• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 02💋

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
ஹாய் டியர்ஸ்

இதோ அத்தியாயம் இரண்டு
20210815_113000.jpg

"நீங்க சொன்னதாலதான் டிரஸ் கோடு மாத்தினேன் சார். எங்கிட்ட சொல்லிருந்த நானே இழுத்து விட்டு இருப்பேன்!"என்று அவளுரைக்க.


"உண்மைதான், அதுக்காக இப்டி டிரஸ் பண்ணனுமா? ட்ரன்டிங்கா ஹிப் தெரியாம டிரஸ் பண்ணுங்க பியானா"


சார் கூறியதை கேட்டு பியானாவிற்கு குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது.

அநாகரிகமான பெண் என்று சார் கூறுவதாக எண்ணிக்கொண்டாள். இதுவரை பியானாவை இப்படி யாரும் பேசியது இல்லை. அமைதியான நாகரிகமரிந்த பெண் என்று யாவரும் அறிந்ததொன்றே, இன்று இவள் குற்றம் இழைத்தது போல் இவன் கேட்கும் கேள்விகளுக்கு அவளிடம் பதிலில்லை.


"இல்ல சார் வேணும்னு ஹிப்ப காட்டல சார் சாரி" என்று பியானாவின் கண்கள் நீரால் நிரம்பின.


"யார்கிட்டவும் சாரி கேட்டு பழக்கம் இல்ல, கேட்டவும் மாட்டேன்!" என்றார் சார். அவர் சொல்லிவிட்டு டிசைனிங் ரூமிற்கு சென்று ஒரு மேலணியை கொண்டுவந்தார்.


"இத போட்டுக்கோங்க நானாவது சொன்னேன். வேறயாரும் பார்த்தா இரசிச்சிட்டு போயிருப்பான். ஏன், படம் கூட எடுத்திருப்பான். நான் அப்டி பண்ணல அது வரைக்கும் சந்தோசப்படுங்க. நீங்க அப்டி டிரஸ் பண்ணும் போது பார்க்குற ஆண்கள குத்தம் சொல்ல முடியாது" என்றார் நிர்வாக இயக்குனர்.


வார்த்தைகள் அற்ற நிலையில் அவள். என்னதான் கூற முடியும்!

இப்படியெல்லாம் வார்த்தைகள் கேட்டு அவளுக்கு பழக்கமில்லை.

"சாரி" என்கிற வார்த்தையோடு முடித்துவிட்டாள் அவள்.


"ஓகே லீவிட் திஸ் டாப்பிக், ஸ்பூன வாஷ் பண்ணிட்டு சாப்பிடுங்க."


பியானாவும் கரண்டியை சுத்தப்படுத்தி அன்னம் உண்ண அமர்ந்தாள். சாப்பிடாமல் கரண்டியை வைத்து கிளரிக்கொண்டிருந்தாள்.

அதை கவனித்த நிர்வாக இயக்குனர்.


"ஹலோ" என்றார்

அன்னார்ந்து பார்த்தாள் பியானா.


"பியானா நான் தனியா சாப்டுறேன், எனக்கும் கொஞ்சம் கம்பனி தாங்க!" என்றார் முதலாளி.


அவள் வருவதாகயில்லை. அதனால், நிர்வாக இயக்குனர் அவள் அருகில் கதிரையிட்டு அமர்ந்து கொண்டார்.


"என்ன யோசனை? எம்டி இப்டி சொல்லிட்டாறேன்னா, அதெல்லாம் விடுங்க" என்றார் எம்டி .


யோசனை அதுதான் இருந்தாலும் சமாளித்துக்கொண்டாள்.


"இல்ல சார் எனக்கு இந்தியன் ஃபுட்ஸ் சாப்பிட்டு பழக்கம் இல்ல அது தான்" என்று பியானா சமாளிக்க முயல,


"அப்போ ஊட்டி விடவா பியானா?"

என்று நிர்வாக இயக்குனர் கேட்கவும், அவள் விழிகள் உறைந்துபோயின.

உருட்டிக்கொள்ளவில்லை.


'ஏதோ பல நாட்கள் பழக்கம் போலும் இல்லை தெரிந்தவரா? எவ்வளவு உரிமை எடுத்துக்கொள்கிறார்'

இவ்வாறு பல கேள்விகள் அவளுள்.


மௌனம் சம்மதம் என்று அவள் வாய் அருகில் கரண்டியை எடுத்து செல்ல உடனே பியானா வாயை மூடிக்கொண்டாள்.


"வேணாம் சார்" என்றாள் பியானா.


"இத்தாலியன் ஃபுட்ஸ் ஆட்டர் பண்ணவா?" என்று கேட்க,


"வேணாம் சார். சாப்பாட்ட வேஸ்ட் பண்ண கூடாது சார். எங்க மதர் சொல்லிதரல சாப்பாட்ட வேஸ்ட் பண்ண"


"ஓஓஓ... குட் குட், மதர்னா அம்மாவா பியானா?" என்று நிர்வாக இயக்குனர் வினவ.


சார் கேட்க்கும் கேள்விகளில் குதர்க்கம் கண்டவள். ' தூண்டி தூண்டி விசாரணை நடக்குது' என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.


"மதர்னா அம்மாதானே சார், அப்றம் என்ன?" என்று மழுப்பிக்கொண்டாள்.


"ம்ம்ம்" என்று முடித்துக்கொண்டார் சார்.


"ஏன், சார் ஆபீஸ் ஸ்டாஃப்ஸ்க்கு யூனிபார்ம் குடுக்கல" என்று பியானாவின் கேள்வியில் எம்டிக்கு புரை ஏறியது. இதுவரை அவருக்கும் இந்த யோசனை எட்டவில்லை.


'ஐந்து வருடமா கம்பனி நடத்துறோம். எனக்கும் சரி வினய்க்கும் சரி இப்படி ஒரு யோசனை வரவில்லையே' என்று நினைத்துக் கொண்டார்.


"ஓகே பண்ணிறலாம்" என்றார்

எம்டி. அப்போவாவது ஒரு மன்னிப்பு கேட்டிருப்பானா? அவன் வளர்ந்த விதம் அப்படி!...


'இத முதல்லே பண்ணிருக்கனும் பண்ணிருந்த எனக்கு இந்த அவமானம் வந்துருக்குமா?' மனதிற்குள் புழுங்கிக்கொண்டாள்.


பேசியவாரே நிர்வாக இயக்குனர் அன்னம் அருந்திமுடித்தார். "இப்டி சாப்பிட்டா உடம்புல ஒட்டாது. சீக்கிரம் சாப்பிடுங்க."என்றார் அவர்.


அவளும் மல்லுகட்டி தொண்டைகுழியில் உணவை இறக்கினாள்.


"ஓகே பியானா நீங்க சொன்ன மாதிரி யூனிபார்ம் சாரியா மார்த்திரலாம்" என்றார் எம்டி.


"ஏன் சார், சாரிக்கு ஹிப்பு தெரியாத? நாங்க உடுத்துவோம். அப்புறம் எங்கள் குறை சொல்லாதீங்க" பியானாவின் பதில் நெற்றியடி.


"ம்ம்ம்.., அப்போ நீங்களே சொல்லுங்க!"


"எல்லாம் வெஸ்டன் டிரஸ்ஸா இருந்தா நலம் சார். பொட்டம் என்ட் லாங்க் டாப் தைக்கிறவங்களுக்கு, இன்ஸ்பெக்ஷன் என்ட் பிஏ அவங்களுக்கு ஆபீஸியல் பேன்ட் சர்ட், க்ளினர்ஸ்க்கு ஸ்கேட் என் ப்ளவுஸ் நல்லா இருக்கும், எல்லா டிரஸ்லயும் முன்னாடி கம்பனி லோகோ பின்னாடி கம்பனி நேம் அதே நேரம், கன்சிவா இருக்கவங்களுக்கு ஃப்ராக் நல்லம் கொஞ்சம் பிலக்சிபலாவும் இருக்கும். இது என்னோடு ஐடியா சார். வினய் சார் கூட கலந்து பேசி முடிவு பண்ணலாம்" என்று விளக்கம் கொடுத்தாள் பியானா.


"ஓகே பியானா ஐடியா இஸ் குட்,

அந்த வெங்காயத்துக்கிட்ட ஒன்னும் கேட்க தேவையில்ல" என்றார் நிர்வாக இயக்குனர்.


"என்ன வெங்காயம்? சின்னவெங்காயமா? பெரிய வெங்காயமா?" என்றது வினயின் குரல்.


"ஈஈஈஈ" என்று பல்லை காட்டிய படி சார்.


"எனக்கு தெரியும் டா என் மானத்தை வாங்குவேனு" என்றான் வினய் சற்று விளையாட்டாக,


"பியானா நீங்களும் க்றிஸும் யூனிபார்ம் டிசைனிங் பண்ணுங்க"என்றார் எம்டி.


அவர்களும், அவர்கள் பணியை தொடர்ந்தனர்.


"ஏன் டா, நான் உனக்கு வெங்காயமா? நீ என்னை கலாய்கிறதே சந்தோசம் மச்சான் நீ இப்டி சிரிச்சி ரொம்ப நாள் ஆச்சி!" என்று வினய் புறாவோடு சலசலப்பில்.


க்றிஸிக்கும் பியானவிற்கும் பிடித்தாற் போலும், வேலை செய்பவர்களுக்கு பிலக்சிபலாவும்,

விலை குறைந்த தரமான துணி மெட்டிரியலை தேர்ந்தெடுத்தனர்.

சீருடை செலவெல்லாம் கம்பனியே ஆதலால், கம்பனிக்கும் நட்டம் ஏற்படதாவாறு, மேற்கூறிய படி அனைத்தும் கட்சிதமே.


"ஓகே க்றிஸ்யா கலர் மட்டும் சேஞ்ச் பண்ணிறலாம்" என்றாள் பியானா.


"டன் பியானா" என்று க்றிஸ்யா.


தேனீர் வேளை, பியானா க்றிஸ்யா இருவரும் நிர்வாக இயக்குனரின் அறைக்கு சென்றிருந்தனர். டிசைனிங் காட்டுவதற்கு. வினய்க்கும் சாருக்கும் விளக்கம் கொடுத்தனர் இருவம்.


தேனீரும் வந்து சேர்ந்தது . பியானா அறியாமல் முதலாளியின் கோப்பையை எடுத்துக்கொண்டாள். ஒரு மிடர் பருகியும் கொண்டாள்.


அவர் தன் கோப்பையை தேட அது அவள் இரு கை வளைவுகளுக்கு இடையில்,


"பியானா அது என்னோட கப்!"என்று எம்டி.


"அவுச்! சாரி சார் . வேற காபி எடுத்துட்டு வாரேன்" சிறு பதற்றத்துடன் பியானா.


"பரவாயில்ல காபிய வேஸ்ட் பண்ண கூடாது" என்று பியானாவின் கை வளைவிலிருந்த தன் தேனீர் கோப்பையை பிடுங்கிக்கொண்டார்.


'அடபாவி என்னாமா! சீன் போடுறான். இதுவே நான் குடிச்சா செப்டிக் ஆகிரும்னு சோப்பு போட்டு கழுவுவானே! டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர் டா' வினயின் இருதய இரத்த நாளங்கள், நண்பன் நடாத்தும் காட்சியை பார்த்து சிதைவடைந்ததன.


"இதெல்லாம் ஓவர் டா!" என்று கண்களால் வினய் கூற,

வினயின் காலை மிதித்து தன் சர்ட்டில் இருக்கும் டையை சரிபடுத்தி "கம்முன்னு இருடா" என்றார் சைகையில் எம்டி.


'இவனுக்கு என்ன லூசா? நான் குடிச்சத குடிக்கிறான். அப்புறம் திட்டுவானோ! தெரியல அவன் கப்பை தெரியாம எடுத்தேன்னு.

காலைல திட்டுறான்,இப்போ நல்லாதான் பேசுறான்' மனதிற்குள் பியானா.


"என்ன பார்க்குறீங்க? காபிய குடிங்க" பியானாவை பார்த்து எம்டி.


க்றிஸ்யா எதற்குமே சம்மந்தம் இல்லாதது போல் இருந்துக்கொண்டாள்.


ஆர்டர் வேலைகளின் பணியை ஆராய்ந்துக் கொண்டார்கள், நால்வரும்.


"சில சமயம் நைட் டியூட்டி செய்ய வேண்டி வரும் பியானா என்ட் க்றிஸ்" என்று வினய் செப்ப,


இருவரும் முழிகளை உருட்டிக்கொண்டனர்.


"சார்.. எங்க வீட்ல விட மாட்டாங்க"

என்றாள் க்றிஸ்யா.


"தங்கச்சியா தனியா விட்டு வரமுடியாது, சாரி சார்" என்றாள் பியானா.


"இப்போ ஒன்னும் அவசரம் இல்ல பார்த்துக்கிலாம்" என்றார் சார்.


"சார் இப்போ வந்துருக்க மெட்டீரியல் இஸ் நொட் குவாலிட்டி! சாயம் போகுமோனு ஒரு டவுட் சார்" என்று பியானா செப்பினாள்.


வினயை ஒரு பார்வை எம்டி, "இதெல்லாம் என்னனு பார்த்துக்க டா" வினயும், 'சரி' என்று தலையை ஆட்டிக்கொண்டான்.


"பியானா என்ட் க்றிஸ்யா நீங்க எடுத்த மெஷமண்ட்ஸ், கட்டர்ஸ்க்கு குடுத்திருங்க. பக்கத்துலே இருந்து பார்த்துக்கோங்க, சரியா கட் பண்றாங்களானு" என்றார் எம்டி.


பெரிய பெரிய இயந்திரங்கள், டசன் கணக்கில் துணிகளை ஒரே நேரத்தில் வெட்டுவது

அழகாய் தெரிந்தன பியானாவின் கண்களுக்கு.


"இன்னைக்கு தான்! பார்க்குறேன், க்றிஸ்யா. உண்மையா சூப்பரா இருக்கு!" என்றாள் பியானா.


"ஆமா பியானா, கஷ்டப்பட்டு இடுப்பு வலிக்க வலிக்க மெஷமண்ட் எடுப்போம். கட் பண்றது அஞ்சு நிமிசம் தான்! அளவ ஃபிக்ஸ் பண்ணிட்டு மெஷின் ஆன் பண்ணா போது அதுவா வெட்டிரும்" என்று க்றிஸ்யா சிலாகித்தாள்.


"அப்போ தைக்கிறதெல்லாம் எப்டி? க்றிஸ்யா, ஒருதர் எவ்வளோ டிரஸ் தைக்கனும்!?" பியானாவின் சந்தேகங்களை க்றிஸிடம் கேட்க,


துணியை வெட்டும் முன் மின் அழுத்தியை கொண்டு அழுத்திக்கொள்வர். பின்பு , இயந்திரத்தில் இட்டு வெட்டுதல்.

வெட்டியவற்றை தைப்பவருக்கு கொடுக்க, அவர்களே தொகுதி தொகுதியாகப் பிரித்துக்கொள்வார்கள். ஒரு தொகுதி ஆடையின் கழுத்து பகுதியை மட்டும் தைக்க, மற்ற பகுதியினர் கையை மட்டும் தைக்க,

இப்படியே ஆடையின் வடிவமைப்புக்கேற்ப தொகுதிகள் கூடும், குறையும். தைப்பது எல்லாம் முடிவடைய? தேவையற்ற நூல்களை வெட்ட வேண்டும்.

இறுதியாக ஆடையை மின் அழுத்தி

பாக்கிங் செய்து அடுக்குவர். என்று க்றிஸ்யா, பியானாவை தெளிவு படுத்தினாள்.


"யப்பா! ஒரு டிரஸ்ஸு தைக்க இவ்ளோ வேலை இருக்கா!?" ஆச்சர்யத்துடன் பியானா.


"ஆமா, இந்த வேலைக்கு எல்லாம் தொகுதி மேற்பார்வையாளர் இருப்பாங்க. அவங்ககிட்ட அப்போ அப்போ கேட்டு தெரிஞ்சிக்கனும்.

வேலை நடக்குதா, இல்லையா?

நாங்களும் வேலைய சரியான்னு பார்க்க குட்டி இன்ஸ்பெக்ஷன் செய்யும்" என்று மூச்சை விட்டாள் க்றிஸ்யா. கண்களை பெரிதாக விரித்து, 'சரி' என்று தலையை ஆட்டினாள் பியானா.


இன்று சற்று வேலை அதிகம் அதனால், அலுவலகம் விட்டு வெளியே வர மணி எட்டு ஆகியது.

க்றிஸ்யா தந்தையுடன் வீட்டுக்கு கிளம்பினாள். பியானாவும் கிளம்பியாக வேண்டும். ஆனால், இருசக்கர வாகனம் கிளம்பமவிடாமல் மக்கர் செய்தது.

ஒருவழியாக இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அமர்ந்து கொண்டாள். ஒரு அடியேனும் நகரவில்லை டம்... என்கிற ஓசையோடு காற்றற்ற டயரை காட்டியது.


"நீ செய்யுறது சரியா மாப்பு இப்டி ஆப்பு வைச்சிட்டியே!" என்று வாகனத்தை செல்லமாய் கடிந்துக் கொண்டாள் பியானா.


அலுவலகத்தின் உள், "இன்னிக்கு நைட் ஷிப்ட் இல்லை. வெர்க்கஸ் எல்லாம் கிளம்பிட்டாங்க டா நாங்களும் கிளம்புவோம்" என்றான் வினய்.


"அம்மா, உன்னை வீட்டுக்கு அழச்சிட்டு வர சொன்னாங்க கண்டிப்பா வந்தே! ஆகனும்" என்றார் எம்டி.


"சரி டா! சீக்கரமா கிளம்பிருவேன்.

கார வாட்டர் வாஷ்க்கு குடுத்து இருக்கேன்"


வாய்யை பிதுக்கிக்கொண்ட எம்டி,

"ஏன்? நான் உன்னை ட்ராப் பண்ண மாட்டேனா?"


பல்லை இளித்துக்கொண்டு இருவரும் கிளம்பினர். சீருந்தை உயிர்பித்து வெளியே வர,

பியானா நின்றுக்கொண்டிருப்பதை இருவரும் பார்க்க, பியானாவின் வாகனம் மக்கர் செய்திருந்ததை அறிந்துக்கொண்டர்.


"நான் உங்கள ட்ராப் பண்ணட்டுமா?" என்று எம்டி கேட்க,


"இல்ல சார், நீங்க அந்த பக்கமா போறீங்க. நான் அதுக்கு எதிர் பக்கம் போகனும், மெக்கானிக்க வர சொல்லிட்டு நான் கிளம்புறேன், சார்" என்று பியானா சொல்ல,


"ஓகே கவனம் இது கொஞ்சம் மோசமான ஏறியா!" என்றான் வினய்.



******



இருவரும் எம்டியின் வீட்டை அடைந்தனர்.


"வா ப்பா, இந்த அம்மாவா பார்க்க இப்பதான் தோனிச்சா!" என்று எம்டியின் தாய்.


"இல்ல ம்மா கொஞ்சம் வேலை அதன் ம்மா வரல , எப்டி ம்மா இருக்கீங்க?" என்று குசலம் விசாரித்தான் வினய்.


"என்னத்த சொல்லுறதுன்னு தெரியல? சீக்கிரம் செத்துறுவேன் போல. வினய் உன் ப்ரெண்டுக்கு வயது இருபத்தி ஒன்பது ஆச்சி இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கான். நீயாவது கொஞ்சம் எடுத்து சொல்லாமே, எதும் காதல் பண்ணுறானா என் பையன்?" என்று எம்டியின் அம்மா அங்கலாந்தார்.


"எனக்கு தெரிஞ்சு... காதல் இன்னும் வரல மா?" என்றான் வினய். அடுக்களைக்குச் சென்று காபியை கலந்துக்கொடுத்தார் எம்டியின் தாய் .


"அப்போ மாமா பொண்ண கட்டிக்கோன்னு சொல்லுறே! அதுக்கும் வேணாம் சொல்லுறான்"


"பாவம் புறா, ரஞ்சனாவ கட்டிக்கோ டா. அம்மா இவ்ளோ! தூரம் கெஞ்சிறாங்க பதில் சொல்லு , இல்ல சன்னி லியோனா சம்மந்தம் பேசலாம்" என்றான் வினை எம்டியை பார்த்து.


"யாருப்பா அந்த எலியோன்?" எம்டியின் தாய் கிளர,


"அது கவர்ச்சி நடிகை ம்மா" என்றார் எம்டி.


"அந்த சனியன் புடிச்ச எலிய நீயே கட்டிக்கோ வினய்" நமுட்டு சிரிப்புடன் எம்டியின் தாய்.


"இருமல் கிழவனுக்கு தடுமல் கிழவன் புத்தி சொன்ன இப்டி தான்! டா" என்றார் எம்டி . அதாவது தனக்கு திருமணம் ஆகாமல் இன்னும் ஒருவரை வற்புறுத்தினால் இப்படி தான்!


''சரிடா அப்பாய்(தந்தையின் அம்மா) எங்க?" என்று வினய் கேட்க,


"அவங்க தூங்கிருப்பாங்க டா?"


"சரிம்மா நான் கிளம்புறேன்."என்று வினய் செப்ப, "அடிக்கடி வந்துட்டு போப்பா" என்றார் எம்டியின் அன்னை.


இருவர்களும் வெளியே வந்து வண்டியில் அமர்ந்து கொண்டனர்.

எம்டி சீருந்தை செலுத்த ஆரம்பித்தார்.


"டேய் பியானோ இன்னும் ரோட்லயே இருக்கா டா" என்றான் வினய்.


'அவுச் போனவங்க, திரும்பிட்டாங்க! நான்தான் இன்னும் கிளம்பல!' மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் பியானா.


"என்னம்மா! இன்னும் வீட்டுக்கு போகலயா?"என்று வினய் கேட்க,


"இல்ல சார், மெக்கானிக் வரல,

அதனால என் தங்கச்சியோட

ஃபிரண்டு கார் பின்னாடி கட்டி இழுத்துட்டு போகலாம்ன்னு காத்திருக்கேன்" என்று கூறினாள்

பியானா.


"அப்டினா இதுவும் கார்தானே, இதுல கட்டி எடுத்துட்டு போகலாம்.

எவ்ளோ நேரம் இங்க நிப்பீங்க. அதுவும் ஒரு பொண்ணு இந்நேரம் வெளிய நின்னா தப்பா பேசுவாங்க" என்றார் எம்டி.



"இல்ல சார், நீங்க கிளம்புங்க"என்று பியானா கூறி முடிக்கும் முன், "வினய் போயிட்டு கயிறு வாங்கிட்டு வாடா" என்று விரட்டினார் எம்டி.


பியானாவின் அழைப்பேசியில் வேர்லினின் அழைப்பு. "அக்கி அவ காரும் சொதப்பிட்டு ப்ரேக் டவுன் ஆகிட்டு, கொஞ்ச நேரம் வெயிட் அக்கி நான் வாரேன். ஸ்கூட்டியை தள்ளிட்டு வரலாம்" என்று வேர்லின் சொன்னாள்.


"இல்ல குட்டி நீ வீட்ல இரு, எனக்கு வண்டி கிடைச்சிட்டு நான் வாரேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் பியானா.


வினய் கயிற்றை வாங்கி வந்தவுடன், எம்டியும் வினயும் சேர்ந்து இருசக்கர வண்டியை சீருந்தின் பின்புற கதவை திறந்து இறுக்கமாக கட்டினர்.


"ஓகே டா, நீ ஸ்கூட்டிய ஓட்டு , பியானா கார்ல வரட்டும். ப்ளீஸ் மச்சி சொதப்பிறாத" என்றார் எம்டி.


"செஞ்சி தொலைக்கிறேன்! வேற வழி…" என்றான் வினய்.


"பியானா டன், கார்ல ஏறுங்க" என்று எம்டி செப்பிவிட்டு, முன் கதவை திறக்க அவள் அதை தாண்டி பின் கதவை திறந்து அமர்ந்துக் கொண்டாள். இவன் தலையில் அடித்துக்கொண்டான்.


'இதுக்குதான் இவ்ளோ கஷ்டப்பட்டியா!?' ஆமை போல் நகர்ந்த சீருந்து வீட்டை அடைய மணி ஒன்பது முப்பது ஆகியது.


"ரொம்ப தேங்கஸ் சார், இவ்ளோ தூரம் ஹெல்ப் பண்ணத்துக்கு" சிறிய புன்முறுவலுன் நன்றி உரைத்தாள் பியானா.


இவற்றை பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வேர்லின் கீழ இறங்கினாள்.


"வேறும் தேங்க்ஸ் மட்டும் தானா, வீட்டுக்கு வாங்க சார், ஒரு காபி குடிச்சிட்டு போவோம்ன்னு கூப்பிட மாட்டிங்களா?" என்று எம்டி கேட்க,


"இல்ல சார், நாங்க… நானும் தங்கச்சியும் மட்டும்தான் வீட்ல இருக்கோம். அதுதான் அக்கம் பக்கம்…." என்று பியானா தடுமாற,

வேர்லினின் குரல் குறுக்கிட்டடது.


"உங்களு ரொம்ப நன்றி என்னோட

அக்கிய சேஃப்பா கூட்டிட்டு வந்ததுக்கு"


குறுநகையுடன், "இவங்கதான் உங்க சிஸ்டரா?" என்று கேட்டார் நிர்வாக இயக்குனர்.


"ஆமா சார்" என்றாள் பியானா.


"அக்கி இவங்கதான் உன்னோட கம்பனி பாஸ்ஸா!" அதிர்ச்சியில் வேர்லின்.


"ஆமா மா, எங்கள ஒரு இன்ட்ரோ குடுக்குறீங்களா பியானா?" என்றான் வினய்.


"இவங்க எம்டி, இவங்க மேனேஜர்"

என்று கையை காண்பித்தாள் பியானா.


"அவுச் உங்களயா? வெளிய நிக்க வச்சி பேசுறேன். ப்ளீஸ் கம் ஹோம் , ட்ரிங் ஏ கப் ஒப் காஃபி!" என்று வேர்லினின் கண்கள் விரிந்தது,

பியானா வேர்லினை ஒரு பார்வை பயங்கரமாக!


"யா ஷுவர்" என்று வீட்டிற்குள் சென்றனர் இருவரும். பியானா காபி போட உள்ளே சென்றாள்.


வீட்டிற்கு வந்தவர்களை வாங்க என்றும் அழைக்கவில்லை.


"உன் பேர் என்னம்மா, ப்லுட்டா, தபேலாவா?" என்று வினய் விளையாட்டாய் கேட்க,


"நோ நோ வேர்லின் அன்வி பிரான்சிஸ்" என்று கூறினாள் வேர்லின்.


"வயலின் உங்க அக்கா சிரிக்க மாட்டாங்களா?" என்றார் எம்டி.


"சிரிப்பாங்க சார், வயலின் இல்ல வேர்லின்" என்றாள் வேர்லின்.


"ம்ம்ம்" என்றார் எம்டி.


சிடு சிடு என்று வெளியே வந்த பியானா, "கேஸ் தீந்து போச்சி" என்றாள்.


"என்ன அக்கி சொல்லுற!?" என்று வேர்லின்.


"எனக்கு தெரியும் வேர்லின்! கேஸ் தீர்ந்து போகும்ன்னு, நாங்க வந்ததே புடிக்கல உங்க அக்காக்கு" என்றார் எம்டி.


"அப்டி இல்ல சார், நாங்க பொண்ணுங்க தனியா இருக்கோம். நீங்க இப்டி வரும் போது சுத்திருக்கவங்க தப்பா பேசுவாங்க அதுதான்!" என்றாள் பியானா.


"ஓகே பியானா, எனக்கு முறுக்கு ஜிலேபி எல்லாம் சுத்த தெரியாது

ஐ லவ் யூ லோட் பியானா! வில் யூ மெரி மீ!"என்று அதிரடியாய் எதிர்கொண்டார் எம்டி.


அனைவரின் இதயமும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது. வேர்லினிற்கு எல்லாம் பிரம்மையாய் தோன்ற,


வினயோ 'இதுக்குதான்! பியானாக்கு பிஏ போஸ்ட்டிங் குடுத்தியா?' என்று எண்ணினான்.


"இங்க பாருங்க சார்! நீங்க நினைக்கிற டைம் பாஸ் கேர்ள் நான் இல்ல, கண்டதும் காதல் மேல எனக்கு நம்பிக்கை இல்ல, உங்க பேரு கூட எனக்கு தெரியாது?

நேற்றுதான் ஜாயின் பண்ணேன்.

அதுக்குள்ள என்னைய பார்த்ததும்

லவ் வந்துரிச்சா, இதெல்லாம் பைத்தியகார தானம்"என்று கோபமாக கூறினாள் பியானா.


"பியானா உனக்கு இப்ப என் பேரு தெரியனும் அவ்ளோதானே! என் பேரு புறஞ்சேயன்" என்றான் அசால்ட்டாக எம்டி புறஞ்சேயன்.
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top