• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

🌹 அவனும் நானும் அனலும் பனியும்..17🌹

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!

முந்தைய பதிவுக்கு விருப்பங்கள் கருத்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றியோ நன்றி! இந்த பதிவுக்கு உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன்!

eiQNZBU76529.jpg



அவனும் நானும் அனலும் பனியும்...17


அந்த ஞாயிறு காலைப் பொழுது மிக அழகாக விடிந்தது மாறனுக்கு.. அன்று மாலை அவன் காதலி அவன் கையோடு… நினைப்பே நெஞ்செல்லாம் தித்தித்தது! அவளாக வரும்வரை காத்திருக்க முடியாதவன், அவளைக் கூட்டி வர கிளம்பிக் கொண்டிருந்தான்.


கண்ணாடி முன்னே நின்று, கலர் கலராய் சட்டைகளை மாற்றி மாற்றிப் போட்டுக் கொண்டிருந்தான் மாறன், அவனின் அலப்பறை தாங்க முடியாமல் கண்ணாடி கூட முகம் திருப்ப முயன்றது!


"இது ஓகேவா மை டியர் தாதா டாக்டர்!" என கண்ணாடியைப் பார்த்துக் கேட்டான் மாறன்..


"யாரு நான் தாதாவா?" என பதிலுக்கு கண்ணாடியிலிருந்து அவளின் காதலி கேட்பது போல் தோன்றியது அவனுக்கு..


"பெண்ணே நீ தாதா இல்லையா?உங்க ஹாஸ்பிடல் ரிசப்ஷனிஸ்ட் விபத்தில் அடிபட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நீ ஆபரேஷன் பண்ணிட்டு இருந்தேன்னு சொன்னதை நான் தப்பா புரிஞ்சுகிட்டு உனக்குத்தான் விபத்துன்னு நினைச்சு வந்தா... நான் ராகவ்கிட்ட போன் பேசிட்டு இருந்த, அதே லிப்டுக்குள் இருந்த நீ அத்தனையும் கேட்டுக்கிட்டு, லிப்டை விட்டு நான் இறங்கி வருவதற்குள் எவ்வளவு பெரிய மாஸ்டர் பிளான்போட்டு ,அதை கிளவரா செயல்படுத்தி, என்னை ஈசியா ஏமாத்தி இருக்கேனா.. நீ எப்படிபட்ட தில்லாலங்கடி… சோ உன்னை நான் தாதா டாக்டர் அப்படின்னு தான் இனி கூப்பிடப் போறேன்!.ஓகேவா?..


"தாதா , ரவுடி என நீ எப்படி வேணா கூப்பிடு மாமா!".. என பாரதி வெட்கப்பட்டுக்கொண்டே சொல்வது போன்ற பிம்பம் கண்ணாடியில் தெரிய, மாறன் அவள் வெட்கத்தை ரசித்து நின்று கொண்டிருந்தான்..


உல்லாசமான மனநிலையோடு , "என்னவளே! அடி என்னவளே! என் இதயத்தை திருடி விட்டாய்! என்ற பாட்டை ஹம் செய்தபடி, காரை ஸ்டார்ட் செய்தான் மாறன்.. ஆனால் அதுவோ கிளம்ப மாட்டேன் என்று முனகிச் சொன்னது.


"இதப்பாரு! வாங்கியதிலிருந்து உன்னை நா நல்லா கவனிக்கவில்லை தான்! ஆனா அதற்காக பழி வாங்க இது நேரமில்லை பாஸ்! ப்ளீஸ் ஸ்டார்ட் ஆகிடு, நானே இப்போதான் புத்தி வந்து என் பொண்டாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்! ப்ளீஸ்டா ஸ்டார்ட்!"... என அவன் கெஞ்சியும், அது ஸ்டார்ட் ஆகாமல் நின்றது,என்ன பிரச்சனை என பார்க்கலாம் என்று தனது டூல் கிட் பாக்ஸை எடுத்து வர உள்ளே போனான்..


அது பாரதியின் அறையில் இருந்த பீரோவின் மேல் இருந்தது, ஸ்டூல் போட்டு அதை அவன் எடுக்க, அவன் இழுத்த இழுப்பில் பீரோ மேல் இருந்த சூட்கேஸ் கீழே விழுந்தது, விழுந்த வேகத்தில் அது இரண்டாக பிளந்து உள்ளே இருந்தவை எல்லாம் சிதறின..


"சிட்!"எனச் சலித்து கொண்டவன், கீழே இறங்கி, விழுந்தவற்றை ஒழுங்குபடுத்தி அடுக்கினான், அந்த சூட்கேஸ் பாரதியுடையது, பாரதி படிப்பு தொடர்பான சர்டிபிகேட்ஸ், முக்கியமான பைல்கள் எல்லாம் அதில் இருந்தன,அடுக்கிக் கொண்டு இருந்தவன் கையில்,பாரதியின் டைரி ஒன்று தட்டுப்பட்டது, அதை கையில் தடவிக் கொடுத்தவன், வருடத்தைப் பார்க்க அது இரண்டு வருடங்களுக்கு முன்னால் எழுதியதாய் இருந்தது!

" நாம பாரின்ல பாசை புரியாமல், நல்ல சோறு கிடைக்காம, சுத்திட்டு இருந்தப்ப இந்த தாதா.. இங்க ரசிச்சு ருசிச்சு வாழ்ந்து இருக்கா போல,டைரி எல்லாம் எழுதி இருக்கா.. படிக்கலாமா?" என யோசித்தவன், அது அநாகரிகம் எனக் கருதி மூடினான், ஆனால் ஏதோ ஒரு ஆவல் உந்த..நடுவே ஒரு பக்கத்தை பிரித்தான்..


"யுவா! நீ இன்னிக்கு முதன்முதலா எனக்கு ஐஸ் வாங்கி கொடுத்த.. என்னோட காதலன் கையால எனக்கு கிடைச்ச முதல் பொருள்.. வாழ்க்கை முழுக்க அதை உருகாமல் பத்திரமா வச்சுக்க வேணும்னு ஆசையா இருந்துச்சு.. ஆனா என்ன பண்ண உன்னைப் பார்த்துட்டே இருந்தப்ப.. அது உருக ஆரம்பிச்சிருச்சு! நீ வேற சாப்பிடுன்னு சொன்னாயா வேற வழி இல்லாம சாப்பிட்டேன் பா... ஆனா அந்த குச்சியை நான் இன்னும் பத்திரமா வச்சிருக்கேனே! நீ ஐஸ் சாப்பிடும் போது, அது உன் உதட்டில் இருந்து வழிஞ்சது, ஏனோ அதை டேஸ்ட் பண்ணி பார்க்கணும்னு எனக்கு அப்போ ஆசை வந்துச்சு.. விசித்திரமான ஆசை தான்.. ஆனால் அந்த திருவிழா கூட்டத்தில், அத்தனை பேருக்கு மத்தியில், என்னால் அதை செய்ய முடியுமா? வாய்ப்பே இல்லை! ஆனா கனவுல?….!! என ஒரு
கேள்விக்குறியோடு முடிந்திருந்ததுஅந்தப்பக்கம்

எழுத்துக்களால் மனதில் சம்மட்டி கொண்டு அடிக்க முடியுமா? ஆனால் முடிந்திருந்தது!.. அந்தப் பக்கத்தை வாசித்தவன் நெஞ்சோடு நரம்புகள் அறுபட்ட ரணங்களை கொண்டான் மாறன்! கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடியது!.. என் காதலியின் காதலுக்கு முழுமுதல் சொந்தக்காரன் நானில்லையா? பாரதியின் வாழ்வில் எனக்கு முன்னால் இன்னொருவனா?.. மனதில் பாரம் ஏறிக்கொள்ள வலியோடு இன்னொரு பக்கத்தை புரட்டினான்.


"யுவா! இன்னிக்கு நீ ஊருக்கு போற.. உன்னை வழியனுப்ப வந்த எனக்கு, உன் கூடவே வந்து விடணும் போல இருந்துச்சு, உனக்கு பிடிக்கும் என சாரி கட்டிட்டு வந்திருந்ததேன்,
அன்னைக்கு நீயும் நானும் ஒரே மாதிரி ஸ்கை ப்ளூ கலர் டிரஸ் தான், ரெண்டு பேரும் சொல்லிட்டு செய்யல.. ஆனா அதுவே தானா அமைந்து இருந்தது நமக்கு!.. நீ கிளம்பும்போது டாட்டா காட்டிட்டு, ஒரு பறக்கும் முத்தம் கொடுத்து விட்டு போனாயே, அந்தக் கூட்டத்துல அந்தக் முத்தத்தை கரெக்டா கேட்ச் பண்ண நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?. மறுபடியும் உன்னை எப்பப் பார்ப்பேன்னு இருக்குது! சீக்கிரம் வந்து விடுவாய் தானே?".. என முடிந்திருந்தது அந்தப் பக்கம்.


கையிலிருந்த டைரியை விசிறி அடித்தான் மாறன், அதற்குமேல் அதைப் படிக்கும் தைரியம் அவனுக்கில்லை, அப்படியே தரையில் சரிந்து அமர்ந்து கொண்டான்,சொற்களுக்கு அப்பாற்பட்ட சோகம் அவன் கண்களில்.. எத்தனை எதிர்பார்ப்புகளோடு இந்தக் காலைப் பொழுது விடிந்திருந்தது, சூரியன் நடு வானுக்கு வரும் முன்னே,அவன் ஆசைகள் எல்லாம் அஸ்தமனமாகி விட்டது!..


பாரதியிடம் இருந்து, இப்படி ஒரு முன் காதலை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை, அவளைப் பிடிக்கவில்லை என அவன் ஆயிரம் முறை சொல்லி இருக்கிறான், ஆனால் அவள் எதையுமே வெளிப்படையாய் சொன்னதே இல்லை, அடுத்து என்ன செய்வது என்பது அவனுக்கு கொஞ்சமும் விளங்கவில்லை, மனது மரத்துப் போய் இருக்க, மூளை வேலை நிறுத்தம் செய்தது!


இதைப் படித்த பிறகு, அவள் உருகி உருகி ஒருவனை காதலிக்கிறாள் என்பது தெரிந்த பிறகு, அவளோடு மனமொன்றி வாழ முடியுமா? நிச்சயமாய் முடியாது! பாரதியின் மேல் கோபம் கோபமாய் வந்தது மாறனுக்கு, இந்தளவுக்கு யாரையோ காதலித்தவள், தன்னிடம் முன்பே சொல்லி இருந்தால் இந்த உயிர் பிழியும் வலி தனக்கு இருந்திருக்காதே! ஏன் சொல்லாமல் விட்டாள்? பழிவாங்க வேண்டுமென பைத்தியக்காரத்தனமாய், அவளிடம் திருமணத்திற்கு முன் எதுவும் பேசிக்கொள்ளாமல், திருமணமான பின்னும், மனம் விட்டு பேசாமல் வெளிப்படையாய் இருக்காமல் போய், இப்படி இருவர் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி போனதே!

அவள் மனதில் இன்னொருவன் இருந்திருக்கிறான், இன்னும் அவன் தான் இருக்கின்றானா என்பதும் தெரியாது! அவளோட இனி தான் வாழ்வது நிச்சயம் இயலாத காரியம், வேண்டாம்.. அவளுக்கு நான் வேண்டாம்.. எனக்குத்தான் ஆசைப்பட்டபடி வாழ கிடைக்கவில்லை, அவளாவது ஆசைப்பட்டவனோடு வாழட்டும்.. விட்டுவிடு.. விலகி விடு... மனதின் குரல் சப்தம் செய்ய... வெகு நேரம் சிந்தித்திருந்தவன்,சிவந்த விழிகளைத் துடைத்துக் கொண்டு கணினி முன் அமர்ந்தான்..


"வந்தேன்! வந்தேன்! மீண்டும் நானே வந்தேன்!" என ராகமாய் இழுத்து பாடிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் பாரதி..


"என்ன விக்ரமா! நீ என்னைக் கூட்டிட்டு வர வருவாய் என
நெனச்சேன், இப்படி ஏமாத்திட்டியே! எங்க இருக்க நீ? என்ன பண்ற?" என உள்ளே வந்து மாறனை தேடினாள் பாரதி..


அந்த வீடு மிக அமைதியாய் இருந்தது, புயலுக்கு பின் வரும் அமைதி போல, அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக விக்ரமா! விக்ரமா! என சத்தமிட்டபடி சுற்றினாள் பாரதி! அவன் அறையை திறக்க முயல அது உள்ளே தாளிடப்பட்டு இருந்தது புரிந்தது!.


"விக்ரமா! கதவை திற.. உள்ள என்ன பண்ணிட்டு இருக்க நீ? ஓபன் த டோர்! ஒரு வாரமா உன் சிடுமூஞ்சியைப் பார்க்காம ஒரே போர் தெரியுமா? எனக்கு யார் கூட சண்டை போடறதுன்னே தெரியல..திற..திற.. உன்கிட்ட நெறைய பேசணும், போன்ல எனக்கு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொன்னியே என்னது?" எனக் கேட்டவளின் காலடியில் வந்து விழுந்தது ஒரு கவர்.. மாறன் தான் கதவின் இடுக்கில் அதை வீசினான்.. சாத்தப்பட்ட கதவை வினோதமாய் பார்த்தவள், அதைக் குனிந்து எடுத்து படிக்க தொடங்கினாள்.


"உன் முன் காதலை, உன் டைரி மூலம் அறிந்து கொண்டேன்! உன் மனதில் இன்னொருவர் இருக்கும் போது உன்னோடு நான் வாழ்வது முற்றிலும் அர்த்தமற்றது!அர்த்தமில்லா வாழ்க்கை வாழ எனக்கு விருப்பமில்லை! உன்னிடம் பேசவோ, உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை, அதனால் முற்றிலும் விலகி விடுகிறேன் உன் வாழ்வில் இருந்து, இத்தோடு மியூச்சுவல் டைவர்ஸ்க்கு என் கையெழுத்துடன் கூடிய பத்திரம் இருக்கிறது, இனி இந்த மாறன் உன் வாழ்வில் இல்லை! உனக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொள்!".. என எழுதியிருந்தது,கீழே எப்போதும் உன்னால் வஞ்சிக்கப்பட்டு கொண்டே இருக்கும் மாறன் என போடப்பட்டு கையெழுத்திட்டிருந்தான்..


"முட்டாள்!" என சத்தமாக கத்தியவள், கதவை தட்டி,"விக்ரமா! இது என்ன முட்டாள்தனம்? என் டைரியை அரைகுறையாக படித்துவிட்டு இப்படி லூசுத்தனமா உளறாதே! வெளிய வா என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்றேன், உன்கிட்ட நானே இத பத்தி சொல்ல நினைச்சேன், ஆனா அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை, உன் முகத்தைப் பார்த்து எல்லாத்தையும் தெளிவா சொல்லி விடுகிறேன்! இனிமே நமக்குள் எந்த ஒளிவு மறைவும் வேண்டாம்! வெளிய வா! என அவள் கத்த...


பட்டென கதவைத்திறந்த மாறன், "போதும், இதுவரைக்கும் நான் உன்னால் பட்டதெல்லாம் போதும்!, ஏற்கனவே ஒருத்தர மனசால நேசித்த உன்னை என் வாழ்க்கையில ஏத்துக்க முடியாது, உனக்கு செகண்ட் சாய்சா நான் இருக்க விரும்பல, என் கண் முன்னே நின்னு என்னை கொலைகாரனா மாத்த நினைக்காதே! இத்தனை நாள்ல உன்னோட பழைய காதலை பத்தி சொல்ல உனக்கு ஒரு வாய்ப்பு கூடவா கிடைக்கல... நீ நல்லா நடிக்கிற.. ஆனா அந்த நடிப்பை பார்த்து நான் இதுவரை ஏமாந்தது போதும், நீ இப்பவே கிளம்பி போய் உனக்கு பிடித்தவன் கூட வாழ்க்கை அமைச்சுக்க.. அவன்கிட்டயாவது
நேர்மையா, உண்மையாயிரு, கெட்அவுட்!" என வாசலை காட்டினான்.


கோபத்துல உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க! அமிலத்தை விட வீரியம் மிக்கது வார்த்தைகள்! அதைப் பார்த்து கொட்டுங்க! யோசிக்காம எதையும் பேசாதீங்க! கொஞ்சம் பொறுமையா இருங்க!..


உண்மையைச் சொல், நீ கல்யாணத்துக்கு முன்னால காதலித்தாயா? இல்லையா?


ஆமா காதலிச்சேன், ஆனா என்ன ஆச்சுன்னா.. என சொல்ல வந்தவளை இடைமறித்தவன்,


"எதுக்கு சொல்ற? இனி சொல்லி என்ன மாறப் போகுது! உன் பழைய காதல் கதையைக் கேட்டு கை தட்டவோ.. இல்லை எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தி உன்னை அவனோடு சேர்த்து வைக்கவோ நான் மகாத்மா கிடையாது, நான் ரொம்ப ரொம்ப சராசரி மனுஷன், என்னால அது முடியாது! நீ போ! வெளியே போ! உன் வாழ்க்கையை, உன் இஷ்டப்படி அமைச்சுக்க.. தயவு செஞ்சு இனிமே என் முன்னால வரவே வராதே! என கோபமாய் அவள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி, கதவை சாத்தினான் மாறன், அவளிடம் அத்தனை முரட்டுத்தனமாய் நடக்க அவன் நினைக்கவில்லை தான்! ஆனால் அவனுக்குள் இருந்த கோபம் அவனை அறியாமல் முழுதாக வெளிப்பட்டு விட்டது!..


சிறிது நேரம் கழித்து மொட்டை மாடியில் ஏறி வீதியை பார்த்தான் மாறன், தூரத்தில் பாரதி செல்வது தெரிந்தது, அவன் காதலை சொல்ல அமைத்து வைத்த ரோஜாவனம், அவனைப் பார்த்து கேலியாக சிரித்தது
...
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
என்னதான் நடக்குது??? மாறா பொறுமையே இல்லையா??? காதல் வந்தாலும் குதிக்குற கோவம் வந்தாலும் குதிக்குற????
பாரதி????? எப்பவும் எங்களை ஒரு பதட்டத்திலேயே வைக்குறிங்க????
 




Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
என்னதான் நடக்குது??? மாறா பொறுமையே இல்லையா??? காதல் வந்தாலும் குதிக்குற கோவம் வந்தாலும் குதிக்குற????
பாரதி????? எப்பவும் எங்களை ஒரு பதட்டத்திலேயே வைக்குறிங்க????
:rolleyes: :rolleyes: :unsure::unsure:😍😍:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top