• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

🌷விஸ்வாமித்திரர் 🌷

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,017
Location
madurai
🌷 மிகப் பெரிய முனிவரான விஸ்வாமித்திரர் ஆரம்பகாலத்தில் அரசனாகவே வாழ்ந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு உள்ளது ..

🌷 காதி என்றொரு அரசன் இருந்தார் .. அவருக்கு ஆண் குழந்தை ஏதும் இல்லை .. ஆனால் ஒரு அழகிய மகள் இருந்தார் .. அவர் பெயர் ஸத்யவதி .. காலங்கள் உருண்டோடின ..ஸத்யவதி திருமண வயதை அடைந்தார் .. நற்குணங்களையும் அழகையும் ஒருங்கே பெற்ற அவரை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று விரும்பினார் காதி .. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினார் . அந்த சமயம் அரசனை தேடி ஒரு முனிவர் வந்தார் .. அவர் பெயர் ரிசீகர் ..
அரண்மனைக்கு வந்த ரிசீகர் ஸத்யவதியின் அழகையும் நற்குணங்களையும் கண்டு வியந்தார் .. அவரை மனம் முடிக்கவேண்டும் என்று விரும்பினார் .. தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார் .. இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வதென்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் தனது ராஜ்யம் .. முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பது அவருக்கு நன்கு தெரியும் .. ஆனாலும் முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக அவர் எண்ணினார் ..

🌷 ஒரு நாள் முனிவரை அழைத்து ..

🌷 " ஐயா எனக்கு உங்களிடம் சிறிய வேண்டுகோள் ஒன்று உள்ளது .. அதை நீங்கள் நிறைவேற்றினால் என் மகளை உங்களுக்கு மணம்முடித்து தருகிறேன் "

🌷 என்றார் அரசன் ..

🌷 " அது என்ன வேண்டுகோள் "

🌷 என்றார் முனிவர் .

🌷 " ஒரு காது கருப்பாகவும் உடல் முழுவதும் வெள்ளையாகவும் உள்ள ஆயிரம் குதிரைகளை நீங்கள் எனக்கு தரவேண்டும் "

🌷 என்றார் . அரசனின் வேண்டுகோளை ஏற்று குதிரைகளோடு வருவதாகக் கூறி சென்றார் முனிவர் . இது போன்ற ஆயிரம் குதிரைகளை முனிவர் எங்கு தேடி கண்டுபிடிப்பார் .. அவரால் அதை தரவே முடியாது .. ஆகையால் அவர் ஸத்தியவதியை மணக்கும் விருப்பத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான் அரசன் ..

🌷 இதற்கிடையில் ரிசீகர் முனிவர் தன்னை மணக்க விரும்புகிறார் என்ற செய்தி ஸத்யவதியின் காதுகளுக்கு எட்டியது. அவளும் முனிவரை மணக்க விருப்பம் உடையவளாகவே இருந்தாள். அரசனின் வேண்டுகோளை பூர்த்திசெய்ய முனிவர் வருணபகவானிடம் வேண்டினார். வருணபகவானும் அவர் கேட்டதுபோல ஆயிரம் குதிரைகளை தந்தருளினார். அதை அரசனிடம் ஒப்படைத்தார் முனிவர் .. இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. ஆகையால் தான் கொடுத்த வாக்கின் படி .. தன் மகளை ரிசீகர் முனிவருக்கு மனம் முடித்து கொடுத்தார் ..

🌷 ரிசீகரும் ஸத்யவதியும் நல்ல ஒரு தம்பதிகளாகவே வாழ்ந்துவந்தனர். ஒருநாள் ரிசீகர் சத்யவதியை அழைத்து ..

🌷 " நான் உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன் என்ன வேண்டுமோ கேள் "

🌷 என்றார். தன் கணவன் தன் மீது வைத்திருக்கும் அளப்பரிய அன்பை கண்டு ஸத்யவதி மனம் மகிழ்ந்தார் ..

🌷 " சுவாமி .. நான் எனக்கான வரத்தை பிறகொரு நாள் கேட்கலாமா ..??.."

🌷 என்றார் ஸத்யவதி .. ரிசீகரும் அதற்கு சம்மதித்தார் ..

🌷 ஒருநாள் ஸத்யவதி தன் தாய் வீட்டிற்கு சென்றாள் .. அங்கு தாயும் மகளும் அனைத்து விஷயங்களை பற்றியும் பேசினர் ..

🌷 அப்போது ஸத்யவதி .. தன் கணவர் தனக்களித்த வரம் குறித்து தன் தாயிடம் தெரிவித்தார் ..

🌷 " என்ன வரம் கேட்க போகிறாய் "

🌷 என்றாள் அவர் தாய் ..

🌷 " எனக்கான ஆசைகள் இருக்கட்டும் அம்மா .. உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள் அம்மா நான் அதை என் கணவரிடம் கேட்கிறேன் "

🌷 என்றார் ஸத்யவதி .. உடனே அந்த தாய் வெட்கத்தோடு

🌷 " எனக்கொரு ஆண் மகம் பிறந்தால் நன்றாக இருக்கும் "

🌷 என்று கூறினார் .. சில மணி நேரங்களுக்கு பிறகு ஸத்யவதி தன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் இல்லத்தை அடைந்தார் ..

🌷 அடுத்தநாள் ரிசீக முனிவரிடம் தனக்கான வரம் குறித்த பேச்சை தொடங்கினார் ஸத்யவதி ..

🌷 " முனிவரும் என்ன வரம் வேண்டும் கேள் "

🌷 என்றார் ..

🌷 " சுவாமி எனக்கொரு மகன் வேண்டும் "

🌷 என்றாள் ..

🌷 " அருமை .. இதை தான் நீ கேட்பாய் என்று நான் எண்ணினேன் "

🌷 என்றார் முனிவர்.

🌷 " சுவாமி .. என் தாய் .. தந்தைக்கும் .. ஒரு மகன் வேண்டும் "

🌷 என்றார் ஸத்யவதி ..

🌷 " அப்படியே ஆகட்டும் "

🌷 என்று கூறிய முனிவர் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார் .. பின் இரு பிரசாதங்களை அவர் ஸத்யவதியிடம் கொடுத்தார். ஒரு பிரசாதத்தை குறிப்பிட்டு ..

🌷 " இதை நீ உண்ணவேண்டும் .. மற்றொன்றை உன் அன்னை உண்ணவேண்டும் " .. " அடுத்த நாள் இருவரும் குளித்து விட்டு நீ அத்தி மரத்தையும் .. உன் தாய் அரச மரத்தையும் சுற்ற வேண்டும் "

🌷 என்றார் ..

🌷 இரண்டு பிரசாதங்களையும் எடுத்துக்கொண்டு ஸத்யவதி தன் தாயை சந்திக்க சென்றார் .. நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தார் .. சில நொடிகள் யோசித்த ஸத்யவதியின் தாய் ..

🌷 " நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது மகளே .."

🌷 " பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று எண்ணுவார்கள் .. ஆகையால் நீ உண்ணவேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும் .. ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ உண்டுவிடு .. மரத்தையும் அதற்கேற்றாற்போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம் .. எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காக இதை நீ செய்வாயா "

🌷 என்றார் .. ஸத்யவதியும் சிறிது நேரம் யோசித்துவிட்டு ..

🌷 " சரி அம்மா "

🌷 என்று கூறிவிட்டார் .. அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் உண்டுவிட்டு மரத்தையும் மாற்றி சுற்றினர் .. சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்பம் தறித்தனர் .. ஸத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர் .. பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார்.

🌷 " பெரும் தவறு செய்துவிட்டாயே ஸத்தியவதி .. நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும் .. உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய் .. தந்தைக்குப் பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்றல்லவா நான் பிரசாதம் அளித்தேன் "

🌷 " இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி உண்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணனுக்கு உரிய குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்க விரும்புவார் .. உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறார் "

🌷 என்றார். இதை கேட்டு அதிர்ந்த ஸத்யவதி ..

🌷 " நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி "

🌷 என கதறி அழுதாள் ..

🌷 மனம் மாறிய முனிவர் ..

🌷 " ஒரே ஒரு வழி இருக்கிறது .. ஸத்யவதி .. உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாகவே பிறப்பார் ... ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை க்ஷத்ரியனாக பிறந்தாலும் .. சில காலத்திற்கு பிறகு அவர் அந்தணாகவே மாறிவிடுவார் "

🌷 என்று கூறி அதற்கான வரத்தையும் அளித்தார் .. அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் " ஜமதக்னி முனிவர் " என்றழைக்கப்பட்டார் .. அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான் .. அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விஸ்வாமித்திரர் ஆவார் ..!!

🌷 விஸ்வாமித்திரர் திருக்கோயில் - விஜயாபதி

காயத்ரி மந்திரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை இயற்றிய, சப்தரிஷிகளுள் ஒருவரும், மிகப்பெரும் முனிவருமான பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் தங்கியிருந்து யாகம் செய்த, இராம-லட்சுமணரின் பாதம் பட்ட புண்ணிய பூமியான இந்த சிற்றூர் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது ..

🌷 பிரம்மரிஷி விசஸ்வாமித்திரர் ..

🌷 " விஜயாபதி " என்றால் " வெற்றியின் இடம் " என்று பொருள் .. கடற்கரை அருகே விஸ்வாமித்திரர் வீற்றிருந்து தன்னைத்தேடி வருவோர்க்கு இன்றளவும் வெற்றியைத் தருகிறார். சில அடி தூரத்திலேயே விசுவாமித்திரர் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ..
ஸ்ரீ விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி | ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன்
சன்னதிகளையும் ஆற்றின் மறுபக்கத்தில்
தில்லை மாகாளியையும் தரிசிக்கலாம் ..

🌷 கௌசிக மன்னன் விசஸ்வாமித்திர முனிவரான வரலாறு :

🌷 கௌசிக நாட்டை ஆண்டுவந்த மன்னன் கௌசிகன் தான் பின்னாளில் விஸ்வாமித்திர முனிவரானார். தனது நாட்டில் பஞ்சம் ஏற்பட துவங்கிய காலகட்டத்தில் கௌசிக மன்னன் தனது படை பரிவாரங்களுடன் காட்டு வழியே பயணித்துக் கொண்டிருக்கையில் வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தை கடக்க நேரிட்டது ..

🌷 மன்னனை உபசரிக்க விரும்பிய வசிஷ்டர் .. மன்னனுக்கும் படை வீரர்களுக்கும் தானே விருந்தளிக்க முன்வந்தார். அனால் கௌசிக மன்னனோ .. காட்டுப் பகுதியில் தனித்து அமைந்திருக்கும் ஆசிரமத்தில் வாழும் வசிஷ்டரால் தனக்கும் அத்தனை வீரர்களுக்கும் உணவு சமைத்து பரிமாற இயலாது என எடுத்துக்கூறினான் ..

🌷 வசிஷ்டர் .. தன்னால் சற்றுநேரத்தில் அனைவருக்கும் வேண்டிய அறுசுவை விருந்தை வழங்க இயலுமென்று பதிலுரைத்து அனைவரையும் இளைப்பாறும்படி வேண்டினார். மன்னனும் ஒத்துக்கொள்ள .. சிறிது நேரத்தில் வசிஷ்டர் தான் கூறியபடி அனைவருக்கும் விருந்தளித்து உபசரித்தார். ஆச்சரியமடைந்த மன்னன் கௌசிகன் இது எவ்வாறு சாத்தியமானது என்று வசிஷ்டரிடம் கேட்டார் .. வசிஷ்டர் தன்னிடம் இருந்த தெய்வீகப் பசுவான " நந்தினி " ( காமதேனுவின் கன்று ) கேட்ட எல்லாவற்றையும் வழங்கவல்லது என்று காண்பித்தார். கேட்டதையெல்லாம் கொடுக்கும் இப்படியொரு பசு தன்னிடமிருந்தால் தன் நாட்டில் பஞ்சமே வராமல் ஆளலாம் என்றுணர்ந்த கௌசிக மன்னன் வசிஷ்டரிடம் அப்பசுவை தனக்குத் தந்தருளுமாறு வேண்டினான். தேவேந்திரன் தனக்கு வரமாக அளித்த பசுவை தானமாகக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லையென்றும் நந்தினி பசுவே விருப்பப்பட்டு வந்தால் அழைத்து செல்லுமாறும் வசிஷ்டர் கூறினார் .. நந்தினி பசு மன்னனுடன் செல்ல விரும்பாததால் வசிஷ்டரை சரணடைந்தது .. கௌசிகன் தனது படை வீரர்களிடம் அதை சிறைப்பிடிக்குமாறு உத்தரவிட்டார் .. தனது பசுவை படை வீரர்கள் இழுத்து துன்புறுத்துவத்தைக் கண்ட வசிஷ்டர் நந்தினியின் வேண்டுகோளுக்கிணங்க வீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகும்படி சபித்தார் ..

🌷 வசிஷ்டரின் மகிமையையும் தவத்தின் பலத்தினையும் உணர்ந்த மன்னன் வசிஷ்டரிடம் தானும் அவரைப்போல் " பிரம்மரிஷி " ஆகவேண்டும் என வேண்டினான். ஆனால் வசிஷ்டரோ கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே " பிரம்மரிஷி " பட்டம் பெறமுடியுமென்றும் சுகபோகங்கள் நிறைந்த அரச வாழ்க்கையில் திளைத்த மன்னனால் அப்படி கடும் தவம் புரியமுடியாது என்று கூறினார். வசிஷ்டர் தன்னை அவமதித்துவிட்டதாக எண்ணிய கௌசிக மன்னன் தானும் அவரைப்போலவே கடும் தவம் புரிந்து, அவரது வாயாலேயே " பிரம்மரிஷி " பட்டம் பெறுவேனென்று சவால் விட்டு தவமியற்றத் தொடங்கினார். கௌசிக மன்னனின் கடுந்தவத்தைக் கண்டு மகிழ்ந்த ஈஸ்வரன் பூரணமான " தனுர் வேதத்தையும் சகல அஸ்திரங்களையும் " அருளினார். ஆயினும் வசிஷ்டரிடம் தன் தவபலத்தை சோதித்து பார்த்த கௌசிகன் தான் மேலும் உறுதியான தவத்தினை மேற்கொள்ள வேண்டுமென்று உணர்ந்து தவஞ்செய்து பிரம்மனிடமிருந்து " ராஜரிஷி " பட்டத்தையும் அதன்பின் " மகரிஷி " பதவியையும் அடைந்தார் ..

🌷 திரிசங்கு சுவர்க்கம் :

கௌசிக மன்னன் தனது தவ வலிமையால் விசுவாமித்திரர் ஆன காலத்தில் திரிசங்கு அரசன் தனது தேகத்துடன் ( பூத உடலுடன் ) சுவர்க்கத்து செல்ல வேண்டுமென ஆசைக்கொண்டு தனது குலகுருவான வசிஷ்டரை அணுகினார். ஆனால் வசிஷ்டர் இதனை மறுத்துவிட்டார். மனவருத்தத்துடன் நல்லரசன் திரிசங்கு தனது குரு வசிஷ்டரின் புத்திரர்களிடம் அதே விண்ணப்பத்தை வைத்தான். குருவையும் தங்களது தந்தையையும் மதிக்காத திரிசங்கு அரசனை சண்டாளனாகும்படி அவர்கள் சபித்துவிட்டார்கள். சாபத்தினால் அவலட்சண உருவம் பெற்ற திரிசங்கு அரசன் விசுவாமித்திரரை தஞ்சம் அடைந்தார் .. அவர் மீது கருணை கொண்ட விஸ்வாமித்திரர் தனது தவ வலிமையால் அவரை அவரது விருப்பப்படி உயிருடன் சுவர்க்கத்துக்கு அனுப்புவதாக வாக்களித்து அதனை நிறைவேற்ற யாகமும் செய்தார். முடிவில் சுவர்க்கம் வரை சென்ற திரிசங்கு அரசனை தேவேந்திரன் தள்ளிவிட .. தனது தவ வலிமை அத்தனையையும் ஒருசேர்த்து விசுவாமித்திரர் திரிசங்கு அரசனுக்கென்று தனியாக ஒரு " திரிசங்கு "சொர்க்கத்தையே உருவாக்கினார் ..

🌷 அதன் பின், தான் இழந்த தவவலிமை அனைத்தையும் மீண்டும் பெற அடுத்த தவத்திற்கு தயாரானார் விசுவாமித்திரர் .. அதற்காக அவர் தேர்ந்தெடுத்த இடம் தான் இந்த விஜயாபதி ..

🌷 திருத்தல வரலாறு :

🌷 விஸ்வாமித்திர மகரிஷி தான் இழந்த தனது தவ வலிமை அனைத்தையும் மீண்டும் பெற வேண்டி இன்றைய ‘விஜயாபதி’ அமைத்திருக்கும் இடத்தில் மகாலிங்க சுவாமி மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மனை பிரதிஷ்டை செய்து யாகம் செய்ய விரும்பி இங்குள்ள தில்லை வனத்தில் ஓமகுண்டம் வளர்த்தார். அப்போது அசுரர்களால் தொல்லை ஏற்பட்டதால் ‘அயோத்தி’ சென்று இராமனையும் லட்சுமணனையும் தில்லை வனக்காட்டிற்கு காவல் உதவிக்காக அழைத்து வந்தார். யாகத்தை தடுக்க வந்த " தாடகை " என்னும் அரக்கியை இராம-லட்சுமணர் வதம் செய்தனர். விசுவாமித்திரரின் யாகமும் சிறப்பாக முடிந்தது ..

🌷 சிவனும் சக்தியும் தோன்றி விசுவாமித்திர் இழந்த சக்திகள் அனைத்தையும் திரும்ப அளித்து காசிக்கு சென்று வசிஷ்டரின் வாயாலேயே ரிஷிகளில் உயர்ந்த பட்டமான " பிரம்மரிஷி " பட்டத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆசி வழங்கினர் ..

🌷 மேலும் தாடகையைக் கொன்றதால் இராம-லட்சுமணருக்கு ஏற்பட்டிருந்த " பிரம்மஹத்தி தோஷம் " நீங்கிட விசுவாமித்திரர் " மகாலிங்க சுவாமி " சன்னதியில் இராம-லட்சுமணர் இருவருக்கும் " நவக்கலச யாகம் " செய்தார் ..

🌷 இதன் பின்னர் தான் ஜனக மன்னனின் அழைப்பை ஏற்று சீதையின் சுயம்வரத்திற்கு இராம-லட்சுமணரை மிதிலைக்கு அழைத்து சென்றார் ..

🌷 திருத்தல சிறப்பு : விசுவாமித்திரர் சன்னதி ..

🌷 விசுவாமித்திரர் யாகம் செய்து இழந்த சக்திகளை மீண்டும் பெற்ற இடம் என்பதால் இந்த இடத்துக்கு வந்து இவரை மனதார வணங்கி செல்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் ..
தன்னை தஞ்சம் அடைபவர்களுக்கு விதியை மாற்றி அமைக்கும் வல்லமையும் இரக்க குணமும் உடையவர் விஸ்வாமித்திரர் ..

🌷 ஒவ்வொரு மாதமும் ..
பூசம் | அனுஷம் | உத்திரட்டாதி | விசாகம் ஆகிய நட்சத்திரங் களிலும் ..
பெளர்ணமி | அமாவாசை | தேய்பிறை அஷ்டமி | மற்றும் பிரதோஷ தினத்தன்றும் விசுவாமித்திரருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசையிலும் கடலில் குளித்து இங்கு அருள்பாலிக்கும் தெய்வங்களை வணங்கினால் வாழ்வில் சகல நிவாரணமும் கிட்டும் ..

🌷 ஸ்ரீ தில்லை மாகாளி சன்னதி:

இராம-லட்சுமணரின் தோஷ பரிகார யாகத்திற்கு தேவைப்பட்ட தில்லை மர குச்சிகளை சிதம்பரம் காளி தேவி கோயில் மரத்திலிருந்து எடுத்து வந்ததால் தில்லை காளி தோன்றி, தனது அனுமதியின்றி தனக்கு சொந்தமான இடத்திலிருந்த மரக்குச்சிகளை எவ்வாறு எடுத்து வரலாம் என வினவினாள். பின்னர், யாகத்தின் பலனாய் தில்லை காளியை இங்கும் பிரதிஷ்டை செய்து தனி சன்னதியையும் அமைத்து தருவதாக முடிவெடுத்து அமைக்கப்பட்டதே ஆற்றின் மறுக்கரையிலிருக்கும் தில்லை மாகாளி சன்னதி. இங்கு
காளியின் கண்கள் மட்டும் இலங்கையை நோக்கும்படியான கோணத்தில் அமைந்திருக்கும் ..
இலங்கையின் அசுரர்களினால் தீமை வராமல் காவல் காப்பதாக ஐதீகம் ..

🌷 விஸ்வாமித்ரர் புகழ் பற்ற ராஜரிஷி .. ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் .. ஆனால் தவத்தினால் பிரம்ம ரிஷி ( பிராமண குல )யாக உயர்ந்தவர். அதுவும் " வஷிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி " பட்டம் பெற்றவர் .. ஆனால் இப்படிப் பட்டம் பெறுவதற்கு முன் அவருக்கும் வசிஷ்டருக்கும் எப்போதும் மோதல்தான் ..
காம சுகம், அஹங்காரம், கோபம் ஆகிய மூன்று எதிரிகளால் மூன்று முறை தோல்வி அடைந்து இறுதியில் மீண்டும் தவம் இயற்றி பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார் ..

🌷 வசிட்ட மகரிஷியிடம் இருந்து காமதேனு பசுவைப் பறிக்க முயன்ற காலம் முதல் நடந்த பல மோதல்களில் கீழ்கண்ட மோதலும் ஒன்று ..

🌷 ஒருமுறை வீட்டுக்குச் சாப்பிட வருமாறு விஸ்வாமித்ரரை வசிஷ்டர் அழைத்தார் ..

🌷 அது ஒரு திதி ( திவசம் / சிரார்த்தம் ) அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சாப்பாடு.

🌷 " அதற்கென்ன வந்தால் போச்சு ..
ஆனால் ஆயிரத்தெட்டு வகை கறி செய்து படைக்க வேண்டும் "

🌷 என்றார் .. உலகில் ஆயிரத்தெட்டு வகையான காய்கறிகள் உண்டா? அப்படியே இருந்தாலும் இத்தனை கறிகாய்களைச் சமைத்து யாராவது உணவு படைக்க முடியுமா? அப்படியே சமைத்துப் போட்டாலும் அதைச் சாப்பிட யாரால் முடியும்?

🌷 விசுவாமித்ரர் தன்னை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டிவைக்கவோ அல்லது அவமானப்படுத்தவோ இப்படிச் செய்கிறார் என்பது வசிஷ்டருக்குத் தெரியும் .. இருந்த போதிலும் விட்டுக் கொடுக்காமல் ..

🌷 " ஓ .. ஆயிரத்தெட்டு வகை கறியமுது வேண்டுமா ..??.. அதற்கென்ன அருந்ததியிடம் சொல்லி விடுகிறேன் "

🌷 என்றார் ..

🌷 வசிஷ்டரின் மனைவியான அருந்ததி கற்பின் சின்னம் .. ஒவ்வொரு இந்துவும் திருமணமான முதலிரவில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கவேண்டும் ..
வசிட்டரும் அருந்ததியும் இணபிரியாமல் இருப்பதுபோல நீங்கள் இருவரும் இணைபிரியாமல் வாழுங்கள் என்று பிராமண புரோகிதர்களும் வாழ்த்துவர் ..
அருந்ததி கீழ்ஜாதிப் பெண்ணாக இருந்தபோதிலும் அவள் கற்பினால் உயர்ந்தவர் என்பதால் எல்லோருக்கும் அவரே தெய்வம் ..

🌷 சங்கத் தமிழ் நூல்களில் ஐந்தாறு இடங்களில் அவர் வாழ்த்தப் படுகிறார் .. தமிழ்ப் புலவர்கள் ஈராயிரம் ஆண்டுகளாக அவர் புகழ் பாடுகின்றனர் ..

🌷 விருந்துச் சாப்பாடு நாளும் வந்தது ..
விசுவாமித்திரர் இலையில் அமர்ந்தார் ..
பாகற்காய் கறி ..
பலாப்பழம் ..
பிரண்டைத் துவையல் ..
ஒரு வாழை இலையில் எவ்வளவு கறிகள் படைக்கமுடியுமோ அவ்வளவுதான் இலையில் இருந்தன ..
1008 கறிகள் இல்லை ..
விசுவாமித்திரர் கோபத்துடன் வசிஷ்டரை வினவினார் .. அவரோ நான் தான் அருந்ததியிடம் சொல்லிவிட்டேனே .. அவரையே கேட்டுக்கொள்ளுங்கள் என்றார் வசிஷ்டர் ..

🌷 இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த உலகம் போற்றும் உத்தமி அருந்ததி தானே முன்வந்து ஒரு பாட்டைக் கூறினார் .. இதுதானே திவச கால விதி .. உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்றாள் .. விசுவாமித்திரர் வாயடைத்துப் போனார் ..
பேசாமல் சாப்பிட்டுவிட்டு வாழ்த்திவிட்டுப் போனார் ..

🌷 அருந்ததி கூறிய அந்தப் பாட்டு ..

🌷 " காரவல்லி சதம் சைவ வஜ்ரவல்லி சதத்ரயம்
பனசம் ஷட்சதம் சைவ ஸ்ரார்த்தகாலே விதீயதே "

🌷 कारवल्लि शांत चैव वज्र वल्लि शतत्रयं
🌷 पनसं षट् शतंचैव श्रार्धकाले विधीयते

🌷 ஒரு திதியன்று சமைக்கப்படும் சமையலில் ..

🌷 பாகற்காய் கறி 100 கறிகளுக்குச் சமம் ..
பிரண்டைத் துவையல் / கறி 300 கறிகளுக்குச் சமம் .. பலாப்பழம் 600 கறிகளுக்குச் சமம் ..

🌷 என்று பாடல் கூறுகிறது ..

ஆயிரம் கறிகள் ஆயிற்று ..மீதி .. இலையில் எண்ணிப் பாருங்கள், எட்டு கறிகள் வைத்திருக்கிறேன் .. ஆக மொத்தம் 1008 ..!!.."

🌷🌷 கற்புக்கரசி — சொல்லுக்கும் அரசி ..!!! 🌷🌷

🌷பகிர்வு🌷
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top