• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 03💋

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
ஹாய் டியர்ஸ்

இரண்டாம் பதிவுக்கு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் அள்ளிக்கொடுத்த வாசக நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இதோ மூன்றாவது அத்தியாயம்.....




20210815_113000.jpg



"மிஸ்டர்! நீங்க புறஞ்சேயனா இருங்க, இல்ல கிளிஞ்சேயனா இருங்க. எனக்கு அதெல்லாம் ப்ராப்ளம் இல்ல, இந்தியாக்கு நாங்க வந்த நோக்கமே வேற அதமட்டும் பார்க்க விடுங்க. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் எனக்கு செட்டாகாது" என்றாள் பியானா.


"எப்டி? அப்பாவ தேடுறேன்னு பேர்ல பத்திரிகைல விளம்பரம் குடுத்தத தவிர வேறென்ன பண்ண?'' என்றான் புறஞ்சேயன்.


"இது...இது உங்களுக்கு எப்டி தெரியும், யாரு சொன்னா?" என்று வினவினாள் பியானா.


"உங்க ஜாதகமே தெரியும்! உனக்கு ஏழு வயசு, வேர்லின்கு மூனு வயசிருக்கும்போது உங்க அம்மாவ கொலை பண்ணிட்டாங்க. அதனால, உங்க அப்பா இங்க பாதுகாப்பு இல்லன்னு இத்தாலில விட்டாரு. பணம் அனுப்பிட்டு இருந்தாரு திடீர்னு பணம் அனுப்பல. அதுக்கு அப்றம்தான் அப்பாவ தேட ஆரம்பிச்ச இன்னும் தேடிக்கிட்டுதான் இருக்க ஆனால், அப்பா கிடைச்சபாடில்ல" என்று விளம்பினான் புறஞ்சேயன்.


"சார் அப்பாவ... எங்க டாடிய உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்க... சார் ப்ளீஸ் இந்த விஷயம் எல்லாம் எப்டி தெரிஞ்சிதுன்னு சொல்லுங்க?... சார்" என்று கெஞ்சி கெஞ்சி அழ ஆரம்பித்தாள் பியானா.


"உங்க அப்பாவ எனக்கு தெரியாது!
நீ குடுத்த பையோ டேட்டால இத்தாலிலயிருந்த டிடைல்ஸ் இருந்துச்சி, மதருக்கு கால் பண்ணி பேசுனேன். மேரி மதர்தான் எல்லாமே சொன்னாங்க" என்று புறஞ்சேயன் செப்ப, பியானாவால் என்னதான் செய்ய முடியும். அழுவதை தவிர.


"தெரிஞ்சுது இல்ல! கிளம்புங்க சார்" என்று அவள் பேச்சின் ஒலி கொஞ்சம் வீரியமாக, கையை காண்பித்தாள் வெளியே.


"உன் டாடாவ என்னால கண்டுப்பிடிச்சி தர முடியும். என்னை நம்பு" என்று கூறினான் புறஞ்சேயன்.


"கண்டுப்பிடிச்சி தருவீங்க. நான் உங்கள மெரி பண்ணிக்கனும் அதானே! எல்லார் மாதிரியும் நான்னொன்னும் ஷெல்ஃபிஷ் இல்ல சார். எனக்கும் பொறுப்புகள் இருக்கு. என் தங்கச்சிக்கு நான்தான் எல்லாமே"


"பியானா உன்ன கட்டிக்கிறேன் உன் தங்கச்சியா.." என்று அவன் கூறி முடிக்கும் முன்,


"என்னை கட்டிப்பீங்க, அவள வைச்சிப்பீங்க அதானே சார்!
எல்லாமே பேசிட்டு எனக்கு சாரி கேட்க தெரியாதுன்னு சொல்லுவீங்க இதுதான் உங்க ஸ்டைல்" என்று கோபம் பொருந்திய வார்த்தைகள் கூறினாள் பியானா.


"ஆமா டீ, உன்னை கட்டிக்கிட்டு அவள வைச்சிப்பேன். என் பொண்ணா! போதுமா வேற எதும் கேக்கனுமா?"


"அக்கி ச்சில், ப்ளீஸ்" என்று சமாதனப்படுத்த முயன்றாள் வேர்லின்.


"பியானா உங்க அப்பாவோட பிக்க குடுங்க, கண்டிப்பா புறா தேடித் தருவான்" என்று வினய் கூற,


"சார் உங்க மேல வைச்சிருக்க மரியாதைய நீங்களே கெடுத்துக்காதீங்க, கிளம்புற வழிய பாருங்க" என்று முகத்திற்கு நேராக கூறினாள் பியானா.


"உன்னோட அப்பா கிடைக்கிறதுக்குள்ள நான் உன்ன மெரி பண்ணிப்பேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே ஆசிர்வாதம் வாங்கலாம். உங்க அப்பாகிட்ட, கண்டுப்பிடிச்சி காட்டுறேன்" என்று சபதம் செய்துகொண்டான் புறஞ்சேயன்.


"யார் அப்பாவ யார் தேடுறது?
எங்க வழிய நாங்க பார்த்துப்போம் .
உங்க வழிய நீங்க பாருங்க. என்ட் இன்னும் வன்மந்த்தான் உங்க கம்பனில வொர்க் பண்ணுவேன்"


"ஹாஹா…., வன் ஹியர் அக்ரிமெண்ட்ல யார் சைன் பண்ணினா, மறந்துறாதீங்க
மிசஸ் புறஞ்சேன்?" என்று அவன் விளம்ப, பியானாவின் மனம் குழம்பி, அவள் கை அவன் கன்னத்தை பதம் பார்த்தது.


"பரவாயில்ல, அடிக்கிற கைதான்
அணைக்கும்னு சொல்லுவாங்க.
உனக்கு ரெண்டுநாள் டைம் தாரேன். ரெண்டு நாளைக்குள்ள பாசிட்டிவ்வான பதில் வர வைப்பேன்" என்று அவளை பார்த்து கண்ணடித்தான்.


"வேர்லின், என் செல்லக்குட்டியா கவனமா பார்த்துக்கோ" என்று உல்லாசமாக சொல்லிவிட்டு புறஞ்சேயனும் வினயும் கிளம்பினர்.


"ஐ ஏம் பாவம், நடுவுல மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்" என்று புலம்பிக்கொண்டாள் வேர்லின்.


அவர்கள் கிளம்ப, வேர்லினிற்குதான் இங்கு வசைமாரி.


"உன்ன யாரு கீழ வர சொன்னா?
நீ வராமா இருந்திருந்தா நானே அவங்கள அனுப்பிவைச்சிருப்பேன். அவங்கள நீ உள்ள கூப்பிட்ட, இப்போ எனக்குதான் தேவையில்லாத பிரச்சினை. இதுலயும் ட்ரிங் ஏ கப் ஒப் காஃபி அவங்க மூஞ்சிக்கு அதுவொன்னுதான் குறை. சரி நீ கூப்பிட்டா வரகூடாதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சி இருக்கனும் ரெண்டு பொண்ணுங்க மட்டும் தனியா இருக்க வீடு கொஞ்சமாவது யோசிக்க வேணாம். போதாக்குறைக்கு மதர்கிட்ட போன் பண்ணி பேசியிருக்கான். இவன் என்னத்த உளறிக்கொட்டி என் மானத்தை வாங்கினான்னு தெரியலயே? ஜீசஸ்..."


வேர்லின் எதும் பேசவில்லை. பேசினாலும் புரிந்துகொள்ளும் பக்குவத்தில் அவளில்லை.


மௌனமாய் சில நிமிடங்கள் கழிய மௌனத்தை கலைக்கும் வகையில்
பியானாவிற்கு இத்தாலியிலிருந்து மதர் கைபேசியில் அழைப்பு,
கைபேசியை எடுத்து பார்த்தவள்.
தன் தலையில் கையை வைத்தாள்.


"மதர் கோல் பண்றாங்க வேர்லி"
நடுங்கிய குரலில் பியானா.


"அவுச்! ஆன்சர் பண்ணி பேசு அக்கி"


"ஹலோ... மேட்ரே, ஸ்டாய் பெனா?"
(மதர் நன்றாக இருக்கின்றீர்களா?)


"சி, ஸ்டோ சோலோ பெர் பார்லேர்.
சீடெர் ஈ சோலோ இல் டுவோ லாவோரோ" மதர் ஸ்டெல்லா மேரி.

(ஆமா, நான் மட்டும்தான் பேசப்போகிறேன். கேட்கிறது மட்டும் உன் வேலை)


"ஓகே மேட்ரே" பயந்த குரலில் பியானா.


மதரின் பேச்சை இடைவிடாது செவிமடுத்தாள். 'ம்ம், ஹஹ' என்று இடைக்கிடையில் போட்டுக்கொண்டாள். இறுதியாக கர்த்தர் துணையிருப்பாராக என்று ஆசிர்வசித்து அழைப்பை துண்டித்தார் மதர்.


"ஏய், அக்கியோ மேட்ரே என்ன சொன்னாங்க, ரொம்ப திட்டுனாங்களா?"


"இல்ல குட்டி, சார் மதர்கூட பேசுனாங்களாம். நாங்க ரெண்டு பேரும் ரொம்பநாளா லவ் பண்ணுறோம்ன்னு சொல்லிருக்கான். அந்த பாவி
உங்க முடிவுக்குதான் காத்திருக்கோம்ன்னு வேற சொல்லிருக்கான்"


"அச்சோ இது எப்ப அக்கி?"


"நம்ம டாடிய கண்டுப்பிடிச்சு தருவேன்னு சொல்லிருக்கான். ஆஃப்டர் மெரி உன்னையும் பார்த்துப்பேன்னு சொல்லிருக்கான். இந்த மாதிரி நல்லவிதமா பேசி மதரா நம்பவைச்சிட்டான். அவங்களும் சொல்லுறாங்க கல்யாணத்துக்கு அப்றம் டாடி கிடைக்கிறதுக்கு நிறைய சான்ஸ் இருக்குன்னு, எல்லாருக்கும் என்னைய பார்த்தா பைத்தியக்காரி மாதிரி தெரியுது போல, முடியல வேர்லின் ஏன், இந்தியாக்கு வந்தோம்ன்னு இருக்கு"


"அக்கி நீதான் அடிக்கடி சொல்லுவியே, இன்னைக்கு நம்ம கஷ்டப்படுறோம்னா நாளைக்கு

ஜீசஸ் நல்லா வைச்சிருப்பாருன்னு"


"ஆமா, அந்த நாளை எப்போ வரும்னு தெரியல குட்டிமா?"


"பாசிட்டிவ்வா திங்க் பண்ணனும்.
எதுக்கும் துவண்டு போக கூடாது. இதெல்லாம் நீதானே எனக்கு சொல்லிக்குடுத்த மறந்துட்டியா அக்கி?"


" இல்ல டா மா, அம்மா அப்பான்னு யாரும் இருந்திருந்தா நமக்கு இப்டி ஒரு நிலை வந்திருக்காது. இப்டி எந்த பாய்சும் வீட்டுக்குள்ள வரமுடியாது" என்று கூறிமுடிக்க அவள் பூவிழிகள் கசிந்தது.


"எப்பவும் நான்தானே அழுவேன்.
இன்னைக்கு என்ன ஆச்சுன்னு இப்டி அழற? சாருக்கு உன்னை பிடிச்சிருக்கு அத சொன்னாரு,
உனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்ட
தட்ஸ் ஆல். இந்த மாதிரி எத்தனையோ பார்த்துத்திருக்க பட்,
இன்னைக்குதான் இப்டி அழற" அலுவலகத்தில் நடந்தவற்றை பியானா கூற, வேர்லின் விழுந்து விழுந்து நகைந்தாள்.


"அதுக்குதான் ஹய்வெஸ்ட் ஜீன்ஸ் போட சொன்னேன். என்னை மாதிரி நீ ஹிப்ப தெரிய டிரஸ் பண்ண மாட்டியே அக்கி"


'ம்ம்ம்', "எனக்கு பசிக்குது வேர்லி"


"சிக்கன் பாஸ்தா செஞ்சிருக்கேன்.
சாப்பிடலாம் அக்கியோ"


ஆகாரத்தை அருந்திவிட்டு அக்கடாவென்று அமர்ந்தனர்.


பியானாவின் கைபேசியின் பகிரியில் குறுஞ்செய்தி வந்தது. 'குட் நைட் ஸ்வீட்டி, இப்போ கிளம்பிட்டேன்னு பீல் பண்ணாத எல்லாரும் தூங்கினதுக்கு அப்றம் யாருக்கும் தெரியாம உன் கனவுல வாரேன்' அத்தோடு நான்கைந்து முத்த ஸ்மைலிகளும் அனுப்பட்டது.


குறிஞ்செய்தியை முதலில் பார்த்தது வேர்லின், உடனே பியானாவின் கன்னத்தில் கைபேசியை ஒற்றினாள்.


"என்ன பண்ற குட்டிமா?"


அவள் கையில் தொலைபேசியை கொடுத்துவிட்டு "அவுச் இதுக்கு அப்றம் உன்னோட ஃபோன எடுக்க மாட்டேன் அக்கி, இனி என்னென்ன மெசேஜ் வருமோ தெரியல?" என்று நகைந்துவிட்டு நகர்ந்தாள்.


குறுஞ்செய்தியை பார்க்கும்போது
காதல் வரவில்லை கடுப்புதான் வந்தது அவளுக்கு. பகிரியை முழுமையாக கைபேசியிலிருந்து அழித்தாள் பியானா.




*****


"என்னாடா திடீர்னு இப்டி சொல்லிட்ட எனக்கே ஒரு மாதிரி ஆகிட்டு பாவம் பியானா" என்று வினய் கூற,


"இல்ல டா, உனக்கே நல்லா தெரியும். என் மனசுக்கு பிடிச்ச பொண்ணு வரும் வரைக்கும் வெய்ட் பண்னேன். அதுவும் பியானா ரொம்ப அழகாக இருக்கா. நான் இப்போ சொன்னாதான் எல்லாம் சரியா வரும்" என்றுரைத்தான் புறஞ்சேயன்.


"உனக்கு நாக்குல சனியும் மூக்குல முனியும் இருக்கு அதுதான் இப்டி பண்ற, எல்லாத்துக்கும் ஒரு முறையிருக்கு நீ அம்மாவ அழச்சிட்டு போய் பொண்ணு கேட்டிருக்கலாம். இந்த மாதிரி ராத்திர நேரத்துல போய் இப்டி சொன்னா பல்புதான் கிடைக்கும்"


"அதான் கிடைச்சிட்டே! நீ வேறடா, அம்மா அவங்க அண்ணன் மகள் ரஞ்சனாவ என் தலையில கட்ட பாக்குறாங்க. உனக்குதான் ரஞ்சனாவ பத்தி தெரியுமே
எனக்கும் அவளுக்கும் ஒத்தேவராது.
காதலே வரல எப்பவும் மோதல்தான்.
என் தம்பிய லவ் பண்ணா அவன் இஷ்டத்துக்கு வேற பொண்ண லவ்பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான். அதுனால என்னை பிடிச்சி தொங்கிட்டுயிருக்கா இதுக்கு பேர் லவ்வா டா. என் மனசுல மாமா பொண்ணுன்னு ஒரு மரியாதை இருக்கு, ஒரு நல்ல தோழியா இருந்தா இப்பா பிசாசாமாறிட்டா இதத்தவிர வேற எண்ணமில்லடா. அம்மா விருப்பத்துக்கு என் வாழ்கைய பணயம் வைக்கமுடியுமா? பிளேடே இல்லாம என் தலைய மொட்ட அடிப்பா அவ"


"புரியுதுடா இருந்தாலும் பியானாக்கிட்ட இப்டி பிகு பண்ணது தப்பு"


"இப்போ தப்பாதான் தெரியும் பின்னாடி அப்டி தெரியாது. பார்க்கலாம் இன்னும் ரெண்டு நாள் டைம் குடுத்திருக்கேன்"


*****


"வெரி குட் மார்னிங் அக்கி, நான் சொல்லபோறது எனக்கு குட் நியூஸ்தான் ஆனால், உனக்கு எப்டினு தெரியல?" என்று தயக்கமாக வேர்லின்.


"அது நீ சொல்லுறத பொறுத்துதான் குட்டிமா" என்று கூறினாள் பியானா.


"உன்னோட பாஸ் ரொம்ப நல்லவங்கலாம். இதுவரைக்கும் எந்த பொண்ணையும் அன்னார்ந்துகூட பார்த்ததில்லையாம்.
அவருக்கு பொண்ணு குடுக்க போட்டி போட்டுக்கிட்டு இருக்காங்கலாம்.
நான் விசாரிச்சேன் என்னோட ப்ரபசர்கிட்ட, ப்ரபசரோட தங்கச்சி பொண்ணுக்கும் கேட்டாங்கலாம்.
உங்க பாஸ்தான் வேணாம் சொல்லிட்டாறாம். அப்டி இருக்கும்போது அவரே உன்பின்னாடி வாராரு
நீயேன் ஓத்துக்ககூடாது"


பியானா எதையும் கண்டுகொள்ளாமல் "ஆபீஸுக்கு லேட்டாகிடிச்சு கிளம்பலாம். போகும் போது ஆட்டோல விட்டு நான் அப்டியே ஆபீஸ் போறேன்"


"சரி அக்கி, இதுக்கு மேல உன்விருப்பம்"


"குட்டிமா நீ படிக்கிறதுல மட்டும் கவனம் செலுத்து அதுபோதும் சரியா?"


'ம்ம்ம்', வேர்லினை கல்லூரியில் இறக்கிவிட்டு அலுவலகத்தை நாடினாள்.



*****


"குட் மார்னிங் வைஃபி" என்று அருமையான வரவேற்பு சிவப்புவர்ண ரோஜா செண்டுடன்,
பியானா முன் நின்றான் புறஞ்சேயன்.


"குட் மான்சிங் சார்" அத்தோடு நகர்ந்துவிட்டாள் பியானா.


தலைமையக அறையினுள், "மாமனுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்குதான் மாராப்பில் பச்சை வர்ணவுடையா?" என்று அவன் வினவ, பியானா கண்டுகொள்ளாதவாறு இருந்தாள்.
புறஞ்சேயனும் இடைவிடாது சீண்ட,

"தன்வி நான் உனக்கு குடுத்த டைம் முடிய போகுது என்ன முடிவு பண்ணிருக்க?"


"என் ஓ டாட்"


"தன்வி மறுபடியும் யோசிச்சு லஞ்சுக்கு அப்றம் பதில் சொல்லு ஓகே" பியானா மௌனம் சாதித்துவிட்டு அடுத்த பணியிலிறங்கினாள்.


க்றிஸ்ஸுடன் இணைந்து தையல் வேலை செய்பவர்களை மேற்பார்வை செய்ய கிளம்பினாள்.
காலைப்புத்துணர்ச்சியுடன் பியானாவை பார்ப்பவர்களுக்கு
தெம்பாயிருந்து. தையலியந்திர சத்தும் கேட்கும்போது அவள் பற்கள் கூசுவதை உணர்ந்துகொண்டாள்.


கர்ப்பிணி பெண்கள் தைப்பதை பார்த்து அவள் மனதில் ஒரு நெருடல், "க்றிஸ்யா கன்சிவா இருக்கும் போது தைக்க கஷ்டம்தானே, சார்கிட்ட பேசி நூல் கட் பண்ணவிடலாம்"


"ஓகே பியானா, ரிக்வெஸ்ட் பண்ணுவோம்"


பியானாவும் க்றிஸ்யாவும் புறஞ்சேயனிடம் கேட்க வந்தனர்.
புறஞ்சேயன் க்றிஸ்யாவை வினயிடம் ஒப்பந்தமிட்ட கோப்பு எடுத்துவருமாறு கூற க்றிஸ்யாவும் சென்றாள்.


"சார் கன்சிவா இருக்கவங்க தைக்காம நூல் கட் பண்ணுற வெர்க்கு சேஞ்ச் பண்ணலாமா?"


"கேக்கல கொஞ்சம் சத்தமா சொல்லுங்க" பியானாவும் சத்தமாக கூற, வேணுமென்று அருகில் சென்று நிற்க சிறிதளவு இடைவெளிதான், பியானா மீண்டும் சத்தமாக உரைத்தாள்.


"அதெல்லாம் அவங்களே சேஞ்ச் ஆவாங்க என்ட் கன்சிவாயிருக்கவங்களுக்கு எப்பவும் ஹாஃப் டே வெர்க்தான்.
அவங்களுக்கு தெரிஞ்சிருக்காது.
இன்ஃபார்ம் பண்ணுங்க"


"ஓகே சார்" என்று பியானா கூற, க்றிஸ்யா கோப்புக்குகளை கொடுத்துவிட்டு சென்றாள்.


அன்றைய பணிகள் சற்று முடிவடைய மதியவுணவு வேளை பியானா வீட்டில் தயாரித்த உணவுதான். புறஞ்சேயன்
இணையத்தில் ஒழுங்குபடுத்திருந்தான். வழக்கம் போல காத்திருக்க வேண்டும்

பியானா மாத்திரம் எப்படி உணவருந்துவது ஆசிரமத்தில் வளர்ந்ததால் ஒருவரை விட்டு தனியே உணவுண்பதில்லை, "சார் உங்களுக்கும் லஞ்ச் ஷேர் பண்ணட்டுமா?"


"ஓ… தராளமா"


'இந்த மாதிரி லைஃபையும் ஷேர் பண்ணா எவ்ளோ நல்லா இருக்கும்.
பொண்டாட்டி கையால சாப்டபோறேன்' ஒரே குதூகலம்தான்
புறஞ்சேயனுக்கு.



ஒரு தட்டிலிட்டு கொடுத்தாள். புறஞ்சேயனுக்கு.


"நூடுல்ஸ்தான் லஞ்சா?"


"இது நூடுல்ஸ் இல்ல சார் ஸ்பாகெட்டி"


"ஹா நான் யூடியூப்ல பார்த்திருக்கேன். இப்போதான் ஃபர்ஸ்ட் டைம் சாப்டபோறேன்"


பியானா சமைப்பதில் ஆர்வமும் ஆசையும் அதிகம் ஸ்பாகெட்டி புறஞ்சேயனுக்கு பிடித்தமாயிருந்தது. அவன் காரியத்தில் கண்ணாய் இருந்தான்.


"இத்தாலின் ஃபுட் சூப்பர், சமைச்ச கைக்கு முத்தமே குடுக்கலாம்!"


பயத்தில் பியானா எழுந்தாள்.
எதுவும் சீண்டவில்லை அவன்.
கைகளை கழுவிட்டு அமர்ந்துக்கொண்டனர்.


"வைஃபி, என்னை பார்க்க பாவமா இல்லயா? ப்ளீஸ் ஓகே சொல்லு"


"சார் புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ், நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நானில்ல"


"நான் நினைச்ச மாதிரி பொண்ணே நீதான் டீ! அதுதான் உன்னை இப்டி பாடாபடுத்துறேன்"


"நோ நோ சார், என்னைவிட வேற நல்ல பொண்ணு கிடைப்பாங்க"


"நீ எனக்கு வேணும் அதுக்காக நான்
எந்த லெவலுக்கும் இறங்குவேன்" என்று சட்டைப்பையிலிருந்த பிளேடை எடுத்து வேகமாக கையில் நான்கைந்து வெட்டுக்களையிட்டான்.


"அச்சோ! இரத்தம் கொட்டுது வாங்க சார் ஆஸ்பிடல் போவோம். விளையாடதீங்க" பியானாவுக்கு பீதியை கிளப்ப,


அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. ஒரு வெள்ளை காசிதத்தை எடுத்து குருதியை தொட்டு நான் உன்னை காதலிக்கின்றேன். என்று ஆங்கிலத்திலு எழுதி அவள் கையில் கொடுத்தான்.


அதை ஒரு புறம் வைத்துவிட்டு,
"ப்ளட் ஹெவியா பிளீடிங் ஆகுது ப்ளீஸ் சார்" என்று கண்கலங்கிய நிலையில் பியானா.


"அப்போ என்மேல இன்னும் லவ் வரல?" என்று மறுபடியும் பிளேடால் கையை வெட்டமுயல
அவள் தடுக்க அவள் விரல்களில் இரண்டு வெட்டை வாங்கிக்கொண்டாள். பியானாவை ஒருபுறம் தள்ளிவிட்டு, "ஐ லவ் யூ பியானா, என்மனசு முழுக்க நீதான் நீ மட்டும்தான் இருக்க!" என்று அவன் மணிக்கட்டை அறுத்துக்கொண்டான். துளிதுளியாய் செங்குருதி பூமாதேவியை தொட, அவள் கைக்குட்டையை எடுத்து அவன் மணிக்கட்டில் இறுக்கமாக கட்டினாள்.


"ஜீசஸ் எனக்கு ஏன் இப்டி ஒரு சோதனை!" என்று அழுதுகொண்டு
அவனை மருத்துவமனைக்கு அழைக்க,


"இன்னும் என்மேல லவ் வரலயா பியானா, என் கழுத்த அறுத்துக்கட்டுமா, என் காதல் தூய்மைன்னு நிரூபிக்கட்டுமா?" அவன் இளகிய குரலில் இவள் உள்ளம் கல்லுக்குள் கசிந்த உதிரமாகியது.


"லவ் பண்றேன் சார், ஆஸ்பிடல் போகலாம். வாங்க" என்று அவன் காலில் விழ,


"எனக்கு ஒரு மாதிரி கிறக்கமா இருக்கு வினயா கூப்பிடு" அவளும் தலைதெறிக்க ஓடி வினயை கையை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தாள்.


புறஞ்சேயனின் கண்கள் மயக்க நிலையில், "டேய்! டேய் மச்சான் என்னாச்சு?"


"சீக்கிரம் ஆஸ்பிடல் போகலாம். பேச நேரமில்ல" அழுதுகொண்டே பியானா.


வினய் உடனே புறஞ்சேயனை கையிலேந்தியவாறு சீருந்திலிட்டு, சீருந்தை வினய் செலுத்தினான். வேலைதளத்தில் அனைத்து வேலைகளும் ஸ்தம்பித்தன.
க்றிஸ்யா என்னென்று தெரியாமல்
வேலை செய்பவர்களை சமாளித்துக்கொண்டிருந்தாள்.பியானா நடந்தவற்றை பதற்றமும் அழுகையுமாக கூறினாள் வினயிடம்.


"உங்கள லவ் பண்றது உண்மைதான் ஆனால், இவ்ளோ உண்மைன்னு இப்பதான் தெரியுது!" என்று கூறிக்கொண்டே சீருந்தை வேகமாக செலுத்தினான் வினய்.


"சார், சார் கண்ண திறந்து பாருங்க.
இதோ ஆஸ்பிடல் வந்துட்டு உங்களுக்கு ஒன்னுமில்ல. நான் உங்கள லவ் பண்றேன்!" என்று பியானா அவன் விழி மடல் திறக்க முயற்சித்தாள்.


வைத்தியசாலையில் அனுமதித்தனர். நான்கைந்து செவிலியர் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க யாவரும் எதுவும் கூறுவதாக இல்லை. வைத்தியர் வெளியே வந்தால்தான் எதுவும் கூறாலாம். என்று ஒரு செவிலி சொல்லிவிட்டு செல்ல பியானாவிற்கும் வினய்கும் உயிரே இல்லை.


பியானா வேர்லினிற்கு கைபேசியில் நடந்தவற்றை கூறினாள்.


" அவுச்! அக்கி ரேடியால் அர்டேரி கட் ஆகுனா அவ்ளோதான்!" மேலும் வேர்லினின் வார்த்தைகள் பியானாவை பயமுறுத்தியன.




வைத்தியர் என்ன சொல்லுறாங்கன்னு நெக்ஸ்ட் எப்பில பார்ப்போம். மறக்காம கமெண்ட்ஸ் பண்ணுங்க மக்களே!
 




Last edited:

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அடேய் கிறுக்கா ஏன் டா கைய கட் பண்ணினே🤦🤦🤦🤦🤦

காதல் அ நிரூபிக்க இப்படி கைய வெட்டிகணும்னு எந்த கிறுக்கன் சொன்னான்

அதானே அவளுக்இஉ கொஞ்சம் டைம் குடுடா🤦🤦🤦🤦🤦இடியட்

இவன் லவ் உண்மைனா பொறுத்து இருந்து புரிய வைக்க வேண்டிதானே

அச்சோ பாவம் பியானா பயந்து போய் ஒத்துக்கிட்டா😱😱😱😱😱
 




Thamil kawshi

அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 6, 2021
Messages
1,185
Reaction score
1,791
Location
Sri Lanka , Colombo
அடேய் கிறுக்கா ஏன் டா கைய கட் பண்ணினே🤦🤦🤦🤦🤦

காதல் அ நிரூபிக்க இப்படி கைய வெட்டிகணும்னு எந்த கிறுக்கன் சொன்னான்

அதானே அவளுக்இஉ கொஞ்சம் டைம் குடுடா🤦🤦🤦🤦🤦இடியட்

இவன் லவ் உண்மைனா பொறுத்து இருந்து புரிய வைக்க வேண்டிதானே

அச்சோ பாவம் பியானா பயந்து போய் ஒத்துக்கிட்டா😱😱😱😱😱
Thanks Dr ♥♥♥
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top