🌹அவனும் நானும் அனலும் பனியும்...14🌹

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

Author
Author
Joined
Aug 17, 2019
Messages
663
Reaction score
1,213
Points
93
Location
Erode
வணக்கம் நண்பர்களே!

சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி! இந்தப் பதிவுக்கும் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்...eiQNZBU76529.jpgஅவனும் நானும் அனலும் ..14

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்ட பின், மாறனின் மனதின் பாரம் வெகுவாக குறைந்தது போல் இருந்தது, திரும்ப தன் ஷீட்டுக்கு வந்து வேலையில் கவனம் செலுத்தினான், அலுவலக நேரம் முடிந்து அவரவர் வீட்டுக்கு கிளம்ப, பார்க்கிங் பகுதிக்கு வந்த மாறனை இடைமறித்தாள் சுபா, அவனிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என அருகில் இருந்த காபி ஷாப்புக்கு அழைத்தாள் அவள்.

என்ன விஷயம் சுபா? இங்கேயே சொல்லேன், எனக்கு லேட் ஆச்சு! என்றான் மாறன்.

சம்திங் பர்சனல், காபி ஷாப்புக்கு போய் பேசலாமே! என பவ்யமான குரலில் கேட்டாள் சுபா.

அருகில் இருந்த காபி ஷாப்புக்கு சென்றவர்கள் ஒரு டேபிளில் எதிரெதிரே அமர்ந்தனர்..

ம் !!இப்ப சொல்லு சுபா, என்ன விஷயம்?

தயக்கத்தோடு மாறனை பார்த்த சுபா, அவன் கண்களைப் பார்த்து பட்டென "ஐ லவ் யூ! என்றாள்..

வாட்! என அதிர்ந்த மாறன், ஆர் யூ கிரேசி? மேரேஜ் ஆன எங்கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ற? எனக் கோபத்தோடு கேட்டான்..


எஸ், ஐ யம் கிரேசி! ஐ யம் கிரேசி அபவுட் யூ! மேரீட்! சோ வாட்!.. அவளை ஆசைப்பட்டா கல்யாணம் பண்ணிட்ட? அவளை பழி வாங்க தானே கல்யாணம் பண்ணிக்கிட்டே.. அதுக்கு பேரு கல்யாணமா? பிடிக்காதவ கூட எதுக்கு வாழனும்? காட்டமாக கேட்டாள்..

உன்கிட்ட நான் என் மனைவியை பிடிக்கலைன்னு சொன்னேனா?

ஆமா நீ சொன்னே, நீ உன் பிரண்ட்ஸோட கேண்டீன்ல பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன், நான் உன்னை ரொம்ப நாளா லவ் பண்ணிட்டு இருந்தேன், உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம்னு இருந்தப்ப நீ திடீர்னு கல்யாணம் பண்ணிட்டு வந்துட்ட..எனக்கு என்ன பண்றதுன்னே புரியல... ஆனா இப்ப நீ அவளைப் பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு தெரிந்த பிறகு என்னால சும்மா இருக்க முடியாது, பிடிக்காத ரெண்டு பேர் சேர்ந்து இருந்து என்ன லாபம்? ஐ லவ் யூ மாறன்,உனக்காக நா என்ன வேணா பண்ணுவேன்! என்றாள் அழுத்தமாக..

நாங்க பேசியதை அரைகுறையாக கேட்டுட்டு,இப்படி முட்டாள்தனமா பேசறயே! எனக்கு உன்மேல எந்த காதலும் இல்லை, வரவும் வராது, பாரதி என் வைஃப், எங்களுக்குள்ள என்ன வேனா நடக்கும்! நீ அதுல தலையிடாதே! எப்படி வேணா வாழலாம் என்கிற கேரக்டர் நான் கிடையாது, என் வாழ்க்கையில ஒரு பொண்ணு தான், அது என்னோட மனைவிதான்! மைண்ட் இட்! அவ இருக்கிற வரைக்கும், என் வாழ்க்கையில அவ மட்டும் தான்! என்றான் மாறன் தீர்க்கமான குரலில்..

அவ இருந்தா தானே! என்றாள் சுபா குரூரமாக...

வாட் யூ மீன்? என அதிர்ச்சியோடு கேட்டான் மாறன்..

நீ அவளை கஷ்டப்படுத்த தானே கல்யாணம் பண்ணிக்கிட்ட, ஆனா அவ உன்னைக் கஷ்டபடுத்திட்டு இருக்கா.. உன்னால அவளை எதுவுமே பண்ண முடியாது, ஆனா நான் நினைச்சா அவளை என்ன வேணா பண்ண முடியும்! சோ அவளை ஆக்சிடென்ட் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன், கொஞ்ச நேரத்துல உன் போனுக்கு நல்ல நியூஸ் வரும் பாரேன்.. நீ பழிவாங்க வேண்டியவளை, நான் உன்னோடு சேர தடையாக இருக்கிறவளை, இல்லாமல் ஆக்க முடிவு பண்ணிட்டேன்!.. என்று பேசிக் கொண்டிருந்தவளை பட்டென்று அறைந்தான் மாறன்..

நீ என்ன முட்டாளா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் எந்த எல்லைக்கும் போவியா? பாரதிக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சு.. உன்னை கொன்று புதைத்து விடுவேன்! என விரல் நீட்டி அவளை எச்சரித்தவன், அவசரமாய் தன் அலைபேசியை எடுத்து பாரதியின் எண்ணுக்கு அழைத்தான்.. ஆனால் அது சுவிட்ச் ஆப் என வந்தது.. திரும்பத் திரும்ப அவன் முயற்சிக்க.. அப்போதும் சுவிட்ச் ஆப் என்றே வந்தது , டென்ஷனில் நெற்றியைத் தேய்த்துக் கொண்டவன்.. பின் அவசரமாக பாரதி வேலை செய்யும் மருத்துவமனையின் ரிசப்ஷனுக்கு போன் செய்தான்..

இரண்டு மூன்று முறை ரிங் போன பிறகே அங்கே ரிசப்ஷனில் இருந்த கேரளத்து பெண் போனை எடுத்தாள்.

டாக்டர் பாரதியோட ஹஸ்பண்ட் பேசறேன், அவங்க எங்க இருக்காங்க?அவங்கள கொஞ்சம் போன் பண்ண சொல்லுங்க! என அவன் கேட்க..

அவளோ,அரைகுறை தமிழில், "மேடத்தை விளிக்க முடியாது ஸார்! அவங்க ஆப்ரேஷன் தியேட்டரில் இருக்காங்க! ஆக்ஸிடென்ட் ,ரொம்ப சீரியஸ் கண்டிஷன், டிரிட்மெண்டிலா இருக்காங்க! எனச் சொன்னாள் அந்த கேரளத்துப் பைங்கிளி..

மாறனுக்கு சர்வமும் பதறியது, கோபமாய் சுபாவை நோக்கியவன், "உன்னை வந்து கவனிச்சிக்கிறேன்!" என பல்லைக் கடித்தபடி சொல்லிக் கொண்டு, தன் வண்டியை நோக்கி வேகமாகப் போனான்..

மாறன் சந்தோஷப்படுவான், அவளை ஏற்றுக் கொள்வான் என நினைத்து இருந்தவளுக்கு, மாறனின் அளவற்ற கோபம் பெரிய அதிர்ச்சியை தந்தது! அந்த அதீத கோபமே சொன்னது அவனின் ஆழமான காதலை.. ஏன் தனக்கு மட்டும் அந்தக் காதல் வாய்க்கவில்லை! நான் செய்தது தவறா? சரியா? என குழம்பி இருந்தவள் முன்னே வந்து அமர்ந்தான் பாஸ்கர், அவனும் அவளோடு வேலை செய்பவன் தான் சுபாவை ஒருதலையாய் காதலிப்பவனும் கூட..

என்ன சுபா இதெல்லாம்? நீ போய் இப்படி தரம் தாழ்ந்து நடக்கலாமா?, சத்தியமா உன்கிட்ட இதை நான் எதிர்பார்க்கலை, நான் இங்க பக்கத்து டேபிளில் தான் இருந்தேன், மாறன் உன்னை அடிக்கிற அளவுக்கு போயிட்டானே, நீ என் தேவதை! தேவதை இந்த மாதிரி தரம் தாழ்ந்து நடக்கிறது எனக்கு பிடிக்கல சுபா! இனி இந்த மாதிரி முட்டாள் தனமா எதுவும் செய்யாதே!, மாறனின் மனைவிக்கு எதுவும் ஆகக்கூடாது, உனக்கு அதனாலே எந்த ஒரு பழியும் வரவே கூடாது! தயவு செஞ்சு இப்ப நீ செஞ்ச தப்பை எப்படி சரி பண்ணனும்னு யோசி! என்றான் ஒரு குழந்தைக்கு சொல்லும் விதமாக..

ஏற்கனவே மாறனின் நிராகரிப்பில் குழப்பத்தில் இருந்தவள், பாஸ்கரின் முகம் பார்த்து, "ஆமா! பாஸ்கர், நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்! இப்பதான் அது எனக்கே புரியுது! ஆனா இப்ப என்ன பண்ண?.. என குற்ற உணர்வோடு சொன்னாள் சுபா!

தப்புனு தெரிஞ்சா அதைத்
திருத்திக்கணும், என்ன நடந்தாலும் சரி நான் உன் கூடவே இருக்கேன்,நீ விருப்பப்பட்டா… விருப்பப்படவில்லை என்றாலும் எப்பவும் உன் பின்னால நிப்பேன் !.. என்று உண்மையான அன்போடு சொன்னவனை நிமிர்ந்து பார்த்தாள் சுபா! அவன் வானளவு உயரமாய் தெரிய, தான் மண்ணுள் புதையும் அளவு சிறிதாக மாறியது போல் தோன்றியது!

இதுவல்லவோ காதல்!! பிடுங்கிக் கொள்வதோ, பழி வாங்குவதே காதல் இல்லை! விட்டுக் கொடுப்பதும்! விலகாமல் உடன் இருப்பதுமே காதல்! என்பது அந்த கணத்தில் புரிந்தது சுபாவிற்கு, தன் தவறை உணர்ந்து கொண்டவள், அதை சரிப்படுத்த தன் அலைபேசியைஎடுத்து அடுத்தடுத்து சில அழைப்புகளை செய்தாள்.

தடதடக்கும் இதயத்தோடு, படபடப்பாய் மருத்துவமனைக்குள் நுழைந்த மாறன் ரிசப்ஷன் சென்று பாரதி பற்றி விசாரிக்க...

"மேடம் ஆபரேஷன் முடிச்சு ரூமுக்கு போயிடாங்க! தேடூ ப்ளோர் போய் பாருங்க! என்றாள்

அருகே இருந்த லிப்டுக்குள் அவசரமாய் நுழைந்தவனின், அலைபேசி சிணுங்கியது.. ராகவ் தான் அழைத்திருந்தான்..

அட்டன் செய்தவன்," ராகவ்! இந்த சுபா பைத்தியம் என்னென்னவோ செஞ்சு வச்சுருச்சு! அவளால இப்ப பாரதி ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல்ல இருக்கா...ஆபரேஷன் பண்ணி இருக்காங்கன்னு ரிசப்சனில் சொல்றாங்க.. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா !... என மாறன் பதட்டத்தோடு பேச.. எதிர்முனையில் அவனை ஆறுதல் படுத்தினான் ராகவ், மேற்கொண்டு என்ன தேவையென்றாலும் உடனே தன்னை அழைக்குமாறு கூறி போனை வைத்தான் ராகவ்..


மூணாம் தளத்தில் லிஃப்ட் நின்றதும், கூட்டத்தில் இருந்து முதல் ஆளாக வெளியே வந்த மாறன், சுற்றுமுற்றும் பார்க்க ,அந்த தளத்தின் கடைக்கோடியில் நர்ஸ் ஒருவர் தென்பட வேகமாக அவரை நோக்கிப் போனான்..

அவளிடம் சென்று பாரதியைப் பற்றி விசாரிக்க... அவனுக்கு பதில் கூற முனைந்தவளை இடையிட்டது அலைபேசி! ஒன் மினிட் என அவனிடம் சொன்னவள்,அதை காதில் வைத்தாள்,ஓகே! ஓகே மேடம்! சரி மேடம்! என பேசிக் கொண்டிருக்க.. மாறனுக்கோ டென்ஷன் ஏறியது, நகத்தை கடித்துக் கொண்டே அவளைப் பார்த்து கொண்டு இருக்க.. போனை வைத்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து..

"சாரி சார்! ஒரு முக்கியமான கால்! என்றவள், மேடம் ரூம்ல இருக்காங்க! கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க! உள்ள டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க!.. என அவனை அமர வைத்தாள்!

அவளிடம் மேற்கொண்டு மாறன் பாரதியைப் பற்றி கேள்வி கேட்க முனைய ,அதற்குள் அவசரம் என்று இன்னொரு ரூமில் இருந்து வந்து அழைக்க, அந்த நர்ஸ் அங்கே சென்றாள்..

கிட்டத்தட்ட அரைமணிநேர காத்திருப்புக்கு பின்னே அந்த நர்ஸ் மாறனை ரூமுக்கு அழைத்துச் சென்றாள்..

கதவைத் திறந்தவன், அப்படியே கண்கள் நிலைகுத்தி நின்றான்! காலிலும்,தலையிலும் கட்டுப் போடப்பட்டு இருந்தாள் பாரதி!..

வேகமாய் அவள் அருகில் சென்றவன், அவள் தலைக்கட்டை தொட்டுப் பார்த்து, என்ன ஆச்சு வேதா?என்ன நடந்துச்சு?இப்ப பரவாயில்லையா? வலிக்குதா! என கவலையாய், கலவையாய் பல கேள்விகள் கேட்க..

பாரதியோ அரண்டு விழித்தாள், அவளின் பார்வையை பார்த்தவன், "என்னாச்சும்மா ரொம்ப வலிக்குதா? என அவள் தோளைத் தொடப்போக..

"யார் நீங்க அங்கிள்! அங்கெல்லாம் தொடக் கூடாது! பேட் டச்! என பயத்தோடு சொன்னாள் பாவை!

மாறன் இதயம் ஒருகணம் நின்று துடித்தது, " அங்கிளா?.. உனக்கு என்ன ஆச்சு வேதா! என்னை தெரியலையா? நான் மாறன், உன்னோட ஹஸ்பண்ட்,உன்னோட விக்ரமன்", என பரிதவிப்பாய் சொன்னான்..

"ஹஸ்பண்ட்னா என்ன அங்கிள்?' என குழந்தைத்தனமாக கேட்டாள் பாரதி..

ரொம்பவும் திடுக்கிட்ட மாறன் அருகிலிருந்த நர்சைப் பார்க்க..

"சாரி சார்! தலையில் அடிபட்ட அதிர்ச்சியில் அவங்களுக்கு பழசெல்லாம் மறந்துடுச்சு! கொஞ்ச நாள் போனால் எல்லாம் ஞாபகத்துக்கு வந்துடும்,சரிஆகிடும் என்றாள் ..

கொஞ்ச நாள் என்றால்.. எவ்வளவு நாளாகும் சிஸ்டர்?..

சில நாள் ஆகலாம்! சில மாசம் !வருஷம் கூட ஆகலாம் சார், அதை சரியா வரையறுத்துச் சொல்ல முடியாது, கேசுக்கு கேஸ் மாறுபட்டு இருக்கும்..

இப்படி சொன்னா எப்படி சிஸ்டர்! நான் பெரிய டாக்டர்கிட்ட பேசிக்கிறேன்! என்றவன் சொல்ல..

டாக்டர் இப்பதான் மேடத்தை பார்த்துட்டு போனாரு , மேடம் உங்களுக்கு மனைவின்னா எங்களுக்கு ரொம்ப பிடிச்ச டாக்டர், நல்ல தோழி சார்! அவங்க விஷயத்துல நாங்க தப்பா ஏதும் செய்ய மாட்டோம்! அவங்களுக்கு சீக்கிரமா சரியாகிடும்! நீங்க நம்பிக்கையோட இருங்க! என்றாள்..

மான் மாதிரி துள்ளி குதித்துக் கொண்டு, துறுதுறுவென, எப்போதும் தன்னிடம் வம்பு செய்து கொண்டிருக்கும் தன் மனைவி, இப்படி ஒரு குழந்தைபோல் இருப்பதை பார்த்து மிகுந்த வேதனை அடைந்தான் மாறன்.

இவங்களுக்கு எப்படி ஆக்சிடென்ட் ஆச்சு? ஏதாவது தெரியுமா? என அந்த நர்சிடம் கேட்டான்.l

அதெல்லாம் சரியா தெரியல சார்! நான் அவங்களை ஆபரேஷன் முடிந்த பிறகுதான் பார்த்தேன்! அவங்ககிட்ட விசாரிக்கலாம் என்றால் அவங்களுக்கு எதுவுமே தெரியல... மேடமா சுய நினைவுக்கு வந்து சொன்னால்தான் என்ன, எப்படி நடத்தது என்பது தெரியும்! என்றாள்

எப்படியோ சீக்கிரம் சரியாக வேண்டும் என நினைத்தவன்,இன்னும் ஹாஸ்பிடல்ல எத்தனை நாளைக்கு இருக்க வேண்டும் சிஸ்டர்! என அடுத்த கேள்வியைக் கேட்க..

சார், நீங்க இன்னைக்கே டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்,அவங்களை வீட்ல வச்சு கூட பார்த்துக்கலாம், அதுதான் அவங்க மனநிலைக்கு நல்லதும் கூட... நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க! நான் பார்மாலிடீஸ் எல்லாம் முடிச்சிட்டு வரேன்! என சொல்லிச் சொன்னாள்..

சொன்னது போலவே கொஞ்ச நேரம் கழித்து வந்தவள், சில மருந்து மாத்திரைகளை கொடுத்து, அவர்கள் செல்ல காரும் அரேஞ்ச் பண்ணிக் கொடுத்தாள்..

காரில் தன்னருகே மருண்டு விழித்தபடி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளின் தோளை சுற்றி ஆதரவாய் கை போட்டான் மாறன்!

திடுக்கிட்ட பாரதி," அங்கிள்! நீங்க ஹஸ்பண்ட்னா என்னன்னு சொல்லவே இல்லையே! என்றாள்..

ஹஸ்பண்ட்னா.. என திணறியவன் இன்னொரு அப்பா மாதிரி! எனச் சொன்னான்..

ஹை டாடி! எனக்கு டாடி ரொம்ப பிடிக்கும்! நீங்க தாடி வைத்த டாடியா? என அவன் குறுந்தாடியைப் பிடித்து இழுத்தபடி சொன்னாள் பாரதி..

அவள் தலையை தடவி கொடுத்தவன், தன் தோளில் சாய்த்துக் கொண்டான்! இவள் இப்படி ஆகிப் போக, நான் தானே காரணம் என வருத்தமாக இருந்தது அவனுக்கு ,சுபாவை அந்தக்கணமே கொல்லும் அளவுக்கு வேகம் பிறந்தது மனதோடு...


…..
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top