• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

?????மகிழ்ந்திரு?????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
மனம் ஒரு நாளில் எவ்வளவு நிமிடம், எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ, இதுவே மனித சக்தி. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யும் வீரியத்துடன் வேலை செய்யும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். ஆரோக்கியமாக இருக்க முடியும்.
மகிழ்ச்சியாக இருக்க . . . . 20 வழிகள் !

➖➖➖➖➖➖➖➖➖➖➖
1. எல்லோரையும் கொண்டாடுங்கள்!

???????????
உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது, ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசியுங்கள் உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என எல்லாரையும் ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..
➖➖➖➖➖➖➖➖➖➖➖

2.நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்

???????????
ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

3.அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள்!

???????????
நீங்கள் எதிர்பாராத சமயத்தில், அடுத்தவரின் வாழ்க்கையில் நுழையும் போது, அவர்கள் மீது, அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் என எல்லா இடத்திலும் இது பொருந்தும். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறையை, அன்பை நாம் பிறர்மீது வளர்த்துக்கொண்டால், செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

4. கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!

???????????
“வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” என்ற பிரபல வாசகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது முற்றிலும் உண்மை. ஆய்வின் படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், உங்களை மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

5. தடை..அதை உடை.!

???????????
எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சினை வந்தாலும், “இதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? “ என்ற கேள்வி வரவே வராது. இந்த திறமையை வளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்கு பிரச்சினை இல்லை.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

6.நினைத்தை முடிக்கவும்!

???????????
நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பல பேருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை தினமும் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். அதை வேண்டாம் என தவிர்க்கவும் நம் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையே, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

7.எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!

???????????
நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது சோக நினைவுகள் உங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை உங்களால் மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

8.அடிக்கடி சிரியுங்கள்!

???????????
அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அழ வேண்டும்? எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.. நகைச்சவை உணர்வு கொண்டவராக மாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப்பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து.. பின்பற்றி பாருங்கள்..உங்கள் துன்பத்திலும் சிரிப்பதற்கான காரணம் கிடைக்கும்..

➖➖➖➖➖➖➖➖➖➖➖

9.மன்னிக்க கற்றுக்கொள்வோம்!

???????????
கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே? எனவே மன்னிப்போம்..மறப்போம்..என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகாரிக்கும்தானே !

➖➖➖➖➖➖➖➖➖➖➖

10.நன்றி சொல்வது, நன்று!

???????????
உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்..அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

11.உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!

???????????
வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போதே, அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேணும் உறவில், இந்த நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், உற்சாகம் அதிகமாகும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

12.கொள்கையில் உறுதி வேண்டும்

???????????
நீங்கள் விரும்பிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும் என முடிவெடித்திருக்கும் செயல்களை எப்பாடு பட்டாவது செய்துமுடித்துவிடுங்கள். அந்த உறுதிதான் உங்கள் மீதான, தன்னம்பிக்கையை உங்களிடம் அதிகம் வளர்க்கும். இதில் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும், உங்கள் நம்பிக்கையின் அளவும் குறையும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

13.தியானம் நல்லது!

???????????
ஆய்வின் படி, தியானம் செய்பவர்களின் மூளையில் , தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறனும், நினைவாற்றல் திறனும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே தினமும் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாமே !

➖➖➖➖➖➖➖➖➖➖➖

14.செய்வதை திருந்தச்செய் !

???????????
நீங்கள் எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

15. நம்பிக்கை..அதானே எல்லாம்!

???????????
வாழ்க்கையில், தோல்விகள் வந்தாலும் கூட, அதில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை விட்டுவிட்டு, நேர்மறையாக ரசியுங்கள். இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில், இந்தியா தோற்றுவிட்டது என்றால், அது எதிர்மறை சிந்தனை. இந்த முறை ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டது என நினைத்தால், அதுதான் நேர்மறை சிந்தனை. இந்த குணத்தை மட்டும் வளர்த்துகொண்டால், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அதிகரிக்கும். அப்படியே, மகிழ்ச்சியும் !

➖➖➖➖➖➖➖➖➖➖➖

16. ஆதலால் அதிகம் காதல் செய்!

???????????
நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !

➖➖➖➖➖➖➖➖➖➖➖

17.முயற்சியை கைவிடாதீர்கள்!

???????????
உங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே.. வீழ்வது என்பது தவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு..எனவே இன்னொரு முறை முயற்சி செய்துபாருங்கள்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

18.உங்களது சிறப்பைக்கொடுங்கள்!

???????????
ஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போகலாம். அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப்போகாமல், எவ்வளவுதான் நம்மால் முடியும் என சுயபரிசோதனை செய்துதான் பாருங்களேன். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

19.நமக்கு நாமே நல்லது!

???????????
உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில் அதிக கவனம் இருக்கட்டும். நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.

➖➖➖➖➖➖➖➖➖➖➖

20. நன்மையே செய்வோம்!

???????????
எப்போதும் நல்ல விஷயங்களையே செய்வோம். அதுவே எப்போதும் இன்பம் தரும். நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே, நம்மை பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும். தவறு செய்யும் போது, இதனால்தான் குற்றவுணர்ச்சி நம்மை துயரம் செய்கிறது. எனவே நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம் !

?✨?✨?✨?✨?✨?
???????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top