💕நெஞ்சம் மறப்பதில்லை!💕*3*

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

Author
Author
Joined
Jun 7, 2021
Messages
108
Reaction score
147
Points
43
Location
Mangadu
நெஞ்சம் மறப்பதில்லை!3.
"என்னம்மா ...,என்ன சொல்றா உன் மகன்..?"

"என்ன மாமா இது?... புதுசா உன் மகன்"எப்ப இருந்து இந்த மாதிரி பேச்சு..?

"அப்புறமென்ன மா? நா அந்த கம்பெனியை வாங்க போறன்னு சொன்னதிலிருந்து ,மூஞ்சிய தூக்கி வச்சுட்டு திரிய றான்.!"

"அதுக்காக வாங்காம விட்டீங்களா?
மாமனாரும் மருமகளும் டைனிங் ஹாலில் விவாதித்து கொண்டிருக்க ...
.தாத்தா சத்யபிரகாஷக்கும்,தாய் மங்கயர்க்கரசிக்குமான சம்பாசனையைக் கேட்டவாறே இறங்கி வந்து கொண்டிருந்தான்.....
சூர்யப்பிரகாஷ்.!
"என்னம்மா...என்ன சொல்றாரு உங்க மாமனாரு?"...…
"என்னடா ..தம்பி பேச்செல்லாம் புதுசா இருக்கு..?"

"இப்ப அவர் மட்டும் என்ன சொன்னாராம்..உன் மகன் எங்கனு தான கேட்டாரு.."

"ஒத்த புள்ளையா போயிட்டானே...கூடப் பிறந்தது களோட சண்டை போட்டு வழக்கு தீக்கிற பிரச்சினை நமக்கு இல்லையினு நினைச்சா....., தாத்தா க்கும் பேரனுக்குமே வழக்கு தீக்க முடியல..."

"ரொம்ப நன்றிம்மா"

"எதுக்கு மாமா "

"அவனோட சேத்து என்னய சின்ன புள்ளையாக்குணதுக்கு"என்று குதூகளிக்க..

அம்மாவைப் பார்த்தவன் புருவத்தால் "பாத்தீங்களா" என்று சைகை செய்ய
இருவர் முகததிலும் புன்னகை.

"சின்னப்பையன்னு நினைப்பில தான் அந்த கம்பெனியை வாங்கி நடத்தலாம்னு முடிவு பண்ணியாச்சுல.."

"என்னடா சொல்ற ..எனக்கு என்ன அவ்ளோ வயசா ஆயிருச்சு"..

"உங்களுக்கும் உங்க நண்பருக்கும் ஒரே வயசு தானே....அவரடாக்டர் ஓய்வு
எடுக்க சொல்லவும் தானே பிசினெஸ்
கை மாத்தி விடுராரு....நீங்க மட்டும் எப்படி எடுத்து நடத்துவீங்க....?"

"ஏண்டா.....நீ உதவி பண்ண மாட்டியா?

தாத்தா ஒரு விசயத்தை பொறுப்பெடுத்து கொண்டார் என்றால் அதில் பேரனின் பங்கு இல்லாம்லிருக்காது தான்..ஆனால் இதற்கு மேல் ஏன் அவரை வருததிக் கொள்ள வேண்டும் என்பதனாலயே அவன் எதிர்ப்பு தெரிவிப்பது.

"தாத்தா...நான் பொறுப்பு எடுப்பது இருக்கட்டும்...நம்ம தொழில்களையே
கவனிக்க நேரமில்லாம ஓடிட்டிருகோம்...இதில இந்த கம்பெனி வாங்கித்தான் ஆகப்போறது என்ன?"

"இப்ப நீ சொன்னியே ....நிக்க நேரமில்லாமல் ஓடிட்டு இருக்கோமனு
அதுக்கு மூலாதார மே அந்த கம்பெனி தான்டா......"அது தான் எங்களோட முதல் விதை "....இன்னைக்கு கோயம்புததூர்ல.... RS புரத்துல .... ஹைசொசைட்டி வாழ்க்கை வாலரோம்னா அதுக்கு மூல காரணமே அந்த கம்பெனி தான்....! எனக்கும் அவனுக்கும் அது தலச்சன் பிள்ளை மாதிரி.....! அதுல லாபம் வருதோ இல்லையோ ......!இன்னொருத்தர் கிட்ட விட முடியாது...,!உனக்கும் உன் அம்மாவுக்கும் வேனா அதைப் பத்தி தெரியாமல் இருக்கலாம்..,.ஆனா உன் அப்பாவுக்கு நல்லா தெரியும்...அவன் இருந்திருந்தா நா இவ்வளவு விளக்கம் சொல்ல தேவை இருந்திருக்காது....,!
என குரல் கமர கூறியவரை ,சூர்யா
எழுந்து சென்று தோளோடு அணைத்து
கொண்டான்."

"ஐயோ!.....தாத்தா..,இந்த அழுகாச்சி மூஞ்சி நமக்கு செட்டாகாது... ஃபார்முக்கு வாங்க..."

மங்கையர்க்கரசியும் கண் கலங்க...
"உங்களை வெளியேத்தின கம்பெனியாச்செனு தான் நாங்க யோசனை பண்ணினோம்.... ஆனா நீங்க அது மேல இவ்ளோ ஈடுபாட்டோட
இருக்கும் போது நாங்க எப்படி மறுத்து
பேச முடியும் சொல்லுங்க..... !

சற்று தளர்ந்த நிலையில் கூட அவர்களால்,அவரைப் பார்க்க முடியாது.எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் ,அசராமல் தூணாக குடும்பத்தை தாங்கியவர்.

"எங்கப்பா என் கூட இருந்தாலே யானை பலம்!"என்று தன் கணவன் அடிக்கடி சொல்ல கேட்டவர்.

இதையே தான் தன் மகனைப் பார்த்து சத்யப்ரகாஷ் உம் சொல்வார்.

அப்படிப்பட்ட மகனையே திடீரென இழந்த நிலையில் ,தொழில் எதிரிகள் அவரின் இந்த பலவீனமான நிலையைப் பயன்படுத்தி வீழ்த்த நினைத்த வேளையிலும்,

தசரதனை வீழ்த்திய புத்திர சோகம் தன்னை வீழ்த்தும் முன்,மருமகளையும் பேரனையும் மனதில் கொண்டு நிமிர்ந்தவர். தன் தொழில் வட்டாரத்தில் சிங்கமாய் திகழ்ந்த வர்.

தன் பேரணையும் அதே போல் உருவாக்கியவர்.

சத்யபிரகாசின் குடும்பமும் சாதாரண குடும்பமல்ல. அவினாசியில் தோப்பு,வயல்,அரிசி மில் என்று வாழ்ந்த குடும்பம் தான்.

சத்யபிறகாஷஉம் கமிஷன் மண்டி வைத்து நல்ல வருமானம்.

அந்த பக்கம் அடிக்கடி சினிமா சூட்டிங் நடக்கும். சினிமாத்துறை யை சேர்ந்தவர் இவரின் அப்பாவிற்கு பழக்கமாக ,அவர் காட்டிய சினிமா ஆசையில் , சத்யப்ரகாசின் எதிர்ப்பையும் மீறி,ஆழம் தெரியாமல் காலை விட்டார்.

ஆணானப்பட்டவர்களே இத்துறையில்
திணறும் பொழுது, அம்மாய சுழல் அவரை எளிதாக சுழற்றிகொண்டது.

சத்தியபிரகாசின் குடும்பமும் வாழ்ந்து கெட்ட குடும்பம் லிஸ்ட்டில் சேர்ந்தது.

சொத்து முழுதும் இழந்த நிலையில் அவரின் அப்பாவும் உயிரை விட்டார்.
இத்தனை வயதிற்கு பிறகு யாரிடமும்
வேலை கேட்கவும் ,உதவி கேட்கவும்
கவுரவம் இடம் கொடுக்கவில்லை.

அப்பொழுது தான் ,மகன் ரவிப்ரகாசும்
கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம்.
அத்தகைய கையறு நிலையில் தான் ....
உடுக்கை இழந்தவன் கையாக வந்தார் குடும்ப நண்பரும, பள்ளி தோழருமான
ராமநாதன்.

பணமாக உதவி செய்தால் வாங்க மாட்டார் எனத் தெரியும்.

எனவேதான் சத்யபிரகாஷை ஒர்கிங் பார்ட்னராக கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர்.
என்றுமே சத்திய பிரகாஷ் உழைக்க தயங்கியது இல்லை.ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது.

எங்கெங்கு நேரடியாக சென்றால் குறைந்து விலைக்கு பொருள்களை கொள் முதல் செய்யலாம் என நன்கு
அறிந்தவர்.

ராமநாதன் ஆஃபிஸ் உள் வேலைகளைபார்த்து கொள்ள ,இவர் வெளியே சுற்றி திரிந்தார்.நெல், மஞ்சள், வேர்கடலை முதலியவற்றை விவசாயிகளிடம் சென்று நேரடியாக வாங்கினார். இடை தரகர் இல்லாததால் ,விவசாயிகளுக்கும் நியாயமானதை கொடுத்தார்.இரு பாலருக்கும் லாபமே.உள் நாட்டில் மட்டுமே செய்து கொண்டிருந்த மொத்த வியாபாரம் வெளி நாட்டிற்கும்
ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்தது.

எப்பொழுதும் லாபததில் இருவருக்குமே சரி பங்கு தான் .

ராமநாதன் பிள்ளைகளுக்கு இது உருதத ஆரம்பித்தது.

முதல் போட்டவருக்கும்,சும்மா வெளியே சுற்றி , எங்கெங்கு பொருள் கிடைக்கும் என்று தரகு வேலை பார்ப்பவரககும் சம பங்கு லாபமா என கேள்வி கேட்க தொடங்கினர்.

பரம்பரை சொத்தில் சொகுசாக வளர்ந்தவரகளுக்கு ....,ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பண முதலீடு மட்டுமே போதாது......உழைப்பும் அவசியமென்பது தெரியவில்லை.

அப்பொழுது தான் வெளி மாநிலங்க ளில் இருந்தும் மிளகு, ஏ லம்,போன்றவற்றை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தனர்.

ஆஃபிஷ்க்கு அப்பப்ப வந்து சென்ற
ராமநாதன் மகன்களும்,வெறும் பயலுக்கு வந்த வாழ்வப்பார் என்று சாடை பேச ஆரம்பித்தனர்.

நண்பனுக்காக சத்தியபிரகாஷஉம்
கொஞ்சம் பொறுமை காத்தார்.

நண்பனின் நிலை அறிந்த ராமநாதன்...அவர் சுயமரியாதை, மற்றும் சுயகட்டுப்பாட்டை இழக்கும் முன் தாமே அனுப்பி விடுவது உத்தமம் என அவரது பங்கை கொடுத்து அனுப்பினார்.

நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செல்வது. தனக்கு உதவிய நண்பணுக்கும் ,அவன் பிள்ளைகளுக்கும் இடையில் தன்னால் பிரச்சினை வர வேண்டாம் என்று வெளியேறி விட்டார்.

அப்பொழுதுதான் ரவிப்பிரகாஷஉம் கல்லூரி முடித்திருந்தார்.
தந்தையின் அனுபவமும் ,மகனின் உழைப்பும், இவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகியது.

இருவருமம் ஒருவருக்கொருவர் யானை பலம்!

காட்டன் மில்,பில்டிங் கட்டமைப்பு, என தொழில் பெருகியது.

மகனுக்கும் திருமணம் செய்து அழகு பார்த்தார். மிகவும் மன உறுதி படைத்தவர்.
"எங்கப்பா தைரியம் யாருக்கும் வராது "
என்று ரவிப்பிரகாஷ தன் மனைவியிடம் பெருமை பேசுவார்.

அப்படிப்பட்டவர் கண் கலங்க மருமகளாலும், பேரனாலும் அதை தாங்க முடியாத நிலை.

"இப்ப என்ன தாத்தா... நாம போய் அடுத்த வாரம் என் பெரியப்பாவ பாக்குறோம்.....நலம் விசாரிக்கிரோம்.....
பிரகாஷ் அன்ட் குரூப்ல அவரையும்
சேக்குறோம்...."

"அது யாருடா எனக்கு தெரியாம உனக்கு பெரியப்பா.."?

"நீங்க தான தாத்தா சொன்னீங்க....அந்தக் கம்பெனி தான் உங்க தலச்சன் பிள்ளைனு , அப்பனா எனக்கு பெரியப்பா தான"

"அட படவா! என்னையே களாய்க்கிரயா நீ?

எனக் கேட்க அங்கு சற்று முன் நிலவிய இறுக்கம் தளர்ந்து மகிழச்சி திரும்பியது..
....
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top