ற பெண்களையும் பார்த்தவன்,
"ஹே யாரு டி நீங்க.. என்னை எதுக்கு டி கட்டிப்போட்டு வச்சிருக்கீங்க.." என கத்த,

அவன் எதிரே சென்ற ஆருத்ரா,
"என்ன பொசுக்குன்னு யாருன்னு கேட்டுட்ட.. நாங்க முன்னாடி வந்தா துடிக்க வைப்பேன், வெட்டுவேன், குத்துவேன், கொல்லுவேன்னு வீர வசனம் பேசின.. இப்போ இப்பிடி கதறுர.. ஒருவேள பயந்துடியா.." என கேட்க, ஆர்னவ் தான் புருவத்தை சுருக்கி அவளை புரியாமல் பார்த்தான்.



"என்ன மிஸ்டர் அரோரா நாங்க யாருன்னு யோசிக்கிறியா.. நீ என்ன தான் உன் இல்லாத மூளையை குடைஞ்சு யோசிச்சாலும் நாங்க யாருன்னு உனக்கு தெரிய போறது இல்லை.." எனக் கூறியவள்
அவன் அமர்ந்திருந்த கதிரையின் முன் புறத்திலுள்ள பிடிகளில் தன் கரங்களை ஊன்றி, பின்னால் சுவற்றில் மாட்டி இருந்த தியாவின் படத்தை திரும்பி பார்த்தவள்,
"உன்னால நேரடியா பாதிக்கப்பட்ட பொண்ணுங்க தான் ரொம்ப அதிகம்.. மூனு வருஷத்துக்கு முன்னாடி டிரெக்டா இல்லாம மறைமுகமா பாதிக்கப்பட்ட பொண்ணுங்களும் நாங்களே.. உன் ஃப்ரென்ட்ஸ்ஸ கதற கதற துடிக்க வச்சு கொன்னவங்களும் நாங்களே.. உன்னால இனி எதுவுமே ப்ளக் (Pluck) பன்ன முடியாது.." என சொல்லி விட்டு ஆருத்ரா நகர அவனுக்கு நேராக இருந்த சுவற்றில் தியாவின் படம் இருப்பதை பார்த்தவனுக்கு அப்போது கூட அது யாரென்று அடையாளம் காண முடியவில்லை.



இங்கு நகர்ந்து சென்ற ஆருத்ராவோ கயல், ஆதிரா, துர்காவுடன் எதோ திரும்பி பேசிக் கொண்டிருக்க ஆர்னவோ எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று கட்டப்பட்டிருந்த கைகளை அசைக்க அவனது வலது கை கட்டப்பட்டிருந்த கயிறு சற்று தளர்வாக இருப்பதை உணர்ந்தவன் திரும்பி பெண்களை பார்த்தான். அவர்களோ தீவிரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவன் சட்டென தன் கையை தளர்த்தி கயிரிலிருந்து தன் கையை எடுக்க முயற்சி செய்தான்.



பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென கதிரை தூக்கி வீசப்பட்ட சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பி பார்க்க ஆர்னவோ தன் மணிக்கட்டை தேய்த்தவாறு தன் முழு உயரத்திற்கு எழும்பி நின்றுக் கொண்டு அவர்களையே ஏளன சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.



அவன் எழுந்ததில் நான்கு பெண்களும் அதிர்ச்சியாக பார்க்க அவனோ அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே,
"என்ன டி நா அவ்வளவு சீக்கிரம் தப்பிச்சிறுவேன்னு நினைச்சும் பாத்திருக்க மாட்டிங்கல்ல.. ஆனாலும் சும்மா சொல்ல கூடாது பொ**** இருந்துகிட்டு எந்த விதத்துலயும் மாட்டிக்காம பக்கா ப்ளானோட தான் டி எல்லா பன்னிருக்கீங்க.. " என கெட்ட வார்த்தையில் திட்டி பேச, அவனுக்கு பின்னால் வாசல் புறம் நின்றிருந்த ரியா கோபத்தில் அவனை அடிக்க வர அவளை தடுத்தவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து அவள் முடியை கொத்தாக பிடிக்க நான்கு பெண்களுமே கண்கள் சிவப்பேற அவனை முறைத்துக் கொண்டிருந்தனர்.



ரியாவின் பின்னந்தலை முடியை பிடித்த வண்ணம்,
"பொம்பளைங்க உங்களுக்கே இவ்வளவு இருந்தா ஆம்பிளை எனக்கு எவ்வளவு இருக்கும்.. இதோ இருக்காளே.." என சுவற்றில் மாட்டியிருந்த தியாவின் படத்தை காட்டியவன்,
"இவ பேரு கூட எனக்கு தெரியாது.. இவ எந்த நிலைமைல கிடந்தாளோ நீங்க என் லைஃப்ல பன்னதுக்கு அதை விட அதிகமா அனுபவிக்க போறிங்க டி.. தினம் தினம் உயிரோட இருந்துகிட்டு உங்க நிலைமைய நினைச்சி கதற போறிங்க.. " என ஆக்ரோஷமாக சொன்னவன் ரியாவை பிடித்து தள்ளி விட அவளை தாங்கி பிடித்துக் கொண்டாள் கயல்.



அவர்கள் ஒவ்வொருவரையும் மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் வாசல் புறத்தை மறைத்தவாறு,
"இனி எங்கிட்ட இருந்து நீங்க தப்பவே முடியாது டி.. என்கிட்டயே உங்க விளையாட்ட காமிச்சிட்டிங்கல்ல டி.." என பல்லை கடித்துக் கொண்டு கூறியவாறு தனது ஆட்களை அழைக்க தன் பாக்கெட்டை தடவியவாறு சுற்றும் முற்றும் தனது தொலைபேசியை தேடிய ஆர்னவ் சட்டென கேட்ட சிரிப்பு சத்தத்தில் பெண்களை நிமிர்ந்து பார்த்தான்.



ஆருத்ராவோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆர்னவோ அறையெங்கும் ஒலிக்கும் அவள் சிரிப்பு சத்தத்தில் சற்று பதட்டமாகவே அவளை நோக்கினான். அவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த ஆருத்ரா,
"ஏதோ இத்துணூன்டு உன்ன பேச விட்டா ரொம்ப ஓவரா தான் பேசுற.. ரொம்ப பயந்துட்டோம் பாஸ்..." என சிரிப்பை அடக்கிக் கொண்டு பாவனை செய்து காட்டியவள் பின் முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு,
"நீ தான் எங்க கிட்ட வசமா சிக்கிட்ட ஆர்னவ்.. அவ்வளவு சீக்கிரம் உன்ன விட்டுறுவோமா.. " என கூறி சிரிக்க ஆர்னவுக்கோ ஒரு நிமிடம் வயிற்றுக்குள் பய பந்து உருண்டோடியது. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் அங்கும் இங்கும் கண்களை சுழலவிட்டு அவர்களை தாக்க ஏதாவது கிடைக்குமா என தேட அவன் கண்களில் சிக்கியது மேசை மீதிருந்த ஒரு கட்டை.



அதை பார்த்தவன் வேகமாக அதன் அருகில் நெருங்க போக,
"இன்னும் ஒரு ஸ்டெப் எடுத்து வச்ச உன் உயிருக்கு நா உத்தரவாதம் இல்லை.. டயலாக் சூப்பரா இருக்குல்ல.." என அவனுக்கு கூறியவாறு தோழிகள் பக்கம் திரும்பி சிரிக்க, ஆருத்ராவின் குரலில் நின்று திரும்பி பார்த்தவன் ஆருத்ராவையே அதிர்ச்சியாக பார்த்தான்.



அவனுக்கு நேராக தன் துப்பாக்கியை நீட்டியிருந்தவள் அவனையே அழுத்தமாக பார்த்தவாறு இதழோர சிரிப்புடன் நிற்க அவனுக்கு தான் மூளை வேலை நிறுத்தும் செய்து விட்டது.



"ருத்ரா அவன் மண்டையிலேயே ஷூட் பன்னு டி.. என்னை அடிச்சு என் ஹெயார் பிடிச்சு இழுத்துட்டான்.. ரொம்ப வலிக்குது.." என ரியா உதட்டை பிதுக்க,



அவள் தோல் மேல் கை போட்ட ஆதிரா,
"பேபி இப்போ எதுக்கு கண்ணை கசக்குற.. சார்ரோட ஆட்டம் எல்லால் இன்னும் கொஞ்ச நேரம் தான்.. அப்றம் உனக்கு என்ன தோணுதோ அவன வச்சி செய்.. யுவர் விஷ் டார்லிங்.." என சிரித்துக் கொண்டே சொல்ல ரியாவும் சிரித்துக் கொண்டே அவனை நோக்க ஆர்னவுக்கோ உடல் உதற ஆரம்பித்து விட்டது.



வாசல்புறமாக இருந்தவன் ஐந்து பெண்களையும் மிரட்ச்சியுடன் பார்த்தவாறு நிற்க, 'இதற்கு மேல் எப்படியாவது தப்பித்தால் மட்டுமே உன் உயிர் உன் கையில்' என அவன் மூளை உரைக்க சட்டென அங்கிருந்து ஓட ஆரம்பித்து விட்டான் ஆர்னவ்.



அவன் உடலில் ஏற்றிய இன்ஜெக்ஷன் அதன் வேலையை சரியாக காட்ட அவனால் கொஞ்சம் கொஞ்சமாக உணரக் கூடிய வலியில் தன் உடலிலுள்ள அத்தனை பாகத்தையும் கசக்கி பிழிவது போல் வலியை உணர்ந்தவன் வேகமாக ஓடக் கூட முடியாமல் தடுமாற அவன் பின்னால் நிதானமாக வந்தவள் அவன் காலிலேயே தன் கையிலிருந்த துப்பாக்கியால் குறி வைக்க அது சரியாக அவன் முட்டுக் காலை பதம் பார்த்தது.



அலறிக் கொண்டு விழுந்தவன் காலை பிடித்துக் கொண்டு வலியில் கதற அவன் அருகில் சென்ற ஆருத்ரா அவன் முன் தன் முட்டியில் கையை ஊன்றியவாறு காலை மடக்கி உட்கார்ந்து "ச்சு..ச்சு..ச்சு.." என உச்சு கொட்டி,
"எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை இருந்துச்சு பாஸ்.. உன்ன ஓடவிட்டு ஷூட்
பன்னனும்னு.. பட் பார்த்தியா மிராக்கல்ல..
இட் ஹேப்பன்ட்.. நானே தான் உன் கை கட்டியிருந்த கயிற லூஸ் பன்னேன்.. நீ எப்பிடியும் புத்தி கெட்டு ஓடுவன்னு தெரியும்.. இதே மாதிரி தானே டா என் தியா ஓடும் போதும் துரத்தி போய் பிடிச்சிருப்பீங்க.. என்ட் உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லவா இது யாரோட பிஸ்டல்னு.. நல்லா உத்து பாரு.. உன்னோடது தான் பாஸ்.." என சொல்ல அவனோ அந்த வலியிலும் அவளை மிரண்டு பார்த்தான்.. ஆருத்ராவுக்கோ இந்த பிஸ்டலை அவனிடமிருந்து எடுத்த அந்த நாளே கண்களில் படமாக ஓடியது.



ஆர்னவின் நடவடிக்கையை கண்காணிப்பதில் இருந்த சமயம் ஆர்னவ் பப்பில் வைத்த பாட்டிற்கு ஆருத்ராவும் செல்ல அவன் எப்போதும் பாதுகாப்பிற்கு தன் பின் பக்க பாக்கெட்டில் பிஸ்டலை மறைத்து வைத்திருப்பான். அவனை பற்றி நன்கு அறிந்தவளோ அவனுடன் அந்த பாட்டியில் சேர்ந்து ஆடுவது போல் அவனை நெருங்கி அன்றே அந்த பிஸ்டலை அவனிடமிருந்து திருடியவள் அவன் ஆயுதம் கொண்டே அவனை பதம் பார்க்க காத்துக் கொண்டு இருந்தாள்.



"என்ன டா இப்பிடி தான் பொறுப்பில்லாம உன் பிஸ்டல உன் பின்னாடி வச்சிருப்பியா.. ஒருவேள உன்ன போட்டு தள்ள வேற எவனாச்சும் ப்ளேன் பன்னி அப்போவே உன்ன உன் பிஸ்டல வச்சே ஷூட் பன்னிருந்தா.. அப்போ எங்க நிலைமை.. யோசிக்க மாட்டியா ஆர்னவ் பேபி.." என கூறியவாறு கயல் அவன் கன்னத்தை தட்ட,



"நா நினைச்சிருந்தா உன்ன ஷூட் பன்னியே கொன்னிருக்கலாம்.. ஆனா, நீ உடனே எல்லாம் சாக கூடாது.. கொஞ்சம் கொஞ்சமா துடிச்சு துடிச்சு சாகனும்.." என ஆருத்ரா சொல்ல அதே நேரம் சரியாக காலில் உண்டான வலியோடு சேர்த்து இப்போது உடம்பில் ஒவ்வொரு அனுவும் உயிரை கொல்லும் வலியை கொடுக்க "ஆஆஆ.. முடியல.." என கத்த ஆரம்பித்து விட்டான் அந்த ராட்சசன்.



"என்ன சார்.. ரொம்ப வலிக்குதா.. நாங்க போட்ட இன்ஜெக்ஷன் அப்பிடி.. இப்போ தானே முதல் ஸ்டேஜ்.. இதுக்கப்றம் உன் உடம்பில இருக்குற ஒவ்வொரு நரம்பையும் வெடிக்க வைக்கும்.. உள்ளுக்குள்ளேயே உன் சதையை கிழிக்கும்.. ஆனாலும் நீ உயிரோட தான் இருப்ப.. உன் ஒவ்வொரு வலியையும் ஃபீல் பன்னி அனுபவிக்க போற டா.." என ஆதிரா கண்களில் அனல் பறக்க சொல்ல,



ஆர்னவுக்கோ நிஜமாகவே தன்னை சுற்றி அமர்ந்துள்ள பெண்கள் பார்ப்பதற்கு அசுரர்களை வதம் செய்ய வந்த காளிதேவியாகவே காட்சி அளித்தனர். அடுத்தடுத்தென்று உள்ளுக்குள் உயிரோடு தன்னை வெட்டுவது போன்று வலியை உணர்ந்தவன் அந்த வலியை பொறுக்க முடியாமல்,
"ப்ளீஸ் என்னை கொன்னுறுங்க.. என்னால இந்த வலியை தாங்க முடியல்ல.. என்னை கொன்னுறுங்க.." என அவன் கெஞ்சி கதற , அவன் கதறுவதையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் மொத்த பழி வெறியும் புதைந்து போகும் அளவிற்கு அடுத்து தன் காரியத்தை செய்தனர்.
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
இவர்கள் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்த ஆண்களோ இவர்களின் இந்த ருத்ர தாண்டவத்தில் திகைத்துபோய் பார்த்துக் கொண்டிருக்க, ஆர்யனோ விழிவிரித்து,
"அப்போ ஆர்னவ்.." என அதிர்ச்சியுடன் கேள்வியாக இழுக்க,



"அவன எங்க தியா காலுக்கடியிலேயே புதைச்சிட்டோம்.. " என சொன்ன ஆருத்ராவின் கண்களிலும் உதட்டிலும் தெரிந்த கோபத்துடன் கூடிய வெற்றிப் புன்னகையில் ஆடிப் போய் விட்டான் ஆர்யன்.



தியா இறந்த பின்னர் அவளுடைய சடலத்தை சென்னைக்கு கொண்டு வந்து அவர்கள் வளர்ந்த ஆசிரமத்திற்கு பின் பகுதியிலுள்ள மைதானத்திலே அடக்கம் செய்திருக்க நிவேதா அம்மாவின் சடலத்தை கூட தியாவின் கல்லறையின் பக்கத்திலே தான் அடக்கம் செய்திருந்தனர்.
அங்கு தான் அவர்கள் இருவரின் கல்லறையில் அவர்களின் காலுக்கடியில் குழி தோண்டி ஆர்னவை உயிரோடு கதற கதற புதைத்து விட்டனர் நம் நாயகிகள்.



"பொட்ட புள்ளைங்க உங்களால என்ன பன்ன முடியும்னு கேட்டான்.. என்ன பன்ன
முடியும்னு நாங்க காட்டிட்டோம்.. பட், அவன்..
ஹி இஸ் நோ மோர்.. " என கயல் நக்கலாக சொல்ல,



"பாதி உயிர் நாங்க போட்ட இன்ஜெக்ஷன்லயும் மீதி உயிர் மூச்சு கூட விட முடியாம புதைஞ்சே செத்திருப்பான்.. இப்போ போனா கூட வெறும் பொணத்தை தான் அள்ளிட்டு வர முடியும்.." என ரியா கூற,



"அப்போ அந்த ட்ரைவர் எங்க.." என ஹரி கேட்டான்.



அவர் அவருடைய சொந்த ஊருக்கே சொந்த நிலத்தில் விவசாயம் பார்க்க சென்றதை சொல்லாது பெண்கள் ஐவரும் அமைதியாக இருக்க,



"இப்போ நீங்க பன்னதுக்கு உங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா.. அதுவும் நீங்க கொன்னது மும்பையோட ச்சீஃப் மினிஸ்டர் பையன்.. " என சித்து பேசிக் கொண்டிருந்ததை குறுக்கிட்ட துர்கா,
"ஏய்ய்.. அவன் யாரா இருந்தா எங்களுக்கு என்ன.. எங்க வாழ்க்கையில விளையாடினான்.. உங்க சட்டத்தால கொடுக்க முடியாத தண்டனைய நாங்க கொடுத்தோம்.." என கத்த,



"அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.. நாங்க தப்பு பன்னல.. தப்பு பன்னவங்களுக்கு தண்டனைய தான் கொடுத்திருக்கோம்.. தப்பே பன்னாம எதுக்கு நாங்க தண்டனைய அனுபவிக்கனும்.. எங்கள உங்களால பிடிக்கவே முடியாது.." என ஆருத்ரா ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அந்த பங்களாவே இருட்டாக, ஆண்களோ பதட்டத்தில் தங்கள் தொலைபேசியை அவசரமாக எடுத்தவர்கள் அதிலிருந்த ஃப்ளாஷ் லைட்டை போட்டு பெண்கள் இருந்த இடத்தை பார்க்க அங்கே ஒரு ஈ காக்கா கூட இல்லை..



திடீரென வெளிச்சம் வர நான்கு ஆடவர்களோ ஆர்யனை பார்த்து,
"ஆர்யா அவங்க.." என ஏதோ சொல்ல வர,



தான் நினைத்தது போல் சரியாக நடந்து விட்டதில் குறுஞ்சிரிப்பை உதிர்த்த ஆர்யன்,
"இன்ட்ரெஸ்டிங்.." என கூறியவாறு,
"நா நினைச்ச மாதிரியே பன்னிட்டாங்க.. சோ, இனிமே நாம நம்ம வேலைய பார்க்கலாம்.. எல்லாத்தையும் சோல்வ் பன்னிட்டு நம்ம ஆளுங்களை தேடி போகலாம் காய்ஸ்.." என கூறியவன் அங்கிருந்த கதிரையில் சாவகாசமாக அமர அவன் மனமோ,
"நீ என்கிட்ட இருந்து எப்பவுமே தப்பிக்க முடியாது ஆருமா.." என சொல்லி சிரித்தது.



ஆனால், பாவம் தாம் தப்பித்து விட்டதாக நினைத்து அப்போதே ஊரை விட்டு கிளம்பியிருந்த நாயகிகளுக்கு தெரியவில்லை இது கூட ஆர்யனின் திட்டம் தான் என்று..



❤தொடரும்❤
------------------------------------------------------------------

friends eppawum pola unga commentskaga wait pannuwean so innaiki ud epidinnu marakama comment panniruga..
thanks for ur love and support guys..❤❤
keep supporting me?



❤ZAKI❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top