• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

🌷 குருஷேத்திர கதைகள் 2🌷

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,971
Location
madurai
🌷🌷🌷

🌷 மஹாபாரதம் ‌..

இறந்தும்.. உயிருடன் மீண்ட அர்ஜுனன் ..!!

🌷 அர்ஜுனன் தன் மகன் பப்ருவாகனனால் யுத்தக் களத்தில் வீழ்த்தப்பட்டு உயிரிழந்து மறுபடியும் உயிருடன் மீண்ட நிகழ்ச்சி ..

🌷 குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்று .. தர்மபுத்திரர் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக்கொண்டார் .. தேசம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பினார் .. அதன் பொருட்டு கண்ணனின் அறிவுரைப்படி அசுவமேத யாகம் செய்ய முடிவுசெய்தார் .. யாகம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை வியாசரிடம் கேட்டறிந்தார் ..

🌷 வியாசர் வழிகாட்டியபடி .. சித்ரா பௌர்ணமியன்று தர்மபுத்திரருக்கு முறைப்படி .. யாக தீட்சை கொடுக்கப்பட்டது .. பின்னர் .. உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை தேசம் முழுவதும் சுற்றிவர அனுப்பினார் தர்மபுத்திரர் .. பாதுகாப்பாக அர்ஜுனனை அனுப்பி வைத்தார் .. அர்ஜுனனும் தெய்விக அஸ்திரங்கள் .. வில் .. எடுக்கக் குறையாத அம்பறாத் தூளிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டான் ..!!
சென்ற நாடுகளில் எல்லாம் யாகக் குதிரைக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது .. கண்ணனின் அருளுக்குப் பாத்திரமான தர்மபுத்திரரின் யாகக் குதிரையை யாரால் எதிர்த்து நிற்க முடியும் ??? அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி மாலை மரியாதை செய்தனர் .. வட தேசம் முழுவதும் வெற்றிகொண்ட அர்ஜுனன் .. தென் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் இருந்த மணலூருபுரம் என்ற நாட்டை அடைந்தான் ..!!

🌷 மதுரை அப்போது ..

🌷 " கடம்ப வனமாக " இருந்தது ..

🌷 மணலூருபுரம்தான் அப்போதைய பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்தது .. அப்போது அந்த நாட்டை ..

🌷 " பப்ருவாகனன் "

🌷 என்பவன் ஆட்சி செய்து வந்தான் .. இவன் அர்ஜுனனுக்கும் .. பாண்டிய மன்னரின் மகளான ..

🌷 " சித்ராங்கதைக்கும் "

🌷 பிறந்தவன் .. அவனை பாண்டிய மன்னருக்கே தத்துப் பிள்ளையாகக் கொடுத்து விட்டான் .. யாகக் குதிரை வந்திருக்கும் தகவல் பப்ருவாகனனுக்கு வீரர்கள் மூலம் தெரியவந்தது ..

🌷 " பெரியப்பா " நடத்தும் யாகக் குதிரைக்கும் .. காவலாக வந்திருக்கும் என் தந்தைக்கும் சகல மரியாதைகளையும் செய்ய வேண்டும் ..!! "

🌷 என்று விரும்பினான் .. அதன்படி மாலை மற்றும் காணிக்கைகளுடன் அர்ஜுனனிடம் சென்றான் .. தன் மகன் தனக்குப் பணிந்து மரியாதை செய்வதை அர்ஜுனன் விரும்பவில்லை .. தன் மகன் தன்னுடன் போர் செய்ய வேண்டும் என்றே நினைத்தான் .. அர்ஜுனன் பெற்றிருந்த சாபத்தை ஏற்கெனவே அறிந்திருந்த கண்ணன்தான் அர்ஜுனன் மனதில் அப்படி ஓர் எண்ணத்தை ஏற்படுத்தினார் போலும் ..!!

🌷 தன் எதிரில் வந்த மகனைக் கண்டு கோபம்கொண்ட அர்ஜுனன் ..

🌷 " பப்ருவாகனா .. 😡 என் மகனான நீ க்ஷத்திரிய தர்மத்தை மீறுகிறாயே ..!! என்னுடன் போர் செய்ய நினைக்காமல் ஒரு கோழையைப்போல் நடந்துகொள்கிறாயே ??? "

🌷 என்று ஏளனமாகக் கேட்டான் .. பப்ருவாகனன் தலை குனிந்தபடி நின்றிருந்தான் .. அப்போது அர்ஜுனனின் மற்றொரு மனைவியும் நாக கன்னிகையுமான உலூபி என்பவள் அங்கே வந்து சேர்ந்தாள் ..!! பப்ருவாகனனைப் பார்த்து ..

🌷 " பப்ருவாகனா, என் மகனே, நான் உன் தந்தையின் மனைவியரில் ஒருத்தி .. உனக்கு நானும் ஒரு தாய்தான் .. நான் சொல்வதைக் கேள் .. உன் தந்தையுடன் போர் செய் .. அதுதான் அவருக்கு மகிழ்ச்சி தரும் !! "

🌷 என்றாள் ..

🌷 பப்ருவாகனன் போருக்குத் தயாரானான் .. குதிரையைப் பழக்கப்படுத்துவதில் தேர்ச்சிபெற்ற சில வீரர்களை அழைத்து .. குதிரையைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவிட்டான் .. மகிழ்ச்சியடைந்த அர்ஜுனன் .. என் மகன் .. பப்ருவாகனன் சிறந்த வீரன்தான் .. என்று பாராட்டிவிட்டு யுத்தத்துக்குத் தயாரானான் ..

🌷 போர் கடுமையாக நடைபெற்றது .. அர்ஜுனன் பப்ருவாகனனின் தேரில் பறந்த கொடியை அறுத்து .. தேர்க் குதிரைகளையும் கொன்றான் .. தேரைவிட்டு கீழே இறங்கிய பப்ருவாகனன் .. அர்ஜுனனைக் குறிவைத்து அம்புகளை மழையெனப் பொழிந்தான் .. மகனிடம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக அர்ஜுனன் அந்த அம்புகளைத் தடுத்தானே தவிர .. மகனை அதிகம் தாக்கவில்லை ..!!

🌷 அர்ஜுனன் இப்படி நடந்துகொண்டாலும் .. பப்ருவாகனன் அக்னிப் பிழம்புடன் சீறும் பாம்பாகச் சென்று பேரழிவை உண்டாக்கும் கணைகளை அர்ஜுனனின் மார்பைக் குறிவைத்து ஏவினான் .. சக்தி வாய்ந்த அந்த அம்புகள் அர்ஜுனனின் மார்பைப் பிளந்து அவனைக் கீழே சாய்த்தன ..!! எதிர்க்கவும் அவகாசமில்லாமல் அர்ஜுனன் யுத்தக் களத்தில் மடிந்து வீழ்ந்தான் ..!!

🌷 தந்தை இறந்ததைக் கண்டதும் பப்ருவாகனனின் ஆவேசமெல்லாம் போன இடம் தெரியவில்லை ..

🌷 " தந்தையின் மரணத்துக்கு .. தான் காரணமாகிவிட்டோமே !?! "
என்று நினைத்து மயங்கிவிழுந்தான் .. தகவல் ஊரெங்கும் பரவியது .. அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதை யுத்தகளத்துக்கு வந்து அழுது அரற்றினாள் .. தன் கணவனின் இறப்புக்குக் காரணமான உலூபியிடம் கோபம் கொண்டாள் .. மயக்கம் தெளிந்து எழுந்த பப்ருவாகனனும் உலூபியைப் பார்த்து ..

🌷 " நாக கன்னிகையே .. நீங்கள் சொன்னதைக் கேட்டு நான் என் ஆருயிர் தந்தையையே கொன்றுவிட்டேன் .. இனி நான் உயிருடன் இருந்து என்ன பயன் ..???.. நானும் என் தாயுடன் அக்னிப் பிரவேசம் செய்து உயிர்விடப்போகிறேன் "

🌷 என்று கதறினான் ..

🌷 அந்தத் தருணம் பார்த்து அங்கே வந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனன் இறந்ததைக் கண்டு அழுது அரற்றினார் .. அல்லது அழுவது போல் நடித்தாரோ என்னவோ யாருக்குத் தெரியும் ??? அழுதபடியே உலூபியைப் பார்த்துக்கொண்டிருந்தார் .. கண்ணன் அழுவதைப் பார்த்த உலூபி ..

🌷 " மற்றவர்கள் அர்ஜுனன் இறந்ததற்காக அழலாம் .. ஆனால் .. நீங்களே அழலாமா ??.. நீங்கள் சொன்னால் நான் அர்ஜுனனை உயிர் பெறச் செய்கிறேன் ''

🌷 என்று கூறினாள் .. இந்த மாய [ கள்ளனும் 🙂 ] கண்ணனும் சரியென்று கண்களாலேயே கூறினார் ..உடனே உலூபி தன் மனதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவன மணியை நினைத்தாள் .. உடனே தன் கையில் வந்து சேர்ந்த அந்த மணியை அர்ஜுனன் உடலில்வைத்து அவனை உயிர்த்தெழச் செய்தாள் ..!!

🌷 உயிர்த்தெழுந்த அர்ஜுனன் தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த சித்ராங்கதை .. பப்ருவாகனன் .. கண்ணன் .. உலூபி ஆகியோரைப் பார்த்தான் ..!!
பிறகு உலூபியிடம் .. தன் மகனைக்கொண்டே தன்னைக் கொல்லச் செய்து .. பிறகு தன்னை உயிர் பிழைக்கச் செய்ததற்கான காரணத்தைக் கேட்டான் ..

🌷 கண்ணனின் உத்தரவுப்படி உலூபி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள் ..

🌷 " நாக கன்னிகையான நான் கங்கையில் இருந்தபோது .. " வசுக்கள் " [ தட்சனின் மகள் வசுவின் பிள்ளைகள் எட்டுப் பேர் ..

🌷 [ இவர்களில் ஏழு பேர் சாந்தனுவின் பிள்ளைகளாகப் பிறந்து கங்கையில் விடப்பட்டவர்கள் .. இளையவனான 🏹 பிரபாசனே 🏹 பீஷ்மராகப் பிறந்தவர் ..!!..]

🌷 எல்லோரும் தங்களில் ஒருவரான பீஷ்மரை அர்ஜுனன் முறைதவறி கொன்றுவிட்டான் ..!! அவன் தன் மகனாலேயே மடிய வேண்டும் என்று சபித்துவிட்டனர் .. இதை அறிந்த என் தந்தை அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டார் .. மனமிரங்கிய அவர்கள் என் தந்தையிடம் ..

🌷 " அர்ஜுனனுக்கு மணலூருபுரத்தில் ஒரு மகன் இருக்கிறான் .. அவன் அர்ஜுனனை போர்க்களத்தில் வீழ்த்துவான் .. அப்போது உன்னிடம் இருக்கும் சஞ்ஜீவன மணியால் அர்ஜுனனை உயிர்த்தெழச் செய் ..!!.."
என்று சாபவிமோசனம் கொடுத்தனர் ..!! அதனால்தான் இப்படி நடைபெற்றது ..!! இல்லையென்றால் பீஷ்மரைக் கொன்ற பாவத்துக்காக நீங்கள் கொடிய நரகத்துக்குச் சென்றிருப்பீர்கள் !! "

🌷 என்றாள் .. உலூபி சொன்னதை ஆமோதித்தார் பகவான் கண்ணன் ..

🌷 அனைவரும் மகிழ்ச்சியுடன் பப்ருவாகனனின் அரண்மனைக்குச் சென்று உபசாரங்களை ஏற்றுக்கொண்டனர் .. பின்னர் தன் மனைவி சித்ராங்கதை .. மகன் பப்ருவாகனன் ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு அர்ஜுனன் யாகக் குதிரையுடன் அஸதினாபுரம் புறப்பட்டான் .. அஸ்வமேத யாகம் இனிதே நிறைவுபெற்றது ..!!

🌷பகிர்வு🌷
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,971
Location
madurai
🌷🌷🌷

🌷 மகாபிரஸ்தானிக பருவம் மேலுலகம் எய்தியது ..

🌷 விருஷ்ணிகளின் அழிவை உணர்ந்த தருமர் தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை உணர்ந்தார் .. உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்னும் தமது கருத்தைச் சகோதரிரிடம் தெரிவித்தார் ..

🌷 " காலம் எல்லா உயிரினங்களையும் உரிய நேரத்தில் அழிக்கும் சக்தி வாய்ந்தது "

🌷 என்பதை அனைவரும் உணர்ந்தனர் ..!! துறவு மேற்கொள்ள விழந்தனர் .. எல்லோரும் தருமரின் கூற்றுக்கு அடி பணிந்தனர் .. தருமர் நாட்டை விட்டுப் புறப்படும் முன் சுபத்ரையிடம் கூறினார் ..

🌷 " உன்னுடைய பேரனான பரீட்சித்தை அஸ்தினாபுர அசனாக நியமித்து உள்ளேன் .. யாதவர்களில் எஞ்சியுள்ள " வஜ்ரன் " இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வான் .. நீ எங்களுடன் துறவு மேற்கொண்டு வர வேண்டாம் .. இவர்களுக்கு உதவியாக இங்கேயே இரு .. !! குரு வம்சத்தில் எஞ்சியிருக்கும் " யுயுத்சு " இந்த இரண்டு அரசர்களுக்கும் பாதுகாவலாக இருப்பான் .. கிருபாசாரியார் இருவருக்கும் ஆசாரியாராகத் திகழ்வார் "

🌷 இவ்வாறு நாட்டில் ஆட்சி நடக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தருமர் சுவர்க்க லோகம் அடையத் துறவு மேற்கொண்டார் .. சகோதரர்களும் .. திரௌபதியும் மரவுரி தரித்துத் தருமரைத் தொடர்ந்து சென்றனர் .. அவரை பிரிய மனம் இல்லாத மக்களும் நெடுந் தொலைவு தொடர்ந்து சென்று பின் திரும்பினர் ..!!

🌷 பாண்டவர்களும் .. திரௌபதியும் உண்ணா நோன்பு மேற்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றனர் .. புண்ணிய நதிகளில் நீராடினர் .. புனிதத் தலங்களைத் தரிசித்தனர் .. முதலில் தருமரும் .. அவருக்குப் பின் பீமனும் .. பின்னால் அர்ச்சுனனும் .. அவனுக்குப் பின் நகுல .. சகாதேவனும் .. சென்றனர் .. அவர்களைத் தொடர்ந்து திரௌபதியும் சென்றாள் .. நாய் ஒன்று அவர்களைத் தொடர்ந்து சென்றது .. அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லையும் அம்பறாத் துணிகளையும் விடமுடியாதவனாகச் சுமந்து சென்றான் ..!!அவர்கள் கடற்கரையை அடைந்த போது .. அக்கினி தேவன் தோன்றி ..

🌷 " முன்னர் நான் காண்டவ வனத்தை எரிப்பதற்கு காண்டீபம் என்னும் வில்லையும் இரண்டு அம்பறாத் துணிகளையும் வருணனிடம் இருந்து பெற்று அர்ச்சுனனுக்கு அளித்தேன் .. அந்தக் காரியம் நிறைவேறியதோடு வேறு அரிய செயல்களையும் அவற்றைக் கொண்டு நிறைவேற்றினான் .. இனி அவற்றால் பயனில்லை ..!! எனவே அவற்றை வருணனிடமே ஒப்படைத்து விடுக ..!!.."

🌷 என்று கூறி மறைந்தான் .. அவ்வாறே அவை கடலில் இடப்பட்டன .. பிறகு பாண்டவர்கள் பூமியை வலம் வருபவரைப் போலத் தெற்கு நோக்கிச் சென்றனர் .. பின் தென்மேற்காய்ச் சென்றனர் .. பின் வடக்கு நோக்கிச் சென்றனர் .. இமயமலையைக் கண்டனர் .. அதனையும் கடந்து சென்று மலைகளில் சிறந்த மேரு மலையைத் தரிசித்தனர் .. சுவர்க்கத்தை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்த போது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள் ..!! ..அதிர்ச்சி அடைந்த பீமன் ..

🌷 " இந்த தெய்வமகள் ஏன் இப்படி வீழ்ந்து விட்டாள் ..??.."

🌷 என வினவினான் .. அதற்கு தருமர் ..

🌷 " ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள் .. அர்ச்சுனனிடம் மிகவும் பிரியமாக இருந்தாள் .. அதனால் இந்த நிலை ஏற்பட்டது "

🌷 என்று பதிலுரைத்தார் .. பின்னர் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார்கள் .. சற்று நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் ..

🌷 " அண்ணா சகாதேவனின் இந்நிலைக்கு என்ன காரணம் ..??.."

🌷 என்றான் ..

🌷 " தன்னிடம் உள்ள சாத்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற ஞானச்செருக்குக் காரணமாக அவனுக்கு இக்கதி ஏற்பட்டது "

🌷 என்றபடியே தருமர் போய்க்கொண்டிருந்தார் .. சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான் ..

🌷 " தன்னைவிட அழகில் சிறந்தவர் யாருமில்லை என்ற அழகுச் செருக்குக் காரணமாகாவன் அப்படி வீழ நேரிட்டது "

🌷 என்று திரும்பிப் பாராமல் தருமர் விரைந்தார் .. அடுத்து அர்ச்சுனன் வீழ்ந்தி இறந்தான் .. அதற்கு ..

🌷 " தான் ஒருவனே பகைவரை வெல்ல முடியும் என்ற வீரச் செருக்கே அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது "

🌷 என்றவாறே தருமர் போய்க் கொண்டிருந்தார் .. பீமனுக்கும் தலை சுற்றியது ..

🌷 " அண்ணா .. இதற்கு என்ன காரணம் ..??.."

🌷 என்றான் பீமன் ..

🌷 " தன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் வலிமைச் செருக்குதான் காரணம் "

🌷 என தருமர் சொல்லி முடிப்பதற்குள்பீமன் உயிர் நீத்தான் ..!!

🌷 தருமர் போய்க்கொண்டே இருந்தார் .. நாய் மட்டும் அவரைத் தொடர்ந்தது .. உயிருக்கு உயிரான அனைவரும் மாண்டபோது தருமர் ஏன் மனக் கலக்கமோ .. துயரோ அடையவில்லை ?? காரணம் .. அவர் துறவு மேற்கொண்ட போதே பந்த பாசங்கள் மறைந்தன ..!! அவர் எந்த பரபரப்பும் அன்றி போய்க்கொண்டிருந்தார் ..!!

🌷 அப்போது அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்து அழைத்தான் ..

🌷 " என் சகோதரர்களும் .. திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர மாட்டேன் .."

🌷 என தருமர் பதில் உரைத்த போது நாய் விமானத்தில் ஏற முற்பட்டது .. அப்போது ..

🌷 " இந்த நாய்க்கு .. சுவர்க்கத்தில் இடமில்லை "

🌷 என்று கூறித் தடுத்தான் இந்திரன் .. அதற்கு தருமர் ..

🌷 " என்னிடம் அடைக்கலம் அடைந்த ஒரு தூய ஆன்மாவை [ நாயை ] விட்டு நான் ஒரு போதும் வர மாட்டேன் .. இது நான் மேற்கொண்ட விரதம் ..!!

🌷 என்றார் .. அப்போது நாய் தன் வடிவத்தை மாட்றிக்கொண்டு தர்மதேவதையாகக் காட்சியளித்தது ..!!

🌷 " தரும நெறியிலிருந்து பிறழாத உன்னை நான் பாராட்டுகிறேன்.தருமத்தை நீ எந்த அளவு காக்கிறாய் என்பதைக் கண்டறிய முன்பும் நான் நச்சுப் பொய்கையில் சோதித்தேன்.உடன் பிறப்புகளுக்கும், மாற்றாந்தாய் மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏதும் கருதாத உனது தரும வேட்கையை அன்றும் அறிந்தேன் .. இப்பொழு நாயின் மீது கொண்ட கருணையுள்ளத்தால் இந்திரன் தேரில் ஏற மறுத்தது கண்டு பாராட்டுகிறேன் ..!! "

🌷 என்று கூறி நாயாக வந்த தருமதேவதை மறைந்தது ..!!

🌷 இந்த அற்புதத்தைக் கண்ட தேவர்கள் வியப்படைந்தனர் .. தருமர் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார் .. அங்கு நாரதர் அவரை வரவேற்றுப் பாராட்டினார் ..!! நல்லொழுக்கத்தை விரதமாகக் கொண்டு வாழ்ந்த புண்ணிய பலத்தினால் நீ உடலோடு இந்த சுவர்க்கத்திற்கு வந்துள்ளாய் .. உன்னைத் தவிர இத்தகைய நற்பேறு பெற்றவன் உலகில் வேறு யாருமில்லை ..!! "

🌷 என்று மேலும் புகழ்ந்தார் நாரதர் .. நாரதரின் இப்பாராட்டு தருமர் காதுகளில் விழவில்லை .. அவரது கண்கள் அவரது சகோதரர்களையும், திரௌபதியையும் தேடியது .. ஆனால் அவர்கள் ..??.. ஜன்ம பந்தம் அற்று போயிறுந்தது ..!?

பகிர்வு
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,971
Location
madurai
🌷🌷🌷

🌷 மஹாபாரதம் ..

🌷 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது ..

🌷 போரில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை .. விதுரர் .. தௌமியர் .. யுயுத்சு .. ஆகியோர் தர்மர் கூறியபடி ஏற்பாடு செய்தனர் .. ஆதரவற்றவர்களுக்காக தருமர் தர்ப்பணம் செய்தார் ..!!

🌷 அப்போது கர்ணனை மடியிலிட்டு கதறி அழுத .. குந்திதேவி அங்கு வந்தார் . அவர் .. தேரோட்டி மகன் என இகழப்பட்டவனும் .. துரியோதனனின் நம்பிக்கைக்கு ஏற்றவனாகத் திகழ்ந்தவனுமாகிய .. அர்ச்ஜுனனால் போரில் கொல்லப்பட்ட கர்ணன் பாண்டவர்கள் ஐவருக்கும் மூத்தவன் என்றும் .. தனக்கு சூர்ய பகவானின் அருளால் பிறந்த மகன் என்றும் கூறினார் ..

🌷 தாயின் கூற்றைக் கேட்ட பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .. துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர் .. பின் தருமர் தாயினிடம் ..

🌷 " வீரர்களில் சிறந்தவரும் .. ஒளி மிக்கவருமான கர்ணன் தான் எங்களுக்கெல்லாம் மூத்தவர் என்ற உண்மையை மறைத்ததால் ஏற்பட்ட விளைவுகளை நீங்கள் அறிவீர்களா அம்மா ??? "

🌷 என்றார் .. பாஞ்சாலர்களையும் .. அபிமன்யூவையும் இழந்த துக்கத்தை விட அதிக துக்கம் அடைந்துள்ளதாகக் கூறினார் .. இவ்வளவு நாள் இந்த ரகசியத்தை ஏன் அம்மா மறைத்தீர்கள் ?? "

🌷 என்றார் .. பின் கர்ணனின் மனைவியுடன் அவருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்தார் தருமர் .. பின் .. மனம் வெதும்பிய தருமர் ..

🌷 " இனி எந்த ரகசியமும் பெண்களிடம் தங்கலாகாது "

🌷 என சபித்தார் .. !!

பகிர்வு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top