• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

🌹அவனும் நானும் அனலும் பனியும்..18🌹

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!

சற்று தாமதம் என்பதால் கொஞ்சம் நீண்ட பதிவு! சென்ற பதிவிற்கு தங்கள் விருப்பங்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி! இன்றைய பதிவுக்கும் உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்!


eiQNZBU76529.jpg

அவனும் நானும் அனலும் பனியும்...18


மலர்ந்திருந்த ரோஜா மலர்கள், வாடி, உலர்ந்து, உதிர்ந்து கிடந்தன அந்த ரோஜா வனத்தில், அரை மாதம் கடந்திருந்தது மாறன் பாரதியை வீட்டை விட்டு அனுப்பி, அவளை அனுப்பிவிட்டானே தவிர, அவன் அணுவளவும் சந்தோசமாக இல்லை, கோபத்தில், விரக்தியில்,அவளைப் பிரிந்தவனால், அவளின் நினைவுகளில் இருந்து பிரிந்து இருக்க முடியவில்லை, பறவையின் எச்சத்திலிருந்து விழுந்த விதை, மரமாக உருமாறுவதைப் போல, வேரோடு பிடுங்கி எறிய முயற்சித்தாலும், அவளின் நினைவுகள் விருட்சமாக மனதோடு வளர்ந்து கொண்டே இருந்தன..


பாரதி சென்ற மறுநாளே, அவளின் அப்பாவிற்கு போன் செய்து அவள் அங்குதான் சென்று இருக்கிறாளா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான் மாறன், அந்த வெள்ளந்தி மனிதர் வெள்ளைச்சாமிக்கு உள் விஷயம் எதுவும் தெரியாததால், அவனை மனமுருக வீட்டுக்கு அழைத்தார்," பாரதி சொன்னா மாப்பிள்ளை, உங்களுக்கு வேலை நிறைய இருக்கு, அதான் கூட வரலைன்னு, முடிஞ்ச அளவுக்கு வெரசா முடிச்சுட்டு நீங்களும் வந்து ரெண்டு நாள் தங்கிட்டு போங்க மாப்ள.. உடம்ப நல்லா பார்த்துக்கோங்க!". என அன்பாய் பேசினார் ,எந்த விஷயத்தையும் பாரதி அவர்களிடம் சொல்லவில்லை என்பதும், அவள் அங்குதான் பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதும் தெரிந்த பின், அவன் மனது சற்று நிம்மயானது..


நீலத்தை பிரிந்துவிட்ட நிறமற்ற வானமாய், சோகமாய் ஊஞ்சலில் அமர்ந்திருந்தனின் கைகள் அதன்போக்கில் அலைபேசியில் பழைய போட்டோக்களை பார்த்துக் கொண்டிருந்தது, ஒரு போட்டோவில் அவன் அழகாக சிரித்துக் கொண்டிருந்தான் ஆகாய வண்ண சட்டை அணிந்தபடி, அந்தச் சட்டையை பார்த்தவனுக்கு, பாரதியின் டைரியில் படித்த வரிகள் ஞாபகத்துக்கு வந்தன, நானும் தான் ப்ளூ சட்டை போட்டு இருக்கேன், ஆனா எனக்காக ப்ளூ கலர் சேலை கட்டிட்டு வர ஆள் இல்லையே! என ஏக்கப் பெருமூச்சு விட்டவன், அடுத்தடுத்த போட்டோக்களை பார்த்தான்,நான்காண்டுகள் பணி ஒப்பந்தப்படி அமெரிக்காவில் அவன் பணிபுரிந்தபோது, இரண்டு ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த இருபது நாள் விடுமுறையில் வந்திருந்தவன்,விடுமுறை முடிந்து அமெரிக்கா செல்ல கிளம்பிய போது ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட படங்கள் அவை, அதில் ஒரு போட்டோவில் அவன் பெற்றோர்களுக்கு பின்னிருந்த கூட்டத்தில் தெரிந்த ஒரு முகம் அவனைக் கவர்ந்தது, அதைக் கொஞ்சம் பெரிது படுத்தி பார்த்தான்,அது பாரதியின் முகமே தான், அவள் கூட அன்று ஆகாய வண்ண சேலை தான் அணிந்திருந்தாள், ஏதோ உள்ளே தோன்ற..மாறனின் மனம் பரபரத்தது, அவன் ப்ளூ சட்டை, அவளும் ப்ளூ சாரி! அவள் முகத்தை உற்றுப் பார்த்தவனுக்கு நன்கு தெரிந்தது அதில் தெரிவது காதலனை பிரிந்த ஏக்கம் தான் என்பது!.. ஒருவேளை.. ஒரு வேளையிலும் ஒருவேளை, அவள் காதலன் நானாக இருப்பேனோ?, அந்த எண்ணம் அவன் மனதின் கற்பனையோ அன்றி நிஜத்திலும் நிஜமோ அவனுக்குத் தெரியவில்லை,ஆனால் அந்த எண்ணம் மனதில் உதித்த அந்த ஒரு நொடியில் அவன் இறக்கைகள் இல்லாமலேயே வானத்தில் பறந்தான், இனிதான நிலநடுக்கம் மனதோடு நிகழ்ந்தது.. ஆனால் டைரியில் "யுவா!" என்று தானே, பாரதி அவள் காதலனின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தாள் , அதுவும் அவன் அவளுக்கு ஐஸ் வாங்கி தந்ததாகவும் எழுதி இருந்ததே! பள்ளிப்பருவத்திற்கு பின் , பெண் பார்க்கும் படலத்தில் தானே பாரதியை பார்த்தேன்! என அறிவு மண்டையில் கொட்ட..உள்ளே மலர்ந்த காதல் பூ, இதழ் மூடிக்கொள்ள தொடங்கியது..இருந்தும் அவசரமாய் நினைவுகளின் அடுக்குகளில் அவன் ஊருக்கு வந்திருந்தபோது நிகழ்ந்தவற்றை தேடினான் மாறன், அந்த நாட்களில் யாரோ அவனை அடிக்கடி உற்று நோக்குவது போன்ற எண்ணம் அவனுக்கு வந்ததுண்டு, ஒரு முறை கோயில் திருவிழாவில் பக்கத்துவீட்டு சிறுவர்களோடு சென்ற தருணம் நினைவு வந்தது, அந்த பசங்களுக்கு ஐஸ் வாங்கித் தரும்போது, ஒரு மிக்கி மவுஸ் முகமூடி அணிந்த பெண் ஒருத்தி, அவனுக்கு அருகில் வந்து நின்றாள், அவள் தயங்கி கொண்டு நிற்பதை பார்த்தவன்,அவளுக்கு ஐஸ் வாங்கி கொடுத்தான்,அவள் பணம் தர முயன்ற போது வேண்டாமென மறுத்தவன், ஐசை அவள் கையிலேயே வைத்திருந்த போது உண்ணுமாறு சைகை செய்தான்,அதற்கு அவள் தலையாட்டிக் கொண்டே சென்றாள்..சிறிது தூரம் சென்ற பின் முகமூடியை எடுத்து விட்டு ஐசை சாப்பிட்டாள், ஆனால் மாறனுக்கு அவளின் முதுகுப்புறம் மட்டுமே தெரிந்தது, முகம் தெளிவாக தெரியவில்லை,எப்போதும் பெண்களின் மேல் கவனம் வைக்காதவன், அவளைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை! அது பாரதியா? அப்பொழுதிலிருந்து என்னை அவள் காதலித்து இருக்கிறாளா? என ஆச்சர்யம் அடைந்தான், தன் கடந்த கால நினைவுகளை, அவள் டைரியில் படித்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால் மாறனுக்கு அத்தனை சந்தோஷம், படிகளில் தாவி ஓடியவன் , கீழே வந்து அவள் டைரியை தேடினான், அன்று அவன் விசிறியடித்த டைரி, கட்டிலுக்கு கீழே கிடந்தது, பாய்ந்து அதை எடுத்தவன்,பரபரப்பாய் படிக்கத் தொடங்கினான், முதல் பக்கத்திலிருந்து முழுதாக..


அவன் ஊரில் இருந்த இருபது நாட்களுக்கு மட்டுமே அந்த டைரி எழுதப்பட்டு இருந்தது!


டைரியை முழுதும் படித்ததில் அவளின் ஆழமான காதலை அவனால் நன்கு உணர முடிந்தது! தன்னை அவள் காதலித்து இருக்கிறாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை! அவளை உடனே பார்க்கவேண்டும் என ஒவ்வொரு செல்லும் அடம்பிடிக்க நேரத்தைப் பார்த்தான், நேரம் நள்ளிரவை நெருங்கி இருந்தது..


மாறன் மனம் முழுக்க பல கேள்விகள் அவள் எப்போது என்னை காதலிக்க தொடங்கினாள்?, ஏன் காதலித்தாள்?, ஏன் தன்னிடம் சொல்லவில்லை?, திருமணத்தின் பின்பு கூட அவளின் காதலை அவனுக்கு உணர்த்த இல்லையே ஏன்? என பல ஏன் என்ற கேள்விகள் உள்ளே ஓடினாலும்,அத்தனையும் தாண்டி மனதில் மகிழ்ச்சி வெள்ளம், அணுவுக்குள் புகுந்து, நரம்புக்குள் ஓடி,உடலெங்கும் பாய்ந்து, புதிதாய் அவனை பிறக்க வைத்திருந்தது, காதலிப்பதை விட காதலிக்கப்படுவது இத்தனை பரவசம் தருமா?, அந்த கனம் தந்த சுகங்களின் கணத்தை தாங்க முடியாமல் வானவெளியில் அவன் மனம் மிதக்க..அவன் கைகளில் சீறிப்பாய்ந்து கொண்டு இருந்தது அந்த கார், அந்த காதல் வாகனத்தில் அவள் தேவதையைப் பார்க்க ஆனத்தமாய் பயணித்துக் கொண்டு இருந்தான் அந்த காதலன்,கடந்து போன காலங்கள், பிரிந்திருந்த நாட்கள், புரிந்துகொள்ளாத பொழுதுகள், என அத்தனைக்கும் ஈடு கட்டி, அவளோடு அழகான வாழ்க்கை வாழ பேராசை பேயாட்டம் போட்டது அவன் நெஞ்சோடு..

..


புலர்ந்தும் புலராத அதிகாலையில், புள்ளினங்கள் பூபாலம் இசைக்க தொடங்கும் வேளையில், கிராமத்தில் நுழைந்தது அந்தக் கார், வீட்டின் வாசலில் காரை நிறுத்தி இறங்கியவன், காரின் கண்ணாடியை பார்த்து தலைகோதி, முகம் துடைத்து தன்னை சரி செய்து கொண்டான், ஏனோ இன்று தான் அவளை புதிதாய் பார்ப்பதைப் போல..


கதவருகே சென்றவன், சற்று தயங்கி நின்று, பின் மெலிதாக கதவை தட்டினான், கொஞ்ச நேரம் தட்டிய பிறகு மெல்லிய கொலுசு சத்தம் வீட்டுக்குள் இருந்து கேட்டது, மாறனின் கண்கள் பட படத்தது,பட்டாம் பூச்சிகள் நெஞ்சோடு சிறகடித்தது, அவன் எதிர்பார்த்ததை போல, அவன் தேவதை தான் கதவைத் திறந்தாள் , என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு அவள் பேரழகியாக தெரிந்தாள் அவன் கண்களுக்கு..


தன்னைப் பார்த்ததும் எந்த வித உணர்வுகளை பிரதிபலிக்கிறாள் என அவள் முகத்தை ஆவலாக பார்த்தவனுக்கு, அங்கே அவன் எதிர்பார்த்த எந்த ஒரு பாவனையும் தெரியவில்லை, கதவை திறந்து விட்டவள், அவள் பாட்டுக்கு அவள் அறைக்குச் சென்றாள், என்னைப்பார்த்ததும் ஒன்று சந்தோஷப்பட்டு இருக்க வேண்டும், இல்லை கோபப்பட்டு இருக்க வேண்டும் இப்படி எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் போகிறாளே!..என எண்ணம் உள்ளே ஓட, அவள் பின்னாலேயே போனான் மாறன்.


அறைக்குள் நுழைந்தவன், முதல் வேலையாக கதவைத் தாழிட.. அவனை விநோதமாய் பார்த்தாள் பாரதி, கதவை சாத்தியதும் ஓடி வந்தவன், அவளைத் தாவி அணைத்து முகமெங்கும் முத்தமிட்டான், "வெரி வெரி சாரி, மை டியர் பொண்டாட்டி! ப்ளீஸ், என்னை மன்னிச்சிடு! என பிதற்றிக் கொண்டு அவளை வளைத்தவனை வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டாள் பாரதி..


"இங்க பாருங்க? ஹக் பண்ற வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க! இப்ப எதுக்கு இங்க வந்தீங்க? ஏன் இந்த வீட்டில் இருந்தும் என்னை துரத்தி விடவா? அது உங்களால முடியாது? இது என் வீடு!" ஆவேசமாய் சொன்னாள் பாரதி.


"கோவிச்சிக்காத பொண்டாட்டி! அதான் சாரி சொல்லிட்டேன்ல.. தப்புதான்.. நான் உன்கிட்ட என் காதலை சொல்லலாம் என இருந்தப்ப.. உன் டைரியை அரைகுறையாக படிச்சிட்டு,நீ யாரையோ லவ் பண்றேன்னு தப்பா புரிஞ்சுகிட்டு, கோபத்துல முட்டாள்தனமா நடந்துகிட்டேன், சத்தியமா நீ கல்யாணத்துக்கு முன்னால என்னை போய் காதலித்து இருப்பேன்னு நான் கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை, என்னால் இன்னும் இதை நம்பமுடியவில்லை நீ வேணா கொஞ்சம் கிள்ளி வையேன், வலிக்குதா? இது கனவா? நிஜமா? என்று பார்த்துவிடலாம்!" என அவள் முன் கை நீட்டியவன், பின் பூரிப்புடன்," என்னை நீ லவ் பண்றது தெரிஞ்ச பின்னே.. எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?

வாழ்க்கையில இதுக்குமேல எதுவுமே வேண்டாம், இந்த நொடி இப்படியே செத்தாக்கூட சம்மதம் தான்னு தோணுச்சு, அவ்வளவு சந்தோஷம்! என்னைக் காதலிச்ச உன்னைப் போய் நான் தப்பா புரிஞ்சுகிட்டு கண்டபடி பேசிட்டேனே, அதுக்கு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டால் கூட தப்பில்லை! என அவன் உணர்ச்சிப் பூர்வமாக பேசிக்கொண்டிருந்தபோது..


கையைக் கட்டிக் கொண்டு அவன் முன்னால் வந்து நின்ற பாரதி," அப்ப விழுங்க!" என்றாள் அவனை தீர்க்கமாய் பார்த்தபடி..


"என்னது?"என்பதுபோல் மாறன் அவளை புரியாமல் பார்க்க..


"அதான் கால்ல விழுந்தா கூட தப்பு இல்லைன்னு சொன்னீங்களே! வாங்க! வந்து கால்ல விழுங்க! "என தான் அணிந்திருந்த ஆடையை கொஞ்சம் ஏற்றி அவள் கால் பாதங்களை கண் ஜாடையில் காட்டினாள் அவள்..


அவள் கண்களையும், கால் பாதங்களையும் மாறி மாறி பார்த்தவன், பின் புன்னகையோடு சாஷ்டாங்கமாக ஆலயத்தில் விழுபவன் போல,அவள் காலடியில் விழுந்தான், விழுந்தவன் தலையை மட்டும் கொஞ்சம் தூக்கி, " என்னை மன்னிச்சிடு பொண்டாட்டி! இனிமேல் நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன்!" என கெஞ்சலாக கேட்டான்..


அதற்குமேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாமல் பாரதியின் உதட்டோரம் புன்னகை விரியப் பார்க்க,அதையும் மீறி சற்று வீரப்பாக முகத்தை வைத்துக் கொண்டு," இந்த முறை மன்னிச்சு விடுறேன்! இனி தேவையில்லாம கோபப்பட்டு, ஓவரா சீன் போட்டா கால்ல விழ சொல்லமாட்டேன், கழுத்தை நெரித்து விடுவேன்! என கை நீட்டி எச்சரித்தாள்.


வேகமாக எழுந்தவன்," உனக்கு கழுத்தை நெரிக்கனும் அவ்வளவுதானே? இந்தா!" என அவள் கைகளை எடுத்து தன் கழுத்து வளைவில் வைத்தான் ,ஆனா ஒரு கண்டிசன், "நீ என் கழுத்தை நெரிப்பதற்கு முன்னாடி!.. என சொல்லி ஒரு நொடி இடைவெளி விட்டவன்,பின் மந்தகாச புன்னகையோடு அவள் கண்களை கூர்ந்து பார்த்து, "ஒரே ஒரு முத்தம்! ஒரே ஒரு முத்தம் இங்க கொடு.. என தன் உதட்டை தொட்டுக் காட்டினான், நான் செத்து சொர்க்கத்தைப் பார்க்கறதுக்கு பதிலா, சொர்க்கத்தை பார்த்துட்டு செத்துடுறேன்!" எனச் சொல்லி கண்ணடித்தான்..


"யூ இடியட்! லூசு! என்ன பேச்சு பேசுற நீ? உன்னை!".. என சொன்னவள், அவன் கழுத்தில் இருந்த கைகளை மாலை போல் கோர்த்து தோள்களை சுற்றி போட.. அவனோ காற்றுகூட இடையில் புகாதவாறு இழுத்து அணைத்தான் தன் காதலியை..


அவளின் கழுத்து வளைவில் முத்தமிட்டவன், காதோடு தன் காதலைச் சொல்ல.. ஏனோ அந்நேரம் பாரதிக்கு உதட்டோரம் புன்னகை விரிவதற்கு பதிலாக, கண்ணோரம் கண்ணீர் கசிந்தது ,அது அளவில்லாத ஆனந்தத்தில் அழகான வெளிப்பாடு..


அவன் நெஞ்சோடு சாய்ந்தவள்,லேசாக எம்பி அவன் கன்னத்தில் முத்தம் வைத்தாள்..


"வாவ்! வாவ்! என் பொண்டாட்டி, என் காதலி தர்ற முதல் முத்தம், ரொம்ப சூப்பரா இருக்கு!" என அவள் முத்தமிட்ட இடத்தை கைகளால் தடவிக்கொண்டே சொன்னாள் மாறன்..


" இது முதல் முத்தமெல்லாம் இல்லை! நாற்பத்தி நாலாவது முத்தம்! என்றாள் பாரதி, சற்றும் அலட்டல் இல்லாமல்..


"ஏய் என்னடி சொல்ற நீ?"..


"அதெல்லாம் நீங்க தூங்கும் போது உங்களுக்கு தெரியாம நான் நிறைய முத்தம் கொடுத்து இருக்கேன்!" .. என்றாள் பார்வையை எங்கோ பதித்தபடி..


"அடிப்பாவி! எத்தனை முத்தம், நான் முழிச்சு இருக்கும் போது தந்து இருக்கலாமே?" என ஏக்கமாய் கேட்டான் மாறன், நாற்பத்தி நாலு முத்தங்களை அனுபவிக்காத சோகம் அவனுக்கு..


"எதுக்கு? என்னை அப்பவே வீட்டை விட்டு வெளிய அனுப்பவா? சிரித்துக்கொண்டே கேட்டாள் பாரதி..


"சும்மா சும்மா வீட்டை விட்டு அனுப்பினேன் என சொல்லாத வேதா! நான் மட்டும் என்ன சந்தோஷமாகவா இருந்தேன்? நீ இல்லாம எனக்கு வாழவே தெரியல தெரியுமா? அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு!" என்றவனை அப்போதுதான் நன்றாக கவனித்தாள் பாரதி, உடல் மெலிந்து, கன்னங்கள் ஒடுங்கி மழிக்கப்படாத தாடியோடு பார்க்கவே கொஞ்சம் பாவமாய் தான் தெரிந்தான் அவன்.


அவன் தலையை கோதிக் கொடுத்தவள், " இவ்வளவு சோகமெல்லாம் தேவையே இல்லை.. ஈகோவை தள்ளிவைத்துவிட்டு எந்த பிரச்சனையையும் மனசு விட்டுப் பேசினாலே சரியாகிவிடும், நீங்க தப்பா பேசும்போது எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு!" என்று சொன்னாள் பாரதி..


"சாரிமா ரொம்ப சாரி!, என்னோட அவசர புத்தி அப்படி பேச வச்சிடுச்சு.. இனிமே இப்படி எப்பவுமே நடக்காது! நீ சொன்ன மாதிரி நாம பேச வேண்டியது நிறைய இருக்கு.. ஆனா அதுக்கு முன்னாடி!.." என இடைவெளி விட்டு நிறுத்தியவன் அவளை ஓர விழிப் பார்வை பார்த்தான்..


"என்ன? என்ன வேணும் உங்களுக்கு? ஐயோ! பசிக்குதா? சாரி நான் கோபத்துல நீங்க சாப்பிட்டீங்களா இல்லையா என்று கூட கேட்கல.. நான் போய் ஏதாச்சும் சாப்பிட கொண்டு வரேன்!" என சமையலறை நோக்கி நகரப் போனவளை நிறுத்தியவன்..


"ஏய் லூசு! எனக்கு பசிதான்! ஆனா என் சாப்பாடு எனக்கு முன்னாடி தான் இருக்கு!" என அவளை கை காட்டியவன், நாற்பத்தி நாலு முத்தம்ன்னு சொன்னியே.. அதை குறைந்தபட்சம் நூறா, அதிகபட்சம் ஆயிரமா கொடுத்தினா என் பசி தீர்ந்து விடும்! என சிரித்துக்கொண்டே அவளை நெருங்கினான் மாறன்..


"என்னது ஆயிரமா? அய்யோ! சாமி! ஆள விடுங்க என்னால முடியாதுப்பா!" என அவனிடம் சிக்காமல் அவள் ஓடினாள்.


"ஓய் டாக்டரம்மா! நீ தியரியா படிச்சதெல்லாம், மாமா பிராக்டிகலா சொல்லித்தரேன், கொஞ்சம் நில்லுமா..என் செல்லம்மா!" என அவளை துரத்திப் பிடித்தவன், அவள் திமிர திமிர கையில் ஏந்திக் கொண்டான்.


கட்டிலில் மேல் அவளை கிடத்தியவன், அவள் காதருகில் குனிய..


காதலாய் கசிந்துருகி, புருவம் உயர்த்தி என்னவென அவள் கேட்க..


"செல்லம்மா.. நீ கொஞ்சம் குண்டம்மாவ இருக்க.., ஆனா பரவாயில்ல.. நீ வாட்டர் பெட் மாதிரி இருப்பதால், எனக்கு பெட்டே தேவையில்லை!".. என அவன் குறும்பாய் சொல்ல.. அருகில் இருந்த தலையணையை எடுத்து அவனை சரமாரியாக அடிக்கத் தொடங்கினாள் பாரதி


அடித்துக்கொண்டு இருந்த கைகளை தடுத்துப் பிடித்தவன், அடிக்கிற கை தான் அனைக்கும்! என சொல்லியபடி அவள் இதழ் நோக்கி குனிய.. அவளின் முத்துக்கண்களை தாங்கிய சிப்பி இமைகள் தானாக மூடிக் கொண்டன..



பனி பொழியும்!!..
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
Very good,terror piece மாதிரி build pannittu ippo seiyra velai enna sir???? Saastaangama கால்ல விழுந்தத பார்த்தா நீ நல்ல கணவன் ஆக தகுதி பெற்று விட்டாய்!!!
அப்பாடி இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்ருக்கீங்க பாஸ்!!!இப்ப தான் ரொமான்ஸ் ஆச்சு அதுக்குள்ள தொடரும் போட்டாச்சு,இனி எப்போ தொடரும்?????
Waiting sis!!!!
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
Very good,terror piece மாதிரி build pannittu ippo seiyra velai enna sir???? Saastaangama கால்ல விழுந்தத பார்த்தா நீ நல்ல கணவன் ஆக தகுதி பெற்று விட்டாய்!!!
அப்பாடி இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்ருக்கீங்க பாஸ்!!!இப்ப தான் ரொமான்ஸ் ஆச்சு அதுக்குள்ள தொடரும் போட்டாச்சு,இனி எப்போ தொடரும்?????
Waiting sis!!!!
Thanks sister.. coming quickly
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top